வியாழன், 31 ஜூலை, 2014

சுந்தரர் பெருமானார்


சுந்தரர் பெருமானார், குருபூஜை சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமயக்குறவர் நால்வர்களில் பெரியபுராணத்தின் கதாநாயகன் என்றும் இளைஞர் என்றும் வர்ணிக்கப்பட்ட சுந்தரர் ஒரு சிவலோகத்தில் சிவத்தொண்டராக இருந்து அவதார பருசராக இப்பூலகில் அவதரித்து இைறவனை அடையும் மார்க்கமான சகமார்க்கமாக சிவனை நண்பனாகக் கொண்டு அவரிடம் தான் வேண்டும் போதெல்லாம் வேண்டியவன பெற்று சிவனருள் பெற்றதை யாரும் அறிேவாம், ஆனாலும் அவரை குருவாகவும் அவருக்கு நண்பனாகவும் அடியாராகவும், இருந்து அவருடனே முக்தி பெற்ற இரண்டு நாயன்மார்களின் சிறு குறிப்பும் இத்துடன் விவரித்துள்ளேன். பெருமிழலைக்குறும்ப நாயனார், ***************************** மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார். இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; "சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்" என்று நினைந்து, "இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்" என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார். கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் ********************************************** மலைநாட்டிலே, கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி அவதரித்தார். , சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டுமெனக்கருதி, இராஜபுத்திரருக்குரிய தொழில்களைச் செய்தலின்றி, திருவஞ்சைக்களமென்னுஞ் சிவஸ்தலத்தை அடைந்து, "பரமசிவன் சுவதந்திரர், நாம் பரதந்திரர்" என்று உணர்ந்து, சிவாதீனமாய் நின்று, தினந்தோறும் பிராம முகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம்பண்ணி அநுட்டானஞ் செய்து கொண்டு, திருநந்தனவனம் வைத்தல், பூக்கள் பறித்தல், திருமாலை கட்டல், திருவலகிடல், திருமெழுக்கிடல், திருப்பாட்டுப்பாடல் முதலிய த் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார். இப்படி நிகழுங் காலத்திலே, செங்கோற்பொறையன் என்னுஞ் சேரமகாராஜனுக்கு இது நித்தியம் இது அநித்தியம் என்கின்ற பகுத்தறிவும், அநித்தியமாகிய இம்மை மறுமை யின்பங்களின் வெறுப்பும், பிறவித்துன்பங்களும், அவன் செய்த புண்ணிய பலத்தினாலே தோன்றின. அவை தோன்றவே, நித்தியமாகிய மோக்ஷத்திலே ஆசை உண்டாயிற்று. அதனால் அவன் பிறவிக்குக் காரணமாகிய வீண் முயற்சிகளை விட்டு, கோக்ஷத்திற்குக் காரணமாகிய யோக முயற்சியைச் செய்யவேண்டுமென்று தெளிந்து, அரசியற்றுதலினின்று நீங்கி, தவஞ்செய்யும் பொருட்டுத் தபோவனத்தை அடைந்தான். மந்திரிமார்கள் சிலநாள் ஆலோசித்துத் தெளிந்து, திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டுசெய்து கொண்டிருக்கின்ற அச்சேரர் மரபிற்கு முதல்வராகிய பெருமாக்கோதை யாரிடத்திலேபோய், அவரை வணங்கி நின்று, "இம்மலைநாட்டை நீரே முடிசூடி அரசியற்றல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்ய; பெருமாக்கோதையார் "இவர்கள் வார்த்தை இன்பமயாகிய திருத்தொண்டுக்கு இடையூறாயிருக்கின்றது. சிவபத்தியிலே சிறிதும் வழுவாது அரசியற்றுதற்குத் திருவருள் உளதாயின், இதனை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்து அறிவேன்" என்று ஆலயத்தினுள்ளே பிரவேசித்து, சிவபெருமானை வணங்கி விண்ணப்பஞ்செய்து, அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்திவழுவாது அரசியற்றுஞ் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகளனைத்தையும் அறியும் அறிவையும், பாசமில்லாத மகாபராகிரமத்தையும் பெருங் கொடையையும், அரசருக்கு உரியபடை வாகனமுதலிய வெல்லாவற்றையும் கைவரப் பெற்று, நமஸ்கரித்துக்கொண்டு, புறத்தணைந்து, மந்திரிமார்களுடைய வேண்டுகோளுக்கு உடன்பட்டார். மந்திரிமார்கள் பெருங்களிப்புடையர்களாகி, அவரை நமஸ்கரித்தார்கள். கழறிற்றறிவாராகிய அப்பெருமாக்கோதையார், ஆன்மார்க்களெல்லாம் உய்யும் பொருட்டுச் சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே முடி சூடி, சிவாலயத்தை வலஞ்செய்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து, யானை மேற்கொண்டு, கொற்றக்குடையும் வெண்சாமரமும் உரியவர்கள் தாங்க, மகா அலங்காரத்தோடு நகரிவலஞ் செய்தார். செய்யும்பொழுது, ஒருவண்ணான் தோளிலே உவர்ப்பொதி சுமந்துகொண்டு தமக்கு முன்னே வரக்கண்டு, அவனுடைய சரீரம் மழையினாலே கரைந்த உவர் ஊறப்பெற்று வெளுத்திருத்தலால், விபூதியை உத்தூளனஞ் செய்த சிவனடியாரது திருவேடம்போலுதலை உணர்ந்து, அந்த க்ஷணத்திலேதானே யானையினின்றும் இறங்கி பேராசையோடு விரைந்துசென்று, கைதொழுதார். அது கண்டவுடனே அவ்வண்ணான் மனங்கலங்கி, அவரை விழுந்து நமஸ்கரித்து, "அடியேனை யார் என்றுகொண்டது? அடியேன் அடிவண்ணான்" என்று சொல்ல; சேரமான் பெருமாணாயனாரும் "அடியேன் அடிச்சேரன். தேவரீர் திருநீற்றுவேடத்தை நினைப்பித்தீர். வருந்தாதே போம்" என்று சொல்லியருளினார். மந்திரிமார்கண் முதலாயினோரெல்லாரும் சேரமான்பெருமாணாயனாருடைய சங்கமபத்தி மிகுதியைக் கண்டு, ஆச்சரியமடைந்து, சிரசின்மேலே அஞ்சலி செய்து தோத்திரம் பண்ணினார்கள். சேரமான் பெருமாணாயனார் யானைமேலேறி, நகரியை வலங்கொண்டு மாளிகை வாயிலிலே புகுந்து, யானையினின்றும் இறங்கி மண்டபத்தை அடைந்து, இரத்தினசிங்காசனத்திலேறி, வெண்கொற்றக் குடைநிழற்ற, வெண்சாமரம் வீச, அரசர்கள் மலர்தூவி வணங்கித் துதிக்க, வீற்றிருந்தருளினார். இங்ஙனமிருந்து, மனுநீதிநெறியை நடத்தி, எண்ணிறந்த அரசர்கள் திறைகொணர அகத்தும் புறத்தும் பகையை அறுத்து, சைவ சமயம் அபிவிருத்தி யாகும்படி அரசியற்றுவாராயினார். இப்படி நிகழுங்காலத்திலே, பாண்டிநாட்டிலே மதுரையில் எழுந்தருளியிருக்குஞ் சோமசுந்தரக்கடவுள் தம்மை அன்பினோடும் இசைப்பாட்டினாலே துதிக்கின்ற பாணபத்திரருக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, இரவில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "உனக்குப்பொன் இரத்தினம் பட்டாடை முதலியவைகளெல்லாவற்றையும் நீ வேண்டியபடி குறைவின்றித் தரும்பொருட்டு, நம்மேல் எப்பொழுதும் அன்புடையனாகிய சேரனுக்கு ஓலை தருவோம் தாழ்க்காமற்போய் வா" என்று அருளிச் செய்து, "மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பானிற வரிச்சிற கன்னம் பயில்பொழி லால வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்முப் படியெனப் பாவலர்க் குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் றன்போ லென்பா லன்பன் றன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே" என்னுந் திருப்பாசுரத்தை வரைந்த திருமுகத்தைக் கொடுத்தருளினார். பாணபத்திரர் அத்திருமுகத்தைத் தலைமேற்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு, மலைநாட்டிற்சென்று, கொடுங்கோளுரை அடைந்து, மாளிகைக்கு முன்வந்து, சேரமான் பெருமாணாயனாருக்கு அறிவித்தார். உடனே அவர் சிரசின் மேலே கைகுவித்து, மிகுந்த அன்பினோடுங் கண்ணீர் சொரிய எழுந்து மாளிகைக்குப் புறத்தில் வந்து, பாணபத்திரரைப் பல முறை வணங்கி, "சுவாமி! தேவரீர் அடியேனை ஒருபொருளென மதித்துத் திருமுகங் கொண்டு வந்தீரே" என்றார். அப்பொழுது பாணபத்திரர் சிவபிரானுடைய திருமுகத்தைக் கையிலே கொடுத்து வணங்க, சேரமான்பெருமாணாயனார் அதனை முடிமேற்கொண்டு கூத்தாடி, மொழி குழற, ஆன்ந்தவருவி சொரிய, பரவசராய்ப் பூமியிலே பலமுறை விழுந்தார். திருமுகத்தைப் பலதரம் வணங்கி, அதனை வாசித்து, திருவருளைத் துதித்து; மாளிகையினுள்ளே புகுந்து, மந்திரிமார்களை நோக்கி, "நம்முடைய குல மாளிகையில் இருக்கின்ற பண்டாரமுழுதையும் பொதி செய்து ஆளின்மேல் ஏற்றிக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் ஏற்றிக் கொண்டுவந்து வணங்கினார்கள். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்கு அந்தத் தனங்களை வெவ்வேறாகக் காட்டி, "சுவாமீ! தேவரீர் இவைகளையும் யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சதுரங்கங்களையும் அடியேனுடைய அரசையுங் கைக்கொண்டருளும்" என்று சொல்ல, பாணபத்திரர் தமக்குச் சேரமான்பெருமாணாயனார் தந்த தனங்களெல்லாவற்றையுங் கண்டு, மனமகிழ்ந்து, அதிசயித்து, அவரைநோக்கி, "சுவாமீ! அடியேன் எனக்கு வேண்டுவனவற்றை மாத்திரங்கொள்ளும் பொருட்டே சிவாஞ்ஞை அரசையும் அரசுறுப்பையும் தேவரீரே கைக்கொண்டருளும்" என்று சொல்லி வணங்கினார். சேரமான்பெருமாணாயனாரும் சிவாஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அதற்கு உடன்பட்டார் பாணபத்திரர்தனங்களெல்லாவற்றையும் யானை குதிரை உள்ளிட்டனவற்றுள் வேண்டுவனவற்றையுங்கொண்டு, ஓர் யானைமேல் ஏறிக்கொண்டுபோனார். சேரமான்பெருமாணாயனார் பாணபத்திரருக்குப் பின் கண்ணீர் சொரிய, கைதொழுது கொண்டு செல்ல, பாணபத்திரர் நகர்ப்புறத்தில் அவரிடத்திலே விடைபெற்றுக்கொண்டு போய், மதுரையை அடைந்தார். சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். அப்பொழுது சபாநாயகர் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நினைப்பிக்கும் பொருட்டு, எதிர் நின்றருளாது, "வன்றொண்டனாகிய சுந்தரன் கனகசபையின் கண்ணே நமது ஆனந்த நிருத்தத்தை வந்து வணங்கிப் பதிகம் பாடுதலால், நாம் நின்று அதனைக் கேட்டு வரத்தாழ்த்தோம்" என்னுந்திருவாக்கை அருளிச் செய்தார். சேரமான்பெருமாணாயனார் "அடியார்களுக்கு இவர் அருளுங்கருணை இருந்தவாறு என்னை" என்று வியந்து கனகசபையை வணங்கி வன்றொண்டரையும் தரிசித்தல் வேண்டும் என்று விரும்பி, சுபதினத்திலே திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளை வணங்கிக் கொண்டு, சேனைகளோடு புறப்பட்டுப்போய்ச் சிதம்பரத்தை அடைந்து, கனகசபையிலே திருநிருத்தஞ்செய்தருளும் சபாநாயகரை வணங்கி, சிவானந்தக்கடலுள் அமிழ்த்தி, பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார். சபாநாயகர் அதற்குப் பரிசிலாகத் தமது குஞ்சிதபாதத்தினது திருச்சிலம்பின் ஓசையை எதிரே கேட்பித்தார். சேரமான்பெருமாணாயனார் காலந்தோறும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்து கொண்டு அத்திருப்பதியில் இருந்தார். சிலநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தரிசித்து வணங்குதற்கு விரும்பிப் புறப்பட்டு, இடையில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவாரூரை அடைந்து, தம்மை எதிர்கொண்ட சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்து, அவரோடு திருக்கோயிற்சென்று, வன்மீகநாதரை வணங்கி, திருமும்மணிக்கோவைபாடி, பரவையார் வீட்டிலே போய், சுந்தரமூர்த்திநாயனாரோடும் இருந்தார். சிலதினஞ் சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரோடும் திருவாரூரை அகன்று, வேதாரணியத்தை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து, திருவந்தாதி பாடினார். அதன்பின் பாண்டிநாட்டிற் சென்று, அங்குள்ள மதுரை முதலாகிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சுந்தரமூர்த்திநாயனாரோடுந் திருவாரூருக்குத் திரும்பிவந்து, அவரோடுஞ் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். பலநாட்சென்றபின், சுந்தரமூர்த்திநாயனாரைத் தம்முடைய ஊருக்கு வரும்படி பிரார்த்தித்து, அழைத்துக் கொண்டு சென்று, தம்முடைய கொடுங்கோளுரை அடைந்து, அவரோடும் இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் வன்மீகநாதரை நினைத்து உருகி, திருவாருருக்குப் போம்படி எழுந்துசெல்ல; சேரமான்பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்து அவரைப் பின்றொடர்ந்து, போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு, மந்திரிகளைக் கொண்டு தம்முடைய திருமாளிகையில் உள்ள பண்டாரமுழுதையும் பொதிசெய்து ஆட்களின்மேலே ஏற்றுவித்து, சுந்தரமூர்த்திநாயனாருக்கு முன் செல்லும்படி அனுப்பி, அந்நாயனாரை விழுந்து நமஸ்கரித்தார். சுந்தரமூர்த்திநாயனார் சேரமான்பெருமாணாயனாரைத் தழுவி, விடைகொடுத்துச் சென்று, திருவாரூரை அடைந்தார். சுந்தரமூர்த்திநாயனாரிடத்திலே விடைபெற்ற சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனார் மறவாத சிந்தையோடு, கொடுங்கோளுரிலே அரசு செய்து கொண்டிருந்தார். நெடுநாளாயினபின், சுந்தரமூர்த்திநாயனார் பின்னுங் கொடுங்கோளூருக்கு வந்து, சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனாரோடும் எழுந்தருளியிருந்தார். பலநாளாயினபின், ஒருநாள் சேரமான்பெருமாணாயனார் ஸ்நானம் பண்ணும்பொழுது, சுந்தரமூர்த்திநாயனார் திருக்கைலாசத்துக்குப் போய், சுவாமிதரிசனஞ்செய்து, திருக்கைலாசத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளையானையின்மேல் ஏறி, தம்முடைய தோழராகிய சேரமான்பெருமாணாயனாரை நினைத்துக்கொண்டு சென்றார். சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய செயலை அறிந்து, அந்தக்ஷணத்தில் அருகிலே நின்ற ஓர் குதிரையில் ஏறிக்கொண்டு திருவஞ்சைக்களத்துக்குப்போய் வெள்ளையானையின் மேற்கொண்டு ஆகாயத்திற் செல்லுஞ் சுந்தரமூர்த்திநாயனாரை கண்டு, தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார். உடனே அந்தக் குதிரையானது ஆகாயத்திலே பாய்ந்து சுந்தரமூர்த்திநாயனாருடைய வெள்ளையானையை அடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான்பெருமாணாயனாருடைய படைவீரர்கள் குதிரையிற்செல்லும் அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால், மிகுந்த திடபத்தியினாலே உருவிய உடைவாட்களினால் தங்கள் தங்கள் தேகத்தை வீழ்த்தி, வீரயாக்கையைப் பெற்றுப்போய், சேரமான்பெருமாணாயனாருக்கு முற்பட்டு, அவரைச் சேவித்துக் கொண்டு சென்றார்கள். சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன் போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து, ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான் திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத் தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன" என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால், திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும் முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல் அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச் சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான் அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார். சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து, தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு நாட்டியருளினார். திருச்சிற்றம்பலம்

புதன், 30 ஜூலை, 2014

திருவடி தீட்சை


திருவடி தீட்சை திருவடி தீட்சை தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை. தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன். ஒரு ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின் தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும். திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்: “விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் மாம” திருமந்திர பாடல் – 2816 விளக்கினை பிளந்து விளக்கினை ஏற்றி – இங்கு திருமூலர் நமது உடலில் விளக்கான கண்ணை பிளந்து ஏற்ற பட வேண்டும் என்கிறார். ஏன் பிளக்க வேண்டும்? எதனால் பிளக்க வேண்டும்? நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது. தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார். தீட்சையின் போது முதலில் நம் புற கண்ணை திறந்து குருவின் கண்ணை பார்க்க வேண்டும். தீட்சை பெற்ற பின் கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண் திறந்து கண்மணி உணர்வை பற்றி தவம் செய்தால் தான் கண் ஒளி பெருகும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம் ஜீவ ஒளியும் , புற ஒளியும் ஒன்றல்ல. நம் ஜீவ ஒளியை தகுதி பெற்ற சற்குருவின் ஜீவ ஒளியை கொண்டு தான் தூண்ட முடியும். வேறு எந்த புற ஒளியை கொண்டோ வேறு எதனாலோ தூண்ட முடியாது. இதுவே தீட்சை. தீட்சையின் மூலம் வள்ளல் பெருமான் நம்முள் வந்து , நம் உடனிருந்து வழி நடத்தி , தவம் செய்ய துணை புரிந்து நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார். நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர். சச்சு தீட்சை, நயன தீட்சை, தச தீட்சை என்று கூறுவது திருவடி தீட்சையான இதை தான். ஒரு ஞானியால் குருபீடத்தில் அமர்த்த பட ஒருவர் தான் இந்த தீட்சையினை வழங்க முடியும். தச தீட்சை என்றால் 10விதமான தீட்சை அல்ல. நம் உடலில் 8ம்(வலது கண் ஒளி ) , 2ம் (இடது கண் ஒளி) உள் சேர்த்தல் நம் உயிர் ஸ்தானமான அக்னி கலையை அடடையலாம். 10ம் இடமான நம் இரு கண் உள் சேரும் இடத்தில் தான் நம் உயிர் உள்ளது. இங்குள்ள உயிர் ஒளியை பெருக்கி தன் இரு கண்கள் மூலம் சீடனின் கண்ணை பார்த்து சீடனின் கண்களில் உள்ள ஒளியை குரு தூண்டுவதான் தீட்சை. இதை தான் தச தீட்சை என்றனர். கண்களான நாயனத்தின் மூலம் கொடுப்பதால் நயன தீட்சை என்றும் , திருவடி தீட்சை என்றும் பெயர். நம் கண்மணி மத்தியில் ஊசி முனை அளவு துவாரம் உள்ளது. நம் உயிரை பற்றி உள்ள மும்மலங்கலான (ஆணவம், கன்மம், மாயை) வினை திரைகள் கண்ணாடி போல் அமைந்து நம் உள் ஒளியை மறைத்துள்ளது. நம் உயிர் ஒளி வலது கண்ணில் சூரிய ஒளியாகவும் , இடது கண்ணில் சந்திர ஒளியாகவும் துலங்குகிறது. இந்த இரு கண் ஒளியையும் வினைகள் முடியுள்ளன. இந்த கண்களில் உள்ள சூரிய , சந்திர ஒளிகளை மறைத்துள்ள வினை திரையை நீக்குவதே தீட்சை. இதன் பின் தான் நம் உயிர் ஒளியை நாம் நம் கண்களில் பற்ற முடியும். இந்த உயிர் ஒளியை நாம் பற்ற ஒளி உணர்வினை (ஜோதி உணர்வினை) குரு தன் உயிர் ஒளியினை கொண்டு தருவார். இந்த ஜோதி உணர்வினை கண்களில் பெறுவதே தீட்சை. இந்த உணர்வினை நாம் பெருக்க,பெருக்க நம் உயிர் ஒளி பெருகி (ஞான கனல்) நம் வினை திரைகளை நீக்கும். ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி. இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம். இதுவே தவம். இறைவனை அடைந்த எல்லா சித்தர்களும் , ஞானிகளும் இவ்வாறே தீட்சை பெற்றனர். தங்கள் கண் ஒளியை பற்றியே தவம் செய்து தன்னை உணர்ந்து இறைவனை உணர்ந்தனர். நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார். “அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே. தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே. மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான். தீட்சை பெற வேண்டிய தகுதிகள்: தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி : 1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும். 2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும். 3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும். இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் குருவை வணங்கி குரு காணிக்கை கொடுத்து தீட்சை பெறலாம்.

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): முழுநேர ஆன்மீக ஈடுபாடு நமக்கு சாத்தியப்படுமா?

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): முழுநேர ஆன்மீக ஈடுபாடு நமக்கு சாத்தியப்படுமா?: நமது முற்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களுக்கு ஏற்ப நாம் இப்பிறவியில் இந்த தொழில் அல்லது வேலை பார்க்கிறோம்;நமது முற்பிறவிகளில் நாம் செய்த ...

செவ்வாய், 29 ஜூலை, 2014

திருப்புகழ் தோன்றிய வரலாறு


திருப்புகழ் தோன்றிய வரலாறு அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்றும், “நாக்கைநீட்டு” என்று வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை எழுதினார்.சேந்தமிழ்ப் பரமாசாரியனாம் செவ்சேட்பெருமான தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்கவே கடல் மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார். முருகவேள் “வயலூருக்குவா” என்றருள் புரிய அருணகிரியார் வயலூர்சென்று பொய்யாக்கணபதி சந்நிதியில் நின்று “கைத்தலம் நிறைகனி” என்ற திருப்புகழைப்பாடினார். முருகன் கனவிலும் நனவிலும் அடிக்கடி தரிசனந்தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியாலும் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே பாடினார்.முருகன் திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலைதான் தித்திக்கும் திருப்புகழ். கந்தவேளின் திருவடிகள் மூன்று இடங்களிற்பட்டன.மயில்மீது, தேவர்தலைமீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் எத்தனையோ சிறப்புக்கள் மிக்கதிருப்புகழை இடையறாது அன்புடன் ஓதினால் முருகன் நம் வயப்படுவான். திருப்புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவநாசகனாகிய குமரக்கடவுள் தரிசனையுண்டாகுமேல் பாவங்கள் முழுவதும் நீங்கித் தூயவராவார். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழிஇலக்கியத்திலுமில்லை. விந்தையான சந்தம் கொண்டு சிந்தைகவர்வது.சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். நம் பிறவிப் பந்தம்களைய வல்ல சங்கத்தமிழ்நூல் “திருப்புகழ்” பேரின்பப் பெருவெள்ளம் அது. படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் பாடல்களே.ஆறுபடைவீடுகள் கதிர்காமம் மற்றும் அநேக தலங்களிற் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானைப் பாடியுள்ளார். உலகமெலாம் உய்வுபெறும் பொருட்டு ஞானப்பெருவெளியில் அருவரதம் தாண்டவஞ்செய்யும் நடனசபாபதிகளிக்க அவர்முன் குழந்தைக் குமரவேள் திருநடனம் புரிவர். தண்டையும் அழகிய வெண்டையும், கிண்கிணியும், சதங்கையும் இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்கச் சிவபிரானது திருமுன் அன்பான இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்து நின்ற அன்புபோல, அடியேனும் அத்திரு நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியடையுமாறு கடப்பமலர்மாலையும் அழகிய மணிமகுடங்களும் தாமரைமலர் போன்ற சிவந்த திருக்கரங்களும் ஒளிவீசும் வேலாயுதமும், கருணைபுரிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திரகிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனது கண்கள் குளிரத்தோன்றி அருள்புரியாயோ என அருணகிரியார் வேண்ட அவருக்குக் கந்தவேளின் திரு நடன தரினம் கிடைத்தது. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும் முருகா…… உன் வேல் தடுக்கும்! பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை. திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார். பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை பட்சியெனும் உக்ர துரகமும் நீபப் பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை வடிவேலும் திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றிய பனிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும், கடம்ப மலர் மாலையையும், கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும், எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும், அருள் தருகின்ற சிற்றடிகளையும், பன்னிரண்டு தோள்களையும், இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில்திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே! ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள். திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன. திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு. அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார். பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக மறவேனே அடியவர்களுக்கு அருளும் இறைவனே ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும் அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும் திருப்புகழை கொஞ்சமாவது நானும் சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே! இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது. சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா? ”முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில். திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ். இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு. திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. 1. முத்தைத் தரு பத்தித் திருநகை 2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை 3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும் அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்

வாய் விட்டு பாடினால் பிறப்பற்று போகும் / அப்பர் பெருமான் " சூழும் துயரம் அறுப்பர் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் ஆழும் கடல் நஞ்சை யுண்டார் போலும் ஆடலுகந்த அழகர் போலும் தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு தன்மை அளித்த தலைவர போலும் ஏழுபிறப்பும் அறுப்பார் ேபாலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீசனாரே, நாவுக்கரசர் சுவாமிகள் திருஇன்னம்பர் என்னும் தலத்தில் தான்தோன்றிய ஈசனாராகிய சிவபெருமானாரே, நம்மைச் சூழ்ந்து கொள்ளும் துயரங்களை நீக்குபவர், அவரே படைப்பு அழிப்பு தொழிலையும் செய்யபவர், ஆழம் மிகுந்த கடலில் தோன்றிய நஞ்சை உண்டவரும், கூத்தாடுதலை விரும்பும் அழகருமான எம்பெருமானரே, கீழான மன முைடய அடியேனையும் அடிமை கொண்டு ஞானம் அளித்தவர் அவரே ஆவார், நாம் மனதார அவன் புகழை தோற்றிப்பாடினால் ஏழுவகையான பிறப்புக்களையும அறுந்தெறிபவர் அவரே ஆவார், வாய்விட்டு பாடினால் பிறவியாகிய நோய்விட்டு போகும், இவ்வுலகத் துன்பங்களும் ஏழுவகையான பிறப்புகளும் இல்லாது ஒழியும் நன்றி ; தமிழ் வேதம்

வாய் விட்டு பாடினால் பிறப்பற்று போகும் / அப்பர் பெருமான்


வாய் விட்டு பாடினால் பிறப்பற்று போகும் / அப்பர் பெருமான் " சூழும் துயரம் அறுப்பர் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் ஆழும் கடல் நஞ்சை யுண்டார் போலும் ஆடலுகந்த அழகர் போலும் தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு தன்மை அளித்த தலைவர போலும் ஏழுபிறப்பும் அறுப்பார் ேபாலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீசனாரே, நாவுக்கரசர் சுவாமிகள் திருஇன்னம்பர் என்னும் தலத்தில் தான்தோன்றிய ஈசனாராகிய சிவபெருமானாரே, நம்மைச் சூழ்ந்து கொள்ளும் துயரங்களை நீக்குபவர், அவரே படைப்பு அழிப்பு தொழிலையும் செய்யபவர், ஆழம் மிகுந்த கடலில் தோன்றிய நஞ்சை உண்டவரும், கூத்தாடுதலை விரும்பும் அழகருமான எம்பெருமானரே, கீழான மன முைடய அடியேனையும் அடிமை கொண்டு ஞானம் அளித்தவர் அவரே ஆவார், நாம் மனதார அவன் புகழை தோற்றிப்பாடினால் ஏழுவகையான பிறப்புக்களையும அறுந்தெறிபவர் அவரே ஆவார், வாய்விட்டு பாடினால் பிறவியாகிய நோய்விட்டு போகும், இவ்வுலகத் துன்பங்களும் ஏழுவகையான பிறப்புகளும் இல்லாது ஒழியும் நன்றி ; தமிழ் வேதம்

திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 30 பசு


திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 30 பசு ஏழாம் தந்திரம் - 30. பசு கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்; மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. கருவுறும் பருவம் வாய்க்காத இளம் பசுக்கள் இனச் சார்பால் கதற மட்டும் தெரிந்து கொண்டு, கன்றை ஈன்ற பசுக்கள் தம் கன்றினை அழைக்கக் கதறுவதுபோலத் தாமும் கதறித் திரியும். கன்றை ஈனாது கருவுற்று மட்டும் உள்ள பசுக்கள் தமக்குரிய புல்லை விடுத்து மனிதர்க்கு உரிய பயிரில் சென்று மேயாதபடி அதன் தலைவன் புல்வெளியில் ஓரிடத்தில் முளையடித்து நீண்ட கயிற்றால் கட்டி வைக்க, அக்கயிற்றின் அளவிற்கு அவை கட்டில்லாதது போலத் தம் விருப்பப்படி சென்று புல்லை மேயும். எனினும் கன்றை ஈன்று தாய்மையை எய்திய பசுக்களே ஒன்று ஒரு குடம்போல நிரம்பப் பால் பொழியும் பசுக்களாகும். அவை தவிர மேற்சொன்ன மற்ற இருவகைப் பசுக்களும் பயன்படாத பசுக்களாகவே இருக்கும். இது போல ``கற்ற பசுக்கள்`` என்பதனால், நூலை மட்டும் கற்றுப் பரிபாகம் இன்மையால் அந்நூலை மட்டும் இளஞ் சிறார் காதற் பாட்டுக்களைப் பாடி அவற்றிற்கேற்ப நடித்தல் போலப் படித்துப் பொருள் விரிக்கின்றவர் . ``கதறித் திரி யினும்`` எனப்பின்னர் வருதலால், ``கற்ற`` என்றது, கதறக் கற்றதனையே குறித்தது. பசுக்கள் வாயொலி செய்தலை, `கதறல்` என்றல் மரபு. ஞானிகளின் அருள்மொழியைக் கேட்டுச் சிந்திக்கும் நிலையில் உள்ளவர் கன்றையீன்ற பசுக்களை போன்றோர். அவரைப் பொய்ந்நெறியில் சென்று இரண்டும் கெட்டவர் ஆகாதபடி ஆசிரியர் தம் ஆணைவழி நிற்பித்தலே, `குறி கட்டி மேய்தல்` என்பதனஆல் குறிக்கப்பட்டது. எனவே ``கொற்றம்`` என்றது ஆசிரியரால் ஆட்கொள்ளப் பட்டமையைக் குறித்ததாம். ``உற்ற`` என்பதற்கு, `கன்றை` என்பது வருவித்து, `கன்றை உற்ற பசுக்கள் என்க. `தாய்மை எய்துதல்` என்பதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்த பின்பு தெளிதலையும், நிட்டை கூடுதலையும் உடையராதலைக் குறித்தது. ``பால்`` என்றதனால், பரஞானம், அஃதாவது அனுபவஞானம் குறிக்கப்பட்டது. ``ஒருகுடம் பால்`` என்றதனால் `நிறைந்த ஞானம்` என்பது குறிக்கப்பட்டது. போதுதல் - வெளிவருதல்; பொழிதல் எனவே தெளிவும், நிட்டையும் உடையவரது ஞான நிலை அயலார்க்கும் இனிது விளங்குதல் பெறப்பட்டது. வறள் - வறட்சி; பால் சிறிதும் சுரவாமை. மலட்டுப் பசுக்களும் கதறித் திரிவனவற்றுள் அடங்கின. இதனால், `சீவர்கட்குப் பசுத்துவம் மலபரிபாகம் காரணமாக இருவினை யொப்புச் சத்தி நிபாதமும் வாய்க்கப்பெற்று, ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்தலேயன்றித் தெளிவும், நிட்டையும் எய்துதலானே நீங்கும்` என்பது கூறப்பட்டது. கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே. காப்பாருமின்றி, மேய்ப்பாருமின்றி, கறப்பாரு மின்றித் தம் விருப்பம்போல் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுப் பசுப்போன்ற மக்களை எப்படித் திருத்த முடியும். (அவர் யாருக்கும் அடங்குபவரல்லர்.) அவர் தாமே தமது இழிநிலையை உணர்ந்து ஆசிரியரை அடைக்கலமாக அடைவாராயின் அவரை ஆசிரியர் கல்லில் நார் உரிப்பதுபோலவும், கல்லைப் பிசைந்து கனியாக்குதல் போலவும்* தமது திருவருள் திறத்தால் அவரது நிலையினின்றும் நீக்கிச் சீர்செய்து, அவர் சீர்ப்பட்டமையை நன்குணர்ந்து சிவமாக்கிய பின்பல்லது அதற்கு முன் காடும், மேடும், கல்லும், முள்ளுமாய்க் கிடக்கின்ற நிலம் போன்றுள்ள அவரது மனம் உணர வேண்டியவற்றை உணராது. திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

ஞாயிறு, 27 ஜூலை, 2014

திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] திரு கைலாய யாத்திரை


திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] திரு கைலாய யாத்திரை திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] திரு கைலாய யாத்திரை திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] தொண்டில் பழுத்த சைவர்...வெறுமனே வாயால் மட்டுமே பாடிக் கொண்டு இருக்காமல், கைகளாலும் உழவாரத் தொண்டு செய்தவர்..... தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு! அவருக்கு முன்பே காரைக்கால் அம்மையார் பட்ட கஷ்டங்கள், பாவம் தெரியலையா என்ன? சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்! கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை! அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்! "பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும் கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும், மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும், உடம்பு அடங்கவும், ஊன் கெடவும், சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்..." என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!.. பாவம்! நால்வரில், நாவுக்கரசர் மட்டுமே உடலால் அதிகம் வருந்த வேண்டி இருந்தது! மற்ற மூவருக்கும் இப்படி இல்லை! வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் காளவாய், விஷம் இட்டது, கடலில் போட்டது....உழவாரப் பணி என்று இவருக்கு மட்டும் உடலால் பாடுபடுதல் .... கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்! அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்! அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவனாய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டான்! "மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்! - நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை! "அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!" "அப்பர் என்ற அடியேனின் பெயர், என் அப்பனை அல்லால், உமக்கு எப்படித் தெரியும்?" வாக்கு ஈசரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் சிவபெருமான்! சிக்கெனப் பிடித்தேன் அல்லவா? சிக்கினான் சிவன்! "அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா? இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்"..அப்பர் மானசரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன! உடல் சிவ மங்களமாய் மின்னியது! வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்! காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின! "மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்! யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்! கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!!" மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க, நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க, நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க, மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்...அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது! புகுவார் பின் புகுந்தால், அடியார் பின் புகுந்தால், அன்பினால் புகுந்தால், அந்த அன்பே சிவமாகும்! அன்பர் கூடுமிடம் கயிலையாகும்!....அப்பர் திருவையாறில் கண்ட திருக்கைலாயம் தரிசனம் நாம் காண ஆடி அமாவாசை அன்று திருவையாறு வாருங்கள் .... தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாற போற்றி! போற்றி!!

சனி, 26 ஜூலை, 2014

கழுகுமலை ஆடி அமாவாசை கிரிவலம்


கழுகுமலை ஆடி அமாவாசை கிரிவலம் (26,7,2014) ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு வாசகவர் வட்டம் மூலம் இந்த கழுகுமலை கிரிவலம் ஒரு ஆன்மீகப் பயிற்சிக்காக ஆன்மீகஅரசு வலதைள நம் குருநாதர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு 26,7,2014 அன்று சுமார் 200 ஆன்மீக அடியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த சச்சங்கம நிகழ்வு மிக சிறப்பாகவே நடைபெற்றது, பொதுவாக அமாவாசை என்றால் எல்லாம் வல்ல பரம்பொருளான , அருட்பெரும் ஜோதியின் வடிவான லிங்கேஸ்வரயை நினைவும், நம் மூதாதையர்களான பித்திருக்களை நினைந்து வணங்கி, அவர்களுக்கு விரதம் இருந்து ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது இந்து சமய மறபாக தொன்று தொட்டு இருந்துவருகிறது, அதிலும் வருடாந்திர பித்திரு திதி இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதத்தில்வரும் மகளாய அமாவாசை, மற்றும் தைமாதம் வரும் தை அமாவாசை ஆகிய தினங்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும், இந்த நாட்களில் எல்லா சிவாலங்களிலும் சிற்ப்பு பெற்றதாயினும், ஆடி அமாவாசை என்றால் நமக்கு நினைக்கு வருவது சதுரகிரியும், மகளாய அமாவாசை என்றால், அம்பை பாபநாசமும், தை அமாவாசை என்றால் ராமேஸ்வரமும் முக்கியத்துவம் பெற்ற தலங்களாகவும், இந்த நாட்களில் இந்த தலங்களில் பக்தர்கள் கூட்டம் கணக்கில் அடங்காது என்பது சிவபக்தர்கள் யாவரும்அறிவர். இந்த முக்கியத்துவம் பெற்ற மேற்கண்ட அமாவாசை நாட்களில் நம்முன்னோர்களாகிய - பித்திருக்களுக்கு ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது யாவரும் அறிந்ததே,இந்துக்களின் ஒரு மறக்க முடியாத - மறக்கக் கூடாத செயலாக இது கருதப்பட்டு வருகிறது, இதனை ஒவ்வொரும் தனித்தனியாக புரோகிதர்கள் கொண்டு செய்ய முடியாதவர்களுக்கு, புண்ணிய தீர்த்த முள்ள சிவாலங்கள், புண்ணிய நதிக்கரைகள், மற்றும் புண்ணிய ஸ்தல கடற்கரைகள் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக செய்வதை நாம் காணலாம், இந்நிகழ்வின் தொடர்பாக நம் ஆன்மீக கடல், மற்றும், ஆன்மீக அரசு வலைத்தள நம் குருநாதர் அவர்களின் நல்லெண்ண முயற்சியால் , ஆன்மீககடல், ஆன்மீகஅரசு வலைத்தள வாசகர்வட்டார ஆன்மீ தொண்டர்களுக்காக இந்த சித்தர்கள் வாழும் கழுகமலையில் ஒரு ஆன்மீக சச்சங்க நிகழ்ச்சியும், சித்தர் ஈஸ்வரபட்டர் அவர்கள் நினைவாக அன்னதான நிகழ்வும் நடத்துவதென நோக்கில் கழுகுமலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது, இதில் நம் குருநாதர், பித்திருக்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தையும், அதனால் விளையும், நன்மையும, செய்யமுடியாத பட்சத்தில் ஏற்படும் தீங்குகளையும் தெளிபட விளக்கினார், இல்லங்களில் மங்கையர் திருவிளக்கு தீபம் ஏற்றுவது பற்றிய ஆன்மீக விளக்கங்களை அருளினார், அன்னார் விளக்கிய தெளிவுரைகள் விளக்கின் அமைப்பு: 1, 8 அடுக்கு கொண்ட சுமார் 3 அடி உயரம் உள்ள விளக்கு - தாம் உட்கார்ந்து விளக்கு ஏற்றி வழிபடும் போது அவர்களி கண்இமைக்கு சமமாக தீபம் ஒளி அமைய வேண்டும் 2, ஐந்து முகம் கொண்டது மிகச்சிறப்பு - 4 முகம் கொண்ட விளக்குதான் இருந்தாலும் பயன்படுத்தலாம், 3, தீபம் கிழக்கு திசையை நோக்கி எறிய விட வேண்டும் 4, தீபம் ஏற்றும் நேரம் : சூரிய உதயத்திற்கு முன் காலை 6 மணிக்குள் அல்லது சூரியன் அஸ்தமத்திற்கு பின் அதாவது மாலை 6 மணிக்கு பின் 5, குத்து விளக்கின் அடி குமிழ் பாகத்தில் காந்தம் பிடிக்காத சில்லவர் குங்கும் இட்ட குங்கும பாத்திரம் 6, குத்து விளக்கின் அடியில் மாம் பலகை தான் வைக்க வேண்டும் தாம்பூலத்தட்டு அல்லது வேறு தட்டு வைக்கக் கூடாது கூடிய வரை மாம்பலகையில் தான் விள்க்கு வைக்க வேண்டும், 7, குத்து விளக்கை கழட்டி சுத்தம் செய்தல் வெள்ளிக்கிழமை கூடாது - ஒவ்வொரு வியாழக்கிழமையன்றே செய்து விடுவது சிறந்தது 8, தீப எண்ணெய் நல்ல எண்ணெய் பயன்படுத்தலாம், இருப்பினும் தீப வழிபாடு சிறக்க உங்கள் இல்லம் தெய்வீக மனம் பெற தங்களின் வேண்டுதல் நிறைவேற குருநாதரின் ஆராட்சியால் தயார்செய்த மூலிகை எண்ணெய் மிகமிக ஏற்படுடையது, தங்கள் எண்ண வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும் இவ்வாறு குத்து விளக்கு தங்கள் தங்கள் இல்லங்களில் மங்கையர் தீபவழிபாடு செய்து சுத்தம செய்யும் நாளில் நாம் குத்துவிளக்கிற்கு அடியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து திலகமிட்டுக் கொண்டால் அஸ்ட லட்சுமியின் கடாச்சகம் இந்த இல்லத்திற்கே கிடைக்கும் என்றார் பின் சச்சங்க நிகழ்வு முடிந்தவுடன் " ஓம் சிவசிவ ஓம், ஓம் சிவசக்தி ஓம் " என்ற சிவ கோசத்துடன் கழுகுமலை கிரிவலம் புறப்பட்டது, கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு மிளகாய் வத்தல் சித்தர் ஜீவசமாதியில் குருபூசையும், அச் சித்தரிடம் அவரவர்கள் வேண்டுதல் வேண்டி கூட்டு பிராத்தனையும் நடந்தது. பின் கிரிவலப்பாதையில் ஈசான முலையான ஓர் இடத்தில் குருநாதர் ஏற்பாட்டின் படி பித்திருக்களுக்கான திதி கொடுப்பதற்கு ஓம் சிவசிவ ஓம் என்று கூறி எள்ளும் தண்ணீர் இறைத்து திதி எல்லோராலும் செய்யப்பட்டது,, பின் கிரிவலம் முடித்து, அருள்மிகு கழுகாசல மூர்த்தியின் வழிபாடும், பின் ஈஸ்வர பட்டர் நினைவாக அன்னதானமும் சிறப்புடன் நடந்து முடிவுற்றது, இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான ஆன்மீக அடியார்கள், தொண்டர்கள் குருநாதரின் வலைதள வாசக அன்பர்கள் (followers) கலந்து கொண்டனர் திருச்சிற்றம்பலம் - ஓம் சிவசிவ ஓம் மேலும் சில ஆன்மீக தகவல்கள் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

Dance


வெள்ளி, 25 ஜூலை, 2014

தமிழ் வேதங்களில் வாழ்வியல்- முதற் பணி ( காலைக்கடன்)


தமிழ் வேதங்களில் வாழ்வியல்- முதற் பணி ( காலைக்கடன்) உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிக்ள உள்ளன என்கிறார்கள், அவற்றுள் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளவன் மனிதன். இறைவர் நமக்கு இந்த அருமையான உடல், நல்ல மனம், புத்தி, முதலிய கரணங்களை அளித்துள்ளார், அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, என அவ்வையார் அன்றே பாடியுள்ளார், எனவே பிறத்ததற்கரிய பிறப்பு மானிட பிறப்பு. பார்ப்பதற்குக் கண்களையும், கேட்பதற்கு செவிகளையும், உழைப்பதற்கு கை,கால் உடம்பையும், பேசுவதற்கு வாய், நல்ல அறிவு ஆகியவற்றை அளித்துள்ளார், இத்துடன் அமையாது, குடிப்பதற்கு தண்ணீர், சுவாசிக்க காற்று, உண்பதற்கு கனிகள், காய்கள், ஒளிக்கு சூரியன், சந்திரன், ஆகியவற்றையும் நமக்காக படைத்துள்ளார், ஒரு பொருளைப் பார்க்கும் போது அப்பொருளை செய்தவர் ஒருவர் இருக்க வேண்டும், இதைப்போல இந்த உலகைப் பார்க்கும் போது அந்த உலகம் நியதியாக இயங்குவதை காணும் பொழுதும் இதற்கு மூலகாரணமாக ஒருவர் இருக்க வேண்டும், என்ற நினைக்க வேண்டும். சூரியன் காலை 6 மணிக்கு உதிக்கிறான், மாலை 6 மணிக்கு மறைகிறான்,தாவரங்கள் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன, மனிதனுக்காக உணவைத்தருகின்றன, நாம் விடும் அசுத்தக்காற்றை அது சுவாசித்து நமக்கு வேண்டிய பிராண காற்றை அவை வெளியிடுகின்றன, குறிப்பிட்ட காலங்களில் காய்கனிகள் உண்டாகின்றன, இந்த நிகழ்வுகளை எந்த அரசாங்கமோ எந்த வரன்முறையே பின்பற்றப்படுவதில்லை, உலகம் ஒரு நியதியில் இயங்குவதிலிருந்தே ஒரு மாபெரும் சக்தி உள்ளது என்பதை அறிவுடையர் உணர்வர். அந்த பேராற்றல் உடையவரைத்தான் கடவுள் என்கிறோம், இவ்வளவு நலன்கள் நமக்கு அளித்துள்ள இறைவன் வணங்கவேண்டிய கடன் - கடமை - நமக்குள்ளது, இதைத்தான் காலைக்கடன் - முதற்கடமை என்கிறார்கள் சான்றோர், வடமொழியில் சந்தியா வந்தனம் என்றார்கள். காலையில் எழும் பொழுதே மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபாடு செய்வது தான் நம் கடனை தீர்க்கும் வழியாகும், தற்காலத்தில் காலக்கடன் என்பதற்கு பொருள் தவறாக கொண்டுள்ளார்கள். மேலை விதியே விளையின் பயனே விரவார் பரமூன்று எரிசெய்தாய் காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த ஆலைக்கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. தமிழ் வேதம் -7 காலையில் ஒவ்வொருவரும் நாளும் தவறாது செய்ய வேண்டியது சிவவழிபாடு ஆகும், இந்த காலைக்கடனை நம் முன்னோர்கள் தவறாது செய்து வந்துள்ளார்கள். வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனை சூழ்ந்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்தவா வினையேன் நெடங்காலமே. - நாவுக்கரசர் முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின் அந்தி வாயொளி யான்தன் அண்ணாமலை சிந்தியா எழுவார் வினை தீர்ந்திடும் கந்த மாமலர் சூடும் கருத்தனே. திருநாவுக்கரசர் தமிழ் வேதம் 5 காலையில் எழும் பொழுதே கடவுளை வணங்குவது தான் நம்முடைய கடனைத் தீர்க்கும் வழியாகும்,இந்தக் கடனை தீர்ப்பவர்க்கு வினைகள் யாவும் தீர்ந்து ஒழியும் என்கிறார் கடவுளைக்கண்ட நாவுக்கரசர் உலகியல் வாழ்விற்கு தெய்வ வழிபாடு வேண்டாம் என்பது, முள் நிறைந்த காட்டிலே நடந்து போகும் ஒருவன் சூரியனின் வெளிச்சம் வேண்டாம் என்பது போலாகும், தண்ணீர் படகை செலுத்துபவனுக்கு துடுப்பு அவசியமாகும், துடுப்பு இல்லாமல் படகை ஓட்ட முடியாது, துடுப்பு இல்லாமல் படகில் பயணம் செய்வது என்பது அறியாமையே ஆகும், இதைப்போல இறைவன் வழிபாடு இல்லாதவன் வாழ்க்கைத் துடுப்பு இல்லாத படகிற்கு ஒப்பாகும், நன்று நாள்தொறும் நம்வினை போயறும் என்றம் இன்பம் தழைக்க இருக்கலாம் சென்றுநீர் திருவேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே. அப்பர் நாள்தோறும் இறைவரை வழிபட்டால் வாழ்வில் இன்பம் தழைக்க இனிதே வாழலாம், என்பது அப்பர்பெருமான் அனுபவ அறிவுரையாகும், எனவே காலையில் எழுந்தவுடன் சிவனை வழிபட்டு சிவானந்தம் பெறுவோம், திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாயம் நன்றி தமிழ் வேதம் மேலும் ஆன்மீக தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வியாழன், 24 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 30 யாதுமாகி நின்றவன்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 30 யாதுமாகி நின்றவன் சிவன்எங்கும் இருக்கிறான், அவனை நாம் காணவில்லை , எதிலும் இருக்கிறான் நாம் அறிவதில்லை. அவன் எப்போதும் இருக்கிறான் ஆனாலும் அவனை உணரும் முயற்சி நம்மிடம் இல்லை.திருமூலர் கூறுவார்: மனமென்றும் தேரேறிச் சென்று அந்த மாயனைப் பாருங்கள், அவன் புறக்கண்ணுக்கு புல்படுவதில்லை. உங்கள் சரீரத்திற்கண் அவன் விளங்குகின்றான். அடியார்கள் உள்ளந்தோறம் விளங்கி நிற்கும் அந்த பேரறிவாளனை நான் போற்றி வழிபடுகிறேன், என்று அவனது திருநாமத்தை சிந்தித்திருக்கும் மனம் ஆசைகளை விட்டு விலகிவிடும், நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள் ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர் காமமோ ராயிரம் கண்டொழிந் தாரே. என்கிறது திருமந்திரம் ஆயிரம் திருநாமங்களால் சிவனை போற்றி வழிபடுங்கள், அதனால் ஒராயிரம் வகை சுகங்கள் அடையலாம், நீங்கள் சிரசின்மீது மனதை நிறுத்தி, ஞானசாதனையில் ஈடுபட்டால் ஆயிரமாயிரம் ஆசைகளும் நீங்கிப்போகும், இது பாடலின் கருத்து. நீரின் தன்மையை அது தெளிவாக இருக்கம் நிலையில் தான் அறியமுடியும், கலங்கிய நீரில் சேறு கலந்திருக்கும், உங்கள் மனம் சரீரமயமான எண்ணத்தில் கலங்கியிருக்கும் போது உங்களால் எப்படி இறைவனின் இயல்வை அறிய முடியும்? குளத்து நீரை முகந்து குடத்தில் வைத்து தெளியச் செய்வதால் குடித்தற்காகும், சிந்தை தெளிவுற்றால் சீவனும் சிவனாகலாம், என்கிறது மந்திரம் பாடல்: மண்ணில் கலங்கிய நீர்போல் மனிதர்கள்............. உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள் பிரத்யடச உண்மைக்கு நிருபணம் தேவைப்படாது. உண்மைத் தவமுடையாரின் உள்ளத்தில் சிவன் விளங்குவான், அவன் தூயவன் தூயநெறியை நமக்கு காட்டுவிப்பான், எனவேதான் அந்த தேவதேவனை நான் விரும்பினேன் அவனிடம் பொருந்தி உலகின் ஆசாபாசங்களைக் கடந்து சென்றேன் என்கிறார் சித்தர். தன்னை வழிபடுகிறவரின் தீயகுணத்தையும், தீய செயல்களையும் அவன் ஒழித்து கட்டுகிறான். அவனுடைய திருவடிகளே வீரர்கள் போய் சேரும் சொர்க்கம். சிவன் வாழ்வளிக்கும் ஐந்தெழுத்தில் விளங்கியிருப்பவன், அவனே உலகத்து உயிராகவும், நிலமாகவும், நீள்விசும்பிடை காற்றாகவும், கதிராகவும், மதியாகவும், ஆதியாகவும் அக்னியாகவும் உள்ளான். தன்னை புகலிடமாய் கொண்டவரை அவன் தாங்கி நிற்கிறான். உலகின் தனிப்பெருந் தலைவனாகிய பெருமான் ஆன்மாக்களின் பக்குவகத்திற்கேற்ப ஆட்கொள்கிறான். உலகம் ஏழுமம் அவனால் படைக்கப்பட்டது, அவற்றை கடந்து நிற்கும் பெருமையும் அவனுக்குண்டு தன் அடியார்கள் செல்லும் நெறியில் தானும் உடன் செல்வான். தூலத்திலும், சூக்குமத்திலும், சிவன் நிறைந்து விளங்குகின்றான், அவன் ஆதாரமாகிய உடலாகவும், அவன் ஆதாரம் கடந்த நாதமாகவும், நாத்தின் முடிவாகவும் (நாதாந்தம்) இருக்கிறான். அவனே உயிராகவும், உயிருக்கு வேறான அகண்ட வடிவமாகவும், இருக்கிறான், அவன்தான் தூலத்தையும் சூக்குமத்தையும் பொருத்தி இணைக்கும் பிராணசக்தி. ஆக்கப்பட்ட யாவும் அவனிடமிருந்தே தோன்றின, அவன் எல்லாமாகி நிற்பினும் உலகத்தாரால் காணப்ட தோன்றுபவன் அல்லன். அவன் தத்துவங்களின் தலைவன் அத்தனை தத்துவங்களும் தத்துவ விருத்தியேயாகும். அவன் புறக்கண்ணுக்கு புலப்படாதவன், என்பதால் இல்லை என்றாகி விடாது. நெகிழ்ந்துருகும் அன்பரிடம் அவன் விளங்கித் தோன்றுவான். அவன் மிகப் பழைமையானவன், பரிசுத்தன், நடுக்கமோ, குற்றமோ இல்லாதவன். உள்ளப்பண்போடு அவன்பால் அன்பு கொண்டவர்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிகிறான். அவனே ஆனந்தமாகவும், ஆனந்தத்தை அளிப்பவனாகவும், ஆனந்தில் திளைப்பவனாகவும் இருக்கிறான், அவன் எல்லப் புவனங்களிலும் நிறைந்த புண்ணியமூர்த்தி, பாமரிடத்தே அறியாமை என்கிற இருளிலும், ஞானியரிடத்தே ஞானக் கதிரொளியாகவும் அவன் உறைகின்றான். " எம்பெருமான் ஏழு உலகங்களையும் ( (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், கனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் ) தாங்கி நிற்கும் வல்லமை கொண்டவன், அணுவை காட்டிலும் நுட்பமான தன்மையும், அவனுக்குண்டு, எட்டு திக்கிலும் உள்ள மலைகளுக்கெல்லாம் ஒப்பானது அவனுடைய வலிமை .அகன்ற கடலினும் பெரிது அவன் கொண்ட ஆற்றல். அவரவரின் தவத்திற்கேகற்ப அவன் அறியப்படுகிறான். துன்பக்கடலில் அழுந்தித் துயர்படுவோர்கள் உள்ளொளியாம் சிவத்தை கண்டு கரைசேரலாம், சிவஞானயரின் உணர்வும், உயிரும் சிவன், பொருட்களால் உண்டாகிற அறிவும், அறியப்படுகிற பொருளும் அவன் , எங்கும் பரவியிருப்பவன் இதயத்தில் இருப்பதும் உண்மை, ஆனால் எண்ணத்தில் அவனை அகப்படுத்தமுடியாது. விண்ண வனாய் உலகேழுக்கும் மேல்உளன் மண்ண வனாய் வலம சூழ்கடல் ஏழுக்கும் தணண வனாய் அதுதன்மையின் நிற்பதோர் கணணவன் ஆகிக் கலந்து நின்றானே. என்கிறது திருமந்திரம் அவனே வானம, அவனே பூமி, மேலும் கீழும் வியாபித்திருப்பவன் அவன், ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளவன், கடல்களுக்குக் குளிர்ச்சியை தருபவன், வானின் இயல்பும் நிலத்ததின் இயல்பும் அவனுடையது, அவனே உயிர்க் கூட்டம், அவனே உயிரினங்களைச் செலுத்துவமு, அவனைத் தலைவன் என்று சிவஞானியர் போற்றுவதில் என்ன வியப்பு சீவரின் உடம்பில் உயிர் அண்ட ஆகாயத்தில் பிராணசக்தி விரிந்த கதிர்களை உடைதிங்கள் விழிகளில் விளங்கும் சிவம்...... என்று யாதும் அவனே. அண்ட பாதாளங்களள் அவனுடையவை எட்டுதிக்கிலும் இருப்பது அவன்தான் அவனே அறிவின் வடிவம் தொலைவில் இருப்பதும், அண்மையில் இருப்பதும் அவனே அவன் மாறுபாடற்றவன் உயிர்களுக்கு இன்பம் செய்பவன் தத்துவங்களாகவும், தத்துவங்கள் கடந்தும் காணப்படுபவன் எங்கும் அவனே அவனே சிவம், அன்பே சிவமாகவும் சிவமே அன்பாகவும் அமைந்தவன், அவனே ஞானத்தலைவனாகவும், ஓமத்தலைவனாகவும் ஒளித்தலைவனாகவும் அமைந்தவன் திருச்சிற்றம்பலம் .... ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

புதன், 23 ஜூலை, 2014

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?


பைரவரை வழிபாடு செய்வது எப்படி? பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு. இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது. ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது. சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும். தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 29 ஒளியாய், ஒளிப்பயனாய்....


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 29 ஒளியாய், ஒளிப்பயனாய்........ ஒளிமயமானவன் இறைவன் என்கிறார்கள். ஒளி என்கிற சொல்லுகுகு அறிவு, சுவாலை, நெருப்பு, ஜோதி, சூரியன்,சந்திரன் , தெளிவி, புகழ், கண்மணி என்ற அநேக பொருளுண்டு, அத்மையும் இறைவனுக்குப் பொருந்தும், அவன் - அறிவாளிஇ அன்பொளி, அழகொளி, சூரியன், சந்திரன், என்கிற முச்சுடர்க்கும் அவனே மூல ஒளி, ஆன்ம ஒளியை அறிகின்ற மனம் அவ்வொளியில் தோய்ந்திட சிவன் விளங்குவான் என்கிறார் திருமூலர், உள்ளிருக்கும் பேரோளியை உணர்ந்தவர் உலகெங்கும் சென்றுவரும் ஆற்றலைப் பெறுவார், ( வள்ளாலார் இந்த அற்புத ஆற்றலைப் பெற்றவர்) ஆன்ம சோதியில் பொருந்திருத்தலால் அவருக்க உள்ளேயும் வெளியேயும் இருளில்லை. ஈசன் ஒரு மின்னல் கீற்றுப் போல் ஆன்மாவில் ஒளிர்கிறான், அவன் பிராணரூபமாய் விளங்கி உடலுக்கம் உள்ளத்துக்கும் ஆற்றலைத் தருவான், உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓரடி நீங்காஒருவனை உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறி யாதே! இறைவன நமது மனமண்டலத்தில் பேரோளி வடிவில் இருப்பவன், ஒருபோதும் நம் மனதை விட்டு நீங்காதிருக்கிறான். இத்தகையவனை அகந்தை, ஊழ்விணை, மாயை, காரணமாய் நாம் காணத் தவறிவிடுகிறோம், தன்னையறிவது ஞானம் அறியாதிருப்பது அஞ்ஞானம் அறியாமை காரணமாய் ஆன்மா இருளில் மூழ்கிக் கிடக்கும், ஆனால் இறை வழிபாட்டின் மூலம் அந்த இருள் நீங்கி அது ஒளிபெறும், சூரிய, சந்திரனை கண்காளாய் கொண்டவன் அக்கினியை அவனது மூன்றாவது கண்ணாகக் கொண்டவன் ( நெற்றிக்கண்) விண்வெளியும், மனிதமனமும் அவனால் ஒளிபெறுகின்றன, பேரோளியாய் விளங்குகிறது சிவம். சிவனை வழிபடுவதன் மூலம் ஒளியை பெருக்கி சிவத்திடம் ஒன்றுங்கள் என்கிறார் திருமூலர் திருசிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

செவ்வாய், 22 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 28 ஞானி யார்?


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 28 ஞானி யார்? யார் தெய்வத்தில் வாழ்கிறாரோ, பேரின்பத்தை அனுபவிக்கிறாரோ, அவரே ஞானி. ஆனவம் , தன்னலம், தற்பெருமை, விருப்பு , வெறுப்பு, காமம், சினம், பேராசை, இவற்றில் இருந்து விலக முடிந்தவர் ஞானி. கருணை, பொறுமை, அறிவுணர்வு, பிரபஞ்ச அன்பு, மனதின் சமநிலை, கொண்டவர் ஞானி. ஞானியரின் ஆற்றலும், அருளாளரின் பெருந்தன்மையும், அத்தகையது. காலம் என்கிற மணற்பரப்பில் தங்கள் காலடிகளை அவர்கள் பதித்து சென்றார்கள். ஆன்மா, சார்ந்த தேடல் உள்ளவர்கள் உண்மையும், நம்பிக்கையும், கொண்டவராய் அந்த சுவடுகளைப் பின்பற்றி செல்கிறார்கள். ஞானிகள் இனம் மொழி எல்லை கடந்தவர்கள், அவர்கள் தொடங்கி வைத்த ஆன்மீக நீரோட்டம் காலவெளியைக் கடந்து செல்கிறது. ஆனால் அமைதியையும் ஞானத்தையும் பெறுதற்கான வேட்கை மக்களிடம் இருக்கிறதா? தங்கள் வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும், எதிர்காலத்தையும், மேம்படுத்தவே ஞானிகள் ஒளிவிளக்கேந்தி வருகிறார்கள், என்பதை மக்கள் உணரவேண்டும். அவர்களின் அன்பை பெற முடிந்தவர்கள் பாக்கியவான்கள், ஞானம் என்பது உருவாக்கப்பட்டதல்ல. சட்டென்று உதயமாவது அல்ல, அது தேடிப் பெறுவதல்ல தானாக வருவது. ஆன்மா சிவத்தன்மை பெறும் தன்னை அறிகிறபோது . இதனை திருமூலர் கீழ்கண்ட பாடல் வாயிலாக கூறுகிறார், பாடல்: நான் என்றும் தான் என்றும் நாடினேன்............. " நான்வேறு, சிவன் வேறு, என்று எண்ணியிருந்தேன், என்னை தன்னில் அடக்கியவன் (இறைவன்) நான் என்றும் தான் என்றும் இரண்டு பொருட்கள் இல்லை, என்றுைரைத்தான் அவன். அப்போது என்னுடைய நான் அற்றுப் போனதை உணர்ந்தேன், என்கிறார், இறைவனின் பேராற்றலை, பெருங்கருணையை உணர்ந்தவராயிருங்கள், அவனுடைய நிறம், என்ன, வடிவம் என்ன, எது என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிராதீர்கள், உனக்கு கெடுதல் நேரிட்டாலும், அவருடைய நன்மையில் அக்கறை காட்டு இதுவே சிவன் பாற்கடல் அமுதை தேவர்கட்கு வழங்கி நஞ்சினை தானே விழுங்கி உலகிற்கு அறிவித்த நன்னெறி, நெறியில் நிற்பார்க்கு ஞானத்தை குறைவின்றி அளிப்பான் இறைவன், பாடல்: மிக்கர் அழுதுண்ண, நஞ்சுண்டமேலவன்.......... தான் உடலல்ல, அறிபவன் என்பதை ஆன்மா உணர்கின்ற போது அது சிவமான தன்மை பெற்றுவிடுகிறது. அருள்வழி நின்று தன்னை காண்பார்க்கு சிவன் தானே வெளிப்படுகின்றான். அன்புமிக்கவர்க்கு நீண்ட ஆயுளை அளிப்பதோடு அவனே உற்ற துணையாகின்றான். பூவில் இருந்து அதன் நிறத்தை யும் வாசத்தையும் வேறாய் பிரிக்க முடியுமா? அவ்விதப் பிணைப்பு சிவனுக்கும் சீவனுக்கும் அமைகிறபோது சீவனுக்கு போரானந்தம் கிட்டுகிறத. மெஞ்ஞான விளைவாகும் ஆனந்தம் அதுவே பரமானந்தம். சிவன் உங்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால் அவனை மன நெகிழ்ச்சியோடு வணங்குங்கள். பாடல்களால் துதியுங்கள், என்கிறார் சித்தர. தத்துவ்ஙகள் விட்டு, மல வாதனைகள் நீங்கி அவத்தைகள் கடந்து உண்மையான ஞான ஆனந்தத்தில் திளைக்க வேண்டும். ஞானியின் செயல்: புலத்தின் தன்மை அறிந்து, மெய்ப்பொருளை உணர்ந்த ஞானிகள் கர்ம சட்டத்தை உடைத்தெறிவதில்லை, தங்களுடைய ஊழ்வினைகளை அவர்கள் அனுபவித்தே கழிப்பார்கள், சஞ்சித கர்மத்தை தீர்ப்பதோடு தற்போதைய பிறவியில் புதிய கர்மங்கள் ஏற்படாதவாறும் தடுத்து க் கொள்வர், பாடல்: தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்.................. மனம் , வாக்கு காயம் என்னும் முக்கரணங்களும் வினைகளும் பற்றிட மூலகாரணமாய் இருக்கும், ஆனால் அந்த முக்கரணங்களை உலகியலில் இருந்து விலக்கி, சிவனிடம் செலுத்ததினால் வினைகள் பற்றாது. ஞானிகள் கரணவகையில் செயல்படாதிருந்து வினைகளை வலக்குவர். பாடல்: மனவாக்கு காயத்தால் வல்வினை மூளும்............. காண்கிற எதுவும் பரமாத்மாவாகி விடுகிறபோது ஞானம் முழுமை பெறும், எவர் உள்ளபடி அறிகிறாரோ, அவர் அடைகிறார் ஞானம், http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

திங்கள், 21 ஜூலை, 2014

திருமூலர் திருமந்திரம் / உபதேசம் 27 வாய்மை என்னும் மெய்பொருள்


திருமூலர் திருமந்திரம் / உபதேசம் 27 வாய்மை என்னும் மெய்பொருள் எது உண்மை என்பதை அறிய எது பொய் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். பொய் பொருளை நீக்கித்தான் மெய்ப்பொருளை சேர முடியும்.திருமூலர் இதன் பொருட்டு கூறுகிறார்; உங்கள் மனதின் முக்குற்றங்களையும் அருள் உபதேசங்களால் நீக்கி கொள்ளு்ங்கள், தியானம் , இருண்டு கிடக்கும் உள்ளத்தை ஒளிவிட்டு பிரகாசிக்க செய்யும். மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப் பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே. எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன். மக்கள் எதை அறிய வேண்டுேமா அதை அறிவதில்லை, அதனால் அடைய வேண்டியதை அடையமுடியாமல் போகிறது, உலகியல் சார்ந்த போக்கு பேரறிவுப் பொருளான சிவத்தை அறிய முற்படுவதில்லை, தானே உலகின் தலைவன் எனத்தகும் தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும் ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே. சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும். சிவத்தை அறிந்து திருவடியுணர்வு கைவரப்பெற்றவர் உலகிற்கே தலைமையேற்கும் தகுதியுடையவராவர், சிவதத்துவமருளும் திறன் கொண்டவராயிருப்பர், அத்தைகயவரகளால் தான் உலகின் மழைவளம் தொடர்கிறது, இது பாடலின் உட்கருத்து சிவன் உள்ளத்தில் கள்ளமின்றி ேபரன்பு கொள்ளும் பேரிடம் உயிர்கலந்து நிற்பான், பொய்யான பொருள்களை விரும்புவோர் தம்மளவிலும் பொய்யர் என்பதால் அவரகளை சென்றடைய கூசுவான் அவன். உடற்பற்றையும், உலகப் பற்றயையும் விட்டவர்க்கு தஞ்சம் அளிக்கிறான் சிவன். அவன் வேத முதல்வன் மூலதாரத்தில் நிைல பெற்றவன் சகஸ்ரதளத்தில் அவன் சீவனுடன் வேறுபாடின்றி விளங்குவான், நீங்கள் ஈேடற விரும்பினால் அவனை உணர்வால் போற்றி வழிபடுங்கள் மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப் பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே. எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

திரு ஐந்தெழுத்தின் மகிமை


திரு ஐந்தெழுத்தின் மகிமை " வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பிள்ளை நாள்தொறம் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி உகப்பனஅஞ்செழுத்துமே. திரு ஞான சம்பந்தர் அரிய நடனத்தை ஆடும் பெருமானார் விரும்பும் திருஐந்தெழுத்தினை விரும்பி / செபிப்பவர் / ஓதுபவர்களின் பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். இப்பிறவியில் வரக்கூடிய துன்பங்கள் அகன்றுவிடும், வேண்டிய செல்வங்களை அளித்துக்காப்பார் இறைவர். கடவுளை கண்ட திருஞான சம்பந்த பெருமானார் கூறுவதை தான்நாம் இறைவர் கூறியதாகவே கொள்ளவேண்டும். அறிவு கொண்டு இவற்றைச் ெசான்னாரில்லை. இறைவர் உள் நின்றுணர்த்த இவற்றை கூறினார். மிக எளிய வழி "சிவாயநம " எனும் திருஐந்தெழுத்தினை ஓதுவது என்பது , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலாம். பிரயாணம் செய்யும் பொழுதெல்லாம் சொல்லலாம். பணம் காசு செலவு ெசய்ய வேண்டியதில்லை. இதைவிட எளிய வழிைய யார் சொல்லமுடியும்? திருஐந்தெழுத்தினை ஓதி, துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெறுவோமாக. திருச்சிற்றம்பலம் நன்றி; தமிழ் வேதம்

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 26 மோன நிலையில் சீவனும் சிவனும் ஒன்றுதல்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 26 மோன நிலையில் சீவனும் சிவனும் ஒன்றுதல் சாத்வீகக் குணத்திலொன்று மவுனம் , மவுனத்தில் ஒடுங்கும் நிலை மோன நிலை சமாதி . சிவநிலையில் பொருந்தியவர்கள் இருந்த இடத்திலேயே உலகத்தை அறியும் திறனை பெறுகிறார்கள். எப்போதும் சிவத்துடன் தொடர்புடையவர்க்கு ஏது கவலை? குரு உணர்த்துவதை சீடன் உணர்ந்தபோது தன் சுய அனுபவத்தில் அவன் சிவத்தை காண்கிறான். பாடல் : உணர்வுடையார்கட்கு உலகமுந்தோன்றும்................... மோனத் தவத்திருப்பவர் இங்கு மீளப் பிறப்பதில்லை, அடுத்தவர்க்கு அருள்புரியும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. சிவசக்தியோடு பொருந்திய நிலையில் உலகை மறந்தாலும் தன்னறிவுடன் இருப்பார்கள். பாடல் : மறப்பது வாய்நின்ற மாய நன்னாடன் ............................... கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்பார்கள், நீங்கள் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த முடியாது. காட்சி அனுபவத்தை அதிலும் இறைக் காட்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மெய்யுணர்வு மெய்யின்பம். முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே. உண்மையான சிவானந்தம் புறத்தேயுள்ள கண்களால் காணப்படுவதல்லை. அது அறிவுக்கண் கொண்டு அகவுணர்வில் காண்பது . தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை தன் மகள் கேட்கிறாள் என்பதற்காக எப்படி வாய்விட்டு சொல்லமுடியும்? முடியாது. அதுபோல் சிவானந்தம் என்பது அவரவரும் தமது சொந்த அனுபவத்தில் அறிய வேண்டியது. நீரில் கரைந்த உப்பும் நீராகிவிடுகிறது, சீவன் சிவனாவதும் அப்படித்தான், தன்னை போலவே மனிதன் ஆன்மாவையும் தகுதியுடையதாக்கி விடுகிறது சிவம்.பாலப்பருவத்துப் பெண் பதிென்ட்டு கடந்தும் மடந்தை யாகிறாள். பக்குவம் இன்னொரு கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சீவனும் அதுபோல் உலகானுபவம் பெற்ற நிலையில் அவனுடைய பக்குவம் காரணமாய் சிவன் சீவனிடம் விள்ங்கி நிற்கும். நான் அடைந்த ஆன்ம அனுபவத்தால் என்கு சமாதி பயிற்சியும், தேவரயற்றதாயிற்று. என்னை விட்டு மாயை நீங்கியதால் சிவம் என்கிற பேரொளியில் என்னால் மூழ்க முடிந்தது. சிவக்கதிரவனை எனது அறிவால் நான் கண்டு கொண்டேன் அவனுடன் ஒன்றானேன். மோன சமாதியின் விளைவாக என் உடல் பற்று அகன்றது. பொருள் பற்றும் உடலின் வேட்ையுயம் நீங்கின, உயிர் மீதிருந்த ஆசையும் கெட்டது, மோனசமாதி என்பது சிவசிந்தனையாக இருப்பதின்றி வேறேனன? என்கிறார் திருமூலர். ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவசக்தி ஒன்றி நின்றுள்ளே உணர்நதேன் உணர்வினை ஒன்றி நின்றேபல ஊழிகண்டேனே. மோனநிலை தவத்திலிருந்து சீவனும் சிவனும் இணைந்து கொள்ளும் நிலையை நான் அறிந்தேன், என்குள் விளங்கும் இறைவனுடன் பொருந்தி எண்ணற்ற யுகங்களை நான் கண்டேன் என்கிறார் சித்தர். ஓம் நமசிவாயம் -- திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீக தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

புதன், 16 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 25 முந்தையா வினை ( ஊழ்வினை)


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 25 முந்தையா வினை ( ஊழ்வினை) பழைய வினை என்பார், "விதி" என்றும் இது பூர்வகன்மம் என்றும் கூறப்படுகிற ஊழ்வினை,நல்லது நடக்கட்டும் எல்லாம் விதியின் பயன் என்றிருப்பர் ஞானிகள், இன்பமும் துன்பமும் வினைப்பயனால் உண்டாவன என்கிறார் திருமூலர், "தான் முன்னம் செய்த விதிவழி தானல்லாமல் வான் முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாடில்லை கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று நான் முன்னம் செய்ததே நன்னில மானதே" திருமந்திரம் ஆற்றில் மேடு பள்ளங்கள் தானே அமைகின்றன. தானேமறைகின்றன, அது வெள்ளத்தின் செயலன்றி வேற்றார் செய்வதில்லை. நாம் செய்த வினைப்பயன் நம்மையே வந்து சேரும். இதனை உணர்ந்திருக்கும் நாம் திருநீற்றொளியில் விளங்கும் பெருமானை பெரும் பேறாய் கொ ண்டு அவனை விட்டு நீங்காதிருப்போம், ஆறு தன்னை வந்தடையும் மணலை தானே சுமக்கும், அதுதான் இயற்கையின் நியதி, வானமே இடிந்து விழட்டும் கடலின் ஆங்காரத்தால் அழிவு நேரட்டும், காட்டு தீயில் சர்வ நாசம் விளையட்டும் பெருங்காற்றில் பொருட்கள் சேதமடையட்டும், ( இயற்கைக்கு எதிராய் போரிடமுடியாது, இயற்கையை சார்ந்த இருந்தாக வேண்டும். நான் எவ்வற்றாலும் பாதிக்கப்படாமல் எப்போதும் இறைவனையே நினைந்திருப்போம். குடியிருந்த வீடு பழுதானால் வேறு வீட்டுக்கு சென்று வசிக்கிறோம், நாட்டில் பஞ்சம் வந்தால் மக்கள் அண்டை நாட்டில் போய் வாழ்கிறார்கள். இந்த சரீரம் பழுதுற்றால் இன்னொரு சரீரத்தை இறைவன் வழங்கி விடுவான். சிவஞானம் பெற்றவர்கள் இவ்வுண்மையை அறிவார்கள், தங்கள் பணியை அவர்கள் தொடர்வார்கள். கர்மா என்றால் வினை அல்லது செயல் என்று பொருள். உடலாலும் மனத்தாலும் செய்யப்படும் எந்த ஒரு செயலும் ஒரு வினையே. கர்மா என்பது செயலை மட்டுமன்றி விளைவையும் குறிக்கும். இறைவன் பாரபட்சமாக செயல்படுவதில்லை. அவருடைய பார்வையில் எல்லோரும் ஒன்றுதான். ஆனால் ஒருவர் சுகப்படவும், இன்னொருவர் துயர்படவும் என்ன காரணம்?தம்முடைய தீய செயலே காரணமாகவே ஒருவர் துன்பப்படவும் நேரிடுகிறது. ஆசை எண்ணம், செயல் என்கிற மூன்று இழை களைக் கொண்டே வினைக்கயறு முறுக்கப்படுகிறது. வினைகள் மூன்று வகை, சஞ்சிதம், பிராப்தம், கிரியாமனம், என்று , இதுவரை சேர்த்த சஞ்சிதம், தற்போது அனுபவிக்கிற வினைப்பயன் பிராப்தம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் செயல் அல்லது வினைகள் கிரியாமனம் ( ஆகாமியம்) , எதை அனுபவிக்க வேண்டுமோ அதை அனுபவித்தே தீரவேண்டும். மாற்ற முடியாது. அவரவர் ஊழ்வினையும், அவரவரால் உருவாக்கி கொள்ளப்படுவதே . சரியான எண்ணங்களும் சரியான செயல்களும் வினைகளை குவிய விடாமல் தடுக்கும் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு www.vpoompalani05.wordpress.com www.poompalani.blogspot.com

திங்கள், 14 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 24 ஆசையை விடுங்கள்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 24 ஆசையை விடுங்கள் ஆசை காட்டாறு மாதிரி கரை மீறிப் போகும் திசை மாறிப் போகும். காட்டாற்றின் பேரிச்சலில் தேவகானம் அழங்கிவிடம் மனம் அமைதிக் குலையும், மக்கள் மீது வைக்கும் பாசத்தை பொருள்கள் மீது கொள்ளும் ஆசையை விடுங்கள். இறைவனின் இருப்பை உணர அதுவே எளிதான வழி என்கிறது திருமந்திரம். ஆசையை விட்டால் இறைவனை அடையலாம், பிறவாதிருக்கும் பேறுண்டு. அற்றவர் என்பார் அவஅற்றார் மற்றறையார் அற்றதாக அற்றது இலர் - குறள் பிறவி அற்றவர்என்று சொல்லப்படுபவர் ஆசையை ஒழித்தவரே , சிலவற்றின்மீது மட்டும் ஆசையை விட்ட வாராயின் , அவற்றால் சில துன்பங்கள் ஒழிந்தனவே யன்றி முற்றிலும் துன்பம் ஒழிந்தவர்ஆகார் என்கிறார் வள்ளுவர் எனவே ஆசையை அறவே அற்றவர்தான் பிறவியற்ற பேரின்பம் பெறுவர், சிவபெருமான் மாடத்திலோ, கூடத்திலோ இருப்பவனல்லன், ஆலயத்திலோ, வேடம் கொண்டவரிடமோ அவன் இருப்பதில்லை, ஆனால் ஆசையே அடம்பிடித்து உங்கள் மனதில் இடம் பிடிக்கும், இதனால் வாழ்வில் துன்பங்கள்தான் வந்து சேரும், அந்த ஆசை என்னும் நச்சு இருக்கும் இடத்தில் இறைவன் குடிகொள்வதில்லை எனவே ஆசையை விடுங்கள், இறைவன் அஙகே ( மனத்தில் ) வந்தமர்வான் என்கிறார் திருமூலர். ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பஙகள் ஆசை விடவிட ஆனந்தமாமே உங்களுக்குள் ஆசையே இல்லை என்கிற நிலையை உருவாக்குங்கள், அந்த மேலோனின் மீதும் ஆசை வைக்க வேண்டாம், ஆசைக்கு இடமளித்தால் அது மேலும் வளர்ந்து கொண்டே போகும். துன்பங்களும் அடுக்கடுக்காய் வந்து சேரும், ஆசையை விட்டால் ஆனந்தம் உண்டு, இது பாடலின் பொருள். ஆசையை விட்ட மனம், மழையில் கழுவிவிட்ட உடம்பு மாதிரி சில்லென்று சுகமாயிருக்கும், புத்துணர்வு பெற்று குதியாட்டம் போடும், ஆசையை விட்டால் சித்தியும் கைகூடும், என்கிறார் சித்தர், அது எப்படியோ உண்மையான ஞானத்தை அடைந்தாலே போதும் , எனவே ஞானம் பெற, முக்தியடைய ஆசையை மனத்திலிருந்து அகற்ற வேண்டும், திருசிற்றம்பலம் - ஒம் நமசிவாய ஒம் மேலும் ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

ஞாயிறு, 13 ஜூலை, 2014


திருச்சிற்றம்பலம் நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே! திருவாசகம் (Thiruvasagam) திருச்சிற்றம்பலம் திருவாசகம் தேடித் திருவடி வந்து சேர வழிகாட்டுகிறது திருவாசகம் . சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய சிவனைநாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல்,அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல்,அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல்,இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது. ”திருவாசகம் வேறு, சிவன் வேறு”,என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். “திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், “அழுதால் உன்னைப் பெறலாமே!” மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். ... சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது. சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் “கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க,” என்று ஆகமத்தைச்சிறப்பித்து விடுகிறார்.. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது.–தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”/கட்டாயம்படியுங்கள் பரப்புங்கள். தேனினும் இனிய திருவாசகத்தை நாம் இங்கு எல்லோரும் பாடவேண்டும்-மனிதன் இறைவனுக்குச் சொன்னதுதிருவாசகம் Sivapuranam Vilakkam A-மாணிக்கவாசகர் திருவாசகம்-Thiruvasagam http://www.youtube.com/watch?v=uWBEkIy1NsE

சனி, 12 ஜூலை, 2014

சிதம்பரம்


சிதம்பரம் என இன்று அழைக்கப்படும் ஊர் முற்காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் தில்லை என அழைக்கப்பட்டது.மத்யந்தன முனிவரின் மகன் புலிக்கால் முனிவர் என்ற வியாக்கிரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என கோயில்புராணம் கூறும். அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொட்டு இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகின்றான். இருமுனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை என இன்று அழைக்கப்படுகிறது. இதுதான் ’திருச்சிற்றம்பலம்’ ஆகும். இங்குதான் ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. அந்தச் சிறு வெளியினை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் – சிறுமை. ஆகாயம் – வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது.இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது. சிதம்பரம்: சித் – அறிவு; அம்பரம் – வெளி; பஞ்சபூதங்களுள் ஒன்றான ஆகாயம் அல்ல இது; அறிவு மயமான வெளி என்று சுட்டிக்காட்டுவதற்காக இவ்வாறு கூறினர் நம் முன்னோர்.இதனைப் பெரியபுராணத்துள் தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் “சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலம்” எனவும் திருஞானசம்பந்தர் புராணத்தில்,”அண்ணலார் தமக்குஅளித்த மெய்ஞ்ஞானமேஆன அம்பலமும் தம்,உள்நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒருபெரும் தனிக்கூத்தும்” எனவும் சேக்கிழார் சுவாமிகள் கூறுகிறார்.சிதம்பரம், திருச்சிற்றம்பலம் என அழைக்கப்படுவதை இங்கே ’சிற்பர வியோமம்’ , ‘மெய்ஞ்ஞானமே ஆன அம்பலம்’ எனத் தெளிவுபடுத்துகிறார் சேக்கிழார். திருச்சிற்றம்பலத்தின் அமைப்பு: சாதாரணமாக எந்தவொரு சிவாலயத்திலும் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் சிவலிங்கம் காணப்படும். அந்தக் கருவறையைச் சுற்றி அமைந்திருக்கும் கோயிலில் இறைவனின் திருவுருவங்களான தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், நடராஜர், பைரவர், பிட்சாடனர் ஆகியோர் வீற்றிருப்பர். ஆனால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் ஆடல்வல்லானே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார். சிவலிங்க மூர்த்தியான திருமூலநாதர் சித்சபைக்குப் பின்புறம்தான் எழுந்தருளியிருக்கிறார். மகாசதாசிவ தாண்டவேசுவரர்: சிவாகமங்களில் இறைவன் ‘மகாசதாசிவ தாண்டவேசுவரர்’ எனப் போற்றப்படுகிறார். மகுடாகமம் 34 ஆவது தத்துவ மூர்த்தியான சதாசிவ மூர்த்திக்கு மேற்பட்டவராக தாண்டவேசுவரரை நியசிக்கச் சொல்கிறது. சர்வஞானோத்தர ஆகமம் “ பதியாவார் சதாசிவர், இவர் மந்திர வடிவினரும், பஞ்சகிருத்தியங்களைச் செய்பவருமாயிருக்கிறார்” எனக் கூறுகிறது. காரணாகமமும் மகுடாகமமும் சதாசிவ தாண்டவேசுவரரையே 36 ஆம் தத்துவ முடிவிலுள்ள பரம ஆகாய அத்யட்சர் என்கின்றன. இறைவன் உயிர்களுக்காக 9 வித வடிவங்கள் எடுக்கின்றான். பிரமன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம் என்பன அவை. இந்நிலையை ’நவந்தரு பேதம்’ என சைவ சித்தாந்த நூல்கள் கூறும். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் மேலான நிலைதான் மகாசதாசிவ தாண்டவேசுவரர். இதனை,” எந்த நடராச மூர்த்திக்கு சதாசிவ மூர்த்தி ஆசனமாக அமைகிறாரோ அவரே, நவந்தரு பேதத்துக்கு மேலானவர். இந்த நவந்தரு பேதங்களும் எவனிடத்தில் ஒடுங்குகின்றனவோ அவனே துவாத சாந்தப் பெருவெளியில் பரமானந்தத் தாண்டவம் புரிபவன். ஆதலால் தாண்டவ மூர்த்தியே மிக மேலானவர் என்பதில் ஐயமில்லை. ஆகவே ஞானி தாண்டவ மூர்த்தியையே இம்மை மறுமை இன்பங்கட்காக தியானிக்கக் கடவன்” என ஞானானந்த பரிபாஷை எனும் நூல் கூறுகிறது. இதனால்தான் தில்லை ஆனந்த நடராஜப் பெருமானின் வழிபாட்டின் போது ”நடராஜ ராஜ ராஜர் வருகிறார்” எனும் கட்டியம் கூறும் மரபு உருவானது. எனவே இந்த அடிப்படையிலேயே தில்லை நடராஜப் பெருமான் மூல மூர்த்தியாக வழிபடப்பெறுகிறார். திருச்சிற்றம்பலத்தின் சிறப்பு: சாதரணமாகக் கருவறை என்பது ஒரு கலசம் உடையது. கருவறைக்கு அதிஷ்டானம், பாதம், பிரஸ்தரம், கண்டம், சிகரம், ஸ்தூபி என்று 6 உறுப்புகள் உண்டு. இதிலிருந்து வேறுபடுவது சபை. திருச்சிற்றம்பலம் சபை ஆதலினால் அதற்கு 9 கலசங்கள் உள்ளன. அதில் கண்டம் என்ற உறுப்பு தவிர பிற காணப்படுகின்றன. திருச்சிற்றம்பலம் மரத்தாலானது. இது அதன் தொன்மையைக் காட்டுகிறது. தில்லையில் மட்டுமே 5 சபைகள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் ஆன ராஜசபை, உற்சவ மூர்த்திகள் வீற்றிருக்கும் தேவ சபை, நிருத்த சபை, கனக சபை, சித்சபை என்பன. இவை ஐந்தும் அன்ன, பிராண, மனோ, விஞ்ஞான, ஆனந்த மய கோசங்களைக் குறிப்பன. ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலம் தங்கப்பூச்சு அமைந்த செப்பு விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்றப் பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டுள்ளன. ஆனந்த நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை தரை மட்டத்திலிருந்து சற்றேறக்குறைய 5 அல்லது 6 அடி உயரத்தில் உள்ளது. இதன் கீழ் முதல் மேல் வரையில் உள்ள கற்கள் மாத்ருகாட்சரங்கள் என்பர். சபையின் வாயில் தெற்குப் பகுதியில் மட்டுமின்றி கிழக்கு மேற்குப் பகுதிகளிலும் இரு வாயில்கள் இருப்பது இக்கோயில் இதயத் தானம் என்பதைக் குறிப்பதற்காக. திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. அடியார்கள் இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்குவர். இந்த கனகசபையில் 9 வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள 9 வாசல்களைக் குறிக்கும். இந்த கனக சபை பிரம்மபீடப் பகுதியாகும். இதற்கு எதிரம்பலம் எனவும் அழைக்கப்படும். கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களாகும். அச்சபையில் அன்னப் பாவாடை பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 பெரிய தளவரிசைக் கற்கள் பஞ்ச பூதங்களாகும். கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு ஏறும் 5 வெள்ளிப் படிகளும் பஞ்சாட்சரப் படிகள் எனப்படும். இப்படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் திருக்களிற்றுப்படி எனவும் அழைக்கப்படும். கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்கு செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்பர். இருபுறமும் சுபாகு, விமலன் எனும் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவ்வாயில் இதயவாயில் எனப்படும். திருச்சிற்றம்பலத்தில் 5 தெய்வீகப் பீடங்கள் உள்ளன. பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்ம பீடம். இது கால் அடி அகலமே இருக்கும். பிரம்ம பீடத்தை அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சற்றேறக்குறைய ஓரடி அகலமுள்ள இடத்தில் 5 தங்கத் தூண்கள் உள்ளன. இப்பகுதி விஷ்ணுபீடம் எனப்படும். இவ்வைந்து தூண்களும் பஞ்ச பூதங்களாகும். நடராஜப் பெருமான் முன்பு அர்ச்சகர் நின்று பூசை செய்யும் இடம் ருத்ரபீடம் எனப்படும். இது மூன்றடி அகலமிருக்கும். இங்குள்ள 28 வெள்ளித் தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வர பீடமாகும். இது ஏறக்குறைய 6 அல்லது 7 அடி நீளமும் 3 அடி அகலமும் இருக்கும். இப்பீடம் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும். மகேஸ்வர பீடத்துக்கு இருபடிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீசுவரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தினாலான நடராஜ மூர்த்தியும் தனித் தனிப் பெட்டிகளில் எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் இழைத்த இறைவனின் திருவடிகள் சிவ பாதுகை எனும் தங்கத் தட்டில் இறைவனுக்கு வலப்புறம் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் நடராஜ மூர்த்தியின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது. ஆனந்த நடராஜமூர்த்தியும் சிவகாமிஅம்மையும் வீற்றிருக்கும் மகேஸ்வர பீடத்தில் உள்ள 4 தூண்களும் 4 வேதங்களைக் குறிக்கும். சிதம்பர ரகசியம் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரகஸ்யம் இருக்கும் பீடம் சதாசிவ பீடம் ஆகும். இறைவன் ஓர் உருவும் ஒரு நாமமும் இன்றி சிற்பர வியோமமாக அண்ட சராசரங்களையும் தொழிற்படுத்தி நடத்தி வரும் ஞான வடிவமே சிதம்பர ரகசியம் ஆகும். திருச்சிற்றம்பலத்தினுள் இறைவனைச் சுற்றியுள்ள இடம் பிரணவப் பிராகாரம் எனப்படும். இத்திருச்சிற்றம்பலம் சுத்த வித்தை தத்துவமாகக் குறிப்பிடப்படும். திருச்சிற்றம்பலத்தின் மேல் அமைந்த 64 சந்தனக் கைமரங்களும் 64 கலைகளைக் குறிக்கும். பொன்னம்பலத்தின் தங்கக் கூரையில் உள்ள 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் விடும் சுவாசங்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இவ்வோடுகளில் திருவைந்தெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுகளில் பொருத்தப்பட்டுள்ள 72,000 ஆணிகளும் நம் உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையைக் குறிப்பனவாகும். சித்சபையின் 9 கலசங்கள் நவசக்திகளைக் குறிக்கும். இதில் உள்ள 224 அடைப்புப் பலகைகள் 224 உலகங்களைக் குறிப்பன. சிதம்பர ரகசியத்தை கனகசபையிலிருந்து 96 துவாரங்கள் உள்ள பலகணி வழியாக தரிசிக்க வேண்டும். இந்த 96 துவாரங்கள் 96 தத்துவ தாத்துவிகங்களைக் குறிப்பன. சித்சபையினுள்ளே இறைவன் அருவம், உருவம், அருவுருவம் எனும் 3 நிலைகளில் எழுந்தருளியுள்ளான். சிதம்பர ரகசியம் அருவம், ஆனந்த நடராஜ மூர்த்தி உருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம். இதனை சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத் தொடக்கத்தில், ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ எனும் திருப்பாடலில் சுட்டிக் காட்டி அருளியுள்ளார். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ – என்பது அருவம். ‘நிலவுலாவிய நீர்மலி வேணியன்’ – என்பது உருவம் ‘அலகில் சோதியன்‘ – என்பது அருவுருவம். இப்பொருளை நமக்கு தில்லைத் திருச்சிற்றம்பலமே காட்டித் தருகிறது. ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி வருடத்திற்கு இருமுறை திருவீதியுலாக் கொண்டருளுவார். மார்கழித் திருவாதிரை ஒன்று. ஆனித் திருவுத்திரம் மற்றொன்று. பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களுக்குப் பிறகு தில்லையில் வழிபட்டு இறைவன் அருள் பெற்ற கௌட தேசத்து அரசன் ஹிரண்யவர்மன் எனும் இரண்டாம் சிம்மவர்மன் (கி.பி.550-575) ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் ஆனித் திருவுத்திரத் திருவிழாவும் நடத்தினான் என கோயில் புராணம் கூறும். ஆக தில்லையில் நடைபெறும் ஆனித் திருவுத்திரத் திருவிழா நால்வர் ஆசாரியர் பெருமக்கள் காலத்திற்கு முன்பே நடைபெற்று வந்தது என்பது தெளிவாகும். ஆடல்வல்லான் பற்றி….: இலிங்க மகா புராணத்தில் நிருத்தப் பிரியன், நித்ய நிருத்தன், நர்த்தனன், சர்வ சாதகன், என இலிங்க புராணத்தில் இறைவன் போற்றப்படுகிறான். சோழ மன்னர்கள் நடராஜ மூர்த்தியை ‘ஆடல்வல்லான்’ எனப் போற்றினர். நெல் அளக்கும் மரக்காலுக்கு ‘ஆடல்வல்லான்’ எனப் பெயரிட்டனர். ஒரு மாவட்டத்துக்கு ‘நித்ய வினோதம்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஒரிசாவைச் சேர்ந்த சிற்பப் பிரகாசம் எனும் நூல் கர்பக சங்கர நிருத்தமூர்த்தி, சௌம்ய நட்டம்பரர், நந்தி மேல் நடமிடும் நட்டம்பரர் எனும் 3 வகை நடராஜர்களைக் குறிப்பிடும். மச்ச புராணம் ‘புஜ தாருவனம்’ எனும் 16 கைகளை உடைய திரிபுர தாண்டவத்தை விளக்கும். கூர்மபுராணத்தில் வரும் சிவகீதையில் நடராஜர் யோகீஸ்வரராக கூறப்படுகிறார். இந்தியாவின் வடபகுதியில் இலக்குமாண்டல், ஜாகேசுவர், நீலகண்டேசுவர், குவாலியர், புந்தி, சிட்டோகர், நாக்டா, அபு, உதயபுரி, அர்த்தனா, புமாரா, சிர்புர், புவனேசுவர், கொனாரக், அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா, பட்டடக் கல், பாதாமி, பேலூர், ஹளபேடு ஆகிய இடங்களில் நடராஜர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் சிவ தாண்டவம்: திரிபுவனமல்ல விக்ரமாதித்யன் -6 என்ற மேலைச் சாளுக்கிய மன்னனின் முனிராபாத் கல்வெட்டொன்றில் “சிவன் கை தட்டினால் சூரிய சந்திர மண்டலங்கள் அதிர்ந்து இவ்வுலகைச் சுமந்து நிற்கும் சேஷ நாகம் சுமை தாங்காது துடிக்க கடல் வேகமாக அலை வீசிப் பொங்குகின்றது” என்று குறிப்பிடப்படுகின்றது. காலசூரிக் கல்வெட்டொன்று, சிவ தாண்டவத்தின் போது “ உலகமாகிய பாத்திரம் சுழல்கையில் அதனைச் சுமக்கும் நாகராஜனின் படமும் தாழ்கிறது. அஷ்ட திக் கஜங்கள் நடராஜரின் அசைவின் போது அஞ்சி ஓடுகின்றன. தண்டம் போன்ற நீண்ட கைகள் வீசும் போது பிரபஞ்சத்தின் முகடு சுழல்கின்றது” என்று கூறுகிறது. ஹர்ஷரின் கல்வெட்டு,” வேகமான சிவதாண்டவத்தின் போது பிரபஞ்சத்தின் பௌதிக அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பூமி தாழ்வதும் திசைகள் மேல் எழுவதுமாக இருக்கின்றன” என்கிறது.

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 23 புலன்களுக்கு போடணும் கடிவாளம்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 23 புலன்களுக்கு போடணும் கடிவாளம் புலன்கள் ஐந்து அவை அடைகிற அனுபவங்களுக்கு அளவே இல்லை, அவற்றால் உண்டாகிற விளைவுகளுக்கும் கணக்கே இல்லை. கண்போன போக்கில் மனம் போகக்கூடாது என்பார்கள், வாயில் வந்ததைப் பேசக்கூடாது காதில் விழுந்ததை நம்பக்கூடாது என்றெல்லாம் பெரியோர்கள் தடைபோட்டு வைத்திருந்தார்கள், அதைத்தான் ஐம்புலனடக்கம் பஞ்சேந்திரிய ஒழுக்கம் என்பது, சாத்துவிகக் குணத்தில் ஒன்று ஐம்புலங்களையும் அடக்கி வைத்தல், ஐம்புலங்களின் நுகர்ச்சியை பஞ்சேந்திரியாநுபவம் என்பர், பொறிகள் ஐந்து அவை கண்,காது, தோல், நாக்கு மூக்கு என்ற புலன்கள் அவற்றின் அறிவாகும் பார்த்தல், கேட்டல், ஸ்பரிசித்தல, ருசித்தல், முகர்தல், (ஒளி,ஒசை, ஊறு, சுவை, நாற்றம்) புலன்களின் இயக்கம் ஒருவனுக்கு நன்மையும் செய்யும தீமையும் செய்யும், அது அவற்றின் செயலைப் பொறுத்தது. மனிதரின் மாமனிதன் என்ற போற்றப்படுகிறவன் புலன்களை அடக்கியவன்தான் சாதனைகளில் மிகப் பெரிய சாதனை புலனடக்கம், வெற்றிகளில் சிறந்த வெற்றி புலன்களை வெல்வதுதான், " அறிவைப் பயன்படுத்தி பொறிகளை அடக்க வேண்டும், சாப்பாட்டில் ஆசை வைத்தாலும், சம்போகத்தில் ( புணர்ச்சி) பெருவிருப்பு கொண்டாலும் ஆன்ம வெற்றியை அடைய முடியாது" என்கிறார் திருமூல்ர் விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள், ஆனால் மதியை மறைக்கும் மயக்கத்தை ஏற்படுத்தி அதைச் செயல்படாதவாறு தடுக்கும் விதி, அதனால்தான் விதி வலியது என்கிறார்கள், புலன்கள் செருக்குற்று பாதிப்பை ஏற்படுத்துவதும் அப்படித்தான். புலன் மயக்கம் கூடாது. புலனை வென்றவன் முனிவன், புலன் வழி சென்றவன் சராசரி மனிதன். ஐம்பொறிகளும் துள்ளி குதிக்கும் கன்றுகளாயிருந்தால் கயிற்றால் பிணைத்து அடக்கலாம், அவை மதங்கொண்ட யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். புலன்களின் விருப்பத்தை கட்டுபடுத்த என்ன வழி பொறிகளை தறிகெட்டு போகாமல் காப்பது எப்படி? பிரணவமான திருவைந்தெழுத்தை ஒதியிருப்பதே பாதுகாப்பு என்கிறது திருமந்திரம். பாடல்: ஐந்தில் ஒடுங்கில்....... பேசாத வார்த்தை உங்களுக்கு அடிமை பேசியவார்த்தைக்கு நீங்கள் அடிமை, என்பார்கள். நிறையப் பேசுவதால் என்ன பயன்? சொற்கள் விளைவுடையவை விளைவறிந்து பேச வேண்டும், பேசிய வார்த்தைகளும் இழந்த காலமும் மீண்டும் பெற முடியாத முத்துக்கள். பொறிகளை இயக்குவது மனம் மனந்தான் அவற்றை உந்துகிறது. சிவத்தியானத்தில் மனதை அடக்கினால் இந்திரியங்கள் ( பொறிகள்) அடங்கும், பொறிகள் வழியே மனம் போகாமலிருக்க நல்ல கருத்துடைய நூல்களை கற்க வேண்டும். " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பர் பெரியோர், அவை செயலின் விளைவேயாகும், சிவசிந்தையாயிருந்தால் பொறி வழி போகிற நிலையிருக்காது. உடலுக்கு ஒன்பது வாசல் என்றால் மனதுக்கு ஒராயிரம் வாசல், ஒவ்வொரு எண்ணமும் ஒரு வாசல் தான், எந்த வழி போவது என்பதைவிட எந்த வழியிலும் போகாமல் இருப்பதே சிறப்பு. ஞானியரும், யோகியரும் அதைத்தான் செய்கிறார்கள். மனமிறக்க வாயேன் பராபரமே என்பார் தாயுமானவர் " மனவழி சென்று உடலின் இன்பத்தை நாடினால் குற்றங்கள் உண்டாகும், வாழ்க்கை நிம்மதியை இழக்கும், உடலின்பத்தை நாடாதிருந்தால் உள்ளம் சிந்தனையற்று ஆனந்தத்தில் நிலைபெறும். பாடல்: எண்இலி இல்லி உடைத்து அவ்இருட்டடை ............ சகஸகரத்தலத்தில் விளங்கும் சிவனை வணங்கி தறிகெட்டோடும் புனன்களை அறிவால் மீட்டிடுங்கள். பெருமானின் திருமேனியை மனதில் பொருத்தி கொண்டால் பிறிதொன்றில் கவனம் செல்லாது. அப்போது உள்ளத்தில் ஊறும் அமுதத்தை துய்த்திடுங்கள்" நீங்கள் உலகியல் நாட்டம் கொண்டு பேசுகிறவரை உளளொளி காண இயலாது போகும் சொல்லற்றிரு! சும்மாயிரு! என்பது அதற்கான சொன்ன வார்த்தைகள், அதற்காகத்தான் பொறிகளின் இயல்பை அறிந்தவரே இருளை கடந்து ஒளியை காண்கிறார்கள். அதைவிடு, இதைவிடு, என்பது துறவறம், இல்லறத்தான் ஐம்பொறிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் போதும், எதையும் விடுகிற கட்டாயம் இருக்காது, இறைவனை பற்றியிருங்கள். இலலையேல் பற்றகள் உங்களை நாலாபக்கமும் ஐந்து பக்கங்களிலும் (ஐந்து புலன்கள் வழி) கவர்ந்து சென்றுவிடும், எனவே ஐம்புலன் அடக்கம் அருளைத் தரும் திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஒம் மேலும் ஆன்மிகத்தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வெள்ளி, 11 ஜூலை, 2014

ஞானமே அழிவற்ற பரப்பிரம்மம் அடைய உறைவிடம்


ஞானமே அழிவற்ற பரப்பிரம்மம் அடைய உறைவிடம் " காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை, மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போகமாட்டான்" பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், ஞானமார்க்கம் அடைய பல ஞானிகளான சித்தர்களும், வேதங்களும் கூறிய நெறிகளைஅவர்களின் சீடர்களுக்கு உபதேசமாக வழங்கியுள்ளனர், அந்த ஞான மொழியே பரம்பொருளாகிய ஞானசொரூபன் அருளியதாகும், பிறவிப் பிணி நீக்கி முக்தி எனும் விடுதலை அடைய காணும் வழிகள் நான்கு உண்டு இந்த மெய்யறிவான ஞான மார்க்கம் கொண்டால் முக்தி எனும் வீடு பேற்றை அடையலாம். ஞானத்தை அறிந்துஅதனை பின்பற்றி இறைவனின் செரூபத்தை அடைந்தவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதுமில்லை, பிரளய காலத்தில் துன்புறுவதுமில்லை.இதனையே திருமூலரும் திருமந்திரத்தில் முன்னை செய்த தவத்தால் சிவஞானத்தைப் பெற்று தன் உண்மை உணர்ந்தால் பிறவி அறும் என " முன்னை அறிவினிற் செய்த முதுதவம் ............. " என்ற பாடல் மூலம் விளக்கிறார், பலவிதமான அனைத்து பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள் உடல்கள் கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ அவை எல்லாவற்றிக்கும் பிரகிருதியே பிறப்பிடம் அதாவது கருத்தரிக்கும் தாய் , விதையளிக்கும் தந்தை, அவ்வாறு பிறக்கும் உயிர்களில் அழிவற்ற ஜீவாத்மாவாகிய உடலில் சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் என்ற பிரகிருதியிலிருந்து உண்டான மூன்று குணங்கள் காணப்படுகின்றன. ரஜோகுணம்: விருப்பு வடிவாகிற ரஜோகுணம் ஆசை, பற்று இவற்றால் உண்டாகிறது. அது ஜீவாத்மாவைக் கர்மங்களிலும் கர்மகளின் பயன்களிலும் உள்ள தொடர்பால் கட்டுகிறது. ரஜோ குணம் அதிகமாகும் போது, பேராசை, உலகியல் கர்மங்களில் ஈடுபாடு, தன்னலத்தில் பற்றோடு கூடிய கர்மங்களைத் தொடஙகதல், அமைதியின்மை, உலகியல் நுகர்பொருட்களில் பேராவல் இவையாவும் உண்டாகின்றன. தமோகுணம்: உடற்பற்றுடைய எல்லோரையும் மயக்கக்கூடியது. அஞ்ஞானத்திலிருந்து உண்டானதாகும். அது இந்த ஜீவாத்மாவை வீணான செயல்களில் ஈடுபடுவது சோம்பல், தூக்கம் இவற்றை கட்டுகிறது. இந்த தமோகுணம் அதிகமாகும் போது அந்தக்காரணங்களிலும், புலன்களிலும் ஒளியின்மையையும், செய்ய வேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மை, அசட்டைத்தனம், அதாவது வீண் செயல்களில் ஈடுபாடும், தூக்கம் முதலிய அந்தக்காரணஙகளின் மயக்கமும் உண்டாகின்றன. சத்துவ குணம்: இந்த சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுகிறது, ரஜோகுணம் செயலில் ஈடுபடுகிறது தமோகுணமோ, ஞானத்தை மறைத்து கவன மின்மையில் அதாவது வீணான செயல்களில் ஈடுபடுகிறது. ரஜோகுணத்தையும் தமோகுணத்தையும் அடக்கி சததுவகுணம் மேலோங்குகிறது. சததுவகுணத்தையும், தமோகுணத்தையும் அடக்கி ரஜோகுணம் மேலோங்குகிறது. அப்படியே சத்துவகுணத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கி, தமோ குணம் மேலோஙகுகிறது. எப்போது மனிதன் சத்துவகுணம் பெருகி உள்பொழுது இறப்பை அடைகிறானோ, அப்போதே உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய நிர்மலமான சுவர்க்கம் முதலிய புண்ணிய உலங்களை அடைகிறான். ரஜோகுணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைந்து கர்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே பிறக்கிறான்,, அவ்வாறே தமோகுணம் அதிகமாக இருக்கும் போது இறந்தவன் புழு-பூச்சி, விலங்கு முதலிய அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான். சததுவ குணத்திலிருந்து ஞானம் உண்டாகிறது. ரஜோகுணத்திலிருந்து ஐயமின்றிப் பேராசையே உண்டாகிறது. தமோகுணத்திலிருந்து கவனமின்மை மதிமயக்கமும் உண்டாகின்றன. மேலும் அறியாமையும் உண்டாகின்றது. சத்துவ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் சொர்க்கம் முதிலிய உயர்ந்த லோகங்களை அடைகின்றனர், ரஜோகுணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் நடுவில் அதாவது மனித உலகிலேயே நிற்கின்றனர். தூக்கம், சோம்பல், வீண்செயல், முதலிய தாழ்ந்த குணங்களில் நிலை பெற்ற தமோச குணம் உடைய மனிதர்கள் புழு, விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த பிறவிகளையும் நரகத்தையும் அடைகின்றனர். மனித உடல் தோன்றுவதற்கு காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு மூப்பு இவற்றிலிருந்தும், பிற எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு பரமானந்தத்தை அடைகிறான், எந்த மனிதன் சத்துவ குணத்தின் செயலான பிரகாசத்தையும், ரஜோகுணத்தின் செயலான செயலூக்கத்தையும் தமோகுணத்தின் செயலான மோகத்தையும் அவை வரும்போது அவற்றை வெறுப்பதில்லையோ விலகும் போது அவற்றை திரும்பவும் பெற விரும்பவதில்லையோ, எவன் தன் நிலையான ஆத்ம சொரூபத்தில் இடையறாது நிலைத்து நிற்கிறானோ, இன்ப துன்பங்களை சமமாக கருதுவானோ, மண்ணையும் கல்லையும், பொன்னையும், சமமாக மதிப்பானோ, ஞானியோ, வேண்டியது-வேண்டாதது இரண்டடையும் ஒன்றாக நினைப்பானோ, இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் ஒன்றாக கருதுவானோ, பெருமையையும், சிறுமையையும் சமமென நினைப்பாநோ, நண்பர் பகைவர் பக்கலும் சமநோக்குக் கொண்டவனோ, செயல்கள் அனைத்திலும் நான் செய்கிறேன் (தான் கர்த்தர் - நான் என்ற ஆங்காரம்) என்ற மனப்பான்மையை விட்டானோ, அந்த மனிதன் முக்குணங்களையும் கடந்தவன், அந்த முக்குணங்களையும் கடந்து அப்பாற்பட்ட ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்து சம்சாரசகரத்திலிருந்து விடுபட்டு சித்தியாகிய பரமாத்மாவை அடைவான். மேலும் எவன் வேறு எதிலும் நாட்ட மில்லாமல் ஒன்றிய பக்தியோகத்தினால் அந்த பரம்பொருளை அடைகிறானோ, அவன் இந்த மூன்று குணங்களிலிருந்து முற்றிலுமாக கடந்து சத் சித்தானந்தமான பரமானந்தத்தை அடைய தகுதி பெற்றவன், ஏனெனில் அந்த அழிவற்றதான பரம்பிரம்மத்திற்கும் அமிர்த நிலைக்கும் ( இறவா நிலைக்கும்) எப்போதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடமான சத் சித்தானந்தத்தை அடைவான், திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய நம மேலும்ஆனமீகத் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

குதம்பைச்சித்தர் பாடல்


குதம்பைச்சித்தர் பாடல் அழுகணி சித்தரின் என் கண்ணம்மா, அகப்பேய் சித்தரின் அகப்பேயைப் போன்று குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’ என்ற வார்த்தை ஜாலம் வருகின்றது. இவர் ‘குதம்பை’ என்ற காதணியணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற பெயர் பெற்றார் என்பர். பெண் குழந்தை இல்லாத குறைக்கு ஆணாய்ப் பிறந்த இவரைப் பெண் குழந்தை போல அலங்காரம் செய்து மகிழ்வார்களாம். அப்படி அணிகலன்கள் அணியும் நிலையில் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந் திருக்கையில் அவ்வளவு அழகாகக் காட்சி தருமாம் அந்தக் குழந்தை. அதனால் அதனை ‘குதம்பை’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கத் தொடங்கினார்களாம். இந்தக் கதை இப்படியிருக்க, இவர் இடையர் குலத்தைச் சேர்ந்த கோபாலர் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்து சித்தர் ஒருவரிடம் ஞானோ பதேசம் பெற்று மயிலாடுதுறையில் சித்தியடைந்தார் என்ற வரலாறும் கூறப்படுவதுண்டு. ஏனைய சித்தர்களைப் போல இவரும் தமது பாடலில் “தன்னையறிய வேணும் சாராமல் சாரவேணும்” என்ற தத்துவக் கொள்கையைப் பின்பற்றுகிறார். இராமலிங்க சுவாமிகள்கூட ‘தன்னையறிந்து இன்புறவே’ என்று வெண்ணிலவை நோக்கிப் பாடியதை நோக்க எல்லா ஞானிகளும் தன்னையறிதலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் என்பது புலப்படும். “தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு பின்னாசை யேதுக்கடி - குதம்பாய் பின்னாசை யேதுக்கடி” இவர் தம் பாடலில் யோக சித்திகளைப் பற்றிப் பலப்படக் கூறினாலும் இறைவனையடையும் பக்குவம் பெற்றோர்க்கு இதெல்லாம் தேவையற்ற வழிமுறைகள் என்றும் காட்டமாகக் கூறுகிறார். “ஆதாரமான வடிமுடிகண்டோர்க்கு வாதாட்ட மேதுக்கடி - குதம்பாய் வாதாட்ட மேதுக்கடி” “நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு வாட்டங்க ளேதுக்கடி - குதம்பாய் வாட்டங்க ளேதுக்கடி”. “முக்கோணந் தன்னில் முளைத்த மெய்ஞ் ஞானிக்கு சட் கோண மேதுக்கடி” “சித்திரக் கூடத்தைத் தினந்தினந் காண்போர்க்கு பத்திர மேதுக்கடி” என்ற பாடல் வரிகள் குண்டலினி தவத்தைப் பற்றி எடுத்துக்காட்டுவனவாகும். முதற்பாடல் மூலாதார யோகத்தையும், இரண்டாம் பாடல் சுழுமுனை வழியையும், மூன்றாம் பாடல் அநாகத சக்கரத்தையும் நான்காம் பாடல் சகஸ்ராரம் பெருவெளியையும் குறிப்பால் உணர்த்துவன. இறைவனாகிய உண்மைப் பொருளைக் கண்டு தெளிந்த மெய்ஞானிகள் மெய்யாகிய உடலை நீடித்துவாழவைக்கும் காயகற்ப முறைகளை நாடி வீண் பொழுது கழிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். யோக சக்தி படைத்தவர்கள் காலனை வென்றவர்களாவார்கள். அவர்களைக் காலன் நெருங்க மாட்டான். நீண்ட நாள் உயிர் வாழும் தன்மையை அவர்கள் இயல்பாகவே பெற்றிருப்பதால் மரணம் என்பது அவர்களாகவே நிர்ணயித்துக் கொள்வது. இந்த நிலையில் அட்டாங்க யோகத்தில் ஒன்றான வேண்டிய வடிவமெடுக்கும் ஈசத்துவம் தேவையில்லை என்பது குதம்பைச் சித்தரின் கருத்து. இதனை, “காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி” என்கிறார். காயகற்ப சாதனைகளைச் செய்யாத சித்தர்களே இல்லை என்று கூறுமளவு பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் காயகற்பப் பயிற்சியை மேற்கொண்ட நிலையில் உண்மை ஞானிகள் காயகற்பந் தேட மாட்டார்கள் என்று வித்தியாசமாகத் தெரிவிக்கின்றார். “மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்” கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம்கூடத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார். “வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு யோகந் தானேதுக் கடி” என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது. உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும் இலகும் கடவுளை ஏத்தி - நலமார் குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு நிதம்பார்த்து நெஞ்சில் நினை. எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி. 8 அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி. 9 ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச் சேவித்துக் கொள்வாயடி குதம்பாய் சேவித்துக் கொள்வாயடி. 10 தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய் மாண்டாலும் போற்றிடுவாய். இவ்வாறு இறைவனை ஜோதிவடிவாய் காண்பதை மேற்கண்ட பாடல் வரிகளின் மூலம் காணலாம் உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித் திருவாகி நின்றது காண் குதம்பாய் திருவாகி நின்றது காண். 23 நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும் பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய் பாருமாய் நின்றதைக் காண். 24 புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச் சிவனாலே ஆகுமடி குதம்பாய் சிவனாலே ஆகுமடி. 25 அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல் புவனத்தில் உண்மையடி குதம்பாய் புவனத்தில் உண்மையடி. ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே சோதியாய் நின்றானடி குதம்பாய் சோதியாய் நின்றானடி. முத்திநிலை பெறும் வழி பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக் கற்றார்க்கு முத்தியடி குதம்பாய் கற்றார்க்கு முத்தியடி. 52 பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால் சந்தத முத்தியடி குதம்பாய் சந்தத முத்தியடி. 53 ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய் ஊமைக்கு முத்தியடி. தேகத்தைப் பழித்தல் பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு வாசனை ஏதுக்கடி குதம்பாய் வாசனை ஏதுக்கடி. காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு வாகனம் ஏதுக்கடி குதம்பாய் வாகனம் ஏதுக்கடி. பரத்தயரைப் பழித்தல் வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம் தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய் தளர்ந்து விழுந்திடுமே. மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும் பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய் பஞ்சுபோல் ஆகிடுமே. நலம் நிலைமை கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய் பாபத்துக்கு ஏதுவடி. 83 கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள் பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய் பள்ளத்திற் தள்ளுமடி. 84 பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு இருளாம் நரகமடி குதம்பாய் இருளாம் நரகமடி. பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல் செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு எங்காகும் நல்வழியே குதம்பாய் எங்காகும் நல்வழியே. வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப் பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் பெண்ணாசை ஏதுக்கடி? நிலையாப்பொருள் தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு நாடி வருவதுண்டோ? குதம்பாய் நாடி வருவதுண்டோ? 102 போம்போது தேடும் பொருளில் அணுவேனும் சாம்போது தான்வருமோ? குதம்பாய் சாம்போது தான்வருமோ? செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் தங்காது அழியுமடி! குதம்பாய் தங்காது அழியுமடி! தன்னோடு செல்பவை நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால் செல்வன் நிச்சயமே குதம்பாய் செல்வன நிச்சயமே. 111 செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும் எய்த வருவனவே குதம்பாய் எய்த வருவனவே. 112 முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய பத்தியும் பின்வருமே குதம்பாய் பத்தியும் பின்வருமே. 113 ஆசையை ஒழித்தல் இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது நிச்சய மாகுமடி குதம்பாய் நிச்சய மாகுமடி. 114 வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால் நல்ல துறவாமடி குதம்பாய் நல்ல துறவாமடி. 115 ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய் ஓசையைக் கேட்டிலையோ? தவநிலை கூறல் காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு ஏமன் பயப்படுவான் குதம்பாய் ஏமன் பயப்படுவான். 123 யோகந் தான்வேண்டி உறுதிகொள் யோகிக்கு மோகந்தான் இல்லையடி குதம்பாய் மோகந்தான் இல்லையடி. ஐம்புலன் வென்றே அனைத்தும் துறந்தோர்கள் சம்புவைக் காண்பாரடி குதம்பாய் சம்புவைக் காண்பாரடி. சாதி பேத மின்மை ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய் வீண்சாதி மற்றவெல்லாம். சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய் ஓதி உணர்ந் தறிவாய். சமயநிலை கூறல் பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள் கற்பனை ஆகுமடி குதம்பாய் கற்பனை ஆகுமடி. மந்திரநிலை கூறல் ஐந்தெழுத்து ஐந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே சிந்தையுள் கண்டறி நீ குதம்பாய் சிந்தையுள் கண்டறி நீ. 157 வாதநிலை கூறல் ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில் வீறான முப்பாமடி குதம்பாய் வீறான முப்பாமடி. 158 விந்தொடு நாதம் விளங்கத் துலங்கினால் வந்தது வாதமடி குதம்பாய் வந்தது வாதமடி. பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல் மண்ணாலே இல்லையடி குதம்பாய் மண்ணாலே இல்லையடி. வயித்தியங் கூறல் முப்பிணி தன்னை அறியாத மூடர்கள் எப்பிணி தீர்ப்பாரடி குதம்பாய் எப்பிணி தீர்ப்பாரடி. 164 எட்டெட்டும் கட்டி இருக்குமேற் தீயினிற் விட்டோடும் நோய்கள் எல்லாம் குதம்பாய் விட்டோடும் நோய்கள் எல்லாம். 165 நாடி ஒருபது நன்காய் அறிந்திடில் ஓடிவிடும் பிணியே குதம்பாய் ஓடுவிடும் பிணியே. தலங்களிவை எனல் கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு ஏயும் பலன் வருமோ? குதம்பாய் ஏயும் பலன் வருமோ? அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே இன்பான கோயிலடி குதம்பாய் இன்பான கோயிலடி. காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும் ஈசனைக் காணுவையோ? குதம்பாய் ஈசனைக் காணுவையோ? அஞ்ஞானங் கடிதல் தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார் சிந்தை தெளிந்திலரே குதம்பாய் சிந்தை தெளிந்திலரே. பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய் தீர்ப்பாக எண்ணிடுவாய். மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத் தந்திரம் ஏதுக்கடி குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி. 213 வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச் சேதம் மிகவருமே குதம்பாய் வேதம் மிகவருமே. ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு ஞானந்தா னேதுக்கடி குதம்பாய் ஞானந்தா னேதுக்கடி. திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

புதன், 9 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 22 இறங்கத்தக்க நிலை


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 22 இறங்கத்தக்க நிலை மனிதன் தன்னுடைய அழிவை நோக்கி விரைந்து செல்கிறான். தன் வாழ்வை மாற்றும் விதியை அவன் வலிந்தேற்கிறான். " விரும்பியோ விரும்பாமாலோ வினைகள் குவிகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ அந்த வினைகள் அவனை தேடிக் குவிக்கின்றான். மனிதர்கள் வினையை விதைக்கிறார்கள், அவர்களுடைய சரீர நாற்றாங்காலில் அந்த விதைகள் முளைத்து நாற்றுக்களால் தலை நிமிர்கின்றன. பின்பு விளைந்து பலனை அவர்கள் அறுவடை செய்யத்தயார் ஆகிறார்கள். காலம் நில்லாது. அது ஒடிக்கொண்டே இருக்கும்,வாழ்நாள் திடீரென்று முடிந்து விடும். இந்த உண்மையை உணராமல் அவர்கள் வாதிடுகிறார்கள், வாதிட்டு பெறுவது எனன? நாம் வாழும் குறுகிய காலத்ததிலேயே இறைவனிடத்தில் அன்பால் பொருந்தும் நெறியை அறிந்திருக்க வேண்டும். அன்பால் பொருந்தும் நிலையை அறிந்திருக்க வேண்டும், ஆனால் புரிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள், சரீரத்தை போற்றுவதில் தாங்கள் முழுக்கவனத்தையும் செலுத்துகிறவர்கள் அறிவார்களா? அந்த சரீரம் விறகுக் கட்டைகளுக்கு விருந்தாக போவதை இந்த விறவி நமக்கு இறைவனால் வந்தது ஆனால் அவனை மறக்கின்ற காரியத்தையே நாம் செயது கெ ாண்டு இருக்கிறோம்,இறைவனின் திருவடியைப் போற்றாத காரணத்தால் பெறற்கரிய இன்பங்களை நாம் பெறாமலே போகிறோம். குரு காட்டும் வழியில் சென்றால் சிவனை காணக்கூடும், ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை, நேர்த்தியற்றவை களை நேர்த்தியானதாய் பேசித்திரவோம், இறைவனின் சிறப்புகளை நாம் எப்போதேனும் எண்ணி பார்த்திருப்ேப்மா? களியாட்டங்களில் காலத்தை வீணடிப்பவர்கள் கண்டடைந்த பலன் எது? சிவபொருமான் தன் அன்பர்களின் மனத்தில் சோதியாய் உணர்ந்தெழுவான். நாம் அவனை திருஐந்தெழுத்தால் தொழுவரவேண்டும். அல்லாவிடில் எதுவும் கட்டுப்பாட்டில் இருக்காது. இரங்கத்தக்க நிலையில் நாம் இருப்பதாய் எண்ணி வருந்துகிறார் திருமூலர் தென்னாடுடைய சிவனே போற்றி ..... திருசிற்றம்பலம் மேலும் ஆன்மீகத்தகவலுக்கு

செவ்வாய், 8 ஜூலை, 2014

கடுவெளிச் சித்தர்


கடுவெளிச் சித்தர் பாடல் கடுவெளி என்பது ‘வெட்டவெளி’ அதாவது பிரமம். இந்தச் சித்தர் பிரபஞ்சத்தை வெட்ட வெளியாகக் கண்டு தம் ஆத்மானுபவத்தைப் பிறரும் அறிந்து நலம் பெறுவதற்காகப் பாடிய பாடல்கள் கடுவெளிச் சித்தர் பாடல்களாக நமக்கு அறிமுகமாகின்றன. இவரது இயற்பெயரோ வரலாறோ தெரியாத நிலையில் இவரது ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்ற செய்தியை மட்டும் போகர் தெரிவிக்கின்றார். வானென்ற கடுவெளிச் சித்தர்தானும் வளமான திருக்காஞ்சிப் பதியிலாச்சு இந்த ‘திருக்காஞ்சிப்பதி’ என்ற ஊரைப் புதுச்சேரிக் கருகிலுள்ள ‘திருக்காஞ்சி’ என்ற ஊராகக் கருதி அங்குள்ள காசி விசுவநாதர் ஆலயம் தான் அவர் ஜீவசமாதி கொண்ட தலம் என்று சுட்டுவாருளர். இது ஆய்வுக்குரியது. இந்த சித்தரைப் பற்றி அறியாத நிலையில் இவர் பாடிய ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் தமிழகமெங்கும் வெகுபிரசித்தம். “நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி” என்ன அருமையான சொல்லாட்சி. இலக்கணம் பிறழாமல் அதே சமயம் எளிமை கூட்டி பாடலின் வரிகளைக் கொண்டு இவர் பிற்கால சித்தராயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. ஏழை ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையேற்று உண்பவன். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனமொன்றைக் காண்கிறான். என்ன வித விதமான வண்ண மலர்கள். வாசம் மிகுந்த மலர்கள் தனிமையில் இங்கு அமர்ந்து இயற்கையை ரசிப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது. அருகில் ஒரு சேய்குளம். நிறைந்துதான் இருக்கிறது ஆனாலும் என்ன பயன்? செடி கொடிகளுக்குத் தேவையான நீர் வானம் மழைப் பொழியும் போது மட்டுந்தானே கிடைக்கிறது. குளம் நிறைய தண்ணீர் இருந்தாலும் வான் மழையை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நந்தவனத்திற்கு குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும்? ஆண்டியின் கற்பனை அளவுக்கு அதிகமானதுதான். அதனைச் செயலாக்கிப் பார்த்தால்தான் என்ன? பக்கத்து ஊரில் உள்ள குயவன் ஒருவனைப் பார்க்கிறான். தனக்குக் குடம் ஒன்று வனைந்து கொடுக்குமாறு கேட்கிறான். குயவன் ஆண்டியை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். அவனுக்குச் சிரிப்புதான் வருகிறது. “ஏன் சிரிக்கிறீர்?” “நீயோ ஆண்டி, உனக்கெதற்கய்யா தோண்டி?” குயவன் குசும்பாகக் கேட்டான். “உனக்கெதற்கு அந்தக் கதையெல்லாம். தோண்டி கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே? எதற்கு தேவையற்ற கேள்வி?” “சரி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தோண்டி எட்டணா.” “என்ன தோண்டிக்கு விலையா?” “ம்,,, பின்னே என்ன இனாமாகவா தருவார்கள். உன்னைப் பார்த்தாலே வாங்குகிற மூஞ்சில்லை என்றுதான் உனக்கு எதற்கு தோண்டி என்றேன்.” ஆண்டியின் சுருதி இறங்கி விட்டது. “ஐயா நானோ ஆண்டி, எம்மிடம் நீர் விலை சொல்வது நியாயமா? ஏதாவது தர்மம் செய்வதாக நினைத்துக் கொண்டு இந்தத் தோண்டியைத் தரக்கூடாதா?” ஆண்டியின் பேச்சு குயவன் மனதை இளக்கவில்லை. “போ, போ, காலையில் வந்து வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு,,,,,,” குயவன் வேறு வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான். ஆனால் ஆண்டி போகவில்லை. அவன் பார்வையில் படும் இடமாகப் பார்த்து தூரத்தே அமர்ந்து கொண்டான். தினசரி பிச்சை எடுத்த நேரம் போக மீதி நேரத்தை அந்த மரத்தடியில் அமர்ந்து குயவன் வியாபாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாளில்லை ஒருநாள் மனமிறங்கித் தோண்டி தர மாட்டானா என்ன? இப்படியே ஒரு நாளல்ல, ஒருமாதமல்ல, பத்து மாதங்கள் கடந்து விட்டன. ஆண்டியின் பொறுமை குயவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. குயவனும் போனால் போகிறது என்று நன்கு வனைந்த குடமொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான். ஆண்டியின் சந்தோஷத்திற்கு அளவேது. ஆகா, இனி என்னைவிட பணக்காரன் உலகில் யாருமில்லை. இந்த குடத்தைக் கொண்டு குளத்து நீரைச் செடிகளுக்குப்பாய்ச்சுவேன். செடிகளெல்லாம் நிறைய பூக்களைப் பூக்கும். பூக்களையெல்லாம் பறித்துக்கொண்டு போய் நல்ல விலைக்கு விற்பேன். எனக்குப் பெரும் பொருள் சேரும். அந்தப் பொருளைக் கொண்டு பெரிய மடம் ஒன்றைக் கட்டுவேன். அந்த மடத்தில் நிறைய ஆண்டிகள் தங்குவார்கள். ஆண்டி மடம் கட்டினான் கற்பனையில். சரி, கற்பனைக்கு யார் தடை விதிக்கப் போகிறார்கள்? அரும்பாடுபட்டு வாங்கி வந்த தோண்டியை அருமையாகப் பாதுகாக்க வேண்டு மல்லவா? தனக்குத் தோண்டி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தலையில் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பார்த்தான். சந்தோஷத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்தத் தோண்டியைப் பொத்தென்று கீழே போட்டு உடைத்து விட்டான். பத்து மாதங்கள் குயவனிடம் கெஞ்சி வாங்கி வந்த குடம் பத்தே விநாடிகளில் ‘படார்’. இனியென்ன செய்வது? குயவன் மறுபடியும் ஒரு தோண்டி தருவானா? கேள்விக்குறியுடன் பரிதாபமாகக் குயவனைப் பார்க்கிறான் ஆண்டி. இது சாதாரண ஆண்டி, குயவன், தோண்டி கதையல்ல. மனிதனின் ஜீவரகசியம். பத்து மாதம் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை அவன் போற்றி பாதுகாக்காது அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து வருகிறானே என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது. பத்து மாதங்களாகத் தவம் செய்து பெற்றது மனிதா நீ கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத்தானோ? அடப்பாவீ, எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறாய். இந்த உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளிச் சித்தர். தோண்டியை உடைத்த ஆண்டியைப் போல மேற் கொண்டு என்ன செய்வது என்று நாம் திகைத்திருக்கும் போது தமது அனுபவ உபதேசங்களை அள்ளி விடுகின்றார் சித்தர். “தூடணமாகச் சொல்லாதே” “ஏடணை மூன்றும் பொல்லாதே” “நல்லவர் தம்மைத் தள்ளாதே” “பொல்லாங்குச் சொல்லாதே” “பொய்மொழி, கோள்கள் பொருத்தமாகக்கூட சொல்லாதே” “பெண்ணாசைக் கொண்டு அலையாதே” “மனம் போன போக்கு போகாதே” “மைவிழியாரைச் சாராதே” “மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே” “வைதோரைக் கூட வையாதே - இந்த வையமுழுதும் பொய்த்தாலும் நீ பொய்யாதே” “வைய வினைகள் செய்யாதே” “பாம்பினைப் பற்றி யாட்டாதே - உன்றன் பத்தினிமார் மகளைப் பழித்துக் காட்டாதே” “கஞ்சா புகையாதே” “வெறிகாட்டி மயக்கம்தரும் கள்ளைக் குடிக்காதே” “மூடனுக்கு அறிவுரைப் புகலாதே” “கள்ள வேடம் புனையாதே” “கொள்ளைக் கொள்ள நினையாதே” என்று செய்யக்கூடாதவற்றையெல்லாம் பட்டியலிடுகின்றார். அப்படி இவையெல்லாம் செய்யக்கூடாதது என்றால் செய்யக்கூடியதுதான் என்ன என்று கேட்பவருக்கு மீண்டும் ஒரு பட்டியலை நீட்டுகின்றார்.“நல்ல வழிதனை நாடு” “எந்த நாளும் பரமனை நத்தி தேடு” “வல்லவர் கூட்டத்திற்கூடு” “வேத விதிப்படி நில்லு” “நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு” “சாதக நிலைமையையே சொல்லு” “பொல்லாத சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு” “மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த வேதாந்த வெட்டவெளிதனை தேடு” மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் மூலம் குறிப்பாகச் சொன்ன கடுவெளிச் சித்தர் அந்தக் குறிப்பைப் புரிந்துகொள்ளாத பக்குவமில்லாத பாமரர்களுக்குப் புரியும்வண்ணம் அதே கருத்தமைந்த மற்றொரு பாடலையும் பாடுகின்றார். “நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதின் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்” அழகான வர்ணஜாலங்களுடன் மிதந்து வரும் நீர்க்குமிழியானது காற்று வேகமாக அடித்தாலோ அல்லது எதன் மீதாவது மோதினாலோ பட்டென்று உடைந்து தெரிந்து விடும். மனித வாழ்வும் இப்படித்தான் மாட மாளிகை, ஆள், அம்பு சேனைகளுடன் பெரும் சிறப்புடன் வாழ்ந்தாலும் திடீரென்று அழிவுற்றுக் காணாமல் போய்விடும். இந்த மாய வித்தையின் இரகசியத்தை மனிதா நீ அறிந்து அழியும் உலகப் பொருள்களின் மேல் பற்று வைக்காமல் இருப்பாயாக என்கிறார். மேலும் இந்த உலக வாழ்க்கை மட்டுமல்ல, நீகூட நிலையில்லாத ஒரு பொருள்தான். இந்த உலகம் உனக்குத்தான் சொந்தம் என்று உலகிலுள்ள பொருட்களைச் சொந்தம் கொண்டாடி சேர்த்து வைக்காதே. இன்று உனக்குச் சொந்தமான அந்தப் பொருட்களெல்லாம் நாளை வேறொருவருக்குச் சொந்தமாகும். நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும் எமன் கொண்டோடிப் போவான். ஆகையால் பாபஞ் செய்யாதிருப்பாயாக என்று உபதேசமும் செய்கிறார். பாபஞ் செய்யாதிரு மனமே - நாளைக் கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான் பாபஞ் செய்யாதிரு மனமே முடிந்த வரை உன் வாழ்க்கையில் யாருக்கும் வயிறெரிந்து சாபமிடாதே. ஒவ்வொன்றும் விதிப்படிதான் நடக்கும். ஆகையால் உன் வயிற்றெரிச்சல் அந்த மனிதனைத் துன்பத்திற்காட்படுத்தும் என்பதையும் அறிந்து கோபத்தைக் கட்டுப்படுத்து என்றும் அறிவுரை கூறுகின்றார். “சாபங் கொடுத்திடலாமோ - விதி தன்னை நம்மாலே தடுத்திட லாமோ கோபங் தொடுத்திட லாமோ - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ” கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தது. மனித வாழ்க்கைக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் தரும் பாடல்களாதலால் இவைகளை ஆனந்தக் களிப்பில் பாடினாற் போலும். “மெய்ஞானப் பாதையிலேறு - சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை அண்டினோர்க் கானந்தமாம் வழி கூறு” என்று நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகத் தம் பாடலில் எளிய வார்த்தைகளால் கூறியுள்ளார் கடுவெளிச் சித்தர். ஆனந்தக்களிப்பு பாடல்கள் பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. நல்ல வழிதனை நாடு - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு. பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே இச்சைய துன்னை யாளாதே - சிவன் இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே. ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு முந்தி வருந்திநீ தேடு - அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. அன்பெனும் நன்மலர் தூவிப் - பர மானந்தத் தேவின் அடியினை மேவி இன்பொடும் உன்னுட லாவி - நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே. எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர் இன்ப இருதயத் திருந்திடும் வாசன் துங்க அடியவர் தாசன் - தன்னைத் துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.