புதன், 26 ஆகஸ்ட், 2015

Sadhananda Swamigal: ஆனந்தம் -- இறைநிலை. வேண்டுதல் வேண்டாமை என்றால் என்...

Sadhananda Swamigal: ஆனந்தம் -- இறைநிலை. வேண்டுதல் வேண்டாமை என்றால் என்...:  ஆனந்தம் --  இறைநிலை. வேண்டுதல் வேண்டாமை என்றால் என்ன? ஒரு பொருள் வேண்டும் என்றால் என்ன?  அந்த பொருள் நம்மிடையே இல்லை என்றுதானே பொர...

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ரோஜா தோட்டம் : நல்லதங்காள் வரலாறு

ரோஜா தோட்டம் : நல்லதங்காள் வரலாறு: நல்லதம்பி , நல்லதங்காள் அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த   கிராமத்தைச்   சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி , இந்திராணி தம்பதியினர்...

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

மந்திரங்களில் பல


மந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. மந்திரங்களை சாத்விக, ராஜச, மற்றும் தாமச குணங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கலாம். பிரயோக மந்திரங்கள், சரணாகதிக்கான மந்திரங்கள், தத்துவ ரீதியிலான விசாரத்தைத் தூண்டும் மந்திரங்கள், தெய்வ சக்திகளை நம் வசம் ஈர்க்கும் மந்திரங்கள் என்று மந்திரங்களின் செயல்பாட்டை வைத்தும் பாகுபடுத்தலாம். யோக சாத்திரம் பரிந்துரைக்கும் பிரணவம் மாதிரியான பவித்திரமான மந்திரங்கள் என்றால், சத்வ குண இயல்புடைய, மற்றும் சத்வ குணத்திற்கு துணை போகும் வகையிலான ரஜோ குணத்தை மட்டும் கொண்ட, தமோ குணத்தை முற்றிலும் தவிர்த்த மந்திரங்களை மட்டுமே குறிக்கும். சித்த சுத்தி, சரணாகதி, இறை பக்தி, அறிவுத் தெளிவு ஆகியவற்றை நோக்கியே ஒரு யோகியின் மந்திர ஜெபம் இருக்க வேண்டும். காம்யமான பிரயோகங்கள் எதுவும் ஸ்வாத்யாயத்திற்குள் சேராது. குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களும், குழந்தை பெற வேண்டும் என்ற விருப்பமுள்ள மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ள பெண்களும் ஓம் என்னும் பிரணவத்தை மட்டும் தனியாக ஜெபம் செய்யக் கூடாது என்று மந்திர சாஸ்திரம் எச்சரிக்கிறது. வெறும் பிரணவ ஜெபம் சன்யாசிகளுக்கு உரியது. மற்றவர்கள் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நம குமாராய, ஓம் சரவண பவ, ஓம் ஸ்ரீமாத்ரே நம என்று ஏதாவது ஒரு தெய்வத்தின் நாமத்தைச் சேர்த்த, சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள மந்திரங்களில் ஒன்றை ஜெபம் செய்யலாம். ஒரு சரியான குருவின் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜெபம் செய்வது விரைவில் பயன் தரும் என்றும் கூறப்படுகிறது. காயத்ரீ மந்திரம் என்று அழைக்கப்படும் சாவித்ரீ மந்திரம் கூட ஸ்வாத்யாயத்திற்கு மிகவும் ஏற்ற மந்திரம். அம்மந்திரம் உபதேசிக்கப் பெற்றவர்கள் அதையே தொடர்ந்து, சரியான முறையில் ஜெபம் செய்யலாம். ஓம் என்னும் பிரணவம் பேரறிவான, பரம்பொருளை, இறைவனைக் குறிக்கும் மந்திரம். “தஸ்ய வாசக: பிரணவ:” என்பது யோக சூத்திரம். அது போன்ற, அந்த நிலையில் உள்ள, அதற்குச் சமமான மந்திரங்களை மட்டுமே ஸ்வாத்யாயம் செய்பவர் ஜெபிக்க வேண்டும். அப்படியென்றால் பரம்பொருளான இறைவனைக் குறித்தே அம்மந்திரம் அமைய வேண்டும். குட்டித் தெய்வங்களின் மந்திர ஜெபமும் உபாசனையும் சில அன்றாட வாழ்வின் சிக்கல்களை வேண்டுமானால் தீர்க்கலாமே ஒழிய, மனத் தூய்மையோ, இறை உணர்வோ தராது. வேண்டும் தருணங்களில் இம்மந்திரங்களை சில காலம் உபயோகித்துப் பயனடைந்ததும் விட்டுவிடலாம், தவறில்லை. இருப்பினும், ஸ்வாத்யாயத்திற்காகச் செய்யும் மந்திர ஜெபத்தை மட்டும் செய்து, மனதை சரணாகதியில் வைத்து, தன்முனைப்பில்லாத, நிஷ்காம்யமான வாழ்க்கையை வாழ்வது யோகத்திற்கு உத்தமம். முடிந்தவரை இவ்வாறு இருக்க முயற்சிக்க வேண்டும்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார்


கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் மலைநாட்டிலே, இராஜதானியாகிய மகோதையென்னும் பெயரையுடைய கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார். இகத்திலே இப்படிப் பட்டதொரு எதுவுமின்றிப் பூர்வஜன்ம சிவபூஜா புண்ணிய பலத்தினாலே தேகாதியாகிய சர்வவஸ்துக்களிலும் வரும் வைராக்கியம் என்னும் பத்துவகை வைராக்கியங்களுள் இறுதியில் நின்ற நிருகேதுகமாகிய உத்தமவைராக்கியத்தையுடையவராகி, சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, "பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்" என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார். இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான், இவ்வாறு இருக்கும் காலத்தில் மந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, "இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் "இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்" என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள். இவ்வாறாக கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடினார். திருவெண்ணீரு பூண்டாரை சிவனாடியார் எனல் இவ்வாறு இருக்கும் காலத்தில் அரசராகிய சேரமான் வண்ணார் ஒருவர் தனது அழுக்குத்துணிகளை துவைப்பதற்கு , ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, தான் வந்த யானையை விட்டு இறங்கி, தான் சுமந்து வந்த உவர் பொதியால் உடம்ெபல்லாம் திருநீறு பூசியது ேபால் கண்டு அவரை சிவனடியார் என்றே ெகாண்டு, அவரின் காலில் வழுந்து வணங்கினார். உடனே அந்த வண்ணாரோ தேவரீர் அடியேன் அடிவண்ணான் என்னை தொழுவது முறையன்று என்று பணிவுடன் ேவண்டியும், அவரை சிவனாடியராகவே கொண்டு மரியாதை செய்தார், திருச்சிலம் பொலியை கேட்டல் சேரமான் பெருமான் நாயனார் உண்மையநுபவ ரீதியாகவே தமது சிவபூசை முடிவில் திருச்சிலம் போசை கேட்டு வந்தார் என்பது, இறைவன் திருவிளையாடலால், சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். ஒருநாள் அது கேளா தொழிய நேர்ந்தமையைச் சகிக்கலாற்றாது அவர் தம்மைத் தாமே உடைவாளால் தீர்த்துக் கொள்ள முயன்றதும் அதைச் சகிக்கலாற்றா நிலையிற் சிவபெருமான் விரைந்து அது அவர்க்குக் கேட்க அருளியதுடன் தமது திருவிளையாடல் அந்தரங்கம் புலப்பட அவருக்குச் சமாதான விளக்கந் தெரிவித்த ருளியதுமான செய்தியாற் புலனாகும். அது குறித்து சிவனாரே அவர் முன் தோன்றி , அடியேன் உன்னைப் போல் ஒரு பக்தன் வன்தொண்டன் திருநாவாலூரான் பக்தியில் உறுகியதன் நிமித்தம் உனக்கு சிலம்பொலி செய்ய மறந்தேன் என்று பின் தன் நிலை உணர்ந்து மனம் மாறி, அப்பக்தன் விபரம் அறிந்து சுந்தரரர் என்பதை அறிந்து அவர் பால் அன்பு கொண்டு சுந்தரரை நண்பராகக் கொண்டார். சிவனாரும் சேரமான் மீது கருணை கூர்ந்து என்னை தில்லையிலே வந்துகாண கூறினார், அதன்படி ேசரமான் தில்ைல ெசன்று இறைவரை தரிசித்து பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார், அதன் ஒரு பாடல் பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே பொருள் ; தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே. தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே. பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே. ஆலவாயான் அனுப்பிய மடல் இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து, "மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பானிற வரிச்சிற கன்னம் பயில்பொழி லால வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க் குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் றன்போ லென்பா லன்பன் றன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே" என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் (மடல்) கொடுத்தருளினார். பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே சேரமான் பாணபத்திரை வணங்கி மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, "சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே" என்றார். மந்திரிமார்களை நோக்கி, "நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, "சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்" என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, "சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்" என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார். சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், கைலாசம் அடைதல் சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன" என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச் சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார். http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

புதன், 5 ஆகஸ்ட், 2015

பைரவர் வழிபாடு கைமேற் பலன்


எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். பைரவர் வழிபாடு ஏன்? பைரவர் வழிபாடு கைமேற் பலன் இது தமிழகத்தில் வழங்கி வரும் பைரவர் வழிபாடு குறித்த ஆன்மீக மொழியாகும். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அதனால் தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்கப்பட்டது. நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி, ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூசை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூசை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. நமது ஜாதகத்தை தகுந்த சோதிடர்களிடத்தில் காண்பித்து நிலவும் கிரக நிலைகளை ஆராய்ந்து, எந்தக் கிரகத்தால் தோஷம் உள்ளதோ, அல்லது எந்தக் கிரகம் பலவீனமாக உள்ளதோ, அது பலமடைய எந்தக் கிரக திசாபுத்தி நடப்பில் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.நீங்கள் நல்ல பயனை அடைய, கிரகங்களின் பிராணனாக உள்ள பைரவரின் காயத்ரீயையும், அந்த பைரவரின் உபசக்தியின் காயத்ரீயையும் சேர்த்து துதித்து வந்தால் உங்கள் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும். இன்பங்கள் எல்லாம் தேடி வரும். நவக்கிரக பைரவர்களும் உபசக்திகளும் நவக்கிரகங்கள் - பிராண பைரவர் - பைரவரின் உபசக்தி 1. சூரியன் - சுவர்ணாகர்ஷணபைரவர் - பைரவி 2. சந்திரன் - கபால பைரவர் - இந்திராணி 3. செவ்வாய் - சண்ட பைரவர் - கௌமாரி 4. புதன் - உன்மத்த பைரவர் - வராஹி 5. குரு - அசிதாங்க பைரவர் - பிராமஹி 6. சுக்கிரன் - ருரு பைரவர் - மகேஸ்வரி 7. சனி - குரோதன பைரவர் - வைஷ்ணவி 8. ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை 9. கேது - பீஷண பைரவர் - சாமுண்டி பைரவரின் சிறப்பு வடிவங்கள்: பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன. உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். பைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயாவது பைரவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது. நகரத்தார் கோயில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது. பைரவர் - பைரவரின் சக்தி - வாகனம் 1. அசிதாங்க பைரவர் - பிராமி - அன்னம் 2. ருரு பைரவர் - மகேஸ்வரி - ரிஷபம் 3. சண்ட பைரவர் - கௌமாரி - மயில் 4. குரோதன பைரவர் - வைஷ்ணவி - கருடன் 5. உன்மத்த பைரவர் - வராகி - குதிரை 6. கபால பைரவர் - இந்திராணி - யானை 7. பீஷண பைரவர் - சாமுண்டி - சிம்மம் (மனித பிரேதமும் உண்டு) 8. சம்ஹார பைரவர் - சண்டிகை (இலக்குமியுடன் சேர்த்து சப்த மாதர்கள்) - நாய் இவ்வாறு விதவிதமான வாகனங்களில் காணப்படும் பைரவர் ஒரு சில ஆலயங்களில் எவ்வித வாகனமும் இன்றி தனியராய் காட்சியளிக்கிறார். குறிப்பாக திருவான்மியூர், பேரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் உள்ள பைரவ வடிவங்களில் நாய் வாகனம் காணப்படவில்லை. எண்ணிலாக் கரங்களும், எண்ணிலாத் தலைகளும், எண்ணிலா கால்களும் கொண்ட காட்சிக்கு மிக மிக அரிதான வஜ்ர பைரவரின் திருவடிவம் ஒன்று புதுச்சேரி பிரஞ்சிந்திய பண்பாட்டுக் கழகத்தில் காணப்படுகிறது. மூன்று கால்களைக் கொண்ட அபூர்வ பைரவர் சிருங்கேரியில் காணப்படுகிறார். சூரக்குடியில் பைரவர் கதாயுதத்துடனும், திருவாரூரில் பைரவர் கையில் கட்டுவாங்கத்தையும் ஏந்தி அபூர்வ பைரவராகக் காட்சியளிக்கிறார். திருப்பத்தூருக்கு அருகில் பெரிச்சி கோயிலில் உள்ள பைரவத் திருவடிவம் எட்டுத் திருக்கரங்கள் கொண்டதாய் ஒரு கரத்தில் அறுபட்ட நிலையில் தலையொன்றை முடிக்கற்றையுடன் பிடித்தவண்ணம் காணப்படுகிறது. இன்னொரு வகையில் பிணத்தைக் குத்தி ஏந்திய நிலையில் கங்களாத்தண்டு உள்ளது. இவரருகே உள்ள நாய் இரண்டாம் இடக்கையில் தொங்கும் தலையின் தசைப்பகுதியை சவைத்துக் கொண்டிருக்கிறது. பைரவர் வகைகள்: சிற்ப நூல்களும் சிவாகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும்போது அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நூல்களில் இடை நூற்றியெட்டு வடிவங்களாகவும் குறிக்கப்படுகின்றன. இந்த எல்லா வடிவங்களிலும் சிறப்பான எட்டு வடிவங்கள் அஷ்ட பைரவர் என்று அழைக்கப்படுகின்றன.பொதுவாக பைரவர் நீல மேனி கொண்டவராய் சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலிய தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்ட பைரவர் வடிவங்களாகக் கூறப்படும் பொழுது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவைகள் மாறுபட்டுக் காணப்படும். அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்: ஒரே பைரவர் எட்டு வகை பணிகளை எண் திசைகளிலும் ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவர்களாகத் தோற்றம் தருகின்றனர் எனவும், அவரே அறுபத்து நான்கு காலங்களிலும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செயல்படும்போது அறுபத்து நான்கு வடிவங்களாகத் தோற்றமளிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. 1. நீலகண்ட பைரவர் 2. விசாலாக்ஷ பைரவர் 3. மார்த்தாண்ட பைரவர் 4. முண்டனப்பிரபு பைரவர் 5. ஸ்வஸ்சந்த பைரவர் 6. அதிசந்துஷ்ட பைரவர் 7. கேர பைரவர் 8. ஸம்ஹார பைரவர் 9. விஸ்வரூப பைரவர் 10. நானாரூப பைரவர் 11. பரம பைரவர் 12. தண்டகர்ண பைரவர் 13. ஸ்தாபாத்ர பைரவர் 14. சீரீட பைரவர் 15. உன்மத்த பைரவர் 16. மேகநாத பைரவர் 17. மனோவேக பைரவர் 18. ÷க்ஷத்ர பாலக பைரவர் 19. விருபாக்ஷ பைரவர் 20. கராள பைரவர் 21. நிர்பய பைரவர் 22. ஆகர்ஷண பைரவர் 23. ப்ரேக்ஷத பைரவர் 24. லோகபால பைரவர் 25. கதாதர பைரவர் 26. வஞ்ரஹஸ்த பைரவர் 27. மகாகால பைரவர் 28. பிரகண்ட பைரவர் 29. ப்ரளய பைரவர் 30. அந்தக பைரவர் 31. பூமிகர்ப்ப பைரவர் 32. பீஷ்ண பைரவர் 33. ஸம்ஹார பைரவர் 34. குலபால பைரவர் 35. ருண்டமாலா பைரவர் 36. ரத்தாங்க பைரவர் 37. பிங்களேஷ்ண பைரவர் 38. அப்ரரூப பைரவர் 39. தாரபாலன பைரவர் 40. ப்ரஜா பாலன பைரவர் 41. குல பைரவர் 42. மந்திர நாயக பைரவர் 43. ருத்ர பைரவர் 44. பிதாமஹ பைரவர் 45. விஷ்ணு பைரவர் 46. வடுகநாத பைரவர் 47. கபால பைரவர் 48. பூதவேதாள பைரவர் 49. த்ரிநேத்ர பைரவர் 50. திரிபுராந்தக பைரவர் 51. வரத பைரவர் 52. பர்வத வாகன பைரவர் 53. சசிவாகன பைரவர் 54. கபால பூஷண பைரவர் 55. ஸர்வவேத பைரவர் 56. ஈசான பைரவர் 57. ஸர்வபூத பைரவர் 58. ஸர்வபூத பைரவர் 59. கோரநாத பைரவர் 60. பயங்க பைரவர் 61. புத்திமுக்தி பயப்த பைரவர் 62. காலாக்னி பைரவர் 63. மகாரௌத்ர பைரவர் 64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர் கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர். பைரவர் உற்பத்தி: சிவபெருமான் பஞ்சகுமாரர்களில் (பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார்) பைரவரும் ஒருவர் என்று கூறப்பட்டாலும் சிவபெருமான் துக்கம் அல்லது துக்கத்திற்குக் காரணமான பாபத்தைப் போக்குவதால் இவரும் பைரவன் என்றே அழைக்கப்படுகிறார். அவரது சக்தியான காளியும் பைரவி என்ற பெயரில் ஈசானத் திக்கில் இருந்து கொண்டு காவல் காக்கின்றான். பைரவரை வலிமைமிக்க ஞானமூர்த்தியாக உற்பத்தி செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அவரிடம் சிவபெருமான் அளித்தார். அவர் உயிர்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து வருகின்றார். அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாகப் பைரவரைத் தோற்றுவித்து அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்று பைரவர் உற்பத்தியைப் புராணங்கள் கூறுகின்றன. பைரவருக்கு ÷க்ஷத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. ÷க்ஷத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பர். ÷க்ஷத்திராமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கிக் காத்தருளினமையால் சிவனுக்கு ÷க்ஷத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு கூறுகிறது. பெண்கள் பலவீனமானவர்களாதலால், எந்தப் பெண்ணாலும் அசுரனான தன்னைக் கொல்ல முடியாது என்று கருதி தானாகாசுரன் என்னும் அசுரன் வரம் பெற்றிருந்தான். சாகா வரம் பெற்றதனால் தானாகாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அதனால் பிரம்மா முதலிய தேவர்கள் அசுரனின் கொடுமையிலிருந்து விடுபட சிவபெருமானை வேண்டினர். தவர்களின் துன்பத்தைக்கண்ட சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து தானாகாசுரனை அழிக்கக் கட்டளையிட்டார். சிவனின் கட்டளைப்படியே தானாகாசுரனைக் காளி அழித்ததுடன், அந்தக் கோபத்தீயுடனே உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளுடைய கோபத்தீயினால் உலக உயிர்களெல்லாம் வருந்தின. காளியின் கோபத்தீயைப் பருகுவதற்கு மாயையாய் பாலகன் உருக்கொண்டு இடுகாட்டில் குழந்தையாய்க் கிடந்து அழுதார். பசியால் அழும் குழந்தையைக் கண்ட காளி அதனைத் தூக்கி மார்புடன் அணைத்துப் பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த குழந்தை பாலுடன் அவளுடைய கோபத்தீயையும் சேர்த்துப் பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்தது. உலகமும் காளியின் அழிவிலிருந்து காக்கப்பட்டது. குழந்தையாய் அவதரித்து காளியின் கோபத்தைத் தணித்த குழந்தைதான் ÷க்ஷத்திரபாலர். இந்த ÷க்ஷத்திரபாலர் சிவனுடைய மூர்த்தங்களில் ஒன்று என்றும் நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அவரே பைரவரின் திருவடிவம் என்று இலிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அஷ்ட பைரவர் உற்பத்தி: இரணியாட்சன் மகனாகிய அந்தகாசுரன் சிவபெருமானை எண்ணிப் பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்தார். அசுரனும் தன்னை யாராலும் வெல்ல முடியாத பேராற்றலும், பெரும் போக நுகர்ச்சியும் தந்தருள வேண்டுமென வேண்டினான். சிவபெருமானும் அவன் கோரிய வரங்களைத் தந்தருளினார். சிவனிடம் வரம்பெற்ற அந்தகாசுரன் தேவர்களை அடக்கி, அவர்களுடைய தேவியர்களின் கற்பைச் சூறையாடத் தொடங்கினான். மேலும் தோல்வியுற்ற தேவர்களை பெண் வேடத்துடன் பணிபுரியும்படிச் செய்து அவமானப்படுத்தினான். அப்படியும் அவனது ஆணவம் குறையவில்லை. அந்தகாசுரனின் கொடுமையை தாங்க இயலாத தேவர்கள் பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சரணடைந்து தங்கள் இன்னல்களைக் கூறினர். அவர்களது துயரத்தைக் கண்ட சிவபெருமான் மகா பைரவரை உற்பத்தி செய்து அந்தகாசுரனின் ஆண்மையை அழித்து, தேவர்களின் துன்பத்தைப் போக்கும்படிக் கட்டளையிட்டார். மகாபைரவர் அதிஉக்கிரத்துடன் அவன்மீது போர் தொடுத்தார். அவருடைய கோபாக்கினியிலிருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். அந்த எட்டு பைரவர்களுக்கும் தேவர்கள் அஷ்ட மாதர்களை அளித்து இன்பம் பெறச் செய்ததுடன் எட்டு வாகனங்களையும் அளித்தனர். அந்தகாசுரனை மகாபைரவர் வென்று அவனைத் தனது சூலாயுதத்தில் குத்தித் தூக்கியவாறு மூன்று உலகங்களிலும் திரிந்தார். அவனுடைய உடலிலிருந்து வழிந்த குருதியைக் குடித்தார். அவன் அஞ்சிச் சோர்ந்து இரஞ்சியதால் அவனை சூலத்திலிருந்து விடுவித்தார். முண்டகன் முதலிய அனேக அசுரர்கள் தோன்றிய போதெல்லாம் சிவபெருமான் அனேக பைரவர்களை உற்பத்தி செய்து அவர்களை அழித்து வருகின்றார். அவர்களின் சம்ஹாரப் பணி முடிந்தபிறகு ஈசான பாகத்திலுள்ள பைரவர் பதம் என்னும் இடத்தில் தங்கி சிவனை வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஸ்தலத்தையும் பைரவர் காப்பது போல ஈசான திக்கிலிருந்து காளி காத்து வருகிறார். பைரவருக்கும், பைரவிக்கும் ஈசான திசை உரியதாகும். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவர் ஆலயமுக மண்டபத்தில் எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம். சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகார வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர் உள்ளார்கள். அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் கொண்ட கோயில் காஞ்சிபுரம் அருகிலுள்ள பிள்ளையார் பாளையத்தில் உள்ளது. விழுப்புரம் பாண்டிச்சேரி சாலையில் உள்ள வடுவூர் சிவன் கோயிலில் எட்டு வடிவங்களில் பைரவர்களைக் காணலாம். பிரமன் தலையைக் கொய்தது (காசி காண்டத்தில்): சிவபெருமானுக்கு இருப்பது போலவே, ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதனால் சிவபெருமானுக்குத் தான் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்று பிரம்மா கர்வம் கொண்டிருந்தார். இந்த ஐந்து முகத்துடன் அடிக்கடி கயிலையம்பதிக்கு வந்து போய்க் கொண்டிருக்க, சில சமயங்களில் கயிலைக்கு வருவது சிவனா அல்லது பிரம்மாவா என பார்வதி தேவி குழப்பமடைந்தார். சிவபெருமான் என நினைத்து பார்வதி தேவி பரபரப்புடன் வணங்குகையில், பிரம்மா ஆணவத்துடன் சிரித்துக் கொண்டே செல்வது குறித்து பார்வதி தேவி சிவபெருமானிடம் முறையிட்டார். பிரம்மாவின் செருக்கை சிவபெருமான் அறிந்தவராதலால் அவர் தானே திருந்தட்டும் என்று பொறுமை காத்தார். அவ்வாறிக்கையில் மேரு மலையில் திருமாலிடம் பிரம்மா தன்னை சிவபெருமான் என கருதி பார்வதி தேவி எழுந்து மரியாதையுடன் வணங்கியதைத் தெரிவித்து கேலி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குழுமியிருந்த தேவர்களும், முனிவர்களும் அவர்களைச் சூழ்ந்து பரப்பிரம்மன் என்பது யார்? என்று கேட்டனர். அதற்கு பிரம்மா, ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியே என்னைக் கண்டு எழுந்து வணங்குகிறார்கள் என்றால் பரப்பிரம்மம் நானாகத்தான் இருக்க முடியும் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? மேலும் பரப்பிரம்மனை என்பதில் என் பெயர் பிரம்மா இருப்பது நானே பரப்பிரம்மன் என்பதைப் புலப்படுத்தவில்லையா? என்றார். பிரம்மனின் பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் திகைப்பைத் தந்தது. சிவபெருமானைப் பரம்பொருள் என்று கூறுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக பிரம்மா தன்னையே பரப்பிரம்மம் என்று குறித்துக் கொண்டது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது. சரி திருமால் என்ன சொல்கிறார் என்று திருமாலின் பக்கம் திரும்பினர். உன்னைப் பெற்றெடுத்தவள் நான். அப்படி இருக்கும்போது நீ எப்படி பரம்பொருள் ஆக முடியும். பிறப்பு இறப்பு அற்றவர்தானே பரம்பொருள். நீ என்னிடமிருந்து பிறந்ததால் நீ பரம்பொருளாக இருக்க முடியாது. பிறப்பு இறப்பற்ற நானே பரம்பொருள் என்று திருமால் தெரிவித்தார். சிவனே பரம்பொருள் என்பதை உணர்த்த வேண்டி தாங்கள் கேட்ட கேள்விக்கு, சிவனே பரம்பொருள் என்று அவர்களிருவரும் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தால், இருவருமே பரம்பொருள் என்று ஒருவரை ஒருவர் வாதிட்டுக் கொள்வது முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் கவலையைத் தந்தது. அதனால் வேதத்திடமும் பிரணவத்திடமும் அவர்கள் முறையிட்டனர். வேதமும், பிரணவமும் பிரம்மா, திருமால் ஆகிய இருவரிடமும், எல்லா உலகங்களுக்கும் சிவபெருமானே பரம்பொருளாயிருக்க நீங்கள் இருவரும் இப்படி பொருத்தம் இல்லாமல் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கூறின. அப்படியும் அவர்கள் இருவரும் தம் வாதத்தை கைவிடத் தயாராக இல்லை. இவர்களிருவரும் இப்படி சண்டையிடுவதைக் கண்ட சிவபெருமான் அவர்களின் நடுவிலே ஜோதி வடிவில் காட்சியளித்தார். அவர்களோ அதனை ஏதோ ஓர் சுடர் என்று அலட்சியம் செய்தனர். ஆயினும் சிவபெருமான் பார்வதியுடன் அந்தச் சுடரிலே காட்சியளித்தார். அதனைக் கண்ட திருமால் ஐயம் தீர்ந்தவராய் சிவபெருமானே பரப்பிரம்மா என்பதை உணர்ந்தவராய் அவரைப் பணிந்து வணங்கினார். ஆனால் பிரம்மாவோ, என்னைப்போலவே ஐந்து தலைகள் கொண்டிருக்கும் சிவபெருமான் என்னைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர். ஆகவே நான்தான் பரம்பொருள் என்று மார்தட்டினார். ஆணவத்தின் காரணமாகத் தன்னை இகழ்ந்த பிரம்மாவுக்குத் தகுந்த புத்தி புகட்டிட பைரவக் கடவுளை அந்த இடத்திலே தோன்றச் செய்தார். தன்னுடைய நடுச்சிரத்தின் மூலம் சிவபெருமானை இகழ்ந்து பேசிய பிரம்மனின் நடுச்சிரம் பைரவரின் நக நுனியால் கிள்ளி எடுக்கப்பட்டது. தலை அறுபட்ட பிறகுதான் பிரம்மாவுக்குப் புத்தி வந்தது. அகந்தையால் தான் பேசிய பேச்சினை மன்னிக்குமாறு சிவனிடம் கோரினான். தன்னுடைய ஆணவத்தை அடக்கியதற்குச் சான்றாக தன்னுடைய ஐந்தாவது தலை அவருடைய கையிலேயே இருக்கட்டும் என்று பிரம்மா கேட்டுக் கொண்டார். ஐந்து முகங்களைக் கொண்டிருந்த பிரம்மா இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே அன்று முதல் நான்முகன் என்று அழைக்கப்பட்டார். பிரம்மனின் தலை பைரவரால் கிள்ளி எறியப்பட்டதால் அவருக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. பிரம்மனின் தலை பைரவரின் கையில் ஒட்டிக்கொள்கிறது. பிரம்மனின் கபாலம் சுமந்த கையினராய் பைரவர் உலகம் முழுவதும் அலைந்து திரிந்து நர்மதா நதிக்கரைக்கு வருகின்றார். பின்னர் அங்குள்ள முனிவர்களை வணங்கி, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகும் வழியைக் கேட்க, அவர்களும் நீங்கள் காசிக்குச் சென்றால் உங்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று கூறுகின்றனர். முனிவர்களின் அறிவுரைப்படியே பைரவர் காசிக்குச் செல்கின்றார். காசியின் எல்லையை மிதித்த உடனேயே பைரவரின் கையில் உள்ள பிரம்ம கபாலம் தெரித்து விழுகின்றது. அங்கே அவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அதுவரை கபால பைரவர் (கையில் பிரம்மனின் தலையைத் தாங்கியிருந்தமை யால்) என்றழைக்கப்பட்டவர் அதன்பிறகு காலபைரவராகி காசியிலேயே நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார். காசியில் கால பைரவர் அதிகாரம்: இராவணனை வதம் செய்ததால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்துடன் முடிசூட்டு விழா செய்வது நல்லதல்ல என்று ராமன் கருதினார். அதற்குப் பரிகாரமாக காசியிலிருந்து உருவான சுயம்புலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று முனிவர்கள் யோசனை கூறவே ராமன் தன் அருகில் நின்று கொண்டிருந்த அனுமனிடம், நீ உடனே காசிக்குப் புறப்பட்டுச் சென்று ஒரு சுயம்புலிங்கத்தைப் கொண்டு வா! என்று கூறினார். அனுமனும் ராமபிரானின் கட்டளைப்படியே காசியை நோக்கிப் புறப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் என்னும் மாவட்டத்தில் உள்ள இராமகிரி என்னும் இத்தலம் இராமாயண காலத்தில் திருக்காரிக்கரை என்று வழங்கப்பட்டது. இதனை காளிதேவி சமேத காலபைரவர் ஆட்சி செய்கிறார். ராமனுக்காக சுயம்புலிங்கம் எடுக்க அனுமன் காசிக்குச் செல்லும் விபரத்தைத் தன் ஞானக்கண்ணால் உணர்ந்த காலபைரவர் அனுமன் கையால் முதலில் கொண்டு வரப்படும் அந்த காசிலிங்கம் தன்னுடைய இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக சில முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். முதலில் சூரிய பகவானிடம் சென்று அனுமன் காசியிலிருந்து இந்தப் பக்கமாகத் திரும்பி வரும்பொழுது அவரது முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிறகு கங்காதேவியை அணுகி, தாயே ! அனுமன் காசியிலிருந்து திரும்பிவரும் போது காசி முதல் இந்தத் தலம் வரையில் அனுமனின் கண்களில் படாமல் ஒளிந்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்குக் கங்கையும் உடன்பட்டாள். அடுத்து வாயு பகவானிடம் சென்று வாயுதேவா! அனுமன் காசியிலிருந்து திரும்பும்போது காசியிலிருந்து திருக்காரிக்கரை வரை தாங்கள் பலமான காற்றை வீசி நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாயு தேவனும் பைரவர் கோரிக்கைக்குச் சம்மதித்தார். இறுதியாகத் தன் இருப்பிடம் திரும்பி திருக்காரிக்கரை மக்களின் கனவில் தோன்றி நாளை சூரியோதயம் முதல் மதியம் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். கால பைரவரின் இத்திட்டங்களை அறியாத அனுமன் காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி காசி விசுவநாதரைத் தரிசித்து அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு வான்மார்க்கமாக இராமேசுவரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் கால பைரவருக்குக் கொடுத்த வாக்கின்படி வானத்தில் சூரியன் உதயமாகி கடுமையான வெப்பத்தைச் சிந்தினான். வாயுவோ தன் பங்கிற்கு தென் திசையிலிருந்து வட திசையை நோக்கி ஊழிக்காற்று போல வீசத் தொடங்கினான். கங்காதேவியும் ஆஞ்சநேயரின் கண்களில் படாதவண்ணம் ஒளிந்து கொண்டாள். வெய்யிலின் கடுமை, காற்றின் எதிர்வேகம், சிவலிங்கத்தின் பாரம் இவைகளைத் தாங்காமல் மிகவும் களைப்படைந்த அனுமன் குடிக்கத் தண்ணீர் தேடி அலைந்தார். இந்தச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த கால பைரவர், மாடு மேய்க்கும் சிறுவனாக வடிவம் கொண்டு, அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அனுமனும், அந்த சிறுவனை அழைத்து, தம்பி! எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயா? என்று கேட்டார். சிறுவனும் அனுமனை சிறிது தூரம் அழைத்துச் சென்று கங்காதேவியைத் தோன்ற நினைத்துக் கொண்டார். அவரின் விருப்பப்படியே கங்காதேவி அருணா நதியாக சிறிது தூரத்தில் ஓடத் தொடங்கினாள். காளிங்க மடுக்கரையில் அருணா நதியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அனுமன் அந்த மகிழ்ச்சியில் கையில் வைத்திருந்த சிவலிங்கத்தை சிறுவன் வடிவிலிருந்த கால பைரவரிடம் கொடுத்து, தான் தண்ணீர் அருந்திவிட்டு வரும் வரை அதனை வைத்திருக்கும்படி வேண்டினார். சிறுவனும், ஐயோ நானோ சிறுவன்; அதிக நேரம் இந்த பாரத்தைக் கையில் வைத்திருக்க இயலாதே என்றான். அனுமனும் உனக்கு சிரமம் தெரியாதிருக்க வரம் தருகிறேன் என்று சொல்லி காளிங்க மடு அருகினில் நீரருந்தச் சென்றார். குறிப்பிட்ட நல்ல நேரத்தில் லிங்கத்தை வாங்கிச் செல்ல அனுமன் காத்திருந்தார். ஆனால் அதே நல்ல நேரத்தில் அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துவிட்டு, மன நிறைவுடன், பாரம் தாங்காமல் லிங்கத்தை பூமியின் மேல் வைத்து விட்டேன் என்று கூறிவிட்டு சிறுவன் ஓடிவிட்டான். சிறுவனின் குரல் கேட்டு அனுமன் திடுக்கிட்டார். ஆனாலும் பூமியில் வைத்த லிங்கத்தை எடுப்பது ஒன்றும் சிரமமான காரியமல்லவே, சஞ்சீவி மலையையே எடுத்து வந்த எனக்கு இந்தப் பூமியிலிருந்து எடுப்பது என்ன பளுவா? என்று கர்வத்துடன் லிங்கத்தை வாலால் சுற்றி எடுக்க முயன்றார். ஆனால் அவரால் சிவலிங்கத்தை எடுக்க முடியவில்லை. ஆணவத்தால் தான் அலட்சியமாக சிவலிங்கத்தை எடுக்க முயன்றதற்கு சிவனாரிடம் மன்னிப்பு கேட்டவாறு இருகை கூப்பி பணிவுடன் வணங்கி நின்றார். அனுமனை மன்னித்த சிவபெருமானும், நான் நல்ல முகூர்த்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து விட்டதால் நீ பூசிப்பதற்கு வேறொரு காசி லிங்கத்தை எடுத்துக்கொண்டு போ என்று ஆணையிட்டார். அப்பொழுது இயற்கைச் சூழ்நிலை சாதாரண நிலைக்குத் திரும்பியது. திடீரென நிகழ்ந்துவிட்ட இயற்கை மாற்றத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கையில், இது கால பைரவரின் ÷க்ஷத்திரம். அவர்தான் காசியிலிருந்து எடுத்து வந்த சுயம்புலிங்கத்தை இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக இப்படி நடந்து கொண்டார் என்ற உண்மை அனுமனுக்குத் தெள்ளத் தெளிவாகியது. ராமரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு தனக்கு இடையூறாக இருந்தது இந்த காளிங்க மடுதான் என்று கோபம் கொண்டு, அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்து எடுத்து அந்த மடுவில் போட்டு, இந்த நதிப்பகுதி வனம் சூழ்ந்த பகுதியாக மாறட்டும் என்று சாபமளித்தார் அனுமன். இராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் மறுபடியும் காசிக்குச் சென்றார். இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியமளித்தது. காரணம் காசியில், கங்கைக் கரையில் எங்கு நோக்கினும் இலிங்கங்களாகவே காட்சியளித்தன. இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அனுமன் திணறினார். அப்போது ஒரு குறிப்பிட்ட இலிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது. அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார். காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் இலிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபமடைந்த கால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனைத் தடுத்தார். முதல்முறை சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு போகும்போதும் இந்த பைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார். இப்பொழுது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்குத் தடை செய்கிறார் என்று கோபமடைந்த அனுமன் கால பைரவரைத் தாக்கத் தொடங்கினார். ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்குத் தோல்வியே கிட்டுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் பைரவரை வணங்கி, உலக நன்மைக்காகவும், இராமனின் பெருமைக்காகவும் இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டுமென்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததைக் கூறி மன்னிப்புக் கோரினார். கால பைரவரும் மகிழ்ச்சியடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்குக் கொடுத்தனுப்பினார். தன் அனுமதி பெறாது இலிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணைபுரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் கால பைரவர் சாபமிட்டார். அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை. கால பைரவர்: காசி கோயிலில் பைரவர்தான் பிரதானமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஸ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார். அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார். ஸ்வர்ணாகர்ஷண பைரவர்: ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சிவனின் பிரதிபிம்பம் என்று புராணம் கூறும். ஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள். இவர் செந்நிற மேனியையும் அல்லது மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச்சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரியும் குடத்தை ஒரு கரத்தால் தாங்கி, மறுகரத்தால் தம்மை தழுவும் ஆதி சக்தியை ஒரு புறத்துத் தழுவியவர் என ஆகமம் கூறுகிறது. ஸ்வர்ணாகர்ஷண பைவர மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் அம்பிகை மகா ஸ்வர்ண பைரவி. பொன் சொரியும் குடம் ஏந்தியவள். அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள்பாலிக்கிறார். வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். இவரை நம்பிக்கையுடன் வழிபவுவதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் மற்றும் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். நம்பிக்கையுடனும், பக்தியுடனும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டதி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்த வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுகிறார்கள். தினந்தோறும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்: வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள். பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்பொழுது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஞாலத்தைக்காக்க குமரன் எடுத்த பற்றற்ற கோலம்" பழனிஆண்டி"


ஞாலத்தைக்காக்க குமரன் எடுத்த பற்றற்ற கோலம்" பழனிஆண்டி" முருகன் ஒரு ஞானக் கடவுள். உலகை சுற்றுவதற்கு பதிலாக உமா மகேஸ்வரனை சுற்றிவந்தாலே போதுமானது என்ற தத்துவம் அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த் அம்மையப்பனையே சுற்றி வந்து கனியை பெற்றுக் கொண்ட அண்ணன் கணபதியிடம், ஞானமே வடிவமான குமரன் கோபம் கொள்வானா? இப்படிப் பட்ட வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சொன்னால் கடவுளிடம் கோபமும் தாபமும் இருந்தால் மனிதர்களிடம் இருக்காதா? என்று எண்ண மாட்டார்களா?. இந்த சம்பவத்தை ஆராய்ந்து பார்த்த பெரியவர்கள், அதில் அடங்கியுள்ள தத்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார்கள். நாரதர் தேவலோக மாங்கனியைக் சிவனாரிடம் கொடுத்து அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததுமே, ஞானக்குழந்தைகளான கணபதி, முருகன் இருவரும் சட்டென்று " தாங்கள் ஸர்வேஸ்வரன் இது தங்களுக்கே உரியது " என்றார்கள். ஆனால் ஈஸ்வரனோ, மூத்தவன் நீ இந்தா, கனி உனக்கு என்று கணபதியிடம் கொடுத்தார். இல்லை, இளையவன் அவன், அவனுக்குக் கொடுங்கள் என்றார் முருகப்பெருமான். இப்படிப்படித்தான் ஆரம்பித்தது, அப்போது ஒரு வேடிக்கையான நாடகம் நடத்த விரும்பினார் நாரத முனி. இது வெறும் பழமன்று, ஞானப்பழம் தகுதி உடையவர்களுக்கே இது சேர வேண்டும் என்றார். ஈசன் சிந்தித்தார், உங்களில்உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்த பழம், அப்புறம் போட்டியில் வென்றவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இதைக் கொடுக்கட்டும் என்று பிரச்னைக்கு மற்றொரு புதிய பரிமானத்தை உருவாக்கினார். உலகை சுற்ற வேண்டும் என்றாலும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம் வர மயிலேறி புறப்பட்டார், முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தன்னுக்குள்ளே அடக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவசக்தியை சுற்றி அம்மையப்பனை வலம் வந்து , கந்தன் வரும்முன்பே கனியை பெற்றுக் கொண்டார் கணபதி. கந்தன் வந்தார், அண்ணன் கையில் கனியைக் கண்டார். அது எப்படி அவருக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொண்டார். உமா மகேஸ்வரனே உலகங்கள் அனைத்தும் என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனதை ஒரு கணம் எண்ணினார். அதற்கான காரணத்தை ஆராய்ந்தார், அண்ணன் கணபதி பிரணவ வடிவம், ஞானஸ்வரூபன், அவரிடமே இதற்கு காரணம் கேட்டார், அனைத்து உலகங்களையும் அம்மையப்பனில் காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது, தவத்தின் பலனாய் பெற்ற ஞானம்தான் அந்த ஆற்றலுக்கு காரணம் என்பதை உணர்ந்தார். அதன் தொடர்பாக ப்ரம்மண்யனான தாம், ஸூப்ரமண்யமாக விரும்பினார். அதற்காக அவர் மேற்கொண்ட தவக் கோலமே பழனியாண்டி ரூபம். அண்ணனைப் போலத் தானும் தவமியற்றி, ஞானஸ்கந்தனாக விரும்பியதன் விளைவே அந்த ஆண்டி வேடம். சூரனை அழிக்கும் வீர சக்தியுடன் சிவனாரின் நெற்றிக்கண்ணில் உதித்த குமரன், ஞானக்கடவுளாகி, ஞாலத்தை காக்க எடுத்துக் கொண்ட பற்றற்ற திருக்கோலம் பழநி ஆண்டிக் கோலம், " கனி கிடைக்கவில்லை " என்ற கோபத்தில் ஆண்டியாக வில்லை. தன்னை வழிபடுவோர்க்கு எல்லாம் அதனை வழங்குவதற்காக விரும்பி, ஏற்றுக் கொண்ட வடிவமே அந்த பரதேசி வடிவம். கந்தனின்தவம் தொடங்கியது. பிரணவம் அவருள் அடங்கியது, ஞானம் அவர் மூச்சாயிற்று. அழகும் அறிவும் அவருள் ஒளிவீசியது. இப்போது இறைவன் ஈஸ்வரன் தன் திருக்குமரனின் ஞானத் தவத்தின் பயனை அறிய விரும்பினார். தன் மகன் குமரனை அழைத்தார். " ஓம்கார பிரணவத்தின் உண்மைப் பொருளை உன் தவத்தால் உணர்ந்து கொண்டாயா? என்று வினவினார். ஆம் தந்தையே என்றார் குமரன். எங்கே கூறு பார்க்கலாம் என்றார் ஈஸ்வரன். ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து " பத்தும் இரண்டும் எத்தனை?" என்று கேட்டால் கூட்டல் கணக்கு ஆசிரியருக்கு தெரியவில்லை என்று அர்த்தமாகாது. மாணவனுக்கு தெரியுமா? என்று சோதித்து பார்க்கத்தான் அந்த கேள்வி. இப்போது அந்த ஆசிரியர் நிலையில் நின்றுதான் பரமேஸ்வரன் முருகப்பெருமானிடம் கேட்டார். கேள்விக்கு பதில் தெரிந்த மாணவன் போன்று தான் முருகன் பதில் கூறினார். ஆனால் பிரணத்தை எங்கே எப்படி, எந்த பாவத்தில் சொல்ல வேண்டும் என்ற நியதியில் தான் ஈஸ்வரன் மடியில் அமர்ந்து, காதில் ஓதினார், குருவாக அல்ல, குருவுக்கு சீடனாகத்தான், ஓதினார் குமரன். இதனை தவறாக " ஈஸ்வரனுக்கே ஓம்கார பொருள் கூறினார் " என்பது சிவ அபஸ்தம். நடந்த சமயத்தின் மூலம் தந்தைக்கு தன் அறிவின் திறத்தை உணர்த்தினார் முருகன். ஈஸ்வரனும், ப்ரம்மண்யனை ஸூப்ரமண்யன் என்று உணர்ந்து கொண்டார். இது வே சுப்ரமண்யன் சிவபெருமானுக்கு ஓம்கார பிரணவத்தை உபதேசித்த வரலாறு, இந்த நிகழ்வே தஞ்சை மாவட்ட த்திலுள்ள சுவாமிமலை. அசுரர்களை அழிக்க மட்டுமல்ல, தர்மத்தை காக்கவும், தோன்றியவர் முருகன். அநீதியை அழிக்கவும், சக்தியை பிறக்கும் போதே பெற்றவர் இவர். பின்னர் தர்மத்தைக் காக்கும் ஞானத்தை தன் தவத்தினால் பெற்றார். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்க, தன்னையே ஆண்டியாக்கி கொண்டே தனிப்பெரும் தெய்வம் முருகப் பெருமான். திருச்சிற்றம்பலம் மேலும் ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கீதை கூறும் தோல்வியும் வெற்றியே !


கீதை கூறும் தோல்வியும் வெற்றியே ! ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து , தோற்றுப் போவதன் மூலம் வெற்றி வாகை சூடியிருக்கிறார், என்பது கீதை சொல்லும் ரகசியம் தோல்வியும் ஒரு வெற்றிக்கான வழியே ! வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!..... என்று ஜெயிப்பதற்கான அத்தனை சூட்சுமங்களையும் செய்தளிருனார் ஸ்ரீ கண்ணபிரான், அதே நேரம் விட்டுக் கொடுத்தும் , தோல்வியின் மூலமாகவும் செயிக்கலாம் என்பதை உலகுக்கு உணர்த்தினார், அட, அது எப்படி? தோற்றால் எப்படி வெற்றி பெற்றதாகும்? என்று எவரெனும் கேட்கலாம். கணவன் , மனைவிக்கு இடையே சின்னதாக ஓர் ஊடல், லேசாக வந்த பிரச்சனையில் இரண்டு பேருமே கிழக்கு மேற்காக பார்த்து முறைத்துக் கொள்கின்றனர். அப்போது சமரசம் செய்யும் கணவனோ, அல்லது மனைவியோ, தோற்றுப் போனதாக ஆகிவிடும்,யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சமரசத்திற்கு இறங்கினால் அது தோற்றுப் போனதாக - தோல்வி அடைந்ததாக ஆகிப் போகும், ஆனால், சமரசத்திற்கு வருபவரோ, விட்டுக் கொடுப்பவரோ, தோற்றுப் போனதாக தெரியலாமே தவிர, உண்மையில் வெற்றி பெற்றவர் யார் என்று பார்த்தால், அவர்தான் என்பது புரிய வரும். இதைத்தான் " பத்தினியிடம் தோற்பான் பரம ரசிகன் " என்பார்கள். ஜெயிப்பதில் மூன்று வகை உண்டு. ெஐயம் என்கிற வெற்றி, என்பது ஒன்று. தோல்வி என்பது மற்றொன்று, வெற்றியோ, தோல்வியோ .. அதை ஆழ்ந்து ரசிக்கின்ற மனோபாவம் ரொம்பவே முக்கியம், இது மூன்றாவது. உலகில் எல்லோரும் எப்போதும், வெற்றிக் கனியை பறித்தே ஆக வேண்டும். என்று தான் விரும்புவார்கள். இந்த இரண்டும் இல்லாமல், வெற்றியோ, தோல்வியோ .... அதை அனுபவிக்க வேண்டும். அனுபவித்து ரசிக்க வேண்டும் என்கிற சிந்தனை ஒன்று உள்ளது. ஆக, எது வந்தாலும், ரசிகன் எனும் நிலையில் இருப்பது உன்னதமானது. மேலும் கீதை கூறுவது, ஒருவனைக் கொல்ல கத்தியின்றி ஆயுதமின்றி கொல்ல முடியும் என்கிறார் கிருஷ்ணன் ஒருவரைக் கத்தியால், குத்தித்தான் கொல்ல வேண்டும் என்றில்லை. அரிவாளால் வெட்டித்தான் சாகடிக்க வேண்டும் என்பது கிடையாது. இன்றைக்கு இருக்கிற நவீன ஆயுதங்களால் அழிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கத்தியின்றி, ரத்தமின்றி ஒருவரைக் கொன்று போடலாம், எப்படி? முடியும், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார், இதைவிட எளிமையான வழி இல்லை. உன் வில் தருகிற வலியை விட, உன் அம்பு பாய்ந்து தருகிற இம்சையைவிட நான் சொல்லும் முறையில் தாக்கலாம். அப்படித் தாக்கினால், அதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. துவண்டு சரிவார்கள். ஆனால், என்ன..... உன்னை பொறுத்தவரையில் அவர் இறந்து விட்டார், ஆனால், அவர் உடலால் இறந்திருக்க மாட்டார், . என்று கிருஷ்ணன் சொல்ல,, தலை கிறுகிறுத்து போனார் அர்ச்சுனன். ஆனால் அர்ச்சுனன் இந்த குழப்பான சூழலில் " கண்ணா ! நானோ , போர்முனையில் எதிரியை தாக்கவதற்கு தகுந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆனால் நீயோ என்னை ஏதேதோ சொல்லி குழப்புகிறாய், நான் என்ன தான் செய்ய வேண்டும் அதையேனும் சொல் என்றான் அர்ச்சுனன். நீ ஒன்றும் செய்ய வேண்டாம், நேர்மையும், உண்மைக்குணமுமாக இருப்பவரை சத்தியசீலரை, மரியாதைக்குறைவாக ஒரே ஒரு வார்த்தை பேசிவிடு, அது கிட்டதட்ட அவரைக் கொன்றதற்கு சமம்தான் " என்றார் பகவான். அதாவது மரியாதைக்குரிய நபரை எல்லோரும் போற்றிக் கொண்டிருக்கிற, கொண்டாடுகிற ஒருவரை, இறைபக்தியுடன் இருப்பவரை, எல்லோரிடமும், அன்பும் பிரியமுமாக பழகுபவரை கொல்வதற்கு வேறெதும் செய்ய வேண்டாம், அவரை அவச் சொல்லாக, மரியாதை கொடுக்காமல், பேசினால் போதும், அதுவே..... அவர் இறந்ததற்கு சமம் , அவர் உடலால் இறக்காதிருந்தாலும், சுய மரியாதை இழந்ததின் பொருட்டு அவரது உள்ளம் இறந்த நிலை அடைந்தது போன்றே நிலைக்கு உட்படுவார் எனவே அத்தகையதுதான் கத்தியின்றி, ஆயுதம் இன்றி செய்யும் கொலை " என்பதை உலக மக்களுக்கு எப்படி உணர்த்தி விட்டார், பகவான். அவமரியாதையாக சொல்கிற ஒற்றை வார்த்தையே ஒருவரை கொல்வதற்கு போதுமானது. அதனால் அவன் இறப்பான். இறக்காமல் இருப்பான் உடலால், என்பதாக சொன்னார். அதேவிதமாக, இறைவனின் பிறப்பை அவனுடைய அவதாரத்தை ஆழ்வார்களும், முன்னோர்களும் போற்றியுள்ளனர், அதாவது பிறக்காத எம்பெருமான், பிறக்கிறான், என்று சொல்லி பூரிக்கின்றனர், திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

கந்தபுராணம் கூறும் சுலோகம் " கள்ளிளும் கொடியது காமத்யே"


கந்தபுராணம் கூறும் சுலோகம் " கள்ளிளும் கொடியது காமத்யே" "உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில் கொள்ளிலும் சுட்டிடும் குறுகி மற்றதைத் தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால் கள்ளினும் கொடியது காமத்தீயதே" -- கந்தபுராணம் திரை நட்சத்திரங்கள் நேருக்கு நேராகப் பார்க்காவிட்டாலும்கூட, திரைப்படிங்களில் அவர்கள் டூயர் பாடி ஆடுவதை பார்க்கும் போது, நம் மனது நிலைகொள்ளாது தவிக்கிறது. அந்த நடிகர்இடத்திலோ, நடிகை இடத்திலோநம்மை நிறுத்தி வைத்துக் கற்பனையாக டூயட் பாடத் தோன்றுகிறது. நிழலைப் பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், நிஜத்தில் நெருங்கி நடிக்கும் நடிக-நடிகையருக்கு எப்படி இருக்கும்?? பெற்ற தகப்பான இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு, தன் மகளையே தொட்டுப் பேசக்கூடாது என்கிறது சாஸ்திரம். காரணம் , காமம் அந்த அளவுக்கு வலிமையானது. காமத்தை வெல்லவேண்டும் என்றால், மனக்கட்டுப்பாடு அவசியம். ஒரு தடவை ஒரு நடுத்தர வயது இளைஞன், இராமகிருஸ்ண பரமஹம்சரிடம் என்னால் காமத்தீயை அடக்க முடியவில்லை, அதனை வெல்ல என்ன செய்யவது என்றான். அதற்கு குருதேவர் ஒரு கதை மூலம் விளக்கினாராம், ஒருவன் தனது இஸ்டப்பிராணியாக , செல்லப்பிராணியான ஒரு நாயினை வளர்த்தான், அது எப்போதும் அவன் எஜமானன் கூடவே இருந்து பழக்கமாகிவிட்டது, உண்ணும்போதும், உறங்கும் போதும் அவனுடைய ஒட்டி உறவாடிக்கொண்டே இருந்ததாம், இப்படி இருக்கும் போது, ஒரு வைத்தியர், இப்படி நாயுடன் ஒட்டி உறவாடுவது உனக்கு நல்லதல்ல, எனவே அதன் பழக்க வழக்கங்களை மாற்றிவிடு. என்று கூறி சென்றுள்ளார், அதன் பின் அவன் அந்த நாயுடன் ஒட்டி உறவாடுவதை சற்று விலக்கியுள்ளான், ஆனால் நாயோ அதனை புரிந்து கொள்ளவில்லை? ஏனெனில் அது மனிதனைப்போல் அதற்கு புரிந்து கொள்ளும் தன்மை யற்றது தானே! . எனவே, இதனிடமிருந்து விலகி இருக்க அவன் அதனை அடித்து துன்புரித்தியும் அது அதன் பழைய செய்கையிலிருந்து மாறுபட மறுத்தது. இருப்பினும் இதன்செய்கை தொடர்ச்சியாகஇருந்தபடியால் நாய் சற்று அவனிடமிருந்து விலக ஆரம்பித்து, ஒட்டி உறவாடுவது குறைந்து விட்டது. இதற்கு பல காலம் பிடித்தது. இப்படி உயிருள்ள ஜீவனை பிரிப்பதற்கே பல காலம் ஆகும் போது, உயிரற்ற காம உணர்ச்சியினை கட்டுப்படுத்த - விலக்க நாயின் தொடர்பிலிருந்து விலகுவது போல் பல காலம் கழித்து விடா முயற்சி செய்து, அதன் பிடியிலிருந்து விடுபடலாம், என்றார் இராமகிருஷ்ணர், எனவே காமத்தீயிலிருந்து விலகுவது அவ்வளவு எளிதல்ல, என்று விளக்கினார். முற்காலத்தில் மாமுனிவர்கள் ஆள் அரவமற்ற காட்டில் தவம் செய்து கொண்டிருந்தபோதே மனம் தடுமாறியதை இதிகாச புராணங்கள் விரவாகச் சொல்லி யிருக்கின்றன. மாயை என்பவள் காசிப முனிவரை மயக்கி, அசுர குலத்தை அதிகரிக்க நினைத்தாள், அதற்காக, காசிப முனிவர் தவம் செய்து கொண்டிருந்த காட்டில் சூழ்நிலையையே தனது மாய சக்தியால் மாற்றினாள். அழகான சின்னஞ்சிறு குன்றுகள்,வாசம் வீசும் மலர்களைக் கொண்ட மரம், செடிகள்,கொடிகள் நீருற்றுக்கள், அருவிகள்,அழகும் ருசியும் நிறைந்த பழ மரங்கள், மனத்திற்கு ரம்மியமான இளம் தென்றல் காற்று, இனிமையான ஓசையை எழுப்பும் பறவைகள், என அத்தனையும் அங்கே உருவாக்கினாள். மாயை, கடும் தவத்தில் இருந்த காசிபரின் உடல் , சுற்றுபப்புறத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்தினால் மனம் தவ நிலையை விட்டு தடுமாற ஆரம்பித்தது. யாராக இருந்தாலும் என்ன? அனைவருக்கும் உடம்பின் வசப்பட்டவர்கள்தானே? காசிப முனிவர் கண்களை திறந்தார்,எதிரில் ஆகாயத்திலிருந்து நழுவி விழுந்த வானவில்லை போல அழகு ததும்ப நின்றிருந்தாள் மாயை. அப்புறம், என்ன.......... காசிப முனிவருக்கும், மாயைக்கும் சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன் , அஜமுகி என்ற அசுரக் கும்பல் பிறந்தது. தன் எண்ணம் நிறைவேறியது கண்டு மாயை மகிழ்ச்சி அடைந்தாள். காசிபரை விட்டு புறப்பட தீர்மானித்தாள். பின்னே காசிபருடன் குடும்ப நடத்தவா அவள் வந்தாள். அவள் எண்ணிய எண்ணம் ஈடேறியது. மாயை மாயமானாள். மாயை புறப்படுவதைக்கண்டு காசிபர் மனம் கலங்கினார், மாயையோ, " முனிவரே ! நான் அசுர குலத்தை விருத்தி செய்யவே வந்தேன். உங்களோடு வாழ்க்கை நடத்த வரவில்ைலை. நான் மாயை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். என்று கூறிவிட்டு மறைந்தாள். அவள் மறைந்ததும், அவளால் உண்டாக்கப்பட்ட ரம்மியமான கானகமும் அனைத்தும் மறைந்து விட்டது. ஆனால் காசிபரால் பழைய நிலையை அடைய முடியவில்லை. மாயையின் பிரிவை எண்ணி அவர் துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது காசிபரின் தந்தையான பிரம்மா அங்கு வந்தார், மகனின் நிலை கண்டு, அதற்கான காரணத்தை விசாரித்தார். காசிபர்நடந்ததை விவரித்தார் அதைக் கேட்ட பிரம்மதேவருக்கு மனம் கூசியது. " காசிபா ! வேதங்களிலும், கலை ஞானங்களிலும், கரைகண்ட நீ, காம வலையில் சிக்கலாமா? அறிவிழந்து, மூடர்களைப்போல், புலம்பிக் கொண்டிருக்கிறாயே! .. உலகிலேயே இரண்டு பொருட்கள் மிகவும் கொடுமையானது, ஒன்று கள், மற்றொன்று - காமம், இந்த இரண்டில் கள்ளைவிட மிகவும் கொடுமையானது காமம். கள்ளானது அருந்தினால்தான் போதை ஏறும், தீங்கை விளைவிக்கும். ஆனால் காமமோ, மனத்தில் நினைத்தாலே ஆளைக் கொன்றுவிடும்.காமம் நினைத்தாலும் சுடும், கண்டாலும் சுடும். கேட்டாலும் சுடும். அடைந்தாலும் சுடும், நீக்கினாலும் சுடும். இப்படிப்பட்ட தன்மையால் காமத்தீயானது கள்ளை விடக் கொடுமையானது, எல்லாவிதமான துன்பங்களையும் தந்து, வாட்டி வதைக்கும் காமத்தை அறிவுள்ளவர்கள் நினையார்? நீ விரும்பிய மாயை என்பவள் வஞ்சனையே வடிவானவள், அவளுடன் சேர்ந்ததன் மூலம் நீ அளவில்லாத பாவத்தை செய்து விட்டாய், அந்த பாவம் நீங்கவதற்காக நீ முன்பு போல தவத்தை செய் " என்று காசிபருக்கு நீண்ட அறிவுரை யும், ஆசியும் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார் பிரம்மன். உண்மையை உணர்ந்த காசிபர் அதன் பின் சிறந்த, முறையில் தவத்தை செய்து, சிவத்தை சேர்ந்தார். யோசித்து பாருங்கள், விஸ்வாமித்திரர்,துர்வாசர், முதலான ரிஷிகளே காம வலையில் அகப்பட்டு, அல்லல் பட்டபோது நாமெல்லாம் எந்த மூலை? ராவணன் கயிலாய மலையையே அசைத்தவன், தலைசிறந்த வீரன், உத்தமமான மனைவி, நல்ல பிள்ளை என அனைத்தும் இருந்தும் காமம் தானே ராவணனை வீழ்த்தியது. மாமுனிவர்கள் கூட மங்கையர்களின் மையல் வலையில் வீழ்ந்து மனம் கலங்கியதைச் சொல்லி இதிகாச புராணங்கள் நமக்கு பாடம் நடத்தி இருக்கின்றன. இதனைத்தானே கந்தபுராணம் இந்த பாடலில் கூறியுள்ளது. உள்ளினும் சுட்டிடும்உணரும் கேள்வியல் ................... கள்ளினும் கொடியது காமத்தீயதே! " என்கிறது. எனவே காமத்தீயினை அடக்கிட மனத்தூய்மையும், மன உறுதியும், விடா முயற்சியும் வேண்டும். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 1 ஆகஸ்ட், 2015

பட்டினத்தார் பாடலிலே, சில முத்துக்கள்


இந்த பட்டினத்தார் பாடலிலே, சில முத்துக்கள் “மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந் தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே” என்ற பாடல் பிரசித்தமானது. இப்பாடலைப் பிரசித்தமாக்கியவர் கவிஞர் கண்ணதாசன். ‘பாத காணிக்கை’ என்ற திரைப்படத்தில், “வீடுவரை உறவு; வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?” என்று அவர் எழுப்பிய கேள்வி இந்தப் பட்டினத்தார் பாடலைப் பார்த்துதான். பட்டினத்தார் பாடலை வாசிக்க மறந்தவர்கள் கண்ணதாசனின் இந்தப் பாடலைக் கேட்க மறந்திருக்க மாட்டார்கள். இதுபோலவே பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தைப் படிக்கத் தயங்குபவர்களுக்கு அதன் சுருக்கமாகப் பின்வரும் திரைப்படப் பாடலையும் கவியரசு பாடியுள்ளார். “எந்த ஊர் என்பவனே ! இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா? மேலூரில் வாழ்ந்திருந்தேன் ,,,,,,,,,,,,,,,,,,” இசையுடன் பாடும்போது எந்தப் பாடலும் ரசனைக்குரியதாகி விடுகிறதல்லவா? இதோ பட்டினத்தார் பாடலையும் ஒருமுறை பாட வேண்டாம்; படித்துத்தான் பாருங்களேன். “ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து,,,,,,,,,,,” பட்டிணத்தார் பாடல்கள் மாணிக்கவாசகர் மற்றும் இராமலிங்க அடிகள் ேபால் நெஞ்சை உருக்கும் பாடலகள் அதிகம் காணப்படுகிறது. இறைவனைப் பாடி உருகுகின்ற திருவாசகத்திலும், அருட்பாவிலும் நனைந்த ஈர விழிகள் இந்தப் பட்டினத்தார் பாடல்களிலும் கசிவை ஏற்படுத்துகின்றன. ஒரு தடவை ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடியானவர் தனது மகனுக்கு திருமணம் முடித்து விட்டு, அந்த தம்பதிகளை ஒரு முற்றும் துறந்த ஞானியையோ, அல்லது வயதில் மூத்த வாழ்ந்து சிறப்புற்ற ஒரு பெரியவர் கொண்டு வாழ்த்திட எண்ணி சுற்றும்முற்றும் தேடி தற்செயலாக பட்டிணத்தாரை ஒரு சத்திரத்தில் சந்தித்து, அவரை தன் திருமண தம்பதியரை வாழ்த்த அழைத்தார், அப்ேபாது அடிகாளர், அய்யா நானே பரதேசி, அதிலும் குடும்ப வாழ்வையே முறித்த முற்றும் துறந்த பரதேசி, என்னைப் போய் வாழ்த்த அழைக்கிறீர்களே என்று வர மறுத்தார், ஆனால் அந்த குடியனவரோ அவரை விட வில்ைல, அய்யா தாங்கள் தான் என் மகனை கட்டாயம் வாழ்த்த வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து மண ேமடைக்கு அழைத்துச் ெசன்று மணமக்களை வாழ்த்த கூறினார், அங்கு திருமணத்திற்கு வந்திருந்தோரை பார்த்ததும் அந்த ஞானிக்கு திருமணத்திற்கு வந்திருந்தோர் அனைவரும் அவரவர் குணத்திற்கு ஏற்றார் போல், அவரகள் நரிகளாகவும், போய்களாகவும், நாயகளாகவும் பட்டிணத்தாருக்கு ெதரிந்தனர். இருப்பினும் தான் வந்து வாழ்த்த வேண்டுமென்ற கட்டாயத்தினால் தான் ஒரு வாழ்த்து பாடல் கீழ்கண்டவாறு பாடினார். நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி ......நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல ......புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் ......கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல ......அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே... பட்டினத்தாரின் பாடல் தினமும் பொய்யும் பித்தலாட்டமும் கொண்டு உள்ள மாந்தர்கள் தாங்கள் பேசும் பொய் பேச்சினால் பாம்பின் நாக்குபோல் பிளந்து , மழை ெபய்த வுடன் வருகின்ற புற்று ஈசல்கள் தன் கூட்ைடவிட்டு வந்தவுடன் இறந்து விடும் எனத் ெதரிந்தும், துபு துபு வென்று பூமியை கிளரிக்கொண்டு வருவது ேபால, பல பிள்ளைகளை பெற்று , அவைகளை வளர்க்க முடியாமல் திணரும் மாந்தர்கூட்டம், பொல பொல வென பிள்ைளகளைப் ெபற்று எடுத்து வளர்க் வகையறியாது , இருக்கும் நிலை, குரங்கினை பிடிக்க மரக்கிளையில் கவர்பிளந்து ஆப்பு வைத்துள்ள இடத்தில் காலை வைத்து அசைத்து அகப்படும் குரங்கினைப்போல், அகப்பட்டுக் ெகாண்டீர், என குடும்ப வாழ்வில் படும் துயரத்தினை வாழ்த்துரையாக பாடிக் காட்டியுள்ளார். இது போன்று எத்தனையோ பாடல்களில் அவரின் அருட் புலம்பல் நம் மனதை நெருடுகின்றது. திருச்சிற்றம்பலம் ெதாகுப்பு; வை. பூமாலை,சுந்தரபாண்டியம்