திங்கள், 18 ஜூலை, 2016

சிவாலய சேவாவிதி

சிவாலய சேவாவிதி



" ஆலயம் தொழுவது சாலவும்நன்று" 
" கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் " 
என்ற மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

ஆலயம்-கோவில் என்றால் இறைவன் இருப்பிடம் ஆ - என்றால் ஆன்மா, லயம் - என்றால் தங்கும் இடம் அதாவது இறைவன் - நமது ஆன்மா தங்கும் இடம். எங்கும் ஈஸ்வரன் இருந்தாலும் உலகத்தாருக்கு துன்பத்தை நீக்கி,இன்பத்தை தர வேத மந்திரங்களால் பகவான் அருள்புரியும் சக்தி ஆலயத்திலேயே அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. பசுவின் உடலில் பால் இருந்தாலும், பாலாக கறக்கும் இடம் மடியே, அதுபோல பகவானது அருள் கறக்கும் இடம் ஆலயம்.
காலை, மாலை, உச்சி வேளை இந்த மூன்று காலங்களே ஆலய தரிசனத்திற்கு ஏற்ற காலம். தரிசனத்திற்கு செல்பவர் ஸ்தானம் செய்து, தூய ஆடை அணிந்து , கிடைத்தால் ருத்திராட்சம், விபூதி அணிந்து, பூசைப்பொருட்களுடன் செல்லவேண்டும். பூசைப் பொருட்களை முழங்காலுக்கு கீழ் தொங்க விட்டு செல்லல் ஆகாது. செருப்பு, குடை, சொக்காய் இவைகளை கோவிலுக்கு வெளியில் விட்டுச் செல்லல் வேண்டும்.
சிவாலயத்தின் அருகிலுள்ள புணித தீர்த்தத்தை முதலில் கையால் எடுத்து தலை மீது தெளித்துக் கொள்ள வேண்டும். ஆலயம் சென்று திரும்பி வரும் வரை மனதில் சிவனைத்தவிர வேறு எதையும நினைக்க கூடாது. சிவநாமத்தை தவிர வேறு எதையும் சொல்லக்கூடாது.மந்திரம் செபித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
ஆலயத்தில் நுழைந்தவுடன் கொடி தம்பத்தின் அருகே பலிபீடமும், நந்தியும்இருக்கும். அங்கே ஸ்டாங்க மாக ஐந்து முறை நமஸ்காரம் செய்யவேண்டும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் அதாவது முழங்கால் மண்டியிட்டு நமஸ்காரம்செய்யவேண்டும். பலி பீடத்தின் அருகே நான் எனும் அகங்காரம் பலி கொடுத்து விட்டுநந்தி கேசர் அருகில் சென்று, 
" மகா புத்தி உள்ளவரே, சிவ தியானத்தில் ஈடுபட்டுள்ள ஓ நந்தியம் பெருமானே சிவ தரிசனம்செய்ய உத்தரவு கொடுங்கள் " என்று உத்தரவு பெற்று விநாயகர் சந்நதிக்கு செல்ல வேண்டும்

விநாயகர் சன்னதியில் விநாயகரை தரிசிக்கும் போது
" சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் ப்ரஸண்ண வதனம்
த்யா யேத் , ஸர்வவிக்த உப சாந்தயே !

வெள்ளை வஸ்திரம் அணிந்து எங்கும் பரவி நிற்பவரும் பிறை சந்திரனைப் போன்று தந்தத்தை உடையவரே, பிரகாசமானவரே, நாலுகைகளும், சந்தோசமான முகமும் உள்ளவரே, உன்னை வணங்குகிறேன். என்று கூறி ஐந்து முறை தலையில் கொட்டிக் கொண்டும், மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும். பின் முருகன் சன்னதி சென்று,

" உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே "

என்று துதித்து முருகனை வணங்கி விட்டு தேவி சந்நதி செல்ல வேண்டும்.

சர்வ சக்தி தேவியிடம் நாலு கைகள் உள்ளவளே ! சந்திர கலை தரித்தவளே ! உன்னத்தமான மார்புள்ளவளே! குங்கும் போல்சிவந்தவளே! நாமக் கரும்பு , பாசங்குசம், அங்குசம், புஷ்ப பாணம் கரத்தில் ஏந்தியவளே ! ஜகன் மாதா உமக்கு நமஸ்காரம்,
தனம் தரும்கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் பூங்குழல்லாள் அபிராமி கடைக்கண்களே " என்று அபிராமி அந்தாதி கூறி வணங்கி சிவ சந்நதி செல்ல வேண்டும்

பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்களால் பூஜிக்கப்பட்ட வேதத்தால் பிரகாச மானவரும், ஜனன மரணத்தை அகற்றுவருமான சதாசிவ லிங்கத்தை நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
சிவனுக்கு 4 திக்கிலும், ஸ்த்யோ ஜாத தத்புருஷ ,அகோர , வாமதேவ, என்ற முகங்கள் இருப்பதாகவும், ஈஸ்நம் என்ற முகம் மேனோக்கி யுள்ளது நம்மைக் காக்க குனிந்து நம்மை கடாச்சிப்பதாகவும், எண்ண வேண்டும் இதற்கான தேவாரப்பாடல்

" கீதத்தை மகப்பாடும் அடியார்கள் குடியாக
பாதத்தை தொழுகின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மறைலே சிவமாக
போத்தால் வழிபட்டான் புற்றிருக்கு வேளுரே ! என்ற பாடல் பாட வேண்டும்

இதன் பின நடராஜ சன்னதி

ஆயாஸம் இல்லாத மரணம்
ஏழ்மை இல்லாத ஜீவனம்
உன்னிடம்சஞ்சல மில்லாத பக்தி
இவைகளைஎனக்கு தயையோடு அளியும் என வேண்தல் வேண்டும், இதன் பின்
சமூகன், முக்கண்ணன், சடதாரி தரிசித்து விட்டு, 
" உலலொம் உணர்ந்து ஓதற்குஅரியவன்
நிலவுலாகிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் " என்று சேக்கிழார் பெரியபுராணப்பாடலைபாடி

தட்சணா மூர்த்தி சன்னதி அடைய வேண்டும். அங்கு
குரு பிரம்மம், குரு விஷ்ணு குரு தேவ மகேஸ்வர !
குரு ஸாக்ஷாத் ப்ரப்ரும்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம !

என்று வணங்கி விட்டு , சண்டிகேசரிடம் சென்று மெதுவாக மூன்று முறை கையைத் தட்ட வேண்டும்.( சிவாலயத்திலிருந்து நான் எதுவும் எடுத்துச் செல்ல வில்லை என்பதினை உணர்த்த). சிவன் திருவடியில் சதா மனதை செலுத்திய சண்டிகேசா ! சிவ சேவையின் பலனைத் தாரும் என்று வேண்டுதல் வேண்டும்.

பின் பைரவரை தரிசித்து விட்டு மறுபடியும் நந்தியின் பின் புறத்திலிருந்து சிவலிங்கத்தை தரிசனம்செய்து விட்டு கோபுர வாசல் படியில் சிறிது நேரம் உட்கார்ந்து சிவ தியானம் செய்தல் வேண்டும்.
மகாபலி முதலிய சிவ சேவகர்களே என்னுடன் வந்து தரிசனம் செய்வித்த நீங்கள் உள்ளே செல்லுங்கள், நான் போய் வருகிறேன் என்று கூறி வீட்டிற்கு திரும்ப வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரம் உட்கார்ந்து அமர்ந்து பிரகே கால் கை அலம்ப வேண்டும்.
சில விதி முறைகள்:
நந்திக்கும் - சிவனுக்கும், தேவிக்கும் - சிவனுக்கும் குறுக்கே சென்றால் செய்த கிடைத்த புண்ணியமும் போய்விடும்.
கோவிலில் அரட்டை அடித்துப் பேசுதல், சத்தத்துடன் சிரித்தல் கூடாது, எச்சில் துப்பக் கூடாது.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆனமீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக