வியாழன், 3 செப்டம்பர், 2026

அறுபத்து மூன்று நாயன்மார்

 1. திருநீலகண்ட நாயனார்:-“




கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:-

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3. இளையான்குடிமாற நாயனார்:-

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:-

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.

இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5. விறல்மிண்டர்:-

சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:-

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7. எறிபத்தர்:-

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:-

கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9. கண்ணப்பர்:-

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10.- குங்கிவியக்கலயர்:-

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11. மானக்கஞ்சறார்:-

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:-

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13. ஆனாயர்:-

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:-

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:-

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:-

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார்:-

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:-

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19. சண்டேசுர நாயனார்:-

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:-

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:-

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22. பெருமிழலைக் குறும்பர்:-

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.

சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:-

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:-

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25. திருநீலநக்கர்:-

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26. நமிநந்தி அடிகள்:-

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:-

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:-

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:-

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:-

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:-

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32. சோமாசிமாறர்:-

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கியர்:-

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:-

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:-

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:-

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:-

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:-

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:-

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:-

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41. அதிபத்தர்:-

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை

நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:-

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:-

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44. சத்தி:-

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன்:-

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46. கணம்புல்லர்:-

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47. காரி:-

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48. நின்றசீர் நெடுமாறனார்:-

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:-

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:-

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:-

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52. இடங்கழி:-

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:-

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:-

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55. கோட்புலி:-

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56. பூசலார்:-

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்

பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57- மங்கையர் கரசியார்சை:-

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேச நாயனார்:-

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.

எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:-

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:-

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61. சடையனார் நாயனார்:-

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62. இசைஞானியார்:-

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:-

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.

நாயன்மார்கள்

வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள்.

சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.

அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

💢💢நாயன்மாரின் பட்டியல்

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.

💢அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

💢தன்னலமற்ற பக்தியே பிராதனம்:-

நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலகட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத்தாதியார், கமலவதியார், ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று.

சிவனை விஞ்சிய தெய்வம் இல்லை : சைவத்தை மீறிய மார்க்கம் இல்லை !

ஈசன் அடி தேடி

திருச்சிற்றம்பலம்

வெள்ளி, 31 ஜூலை, 2026

ஆடி மாத சிறப்புக்கள்

 ஆடி மாத சிறப்புக்கள்


  பொதுவாக ஆடி மாதம் என்றாலே ஆன்மீகத்தில் அம்மன் வழிபாடு

                                         வேளாண்மையில்  ஆடி பெருக்கு


பொருளாதாரத்தில் ஆடி தள்ளுபடி விற்பனை  என்று ஆடி மாதத்தினை சிறப்புடன் வரவேற்க எல்லோரும் தயாராக இருப்பார்கள்


ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் இம்மாதத்தில் தான் நடைபெறும்.ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிரும் அருள்கிடடைக்கும்

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும்

ஆடி மாதம் அம்பிகையின் வேண்டிய வரத்தை பெற்ற மாதம் என்பதால் இந்த மாதத்தில் வேண்டிக் கொண்டால் நம்முடைய விருப்பங்களும் நிறைவேறும். ஆடி தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் துவங்கப்படும் காரியங்கள் தெய்வ அருளால் வெற்றியாக முடியாகும். ஆடி மாதத்தில் அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்வதால் அவள் மனம் குளிர்ந்து மழையை பெய்ய செய்து, நிலம் செழிக்க செய்வாள் என்பது கிராமப்புறங்களில் இருக்கும் நம்பிக்கையாகும்.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு சிறப்பான மாதமாகும். இந்த மாதம் மட்டுமல்ல இதில் வரும் ஒவ்வொரு விழாவும் சிறப்புடையதாகும். அம்மன், சிவனிடம் இருந்து தான் வேண்டிய இரண்டு வரங்களை பெறுவதற்காக ஊசி முனையில் தவம் செய்வதற்காக தேர்வு செய்த மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்தில் அம்பிகையை மட்டுமல்ல, சிவனை வழிபடுவதும் சிறப்பானதாகும். சிவனை வழிபடுவதால் அம்பிகையை போல் நாமும் வேண்டிய வரங்களை பெற முடியும் என்பது நம்பிக்கை.

சிவனை எப்போதும் நீங்காமல், அவரின் உடலில் சரிபாதியை பெற வேண்டும் என்றும், சிவனையும் விஷ்ணுவையும் ஒரே ரூபமாக காண வேண்டும் என்றும் அம்மன் தவம் செய்த மாதம் ஆடி மாதமாகும். இதனால் தான் சக்தி வழிபாட்டை அடிப்படையாக வைத்து, அம்பிகையை மனம் குளிர செய்து வேண்டிய வரங்களை பெறுவதற்குரிய மாதமாக குறிப்பிடப்படுகிறது

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமதகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால் மாங்கல்ய பலம் கூடும். ஆடிச் செவய்வாயில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள், குழந்தை வரம், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க, திருமணம் வரம் கிடைக்க ஆடிச் செவ்வாயின் பெண்கள் விரதம் இருப்பார்கள்.


ஆடி அமாவாசை :

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆறு மாதம் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும். சூரியன் ஆண்மை, ஆற்றல், வீரம் ஆகியவற்றை தரக்கூடியவர். மனதிற்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, அறிவு, இன்பம், உற்சாகம் ஆகியவற்றை தரக் கூடியவர் ஆவார். சூரியன் - சந்திரன் இணையும் ஆடி அமாவாசை நாளில் வழிபடுவதால் இவை அனைத்து பலன்களையும் பெற முடியும்.


ஆடிப்பெருக்கு :

ஆடி மாதத்தில் 18 வது நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்து காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். காவிரி பெருகி வரும் நாளை தான் ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடுகிறோம். காவிரி கரையோரங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும், காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்கும் வழக்கமும் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.


ஆடிக்கிருத்திகை :

கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உரியது. ஆடி மாத கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருக்க துவங்கி ஆறு மாதங்கள் கிருத்திகை விரதம் இருந்து தை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முடிப்பது சிறப்பானதாகும்.


ஆடி தபசு :

ஆடி அமாவாசையை போல் ஆடி பெளர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படும். அம்பிகையின் கோரிக்கையை ஏற்றி, சிவனும் - விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி அளித்ததும் இந்த நாளில் தான். ஊசி முனையில் தவம் இருந்த அம்பிகைக்கு தனது உடலில் சரி பாதியை கொடுத்து சிவ-சக்தி ஐக்கியமானதும் இந்த நாளில் தான்.


இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:

ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆடி மாதத்தில் குத்திய குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம்

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடி

ஆடிக்காற்றில் இலவம்பஞ்சு பறந்தாற்போல

ஆடிக்காற்றிலே அம்மி பறக்கையிலே இலவும் பஞ்சு எம்மாத்திரம்

ஆடியிலே காத்தடித்தால் ஐப்பசியில் மழைவரும்

ஆடிக்கு கூழும் அமுதம்

ஆடித் தள்ளுபடி

ஆடித் தள்ளுபடி என்பது ஆடி மாதம் தமிழக கடைகளில் கிடைக்கும் தள்ளுபடி விற்பனையைக் குறிக்கும். ஆடி மாதம் பொதுவாக திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் குறைவாகவே நடைபெறுவதால் ஏற்படும் விற்பனை மந்த நிலையைக் குறைக்கவும், ஆண்டு முழுதும் தேங்கிக் கிடக்கும் பண்டங்களை விற்றுத் தீர்க்கவும் இந்த விற்பனை உத்தி மேற்கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் நகை, புடவை கடைகளில் மட்டுமே இருந்த இத்தள்ளுபடி இப்போது பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருள் விற்கும் கடைகளுக்கும் பரவி உள்ளது.

இன்னும் இம்மாதத்ததின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம் ,,,,.......

திருச்சிற்றம்பலம்


பாவங்கள் தீர நல்வினைகள் செய்தல்

 



பாவங்கள் தீர நல்வினைகள் செய்தல்

நாம் நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை செய்திருந்தாலும் அவற்றை தவறு என உணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளை செய்தால், இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்க செய்யவேண்டிய பணிகள் பற்றி சற்று சிந்திப்போம்.

 1, சிவாலய திருப்பணி செய்தல்;  சிவபெருமானார் எழுந்தருளியுள்ளசிவாலங்களைப் புதுப்பித்தல், மிக மேலான நல்வினை- புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்துமான சிவலாயங்களைத் திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுத்து கொடுத்தல் தலையாய நல்வினையாகும். இதனை வலியுறுத்திய 11ம் திருமுறை பாடல் வரிகள்

 காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்ல வண்ணம்

 பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டு

பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீீர் 

  வணீர் எளிதோ மருதப்பிரான்கழல் மேவுதற்கே  ,,, பட்டிணத்தடிகள் 

   சிவபெருமானுடைய திருவருளை பெறுவதற்கு கீழ் காணும் ஐந்து நல்வினைகளை- புண்ணிய செயல்ளை செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்த பட்டிணத்தடிகள்

  1. திருஐந்தெழுத்தை / சிவாயநம / ஓதுதல்

  2, சிவலாய திருப்பணிகளைச் ெசய்தல்

  3. சிவபெருமானுடைய திருப்புகழைப்பேசி மகிழ°தல்

  4, உருத்திராக்கம் அணிந்து கொள்ளல்

  5, உடலில் திருவெண்ணீறுஅணிந்து மகிழ்தல்


2, சிவாலயத்தை தூய்மை செய்தல்

    சிவாலயங்களை பெருக்குதல், மெழுகிடல், தேவையற்ற மரம் செடிகளை காெடிகளைட அகற்றி தூய்மை செய்தல்.அன்று மலர்ந்த மலர்களை கொய்து மலை கட்டுதல், புகழ்ந்து பாடதல், தலையால் வணங்குதல், இதனை கூறும் பாடல்

   நிலைபெறுமாறு எண்ணுதியேல்நெஞ்சே நீவா

  நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்

  புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு

 பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி

  தலையாரக் கும்பிட்டு கூத்துமாடி

சங்கரா சயபோற்றி போற்றியென்றும்

 அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்

 ஆரூரா என்றென்றே அலறா நில்லே  ...... அப்படிரடிகள் தேவாரம் 6ம்திருமுறை

3, மலர் தொண்டு செய்தல்

    மேலே உள்ள பாட்டில் கண்டவாறு அனுதினமும் அன்று மலர்ந்த பூக்களை பறித்து மாலை ஆக்கி சமர்பித்தல்

4, இறை நாமத்தை சிந்தித்தல்

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார் சுந்தரர்

  காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்  என்றார் திருஞானசம்பந்தர்

 நானேயாே தவம் செய்தேன் சிவா நம எனப் பெற்றேன்   என்றார் மணிவாசகர்

  பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே ..4ம் திருமுறையில் அப்பர் அடிகள்

    நம்முடைய தீவினைகளை நீக்கி நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திரு நாமத்தை சிந்தித்தல் / செபித்தல்/ அவசியமாகும். இதற்கென பெருஞ்செலவு செய்ய வேண்டியதில்லை. எளிய வழியும் இது எனலாம்.

 5, சிவாலங்கள் யாத்திரை செய்தல்

    பாடல் பெற்ற சிவத்தலங்கள் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி அங்குள்ள மூர்த்தியினை நேரில் வணங்கி வழிபாட்டால்  சிவஆகமங்களில் கூறிய மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற வாறு சிவ தரிசனம் செய்து வினைகளை நீக்கி புண்ணியம் பெறலாம்

 6, சிவாலயத்ததில் விளக்கேற்றுதல்

  நமிநந்தி அடிகள், கலிய நாயனா் , கணம்புல்லர் ஆகியோர் சிவாலயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணத்தால் அறியலாம். விளக்கேற்றலுடன் இறைவனுக்க நறும் புகையிட்டும் கலய நாயனார் போல் தொண்டு செய்து புண்ணியங்களை பெறலாம்.,

 7, திருமுறைகளை பாராயணம் செய்தல், மிகச் சிறந்த புண்ணிய செயல்களில் இதுவும் ஒன்று, தேவாரப்பதியங்களில் கூறிய வார்த்தைகள் சொற்கள் யாவும் இறைவனின் வார்த்தைகளாக போற்றப்படுகின்றன, அதுவே அவனைப்போற்றும் அருச்சனை எனவே அருச்சனையே பாட்டே ஆகும் என்றார் சுந்தரரை ஆட்கொண்ட சிவபெருமான், இதனால் நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் சம்பந்தர் பெருமான்

  ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த

  திருநெறிய தமிழ்வல்லர் தொல்வினை தீர்தல் எளிதாமே,   சம்பந்தர்

 ஆலயங்களில் மற்றும் புண்ணிய செயல்கள் செய்யும் போது திருவாசக,தேவார பாடல்களால் முற்றோதல் மற்றும் பஞ்சபுராணம் பாடி இறைவனை மகிழ்வித்தல்

 8. அடியார் தொண்டு செய்தல்

   சிவபெருமானை இடைவிடாது மனத்தி் நினைந்து வாழும் சிவனடியார்களை "நடமாடக் கோயில் " என்றார் திரமூலர், இத்தகையவர்களுக்கு தொண்டு செய்தாலும் அவரை வணங்குதலும் இறைவருக்கு செய்த தொண்டாகும். இக்கருத்தினை கூறும் புராணமே திருத்தொண்டர் புராணமான ெபரியபுராணம்.

 9. சான்றோர்களுடன் இணங்கியிருத்தல்

  புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நெறியை கடைப்பிடித்தும் அவர்களிடமிருந்து வேதங்கள் புராணங்கள் சாஸ்திர நூல்களின் கருத்து கேட்டல் தெளிதல் சிந்தித்தல் நிட்டை கூடல் பலன் கிடைக்கும்.

  தானம் தர்மங்கள் செய்தல்

 ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன்காரணம் ஏழைக்ட்கு உதவுவதற்குத்தான் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்கிறார் அப்பர் அடிகள்

  இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

  கரப்பவர்தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்,  என்கிறார் திருவையாற்று பதிகத்தில்

  மேலும் திருமூலர் " யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி " என்கிறார்

  கொடுத்து பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவத்தின் மூல விதை இது அழிய இதுவே வழி

  பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் உயிர்கட்கு தீமையை செய்தல் கூடாது,

  செல்வம் உள்ளவர்கள் மறைக்காமல் திருப்பணிகளையும், தொழுவார்க்கு வேண்டிய வசதிகளையும்,அடியார் சேவையும், ஏழைக்களுக்கு உதவுவதும் செய்யவேண்டும். இதில் கூறப்பட்டுள்ள நல்வினைகளை அன்றாடம் செய்து பாவங்களிலிருந்து விடுபட்டு இன்பமாய் வாழலாம். தேவை மன உறுதிதான், இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணியச் செயல்கள்.

 திருச்சிற்றம்பலம்


வியாழன், 23 ஜூலை, 2026

திருவாசகம்

 அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே


திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம். ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும் நிலையையும் அனுபவத்தையும் அருளவல்ல அருள் நூல் திருவாசகம். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து ஓதுவார்தம் உள்ளத்தைச் சிக்கெனப் பிடித்துத் தம்பால் ஆழ்த்தும் உயர்நூல் திருவாசகம். ஆசை அற வேண்டும், பிறவி விழ வேண்டும். வீடு பெற வேண்டும் என நினைப்போரை முத்திக் கரையில் கொண்டு சேர்க்கும் தெப்பம் திருவாசகம். உயிர்க்கு ஊதியம் ஐந்தெழுத்து மந்திரமே என்பதை விளக்குவதும், தில்லைக்கூத்தன் தம் கைப்பட எழுதிய பெருமையை உடையதுமான தேன்சுவையைப் பயப்பதும் திருவாசகமே. நிலையில்லா உலகியல் இன்பத்தையும் நிலைபெற்ற சிவாநுபவத்தையும் இணைத்துப் பாடும் இயற்றமிழ்ப் பனுவலான இத்திருவாசகத்தை எல்லோருக்குமான எளிய உரையாக ஆக்கித் தந்திருக்கிறார் தமிழ்ப்பரிதி டாக்டர் ப. சரவணன்.

திருவாசகத்தின் பெருமை மற்றும் சிறப்பு

 திருவாசகத்தின் பெருமை மற்றும் சிறப்பு

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி

திருவாசகத்தின் பெருமை என்பது மாணிக்கவாசகர் இயற்றிய பக்தி இலக்கியம், சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை, அதன் உருக வைக்கும் தன்மை மற்றும் பக்தியைப் பெருக்கும் சக்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி அதன் மகத்துவத்தை உணர்த்துகிறது இது சிவனின் மேல் உள்ள பக்தி மற்றும் அனுபவ முறைகளை தெளிவாக விளக்கிறது.எனவே  இது ஒரு பக்தி இலக்கியம் 

இது சைவத் திருமுறைகளில் எட்டாவதாக இடம்பெற்றுள்ளது.

உருக வைக்கும் தன்மை: அதன் பாடல்கள் பக்தர்களின் உள்ளத்தை உருக்கி, சிவானுபவத்தில் திளைக்கச் செய்யும் தன்மை கொண்டவை. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி இதைத் தெளிவுபடுத்துகிறது.

இது முற்பிறவி மற்றும் தற்போதைய வினைகளை நீக்குவதாகக் கூறப்படுகிறது.

டாக்டர் ஜி.யு. போப் போன்ற அறிஞர்கள் திருவாசகத்தின் மகத்துவத்தை உணர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.

** செல்வாக்கு:** தாயுமானவர் மற்றும் இராமலிங்க அடிகளார் போன்ற பல பக்தி இலக்கியப் புலவர்களின் பாடல்கள் திருவாசகத்தின் அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன, இது அதன் செல்வாக்கைக் காட்டுகிறது. 

இதன் பெரும் சிறப்பு °

மாணிக்கவாசகரின் இந்நூலினைப் பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர்.

மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர்.

தமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது.

மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.

"பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - என்கிறா் திருமுருக கிருபானந்த வாரியார்

இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது இது ஒரு அன்பு மறையையும் போற்றும் அன்பு மற்றும் அற நுால் இது திருவாசகத்தேன் என்று போற்றப்படுகிறது. தேன் மனித உடலில் உள்ள நோய்களுக்கு மருந்தாகுவது போல் இது மானிடரின் உடற்பிணிக்கு மருந்தாக ஆணவ மலத்தை போக்கும் அருமருந்தாகவும் அமைந்துள்ளது எனவே இதனை உயிர் பிணிக்கும் மருந்து என்கின்றனர் பெரியோர். 

 தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறத்து ஆனந்தமாக்கியதே எல்லை 

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசம் என்னும் தேன்    


     இந்நூல் படிக்கும் தோறும் கேட்கும் தோறும் உள்ளத்தை உருகவைத்து மனத்தை அன்பு கசிய வைக்கும் தன்மை கொண்டதால் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதாகும்.

  இதன் கருத்தினைக் கொண்டே சிவபிரகாச சுவாமிகள் தன் மாணிக்க வாசகரின் நான்மணி மாலையில்

  " வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

    நெஞ்சு நெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்

 திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்

 கருங்கல் மனமும் கரைந்து உக கண்கள்

 தொடுமணற் கேணியில் சுரந்து நீர்பாய

மெய்ம் மயிர் பொடிப்ப விதிரவிதிர்ப்பு எய்தி

 அன்பர் ஆகுநர் அன்றி

 மன்பதை உலகின் மற்றையர் இலரே   என்கிறார்

    இத்திருவாசகததை மாணிக்க வாசகர் தன் அறிவு கொண்டே புலமை கொண்டே பாடாமல் இறைவனுடைய அருளையே துணையாகக் கொண்டு தாம் ஒரு கருவியாக மட்டும் நின்று அவர் பாடிய திருவாசகப்பாடல் இறையனுவத்தின் பிழீவாகவே விளங்குகின்றன.

   திருவாசகத்தின் சிறப்பினை திருகளிற்றுப்படியார் என்ற நூலு் பின்வருமாறு கூறுகிறது.  "இறைவன் தமக்கு நல்கிய பரமானந்தப் பயனை அடிகளார்தமது திருவாயில் மலர்ந்த சொற்களால் வெளியிட்டார் அதனை ஓதிய அன்பரெல்லாம் கருவாதையிலிருந்து விடுபட்டார், திருப்பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கி புனிதன் மொழிந்த வாசகமே திருவாசகம் என்று பாராட்ப்படுகிறது.

 

திருச்சிற்றம்பலம்

  


செவ்வாய், 2 ஜூன், 2026

தர்மம்

 தர்மம்


தர்மம் என்றால் நல்லொழுக்கம் நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக நல்ல காரியங்களுபாரதப் போரில் மிகப் பெரிய கொடையாளி கர்ணனின் உயிர் பிரியாமல் காத்தது அவர் செய்த தான தர்மங்கள், ஆனால் விதிப்படி உயிர் பிரிந்தால்தான் அவரின் தேகம் சாந்திபெற்றார். கண்ணன் அருளால் கர்ணன் மோட்சத்தை அடைந்தார். 


நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன. தர்மம் தான் உலகை நிலைநிறுத்துகின்றது. ஆங்கிலத்தில் தர்மம் எனும் சொல்லைச் சரியாகக் குறிப்பதற்கு ஒரு சொல் இல்லை.

தர்மம் எனும் சொல்லை மிகச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் “முறையான வாழ்வுமுறை” என்று சொல்லலாம். ‘ர்தம்’ கோட்பாட்டின் அடிப்படையில் விளங்கும் நடத்தைகள் தர்மம் எனப்படும். அத்தகைய செயற்பாங்குகளே, இந்த பிரபஞ்சமும் அதன் உறுப்பினர்களும் முறையாகச் செயல்பட உறுதுணையாகின்றது. ‘ர்தம்’ என்றால் இயற்கை செயல்முறை விதியாகும். அதுவே இந்த பிரபஞ்சத்தையும் அதற்குள் இருக்கும் அனைத்தையும் முறையே செயல்பட இயக்குகின்றது. ஆங்கிலத்தில் விளக்கினால்

தர்மத்திற்கு எதிர்ச்சொல் அதர்மம். பிரபஞ்ச நியதிக்கு எதிராக இருக்கும் செயல்கள் அதர்மம் என்று சொல்லப்படும். இந்த பிரபஞ்சத்தினுள் இருக்கும் அனைத்திற்கும் தர்மங்கள் உண்டு. உயிருள்ள உயிரற்ற எல்லாப் பொருள்களுக்கும் தர்மங்கள் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் தத்தம் தர்மங்களையே முறையே செய்து வருகின்றனர். மனிதர்கள் மட்டும் அதில் சற்று வேறுபட்டு, தங்கள் தர்மங்களை மறந்து அதர்மங்களைச் செய்கின்றனர். இது உலகின் மாயைகளின் காரணத்தால் அவர்கள் செய்வதே. இதுவே அவர்களின் அறியாமை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு தர்மங்களை மறந்து செயல்படுவதே பிரபஞ்சம் முறையே செயல்படாது அங்கும் இங்கும் அழிவுகள் நேர காரணமாக அமைகின்றது. மனிதர்களே தங்கள் அழிவுக்கு வித்திட்டு, பின்னர் இறைவன் கோபப்பட்டு அழிக்கிறார் என்று அவர்மீது பழியைப் போடுகிறார்கள். மனிதர்கள் ‘ர்தம்’ கோட்பாட்டிற்கு கட்டுப்பட்டு தங்களின் தர்மங்களை செய்தால், இந்த பிரபஞ்சத்தில் எதும் குறைகள் வருமோ?

மனிதர்களின் தர்மங்கள் :-

1) தனக்கு தானே ஆற்றவேண்டிய தர்மம்

எப்போதும் தன்னை தானே நேசித்துக் கொள்ளவேண்டும். முறையான உணவுப் பழக்கம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தை சிதைக்கும் உணவுகளைத் தவிர்க்கவேண்டும். நன்கு கல்வி கற்கவேண்டும். மெய்ப் பொருளை உணர்தல் வேண்டும். எப்போதும் தெளிவான ஞானத்தோடு இருத்தல் வேண்டும்.

2) இறைவனுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

இறைவன் மீது பக்தியும் பாசமும் கொண்டிருக்க வேண்டும். மலர், நீர், இலை, பழம் வைத்து இறைவனை வழிபடுதல் சிறப்பு. இறைவன் எங்கும், எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். எல்லா உயிர்களையும் நேசிப்பதும் இறைவனை நேசிப்பதற்கு ஒப்பாகும்.

3) பித்ருக்களுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

பித்ருக்கள் என்றால் ‘தென்புலத்தார்’. அதாவது மறைந்த நம் முன்னோர்களே பித்ருக்கள். அவர்கள் செய்த நன்மைகள் நாம் என்று மறவாது, அவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் நினைவாக அவர்களின் நினைவு நாட்களில் அவர்களுக்கு ஆகம முறைபடி மரியாதை செய்யவேண்டும். அவர்களின் மோக்ஷத்திற்காக எப்போதும் பிரார்த்தனை செய்யவேண்டும்.

4) பிள்ளைகளுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

நமது பிள்ளைகளை நன்றாக, பாசமும் நேசமும் ஊட்டி வளர்க்க வேண்டும். அவர்கள் தேவையானவற்றை செய்து கொடுத்தல் வேண்டும். முறையான கல்வியும் ஒழுக்கமும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் செய்ய கற்றுத்தர வேண்டும். அறிஞர்கள் மத்தியில் நாம் பெற்ற செல்வங்கள் முந்தியிருக்க செய்யவேண்டும். அவர்களின் கல்வி யாற்றல் இவ்வுலகிற்கு நன்மைப் பயக்கவேண்டியதாக இருக்கவேண்டும்

5) சக மனிதர்களுக்குச் செய்யவேண்டிய தர்மம்

சக மனிதர்களுக்குத் தானம் செய்வதே சிறந்தது. நம்மால் முடிந்தவரை உணவு தானம், துணிகள் தானம், புத்தகங்கள் தானம் செய்யலாம். சிலவேளைகளில் சக மனிதர்களுக்கு நல்ல ஞானத்தை அருள்வதும் தானமாக தான் போற்றப் படும். எப்போதும் மனிதர்களை நேசிக்க வேண்டும். உயர்வு தாழ்வு பாராமல் எல்லோருடனும் சகஜமாகப் பழகவேண்டும். ’மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதற்கு ஒப்ப, நாம் மக்களுக்கு நல்ல தர்மங்களைப் புகட்டுவதை சேவையாக செய்யவேண்டும். யாரைப் பார்த்தாலும் கையெடுத்து நெஞ்சத்திற்கு நேராக வைத்து கும்பிட்டு வணக்கம் / நமஸ்காரம் என்று சொல்லவேண்டும். இதன் பொருள் “உங்களுக்குள்ளும் உறையும் இறைவனை நான் மனதார வணங்குகிறேன்” என்பதாகும்

துன்பம் நீங்கி இன்பம் பெற

 துன்பம் நீங்கி இன்பம் பெற


உலகிலே பிறந்த உயிர்கள் அனைத்தும் பலப்பல எண்ணங்களுடன் வாழ்கின்றன. ஒரு தாய்தந்தைக்கு இரு மக்கள் பிறந்தன, ஒன்று தாய் தந்தையருக்கு அடங்கி வாழ்கிறது. மற்றொன்று தாய்தந்தையரை அடக்கி வாழ்கின்றது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் மாறுபட்ட குணங்கள் , உருவ அமைப்புக்கள், மாறுபட்ட முக பாவனைகள் மாறுபட்ட திறம் போன்ற வேறுபாடுகளுடன் இருக்கின்றன.

உதாரணமாக இலங்கை மன்னன் இராவணன் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் வேறுபட்ட குணங்களை கொண்ட வரலாற்றை நாம் காணலாம். இராவணன் மூர்க்கன் ,சிவ பக்தன், கும்பகர்ணன் நல்லவன், ஆனால் முரடன், விபீசனன் பரம சாது, சூர்ப்பணகை மிகவும் பாெல்லாதவள் இவ்வாறு ஒரு வயிற்றில் பிறந்தவர்கள் வேறுபட்ட குணங்களுடன் வாழ்ந்து வந்தனர்.

ஆதலால் உலக மக்களில் ஒருவர் குணம் போல் ஒருவர் குணம் அமையாது. ஆன்மாக்கள் வெவ்வேறு இயல்புகளுடன் இருக்கின்றன. ஆனால் இப்போது நாம் கவனிக்க வேண்டியது ஒன்றில் மட்டும் யாருக்கும் கருத்து வேற்றுமை கிடையாத ஒன்று அது , ” துன்பம் இன்றி இன்பத்துடன் வாழ வேண்டும் என்று எண்ணுவது தான்

எந்த சமயத்தாவரானும், எந்த அரசியல் வாதியானாலும், ஆணோ அல்லது பெண்ணோ முதியவரோ அல்லது இளையவரோ முன்னால் இருந்து வாழ்ந்தவரோ அல்லது தற்போது வாழ்பவரோ இனி வாழப்போவாரோ யாராக இருந்தாலும் இதைத்தான் எண்ணுகிறார்கள் துன்பம் இன்றி இன்பத்துடன்வாழ வேண்டுமென்று இதில் எந்த வித மாற்றமும் இல்லை.

எள் வேண்டும் என்று கொள் விதைப்பது போலும், செல்ல வேண்டிய ஊருக்கு டிக்கட் எடுத்து விட்டு செல்லாத வாகனத்தில் ஏறுவது போல் இன்பம் வேண்டும் என்று எண்ணுகிற நாம் துன்ப விதை தூவுகிறோம் துன்ப விதை தூவினால்எப்படி இன்பம்விளையும்?

” கடவுளே நான் எப்போதும் உன்னையே நினைக்கிறேன் எனக்கு மட்டும்இத்தனை துன்பமா? உனக்கு கும்பாபிசேகம் செய்தேன் உன்பொருட்டு விரதம் இருந்து நடை பயணம் வந்து உன்னை வணங்கினேன். என் குழந்தைக்கு இப்படி தீராத நோயினை கொடுத்திருக்கிறாயே என்று இறைவன் மீது சலித்து கொள்கின்றனர். இது பேதமை தானே. ஒரு தாய் 4 பிள்ளைகளை பெற்றேடுத்து வளர்க்கும் போது ஒவ்வாெருவருக்கும் அவர்களின் உடல் வாகுக்கு தகுந்தவாறு உணவளிப்பதில்லையா? அவர்களுக்கு பருவத்திற்கேற்ப பணிவிடை செய்வதில்லையா? இது அந்த தாயின் கருணை அல்லவா?

பள்ளியில் ஆசிரியர் அங்கு பயிலும் மாணவரகள் எல்லாரும் ஒரே பாடம் எடுத்து படித்தாலும் அவர்கள் எழுதும் தேர்வில் பதில் அளிக்கும் மாணவனுக்கு ஏற்ப மதிப்பெண் கொடுப்பதி்ல்லையா? அவனவனுக்கு ஏற்ப தானே பயன்கள் கிடைக்கிறது.

இதுபோல ஆன்மாக்கள் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப சுக துக்கங்களை இறைவன் தருகின்றான். ஆதலால் துன்பத்தை நுகர்கின்றவரகள் இறைவனை நோவலாமா? இறைவன் நடுநிலை வழுவாதவன். நாம் நுகர்கின்ற இன்ப துன்பத்ததிற்கு இறைவன் காரணம் அல்லன். நாம் முற்பிறவியில் செய்த வினைப்பயனே காரணமாகும். நாம் அனுபவிக்கின்ற துன்பத்திற்கு காரணம் நாம் செய்த தீவினையே காரணம் . நாம் செய்த பாவப்பலன்களை இப்போது நுகர்கிறோம் என்று கருதி சமாதானமாகி வினைப்பயனை அனுபவிக்க வேண்டும்.

ஒருவர் நமக்கு துன்பஞ் செய்பவராயின் அவர்கள் மீது சீற்றம் அடைதல் கூடாது. நாம் செய்த வினை பயனாக வருகிறது என்று எண்ணி மனம் சாந்தி அடைய வேண்டும்.

இதற்கு உதாரணமாக இராமாயண வரலாற்்றில் சீதை அனுமனிடம் கூறும் போது நான் அனுபவித்த துன்பத்திற்கு காரணம் அரக்கர்கள் அல்லர்,. என் வினைதான் காரணம் , தவ நெறியில் நின்ற என் கணவரை மான் பிடித்து வர அனுப்பினேன். என் அருகில் காவலானாக இருந்த இலக்குவனை நிந்தனை செய்து போகச் செய்தேன். என் பொருட்டு உணவு உறக்கம் இன்றி சுகத்தை மறந்து என்னை காத்து நின்ற பரம பக்தனாகிய இலக்குவனை நான் கொடுஞ் சொற்களால் மனத்தை நோக வைத்து அனுப்பினேன். அந்த வினைப்பயனால் இடர் வந்தது. செய்வான்/ செய்வினை/ வினைப்பயன்/ சேர்ப்பான் என்ற நான்கு தன்மைகளை உணர்த்துவதே உத்தம ஞானம். அரக்கியர்கள் இராவணனின் பணியாளர்கள் அவர்கள் அவர்களின் பணியினைத்தான் செய்தார்கள். அதற்கு அவர்கள் பொறுப்பில்லை. என் வினைப்பயன்தான் அவர்களை செய்ய வைத்தது. என்று விதியின் பயனை நொந்து அனுமனிடம்கூறியதை காணலாம்

ஆதலால் துன்பத்தை நுகர்கின்றவர்கள் கடவுளையோ மற்றவர்களையோ நோவக்கூடாது. இக்கருத்தில் தான் சம்பந்த பெருமான் மதுரை வந்திருந்த போது சமணர்களால் தானும் அடியார்களும் தங்கியிிருந்த மடம்தீ வைத்த போது சமணர்களை துன்புறுத்தா வண்ணம் அதற்கு காரணமாக இருந்த மன்னனுக்குதான் சூட்டு வலியை வரவழைத்தார். சமணர்கள் ஒருவனால் ஏவப்பட்டவர்கள் மூலகாரணம் அவர்கள் அல்லர்.

ஆதலால் நாம் துன்பமின்றி இன்பமாக வாழ வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு மனம் மொழி மெய்களால் துன்பம் செய்யக் கூடாது. நன்மையே செய்ய ேவண்டும். இதுதான் பண்பாடு,துன்பம் வினையினால் விளைகின்றது. விதையில்லாமல் செடி கொடி மரம் இல்லை. வேரின்றி மரம் இல்லை. பால் இன்றி நெய் இல்லை. வினையில்லையேல் துன்பம் இல்லை. துன்பங்களுக்கு காரணம் வினைதான் என்பதை தெளிவாக உணர வேண்டும்.

வினை மூன்று வகைப்படும். ஒன்று முன்செய்தவினை தொல் வினை என்ற சஞ்சித வினை, இதில் இப்பிறவியில் நாம் அனுபவிக்க இருக்கும் வினைப் பகுதி பிராப்த வினை அல்லது நுகர் வினை, இப்பிறவியில் நாம் செய்யும் செயல்களில் உண்டாகும் வினை ஆகாமிய வினை என்பதாகும். இந்த உடம்பு நுகர முடிந்து விடும் வினை பிராப்த வினையாகும். நாம் செய்யும் புண்ணிய செயல்களால் இவ்வினை குறையும். தொல்வினை என்பது ஞானத்தீயால் எரிந்து விடும். நம் குருநாதரின் அருளால் இவ்வினை நம்மிடம் இருந்து குறையும். இதனால் பிறப்பற்ற நிலை முத்தி கிடைக்கும். நாம் இறவாமல் இரு்க்க வேண்டும் என்றால் ஒரு வழி உண்டு. பிறவாமல் இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும் நம் நிழல் நம் பின்னால் தொடரும் நம் நிழலை நிறுத்த நாம் இன்னாெரு நிழலுக்கு செல்ல வேண்டும். அப்பாேது நம்மை தொடர்ந்த நிழல் மறைந்து விடுகின்றதல்லவா? அதுபோல வினை யில்லையெனில் துன்பமே இருக்காது.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்கிறார் அப்பர்அடிகள். தொல்வினை என்ற சஞ்சித வினை இறைவனிடம்பக்தி செய்வதாலும், ஜபம் தவம் பாராயணம் முதலிய வழிபாட்டாலும் தொலையும் வினை அகன்றால் பிறவி கழியும் துன்பம்அகலும்.

மார்கழியில் கடும் பனி கொட்டுகிறது. அதனை விலக்க சருகுகளை குவித்து தீ மூட்டினால் பனி விலகுவது போல் பக்தி செய்வோர்க்கு இறையருள் வெளிபட்டால் வினை விலகும். ஆதலால் அன்பர்கள் துன்பந் தொலைந்து இன்பம் ஓங்க வேண்டும் என்று கருதுவீர்ளானால் வினை புரியாது, தினையளவேனும் இறைவனை மறவாது, அன்பு நெறி நின்று அருள் மயமாகி சிவசிந்தையுடன் வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெறலாம்.

திருசிற்றம்பலம்

நன்றி ; திருக்கோயில் மாத இதழ்