செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014


தமிழ் ஊர்ப் பெயர்கள் சமஸ்கிருதமாக மொழிமாற்றம் செய்யப்பட்டமை சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் எனும் சைவ நாயன்மார்களும் பெரியாழ்வார் முதலான பன்னிரண்டு ஆழ்வார்களும் முறையே தமிழக சிவத்தலங்களும் வைணவத் தலங்களும் நெடுந்தொலைவு நடந்தும் பல்லக்கிலும் பயணம் செய்து ஆங்காங்கு கோயில் உறையும் கடவுளரைப் பாடினர்.அவர் தம் பாடல்கள் பிற்காலத்துத் தேவாரங்களாகவும், திருவாசகமாகவும், திவ்வியப்பிரபந்தமாகவும் தொகுக்கப்பட்டன. அக்காலச் சூழலில் இஃது அரும்பணியாகும். இவ்வாறு தொகுக்கப்பட்டத் தேவாரப் பாடல்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் பாதுகாக்கப்பட்டதாகவும், அவற்றை முதல் இராசராச சோழன் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு) மீட்டெடுக்க முயன்ற போது அவற்றுள் பெரும்பாலானவை கரையானால் அழிக்கப்பட்டிருந்ததாகவும் தமிழ் பக்தி இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. ஓலைச்சுவடிகளில் நானூறு ஆண்டுகளுக்கு மேல் அவை இருப்பது என்பது அரிய செயல். தேவாரப் பாடல்களைக் கோயில் தோறும் ஓதுவார் பாடுவதற்கு முதல் இராசராசனும் இன்னபிற பிற்காலச் சோழ மன்னர்களும் தத்தம் காலத்தில் ஆக்கம் செய்துள்ளனர். இவ்வாக்கம் பக்தி இலக்கியத்திற்குச் செய்யப் பெற்ற மிகப்பெரும் நன்றிச்செயல் என்பதில் ஐயமில்லை. இவ்வாக்கத்தின் ஊடே பாடல் பெற்ற தலங்களின் தனித்தமிழ்ப் பெயர்களும் அங்கிருந்த இறைவனின் தனித்தமிழ்ப் பெயர்களும் இறைவியின் தமிழ்ப் பெயர்களும் தாம் பெற்றிருந்த தமிழ் வடிவத்தை இழந்து சமஸ்கிருத வடிவம் பெற்றன. இது தானே நிகழ்ந்த நிகழ்வன்று. திருத்தலப் பெயர்களில் தமிழ் சமஸ்கிருத மாற்றத்திற்கு சோழர்காலத்தில் மிகுந்த ஆதிக்கம் பெற்றிருந்த உள்ளளுர்ப் பிராமணர்களும் வெளியூர்ப் பிராமணர்களுமே காரணம் ஆவர் என்பதை சோழர்கால அரசியல் வரலாறும் சமுதாய வரலாறும் உறுதிப்படுத்துகின்றன. சோழர், சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த பிராமணர்களை வட இந்தியாவில் இருந்தும் காஷ்மீரில் இருந்தும் தம் ஆட்சி இடமான தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவ்வாறு குடியேற்றப்பட்ட பிராமணர்கள் மட்டும் அல்லாமல் தொடர்ந்து தானாக வந்த பிராமணர்களும் தமிழகத்தில் குடியேறினர். சோழர்காலத்தில் அவர் காலத்திற்கு முன்பிருந்த செங்கற்கோயில்களும் மண சுவர்க் கோயில்களும் கருங்கற்களால் செய்யப்பெற்ற கற்றளிகள் ஆக்கப்பெற்றன. சோழ அரசர்கள் மட்டுமின்றி அவர்தம் அரசியரும் அவர்தம் குடும்பத்தாரும் இவ்வாறு கற்றளிகள் ஆக்கிய தொண்டில் ஈடுபட்டனர். குறிப்பாக முதல் இராசராச சோழனின் வளர்ப்புத் தாயான செம்பியன்மாதேவி பின் வந்த அவனது தமக்கை குந்தவை தேவி ஆகியோர் இத்தகு பணியில் முன்னின்றனர். கோயில்கள் மிகப்பெரிய அளவில் சோழர்காலத்தில் எடுப்பிக்கப்பட்டன. முன்பே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடப் பெற்ற கோயில்கள் அனைத்தும் சோழர் காலத்தில் கற்றளிகள் ஆக்கப்பெற்றன. அக்கோயில்களில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்கு சமஸ்கிருதம் மட்டுமே அறிந்த சிவ பிராமணர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். சிவ பிராமணர்கள் சோழர்கள் காலத்தில் கருவறையில் நுழைந்து பூசை முதலானவற்றைச் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பு கல்வெட்டுக்களில் பேசப்படுகிறது. சமஸ்கிரும் மட்டுமே அறிந்தவர்களும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் அறிந்தவர்களும் கோயிலுள் நுழைந்தமையால் இறைவனைப் பூசை செய்யும் மொழியாக சமஸ்கிருதம் சோழர்காலத்தில் எளிதாக இடம்பெற்றது. ஏனைய ஒடுக்கப்பட்ட சாதியார் கோயிலுல் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கருவறை மூலவரை அருகில் இருந்து வழிபட அனுமதிக்கப்பட வில்லை என்பதற்குத் தில்லை சிற்றம்பலக் கோயிலில் நடராசரை வணங்க நந்தன் என்ற ஒடுக்கப்பட்ட குலத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை சான்றாகும். நந்தனின் போராட்டத்தைப் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் திரு நாளைப் போவார் நயினார் வரலாறு எனும் புராணத்தில் வருணித்துள்ளார். ஆக, சோழர்காலத்தில் சிவன் கோயில்களில் கருவறை பிராமணர்களுக்கு மட்டுமே பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது என்பதும் இறைவனை வழிபடும் மொழியாக சமஸ்கிருதம் ஆயிற்று என்பதும் தெளிவு. சோழருக்கு முன்பு நாட்டை ஆண்ட பல்லவர், ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு குலத்தினர் எனினும் அவர் காலத்திலேயே வட இந்திய குப்தர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேதங்களும் வைதீக முறைகளும் தமிழ்க் கோயில்களில் நுழைந்துவிட்டன. இவை சோழர் காலத்தில் பேராதிக்கம் பெற்றன. சோழர் காலத்தில் வாழ்ந்த பிராமணர்கள் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேதங்களைக் கற்கவும் கோயில் பணி செய்யவும் அரசர்களால் நிலங்கள், மானியமாக வளங்கப்பெற்றன. பிரம்மதேயம் எனும் அருட்கொடைக்குப் பெயரிட்டு பல ஊர்கள் வரியிலி நிலமாக ஆக்கப்பட்டு பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன. பிரம்ம என்றால் பிராமணர். தேயம் என்றால் நாடு. பிராமணருக்கு உரிய நாடு என்பது பொருள். ஆரசன் தன் ஆட்சிக்கு உதவும் முகமாக நன்கு கற்ற பிராமணர்களைப் பிரம்மதேயத்திடம் கேட்டு பெற்றுக்கொள்ளவது உண்டு. எனவே அரசியலில் பிராமணர்களின் பங்கு மிகக் கணிசமாக இருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலனை அமைச்சரவையில் பொறுப்பு வகித்த இரண்டு பிராமண அதிகாரிகள் கொன்று விட்டனர். அவர்களை அடையாளம் கண்டு பின்னாளில் அரசனாகப் பொறுப்பேற்ற முதல் இராசராச சோழன் மரண தண்டனை விதித்துள்ளான் என்பது வரலாறு. பிரம்ம தேயங்களுக்கு அரசன் செய்யும் மிகக் கூடுதலான சலுகைகள் மக்களிடையே சீற்றத்தை உண்டாக்கி உள்ளன. மூன்றாம் இராசராசன் காலத்தில் (1223) தலைச்சங்காடு என்ற பிரம்மதேயக் கிராமத்தில் அவ்வூர் மக்களால் அங்கிருந்த நிலவுரிமைப் பத்திரங்களும் புத்தகங்களும் அழிக்கப்பட்டு கிளர்ச்சி செய்யப்பட்டது. தமிழ்க் கல்விக்குத் தம் நானூறு ஆண்டுகால ஆட்சியில் எந்தச் சிறு முயற்சியும் செய்யாத சோழ மன்னர்கள் நூற்று எழுபத்தோரு பிரம்ம தேயங்களை மானியங்கள் கொடுத்து உதவி செய்ததோடு ஆங்காங்கே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் முதலான நான்கு வேதங்களையும் உபநிடதங்களையும் வியாகரணங்களையும் பிராமணப் பிள்ளைகள் குழந்தைப் பருவத்தில் இருந்து கற்க கடிகை எனும் கல்லூரி வசதி செய்து தந்திருந்தார்கள். தமிழருடைய பண்பாடடிற்குப் பொருந்தாத திரௌபதி கதையைக் கொண்டுள்ள மகாபாரதத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தார்கள். அம்மட்டுமின்றி ஊர் நடுவே உள்ள அம்பலத்தில் மகாபாரதத்தை நன்கு கற்ற வேத பிராமணர் ஒருவர் சமஸ்கிருத மொழி வழியே எடுத்துச் சொல்ல மானியம் வழங்கிஅ து தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுதலையாகத் தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள், திருக்குறள், திழுமந்திரம், சிலப்பதிகாரம் முதலானவற்றைக் கதையாகச் சொல்லவோ, சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கவோ எவ்வித முயற்சியும் செய்யப்பெறவில்லை. காஞசிபுரத்தில் கடிகை என்ற பெயருடைய ஒரு சமஸ்கிருத பல்கலைக்கழகமே பல்லவர் காலத்தில் இருந்து நடத்தப்பட்டது. ஆக, சோழஅரசியலும் சோழ அரசரிடமும் அருகில் இருந்த பெரும் செல்வாக்கைப் பெற்று முன்பே கட்டப்பட்டிருந்த சைவக் கோயில்களுக்கு உள் பூசை செய்யும் உரிமையுடன் சென்ற சமஸ்கிருதம் மட்டும் அறிந்த பிராமணர்கள் அந்தக் கோயிலின் பெரையும் கோயில் மூலவர் பெயரையும் கோயில் இருந்த ஊரின் பெயரையும் மாற்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சமஸ்கிருதமாக்கப்பட்ட ஊர்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ்ப் பெயரைக் கொண்டிருந்தன என்பதும் இன்னும் சொல்லப் போனால் சைவ நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற அவ்வூர்ப் பெயர்கள் மூலவர்கள் பெயர்கள் தூய தமிழிலே இருந்தன என்பதும் அவை சோழர் காலத்தில் தான் மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் எளிதாக ஊகிக்கத்தகும். இவை இவ்வாறு மாற்றம் பெற்றன என்பதற்கு ஓரிரு சான்று: உலகப் புகழ்பெற்ற நடராசர் உருவத்தை மிகப் பழங்காலம் தொட்டுப் பெற்றிருக்கும் கோயில் திருநல்லம் என்ற பெயருடையதாகும். இந்த அழகான ஊர்ப்பெயர் பின்னர் கோனேரி ராஜபுரம் என்று மாற்றம் பெற்று இன்றுவரை தொடர்கிறது. காவிரி ஆற்றுத் தென்கரையில் உள்ள ஊர் திரு ஆவூர் என்பதாகும். இவ்வூர் பசுபதீஸ்வரம் என்று மாற்றப்பட்டு இறைவனின் பெயர் பசுபதீஸ்வரர் என்றும் இறைவி மங்கள நாயகி என்றும் மாற்றம் பெற்றன. தென்னார்க்காடு மாவட்டத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருமுதுகுன்றம் எனும் பெயர் விருத்தாசலம் என்று ஆயிற்று. இறைவனின் பெயர் விருத்தகிரீஸ்வரர் என்றும் இறைவியின் பெயர் விருத்தாம்பிகை என்றும் என்றும் மாற்றம் பெற்றன. காவேரி தென்கரையில் உள்ள சேரி நாட்டுத் திருமறைக்காடு வேதாரண்யம் என்று மாற்றப்பட்டது. திருஞானசம்பந்தரின் தேவாரத்தில் மறைவனம் என்றே இவ்வூர் குறிக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள இறைவனின் பெயர் வேதாரண்யீஸ்வரர். இறைவியின் பழந்தமிழ்ப் பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. அப்பெயர் வேதாரண்ய ஈஸ்வரி என்று மாற்றப்பெற்றது. ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பாண்டிய நாட்டு ஊர் திருப்புத்தூர். இவ்வூர் ஸ்ரீதலீஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் சிவகாமி அம்பாள் என்றும் மாற்றம் பெற்றன. சம்பந்தரின் தேவாரம் திருப்புத்தூர் இறையாரை (272) என்பதாகும். காவிரித் தென்கரையில் உள்ள திரு சோற்றுத் துறை மாற்றம் பெற்று அவ்வூர் அம்மன் அன்னபுரணி என்று ஆக்கப்பெற்றார். ‘‘ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே'' என்பர் ஞானசம்பந்தர் (பா.294). புகழ் பெற்ற மயிலாடுதுறை இறைவன் மயூரநாதர் என்று மாற்றம் பெற்றார். அம்மனின் பெயர் அபயாம்பிகை என்று மாற்றம் பெற்றது. சம்பந்தர் இவ்வூரில் உள்ள இறைவன் மேல் பாடிய தேவாரப்பா பல, மயிலாடுதுறை என்றே முடிகிறது. (பா. 404 – 413) சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள திருவேட்களம் எனச் சம்பந்தரால் பாடப்பெற் திருத்தலம். சம்பந்தர் இங்குள்ள இறைவனை வேட்கள நன்னகராரே எனத் தேவார எண் 415 முதல் 424 வரை பாடுகிறார். வேட்கள நன்னகரார் என்ற திருப்பெயர் பாசுபதேஸ்வரர் என்றும் அம்மன் பெயர் சற்குணாம்பாள் என்றும் மாற்றப் பெற்றன. திருமுதுகுன்றம் எனும் பெயர் ஞானசம்பந்தரால் பாடல் தோறும் முதுகுன்றே முதுகுன்றே என்று (570 இல் இருந்து 578) பாடப்பெற்றது. இப்பெயர் விருத்தாசலம் என்று இறைவனின் பெயர் வேதகரீஸ்வரர் என்றும் மாற்றப்பெற்றன. தொண்டை நாட்டில் உள்ள திருவோத்தூர் எனும் திருத்தலக் கடவைள ஓத்தூர் சடையீர் (581), ஓத்தூர் நாட்டீர் (583) எனத் திருப்பித் திருப்பி சம்பந்தர் பாடியிருப்பார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என்னும் அம்மையின் பெயர் பால குசலாம்பிகை என்றும் மாற்றம் பெற்றன. சென்னைக்கு அண்மையில் உள்ள திருவேற்காட்டு இறைவனை ஞானசம்பந்தர் ஷவேற்காடு உயர்ந்தார்' என்று பாடுவார். இப்பெயர் வேதபுரீஸ்வரர் என இறைவனுக்கும் பாலாம்பிகை என்று இறைவிக்கும் பிற்காலத்து மாற்றப்பெற்றன. சிவஞான போதம் எழுதிய மெய்கண்டதேவரின் ஊர் திருத்தூங்கானை மாடம் என்பதாகும். இப்பெயரை ஒவ்வொரு பாடலிலும் சொல்லி சம்பந்தர் பாடியுள்ளார் (634-644). திருத்தலத்தின் பெயர் பிரள காளேஸ்வரர் என்றும் அம்மனின் பெயர் கடந்தைநாயகி என்றும் மாற்றம் பெற்றன. கிட்டத்தட்ட பெரும்பான்மைத் தலங்கள் தேவார காலத் தமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை எய்தவைக்கப் பெற்றன. ஊர்ப் பெயரையும் உள்ளுர் இறைவனின் பெயரையும் இறைவியின் பெயரையும் நூற்றாண்டுகளாகச் சொல்லிச் சொல்லி வழிபட்ட தமிழ் மக்கள் முற்றும் வேற்று மொழியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட போது எப்படி பொறுத்துக் கொண்டார்கள்? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழர்கள் தமக்கு இழைக்கப்படும் ஆதிக்கச் செயல்களையும், தம் மொழிக்கு இழைக்கப்படும் அழிவுச் செயலையும் எதிர்க்க ஆற்றல் அற்ற கோழைகளாக இருந்தனர் என்பதையே இச்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இவர்கள் இதற்கு அஞ்சி அடங்கும் அடிமைகளையும் பிரம்மதேயமாகப் பெற்றுத் துய்த்தனர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. ஒரு சமயம் அரசன் அறிவித்த பிரம்மதேய கிராமங்களின் எல்லையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்த உழுகுடிகளின் வீடும் நிலமும் இருந்தன. ஊரிமை பெற்ற அம்மக்களின் ஒப்புதல் பெறாமலே சோழ மன்னன் அவர்களது நிலத்தையும் வீட்டையும் பிரம்மதேய அந்தணருக்கு நன்கொடையாக வழங்கி ஊர்க்கோயில் கல்வெட்டிலும் வெட்டச் செய்துவிட்டான். ஆதனால் பாதிப்படைந்த அவ்வூர் மக்கள் வாய் திறக்கவே இல்லை. அப்படியே ஏற்றுக்கொண்டு அங்கு புதிய எஜமானர்களான பிராமணர்களின் நிலத்தில் உழுகுடியாக வேலை செய்தார்கள். இந்து சமயம் 105 கோடி இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம். ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத கால பண்பாட்டில் தோற்றம் பெற்றது. முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது. இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. ஆறு வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன. சனாதன தர்மம் "சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்ட construct களைக் கடந்து, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது. யோக தர்மம் இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வாழ்வின் நான்கு இலக்குகள் இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளையும் அறம், வீடு என்ற கரைகளுக்கு இடையில் ஓடும் இன்பம், பொருள் என்ற நதி எனவும் சிலர் நோக்குவர். இறை தொண்டு / சமூக சேவைஇறை தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களை புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும். இந்து சமய நம்பிக்கைகள் இந்து சமய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு மாளாது என்றாலும், பொதுவான மற்றும் முக்கியமான ஒன்பது நம்பிக்கைகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது. ஒன்பது நம்பிக்கைகள் 1.எங்கெங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே. 2.வேதங்களிலும் ஏனைய மறைகளிலும், ஆகமங்களிலும் இறை உண்மை உறைக்கப்பட்டிருக்கிறது. 3.அண்ட சராசரங்களும், அதிலுள்ள எல்லாமும் 'ஆக்கம் - வாழ்வு - இறப்பு' என்னும் முடிவில்லா சுழலில் தொடர்கின்றன. 4.ஒவ்வொருவரும் அவரது எண்ணம், சொல், செயல் மூலமாக தமது கர்மாவினை செதுக்கும் சிற்பியாக செயல்படுகின்றனர். 5.இறப்பிற்குபின் ஒவ்வொரு ஆத்மாவும் மறுபிறப்பு எடுத்து பிறவிச்சுழலில் தொடரும். ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது. 6.உருவ வழிபாடு, சடங்குகள், பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் மூலமாக தங்கள் கண்ணுக்கு தெரியாத உலகங்களில் இருக்கும் இறைஅம்சங்களுடன் தொடர்பு கொள்வதாக நம்புகிறார்கள். 7.சத்குரு ஒருவரின் வழிநடத்தும் துணையுடன் நல்லொழுக்கம், நன்நடத்தை, யாத்திரை, சுய-வினவல், தியானம் மற்றும் இறைவனுக்கு தன்னை முழுதும் அர்பணித்தல் போன்றவற்றால் எங்கும் நிறைந்த பிரம்மமான இறைவனை அறியலாம். 8.எல்லா உயிர்களும் புனிதமானவை, அன்பு செலுத்தப்பட வேண்டியவை. எந்த உயிருக்கும் மனதாலோ, செயலாலோ தீங்கு விளைவிக்காமல் அஹிம்சைப் பாதையில் நடக்க வேண்டுமென்பதும் இந்துக்களின் நம்பிக்கை. 9.இந்து சமயத்தினைப் போலவே, மற்ற சமயங்களிலும் இறைவனை அடைவதற்கான உண்மையான வழிகளும் உண்டு. இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் இந்து சமயத்தில் வினை அல்லது கருமம் என்பது தொல்வினை, நுகர்வினை அல்லது ஊழ்வினை, வரும் வினை ஆகிய மூவகைப்பட்டது. இம்மூன்றும் சேர்ந்து ஒன்றாகப் பேசப்படும்பொழுது மூவினை எனப்படும். நுகர்வினை இது 'பிராரப்த கர்மம்' என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் நம் கருமம் அல்லது வினை. இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் புராணங்களும் எங்கெல்லாம் 'விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது' என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரமனால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான். ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது' என்று இராமன் இலக்குவனுக்குச்சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். 'ஊழிற்பெருவலி யாவுள' என்று வள்ளுவர் சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான். தொல் வினை ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது.எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் 'ஸஞ்சித கருமம்' என்பர். மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. 'விதியை மதியால் வெல்லலாம்' எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்தஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'லிங்காஷ்டகம்' என்ற சிவபெருமான் தோத்திரத்தில் 'ஸஞ்சித பாப வினாசக லிங்கம்' என்று வெளிப்படையாகவே 'தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. 'கோயில்களுக்குப்போய் திரும்பும் கடவுள் பக்தர்கள் அவர்கள் பிரயாணம் செய்த பேருந்து கவிழ்ந்ததால் உயிரிழந்தார்கள்' போன்ற சில செய்திகளைக் கேட்கும்போது 'புண்ணியம் செய்தவர்க்கு இதுதான் கைமேல் கண்ட பயனா' என்ற கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. செய்த புண்ணியம் தொல்வினையில்தான் பத்து வரவு செய்யப்படும்; ஊழ்வினையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற கூற்றுதான் இதற்கு பதில். வரும் வினை இவ்வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்ற திருப்பாவை வரிகளில் தொல்வினையையும் வரும் வினையையும் தான் சொல்கிறாள் ஆண்டாள். நியாயம் (இந்து தத்துவம்) நியாயம் என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்று. இது ஏரணத்தையும் (அளவையியல், (logic)), அறிவாராய்ச்சியியலையும் (epistemology) முதன்மையாகக் கொள்கிறது. இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌதமர் அல்லது அட்சபாதர் என்பவர் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூல் ஆகும். இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நியாயம் தத்துவப் பிரிவு நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும். தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர், பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின. நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அவை: 1. பிரத்தியட்சம் - நேரடிக்காட்சி 2. அனுமானம் - உய்த்துணர்வு 3. உபமானம் - ஒப்பீடு 4. சப்தம் - உரைச்சான்று என்பனவாகும். நியாய சூத்திரங்கள் என்பவை சட்தரிசனங்கள் எனப்படும் ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாய (பகுத்தறிவு) தரிசனம் பற்றி "அட்சபாத கௌதமர்" என்பவரால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பு. இது கிமு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஏரணம் (தருக்கம்) (Logic) என்பது அறிவடிப்படையில் ஒன்று உண்மை, அது ஏற்கக்கூடியது (ஏலும்) என்று அறியவும்,ஒரு முடிவுக்கு வரவும்,உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய அறிவுத்துறை.ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல்-> ஏர் ஏரணம் என்றாயிற்று ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும் (இயலும் பொருந்தும்), ஏலாது (இயலாது,பொருந்தாது) என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட துறையைக் குறிக்கும். ஆங்கிலத்தில் இதனை Logic (லா’சிக்) என்று கூறுவர். மேற்குலக மெய்யியல் வரலாற்றில் முற்காலத்தில் இலக்கணம், ஏரணம், உரைதிரம் (அணியியல்) ஆகிய மூன்றும் முக்கியமானதாகக் கருதப்பெற்றன. இந்திய மெய்யியல் உலகில் ஏரணம், தருக்கம், நியாயம் முதலான கருத்தியல் துறைகள் இருந்தன. மேற்குலக மெய்யியலில் லாச்யிக் (ஏரணம்) என்பது கிரேக்க மொழிச் சொல்லாகிய லோகோசு என்பதில் இருந்து பெற்றது. இதன் பொருள் “சொல், எண்ணம், சொற்கருத்தாடல், காரணம், கொள்கை” "என்பதாகும். அரிசுட்டாட்டில் வளர்த்தெடுத்த சில்லாஜிஸ்ட்டிக் (syllogistic) அல்லது ஏரண முறையீடு என்னும் முறை 19 ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் முன்னணியில் இருந்தது. அதன் பின்னர் கணிதத்தின் அடித்தளங்கள் பற்றி கூர்ந்தெண்ணிய போது குறியீட்டு ஏரணம் அல்லது கணித ஏரணம் என்னும் துறை தோன்றியது. 1879 இல் ஃவிரெகெ (Frege) எழுதிய எழுத்து என்று பொருள் படும் பெக்ரிஃவ்ஷ்ரிஃவ்ட் (Begriffsschrift) என்னும் தலைப்பில் குறியீடுகள் இட்டுத் துல்லியமாய் ஏரணக் கொள்கைகள் பற்றி விளக்கும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இதுவே தற்கால ஏரணத்தின் தொடக்கம் எனலாம். இந்நூலை குறியீடு மொழியில், எண்கணித முறையை ஒற்றிய, தூய எண்ணங்கள் என்னும் துணைத்தலைப்புடன் வெளியிட்டார். 1903 இல் ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஃகெட் மற்றும் பெர்ட்ரண்டு ரசல் ஆகிய இருவரும் சேர்ந்து பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica)[4](கணித கருதுகோள்கள்) என்னும் புகழ்பெற்ற நூலை எழுதி கணிதத்தின் அடித்தள உண்மைகளை குறியீட்டு ஏரண முறைகளின் படி முதற்கோள்கள் (axioms) மற்றும் முடிவுகொள் விதிகளால் அடைய முற்பட்டு பல உண்மைகளை நிறுவினார்கள்.1931 இல் கியோடல் (Gödel) என்பார் முடிவுடைய எண்ணிக்கையில் முதற்கோள்கள் இருந்தால் குழப்பம் தராத (ஐயத்திற்கு இடம்தரா) உறுதியான முடிவுகளை ஏரண முறைப்படி அடைய இயலாது என்று நிறுவினார். இதன் பயனாய் இவ்வகையான வழிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. வேத தத்துவ தரிசனங்கள் வேத தத்துவ தரிசனங்கள் எனப்படுபவை வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நோக்குகள் ஆகும். விடயங்களை நோக்கும் வழிகள் எனப் பொருள்படும் தரிசனங்கள் ஆறு வகைகளாக உள்ளன. இவற்றை, உண்மைப் பொருள் பற்றிய ஆறு விதமான விளக்கங்கள் எனக் கூறலாம். இவை ஒவ்வொன்றும், பல்வேறு காலப்பகுதிகளிலும் எழுதப்பட்ட வேதப் பகுதிகளில் சிதறிக்கிடக்கும் கருத்துக்களை, தங்களுக்கேயுரிய முறைகளில் ஒழுங்கு படுத்தியும், ஒருமுகப்படுத்தியும் தருகின்றன. இந்த ஒவ்வொரு பிரிவையும் நிறுவியவர்களாக அறியப்படும் ரிஷிகள், இவற்றுக்குரிய சூத்திர நூல்களையும் இயற்றியுள்ளார்கள். ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு: 1. நியாயம் - கௌதமர் 2. வைசேடிகம் - கணாதர் 3. சாங்கியம் - கபிலர் 4. யோகம் - பதஞ்சலி 5. மீமாம்சை (பூர்வ மீமாம்சை) - ஜைமினி 6. வேதாந்தம் (உத்தர மீமாம்சை) பாதராயனர் இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆறு தரிசனங்களும், இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: 1. நியாயம் - வைசேடிகம் 2. சாங்கியம் - யோகம் 3. மீமாம்சை - வேதாந்தம் இந்து சமயத்தின் பிரிவுகள். பொதுவாக இந்து சமயம் எனப்படும் தொன்று தொட்டு வரும் சமயத்தில் உள்ள பற்பல பிரிவுகள் உண்டு. ஆதி சங்கரர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தொகுத்தவையாகக் கொள்ளப்படும் ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு. இவை அனைத்தும் வடமொழி மரபு வழியான பிரிவுகள். தமிழ் மரபிலும், பிற இந்தியப் பழங்குடிகளின் மரபிலும் பற்பல வேறுபாடுகள் உண்டு. தமிழ் மரபில், இந்தியப் பழங்குடிகள் மரபில் உள்ள இறைக்கொள்கைகள் ஆய்வாளர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பரவலாக அறியப்படாமல் உள்ளன. சைவம் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. வைணவம் விஷ்ணுவையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு. சாக்தம் சக்தியை வணங்கும் சமயப் பிரிவு. ஸ்மார்த்தம் சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் சமயப் பிரிவு. கௌமாரம் முருகனை வணங்கும் சமயப் பிரிவு (குமரனை வணங்குவது கௌமாரம்). சௌரம் சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். காணாபத்தியம் விநாயகரை வணங்கும் சமயப் பிரிவு. சைவ சமயம், சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இம்மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை. சைவம் முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு. சைவம் பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது. சைவம் வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம். சைவம் பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை. 1 சைவ சமயத்தின் தோற்றம் 2 சைவத்தின் மூன்று பிரிவுகள் 3 சைவ வழிபாட்டின் பண்புகள் சைவ சமயத்தின் தோற்றம் மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். அதேவேளை வேறு சில ஆதாரங்கள் சைவ சமயம் கி.பி. மத்திய இந்தியாவில் தோன்றி பின்னர் தென்னிந்தியாவுக்கு பரவியாதாக தெரிவிக்கின்றன. சைவத்தின் மூன்று பிரிவுகள்இன்று நிலவும் சைவத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். காஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்டது. வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள். காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகரித்தது. வீர சைவம் என்பது சைவ சமயப் பிரிவுகளில் ஒன்றாகும். இது இலிங்காயதமதம், இலிங்காயதம், சக்தி விசிஷ்டாத்வைதம் என்றும் வழங்கப்படுகின்றது.வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. ஒவ்வொரு இலிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். சித்தாந்த சைவம் சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம். சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்க வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர். தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன.சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன. தத்துவ அடிப்படைகள் 1. பதி (இறைவன்) 2. பசு (உயிர்) 3. பாசம் (மலங்கள்) ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது. இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன். உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும். மலங்கள்: மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது. சித்தாந்தமும் வேதாந்தமும் "உமாபதி சிவம் நெஞ்சுவிடுதூது என்னும் சிந்தாந்த பிரபந்தத்தில் உலகாயதம், வேதாந்தம், பெளத்தம், சமணம், மீமாம்சகம் ஆகிய தத்துவங்களைச் சித்தாந்தப் பார்வையில் மறுத்துக் கூறிச் சித்தாந்த சைவத்தினை நிலைநாட்டியுள்ளார்." சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும் சைவ சித்தாந்தம் சாதியமைப்பை பெருமாபாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது. இது அது தோற்றம் கண்ட காலத்தில் (சோழர் காலம்) இருந்தே இருந்து வருகின்றது. பிராமணர் அல்லாதவர்கள் இந்தக் கட்டமைப்பில் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்களாகவும், மதக்குருமார்களான பிராமணர்கள் சடங்கு ரீதியில் முக்கியத்துவம் பெறுவர்களாகவும் இருக்கின்றார்கள். இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது. சைவ வழிபாட்டின் பண்புகள் பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டுப் பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும். சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும். சைவக் கிரியை சைவக் கிரியைகள் என்பது சிவநெறியில் ஒழுகுவோர் மந்திரம், தந்திரம், பாவனைகளுடன் செய்யும் செயல்கள் அல்லது கருமங்களைக் குறிக்கும். கிரியை என்ற சைவ சமய கலைச்சொல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுஷ்டிக்கப்படும் நியதிச்செயல்கள் என்னும் கருத்தில் சமயப் பிரமாண நூல்களில் வழங்கி வருகின்றது. கருமம், சடங்கு, பூசை என்பனவும் அதே பொருளைத்தரும் சொற்கள் ஆகும். சைவசமயிகளுக்குரிய இத்தகைய கிரியைகள் பற்றி, சிவாகமங்களும் அவற்றைச் சார்ந்த உபாகமங்களும் இவற்றின் அடிப்படையில் எழுந்த பத்ததிகளும் விரித்துக் கூறுகின்றன. கிரியை செய்வதால் உண்டாகும் பயன் இச்சைவக் கிரியைகளைச் செய்வதால் இம்மையில் அறம், பொருள், இன்ப வாழ்வுகளைப் பெற்று வாழ்தலும், மறுமையில் வீடு பேற்றினைப் பெறுதலுமாம். கிரியைகளை முறைப்படி செய்வதனால் மனத்தூய்மை உண்டாகும்; மனத்தூய்மையினால் பரதருமங்கைகூடும். பரதருமத்தினால் ஐம்பொறி அடக்கமாகிய சாந்தி உண்டாகும் சாந்தியினால் யோகநெறி கைகூடும் யோகத்தினால் தத்துவ ஞானங் கைகூடும் தத்துவ ஞானத்தினால் பரமுத்தி சித்திக்கும். ஆகவே கிரியைகள் ஞானத்திற்கு மூலகாரணமாய் வீடு பேறாகிய பரமுத்திப்பேற்றை தரும். சைவக் கிரியை ஆன்மார்த்தக் கிரியை, பரார்த்தக் கிரியை என இரு வகைப்படும். ஆன்மார்த்த கிரியையானது பூர்வக் கிரியை, அபரக் கிரியை என இரு வகைப்படும். ஆன்மார்த்தம் என்பது தன் நன்மை கருதிச் செய்யப்படும் சந்தியாவந்தனம், சிவபூசை போன்ற கிரியைகளைக் குறிக்கும். பரார்த்தம் என்பது பிறர் நன்மை கருத்திச் செய்யப்படும் ஆலய வழிபாடுகளைக் குறிக்கும். ஆன்மார்த்தக் கிரியையின் பிரிவுகள் பூர்வக் கிரியை ஓர் உயிர் தாயின் கற்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுங் கிரியைகளைக் குறிக்கும். அபரக் கிரியை மரண சமயம் முதல் சபிண்டீகரணம் வரையும், அதன் மேல் வருட சிராத்தம், மகாளயம், அமாவாசை தர்ப்பணம் வரையில் விரிந்து செல்கின்றது. ஆன்மார்த்தக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் பிரதான இரு பிரிவுகளில் ஒன்று. தன் நன்மை கருதிச் செய்யப்படும் சந்தியாவந்தனம், சிவபூசை போன்ற கிரியைகளைக் குறிக்கும். நைமித்தியம்: தீட்சை, ஆசாரியாபிஷேகம், விரத உத்தியாபனம், அந்தியெட்டி முதலியவற்றைக் குறிக்கும். காமியம்: விரதம், சாந்தி முதலியவற்றைக் குறிக்கும். ஆன்மார்த்தக் கிரியையின் அங்கங்கள் ஆன்மார்த்தக் கிரியைகளின் அங்கங்களான பூர்வக் கிரியை வகைக்குள் இருது சங்கமனம், கர்ணவேதனம், நாம கரணம், அன்னப் பிராசனம், வித்தியாரம்பம், உபநயனம், விவாகம், தீட்சை, சந்தியாவந்தனம், ஆசாரியாபிஷேகம், சிவபூசை என்பவை காணப்படுகின்றன. பரார்த்தக் கிரியையானது நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை என இரு வகைப்படும் . நித்தியம் என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் நித்திய பூசையைக் குறிக்கும். இது ஆலயங்களின் அமைப்புக்கும் மரபுக்கும் ஏற்ப ஒரு காலப் பூசை தொடக்கம் ஆறு காலப் பூசை, பன்னிரு காலப் பூசை (திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறுவது) என விரிந்து செல்லும். நைமித்தியம் என்பது நித்திய பூசை வழிபாடுகளில் ஏற்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்காக நடைபெறும் விஷேட பூசைகள், உற்சவங்களைக் குறிக்கும். பரார்த்தக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் பிரதான இரு பிரிவுகளில் ஒன்று. எல்லா உயிர்களினதும் நன்மை கருதி இறைவனை வழிபடுவதற்காகத் திருக்கோவில் அமைத்தல் முதலான கிரியைகளைக் குறிக்கும். இது கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உற்சவாந்தம், உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம் என்பது திருக்கோவில் அமைப்பதற்குரிய இடத்தை ஆராய்ந்து தெர்ந்தெடுத்து பரிசோதித்து பண்படுத்தி நாட்கல் நாட்டித் திருக்கோவில் அமைத்து, மூர்த்தியை அமைத்து பிரதிஷ்டை செய்து முடிக்கும் வரையுள்ள கிரியைகளின் தொகுதியாகும். பிரதிஷ்டாதி உற்சவாந்தம் என்பது பிரதிஷ்டை நடைபெற்றபின் நாள்தோறும் செய்ய வேண்டிய நித்திய பூசை, அவற்றின் காலங்கள், நித்திய பூசை முடிவில் செய்யப்படும் உற்சவங்கள் முதலிய கிரியைகளின் தொகுப்பாகும். உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என்பது நித்திய பூஜை முதலியவற்றில் ஏற்படும் குற்றம் குறைகளை நீக்குவதற்காக செய்யப்படும் நைமித்திய உற்சவங்கள் அவற்றின் வகைகள் தொடங்கும் முறைகள் என்பவற்றின் தொகுதியாகும். பரார்த்தக் கிரியையின் வகைகள் பரார்த்தக் கிரியைகளை நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை என இரு வகையாகப் பிரிக்கலாம். நித்தியக் கிரியை என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் கிரியைகளைக் குறிக்கும். உதாரணமாக நித்திய பூஜை, நித்திய அக்கினிகார்யம், நித்திய பலி, நித்திய உற்சவம் என்பனவாகும். நைமித்தியக் கிரியை என்பது நித்திய பூசையில் உண்டாகும் குறைகளை நீக்குதல் முதலான காரணங்கள் கொண்டு செய்யப்படும் விஷேட பூசைகள், உற்சவங்கள் என்பன நைமித்தியக் கிரியை என அழைக்கப்படும். உதாரணமாக மகோற்சவம், கும்பாபிஷேகம், நவராத்திரி என்பவற்றைக் குறிக்கும். காமியக் கிரியை தாம் விரும்பிய பலனை எதிர்பார்த்து செய்யப்படும் கிரியைகளாகிய அபிஷேகம், அர்ச்சனை முதலியன காமியக் கிரியை எனப்படும். பூர்வக் கிரியைகள் தீட்சை தீட்சை சிவாகமங்களில் கூறப்பட்ட சைவக் கிரியைகளில் ஒன்று. சிவபெருமானைத் தியானித்து விதிப்படி வழிபடுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை ஆகும். சைவ சமயிகள் சமயப் பிரவேசம் செய்வதற்காக வழங்கப்படும் கிரியை இதுவாகும். அருட்பாக்களை ஓதுவதற்கும், புராணங்களைப் படிப்பதற்கும், ஞான சாத்திரங்களைக் கேட்டல், படித்தலுக்கும், பிரதிஷ்டை, விவாகம், அந்தியேட்டி, சிரார்த்தம் போன்ற நம் சமயக் கிரியைகளைச் செய்தவற்கும், செய்விப்பதற்கும் தகுதியுடையவர்கள் தீட்சை பெற்றவர்களே. தீட்சை என்பதன் பொருளும் பயனும் 'தீக்ஷா' என்னும் சொல் 'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது. நமது முயற்சி, உடம்பின் உள்ளும் புறமும் உள்ள அழுக்குளை நீக்குதலும், ஆகாரம் ஊட்டிச் சுத்தமாய் வளர்த்தலுமாம். நீரினால் வெளி உடம்மைக் கழுவிச் சுத்தம் செய்யலாம்; உள்ளிருக்கும் உடம்பு சூக்கும உடம்பு; அதில் உள்ள தீய அழுக்குகளை, ஆசமனம், மந்திர செபம், அகமர்ஷணம் முதலிய அனுட்டானக் கிரியைகளினாலேயே போக்க முடியும். இந்த உண்மைகளை அறிந்தே நம் சமயத்தில் ஏழு வயதில் தீட்சை பெற வேண்டும் என்ற விதி சொல்லப்பட்டுள்ளது. ஏனெனலில் கால் கைகளை அடக்கி ஆளும் பக்குவம், மனதில் இச்சைகள் தோன்றி விருத்தியாகக் கூடிய காலமும், அப்பருவகாலத்திலிருந்துதான் உதிக்கின்றன என்பது கருதியே. அவ்வயதில் தீட்சை பெற்றிருந்தால், அனுட்டான சாதனைகளினால், தேகத்தையும் மனதையும் அடக்கி நம் வசப்படுத்தவும், தீச் செயல்கள் தோன்றாமலும் செய்ய முடியும். படிப்படியாய்ச் சொல்லப்பட்ட தீட்சைகளைப் பெற்று அந்தந்த தீட்சைகளுக்குரிய கிரியைகளையும் சாதனங்களையும் அப்பியாசப்படுத்திவர, இறைவன் திருவடியடைதல் இலகுவாகும். தீட்சை பெற தகுதியுடையவர்கள்சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தீட்சை பெற தகுதியுடையவர்கள். அதுமட்டுமல்லாது ஏனைய மதத்தவர்களும் தீட்சை பெற்று சைவசமயிகளாகலாம். மனிதர்கள் மாத்திரமன்றி புல், பூண்டு, பறவை, மிருகங்களுக்கும் தீட்சை செய்யப்படுகின்றன. உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தார் என்பதை நாம் அறிகின்றோம். ஆசாரியனுடைய ஞானநிலை எவ்வளவோ அவ்வளவு ஆற்றலால் அவரால் தீட்சிக்கப்படும் ஆன்மாவிற்கு மல மாசு நீங்கித் தூய்மை உண்டாகும். தீட்சை பெற விரும்புவோர் ஒழுக்க சீலராக இருப்பதோடு பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் கொண்டவராக இருத்தல் வேண்டும். உலகப் பற்றுக்களைக் குறைத்துத் தியானத்தில் ஈடுபடுகின்றவராக இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். தீட்சை அளிக்கும் சிவாசாரியாரின் தகமைகள் சைவ மக்கள் சைவ சமய ஆசாரங்களை அனுஷ்டிப்பதற்கு வேண்டிய தகுதியை அளிப்பது தீட்சை ஆகும். இத் தீட்சையை அளிக்கின்ற சிவாசாரியார் சமய தீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை, ஆசார்யாபிஷேகம் எனும் நான்கையும் பெற்றவாராக இருக்க வேண்டும் என சிவாகமங்கள் கூறுகின்றன. சமய தீட்சை சைவசமயி ஆகும் உரிமையைத் தருவது சமய தீட்சை எனப்படுகின்றது. சமய தீட்சை பெற்றவன் "சமயி" எனப் பெயர் பெறுகிறான். சமய தீட்சை பெறுவதால் சிவனின் சிறப்பு மூமந்திரமாகிய திருவைந்தெழுத்தை (சிவாய நம: எனும் பஞ்சாட்சரத்தை) ஸ்தூலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சரியா பாதத்தில் நிற்கும் உரிமையும் கிட்டும். இதன் மூலம் சிவனின் முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும். விஷேட தீட்சை சிவலிங்க பூசை செய்வதற்கான தகுதியளிப்பது விஷேட தீட்சை ஆகும். சமய தீட்சை பெற்று அதன் வழி நிற்கும் போது ஆணவ மலம் வலுவிலக்க, சிவனைச் சிவலிங்க வடிவிற் கண்டு வழிபடுதலாகிய கிரியைநெறியில் விருப்பு உண்டாக, முன்னர் சமய தீட்சை பெற்றுக்கொண்ட ஆசாரியரிடமோ அல்லது வேறொருவரிடமோ விஷேட தீட்சை பெறலாம். இதன் மூலம் சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை, புறப்பூசை செய்யும் முறைகளோடு யோக முறைகளைச் செய்யும் உரிமையையும் பெறலாம். நிர்வாண தீட்சை சமய தீட்சையும், விஷேட தீட்சையும் பெற்றவர்கள் இறுதியாகப் பெறும் தீட்சை நிர்வாண தீட்சை எனப்படும். இதன் மூலம் அத்துவாக்களை அடக்கும் கலையும், முப்பொருள் உண்மையை உணரும் தன்மையும், உயிரை ஞான நிலைக்கு உய்யச் செய்யும் நிலையும் ஞானாசிரியனிடமிருந்து கிடைக்கும். நிர்வாண தீட்சை சத்தியோ நிர்வாண தீட்சை, அசத்தியோ நிர்வாண தீட்சை என இரு வகைப்படும். சத்தியோ நிர்வாண தீட்சை முற்றாக பற்றற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உடனே முத்திப்பேறு கிடைக்கும் வகையில் செய்யப்படுவது ஆகும். அசத்தியோ நிர்வாண தீட்சை ஆன்மாக்கள் பிரார்த்த வினைப்பயனை அனுபவித்து முடிந்த பின் அவை முத்திப்பேறு அடையும் வகையில் செய்யப்படுவது ஆகும். ஆசாரிய அபிடேகம் நிர்வாண தீட்சை பெற்ற ஒருவர் குருப்பட்டம் தரிப்பதற்காகச் செய்யப்படும் கிரியை ஆசாரிய அபிடேகம் ஆகும். குருப்பட்டம் பெற்றோர் பிறருக்குத் தீட்சை கொடுக்கவும், பரார்த்த பூசை செய்யவும் தகுதியைப் பெறுகின்றார். இவர் சிவாசாரியார் எனவம் அழைக்கப்படுவார். சிவாசாரியாருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் திருமணம் முடித்து இல்லறம் நடத்துபவராக இருத்தல். உடல், உளக் குற்றமற்றவராக இருத்தல். கல்வியறிவும் ஒழுக்க மேம்பாடும் மிக்கவராக இருத்தல். சைவ நாற்பாதங்களில் பயிற்சியுடையோராயிருத்தல். சீடர்களுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும் சைவப் பாரம்பரிய நெறிகளையும் போதிக்கக் கூடியவராயிருத்தல். பதினாறு தொடக்கம் 70 வயதிற்குட்படோராயிருத்தல். தீட்சையின் வகைகள் தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும். நயன தீட்சை குரு தன்னை சிவாமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும். பரிச தீட்சை குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும். வாசக தீட்சை குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும். மானச தீட்சை குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும். சாத்திர தீட்சை குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும். யோக தீட்சை குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும். ஒளத்திரி தீட்சை பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. சிவன் திராவிடர்களின் கடவுளெனவும், சைவர்களின் தலைவனாகவும் வழிபடக்கூடிய கடவுள் வடிவமே சிவன். சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர்.முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது.சிவனை வழிபட்டோர்கள் உமா தேவி, உருத்திரன், திருமால், பிரம்மன், பிள்ளையார், முருகன், தேவர் முதல் இராவணன் வரை.எல்லோரும் அவன் அடிமை.சிவன் உருவாய் (நடராசன்), அருவுருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்குக் காட்சி அளிக்கிறார்.சிவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை.இருவினையும் இல்லை,அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றா னமருங்கோயில்- சம்பந்தர்சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும். சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு. சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்கு கீழ்கண்ட பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். சி - சிவனைக் குறிக்கும் வா- அருளைக் குறிக்கும். ய - ஆன்மாவைக் குறிக்கும் ந - திரோதத்தைக் குறிக்கும் ம - மலமாயைக் குறிக்கும் இலிங்கம் சிவனது அரு உருவத்திருமேனிவடிவாகும். சிவலிங்கம்என்பது மாபெரும் சமயமான சைவத்தின் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வரிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன. முன்னோர்களின் நினைவாக நடுகல் பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் பல பகுதிகளில் சைவர்களின் நடுகற்கற்கள் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள். லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண்குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத அகராதி 7 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள், லிங்கம் பல வகைப்படும் முகலிங்கம்,சகஸ்ர லிங்கம், தாராலிங்கம்,சுயம்பு லிங்கம் Melakadambur என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது இறைவனின் வடிவம் நோய்க்கான அறிகுறி ஒரு புள்ளி அல்லது மறு சான்று அல்லது சான்றுக்கான வழிமுறைவிளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று. பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு. என்பனவும் அடங்கும். மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது சிவலிங்கங்களின் வகைகள் அண்டமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமானுக்கு உருவம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை. இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் "சிவன்" என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. வடிவம் எப்படி ஏற்பட்டாலும் இன்றைக்கு முழுமுதல் வழிபாட்டில், சிவலிங்க வழிபாடும், நடராஜர் வழிபாடும், சோமாஸ்கந்தர் வழிபாடும் சிறப்பாகப் பேசப் படுகிறது. இறைவனைக் கண்ணார, மனதாரக் கண்ட ஞானியர்கள் கூற்றுப் படி இறைவனின் வடிவங்களை உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் உருவம் ஆன கருத்தின் படி பிரம்மா என்னும் நான்முகனும், திருமால் என்னும் காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவும், ருத்ரன், மகேசன் என்னும் அழித்து அருளும் வடிவங்களும் அடங்கும். அருவம் என்பது வடிவே இல்லாதது. இதில் அடங்குபவை சிவம், சக்தி,நாதம், பிந்து ஆகியவை. இந்த நான்கையும் வைத்து இறைவனை யோக முறையில் பூசித்தவர்களே சித்தர்கள் எனப் படுவார்கள். என்றாலும் சாதாரண மானிடர் ஆன நமக்கு ஒரு உருவம் வேண்டும் இல்லையா? அப்படி உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு. இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு. சில சிவன் கோயில்களிலே லிங்கத்தில் முகம் இருக்கும். சிலவற்றில் முகம் இருக்காது. இந்த முகலிங்கங்கள், மற்றும் லிங்கங்கள் பற்றி வரும் நாட்களில் பார்ப்போம். பொதுவாக லிங்கங்களுக்கு மூன்று பகுதி உண்டு. அவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பொதுவாய்க் குறித்தாலும், பஞ்ச பூதங்களில் முக்கியமான பூமி-பிரம்மா, நீர்-விஷ்ணு, அக்னி-சிவன், ஆகிய மூன்றையுமே சுட்டிக் காட்டுகிறது, என ஆன்றோர் கூற்று. இயற்கையிலும், இறை சக்தியே நிரம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இவ்வாறு சொல்கின்றார்கள், இந்த லிங்க வடிவிலே அடிப்பகுதியான பிரம்ம பாகம் பூமியிலே மறைந்து இருக்கும் வண்ணமும், ஆவுடை என்று சொல்லப் படும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம், அபிஷேகங்களை ஏற்கும் இடமாகவும், பாணமாகிய மேல் பகுதிதான் மேலோங்கி நின்று ஜோதி போலவும் காட்சி அளிக்கின்றது. இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு. முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும். இப்படிப் பட்ட லிங்கங்கள் நம் நாட்டை விட நேபாளத்திலேயே அதிகம் காணப் படுகின்றது. முகலிங்கம்: தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன. லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும். இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு. இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை. அம்பிகை தன் தவங்களின் போது, தன் வழிபாடலுக்கு என ஸ்தாபித்தவை "தேவிக லிங்கம்" என்று சொல்லப் படும். இதிலே தேவர்கள் பூஜித்த லிங்கம், "திவ்யலிங்கம்" அல்லது "தெய்வ லிங்கம்" எனச் சொல்லப் படுகின்றது. இந்திரன் பூஜித்தது இந்திரலிங்கம், வருணன் பூஜித்தது, வருணலிங்கம், வாயு பூஜித்தது வாயுலிங்கம் என வகைப் படுத்தப் படுகின்றது. மனிதனாக ராமன் வாழ்ந்தபோது ஸ்தாபிதம் செய்தது, பின்னர் பூஜித்ததும், இன்றளவும் அனைவரும் வழிபட்டு வருவதும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியான "மானுட லிங்கம்" ஆகும். முனிவர்களால் பூஜிக்கப் பட்டது "ஆர்ஷிக லிங்கம்" எனவும், அசுரர்களால் பூஜிக்கப் பட்டது, "ராட்சச லிங்கம்" எனவும் சொல்லப் படுகின்றது. முகலிங்கங்கள் பற்றிய விளக்கத்துக்கு முன்னர் லிங்கம் பற்றிய விளக்கம் சரியாக் கொடுக்கலைனு தோணியதாலே இந்த விளக்கம். முக லிங்கங்கள் பற்றிப் படங்கள் கிடைத்ததும் ஞாயிறு அன்றோ அல்லது திங்கள் அன்றோ பதிவு எழுதுகிறேன். முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது. இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது. பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது. இப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், தன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் "தத் புருஷம்" என அழைக்கப் படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும். தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் ஆனது "அகோரம்" என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது. மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் "சத்யஜோதம்" என அழைக்கப் படும். இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும். வடக்கே பார்க்கும் முகம் "வாமதேவம்" எனப் படும், இது சிவந்த நிறத்தில் காணப் படும். ஈசான்ய திசை என்று அழைக்கப் படும் வட கிழக்குத் திசையில் காணப் படுவதோ, "ஈசான்ய முகம்" என்றே அழைக்கப் படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது. ஒரு முகலிங்கம்: முதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள். தென்மேற்கு மூலையை "நிருதி" என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது. ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது. இருமுகலிங்கம்: இரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். இவை "ம்ந்திரலிங்கங்கள்" எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் எனச் சொல்லப் படுகிறது. இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் "விருட்சி" என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம். மூன்று முக லிங்கம்: அடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது. கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும். திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம். சதுர்முகலிங்கம்: சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் "வேத லிங்கம்" என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை என்று சொல்வார்கள். நேபாளத்தின் பசுபதி நாதர் கோயிலில் நம் கண்ணுக்குத் தெரிவது சதுர்முக லிங்கம் தான் என்றாலும், அவற்றுக்கும் மேல் நோக்கிய ஒரு முகமும், கீழ் நோக்கிய ஒரு முகமும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. ஆனால் நேபாள சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகம் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு. ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித் தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு. இது தவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளதாய்த் தெரிய வருகிறது. இந்த லிங்கங்களுக்கு நான்கு முக ருத்திராட்சம் அணிவித்து நான்கு வில்வதளங்களால் வழிபடுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வழிபடுவோருக்குப் பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்கிலும் புகழ் வாய்ந்தவராய்ச் சொல்லப் படுவார்கள். ஐந்து முகலிங்கம்: ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானனக்காவில் கோவில் அருகே "பஞ்சமுகேஸ்வரர் கோயில்" என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது. திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் "ஆகமம்" இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் "சிவாகம லிங்கம்' எனவும் சொல்வார்கள். ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுதல் விசேஷம் எனச் சொல்கின்றனர். ஆறுமுகலிங்கம்: பஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது. இது "அதோ முகம்" என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும். இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமே எனவும் சொல்லப் படுகிறது. ஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு. திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர்.காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்: "கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும் தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!" (ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று)எனக் கூறுகின்றார். சதாசிவ வடிவத்துக்கு முகம் ஐந்து, திருப்பாதங்கள் இரண்டு, பத்துக் கைகள், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களாக மொத்தம் பதினைந்து கண்கள் இவற்றோடு தாமரைப் பீடத்தில் நிற்பதாய்க் கூறுகின்றார். சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள் இருப்பதாய் அறிகின்றோம். சிவ ஆகமங்களை அந்த ஐந்து முகங்களில் இருந்தும் உபதேசிக்கும் பொருட்டு ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதாயும் ஆன்றோர் கூறுகின்றனர். ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத் "தத்புருஷம்" என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், "சத்யோ ஜாதம்" என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், "அகோர முகம்" என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எனவும், "வாமதேவம்" என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் "ஈசானம்" எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம். ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.நான்கு திக்குகளிலும் உள்ள நான்கு முகங்களாலும் முறையே ஐந்து வீதம் 20 ஆகமங்களும், உச்சியில் உள்ள ஈசான முகம் 8 ஆகமங்களையும் அருளியதாய்ச் சொல்லப் படுகின்றது. மேலும் இந்த மேற்கண்ட ஐந்து மந்திரங்களாலேயே ஈசனின் உடல் ஆனது என்றும் அறிகின்றோம். சாமானியமான நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வடிவம் கொண்ட இந்த உடலில் உள்ள ஐந்து வித சக்திகளே, ஈசனின் ஐந்தொழில்களுக்கும் காரணமாகவும், காரியமாகவும் ஆகின்றது. உலகுக்கு எல்லாம் ஈசனாய் இருந்து ஞானத்தை அந்த ஞான வடிவான ஈசன் அருளுவதால் இவரை ஈசான மூர்த்தி, அகோர மூர்த்தி, வாமதேவர், சத்யோஜாதர், சதாசிவம் என்று எல்லாம் அழைக்கின்றோம். இவரை ஐந்து மட்டுமில்லாமல் 25 முகங்கள் வரையும் கொண்டவராயும் சித்திரிக்கப் படுகின்றார். ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலிலும் சதாசிவ மூர்த்தியின் வடிவங்கள் காணப் படுகின்றது. சென்னை ம்யூசியத்தில் இவரின் செம்புத் திருமேனி காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளதாயும் அறிய வருகிறது. ஜோதிர்லிங்கம். ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர்லிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள் இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரெண்டு சோதி இலிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை (தமிழ்நாடு) அருணாச்சலமே மூல சிவதலம். 1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்) 2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா) 3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்) 4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்) 5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராட்டிரம்) 6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராட்டிரம்) 7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு) 8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராட்டிரம்) 9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்) 10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்) 11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்) 12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்) இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கத் தலங்கள் 1. சோம்நாத் கோயில், பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, குஜராத். சோம்நாத் கோயில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சௌராஷ்டிராவின் வேராவல் என்னும் இடத்துக்கு அண்மையில் பிரபாஸ் க்ஷேத்திரம் என்னும் இடத்தில் உள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இத் தலம் ரிக் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோம்நாத் கோயில் என்றுமுள்ள கோயில் எனக் குறிப்பிடப்படுவதுண்டு. இது ஆறு தடவை தீயினால் அழிந்தபோதும் ஒவ்வொருமுறையும் அது மீளமைக்கப்பட்டது. சந்திரன் தனது அழகினால் கர்வம் கொண்டதனால், அவனுடைய மனைவியின் தந்தையான தக்சன் அவனைத் தேய்ந்துபோகும்படி சபித்துவிட்டான். சந்திரன் பிரபாஸ் தீர்த்தத்துக்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது சாபம் ஒரு பகுதி நீங்கியது. அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது. சோம்நாத் கோயில் முதலில் சந்திரனால் பொன்னால் கட்டப்பட்டதாம். பின்னர் இராவணன் அதை வெள்ளியிலும், கிருஷ்ணன் அதனைச் சந்தன மரத்திலும், குஜராத்தின் சோலங்கி அரசனான பீமதேவன் கல்லாலும் கட்டினார்களாம். 2. மல்லிகார்ஜுனா கோயில், குர்நூல், ஆந்திரப் பிரதேசம். மல்லிகார்ஜுனர் கோயில், குர்நூல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. சிறீசைலம் என்றும் அழைக்கப்படும் இது ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமி, பிரமரம்பா ஆகிய கடவுளருக்காக அமைக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இக் கோயிலின் தோற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. சிறீ சைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. 3. மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம் மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற இந்துக் கோயில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது. மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு மேலுள்ள கருவறைக்குள் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் முறையே கணேசர், பார்வதி, கார்த்திகேயன் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு. மூன்றாவது தளத்தில் உள்ள நாகசந்திரேஸ்வரர் சிலையை வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். இக் கோயில் உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 4. ஓங்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசம். ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவொன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது மத்தியப் பிரதேசத்திலுள்ள மோர்ட்டக்கா என்னும் இடத்திலிருந்து 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ளது. இத் தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். இத் தீவில் அமரேஸ்வரர் கோயில் என இன்னொரு கோயிலும் உள்ளது. 5. கேதார்நாத் கோயில், உத்தரகாண்டம் கேதார்நாத் கோயில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இது உத்தர்காண்ட்டில் உள்ள கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கர்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் இறுதி முதல் நவம்பர் மாதத் தொடக்கம் வரையே திறந்திருக்கும். இக்கோயிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுந்த் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தூரம் மலை ஏறியே இக் கோயிலுக்குச் செல்ல முடியும். ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இக் கோயில் ஒரு கவர்ச்சியான கல் கட்டடம் ஆகும். இதன் தொடக்கம் பற்றி அறியக்கூடவில்லை. இக் கோயில் முகப்பில் உள்ள முக்கோண வடிவக் கல்லில் மனிதத் தலை ஒன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு வழமைக்கு மாறான அம்சம் ஆகும். 6. பீமாசங்கர் கோயில், சகியாத்திரி, மகாராஷ்டிரா. பீமாஸ்கந்தர் கோயில், போர்கிரி புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப் போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணக்கதை. பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவனால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7. வாரணாசி, உத்தரப் பிரதேசம். காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் ​பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. காசி என்பது ​சொர்க்கத்திற்குச் ​செல்லும் வழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் காசி ​என்ற ​புகழுடன் சிவத்தலங்கள் அதிகமாக உள்ளன. அவற்றுள் ​தென்​கோடியில் உள்ள ​தென்காசி மற்றும் மதுரைக்கு அருகில் ​​வைகை ஆற்றின் கரையில் உள்ள திருப்பூவணக்காசி மற்றும் காவேரி ஆற்றின் கரையில் உள்ள பல சிவத்தலங்களும் அடங்கும். காசியின் புகழுக்குக் காரணம்சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் ​கோபப்பார்​வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் ​தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் ​தெரிவித்தார்கள். கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன்தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும். 8. திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா. திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது. 9. வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்க்கண்ட். வைத்தியநாதர் கோயில், தேவ்கர் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம். புனிதமான தலமாகக் கருதப்படும் இவ்விடத்துக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விடம் பாபா தாம் அல்லது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப் பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம். 10. நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத். நாகேஸ்வரர் கோயில் அல்லது நாகநாதர் கோயில் என்று அழைக்கப்படும் கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.சிவபுராணத்தில் இத்தலம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதன்படி, சுப்பிரியா என்னும் சிவ பத்தை ஒருத்தியைத் தாருகா என்னும் அசுரன் ஒருவன் பிடித்து தாருகாவனம் என்னும் இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தானாம். பாம்புகளின் நகரமான இதற்கு தாருகாவே மன்னன். சுப்பிரியாவின் வேண்டுகோளின்படி கைதிகள் எல்லோரும் சிவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லி வணங்கினர். அங்கே தோன்றிய சிவன் தாருகாவைக் கொன்று கைதிகளை விடுவித்தாராம். அன்று தொட்டுச் சிவன் ஜோதிர்லிங்க வடிவில் இத்தலத்தில் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தாருகா இறக்குமுன் இவ்விடம் தன்னுடைய பெயரில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய இவ்விடத்துக்குநாகநாத் என்னும் பெயர் வழங்கி வருவதாக நம்பப்படுகிறது. 11. இராமேஸ்வரம், தமிழ் நாடு இங்கு உள்ள இராமநாதசுவாமி கோவில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் இராமேஸ்வரமும் ஒன்றாகும். இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். தல வரலாறு: இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும். கோவில் அமைப்பு: இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம்.இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்" ஆகும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 - 1770 ஆண்டுகளில் இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார். கோவில் தீர்த்தம்: இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. 12. கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டிரா. கிரிஸ்னேஸ்வரர் கோயில் அல்லதுகுஷ்மேஸ்வரர் கோயில் எனப்படும் கோயில் ஒரு புகழ் பெற்ற இந்துக் கோயில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் ஔரங்கபாத்தில் உள்ள தௌலதாபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக் கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக் கோயில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் இங்கே திருத்த வேலைகளைச் செய்வித்தார். வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோயிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார். சிவ தோற்றத்தின் அடையாளங்கள். மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும். சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது. சிவனை வழிபடும் இடங்களிலெல்லாம் திராவிடர்களின் பதிவுகள் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்திலும் நம்முடைய மூத்தோர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று செந்தமிழ் செம்மொழி மாநாட்டில் கூறினார். சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன. இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. நெற்றிக்கண் காணப்படல். கழுத்து நிலநிறமாக காணப்படல். சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல். நீண்ட சுருண்ட சடாமுடி தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல். உடல் சாம்பல் நிறமாக இருத்தல். புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல். கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல். கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல். நந்தியினை(எருது) வாகனமாகக் கொண்டிருத்தல். சிவனின் ஜந்து முகங்கள் சதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர். மகேச மூர்த்தி மகேச வடிவங்கள் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுவதாய்ச் சொல்வார்கள். உருவத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் இவரின் வடிவங்களே இனி நாம் காணப் போவது. இந்த மகேச மூர்த்தி அடியவர்களைத் தண்டிக்கவும், அடியவர்களுக்கு உதவிகள் செய்து காக்கவும் பல வடிவங்களில் எடுத்துப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றார். இவரை நின்ற கோலம், அமர்ந்த கோலம், நாட்டியம் ஆடும் கூத்துக்கோலம், வாகங்களில் ஏறி வரும் கோலம், உக்கிரமாய் இருத்தல், சாந்த ஸ்வரூபியாய்க் காட்சி அளித்தல் எனப் பல்வேறு நிலைகளிலும் அதாவது சதாசிவ மூர்த்தியின் மகேச மூர்த்திக்கு ஒரு முகம், மூன்று கண்கள், ஜடா மகுடம், நான்கு கரங்கள், ஆகியவற்றுடன் காட்சி அளிக்கின்றார். பின்னிரு கரங்களில் மானும், மழுவும் காணப்படும். முன்னிரு கரங்கள் அபயஹஸ்தமாகக் காண்கின்றது. மகேச்வர வடிவங்களைச் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் பொருந்துமாறு 25 விதங்களில் குறிப்பிடுவார்கள். 1.சத்யோ ஜாதம்:சத்யோஜாத முகத்தில் இருந்து தோன்றியவர்கள் 1.லிங்கோத்பவர் 2.சுகாசனர் 3.உமா மகேசுவரர் 4.சங்கர நாராயணர் 5. அர்த்த நாரீசுவரர். 2.வாமதேவம்:வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்கள் 1.கங்காளர் 2.சக்ரதானர் 3.கஜமுக அனுக்ரஹர் 4,.சண்டோ அனுக்ரஹர் 5.ஏக பாதர் 3.அகோரம்:அகோர முகத்தில் இருந்து தோன்றியவர்கள் 1.கஜ சம்ஹார மூர்த்தி 2.வீரபத்ரர் 3.தட்சினா மூர்த்தி 4,கிராத மூர்த்தி 5.நீலகண்டர் 4.தற்புருடம்: தத்புருஷம் என்னும் முகத்தில் இருந்து தோன்றியவர்கள் 1.பிட்சாடன மூர்த்தி 2.காமதகனர் 3.கால சம்ஹாரர் 4.ஜலந்தரவதர் 5.திரிபுராந்தகர் 5.ஈசானம்: ஈசான முகத்தில் இருந்து தோன்றியவர்கள் இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள். 1.சோமாஸ்கந்தர் 2.நடராஜர் 3.ரிஷபாரூடர் 4.கல்யாண சுந்தரர் 5. சந்திர சேகரர் உலகத்தார் உய்யும் பொருட்டும், உலகைக் காக்கவும் ஈசன் பல வடிவங்களை எடுப்பதாய்ச் சிவனடியார்கள் கூற்று. அவை மூன்று வகைப் படும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம். இதில் போகம் இன்பத்தையும், யோகம், அமைதியையும், வேகம், கோபத்தையும் குறிக்கின்றன. பொதுவாக மகேச வடிவத்தை இல்லறத்தாரே பெரிதும் பூசை செய்வர் என்பது வழக்கு. அதற்கேற்பத் திருமூலரின் திருமந்திரத்திலும்,ஏழாம் தந்திரம் பாடல் எண் மூன்று, அத்தியாயம் 13. மாகேசுர பூஜையில் இவ்வாறு கூறுகின்றார்: இலிங்கோற்பவர்சிவனது உருவத்திருமேனிகளில் ஒன்றாகும்.கருவறையின் பின் புறமாக மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இறைவனது பாதமும் முடியும் கண்ணிற்குப் புலப்படாத வகையில் இவ் வடிவம் அமைந்திருக்கும். சிவனது 63 உருவத்திருமேனி 1. சந்திரசேகரர் 2. உமாமகேஸ்வரர். 3. ரிஷபாரூடர் 4. நடராஜர் 5. கல்யாணசுந்தரர் 6. பிட்சாடனர். 7. காமதகனார் 8. கால சம்ஹாரர் 9. திரிபுராந்தகர் 10. சலந்தரர். 11. கஜாசுர சம்ஹாரர் 12. தக்க்ஷ யக்ஞவதர். 13. ஹரியர்த்தர். 14. அர்த்தநாரீஸ்வரர். 15. கிராதகர். 16. கங்காளர். 17. சண்டேச அநுக்கிரஹர் 18. நீலகணடர். 19. சக்ரப்ரதர். 20. விக்னப்ரசாதர். 21. சோமாஸ்கந்தர். 22. ஏகபாதர். 23. சுகாசனர். 24. தட்சணாமூர்த்தி. 25. லிங்கோத்பவர். 26. ரிஷபாந்திகர். 27. அகோரவீரபத்ரர். 28. அகோராஸ்ரமூர்த்தி. 29. சக்ரதானஸ்வரூபர். 30. சிவலிங்கம். 31. முகலிங்கேஸ்வரர். 32. சர்வஸம்ஹாரர் 33. ஏகபாத திரிமூர்த்தி. 34. திரிபாதமூர்த்தி 35. ஜ்வரஹரேஸ்வரர். 36. ஊர்த்துவதாண்டவர் 37. வராக் ஸம்காரி . 38. கூர்மஸம்ஹாரி. 39. மச்சஸம்ஹாரி. 40. சரபேசர் 41. பைரவர். 42. சார்த்துலஹரி. 43. லகுளீசர். 44. சதாசிவர். 45. உமேசர். 46. புஜங்கலளிதர் 47. புஜங்கத்ராசர். 48. கங்காதரர். 49. கங்காவிசர்ஜனர். 50. யக்ஞேஸ்வரர் 51. உக்ரர் 52. ஆபதோத்தாரணார் 53. ஷேத்ரபாலர் 54. கஜாந்திகர் 55. அச்வாரூடர் 56. கௌரீவரப்ரதர் 57. கௌரீலீலா சமன்விதர் 58. கருடாந்திகர் 59. பிரம்ம சிரச்சேதர் 60. ரக்தபிக்க்ஷா ப்ரதானர். 61. சிஷ்யபாலர் 62. ஹரிவிரிஞ்சதாரணர் 63. சந்தியா நிருத்தர். நடராஜர் வெண்கலதால் அமைந்த சோழர்கால நடராசர் சிலை சிவனது உருவதிருமேனிகளில் நடராஜர் வடிவம் மிகப் பிரபலமானது சிவனை ஆடலரசனாகக் கொள்ளும் வடிவாகும். இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம் ஆகும். நடராசர் என்ற சொல் நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் எனப் பலவாறாகக் குறிப்பிடப்படும் சிவன் நடனத்தில் வல்லவனாக உருவகிக்கப்படுகிறான். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும். சைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன. ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது. மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன. நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது. ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது. பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில்் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்! அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன. பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம். ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார். வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி. தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும். முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது. பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள். அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது. நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது! பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்! நடராசர் என்றாலே தில்லை என்று அழைக்கப்படும் சிதம்பரம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தில்லையில் நடனமாடும் முன்பு இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கை எனும் தலத்தில் நடராசர் தனிமையில் நடனமாடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தை ஆதி சிதம்பரம் என்றும், இத்தல இறைவன் ஆதிசிதம்பரேசுவரர் என்றும் அழைக்கின்றனர். தட்சணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் தெற்குதிசையினைப் பார்த்தவாறு முனிவர்களுக்கு யோகத்தினை விளக்கும் வகையில் அமர்ந்திருக்கும் வடிவமாகும். அர்த்த நாரீசுவரர் சிவனின் ஆண் உருவத்தில் பாதியும்,பார்வதியின் பெண்ணுருவத்தில் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைந்த வடிவாகும். அர்த்தநாரீசுவரர் சிவபெருமானின் உருவ திருமேனிகளில் ஒன்றாகும். சைவ சமயத்தவர்கள் வழிபடும் உருவ திருமேனிகளில் அர்த்தநாரிசுவரர் சிறப்பிடம் பெறுகின்றது. அர்த்தம் என்பது பாதி; நாரீ என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைகின்றது. சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்கின்ற உருவாகும். இலக்கியத்தில் அர்த்தநாரீசுவரர்: அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்று புறநானூற்றூக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது. கோயில்களில் அர்த்தநாரீசுவரர்: காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அர்த்தநாரீசுவரர் வடிவம் தென்னிந்தியாவில் காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உமாதேவி வீணையுடனும் சிவன் காளையில் ஏறிய கோலத்திலும் காணப்படுகிறார்.திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவர் அர்த்தநாரீசுவராராக அமர்ந்துள்ளார். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீசுவரி, பாகம்பிரியாள் என்ற பேர்களுள்ளன . பிருங்கி முனிவரின் வரலாறு: அர்த்தநாரீசுவர உருவத்துடன் தொடர்புடையது பிருங்கி முனிவரின் கதை. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் தீவிரபக்தர். இறைவி இதனால் தவம் செய்து அர்த்தநாரீ வடிவம் பெற்ற போதும் பிருங்க்கி முனிவர் இறைவியையும் சேர்த்து வழிபட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிபட்டாராம். இதனால் கோபமடைந்த இறைவி அவரை வலுவிழந்து போகும்படி சாபமிட்டனர். சாபத்தினால் வலுவிழந்து கொண்டு வந்த போதும் பிருங்கி முனிவர் தன்னிலையில் இருந்து மாறவில்லை. நடக்க முடியாத கட்டத்தினை அடைந்தார். சிவன் தன் பக்தனின் நிலை கண்டு இரங்கி அவருக்கு மூன்றாவது காலை அருளினார். இதனால் பிருங்கி முனிவர் மூன்று கால், மூன்று கையுடன் அமைக்கப்படுவதுண்டு. அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி, ருத்ரகங்கை . பூந்தோட்டம் போஸ்ட், திருவாரூர் மாவட்டம். இத்தலவிநாயகர் வரசித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக்கொண்டது. பூந்தோட்டம் அருகில் பிரபல திருமண ஸ்தலமான திருவீழிமிழலை, மாப்பிள்ளை சுவாமி கோயில் மற்றும் கூத்தனூர் சரஸ்வதி கோயில், மனிதமுகம் கொண்ட விநாயகர் சிலை உள்ளதும், அமாவாசை தலமுமான செதலபதி சிவாலயமும் உள்ளன.பெண்கள் பாதுகாப்புடன் இருக்கவும், திருமணத்தடை, செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தல வீரபத்திரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.பிரார்த்தனை நிறைவேறியதும் பெண்கள் தந்தையுடன் வந்து செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை, வில்வ இலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அஷ்டமியுடன் சேர்ந்து வரும் செவ்வாய்க்கிழமைகளில் சுவாமிக்கு எட்டு வகை மலர் அடங்கிய மாலை அணிவித்து பூஜை செய்து வழிபடுகிறார்கள். ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த கோயில் இது. வீரபத்திரரின் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளது. கிரீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. அசுரனை அழித்த காளி எட்டு கைகளுடன் உக்கிரமாக காட்சியளிக்கிறாள்.அம்பாள் பர்வதராஜனின் மகளாகப் பிறந்த போது, அவளைத் திருமணம் முடிக்கச் செல்லும்முன்பு சிவன், கங்காதேவியை வீரபத்திரரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். கங்காதேவி தங்கியிருந்த தலம் இங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. "ருத்ரகங்கை' என்றழைக்கப்படும் இத்தலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருளுகிறார். பக்தர்கள், ஆபத்சகாயேஸ்வரரை வணங்கிவிட்டு, அதன்பின்பு இத்தலத்திலுள்ள வீரபத்திரரை வழிபடுவது மரபாக உள்ளது. தந்தை மகள் பிரார்த்தனை: சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கும், முன்மண்டபத்திலுள்ள மகாகாளருக்கும் 4 கால பூஜை நடக்கிறது. அசுர வதத்திற்காக இங்கு வந்த பெருமாள், கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். பார்வதி மற்றும் லட்சுமியுடன் சீனிவாசர் சன்னதியும் உள்ளது. வீரபத்திரர் தங்கிய தலம் என்பதால் இவ்வூர், "வீராவடி' (வீரபத்திரர் அடி பதித்த இடம்) என்று அழைக்கப்பட்டு "வீராவாடி' என மருவியது. கோயில் அருகில் ஓடும் அரசலாறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுவது விசேஷம். திருமணத்தடை, செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தையுடன் வந்து செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு வெற்றிலை, வில்வ இலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அஷ்டமியுடன் சேர்ந்து வரும் செவ்வாய்க்கிழமைகளில் சுவாமிக்கு எட்டு வகை மலர் அடங்கிய மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர்.அம்பன், அம்பாசுரன் என்னும் இரு அசுர சகோதரர்களின் தொந்தரவிற்கு ஆளான தேவர்கள், தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் அசுரர்களை அழிக்க, பார்வதி, மகாவிஷ்ணு இருவரையும் அனுப்பினார். மகாவிஷ்ணு வயோதிகர் வடிவம் எடுத்தும், . பார்வதி அவரது மகள் போலவும் அசுரர்களின் இருப்பிடம் வந்தனர்.அம்பன் பார்வதியின் அழகில் மயங்கி, அவளை மணந்து கொள்ள விரும்பி, முதியவரிடம் பெண் கேட்டான். அம்பாசுரனும் அவளை மணக்க விரும்பினான். இதைப் பயன்படுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, ""உங்களில் யார் சக்தி மிக்கவரோ அவரே என் பெண்ணை மணந்து கொள்ளட்டும்,'' என்றார். இதனால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அம்பாசுரனை அம்பன் கொன்று விட்டான்.அப்போது பார்வதி காளியாக உருவெடுத்து அம்பனையும் வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) ஏற்பட்டது. இதனால் சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, பிரம்மஹத்தியை விரட்டியடித்தார். அவர் "அகோர வீரபத்திரர்' என்று பெயர் பெற்றார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவபெருமானும் மகாகாளர் என்ற பெயரில் இங்கு தங்கியுள்ளார். அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், மகாமகம் குளம் வடகரை, கும்பகோணம், தஞ்சாவூர்- வீரபத்திரரிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காக்கும் கடவுள்: ராஜகோபுரத்துடன் அமைந்த இக்கோயிலில், சுவாமி கோரைப்பற்களுடன் உள்ளார். கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளன. அருகில் தட்சன் வணங்கியபடி இருக்கிறான். தலைக்கு மேல் ஜலதாரை (நீர் பாத்திரம்) இருக்கிறது. பத்திரகாளி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இத்தல வீரபத்திரருக்கு "கங்கை வீரன்", "கங்கை வீரேஸ்வரர்" என்ற பெயர்களும் உண்டு. நவநதிகளில் பிரதானமனாது கங்கை. கங்கையின் தலைமையில், இங்கு வந்து பாவம் போக்கிக்கொண்ட நதிகளுக்கு, காவலராக இருந்தவர் என்பதால் இப்பெயர். சுவாமி சன்னதி எதிரில் உள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடக்கிறது. தக்கயாகப்பரணி அரங்கேற்றம்: சோழனின் அரசவையில் கவிச்சக்கரவர்த்தியாக இருந்தவர் ஒட்டக்கூத்தர். வீரபத்திரரின் பக்தரான இவர், கும்பகோணத்திலுள்ள ஒரு மடத்தில் சிலகாலம் தங்கி சேவை செய்து வந்தார். வீரபத்திரரைக் குறித்து, "தக்கயாகப்பரணி" என்னும் நூலையும் இயற்றினார். இந்நூலை வீரபத்திரர் சன்னதி முன்பு அரங்கேற்றம் செய்தார். ஒருவர் பெற்ற வெற்றியைக் குறித்து இயற்றப்படும் நூல் "பரணி" எனப்படும். தட்சனின் யாகம் அழித்து வீரபத்திரர் வெற்றி பெற்றதால் இந்நூல், "தக்கயாகப்பரணி" எனப்பட்டது. ஒட்டக்கூத்தர், சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார். ஆவணி உத்ராடத்தில் இவருக்கு குருபூஜை நடக்கிறது. நவகன்னியரும் சிலை வடிவில் இருக்கின்றனர். மாசி மகத்தன்று கும்பேஸ்வரர், மகாமக குளக்கரைக்கு வரும்போது, வீரபத்திரர் கோயில் முன்பே எழுந்தருளுவார். அப்போது வீரபத்திரர் கோயில் அர்ச்சகர், கும்பேஸ்வரருக்கு பூஜை செய்வார். இப்பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். மூர்க்கநாயனார், இங்குள்ள மடத்தில் சிலகாலம் தங்கியிருந்து சேவை செய்தார். இவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில், இவரது குருபூஜை நடக்கிறது.கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது நதிகளில், பக்தர்கள் மூழ்கிக் கழித்த பாவங்கள் அதிகமாக சேரவே, அவை வருத்தப்பட்டன. கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களது பாவச்சுமையைக் குறைக்குமாறு முறையிட்டன. இதை ஏற்ற சிவன், மகாமகத்தன்று மகாமக தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு கூறினார். அதன்படி நவநதிகளும் இத்தலம் வந்தன. சிவன், அவர்களுக்கு காவலராக, வீரபத்திரரை அனுப்பி வைத்தார். அவரே குளக்கரையில் வீற்றிருக்கிறார். லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம். ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார். அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும். அருள்மிகு (ரிஷபாரூடர்)அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில், விராதனூர் . மதுரை மாவட்டம். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால், மதுரை அருகே உள்ள விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோயிலில் ரிஷபாரூடர் மூலவராக அருள்பாலிக்கிறார்.பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பு. ரிஷபாரூடர்: அசுரர்கள் தொல்லையினால் தேவர்கள் கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர்.சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது.சிவனிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவனை ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவனுக்கு "ரிஷபாரூடர்' என்ற திருநாமம் உண்டாயிற்று.விஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம். 750 வருடங்களுக்கு முன், உத்திரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரு குடும்பத்தினர், தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்தனர்.வழியில் விராதனூரில் இளைப்பாறினர். தங்கள் குழந்தையை அங்கிருந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டி உறங்க வைத்தனர். பெரியவர்களும் உறங்கி விட்டனர். விழித்த போது தொட்டிலில் குழந்தையைக் காணவில்லை.மரத்தின் மீது அந்த குழந்தை அமர்ந்திருந்தது. இதைக்கண்ட பெற்றோர் கண்ணீர் விட்டு ""இறைவா! குழந்தையை காப்பாற்று,'' என அழுதனர். அப்போது இறைவன் அந்த ஊரில் தனக்கு கோயில் அமைத்து வழிபடும்படி அசரீரியாக கூறினார்.இறைவனின் கட்டளைப்படி அவர்களும் ரிஷபாரூடர் சிலை வைத்து, கோயில் கட்டி வழிபாடு செய்தார்கள்.குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு "அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. திருமணஞ்சேரி-கல்யாணசுந்தரர் கோயில். தேவார ஆசிரியர்களால் பாடல் பெற்ற 274 திருத்தலங்களில், காவிரிக்கு வடகரையில் அமைந்துள்ள 63 சிவத்தலங்களில், 25வது திருத்தலமாக விளங்குகிறது இக்கோயில். 'திருமணஞ்சேரி' இறைவன் உமையம்மையைத் திருமணம் செய்தருளிய தலங்களில் திருமணஞ்சேரியும் ஒன்று. மணவாளபுரம், பூலோக ஸ்தலம் என்று வடமொழியில் கூறப்படும் இந்த திருத்தலம், மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் நகரின் வடபால் 6கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருமணஞ்சேரி இறைவனை வணங்கினால் வினைகள் நீங்கி மங்கலம் கூடும் என்று அடியவர்கள் கூறுகிறார்கள். சோழர் காலத்துச் செப்புப் படிமங்களை எளிதில் இனம் காணலாம். உடலமைப்பு அழகாகவும், உயிரோட்டமும் அழகியல் உணர்வும் ஒருங்கே கொண்டவையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. முற்காலச் சோழர் படிமங்கள் பிந்திய காலத்தை விட இயல்பாகப் படைக்கப்பட்டன. பிந்திய சோழர் காலப் படிமங்களில் முகங்களில் சற்றுக் கடுமையும், பளிச்செனத் தெரியும் எடுப்பான நாசியும், தன்மையான உடலமைப்பும் காட்டப் பட்டிருக்கும். பல்லவர் காலமும் சோழர் காலமும் ஒன்றொடொன்று இணையும் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வடிக்கப்பட்ட படிமங்களில் உன்னதமான படைப்பு வடகலத்தூர் கல்யாண சுந்தரர் திருமேனி ஆகும். தமிழகத்துச் செப்புப் படிமங்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்றான இச்சிற்பத் தொகுதியில் சிவபெருமான் இளைஞனாக மணக்கோலத்தில், பார்வதி தேவியின் ஒரு கரத்தைப் பற்றியவாறு வடிக்கப் பட்டுள்ளார். மணப் பெண்ணான தேவி இளமை ததும்பும் நாணத்தோடு காணப்படுகின்றார். முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்ட எழில்மிகு நடராசர் சிற்பமும் பார்வதியின் படிமமும் கரைவீரம் என்ற இடத்தில் கிடைத்துள்ளன. ஆனந்தத் தாண்டவ நடராசர் திருமேனிகளில் இதுவே முதலாவதாகும் என்று கருதப்படுகிறது.பல்லவனீச்சுரம் என்ற இடத்தில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உமையும் குழந்தை கந்தனும் ஒரே பீடத்தில் அமர்ந்துள்ள காட்சி அற்புதப் படைப்புக்களில் ஒன்றெனலாம். பிட்சாடனர் தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது. ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார். ஐயனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார். அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம் - பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம். திரிபுராந்தகரிடம் வேண்டிக்கொண்டால் ஆளுமைத் திறன் வளரும், தீய குணங்கள், ஆணவம், துன்பங்கள் நீங்கும், குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும் என்பது நம்பிக்கை. சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சிறுத்த விநாயகராக' பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை இங்குள்ளவிமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாறை குறித்து பாடியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர். ராஜகோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். அம்பாள், சுவாமிக்கு வலது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கிறாள். இதனை சுவாமி, அம்பாளை திருமணம் செய்த கோலம் என்கிறார்கள். இவளுக்கு முன்புறத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக இருக்கிறது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார். வில் ஏந்திய சிவன் சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சைக் கற்பூரம் மட்டும் தூவி, பாலபிஷேகம் செய்கின்றனர். இத்தலத்தில் சிவன் தவக்கோலத்தில் இருக்கிறாராம். எனவே, இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் குறிப்பாக தவளைகள் மட்டும் வாழ்வதில்லை. தவளை எழுப்பும் சத்தம் சிவ தவத்திற்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள். திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் சுவாமி "திரிபுராந்தகர்' என்றும், அம்பாளை "திரிபுராந்தகி அம்மன்' என்றும் பெயர் பெற்றுள்ளனர். சக்கர அச்சு முறிந்து நின்றபோது, போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன், தேரில் இருந்து இறங்கி கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே, இங்குள்ள சிவனுக்கு "திருவிற்கோலநாதர்' என்றும், தலத்திற்கு "திருவிற்கோலம்' என்றும் பெயர் உள்ளது. சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். சிவனின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தர்க்க மாதா முஞ்சிகேசர், கார்கோடர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன், திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செருக்கை அடக்கினார். இதனால் அவள் மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவளிடம் சிவன், தான் இத்தலத்தில் ரக்ஷா (காத்தல்) நடனம் ஆடப்போவதாகவும், அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடியபோது, காளி சுவாமியை தரிசித்து அமைதியடைந்தாள். இவள் இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் "தர்க்க மாதா' என்ற பெயரில் அருளுகிறாள். சிவனுடன், தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதிலாவது நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. இது சிவனுக்கும் பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின், விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் "கூரம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "கூவம்' என்று மருவியது. 274 சிவாலயங்கள் (சிவஸ்தலங்கள்).திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 பொருள்: நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க. ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி பொருள்: எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி. ஒளி வடிவானவனின் திருவடி போற்றி. சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி. அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி. மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி. அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி. 274 சிவாலயங்கள் (சிவதலங்கள்) அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர் அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் (சிதம்பரம் நகர்),கடலூர் அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி,கடலூர் அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர் அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம்,,நாகப்பட்டினம் அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப் பள்ளி,,நாகப்பட்டினம் அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல்,நாகப்பட்டினம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை,நாகப்பட்டினம் அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்,நாகப்பட்டினம் அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார்,நாகப்பட்டினம் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு,நாகப்பட்டினம் அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,நாகப்பட்டினம் அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர்,நாகப்பட்டினம் அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில்,நாகப்பட்டினம் அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி,நாகப்பட்டினம் அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர்,நாகப்பட்டினம் அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திரிநின்றியூர்,நாகப்பட்டினம் அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்,நாகப்பட்டினம் அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர்,நாகப்பட்டினம் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்,நாகப்பட்டினம் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வேள்விக்குடி,நாகப்பட்டினம் அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமணஞ்சேரி,நாகப்பட்டினம் அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி,நாகப்பட்டினம் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொருக்கை,நாகப்பட்டினம் அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு,நாகப்பட்டினம் அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா,நாகப்பட்டினம் அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்,நாகப்பட்டினம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு,நாகப்பட்டினம் அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்,கடலூர் அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்,கடலூர் அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர்,கடலூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்,கடலூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்,தஞ்சாவூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்,தஞ்சாவூர் அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி,தஞ்சாவூர் அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்,தஞ்சாவூர் அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி,தஞ்சாவூர் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர்,தஞ்சாவூர் அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி,தஞ்சாவூர் அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்,தஞ்சாவூர் அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், கொட்டையூர்,தஞ்சாவூர் அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர்,தஞ்சாவூர் அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம்,தஞ்சாவூர் அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை,தஞ்சாவூர் அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில், திருவைகாவூர்,தஞ்சாவூர் அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை,தஞ்சாவூர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம்,தஞ்சாவூர் அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம்,தஞ்சாவூர் அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்,தஞ்சாவூர் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்,அரியலூர் அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர்,,தஞ்சாவூர் அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்,திருச்சி அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை,திருச்சி அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை,திருச்சி அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி திருவானைக்கா,திருச்சி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி,திருச்சி அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி,திருச்சி அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை,கரூர் அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர் மலை,கரூர் அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை,கரூர் அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை,திருச்சி அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்,திருச்சி அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி,திருச்சி அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்,திருச்சி அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம்,திருச்சி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,தஞ்சாவூர் அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில்,தஞ்சாவூர் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி,தஞ்சாவூர் அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,,தஞ்சாவூர் அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை,தஞ்சாவூர் அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி,தஞ்சாவூர் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை,தஞ்சாவூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில்,தஞ்சாவூர் அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி,தஞ்சாவூர் அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்,தஞ்சாவூர் அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம்,தஞ்சாவூர் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம்,தஞ்சாவூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் (கோவந்தகுடி),தஞ்சாவூர் அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம்,தஞ்சாவூர் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம்,தஞ்சாவூர் அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழ்பழையாறை வடதளி,தஞ்சாவூர் அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி,தஞ்சாவூர் அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர் அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை,தஞ்சாவூர் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி,தஞ்சாவூர் அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல்,நாகப்பட்டினம் அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்,நாகப்பட்டினம் அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம்,தஞ்சாவூர் அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை,நாகப்பட்டினம் அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம்,நாகப்பட்டினம் அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்.,நாகப்பட்டினம் அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர்,நாகப்பட்டினம் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழப்பரசலூர்,,நாகப்பட்டினம் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில்,நாகப்பட்டினம் அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம்,நாகப்பட்டினம் அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு,நாகப்பட்டினம் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர்,நாகப்பட்டினம் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்,நாகப்பட்டினம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்,,நாகப்பட்டினம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி,புதுச்சேரி அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி,,காரைக்கால் அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்,காரைக்கால் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு,காரைக்கால் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம்,திருவாரூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர், அம்பல்,திருவாரூர் அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்,திருவாரூர் அருள்மிகு திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர் அருள்மிகு சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலப்பதி,திருவாரூர் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்,திருவாரூர் அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், செருகுடி,திருவாரூர் அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,திருவாரூர் அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர்,திருவாரூர் அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி,திருவாரூர் அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,தஞ்சாவூர் அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்,தஞ்சாவூர் அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர்,தஞ்சாவூர் அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சாக்கோட்டை,தஞ்சாவூர் அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி,தஞ்சாவூர் அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம்,திருவாரூர் அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்,திருவாரூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொண்டீஸ்வரம்,திருவாரூர் அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர்,திருவாரூர் அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி,திருவாரூர் அருள்மிகு சரண்யபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,திருவாரூர் அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,திருவாரூர் அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,திருவாரூர் அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி,நாகப்பட்டினம் அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர் அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல்,நாகப்பட்டினம் அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை,நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்,நாகப்பட்டினம் அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்,நாகப்பட்டினம் அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர் அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர் அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல்,திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்,திருவாரூர் அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில்,திருவாரூர் அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழ வீதி,திருவாரூர் அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல்,திருவாரூர் அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம்,திருவாரூர் அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம்பேட்டை,திருவாரூர் அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு,திருவாரூர் அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்,திருவாரூர் அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை,தஞ்சாவூர் அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,தஞ்சாவூர் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்,திருவாரூர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி,தஞ்சாவூர் அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம்,திருவாரூர் அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்,திருவாரூர் அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில்,தஞ்சாவூர் அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி,திருவாரூர் அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், பூவனூர்,திருவாரூர் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி,திருவாரூர் அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்,திருவாரூர் அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்,நாகப்பட்டினம் அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்,திருவாரூர் அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம்,திருவாரூர் அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர்குளம்,திருவாரூர் அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில், தண்டலச்சேரி,திருவாரூர் அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்,திருவாரூர் அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை,திருவாரூர் அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர்,திருவாரூர் அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்,திருவாரூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு,திருவாரூர் அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தங்கூர்,திருவாரூர் அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா,திருவாரூர் அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி,திருவாரூர் அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல்,திருவாரூர் அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்,திருவாரூர் அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்,நாகப்பட்டினம் அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம்,திருவாரூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை,நாகப்பட்டினம் அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்,நாகப்பட்டினம் அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,,நாகப்பட்டினம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி,நாகப்பட்டினம் அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில், கோடியக்காடு,நாகப்பட்டினம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை,மதுரை அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை,மதுரை அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்,மதுரை அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில், திருவேடகம்,மதுரை அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை,சிவகங்கை அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல்,புதுக்கோட்டை அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்,ராமநாதபுரம் அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை,ராமநாதபுரம் அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்,சிவகங்கை அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம்,சிவகங்கை அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி,விருதுநகர் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம்,திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி,திருநெல்வேலி அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி,கோயம்புத்தூர் அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி,ஈரோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு,நாமக்கல் அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்,கரூர் அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி,ஈரோடு அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்,கரூர் அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை,கடலூர் அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்,கடலூர் அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்.,கடலூர் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திர பட்டினம்,கடலூர் அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி,கடலூர் அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம்,,கடலூர் அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்,விழுப்புரம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம்,கடலூர் அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை,விழுப்புரம் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர்,விழுப்புரம் அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர்,விழுப்புரம் அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், டி. இடையாறு,விழுப்புரம் அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்,விழுப்புரம் அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், திருத்தளூர்,கடலூர் அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில்,புதுச்சேரி அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி,கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர்,கடலூர் அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம்,விழுப்புரம் அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்,விழுப்புரம் அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்,விழுப்புரம் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி,காஞ்சிபுரம் அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம்,திருவண்ணாமலை அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல்,காஞ்சிபுரம் அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு,திருவண்ணாமலை அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு,திருவண்ணாமலை அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம்,வேலூர் அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர்,வேலூர் அருள்மிகு சலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம்,வேலூர் அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர்,காஞ்சிபுரம் அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம்,திருவள்ளூர் அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு,திருவள்ளூர் அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர் அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி,திருவள்ளூர் அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்,திருவள்ளூர் அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர்,திருவள்ளூர் அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம்,சென்னை அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில்,சென்னை அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு,காஞ்சிபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்,சென்னை அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், திருக்கச்சூர்,காஞ்சிபுரம் அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம்,காஞ்சிபுரம் அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம்,காஞ்சிபுரம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்,காஞ்சிபுரம் அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை,விழுப்புரம் அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு,விழுப்புரம் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை,விழுப்புரம் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவஞ்சிக்குளம்,திருச்சூர் அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்,உத்தர் கன்னடா அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்,கர்நூல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர்,விழுப்புரம். பஞ்சபூத சிவத்தலங்கள் உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்) 1.மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர். 2.நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா 3.தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை 4.வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி 5.வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம் ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள் சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இவைதான். 1.தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம். ஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது? அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. பொன்னிலே சிறந்தது அம்பொன் எனக் கூறுகின்றனர். அத்தகைய அம்பொன்னினால் ஆன தில்லைப் பதியின் ஐந்து ஆவரணங்கள் எனப்படும் ஐந்து சபைகளிலும் முதல் ஆவரணமான பொன்னம்பலத்திலே ஐந்தொழிலையும் செய்யும் வண்ணம் சக்தியாகவும் நின்று, பேரானந்தப் பெருவெளியில் நடனம் ஆடுகின்றான் எனத் திருமூலர் குறிப்பிடுகிறார். ஆதி பரன்ஆட அங்கை அனலாட ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப் பாதி மதியாடப் பாராண்டம் மீதாட நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே. அந்த ஈசன் ஆடும்போது அவன் மட்டுமா ஆடுகிறான்? அவனோடு சேர்ந்து நாம் அனைவரும் அல்லவோ அவன் ஆட்டி வைக்கிறபடி ஆடுகின்றோம்? ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ? என்பது திருமூலர் வாக்கு. அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி உம்பர மாம் நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே தில்லைச் சிற்றம்பலத்திலே ஓயாது ஆடும் கூத்தன் ஆடும் ஆட்டத்தின் போது அவனுடைய இரு திருவடிகளில் இருந்து எழும் சிலம்பின் ஓசையானது நாதமாகவும், விந்தாகவும் மாறி நிற்க, அவற்றினின்று தோன்றும் ஐந்து தத்துவங்களையும் உயிர்களுக்குப் பொருத்தி அவற்றிற்கு அறிவைத் தருகிறான் ஈசன். ஐந்து தத்துவங்களாகத் திருமூலர் குறிப்பிடுவது: அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை ஆகியன வாகும். 2.திருவாரூர்-அசபா தாண்டவம். 3.மதுரை-ஞானசுந்தர தாண்டவம். 4.அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம். 5.திருமுருகன் பூண்டி-பிரம தாண்டவம். ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள். இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள்(அடைப்புக் குறிக்குள் சபைகள்) 1.தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை). 2.திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை). 3.மதுரை-வெள்ளி மன்றம் (இராஜ சபை). 4.திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை). 5.திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை). சத்த விடங்க சிவத்தலங்கள் வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள். 1.திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்). 2.திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்). 3.திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்). 4.திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்). 5.திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்). 6.திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்). 7.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்) முக்தி தரவல்ல சிவத்தலங்கள் முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள் 1.திருவாரூர்-பிறக்க முக்தி தருவது 2.சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது 3.திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது 4.காசி-இறக்க முக்தி தருவது தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்) தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்: 1.பாபநாசம் 2.சேரன் மகாதேவி 3.கோடகநல்லூர் 4.குன்னத்தூர் 5.முறப்பநாடு 6.திருவைகுண்டம் 7.தென் திருப்பேரை 8.ராசபதி 9.சேர்ந்த பூ மங்கலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக