திங்கள், 6 ஏப்ரல், 2020

பேரின்பத்தை பெற்றய்யும் வழி


பேரின்பத்தை பெற்றய்யும் வழி

பெறுதற்கரிய மனித பிறப்பினை உடையவர்களாய், மெய்நூல்களாகிய தேவ, சிவகாமங்கள் வழங்கும் புண்ணிய பூமியாகி இப்பரத கண்டத்தில் தவஞ்செய் சாதியிலே, சைவ மரபிலே பிறந்தும, அநேகர் இவைகளின் அருமை சிறிதும் அறியாமலும், கருணைநிதியாகிய சிவபெருமானாரின் மகிமையையும், புண்ணிய பாவங்களையும் பலன்களையும் கற்றாயினும், கேட்டாயினும், அறியாதும், பாவங்களை வெறுத்து புண்ணியங்களை செய்யாதும், தனது வாழ்நாளை வீணாக கழித்து எரிவாய் நரகத்திற்கு இரையாகின்றனர். சிலர் ஒரே புண்ணியங்களை செய்யப் பகுந்தும் அவைகள் செய்யும் முறைசிறிதும் அறியாமல் குளிக்க போய் சேறுபூசிக்கொள்வது போல பாவத்தையே ஈடடிக் கொள்கிறார்கள். இப்படி கெட்டு போகாது, நமது சைவ சமயிகள் இந்த மனித பிறப்பு பெறுதற்கரிய என்பதையும் இப்பிறப்பு மீண்டும் மீண்டும் பிறவாது இ்ருக்க வழிகளையும் சைவ நெறி அருளாளர்கள் வகுத்துதந்த நெறிமுறைகளை தெரிந்தறியாமல் பாவங்களை வெறுத்து, சிவபெருமானானுடைய திருவடிகளை தங்கள் மனம் வாக்கு மெய்களால் விதிப்படி மெய்யன்போடு வழிபட்டு, நித்தியமாகிய ேபரின்பத்தை பெற்றய்யக்கடவார்கள்.
 இறைவன் நமக்கு அவன் கருணையினால் உகந்தளித்த தனு, கரண, புவனங்களை நாம்அனுபவிக்கவும், அவன் கருணையினால் அவன் அளித்தவை அவனுக்கு பணிவிடை செய்யவும், அவனை மனத்தால் நினைக்கவும், மெய்யால் அவனை வழிபடவும் நாம் மட்டும்அனுபவிக்க வேண்டும்என்ற குறுகிய எண்ணத்தாலும், அவனை மறந்து தன் விளம்பரத்திற்காக இறைத்தொண்டு என்ற பெயரில் புண்ணியத்திற்கு பதில் பாவங்களை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டு வருகிறோம். அவன் அருளாலே அவன் தாள வணங்காது அதனை மறந்து இப்புவனத்தை நாமே நமக்கென்று அனுபவித்து வருகிறோம். அவன் கருணையினால் கொடுத்த இந்த தனு, கரண, புவனங்கள் அவனுக்கே என்றும் நாம் செய்யும் செய்யும் செயல்கள் அத்தனையும் அவன் அருளாலே நடக்கின்றது என்ற உண்மையையும்உணர்ந்து வினைகளை நல்வினைக்கே பயன்படுத்தி பேரின்ப வாழ்வு பெற வேண்டும்.
  இதன் கருத்தில் தான் அப்பர் அடிகள் திருஅங்கமாலை என்ற பதிகத்தில் நம் அவயவங்கள் அத்தனையும் இறைவனுக்கே அவனை நினைக்கவும்  பணிசெய்வதற்கும் என்கிறார்
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை
மூக்கே நீமுரலாய்.

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.

நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.

உற்றா ராருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றா ராருளரோ.

எங்கும் நிறைந்த பொருள் உடற்குள் இருக்கும் உயிர்க்குள்ளும் அகலாதுஇருந்து, அதனை அவ்வப்பொழுது துன்பத்தினின்றும் தடுத்தாட்கொண்டு வருகின்றது. முடிவான துன்பமாகிய இரப்பினின்றும் காத்து அருள்வது.

திருச்சிற்றம்பலம்