அரிய வகை அற்புதப் பூ " பிரம்ம கமலம் "
அரிய வகை அற்புதப் பூ " பிரம்ம கமலம் "
பிரம்மாஅமரும் பூ. இதுஒரு வெள்ளைத் தாமரை என்ற அரிய வகை அற்புத தெய்வீக மலர் " பிரம்ம கமலம் " ஆண்டுக்கு ஒரு முறை பௌர்ணமி நாளில், இரவில் மட்டும் மலர்ந்து சில மணி நேரங்களில் மூடிக்கொண்டு விடும் அதிசய மலர் தான் ''பிரம்மக்கமலம்''. இமயமலை வடக்கு, பர்மா மற்றும் தென்மேற்கு சீனாவை பூர்விகமாய் கொண்டது இம்மலர். இமயமலையில் சுமார் 4000 மீட்டர் உயரத்தில் காணலாம் . உத்தரகாண்டின் மாநில மலரும் இதுவே.
இந்த பூவிலிருந்து பிரம்மா தோன்றியதாக கூறப்படுகிறது. இந்து மத புராணங்களில் இந்த வரலாறுகளில் கண்டாலும் இது ஒரு வெள்ளைத் தாமரை மலர். இது இமயமலை சாரலில் வளர்ந்தாலும் இதில் பல வகைகள் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனா். இந்த அரிய வகை வெள்ளைத்தாமரை என்ற பிரம்ம கமலம் தற்போது வெப்பதட்ப சமவெளிகளிலும் வளர்ந்து வந்துள்ளதை செய்தித்தாள்கள் மூலம் நாம் அறிந்திருக்கலாம். (தற்போது இந்த பிரம்ம கமலம் எங்கள் இல்லத் தோட்டத்திலம், ஒசூரில் எனது புதல்வி வீட்டுத்தோட்டத்திலும் வளர்க்கப் பட்டு வருகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)
புராணத்தில் காணும் சிறப்பு குறிப்புக்கள்
படைக்கும் தொழிலை உடைய பிரம்மா, காக்கும் தொழிலுடைய விஷ்ணுவின் தொப்பில் கொடியிலிருந்து தோன்றிய இந்த பிரம்ம கமல வெள்ளைத்தாமரையில் அமர்ந்திருப்பதை நாம் புராணங்கள் வாயிலாக அறியலாம்.
பரம்மா அமர்ந்த பூவும், தனது கையில் உள்ள பூவும் இதுவே ஆதலால் இதற்கு பிரம்ம கமலம் என்று வழங்கலாயிற்கு என புராணங்கள் கூறுகின்றன.
விநாயகர் பிறப்பின் புராண வரலாற்றிலும் இந்த பிரம்ம கமலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிவனின் மூத்த குமாரனான கணேசனுக்கு யானையின் தலை கொடுக்கப்பட்ட போது பிரம்ம கமலத்தின் மூலம் கணேசனுக்கு குளிக்க நீர் தெளிக்கப்பட்டது. இதனால் இது தெய்வீகத் தன்மை கொண்டது. இத் தெய்வீகத் தன்மையுடன் இது மருத்துவ குணமும் கொண்டது என போற்றப்படுகிறது.
ஆபூர்வ குணம்;
இது ஆபூர்வமாக பூக்கும் தன்மை கொண்டது. இதில் சில இனங்கள் 14 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கும் தன்மையும் கொண்டுள்ளது.
பூக்கும் தருணத்தில் பின் இரவு காலத்தில் தான் மலர் விரிந்து, சூரிய உதயத்திற்குள் மூடிக்கொள்ளும் தன்மை கொண்டது.
சென்ற ஆண்டில் ஓசூரில் உள்ள எங்கள் புதல்வி வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்களின் படங்களை இத்துடன் வெளியிட்டுள்ளேன். தற்போது இதன் பதியம் எனது இல்ல வீட்டுத்தோட்டத்திலும் இனவிருத்தி செய்துள்ளேன். நன்கு வளர்ந்து வருகிறது. இதனுடைய இனவிருத்தி இலைகளில் உள்ள நரம்புகள் வழியாக வேர்விட்டு இனப்பெருக்கம் செய்வதையும் அறிந்தேன். அதன்படி பதியம் போட்டு வளர்த்து வருகிறேன்.
இந்த அரியவை பூ பூப்பதே அரிய செயலாகும் என்கின்றனா். இந்த பூத்த பூவிற்கு பிரம்மாவிற்கு பூசை செய்வதாகவே கருதி இம் மலருக்கும் பூசை செய்கின்றனர். அவ்வாறு பூசை செய்தால் அவர்களின் விருப்பங்கள் உடனே நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஆக மொத்தத்தில் இது ஒரு அரிய வகை தெய்வீகத் தன்மை மற்றும் மருத்துவ குணம் கொண்டது இந்த பிரம்ம கமலம்.
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக