திங்கள், 29 மே, 2017

சைவ சித்தாந்தம் கூறும் இறைவர் வடிவங்கள்

 சைவ சித்தாந்தம் கூறும் இறைவர் வடிவங்கள்
 சிவம்


சைவ சமயத்தவரால் முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்றும், "சிவப்பரம்பொருள்' என்றும் போற்றி வழிபட்டு வருகின்றோம்.

முப்பத்தாறு தத்துவங்களை யும் கடந்து நின்ற சிவப்பரம்பொருள் சுத்த சிவம். அந்தத் தத்துவங்களில் நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை யும் போக்கி வீடுபேறு அருள அருவம், அருவுருவம், உருவம் ஆகிய திருமேனி கொண்டு விளங்குகின்றார்.

அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும்; அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும்; உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் அழைப் பர். இந்த மூன்று திருவுருவ வேறுபாடு சிவசக்தி வடிவ நிலை. அது மரமும் வயிரமும்போல சிவத்தோடு சக்தியும் பிரிவின்றித் திகழும் நிலை. மரம்- சக்தி; வயிரம்- சிவம்.

இறைவரின் திருமேனிகள்

1அருவம் (Formless)

2.உருவம் (25 Forms)

3.அருவுருவம் (siva-lingam)

அருவநிலை

இந்த சிவ வடிவம், சுத்த சிவ தத்து வத்திலும், ஞானமே திருமேனியாக வும் உள்ளது. இதை "நிட்கள சிவம்' என்றும்; "நின்மல சிவம்' என்றும் கூறுவது உண்டு. நிட்களம் என்பது வடிவம் இல்லாதது என்றும்; அதில் ஞானசக்தி தனித்தும் கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபிக்கும். இந்நிலையை "லய சிவம்' என வழங்கு வர். லய சிவம் என்பது படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞான சக்தியைப் பொருந்தி நின்றால் சிவன் என வும்; கிரியா சக்தி யைப் பொருந்தி நின்றால் சக்தி எனவும் வழங்கு வர். அருவ நிலை யாகிய நிட்கள சிவத்தை, கண் ணால் பார்க்க முடி யாது. ஆனால் மனதி னால் தியானித்து வழி படத்தக்க ஞான வடிவம் கொண்டது.

வடிவம்


ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

மகேஸ்வர வடிவம் இருபத் தைந்து பேதங்களை உடையது. இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று. சந்திரசேகரர், உமா மகேஸ்வரர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிட்சாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சுவந்தராரி, மாதங்காலி, வீரபத்திரர், அரியர்த்தர், அர்த்தநாரீசுவரர், கிராதர், கங்காளர், சண்டேசானுக்கிரகர், நீல கண்டர், சக்கரப் பிரதானர், கஜமுகானுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் என இருபத்தைவரும் மகேஸ்வரமூர்த்தியாவர். இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக சரபமூர்த்தி, வாகமூர்த்தி, க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன.

இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தி யின்- சதாசிவ மூர்த்தி யின் ஈசானம், சத்தியோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்னும் ஐந்து முகங் களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியா கவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.
மகேசுவரமூர்த்திவகை
அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

சிவசக்தி


சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சி யைக் காண்கின்றோம். ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண். இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது. மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.

இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது. எது அறிகின்றதோ அது சைதன்யம். எந்த உடலின் மூலமாக- எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம். உயிர்த் தத்துவம் சிவம்; உடல் தத்துவம் சக்தி. உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது. உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது. இரண்டின் கூட்டுறவால் இயற்கைத் திட்டம் நிறைவேறுகின்றது. சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக- மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.

அருவுருவநிலை

இந்த சிவத் திருவுருவம் சாதாக்கிய தத்துவத் தில் (மூர்த்தி தத்துவம்) போற்றிப் புகழப்படுவது. இதை "சகள நிட்கள சிவம்' என்றும் கூறுவர். இது வடிவுடையதும் வடிவில்லாததுமாகிய இரு தன்மையும் கூடி நிற்பது; ஞான சக்தியும் கிரியா சக்தியும் சமஅளவில் பொருந்தி தியானிப்பது. இதை போக சிவம் என்றும் அழைப்பர். இந்த சகள நிட்கள சிவமே சிவலிங்க வடிவமாகும். சிவலிங்கம் "அசவலிங்கம்' என அழைக்கப் பெறும். அசவம் என்பது போக்கு வரவு இல்லாதது எனப் பொருள்படும். மூலஸ்தானத் தில் உள்ளது. சிவலிங்கத்தில் காணக்கூடிய அந்த உருவம்- சகளம்; இன்னது என கூற முடியாதது. உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம். நிட்களத்திற்கு உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை. இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவ லிங்கம் அருவுருவத் திருமேனி.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவ சித்தாந்தம்

சேக்கிழார்

சேக்கிழார்
No automatic alt text available.

சேக்கிழார் என்பவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார்.சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.

பிறப்பு[தொகு]
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வெள்ளாளர்[1] மரபில் வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர்

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.

அமைச்சர் பணி[தொகு]
இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.

மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்[தொகு]
புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

மன்னன் சிறப்பு செய்தமை
சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானக் கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.

இவ்வளவு சிறப்புமிக்க சிவனடியாரான சேக்கிழார்  வைகாசி பூச நட்சத்திரம் அன்று சிவனடி அடைந்தார், இன்று அவரது குருபூசை நாளாகும்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு  வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

இறை வழி்பாட்டின் படிநிலைகள்

இறை வழி்பாட்டின் படிநிலைகள்- Stages in spiritual life


பொதுவாக இறைவனை அடைய நான்கு படிநிலைகளை கடக்க வேண்டும். இவற்றையே நான்கு படிநிலைகள் இருப்பதாக சித்தாந்தம் கூறுகிறது. அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்ப்படும்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ சைவ நாற்பாதங்கள் என்றும் இவற்றை கூறுவர்.

சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள் என்பன அறியப்படுகின்றன.

சரியை
கிரியை
யோகம்
ஞானம்


சரியை ;
புறத்தொழில் மாத்திரையானே சிவபிரானது உருவத் திரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, திருக்கோயிலுள் இருக்கும் திருமேனிகளையே சிவபெருமானாகக் கண்டு, அக் கோயிலில் திருவலகிடுதல்,திருமெழுக்குச் சாத்தல், திருவிளக்கிடுதல், திருநந்த வனம் வைத்தல், பூக் கொய்து கொடுத்தல், பூமாலை கட்டித் தருதல், திருவுருவங்களை வணங்கிச் சிவபிரானது புகழ்ப் பாடலைப் பாடுதல், ஆடுதல், சிவனடியார்களைக்கண்டால், அடியேன் செய்ய வேண்டிய பணி யாது? எனக் கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்தல் முதலிய பலவகைப் புறத்தொண்டாகும். ஆதலின், அதனைத் திருநா வுக்கரசரே பெரிதும் எடுத்தோதியுள்ளார்என்பது நன்கறியப்பட்டது.


நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
               நித்தலும்எம் பிரானுடைய கோயில்புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
               பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
               சங்கரா சயபோற்றி போற்றி என்றும்
அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும்
               ஆரூரா என்றென்றே அலறா நில்லே.  
(தி. 6 ப. 31. பா. 3)
எவரேனும் தாமாக இலாடத் திட்ட
               திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
               உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
               இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
               கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
(தி. 6 ப. 61. பா. 3)
என்னும் திருத்தாண்டகங்கள், சரியைத் தொண்டினை இனிதெடுத்து விளக்குவனவாம். இவைகள்ஆங்காங்குப் பல இடங்களில் குறிக்கப் படுவதையும் நாம் நாவரசர் திருமுறையில் காணுதல் கூடும் சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.(திருமந்திரம்)
இந்நெறி நிற்போர் சாலோக முத்தியையும், சிவனின் உலகை அடைதலாகிய சிவலோகத்தையும் பெறுவர்.

சரியைத் தொண்டுகள்
சிவாலயத்தை அலகிடுதல், மெழுகுதல், கழுவுதல், பூஞ்சோலை அமைத்தல், பூப்பறித்துக் கொடுத்தல், பூமாலை கட்டுதல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், விளக்கிடல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல் முதலியன சரியைத் தொண்டுகளாகும்.

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை.

அடுத்த பதிவில் கிரயைக் காணலாம்
திருச்சிற்றம்பலம்
நன்றி ;சைவ சித்தாந்தம்

சைவ சிந்தாந்தங்கள் கூறும் பூசைகள் முறைகள்

பூசைகள்



அக பூசை , புற பூசை

கடவுளை மனதில் நிறுத்தி தாமே பூசை செய்வது. இந்தப் பூசை செய்யும் போது யாரும் பார்க்க முடியாது. இப்பூசையைச் செய்ய எந்தவொரு பொருளும் செலவுசெய்யத் தேவையில்லை. பூசாரியும்தேவையில்லை. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்யலாம். நேரகாலம் பார்க்கவும் தேவையில்லை. இதனை ஞானபூசை என்பர்.இப்பூசையின் சிறப்பை தாயுமானசுவாமிகள்



“நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பு 
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”
என இறையை தன் மனக்கோயிலில் எழுந்தருள அழைப்பதைப் பாருங்கள். 

திருநாவுக்கரசு நாயனார் தான் செய்த அகப்பூசையை 

“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக 
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக 
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய அட்டி 
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே” - (பன்.திரு: 4:76:4)

இன்பர் கோவில் உருவான சரித்திரத்தில் பூசலார் கட்டிய மனக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இறைவனே வந்து சிறப்பித்ததினை அறியலாம்


புற பூசை

எல்லோரும் பார்த்திருக்கச் கடவுளுக்கு பூசை செய்வது.இதனை கிரியாபூசை என்றும் கூறுவர். தேவாரம் பாடி,மந்திரங்களைக்கூறி, நாம் இப்பூசையை பூவால் அர்ச்சித்தும்செய்யலாம். பூசாரியைக் கொண்டும் செய்விக்கலாம். இதுவேகோயில்களில் நடைபெறும் பூசையாகும். இப்பூசையை ஒவ்வொருகோயில் அறக்காவலர் தத்தமது வீக்கத்தைப் பொறுத்து பெரும்தடல் புடலாக போட்டி போட்டு செய்வர். அதிலும் நம் கோயில்திருவிழாக்களையும் சிறப்புப் பூசைகளயும் செய்தோர் தாம்செய்ததைச் சொல்லும் பாங்கைக் கேட்க காதுகள் கோடி வேண்டும்.இதற்கு சில கோயில் அறக்காவலர்களும் பூசாரிகளும்விதிவிலக்கல்ல. 
நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைப்பவரது மனத்துள்ளே புகுந்துநிற்கும் பொன்போலும் சடையையுடைய இறைவன், பொய்யும்புரட்டும் மிக்கோர் பூசையில் இடுகின்ற பூவையும் நீரையும் பார்த்துஅவர்களின் அறியமையை எண்ணி வெட்கப்பட்டுச் சிரிப்பாராம்' எனதிருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் பாடியுள்ளார். அதனை நாம்நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. 
“நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே 
புக்கு நிற்கும் பொன்னார் சடைப்புண்ணியன் 
பொக்கம் மிக்கவர் பூவும்நீரும் கண்டு 
நக்கு நிற்கும் அவர்தம்மை நாணியே” (பன்.திரு: 5: 90: 9) 
எம்மனம் குற்றங்களாகிய தூசுக்களால் அழுக்குப் படிந்துஇருக்கின்றது. மனம்நிறைய குற்றங்களைச் சுமந்து கொண்டு நாம்என்ன கூக்குரல் இட்டாலும் இறைவனின் தன்மையை நாம்உணரமாட்டோம் என்பதை மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் 

சீலமும் பாடி சிவனே சிவனேயென்று 
ஓலமிடினும் உணராய் உணராய் காண்”

என்று சுவையாகச் சொல்லியுள்ளார்.

இராமபிரானே தனது பிரகத்திதோசம் கழிய சிவபூசை செய்ததினை யாவரும் அறியலாம்
திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
சிவசிந்தாந்த தத்துவம்

ஞாயிறு, 28 மே, 2017

நாயன்மார்கள் வரலாறு. / நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்


நாயன்மார்கள் வரலாறு. / நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
 குரு பூசை வைகாசி - பூசம்

சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால் குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.

சோழமண்டலத்திலே, ஏமப்பேறூரிலே, பிராமண குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மிகுந்த அன்போடும் ஒழியாதே அகோராத்திரம் வழிபடுதலே இன்பமெனக் கொண்ட நமீநந்தியடிகள் என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் பலநாளுந் திருவாரூருக்குப் போய் வன்மீகநாதரை வணங்கினார். ஒருநாள் வணங்கிக் கொண்டு, புறப்பட்டுத் திருமுன்றிலை அடைந்து பக்கத்தில் இருக்கின்ற அரநெறி என்னும் ஆலயத்துட்புகுந்து, சுவாமியை நமஸ்கரித்து, அங்கே செய்யவேண்டிய பலதொண்டுகளைச் செய்து, இரவிலே அங்கே எண்ணில்லாத தீபமேற்றுதற்கு விரும்பி எழுந்தார். எழுந்தபொழுது செல்லும் என்று நினைந்து, சமீபத்திலே ஓர் வீட்டில், அது சமணர்வீடென்று அறியாமையினாலே புகுந்து, "சிவாலயத்தில் விளக்கேற்றுதற்கு நெய் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "கையிலே சுவாலிக்கின்ற அக்கினியையுடைய பரமசிவனுக்கு விளக்கு மிகையன்றோ இங்கே நெய்யில்லை, விளக்கெரிப்பீராகில் நீரை முகந்து எரியும்" என்றார்கள். நமிநந்தியடிகணாயனார் அந்தச் சொல்லைப் பொறாதவராகி, அப்பொழுதே மிகுந்த மனவருத்தத்தோடும் திரும்பிப்போய், சுவாமி சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்தார். அப்பொழுது ஆகாயத்திலே "நமிநந்தியே! நீ உன்னுடைய கவலையை நீக்கு, இதற்குச் சமீபத்தில் இருக்கின்ற குளத்தில் நீரை முகந்து கொண்டு வந்து விளக்கேற்று" என்று ஒரு அசரீரிவாக்குத் தோன்றிற்று, நமிநந்தியடிகணாயனார் அதைக்கேட்டு, மனமகிழ்ந்து திருவருளை வியந்துகொண்டு எழுந்துபோய், குளத்தில் இறங்கி, சிவநாமத்தை உச்சரித்து, நீரை முகந்துகொண்டு, திருக்கோயிலிலே வந்து அகலிலே முறுக்கிய திரியின்மேலே அந்நீரைவார்த்து, விளக்கேற்றினார். அது சுடர்விட்டெழுந்தது. அது கண்டுஅவ்வாலயம் முழுதிலும் சமணர்களெதிரே மிகுந்த களிப்புடனே நாடறிய நீரினாலே திருவிளக்கெரித்தார். திருவிளக்கு விடியுமளவும் நின்று எரியும்படி குறைகின்ற தகழிகளுக்கெல்லாம் நீர் வார்த்து, இரவிலே தானே தம்முடைய ஊருக்குப்போய், சிவார்ச்சனைப்பண்ணி, திருவமுது செய்து நித்திரைகொள்வார். உதயகாலத்திலே பூசையை முடித்துக் கொண்டு, திருவாரூரை அடைந்து, அரநெறி என்னும் ஆலயத்திற்சென்று, சுவாமிதரிசனம்பண்ணி, பகன்முழுதினும் திருத்தொண்டுகள் செய்து, இரவிலே எங்கும் விளக்கேற்றுவார்.
இப்படி நிகழுங்காலத்திலே, தண்டியடிகளாலே சமணர்கள் கலக்கம் விளைந்து நாசமடைய; திருவாரூர் பெருமையடைந்து விளங்கியது. சோழமகாராஜா, நமிநந்தியடிகணாயனாரே அத்தியக்ஷராக, வன்மீகநாதருக்கு வேண்Dஉம் நிபந்தங்கள் பலவற்றையும் வேதாகமவிதி விளங்க அமைத்தார். நமிநந்தியடிகள் வீதிவிடங்கப் பெருமாளுக்குப் பங்குனி மாசத்திலே மகோற்சவம் நடத்துவித்தார். நடத்துவிக்கும் பொழுது, சுவாமி ஒருநாள் திருமணலிக்கு எழுந்தருள; சகல சாதியார்களும் ஒருங்கு சேவித்துப்போனார்கள். நமிநந்தியடிகணாயனாரும் சேவித்துப் போய், அங்கே சுவாமியுடைய திருவோலக்கத்தைக் கண்டு களிப்படைந்தார். பொழுதுபட, சுவாமி திரும்பித் திருக்கோயிலிலே புக, நமிநந்தியடிகள் வணங்கிக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, வீட்டினுள்ளே புகாமல், புறக்கடையிலே படுக்க, மனைவியார் வந்து, "உள்ளே எழுந்தருளிச் சிவார்ச்சனையையும் அக்கினிகாரியத்தையும் முடித்துக் கொண்டு பள்ளிகொள்ளும்" என்றார். நமிநந்தியடிகள் "இன்றைக்குச் சுவாமி திருமணலிக்கு எழுந்தருளியபோது நானும் சேவித்துப்போனேன். சகல சாதியும் கலந்து வந்தபடியால், தீட்டுண்டாயிற்று. ஆதலால் ஸ்நானம் பண்ணிப் பிராயச்சித்தஞ்செய்து கொண்டே உள்ளே புகுந்து சிவார்ச்சனையைத் தொடங்கல்வேண்டும். அதற்கு நீ ஜலமுதலாயின கொண்டு வா" என்று சொல்ல; மனைவியாரும் கொண்டு வரும் பொருட்டு விரைந்து சென்றார். அப்பொழுது நமிநந்தியடிகணாயனார் சிறிதுறக்கம் வர, நித்திரை செய்தார். செய்யும் பொழுது, வீதிவிடங்கப்பெருமாள் அவருக்கு சொப்பனத்திலே தோன்றி, "திருவாரூரிலே பிறந்தவர்களெல்லாரும் நம்முடைய கணங்கள்; அதை நீ காண்பாய்" என்று சொல்லி மறைந்தருளினார். நமிநந்தியடிகணாயனார் விழித்தெழுந்து, தாம் நினைத்தது குற்றமென்றுகருதி, எழுந்தபடியே சிவார்ச்சனையை முடித்து, மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொல்லி, விடிந்தபின் திருவாரூருக்குப் போனார். போனபொழுது, அந்தத் திருப்பதியிலே பிறந்தவர்களெல்லாரும் சிவசாரூப்பியமுள்ளவர்களாய்ப் பிரகாசிக்கக் கண்டு, பூமியிலேவிழுந்து நமஸ்கரித்து, அவர்கள் அவ்வுருவம் நீங்கி முன்போலாயினமையையும்கண்டு, "அடியேன் செய்த குற்றத்தைப்பொறுத்தருளும்" என்று சுவாமியைப் பிரார்த்தித்தார்.
பின்பு திருவாரூரிலே தானே குடிபுகுந்து, தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். நெடுங்காலம் சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், தொண்டர்களுக்கு ஆணிப்பொன் என்று, திருநாவுக்கரசுநாயனாராலே, தேவாரப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார். இவர் இந்தப்பிரகாரம் சமஸ்தலோகங்களும் தொழும்படி திருப்பணிகளைச் செய்துக்கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்

சனி, 27 மே, 2017

பைரவர்

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

பைரவ தோற்றம்[தொகு]

பிரித்தானிய சுவடிக்கூத்தில் இருக்கும் பைரவர் சிலை.
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான்.தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
பைரவ மூர்த்தியை மூர்த்தி, பிரம்மசிரேச்சிதர்உக்ர பைரவர்க்ஷேத்ரபாலகர்வடுகர்ஆபத்துதாரனர்சட்டைநாதர்,கஞ்சுகன்கரிமுக்தன்நிர்வாணிசித்தன்கபாலிவாதுகன்வயிரவன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள்.

அட்சர பீடங்களின் காவலன்[தொகு]

சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சன் மகளாக பிறந்தார். அவர்தாட்சாயினி என்றும் சதி தேவி என்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார். ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார். அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார். அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து இறக்கிறார்.
சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்துஅகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார். சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

பைரவ வடிவங்கள்[தொகு]

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

அஷ்ட(எட்டு) பைரவர்கள்[தொகு]

திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

அசிதாங்க பைரவர்[தொகு]

முதன்மைக் கட்டுரை: அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ருரு பைரவர்
கால பைரவர்
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.

சண்ட பைரவர்[தொகு]

முதன்மைக் கட்டுரை: சண்ட பைரவர்
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்திவடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்[தொகு]

முதன்மைக் கட்டுரை: குரோதன பைரவர்
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடையசக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்[தொகு]

முதன்மைக் கட்டுரை: உன்மத்த பைரவர்
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்[தொகு]

முதன்மைக் கட்டுரை: கபால பைரவர்
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீக்ஷன பைரவர்

முதன்மைக் கட்டுரை: பீக்ஷன பைரவர்
பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்[தொகு]

முதன்மைக் கட்டுரை: சம்ஹார பைரவர்
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.[1]
காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் - காமாட்சி ஆலயம், உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில், ருரு பைரவர் - அனுமன் காட்டில், கபால பைரவர் - லாட் பஜாரில், சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில், பீஷண பைரவர் - பூத பைரவத்தில், சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம்.

அறுபத்து நான்கு பைரவர்கள்

பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.[2]
  1. நீலகண்ட பைரவர்
  2. விசாலாக்ஷ பைரவர்
  3. மார்த்தாண்ட பைரவர்
  4. முண்டனப்பிரபு பைரவர்
  5. ஸ்வஸ்சந்த பைரவர்
  6. அதிசந்துஷ்ட பைரவர்
  7. கேர பைரவர்
  8. ஸம்ஹார பைரவர்
  9. விஸ்வரூப பைரவர்
  10. நானாரூப பைரவர்
  11. பரம பைரவர்
  12. தண்டகர்ண பைரவர்
  13. ஸ்தாபாத்ர பைரவர்
  14. சீரீட பைரவர்
  15. உன்மத்த பைரவர்
  16. மேகநாத பைரவர்
  17. மனோவேக பைரவர்
  18. க்ஷத்ர பாலக பைரவர்
  19. விருபாக்ஷ பைரவர்
  20. கராள பைரவர்
  21. நிர்பய பைரவர்
  22. ஆகர்ஷண பைரவர்
  23. ப்ரேக்ஷத பைரவர்
  24. லோகபால பைரவர்
  25. கதாதர பைரவர்
  26. வஞ்ரஹஸ்த பைரவர்
  27. மகாகால பைரவர்
  28. பிரகண்ட பைரவர்
  29. ப்ரளய பைரவர்
  30. அந்தக பைரவர்
  31. பூமிகர்ப்ப பைரவர்
  32. பீஷ்ண பைரவர்
  33. ஸம்ஹார பைரவர்
  34. குலபால பைரவர்
  35. ருண்டமாலா பைரவர்
  36. ரத்தாங்க பைரவர்
  37. பிங்களேஷ்ண பைரவர்
  38. அப்ரரூப பைரவர்
  39. தாரபாலன பைரவர்
  40. ப்ரஜா பாலன பைரவர்
  41. குல பைரவர்
  42. மந்திர நாயக பைரவர்
  43. ருத்ர பைரவர்
  44. பிதாமஹ பைரவர்
  45. விஷ்ணு பைரவர்
  46. வடுகநாத பைரவர்
  47. கபால பைரவர்
  48. பூதவேதாள பைரவர்
  49. த்ரிநேத்ர பைரவர்
  50. திரிபுராந்தக பைரவர்
  51. வரத பைரவர்
  52. பர்வத வாகன பைரவர்
  53. சசிவாகன பைரவர்
  54. கபால பூஷண பைரவர்
  55. ஸர்வவேத பைரவர்
  56. ஈசான பைரவர்
  57. ஸர்வபூத பைரவர்
  58. ஸர்வபூத பைரவர்
  59. கோரநாத பைரவர்
  60. பயங்க பைரவர்
  61. புத்திமுக்தி பயப்த பைரவர்
  62. காலாக்னி பைரவர்
  63. மகாரௌத்ர பைரவர்
  64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சொர்ண ஆகர்ஷண பைரவர்

முதன்மைக் கட்டுரை: சுவர்ண பைரவர்
சுவர்ண கால பைரவர் , திருவண்ணாமலை
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.[3]
தஞ்சைமாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம்கதிராமங்களம் நருவெளி மிக அருகில் காவரி நதி வடக்கு நோக்கி ஓடி வடகாவேரி என சிறப்பு பெயர்பெற்ற காவிரியின் மேற்க்குகரையில் வினாயகர் கோவிலும்,காசிவிஸ்வநாதர்கோவிலும்,இவ்விருகோவிலுக்கும் இடையே மிக பழமையான இரட்டைகால பைரவர் கோவில் அமைந்துள்ளது. தர்போது தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு பூசஜைகள் நடைபெருகிறது. விரைவில் திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகமமும் நடைபெற உள்ளது. இங்குள்ள காலபைரவரையும்,வினாயகரையும் வழிபட திருமணதடை நீங்கி வரைவில்திருமணம் நடை பெறும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை காரிய தடைநீங்க இரட்டைகல பைரவரை வழிபடுவோம்

கால பைரவர்

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

வேறு பைரவ வடிவங்கள்

"அமர்தகர்" என்றும், "பாப பக்ஷணர்" என்றும் பைரவர் அழைக்கப் பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், "பாப பக்ஷணர்" என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்குவர் என்று பொருள்.

பைரவ வழிபாடு

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

பைரவ விரதம்

பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும்.பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.[4]

பைரவர் கோயில்கள்

  • காசியில் காலபைரவர் எட்டு இடங்களில் கோயில் கொண்டுள்ளார். இதனை பைரவ சேத்திரம் என்றும் கூறுகின்றனர்.
  • குத்தாலம் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள க்ஷத்திரபாலபுரம் எனும் ஊரில் கால பைரவருக்கு தனி கோயில் உள்ளது. சிவபெருமானை மூலவராக கொண்ட கோயில்களில் பைரவர் இருந்தாலும், தமிழ்நாட்டில் பைரவருக்கான தனிக் கோயில் இது ஒன்றேயாகும்.
  • நாகை மாவட்டத்தில் உள்ளது சீர்காழி ஊரில் சட்டைநாதரை தலைவராக் கொண்டு எட்டு பைரவர்களும் கோயில் கொண்டுள்ளனர்.
  • திருச்சி உறையூர் சாலையில் உள்ள ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் பைரவிகள் மற்றும் வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.
  • கோயம்புத்தூர் நஞசுண்டாபுரம் காயாந்தஸ்தானம் மயானம் அருகே எட்டடி உயர காலபைரவர் வீற்றிருக்கிறார்.
  • காஞ்சிபுரம் திருமாகறல் தலத்தில் அர்த்தநாரி பைரவர் வடிவில் காட்சியளிக்கின்றனர்.
  • விழுப்புரம் மாவட்டம்,சின்னசேலம் அருகில் ஆறகளுரில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை காமநாதீசுவரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள் காட்சியளிக்கின்றனர்.