வியாழன், 28 ஜூலை, 2022

பெண்மையை போற்றுவோம்...


 பெண்மையை போற்றுவோம்...

63 நாயன்மார்களின் புகழுக்குத் துணை நின்ற போற்றுதலுக்குரிய மகளிர்.....தில்லைவாழ் அந்தணர்களின் தொண்டு சிறக்க துணைநின்ற அவர்களின் மனைவியர்....
தீண்டுவீராகில் எம்மை திருநீலகண்டம் என்ற வைராக்கிய பெண்மணி திருநீலகண்ட நாயனாரின் மனைவி மணம் முடித்தவுடன் கணவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சிவனடியாருடன் செல்ல ஒத்துக் கொண்ட இயற்பகை நாயனாரின் மனைவி.
விதைத்த விதை நெல்லைக் கணவர் தர அதை அரிசியாக்கி வீட்டின் கூரையையே விறகாக்கி சிவனடியாராக வந்த இறைவர்க்கு உணவு சமைத்த இளையான்குடி நாயனாரின் மனைவி,
கணவரின் சொல்லை மதித்து, அடியாராக வந்த இறைவனாரின் கோவணத்துக்கு இணையாக தராசு தட்டில் தமது செல்வங்களுடன் தன்னுடைய மகனுடன் நிற்கத் துணிந்த அமர்நீதி நாயனாரின் மனைவி வறுமையிலும் செம்மை காத்த குங்கிலிய கலய நாயனாரின் மனைவி அடியாராக வந்த இறைவர், திருமணமாக வேண்டிய பெண்ணின் அழகிய கூந்தலை வேண்ட.
உடன் அதை அரிந்து கொடுக்க ஒப்புக் கொண்ட மானக்கஞ்சாற நாயனாரின் மகள் அரிவாட்ட நாயனாரின் ஆழ்பக்திக்குத் துணைநின்று வறுமையிலும் இறைவனாருக்கு அமுது படைத்த அவரது மனைவி சமணத்திலிருந்த தம்பியை திருநீறிட்டு சைவத்திற்கு கொணர்ந்து நாம் படித்து மகிழும் பல பதிகங்களை நமக்குக் கிடைக்கச் செய்த திருநாவுக்கரசு நாயனாரின் தமக்கை இறைவர்க்கு அமுதளித்து, இறைவரால் அம்மையே என்று அழைக்கப்பட்டு பேயுடம்புடன் தீந்தமிழ் பாடல்கள் பல பாடி இறைவனாரின் திருநடனத்தை தினம் கண்டு களிக்கும் பேறு பெற்ற நம் பாட்டியார் காரைக்கால் அம்மையார்.
பெற்றமகன் வாழை இலை கொணரச் சென்றபோது பாம்பு தீண்டி இறக்க, உடலை ஒரு அறையில் மறைத்து வைத்து தம் குல குரு அப்பர் பெருமானுக்கு உணவு பாறிமாறிய அப்பூதி அடிகளின் மனைவி
இறைவனாரின் மேலுள்ள ஆழமான அன்பாலும் கணவரின் சிவபக்திக்குத் துணை நிற்கும் தன்மையாலும் தான் சுமந்து பெற்ற மகனை மடியில் சுமத்தி கணவர் அரிய பிள்ளைக்கறி சமைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மனைவி.
கறியமுது சமைக்க உதவிய அவர்களது பணிப்பெண்
திருநீல நக்க நாயனார் வழிபாட்டில் இருந்தபோது இறைவர்மேல் சிலந்தி விழக்கண்டு வாயால் ஊதிய காரணத்தால் கணவரின் கோபத்திற்கு ஆளான திருநீலநக்க நாயனாரின் மனைவி
நாம் தமிழால் இறைவரைப் பாட பல பாடல்கள் தந்த திருஞானசம்பந்தரை ஈந்த தாயார் மறுநாள் மணமுடிக்கவுள்ள காதலரை பாம்பு தீண்ட அந்த துக்கத்திலும் இறைவரை அப்பெண் புகழ்ந்து அழ அதுகேட்டு ஞானசம்பந்தர் தேன்தமிழில் பதிகம் பாடி உயிர்பிக்கக் காரணமான அப்பெண்.
மயிலை செட்டியார் மகள் பூம்பாவையை பாம்புகடித்து இறந்து விட அப்பெண்ணினச சாம்பலை தீந்தமிழ் பதிகம் பாடி உயிர்ப்பித்தார் ஞான சம்பந்தப் பெருமான் . அவரது செந்தமிழ் பாடலால் உயிர்பெற்ற அப்பெண் பூம்பாவை.
மணமுடித்தவுடன் ஞானசம்பந்தப் பெருமானுடன் ஜோதியில் கலந்து இறைவரடி சேர்ந்த அவரது மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை.
சமணத்தின் ஆதிக்கத்தால் சைவநெறி குன்றிய காலத்தில் ஞானசம்பந்தரை வரவழைத்து சைவத்தை தென்னகத்தில் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார்
பரவை நாச்சியாரிடம் இறைவரை தூது அனுப்பினார் சுந்தரர் என்பதறிந்து கோபிக்க, இரண்டு நாயன்மாரையும் இணைக்க விரும்பிய இறைவர் ஏயர்கோன் கலிக்காமருக்கு சூலை நோய் தந்து அது தீர சுந்தரர் பெருமான் நேரில் வந்து திருநீறு தரத் தீரும் என்றார். சுந்தரர் பெருமான் மேலுள்ள கோபத்தால் அவர் வரும் முன் தன்னை மாய்த்துக் கொண்ட கலிக்காமரின் உடலை ஒரு அறையில் கிடத்தி சுந்தரரை வரவேற்று உபசரித்த கலிக்காமரின் மனைவி
இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கும் மகன் கோயில்கள் பல எழுப்புவான் என்பதறிந்து தன்னை ஒருநாழிகை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்ததால் தனதின்னுயிர் துறந்த கோச்செங்க சோழரின் தாயார்.
அடியார்களுக்கு அமுது படைப்பதற்காகவே கணவர் சுந்தரப் பெருமானிடம் செல்வம் கேட்க அதற்காக பல செந்தமிழ் பதிகங்களை இறைவரிடம் பாடி பரிசுகள் பல பெற காரணமான பரவை நாச்சியார்.
இவரிடம் சுந்தரருக்காக இறைவனாரே தூது சென்றுள்ளார். இறைவர்க்கு பூமாலை செய்து வழிபட்டு அவரே தூதுசென்று சுந்தரரை மணமுடித்த சங்கிலியார்.
பரமன் தடுத்தாட்கொண்ட சுந்தரர் பெருமானாரிர் தாய் இசை ஞானியார்
உலகின் அனைத்து பெரியோர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார்.
ஆத்திச்சூடி வினாயகர் அகவல் என பல தேன்தமிழ் இலக்கியங்கள் தந்த ஔவையார்.

வெள்ளி, 15 ஜூலை, 2022

மானிடப்பிறப்பின் மாண்பு

 மானிடப்பிறப்பின் மாண்பு

  ஆதியாய் நடுவும் ஆகி, ஜோதியாய் உணர்வுமாகிய தில்லைப்பாெருமானின் கருணையினால் இந்த பெறுதற்கும் அரியதாய் உள்ள இந்த மானிடப்பிறப்பு நமக்கு கிடைத்துள்ளது. இப்பிறப்பில் ஊனமின்றி பிறந்து தவம் செய் வகுப்பில் இந்த தென்னாட்டில் பிறந்தது அவன் அருளால் அவன் தாள் வணங்கவல்லவா நாம் இப்பிறப்பில் மானிட உடல் தாங்கி பிறந்திருக்கிறோம்.இனி அடுத்த பிறப்பு நமக்கு நம் வினையின் பாெருட்டு என்ன பிறப்பு கிடைக்குமோ என்பது நமக்கு தெரியாது.எனவே கிடைத்த இப்பிறப்பிலே இறைவனின் கருணையை பெற்று அவன் தாள் சேர்ந்தால் இனி பிறவாமை என்ற முக்தியை அடையலாம். இதற்கு வழிசெய்யும் பொருட்டே தேவார திருவாசகம் மற்றும் சாஸ்திர நூல்கள் மூலம் நமக்கு வழிகாட்டியுள்ளனர் அதன் அருளாளர்கள்.

  உயிரோடு கலந்து நிற்கும் ஆணவ மலத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் தன் கருணையால் உயிர்களை பிறப்பு இறப்பிற்கு உட்படுத்துகின்றார். அவ்வாறு உயிர் பிறக்கும் போது நான்கு வகை தோற்றமும்,ஏழு வகை பிறப்பும் எண்பத்து நான்கு லட்சம்யோனி பேதமாகப் பிறந்து இறந்து உழல்கின்றன உயிர்கள்.

  நான்கு வகை தோற்றமாவது, உயிர்கள் முட்டையில் தோன்றுவது,(பாம்பு, பல்லி, ஆமை பாேன்றவை) வேர்வையில் அல்லது அங்கங்கள் மூலம் தோன்றுவது,(கிருமி, பேன்,விட்டில் பூச்சி போன்றவை), வித்துக்களில்,வேர்களில் தோன்றுபவை, ( மரம், செடி,கொடிவகைகள்), கருப்பையில் தோன்றுபவை, நான்கு கால் விலங்குகள்,மனிதர், தேவர் முதலான உயிர்கள், 

இந்த நான்கு வகையிலிருந்து தோன்றும் எழுவகைப்பிறப்பாவான. தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவர வகைகள்.

  மானிடப் பிறவியிலும் சைவ நெறி சார்ந்து திருநெறிய தமிழால் கோகழி ஆண்ட குருமணியை போற்றுவது நமது மேலைத் தவத்தால் அன்றி கிட்டா. உயிர் ஒவ்வொரு பிறவியிலும் தான் செய்த முன் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது,

  வினை = நல்வினை, தீவினை, 

நல்வினை = புண்ணியம் = இன்பம்

தீவினை = பாவம்= துன்பம்

  நாம் செய்த வினைகளை ஒரே பிறவியில் அனுபவித்து கழிக்கும் ஆற்றல் உயிருக்கு இல்லை, எனவே இறைவன் நம்மீது கருணை கொண்டு, நம்முடைய வினை முழுவதையும் ஒரே பிறவியில் கொடுக்காமல் நம்முடைய வினைத் தொகுதியில் ஒரு சிறிதளவே எடுத்து பிறவிக்கு அனுப்புகிறார். அந்த வினைத் தொகுக்கு நிகழ்வினை அல்லது பிரார்த்த வினை என்று பெயர்.

   நாம் கொண்டு வந்தது போக மீதமுள்ள வினைத்தொகுதி சஞ்சித வினை அல்லது பழவினை எனப்படும். நிகழ் வினையைக் கொண்ட நாம் செய்யும் வினை ஆகாமியம் எனப்படும். நம்முடைய பழவினை குருவிடம்தீக்கை பெறும் போது முற்றிலுமாக நீங்கப்பெறுகிறது.இறைப்பணியில் நாம் செய்யும் சிவத்தொண்டு ஆன்மீகப்பணிகள் மூலமாகவும், நாம் செய்யும் வினைகள் அனைத்தும் இறைவன் செயலாகவே நடக்கிறது இவ்வினையை நீக்குபவன் இறைவனே என்ற எண்ணப்பாங்கில் நாம் செய்யும்புண்ணிய செயல்களால் ஆகாமிய வினை ஏறாமல் தடுக்கப்படுகிறது. நாம் கொண்டு வந்த பிரார்த்த வினை அருளாளர்கள் அருளிச்செய்த பன்னிரு திருமுறைகள் ஓதியுணர்தலே வழி, நம்முடைய திருமுறைகள் திருவருளோடு ஒன்றி, காதலாகி கசிந்து கண்ணீர்மல்க பாடி வழிபடும் போத நிகழ் வினை மெலிந்தும், நீங்கவும் செய்கிறது.நம்முடைய திருமுறை பாடல்கள் 75 சதவிகிதம் வினை நிக்கம் பற்றியே பாடப்பட்டவை என்றும் அவைகள் பழவினையையும், வருவினையையும்நீக்க வல்ல ஆற்றலுடையவை என்பதை அருளாளர்களே தங்கள் வாக்கால்  அருளியுள்ளார்கள்

  திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே தி,மு, 1/11 பதிகம்

 பாடல் வல்லார்க்கு அறும்நீடு அவலம் அறும் பிறப்புத்தானே ,,,,.. தி,மு, 1/ பதி11

 பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே   சம்பந்தர் தேவாரம்

 உடைய தமிழ° பத்தும்உணர்வர்  தொல்வினை ஒல்கும் உடனே   சம்பந்தர் தேவாரம்

 நமச்சிவாய பத்தும் ஏத்த வல்லார்க்கு இடுக்கண் இல்லையே   அப்பர் தேவாரம்

 நாணனை தொண்டன் ஊரன் சொல்.... சொல்வார்க்கு இல்லை துன்பமே  சுந்தரர்


  எனவே நம்முடைய துன்பத்தை நீக்க ஞானமே வடிவான பன்னிரு திருமுறைகளை அன்றி பிறிதாென்றால் ஆகாது. தாயின் கருப்பைக்கு நாம் வரும்போது நமக்கு முன்பே காயக் கருக்குழியில் நம்மை ஆட்கொண்டு நம் வினைக்கு ஒப்ப தனு கரண புவனம் போகங்களை நமக்கு ஊட்டிவித்து வினைப்பயனை நுகர வைக்கிறார் நம் இறைவன். நம்முடைய பருவத்தை நான்காக வகுத்து அந்தந்த பருவத்தில் நாம்விரும்பியவற்றை அருளுவதைக் கண்டு நாம் தெளிவடைய வேண்டும்.

  நாம்இல்லறத்தில் இருந்து கொண்டே துறவியர் பெறும்வீடு பேற்றை அடைய முடியும் என்பது தமிழர் கண்ட நெறி,இதனை பட்டினத்தடிகள் மும்மணிக்கோவையில் அருளி செய்துள்ளார்.துறவியானாலும், இல்லறத்தான் ஆனாலும் மறவாது ஐந்தெழுத்தை சொல்லும்ஒருவர் நிச்சயமாய் வீடுபேறு பெறலாம் என்பது திண்ணம்.

 நம்முடைய பிறப்பில் இருந்து இறைவன் திருவடியைஅடையும் வரை நமக்கு ஏற்படும் இன்னல்களை நீக்க அவனருளாலே அவன் தாள் வணங்கி நின்று திருமுறைகளை பாடிப் பரவுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வுலகிற்கு தேவையான பொருட் செல்வத்தையும், அருள் உலகிற்கு தேவையான அருளையும் ஒரு சேர தருவது நமது திருமுறைகளே என்பது திண்ணம். கருவாகிப் பின் உருவாகி பிறவியில் உழன்று கொண்டிருக்கும் நாம் மீண்டும் கருவாகாமல் உருவாகமல் இருக்க ஒரே வழி தில்லை அம்மலவாணர் அருள் பெறுதலே, நள்ளிருளில்நட்டம் பயின்றாடும் நாதனை வாழ்த்தவும், வணங்கவும் அவர் நமக்கு தந்த அருட் கொடையே திருமுறைகள். நவக்கோள்களால் வரும் துன்பததை நீக்க வல்லன நம் திருமுறைகள் ஒன்றே. எனவே நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், மென்றாலும், துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் பன்னிரு திருமுறைகளை பாடி அருள் பெறுவோம், திருமுறைகளே நமது தமிழ° வேதம்.திருமுறைகளே நமது நாதம். 

திருச்சிற்றமபலம்

நன்றி கருமுதல் திருவரை


திங்கள், 11 ஜூலை, 2022

வேண்டுதல் வேண்டாமை இலான் நம் இறைவன்

 வேண்டுதல் வேண்டாமை இலான் நம் இறைவன்


வெறுப்பு விருப்பு இல்லாதவன் சிவபெருமான். எல்லா உயிர்களிடத்தும்நீக்கமற நிறைந்து நிற்கும் பரமான்ம சொரூபியாய் இருப்பவன். உயிர்க்குள்ள இயல்பு ஏதும் இல்லாத இறைவன் சச்சிதானந்த சொரூபியாய் , தான் நினைத்த வடிவத்தைத் தானே அமைத்து நிறுத்திக் கொள்பவன், அவன்உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்ப அருளுதல் பொருட்டு வடிவம் கொள்வதாலும், அவ்வாறு அவன் வடிவம்கொள்ளாவிடில் உயிர்கள் அவனை வழிபட்டு உய்யும் வழியை அறியா, ஆதலாலும் அவ்வாறு வடிவம் கொள்ளுதல் அவனுக்கு எந்த வித பயனும் இல்லாததாலும் , அதனால் அவனுக்கு எந்த குறையும் நேராது என்பதால் அவன் விருப்பு வெறுப்பு அற்ற எதையும் தன் பொருட்டு வேண்டாதவனாகையால் வள்ளவர் பெருமான் இறைவனுக்கு வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார. அவர் உயிர்களை உய்விக்கும் பொருட்டே தனது வடித்தை அமைத்து அருள்பாலிிக்கிறான்.

  நின்மலன் ஆகிய சிவபெருமான் நிலைபேறு உடடைய மேலான சிவசக்தி தனது வெவ்வேறு செயல்பாட்டினால் இச்சா, கிரியா, ஞான சக்தி என்னும் மூன்று ஆற்றல்களாக கொண்ட இச்சக்திகளை பொருந்தி, போறறுவதற்கு உரிய சிவபெருமான் அந்த ஆற்றல்களோடு திருவருளே திருமேனியாககொண்டு நிற்பன். உயிர்களுக்கு அருளுதல் பொருட்டு பொது வகையால் அறிவித்தும் அறிந்தும் நிற்பதாகிய ஞானம் ஒன்றே சிவசக்தியின் சொரூபம்ஆகும். அதுவே பராசக்தி எனப்படும். உயிர்களுக்கு மலபரிபாகம் வருதல் பொருட்டு அந்த பராசக்தி ஐந்தாெழில் ஆற்றுகின்றது. அந்நிலையில் அது ஆதிசக்தி அல்லது திரோதான சக்தி எனப் பெறுகிறது. அந்த வகையில் செயல்படும் போது அது இச்சா ஞான கிரியா சக்திகளாக மூவைப்பட்டு நிற்கிறது. இந்த சக்திகளை சிவ பெருமான் பொருந்துி நிற்கும் நிலையில் சக்தி காரியமான அருள் திருமேனி உண்டாகும். 

  அச்சக்திகளுள் ஞான சக்தியை சிவன் பொருந்திய போது நிட்கள திருமேனி ஆகிய அருவம் உண்டாகிறது. அந்நிலையில் சிவம் என்னும் பெயர் பெறுகிறது. 

  சிவபெருமான் ஞானசக்தியையும், கிரியா சக்தியையும் சமமாகப் பொருந்திய நிலையில் அவன் சதாசிவன் எனப்பெயர் பெறுகிறான். 

  ஞானசக்தி குறைந்தும் கிரியா சக்தி மிகுந்தும்இருக்கும் நிலை யில் அவன் மகேசுவரன் என்னும்பெயர் பெறுகிறான்.

 சிவம், சதாசிவம், மகேசுவரம் ஆகிய இந்த மூன்று மூர்த்தங்களுக்கும் தம்முன் பேதமாே, ஏற்றத்தாழ்வே இல்லை. சக்திகளின் தொழில் வேறுபாட்டினால் இப்பேதகங்கள் உண்டு. உயிர்களின் அறிவு நிலை வேறுபாட்டிற்கு ஏற்ப, சக்திகளின் தொழில்  வேறுபாடுகள் நிகழ்கின்றன.

  சிவதத்துவங்கள் தோன்றுதல்

  சுத்த மாயையை ஞான சக்தி பொருந்துவதால் நாத தத்துவமும், கிரியா சக்தி பொருந்துவதால் விந்து தத்துவமும் , ஞானமும் கிரயையும் சமமாக பொருந்துவதால் சதாசிவ தத்துவமும், கிரியா சக்தி கூடி, ஞான சக்தி குறைந்து பொருந்துவதால் ஈஸ்வர  தத்துவமும் , ஞானசக்தி கூடி கிரயா சக்தி குறைந்தும் பொருந்துவதால் வித்தை என்னும் தத்துவமும்தோன்றும். 

  இறைவன் அடைந்த இந்த மூன்று திருமேனிகளும் சிவபெருமானின் தடத்த திருமேனியாகும். 

 விருப்பு வெறுப்பு காரணமாக உயிர்களுக்கு நிகழும் சுகதுக்க மோகங்கள் இல்லாதவன் இறைவன்.எனவே ஒப்பற்ற ஒருதனிப்பொருளாய் இருப்பவன், எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து பரமான்ம சொரூபமாய் இருப்பவன் அவனுக்கென்று எந்த வித வேண்டுதல் , வேண்டாமை இல்லாதவன் நம் சிவபெருமான்,

திருச்சிற்றம்பலம்

தகவல் சிவப்பிரகாசம் பாடல் 14, 15

புதன், 6 ஜூலை, 2022

சைவத்தோடு இணைந்து வாழ்வோம்

 சைவத்தோடு இணைந்து வாழ்வோம்



 உலகை ஒன்றாக காண்பதே காட்சி என்பது ஆன்மீகம்

 ஒன்றே குலம் ஒருவனே தேவன் , .... அத்தேவனே பரம்பொருள் என்பதும்,

யாதும்ஊரே யாவரும் கேளீர் என்பதும் சைவம்.

 இந்த ஆன்மீக ஒருமைப்பாட்டு உண்மை நமது வாழ்க்கை குறிக்கோளாக கொண்டு சைவத்தோடு இணைந்து வாழ வேண்டும்.

  சைவர்களாகிய நாம் சைவ அனுஷ்டானங்கள்,சைவ மரபுகள், ஆதாரங்களை வாழ்க்கையில் மேற்கொண்டு ஒழுகுதல் வேண்டும். சைவ சமயத்தார் என்று சொல்லவோ , விபூதி, ருத்திராட்சம்அணியவோ வெட்கப்படக்கூடாது. பஜனை கூட்டு வழிபாடு பிராத்தனைகளல் பங்குபெறும் போது நாமும் சேர்ந்து தோத்திரங்களை பாட வேண்டும். மெய்யில் சைவ அடையாளங்களை தரித்து சிவ மந்திரம் கூறுதலே சைவத்தின் பிரதானம். இறைவன் நாமங்களை உரத்து சொல்ல வேண்டும். தீவண்ணர் திறம் பேசுதலும் திருநாமம் கூறுதலும் பிறப்பின் நோக்கம் என்பது அப்பர் அடிகள் வாக்கு. இறைவழிபாட்டு பூசையில் பஞ்சபுராணம் ஓதுவதற்கு முன்னும், ஓதிய பின்னும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும். இறைவழிபாட்டில் திருமுறைகள் பாடுவதற்கு கூச்சப்படக் கூடாது. குரல் நல்லாயில்லை என்று சாக்குபோக்கு கூறும் வழக்கம் நம்மைவிட்டு நீங்க வேண்டும். பாடல்கள் பாடப்பாடத்தான் குரல்ஒலி கை காெடுக்கும்., இறைவன் மீது காதலாகி கசிந்து  கண்ணீர்மல்கி தேவாரங்களையும் திருமுறைகளையும் ஓத குரல் வளமும் இசைப்பண்ணும் தாமாக வந்து சேரும். பக்தியும் நம்பிக்கையும் கைவரப் பெற்றால் பயம் போய்விடும். பயமும் கூச்சமும் முன்னேற்றதிற்கு பரம விரோதிகள்.

  சமய வைபவங்களில் திருமுறைகள் பாடி முடிந்ததும் நமப் பார்வதி பதயே என்று உரத்துக் கூறப்படும் போது, அங்குள்ளவர்கள் அரகர மகாதேவா என்று பதிலுக்கு கூற வேண்டும்.அதன்பின்னர் சிவ சிதம்பரம் என்றதும் மற்றவர்கள் சிற்சபேசா என்றும், தென்னாடுடைய சிவனே பாேற்றி எனும் போது மற்றவர்கள் எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி என்றும் கூறுவது சைவ சித்தாந்தத்தின் மரபு. இவ்வாறு கூறுபவர்களே புண்ணியம் செய்தவர்கள்.

  நாம் மனிதராய் பிறந்தது உண்ணவும், உடுக்கவும்உறங்கவும், பொருள் தேடவும் என்று பலர் நினைக்கிறார்கள். வாழ்க்கை இயந்திர மயமாகி விடக்கூடாது. சம்சார சாகரத்தில் என்றும் மூழ்கியிருத்தல் ஆகாது, என்பதனால் தான் நம் முன்னோர்கள் இறைவழிபாடு, ஆன்மீகம், புராணங்கள் படித்தல், பிராத்தனை என்றெல்லாம் நம் முன்னோர்கள் வகுத்து தந்துள்ளனர்.

நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன் என்று மனம் விட்டு கூறுபவர்கள் அரிதினும் அரிது.யாருக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும். மனித வாழ்க்கையில் உலகியல் தேவையோடு ஆன்மீகத்தேவைகளும் இருக்க வேண்டும்.

  ஒவ்வொரு மனிதனுக்கும்மூன்று கடமைகள் உண்டு. 1. வாழ்வியல் கடமை,. 2. இல்லற கடமை, 3. ஆன்மீக கடமை , இந்த ஆன்மீக கடமையில் எளிமையை  வழிகாட்டுவது சமயம். ஆன்மீக கடமையில் ஐந்து பிரதானமாக கருதப்படுகிறது. 

 1. அனுஷ்டானம், 2. சிவபூசை, 3. திருக்கோயில் தரிசனம்., 4, திருமுறைகள் பராணயம். 5,  தான தர்மம்.

  எவ்வித சுகபோகங்கள் இருந்தும் ஆன்மீகம் இல்லையேல் அவற்றால் பயனில்லை. வாழ்வுடன் சுவை இருக்காது. ஆன்மீக ஈடுபாடுதான் மனிதனின் வாழ்க்கை சுமையை தணிக்க வல்லது. மனமது செம்மையானால் அமைதி பெற ஆன்மீகம் தேவை.

  சமய அனுஷ்டானம், இறைபக்தி, தியானம், இறைவன் புகழ் பாடுதல் ( திருமுறை பாடுதல்) கேட்டல், புராணஇதிகாசங்கள் படித்தல், என்பனவற்றில் ஈடுபடுவதால் வீண் விவகாரங்களில் மனதையோ, புலன்களையோ செலுத்தாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். அதனால் நாம் அடைவது நிம்மதி,அமைதி, சந்தோசம்ஆகியவை.

  இப்பேறுகளை வேறு எந்த மூலங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியாது. இந்த உண்மையை நாம் உணர்ந்து,நம் பிள்ளைகள் உணர்வதற்கும் இளம் பிராயத்திலேயே அவர்களையும் பழக்கி விட வேண்டும். இளைஞர்களும், சிறுவர்களும் சமய விசயங்களில் ஈடுபாடு கொள்வர். எதர்க்கும் நேரம் இல்லை என்று கூறிக்கொண்டு எத்தனையோ காரியங்களுக்கு நேரம் ஒதுக்கும் போது ஏன் இறை சிந்தனைக்கு நேரம் நம் வாழ்வு நெறியில் ஒதுக்கக்கூடாது. நாம்ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் சற்றே சிறிது நேரமாவது சைவ சமய நெறிக்கி ஒதுக்கி நம் மனமும் சந்தோசமும் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ° சைவ வாழ்வியல் சிந்தனை யாழ்பாண நூல்

செவ்வாய், 5 ஜூலை, 2022

பெண்மையை முதன்மை படுத்திய சமயம் (சைவம்

 பெண்மையை முதன்மை படுத்திய சமயம் (சைவம்)

உலகில் சமயங்கள் பல இருப்பினும் சைவ சமயமே சமயம் என்பா் ஆன்றோர்கள்.சைவ சமய முதற்கடவுளான சிவபெருமான் தன் இடப்பாகத்தை உமாதேவியாருக்கு வழங்கி, உமையோரு பாகனாக விளங்கி, பெண்மைக்கு முதன்மை படுத்தியவரும் நம் முதற்முதல் கடவுளே.

 சைவ சமயத்தில் மறுமலர்ச்சிக்காக இறைவனால் அருளாளர்கள் மூலம் அருளப்பட்டவை திருமுறைகள். தோத்திர நூல்களாக விளங்கும் திருமுறைகள் சைவ சமயத்தின் கருவூலங்கள். திருநாரையூர்நம்பிகள் மூலம் தில்லையிலிருந்து திருமுறை பதிகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை நம்பியாண்டார் நம்பிகள் சமயச்சாரியார்கள் திருவாய் மலர்ந்து பாடியருளிய முறையில் பண்கள் அறிய எருக்கத்தம்பூலியூர் இறைவனிடம் மனம் உருகி வேண்டினார். அப்போது நம் பெருமானார் திருநீலகண்ட யாழ்பாணர் மரபில் வந்த ஒரு பெண்மணிக்கு திருமுறை பண்களில் பாட உணர்த்தியுள்ளோம் என்று அருள் பாலித்தார்., திருநீலகண்ட யாழ்பாணர் அவதரித்த தலம் எருக்கத்தம்புலியூர் திருத்தலமாகும். அவர்  மரபில் வந்த பெண்ணை அழைத்து ஆச்சாரியார்கள் பாடிய வாறே பாடுவித்து பண்களோடு பாடிக் காட்டினார், இதுவே இறைவன் நம் சமயத்திற்கு இரண்டாவது முதன்மைப் பெண்ணாக அறிமுகம் செய்தவர் நம் இறையனாரே.

 அதன்பின் நாயன்மார்கள் வரிிசையில் பெரியபுராணம் காட்டும் முதன்மை பெண்கள்

சிவனடியார்களான 63 நாயன்மார்களில் அறுபது பேர் ஆண்கள், மூவர் பெண்கள். காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசியார் மற்றும் இசைஞானியார் ஆகியோரே அப்பெண் நாயன்மார்கள் ஆவர். 

காரைக்கால் அம்மையார் இறைவனாலே ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட சிறப்புடையவர்.இவரே பெண் நாயன்மார்களில் மூத்தவரும் ஆவார். கயிலைமலையானை கால்களால் மிதிக்க அஞ்சி கைகளால் நடந்து சென்றவர். பிறவாமை வேண்டும் என்றும் அப்படி பிறந்தால் நான் உன் அடியில் இருக்க வேண்டி பணித்தவர்.

மங்கையர்கரசியார் சமண சமயத்தின் பிடியிலிருந்த பாண்டிய நாட்டினை சைவத்திற்கு மாற்றியவர்.

இசைஞானியார் ‘வன்தொண்டர்’ என்றழைப்படும் சுந்தரரின் தாய்.

  இதன்படி நம் சைவ சமயம் தான் பெண்களை முதன்மைப்படுத்திய சமயம் நம் சமயமே

திருச்சிற்றம்பலம்