திங்கள், 30 டிசம்பர், 2013


சும்மா இரு ..... சொல் அற ! நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழ்வதே கிடையாது. பழைய கால நினைவுகளை அசைபோடுகிறோம் , வருங்கால கனவுகளில் மிதக்கிறோம், நம்மனமும் உடலும் நிகழ்கால செய்கையில் ஒன்றுபடுதோ நிகழ்கால வாழ்வாகும்,அலைபாயும் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதில் கடந்த கால, எதிர்கால கனவு நினைவு அலைகளிலிருந்து விடுபட்டால் தான் நம் மனம் முழுவதும் இறைவனிடம் நிலைபெறவும் அவன் அருள் பெறவும் வழிவகுக்கும், நம் மனம் பேசிக் கொண்டே இருக்கும் இயல் புடையது அதற்கு ஓய்வில்லை, அதனாலேயே பழங்கால நினைவுகளும் எதிர்கால கனவுகளும் நமக்கு ஏற்படுகின்றன, நாம் மனம்வழிப் பேச்சை குறைக்க வேண்டும். நம்மனம் அமைதியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் மனம் பேசாதநிலையை நாம் உணர முடியும். நாம் இறைவனது அபிசேக அலங்காரங்களை காணும் போதும் இறை மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நம்மனம் அதிலேயே ஒன்றியிருக்கும். அப்போது அது பேசுவதை தவிர்த்துவிடும். இதனையே " சிந்தனை நிந்தனுக்கு ஆக்கி" என்கிறார் மாணிக்கவாசகர். நம்மனம் முழுவதும்இறையழகே நிறைந்திருந்தால் மறுபேச்சுக்கே அங்கு இடமில்லை அல்லவா? இப்படி மறு சிந்தனையே எண்ணித் தன்மனத்துள் அவனுக்குக் கோவில் கட்டி குடமுழுக்கும் செய்வித்து முத்தி பெற்றவர் பூசலார் நாயனார். பிராணாயாமம், தியானம் செய்பவர்கள் தங்கள் சிந்தனையை மூக்கின் முனியில் அல்லது இதயத் தானத்தில் இருத்தி செய்யும் போது மனஓட்டம் அடங்கும். மனமும் பேசாது ஒடுங்கும். இதனைச் " சும்மா இரு சொல் அற " என்கிறார் அருணகிரியார். ஆகவே இறைவனை வணங்கும் போதும் எண்ணும்போதும் தியானிக்கும் போதும் நாம் நம் மன ஓட்டத்தை நிறுத்தலாம். அவ் வழியில் நிகழ்காலத்தில் வாழலாம், இதுவே சும்மா இருந்து மன நிம்மதியுடன் சுகத்தை - பேரின்பத்தை காணலாம்,

புதன், 25 டிசம்பர், 2013

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ). (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. (4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது. (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


ஞாயிறு, 22 டிசம்பர், 2013

உண்மையான அன்பு திருமணமான புதிய தம்பதியர் ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது முள் ஒன்று அந்த பெண்ணின் காலில் தைத்தது. அதை கண்டு பதறிப்போன அவன் கணவன் , அவளது பிஞ்சு காலில் இருந்த அம்முள்ளை பிடிங்கி "சனியனே " என்று அந்த முள்ளை ஏசிக் கொண்டு தூக்கி எறிந்தான். பின் பத்து வருடம் கழித்து அதே பாதையில் கணவன் மனைவி இருவரும் நடந்து வரும்போது ஒருநாள் அதேபோல ஒரு முள் அவளது காலில் முள் ஒன்று குத்தியது, அவள் கத்தினாள் அவள் குரலைக் கேட்ட கணவன் திரும்பிப்பார்த்து அவன் முகம் சுளித்தான் அன்று அவளை பார்த்து " சனியனே " பார்த்து வரக்கூடாது?" என்றான், ஆக பத்து வருடத்தில் சனி இடம் பெயர்ந்து விட்டதே முள் மீது இருந்த சனி மனைவி மீது பெயர்ச்சி ஆகி விட்டதே. நாளாக ஆக மனத்தில் அன்பு தேய்ந்து விட்டது குறைந்து விட்டது என்பதே உண்மை. நாம் இறைவனை வழிபடும் போது நிறைந்த அன்புடனே அவனை வழிபட வேண்டும் அதாவது என்றும் மாறத குறையாத அன்புடன் வழிபட வேண்டும். சாக்கிய நாயனார் புத்த சமயம் தழுவியவர், அவர் பின்னாளில் சிவனிடம் நீங்காத அன்பு கொண்டார். சிவனை வணங்கினார். தான் சார்ந்த சமய உடையையே அணிந்து வந்தார். தன் சமயவாதிகளுக்கு தெரியா வண்ணம் சிறுகல்லை எடுத்து பூவாக எண்ணி அதை சிவலிங்கத்தின் மீது போட்டார். தொடர்ந்து அவ்வாறே வழிபட்டு வந்தார். இறைவனும் அதனை ஏற்றுக் கொண்டார். மாறாக மன்மதன் ஒருமுறை மலர்களை ஆணவ மிகுதியுடன் மலர்களை அம்பாக எண்ணி இறைவன் மீது தொடுத்தான் அதை உணர்ந்த இறைவன் அவனை தண்டித்தார். வேடுவர் குலத்தில் பிறந்த கண்ணப்பர் சிவன்மேல் அளவிலா காதல் கொண்டார். வேடுவராக பிறந்த அவருக்கு சிவவழிபாடு செய்து பழக்க மில்லை இருந்த போதும் சிவன் மீது கொண்ட காதல் மிகுதியானது. பெருமானை நீராட்ட எண்ணினார் தன் வாய் நிறைய ஆற்று நீரை எடுத்து வந்து உமிழ்ந்து அவரை நீராட்டினார், பன்றி இறைச்சியை சுவைத்துப் பார்த்து அவற்றில் நல்லலைகளை மட்டுமே படைத்தார். நல்ல மலர்களை தன் தலையில் சூடிக் கொண்டு வந்து இறைவனுக்கு சூட்டினார், இறைவன் கண்ணில் இத்தம் வந்ததைக் கண்டு சற்றும் தளராது உடனே தன் ஒருகண்ணை ஈட்டியால் தோண்டி ஈசனக்கு ஈந்தார் மேலும் இறைவனின் இன்னொரு கண்ணிலும் ரத்தம் வருவதை கண்டு தன் மற்றொரு கண்ணையும் பிடுங்கி இறைவனுக்கு வழங்க முற்பட்டார் அப்போது அடையாளமாக தனது செருப்பணிந்த காலை இறைவன் கண் அருகில் ஊன்றி தனது கண்ணை பிடுங்கி இறைவனுக்கு ஈந்தார்.இதனை மாணிக்க வாசகர் " செருப்புற்ற சீறடி வாய்கலசம் ஊண் அமுதம் விருப்புற்று வேடனார்" என்றும், கண்ணப்பர் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் " என்றும் பாடுகிறார். நாம் செய்யத்தகாதன என்கிற செயல்களையும்கண்ணப்பர் அன்பின் மிகுதியால் செய்திறார். அடியார்களது செயல்களை காட்டிலும் அவர்கள் எண்ணமே முதன்மை ஆகிறது நம்உள்ளக்கிடக்கை அறிந்து அருள்பவன் அல்லவா இறைவன்? பச்சிளம் குழந்தை நம்மார்மீது உதைக்கும்போது அதன் உள்ளக் கிடக்கையான அன்பு ஒன்றையே நாம் காண்கிறோம். இறைவனை நோக்கும்போது நாம் அனைவரும் அவனுக்கு குழந்தைகள்தானே நமது உண்மை அன்பினால் தவறு செய்தாலும் நம்வழிபாட்டை அவன் ஏற்றுக் கொள்வான் அந்த அன்பு என்றும் நீங்காத மாறாத தேயாத அன்பாக இருக்க வேண்டும்


வெள்ளி, 20 டிசம்பர், 2013


பன்னிரு திருமறைகள் பற்றிய சிறு விளக்கம் பண் என்பது பாடலின் ஒலி. `பருந்தும் நிழலும் போலப் பாடலும் பண்ணும்' என்பது பண்டையோர் எடுத்துக் காட்டுரை. ஆகவே பண் என்பது பாடல் வகைகளுக்கும் அவற்றின் சீர் அமைப்புக் கும் ஏற்ப அமைவது. ஆதலால் திருப்பாடல்களைச் சீர் முதலிய யாப் பிலக்கண அமைதி கருதி ஒருங்கு தொகுத்த பண்முறை தொன்று தொட்டு வருவதாயிற்று. இந்தப்பண் முறையமைப்பை ஒட்டியே இப் பதிப்பு வெளிவருகிறது. தோத்திரங்களில் சிறந்தன எவை? ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது. தோத்திரங்களில் சிறந்தன எவை? ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது. பன்னிரு திருமுறையில் முதலாவது வரும் பாடல் "தோடுடைய " என்று துவங்கினார் திருஞானசம்பந்த பிள்ளயார், இதன்பால் சேக்கிழார் பெருமான் விளக்கம் தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது. மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும். உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு. இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள். ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு. தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது. குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார். `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013


தாயுமானவர் சித்தரின் அருள் வேட்கை புலம்கள் சில,: எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறோன்று அறியேன் பாரபரமே எனும் கொள்கையுடைய தாயுமானவரின் அருள்வேட்கை அளப்பரியதாகும், அற்றில் சில என்னை மாயையினின்று நீக்கி ஆணவத்தை அறத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து, காலைத்தூக்கி மன்றத்தில் ஆடும் திருவடியை வணங்கும் நாள் எந்நாளோ? தீமை விளைவதற்கு காரணமான பேராசையாம் புலைத்தொழியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் அறிவு சென்று அடையும் நாள் எந்நாளோ? கண்ணால் கண்டவை நிலையில்லாதவை என்றும் எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறியருளிய சிவ வாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ? இளமைப் பருவத்தின் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கும் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்? கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்பு சாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை விட்டு நீங்குவது எந்நாள்? பெருத்து உயர்ந்து சில நாட்களுக்கு பின் தளர்ந்து தொங்கும் முலைகளையுடைய மங்கையர் மீது படுத்து உறங்கும் காமத்தையுடைய சோம்பலை ஒழிக்கும் நாள் எந்நாள்? மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடைகாட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கி கொள்ள வைக்கும் மங்ககையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்? வாய் திறந்து கொஞ்சு மொழி பேசி ஆசை என்ற கள்ளை தம்மிடமிருந்து மொண்டு ஆடவர் ஊட்டும் விலைமாதர் கடைக்கண்ணில் அகப்பட்டு சுழல்விழியினின்று விடுபடுவது எந்நாள்? கரை வைத்த புடவையின் கொய்சகத்தில் ஆடவரின் உள்ளத்தை எல்லாம் பிணித்து வைத்துக் கொள்ளும் வஞ்சகத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாள்? ஆழ்ந்த கடைப் போன்ற அளவில்லா வஞ்சத்தை உடைய நெஞ்சம் பொருந்திய பயன் இல்லாத மங்கையர் மயக்கத்தினின்று நீக்குவது எந்நாள்? இவ்வுடல் காரண தத்துவஙகள் முப்பத்தாறும், காரிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்று ஆறு தத்துவங்கள் என கூறப்பட்டவர் , அவரவர் கன்மத்துக்கு தக்கவாறு தாமாகவே சென்று வாழ்ந்திருப்பது இந்தவுடல் என்ற நாட்டைப் பித்தனான நான், " நான்" என்ற செருக்கு கொண்டு பிதற்றுதல் பிதற்றுதலை ஒழிப்பது எந்நாளோ? ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச் சேற்றினால் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாள்? ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகபபட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாள்?

சனி, 14 டிசம்பர், 2013

திருநீற்றின் மகிமை


திருநீற்றின் மகிமை விபூதி, பசிதம், பஸ்பம், க்ஷாரம், ரக்ஷா என்ற ஐந்து காரணப் பெயர்கள் திருநீற்றுக்கு உண்டு, நிறைந்த செல்வத்தை அளிப்பதால் விபூதி எல்லாப் பாவங்களையும் உண்டுவிடுவதால் பஸ்பம் , ஒளிவீசச் செய்வதால் பஸிதம், வரக்கூடிய ஆபத்துக்களை கழிப்பதால் க்ஷாரம், பூதம் பிசாசு, பிரமராட்சம், பிறவிநோய், ஆகிய அச்சங்களிலிருந்து காப்பதால் ரக்ஷா என்று கூறப்படுகிறது. சங்கு ஒன்றைத்தவிர மற்ற எந்த வெண்மையான பொருளை எரித்தாலும் அவை கருமை நிறமாக மாறும், ஆனால் கருமையான பசுஞ்சானத்தை எரித்தால் வெண்மையான திருநீறு கிடைக்கிறது, மனதில் ஏற்படும் கருமைகளை போக்கி ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வலிமை திருநீற்றுக்கே உண்டு, சிவாய நம என்று கூறி திருநீறு அணிவதால் கீழ்க்கண்ட சுகங்கள் கிடைக்கும் என்று வள்ளலார் பாடியுள்ளார், " பாடற்கினிய வாக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் கூடற்கினிய அடியவர் தம் கூட்டமளிக்கும் ஆடற்கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆனை கண்டால் தேடற்கரிய திருவனிக்கும் சிவாய நம என்றிடு நீறே" திருநீறு சிறந்த கிருமி நாசினி உடலிலி பூச துர்நீைரை இழுக்கும், முகத்தில் பூச முகவாதம் வராது தடுக்கும், நெற்றியில் மூன்று கோடுகளாக திருநீறு தரிப்பதால் கீழ்கண்ட ந்ன்மைகள் உண்டாகும், 1) வாதம், பித்தம், சிலேத்துவம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் 2) மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும் 3) ஆணவம், கர்மம், மாயை நீக்கும் 4) காமம், வெகுளி, மயக்கம் தீரும் 5) பிராரத்தம், சஞ்சிதம், ஆகாம்யம் என்ற தத்துவங்களை உணர்த்தும் 6) ஆன்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம், ஆகியவற்றை தெளிவுறச் செய்யும் 7) சந்தேகம், மயக்கம், விபரீதம், ஆகியவற்றை போக்கும் 8) இறப்பு, நிகழ்வு எதிர்வு ஆகியவற்றை தடுக்கும் 9) காலம், பொருள், சேதம், ஆகியவற்றை தடுக்கும் கூன் பாண்டியன் என்ற மதுரை மன்னனின் வெப்பு நோய் நீங்க திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருநீற்றுப் பதிகத்தை திருநீற்றை பூசிக் கொள்ளும் பொழுது உச்சரிக்க வேண்டும், திரு நீற்றுப்பதிகத்தில் சில வரிகள்: மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு ெந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஆற்றல் அடல் விடையேறும் ஆலவாயான் திருநீற்றை போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி தென்னவன் உடலுற்ற தீப்பணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!

வியாழன், 12 டிசம்பர், 2013


சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன, அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார். இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும். அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே எனும் கொள்கையுடையவர் தாயுமானவர்

செவ்வாய், 10 டிசம்பர், 2013


பெரியோர் சிறியோர்! பாடியவர்: கணியன் பூங்குன்றன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

சொர்ணாகர்ஷண கிரிவலம்: நேரடி அனுபவம்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013


இறைவழிபாட்டில் மலர் தூவியும் மாலை தொடுத்து அணிவித்து வழிபாடு செய்வது என்பதும் மந்திரங்கள் ஒதி, வழிபடுவது போல் முக்கியத்துவம் கொண்டதாகும், " யாவருக்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்கிறது திருமந்திரம், "சலம்பூவோடு மறந்தறியேன் " என்கிறார் நாவுக்கரசர், எனவே மலர் தூவி வழிபாடும் இறைவழிபாட்டில் முக்கியத்துவம் அடைந்துள்ளது என அறியலாம். அண்ட சராசரத்தையே அடக்கி ஆளும் ஆண்டவனுக்கு படைக்கும் பபடையல் பொருட்களை நாம் பக்தி சிந்தையுடன் பணிந்து ஏந்தி கொண்டு செல்ல வேண்டும். சிலர் வழிபாட்டிற்கு கொண்டு ெசல்லும் படையல் பொருட்கள் மலர் மாலைகளை யாதொரு சிறத்தையின்றி லவகமாக கொண்டு செல்கின்றனர். நம்மிடம் வேலலைபார்க்கும் பணியாளர்களிடம் நாம் எதிர்பார்க்கும் மரியாதையை பணிவை இறைவனுக்கு காட்ட வேண்டாமா? இதனை நாம் பக்தி சிரத்தையுடன் பபார்ப்பதே இல்லை, இந்த பூத்தொடுத்து செய்யும் எளிய வழிபாட்டையே முக்தியடைந்த முருகநாயனாரைப்பற்றி சேக்கிழார் பெருமான் மிகவும் தெளிவாக பெரியபுராணத்தில் விளக்கியுள்ளார். இவர் மலர்கள் பரித்து மாலை தொடுத்து சிவனுக்கு அணிவித்து சிவத்தொண்டு செய்து , தான் செய்த மலர் வழிபாட்டு தொண்டினாலேயே முக்தி பெற்றவர். அன்னாரின் மலர் வழிபாட்டு முறையே சிவ வழிபாட்டிற்கு இலக்கணம் அமைத்தது,இறைவனுக்கு படைக்கவிருக்கும் படையல் பொருட்களை / அரிச்சனை சாமான்களை தொப்பூளுக்கு கீழே தொங்கவிடக்கூடாது, பணிவுடன் தலையில் சுமந்து செல்லாம் அல்லது கைகளில் தாங்கிப்பிடித்துக் கொண்டு ஏந்திச் செல்லலாம், அது இறைவனிடம் நாம் கொண்டுள்ள பணிவைக்காட்டுமம் அதுபோல ஆசாரமில்லாதவன், நோயாளி கொணர்ந்த பூ, பழையது உதிர்ந்தது , பழுக்கடித்தது எச்சம் பட்டது அசுத்த மண்ணில் விழுந்தது கிடந்தது எனும் பூக்கள் இறைவருக்கு உகந்ததன்று் இவற்றை அறிந்து பணிவுடன் செய்யும் இறைத்தொண்டடு ஒன்றே இறைவனுக்கு உகந்தாகும், அதுவே உயர்வைத் தரும்

புதன், 4 டிசம்பர், 2013


காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது. அஷ்ட லிங்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். ராஜகோபுரம் தரிசித்து, வெளியே வந்ததும், முதலாக வருபவர் இந்திர லிங்கம். தேவர்களின் தலைவன் இந்திரனால் நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் உரிய லிங்கம். நீண்ட ஆயுள், கீர்த்தி வழங்குபவர். கிழக்கு திசைக்கு அதிபதி. இரண்டாவதாக வருபவர், அக்னி லிங்கம். அக்னி பகவானால், நிறுவப்பட்ட லிங்கம். பக்தர்களுக்கு, நோய் நொடிகளையும், பயத்தையும் போக்குபவர். சந்திரனுக்குரிய லிங்கம். அக்னிலிங்கத்துக்கு முன் வரும் அக்னி குளத்தில் நீரில் கால்கள் நனைய, எதிரில் இருக்கும் மலையை ஒரு பௌர்ணமி இரவில் பாருங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு still ஆக இருக்கும். அனுபவித்து பாருங்கள். தென்கிழக்கு திசைக்கு அதிபதி. மூன்றாவதாக எம லிங்கம். எமதர்மரால், நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், செவ்வாய்க்குரிய லிங்கம். தேடி வரும் பக்தர்களுக்கு, நீண்ட ஆயுள் வழங்குபவர். தெற்கு திசைக்கு அதிபதி. அடுத்து வருபவர் நிருதி லிங்கம். தென்மேற்கு திசைக்கு அதிபதி. கருவறை அருகில், நல்லதொரு ஆன்மிக அதிர்வை உணர முடியும். மற்ற தேவர்களை எல்லாம் நாம் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தாலும், நிருதி இதற்கு முன் நான் கேள்விப்படாதவர். சீரிய தவத்தினாலே, அவருக்கு இந்த பதவி. உலகில் உள்ள, அத்தனை பூதங்களுக்கும், தலைவர் நிருதி. நவ கிரகங்களில், ராகுவுக்கு உரிய லிங்கம். அண்டி வரும் பக்தர்களுக்கு, ஆரோக்கியம், புகழ், சொத்துக்களை அள்ளி வழங்குபவர். குழந்தை பேறு வேண்டுபவர்கள், இங்கே மனமுருகி வேண்ட, அவர்கள் பலன் அடைவது திண்ணம். அடுத்து வருபவர், வருண லிங்கம். வருண பகவானால், நிறுவப்பட்டு வழிபடும் லிங்கம். நீதிதேவனான சனி பகவானுக்கு உரிய லிங்கம்.இந்த உண்மை தெரிய வந்தால், பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அலைமோதும். . ஆனால், நடந்து செல்லும் பக்தர்களின் ஒரு அவசர கதி 'சல்யூட்' ஐ ஏற்றுக்கொண்டு அமைதியாக அருள் பாலிக்கிறார். வேண்டி வரும் பக்தர்களை நோய் களிலிருந்து விடுவிக்கிறார். குறிப்பாக நீரினால் ஏற்படும், அனைத்து வியாதிகளும் சொஸ்தமாகிவிடும். மேற்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார். ஆறாவதாக , வடமேற்கு திசைக்கு அதிபதியாக அருள்பாலிப்பவர் வாயு பகவானால் நிறுவப்பட்ட வாயு லிங்கம். நவ கிரகங்களில் 'கேது' வுக்குரிய லிங்கம். ஆத்மார்த்தமான வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இதயம், நுரையீரல், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளை நீக்குகிறார். அடுத்து வருபவர், வடக்கு திசைக்கு அதிபதியாக வரும் குபேரனால், நிறுவப்பட்டு வழிபட்டு வரும் குபேர லிங்கம். நவக் கிரகங்களில் 'குரு' பகவானுக்குரிய லிங்கம். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு , வாழ்வில் முன்னேற்றங்களைத் தந்து , பொருளாதார நிறைவை ஏற்படுத்தித் தருபவர். கிரி வலப் பாதையில், கடைசியாக வருபவர் ஈசான்ய லிங்கம். வட கிழக்கு திசைக்கு அதிபதியான ஈசன்யானால் நிறுவப்பட்ட லிங்கம். நவக் கிரகங்களில் புதனுக்குரிய லிங்கம். நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்குபவர். மேற்கூறிய அஷ்ட லிங்கங்கள் தவிர மலை சுற்றும் பாதையில் ஏராளமான இறை சந்நிதிகள் உள்ளன. வலம் வரும்போது அடி அண்ணாமலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள அம்மனின் அழகு முகத்தை அருகில் இருந்து தரிசித்துப் பாருங்கள். ஆதி அண்ணாமலை கோவிலுள் சென்று தரிசித்து வர நீங்கள் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். உள்ளே இருக்கும்போது நீங்கள் நிச்சயமாக ஒரு அதிர்வை உணர முடியும். அஷ்ட லிங்கங்களை நிறுவிய தேவர்கள் பலமுறை நேரில் வந்து சூட்சமமாக வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள். கலி முற்றி வரும் இந்த காலத்தில், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது எதோ ஒரு தேவை இல்லாத செயல் போல தோன்றுகிறது நிறைய மக்களுக்கு. ஆனால், வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு உள்ளேயே உழன்று கொண்டு , எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடும் அன்பர்களுக்கு , அண்ணாமலை ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஒரு முறை கார்த்திகை தீப தரிசனம், உங்கள் தலை முறைக்கே வழி காட்டும். சென்ற கார்த்திகை தீபத்திற்கு, கிட்டத் தட்ட 45 லட்சம் பக்தர்கள் கூடினர். தமிழ் நாட்டில் இது ஒரு அபூர்வ நிகழ்வு. வாஸ்து சாஸ்திரப்படி , அற்புதமாக அமைந்த இரண்டு ஸ்தலங்கள் : திருவண்ணாமலையும் , திருப்பதியும் ஆகும். உங்கள் வாழ்வில் நீங்கள் மென்மேலும் உயர , உங்களால் முடிந்தவரை இந்த ஸ்தலங்களுக்கு சென்று இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். பரம்பொருளின் துணை உங்களுக்கு தேவையான நேரத்தில் கச்சிதமாக கிடைப்பது உறுதி.அருணகிரி நாதர் முதல் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி வரை பலப்பல மகான்கள் வாழ்ந்த ஸ்தலம்.

திருவண்ணாமலையின் அர்ப்புதங்கள்! திருவண்ணாமலை என்று சொன்னாலும் முத்தி, தீப ஜோதியை பார்த்தாலும் முக்தி. கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகள் சித்தர்கள், பார்வையில் மரகத மைலையாகவும், பாமர மக்களுக்கு கல் மலையாகவும், காட்சி தருகிறது, இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன, இம்மலை சித்தர்கள் வாழும் சதுரகிரி மற்றும் அகத்தியர் வாழும் பொதிகை மலை, சேர்வராயன் மலைகளை விட மிகவும் சிறப்பு பெற்றது, இம்மலை பல்லாயிரக்கணக்காணவர்களை கவரும் மகத்துவம் பெற்றது, இங்கு ஆயிரக்கணக்கான சித்தர்கள் அருளாளர்கள், மகான்கள் ஞானிகள் ரிசிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதிகள் உள்ளதால் அவர்களின் ஆத்மாக்கள் இம்மலையிலேயே உலவிவருவதால் அவர்களின் வைப்பிரேசன் என்ற ஈர்ப்புத்தன்மை மக்களை ஆன்மீக வாதிகளை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்குள்ள அண்ணாமலையாகிய இறைவன் முதன்மையான மூலாதரமாக விளங்கினாலும், அவனையே வேண்டி முத்தி பெற்ற அருளாளர்கள் , சித்தர்கள் இறைவனின் - அண்ணாமலையானின் - செயல்திறனை ஊக்குவித்து மக்களுக்கு நேரிடையாக அருளாசி வழங்குகிறார்கள். எனவே தான் மற்ற சிவதளங்களை விட திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிவனின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகும், மற்றவை சிதம்பரம் ஆகாயம், காளகஸ்தி வாயு, திருவானைக்கால் நீர் தலம், காஞ்சி நிலம் இவற்றில் இறைவன் அக்னியாக காட்சி தருகிறார் இங்கு, இம் மலை இமயமலையை விட மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இம் மலை ஈசானம் தத்புருஸம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின்ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக காட்சி ( பஞ்சலிங்கம்) தருகிறது, இக்காட்சியை கிரிவலம் வரும்போது குபேரலிங்கம் தாண்டியவுடன் காணலாம். கிரிவலம் வரும் போது கீழ்திசையிலிருந்து பார்த்தால் ஓன்றாக தெரியும் மலையாகவும், சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும் மலையின் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் - கெளதம ஆசிரமத்திற்கு எதிரிலிருந்து பார்த்தால் மூன்று பிரிவாகத் தெரியும், இதை திரிமூர்த்தி தரிசனம் என்று போற்றுவார்கள். இந்த திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம் சேசத்திரி சுவாமிகள் தன்னை முழுவதுமாக மண்ணால் மூடிக் கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் மண் கறுப்பு சிவப்பு நிறத்தில் காணப்படும், இஙகிருந்து சற்று நடந்தால் தொடர்ச்சியாக நான்கு மலைகள் போல் காட்சி தரும் வலம் வந்து முடிக்கும் தருவாயில் அதாவது குபேரலிங்கம் தாண்டியவுடன் ஐந்து மலையாக அதாவது பஞ்சலிங்கமாக காணப்படும். திருமால் பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்க சிவபெருமான் லிங்கோத்பவராக ஜோதிப் பழம்பாக காட்சி தந்த திருத்தலம் இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தி துன்பப்படவே சிவபெருமான் மலையாகி நின்றதாக புராணங்கள் கூறுகின்றன. இம்மலையில் தவமிருந்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து அர்த்தநாரீஸ்வராக காட்சி கொடுத்த தலமும் இங்கேதான்.இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்கிறது புராணம், திருவண்ணாமலை வலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம், ஒருமுறை வலம் வரவேண்டுமென்று எண்ணி ஒரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனும், இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயேக பலனும், புண்ணிய தீர்ததங்களில் நீராடிய பலனும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேக யாகப் பலனுடன் தான தர்மங்கள் பல செய்த பலன்களும் நான்கு அடி எடுத்து வைத்தால் எல்லா யாகப்பலன்களும் கிட்டும் என்று அருணாசலபுராணம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களையும், லிங்கங்களையும் தரிசித்தால் பேறுக்ள பல பெறலாம் என புராணம் கூறுகிறது. கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது இந்திர லிங்கமாகும், கிழக்கு திசையில் அருள்புரியும் இந்திர லிங்கத்தை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ளது இரண்டாவது லிங்கமான அக்னி லிங்கமாகும் இது தாமரைக்குளம் அருகே அமைந்துள்ளது, இந்த லிங்கத்தை வழிபட்டால் நோய் பயம் நீங்கும், மூன்றாம் லிங்கமாக தெற்கு திசையில் இருப்பது எம லிங்கம். இந்த லிங்கத்தின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி எம லிங்கத்தை வழிபட எமபயம் நீங்கும். தென்மேற்கு திசையில் நான்காம் லிங்கமாக உள்ளது நிருதி லிங்கம், இங்கிருந்து மலையை பார்த்தால் இறைவனும் இறைவியும் இணைந்த தோற்றம் போல் ஒர் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்ததம் எனப்படுகிறது இந்த லிங்கத்தை வழிபட சனியின் தாக்கம் குறையும். ஐந்தாவது வருண லிங்கம் மேற்கில் உள்ளது. இங்கு வருண தீர்த்தம் உள்ளது. வருண லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும் நீரிழிவு தாக்கம் இருந்தால் கட்டுக்குள் அடங்கும். ஆறாவதான வாயு லிங்கம் வடமேற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசித்தால் எதிரிகள் தொல்லை நீங்கும் மூட்டுவலி முழங்கால் வலி நாளடைவில் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. வடதிசையில் உள்ளது ஏழாவதான குபேர லிங்கம் , இந்த லிங்கம் காசுக்களை அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ செழிப்பு வளரும், எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் வடக்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட துன்பங்கள் விலகும். இந்த அஸ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. திருவண்ணாமலையோ சிவபெருமானாக உள்ளதால் நந்திகளும் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. மேலும் கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்களும் உள்ளன, விநாயகர் துர்க்கை முதலான ஆலங்களும் உள்ளன வணங்கி பேறு பெற்றுய்யலாம். கிரிவலம் வருவோர் திருவண்ணாமலையை மட்டும் வலம் வராமல் அடி அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையையும் சேர்த்து வலம் வரம் வேண்டும் இவ்வாறு வலம் வந்தால் எதிர்பாரரத நல்ல பலன்கள் கிட்டும் என்பதில் யாதொரு ஐயமில்லை, ஓம அருணாசல ஈஸ்வராய நம!

சனி, 9 நவம்பர், 2013


மனம் செம்மை பெற ஆன்மிகம் மனம் படைத்தவன் மனிதன், மனத்தை மறந்தால் மனித இயல்பு அகன்று விடும். மனத்தெளிவும் மன உயர்வும் பெற்றவன் வாழ்வின் சுவையை உணர்வான். ஆறறிவு அற்ற விலங்கினம் உடல் வளர்ப்புடன் நின்று விடும். ஆறறிவு பெற்றவனுக்கு மன வளர்ச்சி தேவை. லோகாய சுகங்கள் உடலோடு நின்றுவிடும். உள்ளத்தை தூய்மையாக்காது. இது நல்லது, இது கெட்டது, இது உண்மை-இதுபொய், இது இருப்பது- இது இல்லாதது, இது அழிவது - இது அழியாதது.இது இன்பபம் கொடுப்பது - இது துன்பம் கொடுப்பது இந்த பாகுபாடுகள் சிந்தனை வளம் பெற்றவனிடம் தென்படுஅ இதை விவேகம் அல்லது பகுத்தறிவு என்கிறோம். உடலை அக்குவேராக ஆனிவேராக ஆராய்ந்தால்இதில் சத்தான உண்மை யான அழிவற்ற ஆன்மாவை அடையாளம் காணலாம். ஆன்மாவைத்தவிர மற்ற உறுப்புகள் எல்லாம் அழிவைச் சந்திக்கும், அழியாதது ஆன்மா அழிவது உடல் , அது பகுத்தறியும் பக்குவ மனம் படைத்த சிந்தனையாளர்களுக்கு மட்டுமே இலக்காகும். சேசத்திரி சாஸ்திரிகள் சக்தி விகடன் தங்கள்சிந்தனைக்கு உடலில் சந்தனம் பூசினால் குளிர்ச்சியை மனம் உணரும். உடம்பில் அடிபட்டால் வேதனையை மனம் உணரும். உள்ளதை உள்ளபடி உணர மனத் தெளிவு வேண்டும். அதை அளிக்கும் திறன் பண்டைய அறநூல்களுக்கு உஉண்டு. மாற்று வழி இன்று வரை உருவாகவில்லை சேசத்திரி சாஸ்திரிகள் சக்தி விகடன்

வியாழன், 7 நவம்பர், 2013

நல்ல நேரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகச...

நல்ல நேரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகச...: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் ...

திங்கள், 4 நவம்பர், 2013


எளிய இறைவழிபாடு கோவில் சென்று பெரும் பொருள் செலவு செய்து அா்ச்சனை செய்துதான் வழிபாடு செய்யவேண்டுமென்பதில்லை. அா்ச்சனை என்பது இறைவன் பெயரை திரும்பத் திரும்ப உச்சாித்து நமது எண்ணங்களை வேண்டுதலை ஆண்டவனிடம் பிராத்திப்பதுதான் இதற்கு நீங்களே ஆண்டவன் நாமத்தை கூறி உங்களுடைய வேண்டுதல்களையும் ஆண்டவன் முன்பாக நின்று இறைச்சலின்றி வேண்டிக்கொண்டால் அதுவே அா்ச்சனையாகும், அா்ச்சகரும் உங்கள் பெயா் பிறந்த நட்சத்திரத்தை கூறிக்கொண்டு உங்களுைடய வேண்டுதல்களை ஆண்டவன் நாமத்தை கூறிக்கொண்டே அா்ச்சனை செய்கிறாா்.இறைவன் புகழ்கூறும் பாடல்கள் பல, அவற்றை நாம் பாடினால் அதுவும் அா்ச்சனை ஆகும். " அா்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக என்றாா் தூமறை பாடும் வாயாா் " என்று இறைவனே சொல்வதாகச் சேக்கிழாா் பாடுகிறாா். " யாவா்க்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை" என்று கைப்பொருள் செலவில்லாது இறைவனை வணங்கும் வழிமுறை சொல்கிறாா் திருமூலா்.இது போன்றே எளியமுறையில்வழிபடுவதை " சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்நாமம் என் நாவில் மறந்தறியேன்" என்று இறைவனுக்கு நீராட்டி மலா்சூட்டி தூபதீபம் காட்டுதல் அவனை எண்ணி மகிழ்தல் தமிழால் இசைபாடுதல் அவன் பெயரை எப்பொழுதும் உச்சாித்தல் அவனை மறவாதிருத்தல் இவை எளிய இறைவழிபாடு என அப்பா் சுவாமிகள் பாடுகிறாா். மேலும் ஞானசம்பந்தா் திருவாக்கிலும் சொல்லும் பொருளுமாய் நின்றாய் தாமே, தோத்திரமும் சாஸ்திரமும் ஆனாய் தாமே என்றும் தோத்திரங்களும் சாஸ்திரங்களும் சிவனாாின் திருவாக்குகளே என்று சம்பந்தா் கூற்றின் மூலமும் அறியலாம் சமயகுறவா்களின் தேவாரப்பாடல்களிலும் ஏன் பன்னிருதிருமுறைகளிலும் இறைவனை வழிபட தேவாரப்பாடல்களும் திருமறைபாடல்களும் இறைவனை போற்றி புகழ்பாடும் பாட்டுக்களாகத்தானே உள்ளது. அவா்கள் எல்லோரும் தோத்திரப்பாடல்கள் பாடித்தானே அருள் பெற்றதை நாம் தெளிவாக அறியலாம். எனவே பெரும் பொருட்செலவு செய்வதைக் காட்டிலும், இறைவன் சந்நிதியில் அவன் பெயரை மீண்டும் மீண்டும் உச்சாிக்கலாம் அவன் புகழ் கூறும் தேவாரப்பாடல்களை பாடி அா்ச்சனை இறையருள் பெறலாம்,இது ஒரு நிறைவான இறைவழிபபாடு ஆகும்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

chidambara ragasiyam


உயிர்கள் அனைத்துமே விருப்பமுடன் எதிர்நோக்கும் ஒரே விஷயம், ஆனந்தம். எறும்பு முதல் நான் முகன் வரை எப்போதும் நாடுவது ஆனந்தத்தையே! ஆனால் அது எளிதில் வாய்ப்பதாக இல்லை. துன்பங்களே அனைவர் வாழ்விலும் மிகுந்து காணப்படுகின்றன. இதற்குக் காரணத்தைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை." ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று அனைத்து அருளாளர்களும் உரைத்துள்ளனர். அந்த ஆசைகள் நீங்காதவரை" ஆனந்தம்' என்பதை அனுபவிக்கவே முடியாது. மண், பெண், பொன்னின் மூலம் இன்பம் கிடைப்பதாகப் பலர் எண்ணுகிறோம். ஆனால் இந்த இன்பங்கள் நிலைப்பதில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சியில், இன்பங்களாக நாம் கருதிய விஷயங்கள்பல, நீர்மேல் குமிழ்களாக மறைந்து விடுகின்றன. மேலும் மரணம் என்பது ஆண்டியென்றோ,அரசனென்றோ வேறுபாடு பார்க்காமல் எந்தப் பொழுதிலும் தீண்டிவிடும். மரணத்துக்குப் பின் நாம் செய்த புண்ணிய - பாவங்களைத் தவிர வேறு எதுவுமே நம்மோடு வரப் போவதில்லை. இந்த இரண்டும், நமது மறுபிறவிக்கும் காரணமாய் அமைகின்றன. இதனால்தான் உலகியல் இன்பங்களைச் "சிற்றின்பம்' என்றிகழ்கின்றனர் மேலோர். எனவே அழியாத ஆனந்தத்தை அடைய வேண்டியது அவசியம். அந்த நிலைத்த ஆனந்தம் எதிலுள்ளது...?அது' பரமாத்மாவை அடைவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்' என்பதே அருளாளர்களின் அறிவுரை. பரமாத்மாவை அடைவது மட்டுமல்ல, அதற்காகச் செல்லும் பாதையே ஆனந்தகரமானதுதான்! "ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்ற மகான்கள், ஆண்டவன் மீது ஆசை வைப்பதை மட்டும் வலுவாக ஆதரிக்கின்றனர்.”ஹேசிஹேசிமாஜஆஸ! ஜன்மஜன்மீம்துஜாதாஸ' என்று பாடுகின்றார் துகாராம் சுவாமிகள். "எனக்கு ஒரேயொரு ஆசைதான் எப்போதும் உள்ளது; உன் பக்தனாக எல்லாப் பிறவிகளிலும் நான் பிறக்க வேண்டுமென்பதே அது 'என்பது அவ்வரிகளின் பொருள். பாருங்கள்! "பிறவாமை' என்ற நிலையை அடைவது மட்டுமே ஆன்மீகத்தின் உச்சம் என்பது உண்மைதான் என்றாலும்,"இறையடியாராகப் பிறக்க முடியுமெனில் எத்தனை ஜன்மங்கள் வேண்டுமானாலும் மண்ணில் பிறக்க விரும்புகின்றோம்' என்பதே பக்தர்களின் இதயநாதமாக இருக்கின்றது. ஸ்ரீநடராஜப்பெருமானின் குனித்தபுருவத்தையும், கொவ்வைச் செவ்வாயையும், பனித்த சடையையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணீற்றையும், இனித்த முடைய எடுத்த பொற்பாதத்தையும் பார்த்துப் பார்த்து உருகிய அப்பர் பெருமான், "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று அடித்துச் சொல்கின்றார். பிறவாமை எனும் வரத்தினை, ஊர்த்துவ தாண்டவமாடும் பரமேஸ்வரனிடம் யாசித்த காரைக்கால் அம்மையார், "ஒருவேளை நான் மறுபடி பிறக்க வேண்டுமெனில், உன்தாளிணைகளை மறவாமல் இருக்க வேண்டும்' என்று இறைஞ்சுகிறார். உண்மையான பக்தர்கள், பிறப்பெடுப்பதைக்கூட" ஆனந்த அனுபவமாகவே' கருதுகின்றனர். 'மனித்தப்பிறவி' என்று வலியுறுத்திய அதே அப்பரடிகள்,"புழுவாய்பிறக்கினும் புண்ணியா! உன்னடி என் மனத்தேவழுவாதிருக்கவரம் தரவேண்டும்' என்றுபாடி, சிவபெருமான்மீது, தான் வைத்துள்ள பேரன்பை வெளிப்படுத்துகிறார். "எனக்கு நரஜன்மம் வாய்க்காமல், புழுஜன்மம் கிடைத்தாலும் பரவாயில்லை; ஈசனே! உனது திருவடிகளை மறவாத புழுவாக நான் இருந்தால் போதும் 'என்கிற போது அப்ப ரடிகளின் அன்புள்ளம் இமயமாய் உயர்ந்திருப்பதை உணரமுடிகிறதல்லவா? "ஹேசிமஜகடோஜன் மஜன்மாந்தரீம்! மாகணே ஸ்ரீஹரிநாமதுஜே' என்று பாடியுள்ளார் நாமதேவசுவாமிகள். ""இறைவனே! எனக்கு எத்தனைப் பிறவிகளை வேண்டுமானாலும் கொடு! ஆனால் எல்லாப் பிறவிகளிலும் உன் திருநாமங்களைச் சொல்பவனாகவே ஆக்கு''என்பதே அவர் கேட்கின்ற ஒரேவரம். எது இந்த அடியார்களை இப்படியெல்லாம் ஏங்க வைக்கிறது...? வேறொன்றுமில்லை! சாதாரண மனிதர்கள், புலன்களால் கட்டுண்டு கிடக்கின்றனர். அந்தப் புலன்களால் நுகரப்படும் விஷயங்களே இன்பம் என எண்ணி, "மாயை'யினால் தடுமாறுகின்றனர். அந்த இன்பங்களோ கழுவப்படும் மீன்களில் நழுவிப் போகும் மீன்கள் போல் துள்ளி மறைகின்றன. அப்போது," ஏன்பிறந்தோம்?' என்று நொந்து, நொந்து, நோயில் விழுந்து, பாயில்படுத்து, துவைத்தெடுக்கப்பட்டு சவமாகிப் போகின்றனர். பரிதாபம்! ஆனால் மகான்களோ புலன்களை சிற்றின்பத்தின் பாதையில் செல்ல விடுவதேயில்லை. அவர்கள், தங்கள் மனதால் இறைவனையே சிந்திக்கின்றனர்! கண்களால் அவனுடைய திருமேனி அழகை ரசிக்கின்றனர்! காதுகளால் அவனது திவ்விய சரிதங்களைக் கேட்டு மகிழ்கின்றனர்! நாவினால் அவன் திருநாமங்களைச் சொல்லி இனிக்கின்றனர்! கரங்களால் ஈசனது ஆலயங்களில் உழவாரப்பணி செய்து உவகை கொள்கின்றனர்!" சேர்ந்தறியாக்கையானை' நோக்கிக் கை கூப்பி நெகிழ்கின்றனர்! கால்களால் அவனது ஆலயத்தை வலம் வருகின்றனர்...இப்படி ஈசனுக்காகவே ஐம்புலன்களையும் அர்ப்பணித்துவிட்டதால், முக்தியில் கிடைக்கும் இன்பத்தை இங்கேயே அனுபவித்து,"ஜீவன் முக்தர்களாக' வலம் வருகின்றனர். அதனால் இந்த உலகம் நமக்குத் தெரிவதுபோல நரகமாக அவர்களுக்குத் தெரிவதில்லை; ஆனந்தபுவனமாகவே அகிலத்தைக் காண்கின்றனர். யாருக்கு எந்த நதியைப் பார்த்தாலும் பரமேஸ்வரனின் சடையிலிருந்து பெருகும் கங்கையாகவே தோன்றுகிறதோ, மலைகள் எல்லாம் கயிலையாகத் தெரிகின்றதோ, மேகங்கள் வெண்ணீற்றை நினைவுபடுத்துகின்றதோ, நீலவானம் நீலகண்டத்தை நினைவூட்டுகின்றதோ, பசுக்களைப் பார்க்கும்போது பசுபதி நாதனின் கருணை புலப்படுகின்றதோ.. அட..! சுடுகாட்டைப் பார்த்தாலும்," பேய் வாழ்காட்டகத்தாடும் பிரானின்' மீது அன்பு மேலிடுகிறதோ அவர்களுக்கு "மோட்சபூமி' என்ற ஒன்று தனியே தேவைப்படவாபோகின்றது? எறும்பைக் கண்டால் எறும்பியூர்! மதகஜத்தைக் கண்டாலும - சிலந்தியை கண்டாலும் ஆனைக்கா! நாரையை பார்த்தால் திருநாரையூர்! மயிலைப்பார்த்தால் மாயூரம்! வராகத்தை பார்த்தால் திருவண்ணாமலை! பாம்பு தட்டுப்பாட்டால் திருப்பாம்புரம்! ஈக்களைக் கண்டால் ஈங்கோய்மலை! புலியைப்பார்த்தால் பெரும்பற்றப் புலியூர், அல்லது திருப்புலிவனம்! சிங்கத்தைக் கண்டால் திரிபுவனம் சரபேஸ்வரர்! மாடுகளை நோக்கினால் திருவாவடுதுறை! ஆடுகளைக் கண்டால் திருவாடானை....!இப்படி எதைக் கண்டாலும் திருத்தலங்களின் நினைவுகளில் மூழ்கிப் போகிறவர்களுக்கு சரீரம் விழுந்த பிறகுதானா முக்தி நிலைவாய்க்கிறது? இல்லவேயில்லை! அப்போதைக்கு இப்போதே அந்த ஆனந்தம் வந்து விடுகிறதே! எனவே புலன்களால் உந்தப்பட்டு எழுகின்ற ஆசை மட்டுமே அபாயகரமானது! அந்த ஆசையைக் கொல்ல வேண்டும். மாறாக, புனிதர்க்கெல்லாம் புனிதரும், தேவர்களுக்கெல்லாம் தேவருமான மஹா தேவனாகிய சிவபெருமானின் மீது ஆசை வைத்து, அப்பர் பாடிய "திருஅங்க மாலை'யில் கூறப்படுவதுபோல் எல்லா அவயவங்களையும் அரனாருக்கே அர்ப்பணிக்கும் ஆசையை அளவுக் கதிகமாய்க் கொள்ளவேண்டும். அதில் மட்டும் நிரந்தர ஆனந்தம் கிடைக்கும். எவ்வாறு மலத்திலுள்ள புழுக்களுக்கு சந்தனத்தின் அருமை தெரியாதோ, அதேபோல் புலனின் பங்களில் மூழ்கிய புல்லர்களுக்கு அடியார்கள் அனுபவிக்கும் ஆனந்தம் விளங்கிக் கொள்ள முடியாதவிஷயமே! "மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்' என்று பாடுகிறாள், திருமாலின் பக்தையான ஆண்டாள். காமம் உள்ளிட்ட அறுவகை துர்குணங்களை அப்பர் பெருமான் போல் பல அடியார்கள் கண்டித்துள்ளனர். புலனின்பமே மனிதனை நரகத்தில் வீழ்த்துகிறது! ஆயின்புலன்களை வெல்வதும் கடினம்தான்! இந்நிலையில் தப்பிக்க என்னவழி? அதையும் அடியார்களே சொல்லித் தருகின்றனர். "அதே புலன்களை ஆண்டவன் பக்கம் திருப்பி விட்டால் ஆனந்தம் என்பது என்ன வென்று அக்கணமே புரிந்துவிடும்' என்று உபதேசிக்கின்றனர். ஆண்டவன் மீது வைக்கின்ற ஆசை, நாசத்தை உண்டு பண்ணாது என்பதைஅவர்கள்அறிவார்கள். அதனால்தான், ""பவளத்திருவாயால்" அஞ்சேல்' என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே'' என்றும்,""ஆசையெலாம் அடியார் அடியோ மெனும் அத்தனை ஆகாதே'' என்றும் மாணிக்கவாசகர் முழங்குகின்றார். "இப்படிப்பட்ட மேன்மை உணர்வு எளிதில் எல்லோர்க்கும் வாய்த்துவிடுமா?' என்று எவருமே மலைக்கத் தேவையில்லை."மாயை' என்னும் அம்பறாத் தூணி, மன்மத பாணங்களை ஏவி, நம்மைக் கவிழ்க்கத்தான் முயற்சிக்கும். அது வெறும் மலரம்புதானே? சிவநாமம் என்பதோ "பாசுபத' அஸ்திரம்! நாம் அந்த அஸ்திரத்தை புலன்களுக்கும், வினைப்பயன்களுக்கும் எதிராக வீசத் தொடங்கிவிட்டால் வெற்றி நிச்சயம்."வித்தக நீறணி வார்வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே' என்று பாடுகிறார் சிவ பக்தப்படையின் தளபதியாய் நிற்கும் ஆளுடைய பிள்ளையார். பிறகும் ஏன் அச்சம்? ஐந்தெழுத்தால் ஆகாதது அவனியில் ஏதும் உண்டா? எனவே உலக இன்பங்களாக நாம் கருதும் துக்கங்களை உடனடியாக விட்டொழிப்போம். ஐந்தெழுத்தின் துணைகொண்டு, பீளை உடைக் கண்களால் சிற்றம் பலத்து அரன் ஆடல்காண்போம்! அது ஆனந்தத்தாண்டவம்! தேடிப் பார்த்தாலும் இவ்வுலகினில், வேறெந்த விஷயத்தாலும் நிலைத்த ஆனந்தம் ஏற்படாது! ஆயின், திருநாவுக்கரசர் பாடியது போல," சிற்றம்பலவன் திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே?' என்று இருந்துவிட்டால் தினம் தினம் ஆனந்தமே! அந்த நிலையை அடைந்து விடின் அன்றாடம் ஆதிரை திருவிழாதான்! நம் மனமென்ற பொன்னம்பலத்தை, ஆனந்தமா நடராஜ பெருமான் ஆடுகின்ற களமாக ஆக்கிக் கொண்டால் எல்லா மாதங்களுமே "மார்கழி' யாகி, உள்ளம் குளிர்ந்து உகப்படையலாம். இந்தப்புரிதலே" ஆருத்ரா தரிசன' வைபவத்துள் அடங்கியுள்ள" சிதம்பர' ரகசியம்.
அன்பே சிவம் என்பது நம் இதயத்தில் தானாக ஊறவேண்டிய ஒரு நெகிழ்வு,அன்பின் வழியாக பிறப்பது கருணை. அன்பே கருணையாக மாறுகிறது. அன்பு இல்லாத இடத்தில் கருணை பிறபப்பில்லை. ஆகவே கருணையை அன்பின் குழந்தை என்கிறாா் வள்ளுவர். " அருள் என்னும் அன்பு ஈன் குழவீ " என்கிறாா். அருள் என்பது கருணை/ இறக்கம். இதை அன்பே கடவுள் (Love is God) என்றனா். அந்த அன்பைேய சிவமாகக் கண்டாா் திருமூலா். இதனை அவா் " அன்பு சிவம் இரண்டெண்பா் அறிவிலாா் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலாா் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமா்ந்திருந்தாரே " என்கிறாா் அன்பினில் விளைவதும், அதன்பயனும் சிவம் என்பதனை " அன்பினில் விளைந்த ஆரமுதே" என்கிறாா் மாணிக்கவாசகா். சிவம் அன்பிலேயே விளையும் என்பதை அவா் உணா்த்துகிறாா். உலகத்து உயிா்கள் அனைத்திடமும் ஒருசேர ஒரே மாதிாியான அன்பைக் காட்டினால் அவ்வன்பின் வழியாக அதன் பயனாக அன்பின் வடிவாக சிவத்தை நம் உள்ளே காணலாம்

வியாழன், 17 அக்டோபர், 2013

Thedal.... : உடலை விட்டு வெளியேறும் ஆத்மா

Thedal.... : உடலை விட்டு வெளியேறும் ஆத்மா: படித்ததை உங்களுடன் - 7 ( திரு.என் .கணேசன் எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்திகள்  என்ற  புத்தகத்தில் இருந்து.  ) மரண விளிம்பு அனுபவங்க...

புதன், 16 அக்டோபர், 2013


உங்கள் வாழ்க்கையில் புது வாழ்வு / மறுபிறவி வாழ்வு பெற்றிட திருச்சி அருகே உள்ள பிரம்மபுரிஸ்வரர் மிகவும் பழைமையான கோவில் திருப்பட்டூர் இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர். குரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை. ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் தேதி பிறந்தவரா? ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம். தலபெருமை: வித்தியாசமான அமைப்பு: குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர; குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'' என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது. முருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார். எல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர். பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார். நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. எலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர். பதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார். வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில். பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும். தல வரலாறு: பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்

Thedal.... : பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தையின் அனுபவம்

Thedal.... : பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தையின் அனுபவம்: மூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தை ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல் ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு...

சனி, 12 அக்டோபர், 2013

ஞானசம்பந்தரும் - திருத்தோணியப்பரின் சேய் அன்பும்


ஞானசம்பந்தரும் - திருத்தோணியப்பரின் சேய் அன்பும் இறைவனுடைய திருவருளை அடைவதற்குரிய வழிகள் பற்பல. அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம், என்னும் நான்கு வழிகள் ஆகும், சத்புத்திர மார்க்கமாவது இறைவனை தாய்தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும், தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானாக பாவித்து உயிர்கள் பணியாளர்களாக இருந்து வழிபடும் நெறியாகும், சகமார்க்கம் என்பது இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் நெறியாகும். சன்மார்க்கம் என்பது இறைவனை ஞானாசாரியனாகக் கொண்டு ஆன்மா சீடனாக இருந்து வழிபடும் நெறியாகும், இந்நெறிகளில் சத்புத்திர மார்க்கம் ஞானசம்பந்தர் காட்டிய வழி, இரண்டாவது தாசமார்க்கம் எசமானாக பாவித்தது திருநாவுக்கரசர் வழிபட்ட நெறியாகும், மூன்றாவதான சகமார்க்கம் என்ற நட்புநெறி சுந்தரர் வழிபாட்டு நெறியாகும்.நான்காவதாக உள்ள சன்மார்க்கம் என்ற சன்மார்க்கம் என்ற இறைவனை (சிவனை) குருவாக ஞானாசிரியனாக வழிபட்டவர் மாணிக்க வாசகர்,சிவபுண்ணிய விளைவால் மூர்த்தி தலம் தீர்த்தங்களை வழிபட இறைவன் குருவாகி எழுந்தருளி அருள் புரியும் நிலையே குருவருள் ஆகும், குருவின் திருவுருமாகி எழுந்தருளி அருள் புரியும் சீர்காளியில் கவுணியர் குலத்தில் சிவபாதஇருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் திருமகனாக சீர்காளிபிள்ளையாராக திருஅவதாரம் செய்தவர்தான் திருஞான சம்பந்த பெருமான், திருவருள் கூட்ட ஒருநாள் நீராட சென்ற தந்தையார்பின் பிள்ளையார் தொடர்ந்து அழுது கொண்டு உடன் தொடர்ந்தார்.சிவபாத இருதயர் குழந்தையைக் குளக்கரையில் நிற்க செய்து பிரிவதற்கு அஞ்சி தந்தையார் , தேவியுடன் திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்கி அவர்பால் ஒப்படைத்து நீராட சென்றார். தந்தையார் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளையார் நீள நனைந்த முன் உணர்வினை நினைக்க அழத்தொடங்கினார். திருத்தோணி சிகரம் பார்த்து " அம்மே ! அப்பா! என்று அழுது அழைத்தருளினார். அக்குழந்தையின் அழுகை கண்டு அக்குழந்தைக்கு அருள் புரிய திருவுளங்கொண்ட இறைவர் தாமும், அம்மையமாய் விடைமேல் எழுந்தருளி வந்து, அக்குழந்தைக்கு துணைமுலைப்பால் ஊட்டிட இறைவியை பணிக்க இறைவியும், சிவஞானத்து இன்னமுதம் எனும் ஞானப்பால் ஊட்டி அருளியபின், கண்மலர் நீர் துடைத்து கையில் பொற்கிண்ணம் அளித்து, அம்மையப்பராகி இருவரும் காட்சிகொடுத்த வண்ணம், இருந்தனர். பிள்ளையாரும், சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாத கலைஞானமும், மெய்ஞானமும் பெற்று சிவஞான சம்பந்தராகி திருஞான சம்பந்தரானார், நீராடிவந்த சிவபாத இருதயர் குழந்தை பாலமுதம் அருந்திக் கையில் பொற்கிண்ணத்துடன் நிற்கும் பிள்ளையாரை நோக்கி, " யாரளித்த பால் அடிசில் உண்டாய்? அவரை காட்டுக" எனக் கோபமாக கடிந்தார். சிவஞானம் அருந்திய மகிழ்ச்சியில் திளைத்து நி ற்கும் பிள்ளையாரும், தேவியருடன் எழுந்தருளியிருக்கும் இறைவரை சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன் " எனும் திருப்பதிகத்தால் அடையாளங்காட்டி" எம்மை இது செய்த பிரான் இவனன்றே" என பால குமாரன் வயதிலேயே பதிகம் பாடி திருத்தோணியப்பரின் சேய் அன்பு எனும் சத்புத்திர மார்க்கம் கண்டு சிவனாரின் கருனையை பெற்றார். தாய் அன்பின் உயர்வையும், தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் திருஞானசம்பந்தர் திருநள்ளாறு தாயாகிய இறைவியையும் தந்தையாகிய இறைவனையும், வணங்கி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதன் மூலம் சம்பந்தர் மூர்த்திக்கும் ஆலவாய் சுந்தரருக்கும் உள்ள தாய் சேய்ழ அன்பின் மகத்துவம் விளங்குகிறது, "தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள் ,,,,,," என்ற திருப்பதிகத்தில் தானும் தாய் அன்பையும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு ஒரு ஆன்மா பிறவிபெற்று பூமிக்கு வரும்போது அதன் வினைக்கு ஏற்ப இன்பதுன்பம் தன் தாய்பால் வழியாக உலக உயிர்களுக்கு ஊட்டப்படுகிற்து, இந்த அன்பே தாய்தந்தையர்களும் தனது குழந்தைகளிடம் எதிர்பார்க்கின்றனர், இதற்கு ஒப்பாகவே இதன் கருத்து அமைந்து பதிகம் பாடியுள்ளார்,. சிவனாரின் அன்பு ஞானசம்பந்தர் பால் மேலும் மேலும் வளர்ந்தது, சம்பந்தர் பதிகம் பாடும் போது கைத்தாளம் போடுவது வழக்கம் இதனைக் கண்ட தந்தை அன்பு கொண்ட ஈசன் கைநொகாது இருக்க பொற்றாளம் வழங்கினார், பல தளங்களை அடைந்து தரிசிக்க காலால் நடந்து சென்றதைக்கண்டு மனம் பொறுக்காது ஈசன் அவருக்கு முத்து பல்லாக்கு முத்து சீவிகை ,முத்துக் குடை வழங்கினார், அத்தோடு மட்டுமன்றி அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு நேர்ந்த சோதனைகளுக்கு உடனுக்குடன் தோழ்கொடுத்து தந்தையின் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தினார். சம்பந்தரும் ஈசன்மேல் தனியாத தந்தை பாசம் கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். திருநாவுக்கரசரோடு கூடியிருந்த காலத்தில் அவருக்கு அப்பர் என்ற திருப்பெயரிட்டு சிறப்பித்தார். திருப்பாச்சிலாச்சிரமத்தில் கொல்லிமழவன் புதல்வியை பற்றிய முயலகன் என்னும் நோயை நீக்கினார். திருக்கொடி மாடச்செங்குன்றூரில் நச்சுக்காய்ச்சலை தவிர்த்து அடியாரைக்காத்தார்.திருவாடுதுறையில் உலக்கிழியாக ஆயிரம் பொன் பெற்றார். திருத்தருமபுரத்தில் யாழ்மூரிப்பதிகம் பாடி அருட்பாடல் கருவியில் அடங்காத சிறப்பை புலப்படுத்தினார். திருமருகலில் பாம்பு கடித்து இறந்த வணிகனை உயிர்த்தெழத் செய்து பெருவாழ்வு நல்கி, அவனையே நம்பியிருந்த திக்கில்லாதவளுக்கு தெய்வத்துணையானார். திருவீழிமமிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தை ஒழித்தார். திருமறைக்காட்டில் கோவில் மூடியிருந்த கதவை பதிகம் பாடி கதவைத்திறந்து மூடுஞ் சீருடைய தாக்கினார். திருமதுரை சென்று மங்கையர்கரசியாரையும், குலச் சிறையாரையும், சிறப்பித்தார். அரசன் வெப்பு நோய் மற்றும் கூன் நீங்க திருநீற்றுப்பதிகம் மற்றும் சமனர்களின் கொட்டத்தை அடக்கி கழுமரமேற்றி சைவ மதம் தழைக்க செய்தார்.. திருவோத்தூரில் ஆன் பனைகளை பெண் பனைகளாக மாற்றினார். மயிலாப்பூரில் கென்றிருந்து பாம்பு கடித்து இறந்த பூம்பாவையின் எலும்பைக் கொண்டு திருப்பதிகம் பாடி உயிருடைய உருவமாக்கி வீட்டையும் காட்டினார். திருநல்லூரில் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் திருமகளை மணம் புரியுங்கால் இவளோடு சிவனடி சேர்வன் என்று திருக்கோவிலை உற்று திருப்பதிகம் பாடினார். திருமணம் காணவந்த எல்லாரும் அருள் மணம் புரிந்து அழியா இன்பம் அடைந்தனர். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடிய திருவைந்தெழுத்தின் பெருமையே எல்லா நதபெற காரணமாகுமென பதிகத்தால் உணர்தெி சம்பந்தர் பால் கொண்ட ஈசனின் சேய் அன்பையும் சம்பந்தர் ஈசன் மேல் கொண்ட தாய் தந்தை - பெற்றோர் அன்பையும் சிறப்பிக்க உதாரணமாக விளங்கியவர் திரு ஞானசம்பந்த பெருமான் , திருச் சிற்றம்பலம்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

VTS 01 161

சுந்தரபாண்டியம் அருள்மிகு வைகுண்டமூா்த்தி அய்யனாா் கோவில் என்ற பொியகோவிலில் ஜெயா டிவி மூலம் நலம் தரும் நட்சத்திர கோவில் நிகழ்ச்சியில் ஒளி பரப்ப செய்ய எடுக்கப்பட்ட படதொகுப்பு
தொகுப்பு வை,பூமாலை.சுந்தரபாண்டியம்

VTS 01 163

சுந்தரபாண்டியம் அருள்மிகு வைகுண்டமூா்த்தி அய்யனாா் கோவில் என்ற பொியகோவிலில் ஜெயா டிவி மூலம் நலம் தரும் நட்சத்திர கோவில் நிகழ்ச்சியில் ஒளி பரப்ப செய்ய எடுக்கப்பட்ட படதொகுப்பு தொகுப்பு வை,பூமாலை.சுந்தரபாண்டியம்


செவ்வாய், 24 செப்டம்பர், 2013


பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும். ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை; ருத்ராட்சங்களைக் கைகளிலும்,தோள்களிலும் அணிந்தவன் எவ்வித உயிரினங்களாலும் கொல்லப்படமாட்டான்.அவன் இவ்வுலகில் ருத்ரனைப் போல வலம் வருகிறான். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை. நமது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் சொன்னது:ருத்ராட்ச உபநிஷத்து என்று ஒரு உபநிஷத்து இருந்தது.யாராவது வைத்திருக்கிறீர்களா? ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்போமா? ஓம்சிவசிவஓம்

பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும். ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை; ருத்ராட்சங்களைக் கைகளிலும்,தோள்களிலும் அணிந்தவன் எவ்வித உயிரினங்களாலும் கொல்லப்படமாட்டான்.அவன் இவ்வுலகில் ருத்ரனைப் போல வலம் வருகிறான். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை. நமது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் சொன்னது:ருத்ராட்ச உபநிஷத்து என்று ஒரு உபநிஷத்து இருந்தது.யாராவது வைத்திருக்கிறீர்களா? ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்போமா? ஓம்சிவசிவஓம்

திங்கள், 16 செப்டம்பர், 2013

சனி, 14 செப்டம்பர், 2013


திருமந்திரம் / பத்தாம் திருமுறை / சிறு விளக்கம் அருளாளர்கள் மொழிவன எல்லாம் " மந்திரங்கள் " மந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் , நினைப்பவரைக்காப்பது என்பதாம். மந்திரங்களை செபிப்பதுடன் நினைப்பதற்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களாக விளங்கும் அருள் நூல்களை வழங்கிய பெருமக்களை நிறைமொழி மாந்தர் என்பர். திருஞானசம்பந்தர் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை பகிர்ந்தளித்தார். திருமுறை ஆசிரியர்கள் இருபத்து எழுவருள் ஒருவராகிய திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாகிய செந்தமிழ் மந்திரமாகும், இரு மூவாயிரம் பாடல்களாகவும், ஒன்பது தந்திரங்களாகவும் உள்ளடக்கியது. முதல் தந்திரம் நிலையாமையை பற்றி கூறுவதால் ஞானம் பெற அறம் உணர்த்துகிறது. இரண்டாம் தந்திரம் புராணங்களின் வழியே சிவபராக்கிரமங்களையும் அவர் தம் புகழையும் பேசுகிறது. மூன்றாம் தந்திரம் பெருமானை அடையும் யோக சாதனங்களைக் குறிப்பிடுகிறது. நான்காம் தந்திரம் மந்திர யந்திர வழிபாட்டு முைறகளை விளக்குகிறது. ஐந்தாம் தந்திரம் சைவத்தின் பிரிவுகளையும், சிைய, கிரியை , யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகைளயும், தெளிவிக்கின்றது. ஆறாம் தந்திரம் சிவமே குருவாக நின்று அருள் புரிவதையும் சற்குருகிைடப்பது அவரவர் தவத்தின் பயனாகும் என உணர்த்துகிறது. ஏழாம் தந்திரம் அண்டமும் பிண்டமும் இலிங்க உறருவாய் உள்ளதையும், சிவபூசை குருபூசை குருபூசை செய்யவேண்டிய அவசியத்தையும் அறிவிக்கிறது. எட்டாம் தந்திரம் உயிர் எடுக்கும் உடல்பற்றிய அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம், பற்றிய விளக்கங்களைகூறுகிறது. ஒன்பதாம் தந்திரம் அகர,உகர மகரமாகிய ஓங்காரப் பிரணவமே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதையும் தூலபஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம் முதலிய ஐந்தெழுத்து உண்மைகளையும், ஐந்தொழில் நடத்தையும், சிறப்புற விளக்குகிறது. இம்மந்திரம் ஒன்றுதான் திருமந்திரம் எனப்படுகிறது. இதனை நாமும் தினமும் ஓதி உவகை பெறுவோம்

'Thiruppugazhil Manolayam' by Mrs Vasantha Panchapakesan

poomalai: இன்னொரு திருஞானசம்பந்தர்?|Another Lord ?-Aanmeega Dinakaran

poomalai: இன்னொரு திருஞானசம்பந்தர்?|Another Lord ?-Aanmeega Dinakaran

வியாழன், 12 செப்டம்பர், 2013


PARAMANANDA THEEBAM MOOLAMUM URAIYUM by santhanamala kumarasamy

Daily one Thirumandiram

in/2013/09/view-maanikkavachakar-on-scribd_12.html">poomalai

maanikkavachakar by ganesh59


arulsivam by ganesh59


Yoga Vasishtam by ganesh59


saivasiddhantam by ganesh59

Thiruvasagam


Tiruvacakam by ganesh59


saivavinavidai by ganesh59


Abirami Andhadhi by ganesh59

sidhargal padal


Siddhar Paadalgal by ganesh59

புதன், 11 செப்டம்பர், 2013


திரு ஐந்தெழுத்தின் உயர்வு தீமைகள் வராமல் தடுக்கும் படைக்கலம் சைவ மதத்தின் மூல ஆதாரமான திரு ஐந்தெழுத்தின் மகத்துவம் சொல்லில் அடங்கா.சிவாயநம - நமசிவய - என்ற ஐந்தெழுத்து திரு நீறு, உருத்திராட்சம் ஆகியவை அணிவது தகவு எனும் வேலியாகும், இராணுவ வீரர்களுக்கு உரிய ஆடையை அணிந்த உடனே வீரவுணர்வு மேலிடுவது போல உணர்க, திரு அப்பர்பெருமானும் தனது பதியத்தில் படைக்கல மாகஉன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவிற் கொண்டேன் இடைக்கலம் அல்லேன் எழுயிறப் பும்உனக்கு ஆட்செய்கின்றேன் துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்துள் அடைக்கலம் கண்டாய்அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே - திருநாவுக்கரசர் பெருமான் எப்பொழுதும் மனதால் தொழுது வாயால் துதித்து, உடலால் வணங்கித் திருநீறு அணிந்து தங்களின் உடைமைப் பொருளாக உள்ளேன், காத்தருள் புரியுங்கள் சிற்றம்பலத்து பெருமானே. எல்லா வகையான தீமைகளிலிருந்தும் ந்ம்மைக் காப்பது திருஐந்தொழுத்து என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும், இதைவிட வேறு மந்திரம் வேண்டாம். வேறு உபாயமும் வேண்டாம் நமக்கு. இந்த ஐந்தொழுத்தைச் சொல்லிக் கடலில் கல்லையும் மிதக்கச் செய்து கரையேறியவர் திருநாவுக்கரசு சுவாமிகள். அவர் கூறிய இந்த ஐந்தொழுத்து மந்திரமான சிவாயநம என்பதே நமது படைக்கலமாகும்

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

Thirumandiram perumai


வேத(தேவ) மந்திரம் என்ற திருமந்திரம் தேவமொழிகளில் உள்ள ஆகமங்களின் தமிழ் மொழிபெயர்ப்புதான் திருமந்திரம், திருமூலர் அருளிய திருமந்திரம் எத்தனையோ காலம் கடந்து நாம் இன்னும் படிக்கும்படி இருப்பது என்பதே மிகப்பெரிய சான்று, இது இறைவன் கருனையால் இயற்றப்பட்டது.திருமந்திரத்திற்கு மறு மந்திரம் இல்லை என்பர் பெரியவர்கள், அது மகத்தான உண்மை. திருமந்திரம் சைவ சித்தானந்தம், சிவநெறி ஆகியவைகளை கடந்து தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிசம் என்றால் மிகையாகது. திருமூலர் அருளிய பல தத்துவங்களை நாம் தற்போது நடைமுறையில் நமக்கு அருளியது திருமந்திரம் என்று தெரியாமலே இன்றளவும் பயன் படுத்துகிறோம். உதாரணமாக. " அன்பே சிவம்" "தத்துவம்சி நீ அதுவானாய்" " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" " நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" " சீவன் (ஆத்மா) சிவனோடு கலத்தல்" " உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்" " யார்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்" " பசுவுக்கு ஒர் வாய்உைற" " உண்ணும் போது ஒரு கைப்பிடி" ..... போன்றன. எம்பெருமான் கருனை பெற யாகமோ, பெருந்தவமோ, சாதாரண மக்களுக்கு தேைவயில்லை, தண்ணீரும், பூவும், பச்சிலை, (வில்வ இைல) போதும் என்கிறது திருமந்திரம், அத்துடன் துணிந்தவர்களுக்கு யோகம், குண்டலினி போன்ற கடுைமயான பயிற்சி முறைகளையும் கூறுகிறது. இன்றைய அறிவியலில் ஆராய்ந்து அறிந்த உண்ைமகளையும் அன்றே திருமந்திரத்தில் கூற்ப்பட்டுள்ளது. இதயம் இடப்பக்கம் உள்ளது பற்றியும், வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா, திருநங்கையா,என்பதையும், கர்ப்பம் தரிப்பது, ஊணமான குழந்தைக்கு காரணம், மற்றும் மனிதனின் முதிர்வு இறப்பின் இரகசியங்களையும் அதன் பிரணய சுவாசத்தின் மூலம் கணக்கிட்டு கூற்படுகிறது. அறநெறி நல்லொதழுக்கம், பற்றியும், தான சிறப்பு, பிறா் மனை நோக்கா, மது, அைசவ உணவு நெறி, என்பனவும், கொலை, களவு, வட்டி வாங்கல், போன்ற படுபாதக செயல்கள் பற்றியும், அரசனின் கடமை, கோவில் அைமப்பு, அந்தணர் வாழ்வு, ஒழுக்கம், போலிசாமியார் , செல்வ நிைல, மகளிர் ஒழுக்கம், அறம் போன்ற எல்லா மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து விசயங்களையும் காணலாம், திருமூலர் திருமந்திரம் சைவ நெறி, சிவனை அைடதல் என்பன தவிர்த்து, அதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தினை வலியுறுத்துவது மட்டுமன்றி அவற்றையெல்லாம் கடந்து, பொது மறையான திருக்குறளையும் தாண்டும் அளவிற்கு உலக மக்களுக்கு வாழ்க்கையின் அறநெறி ஒழுக்கம், ஒப்புறவு ஈதல், போன்ற அனைத்தும் உள்ளடக்கி உள்ளது திருமந்திரம், திருமூலரின் திருமந்திரத்தை படித்து, அறிந்து, கொள்வார்களாயின், மகாதவம் செய்த புண்ணியமும், ஈசனின் திருவடியை காண அருள் பெற்றவர்களாவார்கள், என்பது அசைக்கமுடியாத உறுதி. " திரு மூலரின் திருவடி போற்றி" " திருமந்திரத்தின் மேன்மை போற்றி" " ஓம் சிவ சிவ ஓம்" அன்புடன் சிவனடிமை சிவ, வை,பூமாலை, சுந்தரபாண்டியம்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

என்.கணேசன்: திருநீறு அணிவது எதற்காக?

என்.கணேசன்: திருநீறு அணிவது எதற்காக?: அறிவார்ந்த ஆன்மிகம் - 18 “ நீ ரில்லா நெற்றி பாழ் ” என்று பாடினார் ஔவையார். ” மந்திரமாவது நீறு" என்று பாடினார் திருஞானசம்பந்த...

சனி, 7 செப்டம்பர், 2013


சித்தர்கள் சித்தர்கள் ஜமாதி அடைந்த ஏதேனும் ஒரு கோவிலுக்கு அருகில் வாழ்ந்து வரும் மக்கள் அக் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவனையோ, முருகனையோ அம்பாளையோ அல்லது அங்கு சமாதி அடைந்துள்ள சித்தர்களையோ உண்மையான பக்தியுடன் அக்கோவில் வளாகத்தில் உட்கார்ந்து தினமும் அரைமணி நேரம் கண்மூடி தியானம் செய்து வந்தால் காலப்போக்கில் அங்கு அருளாட்சி செய்துவரும் சித்தர் பரம்பொருளின் திருவருள் துணை கொண்டு அந்த பக்தர்களு்க்கு அமைதியான வாழ்வை அளிப்பதுடன் மரணமில்லாத பெருவாழ்வையும் தவ நெறியையும் தொட்டிக்காட்டி அருள்பார் ந்னறி ; பதினென் சித்தர்கள் வரலாறு

Pathinen-Sitharkal-Varalaru by Vmani Ayyar

">

புதன், 4 செப்டம்பர், 2013

Thirupattur

"திருப்பட்டூர்'

இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர். குரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை. ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் தேதி பிறந்தவரா? ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம். தலபெருமை: வித்தியாசமான அமைப்பு: குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர; குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'' என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது. முருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார். எல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர். பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார். நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. எலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர். பதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார். வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில். பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும். தல வரலாறு: பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

poomalai: thirupattur Bragadheswarar

poomalai: thirupattur Bragadheswarar: இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, ப...

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மயிலே தூது செல்லாயோ?


மயிலே தூது செல்லாயோ? மயிலே தூது செல்லாயோ - மால் மருகனிடம் சேதி சொல்லாயோ! உயிராய் என்னை உணர்ந்திருந்தான் - இந்த உலகம் தனைநான் மறந்திருந்தேன் ! இனிக்கவே பேசி எனக்கவர்ந்தான் - என்றன் எண்ண மெலாம் நிறைந்திருந்தான் ! கனிவாய் பேசிக் கவர்ந்திருந்தான் - அவன் நினைவால் நானு மறந்திருந்தேன் உண்ணவும் என்மனம் விரும்பவில்லை - இமை மூடினும் துயில்கொள்ள முடியவில்லை பண்ணும் எனக்கே இனிக்கவில்லை - ஆவின் பாலும் ஏனோ சுவைக்க வில்லை நடை தளர்ந்தேன் பண் பாடும்இழந்தேன் காண கண்ணும் தளர்ந்தேன் - உன்புகழ் கேட்கும் தயவிழந்தேன் தவிக்கிறேன் உன்தலைவனிடம் என்னிலை சொல்லோயோ

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

தென்பாண்டி நாட்டிலும் பஞ்ச பூதக் கோவில்கள்


பஞ்ச பூதக் கோவில்கள் சிறப்புமிகு ஐம்பெரும் பூதங்களையும் அவற்றின் தன்மைகளையும் சிறப்புகளையும் நாம் அறிவோம் இந்த ஐம்பெரும் பூதங்களின் தன்மையின் அடிப்படையில் ஆலங்கள் அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள் சிவலிங்கம் அகண்டமானது பிருதிவி ( மண்), அப்பு (நீர்), தேயு ( நெருப்பு) , வாயு ,ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும், இவ்வுண்மையை மக்கட்கு உணர்த்தும் பொருட்டு ஐம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர், அவையாவன காஞ்சிபுரம், திருவாரூர் (மண்) , திருவானைக்கால் (நீர்) திருவண்ணாமலை (நெருப்பு), காளகஸ்தி (காற்று -வாயு) சிதம்பரம் ( வானம்) ஆகும், இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்த ஆலங்கள் ஆகும், இவை போன்ற தென்பாண்டி நாட்டிலும் பஞ்ச பூதக் கோவில்கள் அமைந்துள்ளன, அவை சங்கரன்கோவில் - (மண்) தாருகாபுரம் - நீர் கரிவலம்வந்தநல்லூர் - நெருப்பு தென்மலை ( காற்று) இவை அனைத்துமே சிவன் கோவில்கள் ஆகும் சங்கரன்கோவில் ( மண் - பிருதிவி) இறைவன் : சங்கரலிங்கர் இறைவி : கோமதி அம்பாள் உயிர்கள் தோன்றுவதும் மறைவதும் மண்ணில்தான், மனிதன் நல்லவனாவதும் தீயவனாவதும் இம்மண்ணில்தான். இத்தகு மண்ணின் சிறப்பை உயர்த்த மண் தத்துவத்தில் கோவில்கள் அமைந்துள்ளன, இத்தத்துவத்திற்கிணங்க அமைந்ததுதான் சங்கரன்கோவில் என்ற சஙகரநயினர்கோவில் ஆகும், சங்கரரும், நாராயணரும் வேறுவேறு அல்லர், இருவரும் ஒருவரே என்பதை தேவிக்கு உணர்த்த மேற்கொண்ட வடிவமே சங்கரநாராயணர் வடிவம் ஆகும், இங்கு இறைவர் சிவன் பாதியாகவும், திருமால்(நாராயணன் ) பாதி உடம்பாகவும் மக்கட்கு காட்சி அளிக்கின்றனர், பாண்டிநாட்டின் அரசனான உக்கிரன் என்ற அரசனால் பாண்டியநாட்டின் தென்பகுதியில் அசிரீரி வாக்கு கேட்டு அம்மன்னன் புன்னவனக்காடாக இருந்தஇந்த இடத்தில் சிவாலயம் அமைத்து, அதற்கு ராஜகோபரமும், இறைவன் இறைவிக்கு தனித்தனி தேர்களும் உருவாக்கினான், இக்கோவிலில் ஒருநாள் தங்கினால் மோட்சம் அடைவர் என்றும் முற்பிறப்பு பாவம் நீங்கும் என்றும் மூன்று நாட்கள் தங்கினால் மறுபிறவி பாவங்களும் நீங்கும், இறைவியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் - விஷ்ணுவுடன் கூடியிருக்கும திருக்கோலத்தினை காட்டியருள வேண்டிக்கொண்டதன் பேரில் கோமதியம்மாள் பொதிகைமலை அருகில் ஒரிடத்தில் புண்னைமர வடிவில் தவமிருக்க வேண்டியதிற்கிணங்க ஆடித்தவசு கோலம் பூண்டு கடுந்தவம் புரிந்ததால் இறைவிக்கு சங்கரநாராயணனாக காட்சி அளித்து மறுபடியும் சிவ உருவத்தில் காட்சி அளிக்க வேண்டியதன் பெயரில் சங்கரலிங்கமாவும் காட்சி அளித்தார், இக்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவாகும் இவ்விழா ஆடித்திங்கள் பெளர்ணமியன்று நடைபெறும், இத்துடன் இங்கு சிறப்பாக நடைபெறும் விழா வசந்த உற்சவ திருவிழாவும் சிறப்பு பெறறது, தாருகாபுரம் - (நீர் - அப்பு) இறைவன் : மத்தியஸ்தநாதர், பிணக்கறுத்த பெருமான் இறைவி : அகிலாண்ட ஈஸ்வரி நீர் தத்துவத்தை உணர்த்தும் இத்திருக்கோவில் வாசுதேவநல்லூர் என்னும் ஊருக்கு தென்கிழக்கே சுமார் 6 கி,மீ. தூரத்தில் அமைந்துள்ளது,இங்குள்ள சிவலிங்கத்தின் அடியில் நீர் ஊற்று இருந்ததாகவும், அதனைக்கொண்டே இறைவனை திருமஞ்சன நீராட்டல் செய்தனர்என்றும் கூறப்படுகிறது, ஆனால் மீண்டும்மீண்டும் அந்நீரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது தகாது என அவ்வூற்றினை கல்கொண்டு மூடி விட்டனர், ஆயினும் இன்றும் இங்குள்ள கருவறை சுவர்கள் நீர்ப்பிடிப்புடனே தோன்றுகின்றன,இங்குள்ள தீர்த்தத்தில் கெளதமர், சனகாதியர் ,வசிட்டர், வால்மீகி அகத்தியர் போன்ற முனியவர்கள் தவம் புரிந்துள்ளனர் மூர்த்திகளில் மிகச் சிறப்புடையது அப்புலிங்கம் ஆகும், மத்தியஸ்தர் தென்னிந்தியாவை ஆட்சி செய்த சேர,சோழ பாண்டியர் நில வேட்கையால் ஒரு காலத்தில் மாறுபட்டனர் ஒருவருக்கொருவர் போரிட்டனர், அதைக் கண்ட இறைவன் இவர்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்த எண்ணி அகத்தியர் வடிவில் வந்து சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு, எல்லைப்பகுதியினை வரையறுத்துக் கொடுத்து மத்தியஸ்தம் கொடுத்து பிணக்கினை தீர்த்தருளினார் இவ்வாலயம் தாருகாபுரத்திலிருந்து மேற்கே சமார் அரை கி,மீ, தூரத்தில் உள்ளது, இறைவர் பிணக்கறத்த பெருமாள் என்றும் காரணப்பெயர்களால் அழைக்கப்படுகிறது, இறைவி அகிலாணட ஈஸ்வரி தல விருட்சம் மா மரம் ஆகும், இது பழமைவாய்ந்த நில வருவாய் தவிர வேறு வருவாய் இல்லாத காரணத்தால் இக்கோவில் இன்னும் அபிவிருத்தி அடையவில்லை, இருகால பூசை மட்டுமே செய்யப்பட்டு வருகிறது, கரிவலம்வந்த நல்லூர் - (நெருப்பு) இறைவன் : பால்வண்ண நாதர் இறைவி : ஒப்பணையம்மாள் இக்கோவில் திருவண்ணாமலைக்கு நிகரானது, தென்பாண்டி நாட்டில் நிட்சேபநதி கிருபாநதி எனத்தெய்வத் திருநாமம் பெற்ற ஆறுகள் பாய்வதும் அரி, பரமன், தேவர், அகத்தியா, நாரதர், வசிட்டர் முதலியோர்களால் வழிபடப்பட்டதும், சிவபெருமான் நித்திய தாண்டவம் புரிய அம்பலமாகக் கொண்டதும் ஆன தலம் கரிவலம்வந்த நல்லூர் ஆகும, தென்பாண்டிய நாட்டில் இந்நகரில் ஆண்டு வந்த வரதுங்க பாண்டியன் என்பான் தனக்கு பத்திர பாக்கியம்இல்லாமை கண்டு மனம் மிக வருந்தினான், அப்பொழுது இறைவன் அவன் கனவில் தோன்றி மனக்கவலையை நீக்கும்படியும் தாமே அந்தியக்காலத்தில் அவனுக்கு செய்யவேண்டிய தகனக்கிரியைகளைச் செய்து முக்தி தருவதாக கூறி அதன்படி மன்னன் பால சந்நியாசியை ஞானாசிரியராகக் கொண்டு இல்லற ஞானியாய் விளங்கி , ஐந்தெழுத்து மந்திரத்தை உசசரித்து நிட்டை புரியலானான், அரசன் சோதியிற்கலந்தான் அப்போது அரசனுக்கு பிதுர்காரியம் செய்ய ஒருவரும் இல்லாத நிலை அறிந்து செய்வதறியாது திகைத்து நின்றனர், அப்போது பாலவண்ண நாதர் வயதோகிய பரம்மச்சாரி வேடத்தில் வந்து ஈமக்கிரிகளைச் செய்து மூன்று நாள் காரியமும் முடித்து கோவிலுள்ள கர்ப்ப கிரகத்திற்கு சென்று சிவலிங்கத்துடன் கலந்தார், இக்கோவில் சூரியன் பூசை புரிந்த இடம், அக்கினி பாவம் நீங்கப்பெற்ற இடம், அகத்தியர் பூசித்த தலம் போன்ற பெருமையுடையது, இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இலங்கேசுவரர் ஆலயமும் உள்ளது, தல மரம் களாமரம், இங்கு காவடி திருவிழா மற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, தேவதானம் ( வானம்) இறைவன் : நச்சாடைத் தவிர்த்தவர் இறைவி : தவம் பெற்ற நாயகி இத்தலம் சிதம்பரத்திற்கு நிகரானது, இறைவன் நச்சாடை தவிர்த்தவர், இறைவி தவம் பெற்ற நாயகி, இங்குள்ள சுவாமியை வேண்டி அம்பாள் தவம் புரிந்த இடம், திருக்கண்ணீஸ்வரரை வணங்கினால் முக்தி கிட்டும், பாண்டி சோழ மன்னர்களின் போர் நிகழ்வில் பாண்டியன் இறைவனை வேண்ட சோழன் தனது இரு கண்களையும் இழக்கவே, பின் சோழன் வேண்ட கண்பார்வை வழங்கி அருளினார், சோழன் பாண்டியனை வெல்லக்கருதிய போது அவனுடைய நச்சாடையை தவிர்த்து பாண்டியனை காத்தருளினார், ஐம்பூதக் கோவில்களில் இங்கு மட்டுமே கொடிமரத்ததின்கீழ் பெரிய ஆமை வடிவம் உள்ளது,சிவலிங்கம் மிக சிறியதாக அமைந்துள்ளது, இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது ,இக்கோவிலுக்கு சமீபத்தில் தான் அஸ்டபந்தன கும்பாபிசகம் நடைபெற்றது, தெனமலை - வாயு இறைவன் : திரிபுர நாதர் இறைவி : சிவபரிபூரணி இத்தலம் வாயுத்தலமாகும் காளகஸ்திக்கு நிகரனாது, இது கரிவலம் வந்த நல்லூருக்கு வடக்கே 5 கி,மீ, தூரத்தில் உள்ளது, இக்கோவில் மட்டும் கிழக்குக்கு மாறாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது, இங்கு அம்மன் சந்நிதி வாயில் தான் பிரதான வாயிலாக உள்ளது, முதலில் திரிபுரநாதரை வணங்கி பின் அம்பாள் சிவபரிபூரணியை வணங்க செல்ல வேண்டும், இங்குள்ள லிங்கமும் மாறுபட்டு காணப்படுகிறது, இங்குள்ள அகத்தியர் பீடத்தை வணங்கினால் தடைபெற்ற திருமணம் நடைபெறும் குழந்தை பேறு கிட்டும் பேறு பெற்றது, ஐம்பூதக் கோவில்களின் சிறப்பு: ஐம்பூதக்கோவில்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றுவிளங்குகிறது, மகாசிவராத்திரி அன்று இவ்வைந்து கோவில்களுக்கும் சென்று வந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும் ஒம் சிவ சிவ ஓம் - திருச்சிற்றம்பலம் வை.பூமாலை சுந்தரபாண்டியம்