புதன், 27 பிப்ரவரி, 2019

முக்தி நெறி பயக்கும் சாதனைகள்

முக்தி நெறி பயக்கும் சாதனைகள்

இறைவனுடைய திருவருளை அடைவதற்கு வழிகள் பற்பல. அவற்றுள் , தாசமார்க்கம், சத்புத்திரமார்க்கம் சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கும் தமிழ் திருமுறை வழியாகும் இதுவே திருநெறி வழியான சாஸ்திர வழியில் வழங்குவது, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன என்று சைவ சித்தாந்தம் கூறும் நெறிகளாகும்.
 இதில் நமக்கு வழிகாட்டிய உள்ள நால்வர் பெருமக்கள் கையாண்ட வழியில் சங்கரனை அடைந்து நன் மார்க்கம் பெற்று முத்திய அடைந்தவர்கள் கண்ட நெறியே மேற்கண்ட நெறியாகும்.
திருமுறை காட்டும் வழி 

இதில் தாசமார்க்கம் ஆவாது இறைவனை எசமானனாகவும், தன்னை ( உயிர்கள் ) பணியாளனாகவும் இருந்து வழிபடும் நெறியாகும் இது திருநாவுக்கரசர் காட்டிய நெறி. 
 சத்புத்திரமார்ககம் என்பது, இறைவனை தந்தையாக எண்ணி, வழிபடும் ஆன்மா புத்திரனாகவும் அமைந்து வழிபடும் நெறியாகும்.
  சகமார்க்கம் என்பது, இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும். இது சுந்தரர் காட்டிய வழி.
 சன்மார்ககம் என்பது இறைவனை ஞானாசாரியராக(குருவாக ) கொண்டு வழிபடும் ஆனமா, சீடனாக இருந்து வழிபடும் வழியாகும்
இது மாணிக்கவாசகர் வாழ்ந்து காட்டிய நெறி.

சைவ சித்தாந்தம் காட்டும் திருநெறிகள்
சரியை 
இது புறவவழிபாடு எனப்படும். உருவம் கொண்ட உயிர்கள்  உருவம் கொண்ட இறைவனை புறத்தொழில்களால் இயற்றப்படும் வழிபாடு   சரியையாவது திருக்கோயில் சென்று அலகிடல், மெழுகுதல், பூமாலை தொடுத்தல், அருட்பாக்களால் பாடுதல், தீபமீடுதல், நந்தவனம் அமைத்தல், (உழவாரப்பணிகளால் கோயில்கள் சுத்தம் செய்தல்) சிவனடியார் சேவை, என்பன போன்று இது புறவழிபாடு எனப்படும். இது வே திருமுறைகாட்டிய தாச மார்க்கம் ஆகும். இது நாவுக்கரசர் கையாண்ட வழி இவ்வழியில் செல்வோர் அடையும் பயன் சாலோகம் அதாவது இவரகள் சிவலோகம் கெல்வர் என்கிது சிவஞான சித்தியார்

இதனை அப்பர் பெருமான் தன் பாடலில்

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு
பூமாலை புனைந்தேற்றி புகழ்ந்து பாடி
தலையார கும்பிட்டு கூத்தும் ஆடி
சங்கார சய போற்றி போற்றி என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே என்கிறார்

திருமந்திரப்பாடல்

எளிஅனல் தீபம் இடல்மலர் கொயதல்
அளிதின் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றம் பல்மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான் தாசமார்க்கம்   திருமந்திரம்

திருவிளக்கு ஏற்றுதல், பூகொய்தல், மெழுகுதல், சுத்தம் செய்தல், இறைவனை வாழ்த்தி பாடல், கோயில் மணிகளை ஒலிக்க செய்தல், இறைவனுக்கு திருமுழுக்கு செய்யும் போது அபிசேகப் பொருட்களை அளித்தல் என்ற செயல்கள் சரியை அதாவது தாசமார்க்கம் எனப்படும்

கிரியை பயன்
கிரியை யாவது சரியை நெறியான வழிபாட்டுடன் சிவபூசை செய்தல், அக, புற வழிபாடு செய்தல், வாசனையுடைய மலர் திரவியங்களுடன் அபிசேக ஆராதனை செய்தல், தூப தீபம் காட்டுதல், திருமஞ்சனம் திருவமுது முதலியவற்றை அமைத்துக் கொண்டு பூத சுத்தி, ( உடல் சுத்தி) தான சுத்தி ( இட சுத்தம்), திரவிய சுத்தி ( திரவியங்கள் சுத்தம்) மந்திர சுத்தி , இலிங்க சுத்தி என்ற ஐந்து வகை சுத்திகள் செய்து ஆசனமிட்டு ஆகாவனம் செய்து மூர்த்தியை எழுந்தருளச் செய்து அம் மூர்த்தி எழுந்தருளிய மூர்த்தி மானாகி இறைவனை (முத்திரை , பாவனை ) பாவனை செய்து ஆவாகித்து மெய் அன்போடு அருச்சித்து வழிபட்டு போற்றி விருப்பத்தோடு அக்கினி காரியமும் (வேள்வி யாகம்) செய்து அக புற வழிபடு செய்தல் கிரியைநெறியாகும். இதுவோ திருமுறை வழியான சத்புத்திர மார்க்கம் ( ஞானசம்பந்தர் காட்டிய வழி) இக் கிரயையால் சாதனை செய்வோர் ஈட்டும் பயன் சாமீபமுக்தி அதாவது இறைவன் அருகில் இவர்கள் செல்லத்தக்கவராவர்

திருமுறை காட்டும் பாடல் அப்பர் பாடிய பாடல்
 " சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் 
 தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உ்ன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்ததறியேன் ......

திருமந்திரப்பாடல்
பூசித்தல் வாசித்தல் போற்ற் செபித்திடல்
ஆசற்ற நல்தவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்ட ன்னமும் நீசுத்தி செய்தல்மற்
றாசற்ற சற்புத்ததிரமார்க்கம் ஆகும்.......  திருமந்திரப்பாடல்

யோக நெறி பயன்
யோக நெறியாவது சுந்தரர் காட்டிய தோழ மார்க்கமான சகமார்க்க நெறியாகும். இந்நெறியல் சரியை, கிரியை நெெறியுடன் அக புற வழிபட்டுடன் சேர்தது யோக சாதனை யாவது புலன்களை ஒடுக்கி சுவாசத்தை தடுத்து கும்பித்து மூன்று கோண வடிவுடைய மூலாதாரம் , நாலுகோண வடிவுடைய சுவாதிட்டானம் முதலிய ஆறு ஆதார வழியைஅறிந்து மூலாதாரம் தொடக்கம் அந்தந்த ஆதாரத்திலுள்ள மூர்த்தியை வழிபட்டு மேலே சுழுமுனை வழியாக சென்று கண்டத்தானத்திற்கு மேலே உள்ள சந்திர மண்டலத்திலுள்ள பிரமந்திர தாமரை மலரின் முகமாகிய பூரண சோதி வடிவமாகிய பரம் பொருளை தியானித்து சமாதி கூடியிருப்பதாகும் யோக நிலை.
இதன் மூலம் சாதனையாளர் அடையும்பயன் சாரூப முக்தி அதாவது ஈஸ்வர ரூபம் பெறுவர் ( ஆருரார் இதன் வழியில் தான் ஈஸ்வரர் ரூபம் பெற்று முத்தி பெற்றவர்)

திருமுறை பாடல்

காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லங்கமாக
நேசமே நெய்யும் பாலா நிறைய நீர் அமையஆட்டி
பூசனை ஈசனார்க்கு போற்றி அவிகாட்டரின்மே  .... அப்பர் அடிகள்

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே    ..... சமபந்தர்

ஞானம் 
ஞான சாதனை பயன்
இது திருமுறை கூறும்  மாணிகக வாசகர் கையாண்ட சன்மார்க்க நெறியாகும்

ஞான சாதனையாகிய சன்மார்க்கமாவது கலை ஞானங்கள் எல்லாம் புராணங்கள் தேவதங்கள் சாஸ்திரங்கள் பிற சமய நூல்கள் ஆகிய எல்லாம் கற்றுணர்ந்து பல சமய நூல்கள் சொல்லும் பொருட்கள் உணர்ந்து பதி,பசு, பாசம் எனும் முப்பொருட்கள் உண்மை தெளிந்து அவற்றுள் பசு எனப்படும் ஆன்மாவானது பாசம் என்னும் பந்தத்தை அறுத்து பதி எனும் சிவபரம் பொருளை அடையச் செய்யும் மார்க்கமாகும்.
 சிவஞானத்தின் இயல்பை அறிந்து சிவனோடு கலந்து நிற்கும் நிலையை தருவதாகிய சிவஞானத்தை பெற்ற பெருமையுடையோர் அடையும்பலன் சிவசாயுச்சிய முத்தி ( சிவத்தோடு / உருவமற்ற பேறு பிறப்பற்ற பேறு பெறுவர் 

திருமந்திரப்பாடல்
தெரிசிக்கப் பூசிக்க சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபக்தி செய்யும் குவலயத்தோர்க்குத்
தருமுத்கிச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே

குருவைக்காணுதல் பூசித்தல், நினைத்தல் அவரை தொட்டு கும்பிடுதல், அவர் புகழை பரப்புதல் அவர் திருவடியை சிரமேல் கொள்ளுதல் ஆகிய நெறி சன்மார்க்க நெறி இவ்வழியில் செல்பவர் மோட்சமாகிய இன்பத்தை அனுபவித்து உணர்வர்

திருமுறை பாடல்

எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி எரிசுடராய்
நின்ற இறைவி போற்றி .......... பாேற்றித்திருத்தாண்டகம் அப்பர்

இன்று நன்று நாளை நன்று என்று நின்ற  ......  சம்பந்தர்                தேவாரம்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு தமிழ் திருமுறை மற்றும் 
சிவஞான சித்தியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக