வியாழன், 30 செப்டம்பர், 2021

சைவ தத்துவ சாஸ்திர சுருக்கம்

 சைவ தத்துவ சாஸ்திர சுருக்கம்


கடவுள் ஒன்றே, உயிர்கள் பல. உயிர்களின் அறிவாற்றல் ஆணவத்தினால் தடை உண்டுள்ளது. உயிர்கள் கன்மங்களை செய்து கர்ம பலன்களை அனுபவித்துவருவதன் மூலம் அத்தடை படிப்படியாக விலக்கப்படும்.
துன்பம் தவறான செயற்பலன் , இன்பம் சரியான செயற்பலன். ஆதல் இதுவே கர்ம நியதி.
ஒன்றும் தவறாமல் சகல உயிர்களும் சிவமாம் தன்மை பேரின்ப அனுபவம் பெறுவதற்குரியன. இதற்காக உயிர்கள் பல பிறப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. மறுபிறப்பு உண்மை கோட்பாடு சைவ தத்துவ சாஸ்திரத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று ஆணவ மறைப்பு.
உயிர்குயிர் தன் மறைப்பாற்றலில் வேறுபடுகின்றன. இந்நிலையானது உயிர்களின் சமத்துவமின்மையும் சிவமாம் தன்மை அடைவது வேறுபடுகிறது. லட்சக்கணக்கான உயிர்கள் இதுவரை சிவமாம் தன்மை எய்தியுள்ளது. லடசக்கணக்கானவை மேலும்எய்த உள்ளது.
உயிரினது பரிணாம வளர்ச்சி பேறு கடவுள் சந்நதியிலேயே வாய்க்கிறது. இதில் ஐவேறு கட்டங்கள் அமைகின்றன.
உயிரானது தான் கன்மம் இயற்றி ஆணவத் தடையிலிருந்து விடுபடுவதற்கு சாதனமான உடலை பெறுதல் முதற்கட்டம். இதுவே இறைவன் செயற்பாட்டில் "படைத்தல்" எனப்படும்.
இதன்மூலம் உயிர்பெறும் உடலானது அதன் பழவினையின் ஒருபகுதியானதும், இப்பிறப்பில் அனுபவிக்கும் தொழில்வரை குறித்த தேகம் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது. இந்த கட்டம் " காத்தல்" எனப்படும்.
பிராப்த அனுபவ ஒழிவில் தேகம் அழிக்கப்படும் அது அழித்தல் எனப்படும்.
உயிரை இயல்பாகவே பற்றியிருந்த ஆணவ பிடியை பலமிழக்க செய்தல் " மறைத்தல் " எனப்படும்.
ஆணவத் தடை அடியோடு இல்லாமல் அகற்றப்படும் நிலையில் உயிருக்கு சிவமாம் தன்மை பெறுவாழ்வு கொடுக்கபடுதல் " அருளல் " எனப்படும்.
உயிர் பரிணாம விருத்தியடையவைக்கும் மகிமை மிக்க கடவுள் " சந்நதி சக்தி" எனப்படும்.

மேற்கண்ட ஐந்து கட்டங்களில்முதல் நான்கையும் அதிஷ்டித்து நடத்தும் சக்தி ஆதிசக்தி அல்லது திரோதன சக்தி எனப்படும்.
ஐந்தாவது கடடத்தை மேவி நின்று நடத்துஞ் சக்தி அருட் சக்தி எனப்படும். இவ்விரு சக்தியும்ஒன்றே , செயற்பாட்டால் பெயர் வேறுபாடு என்பதாகும்.
ஆணவம் , கன்மம், மாயை என்ற மூன்றும் பாசங்கள் எனப்படும்.
ஆணவ மலத்தை நீக்க இறைவனால் வழங்கப்பட்டதே கன்மம், மாயை , மாயை மூலம் உயிர்கள் அனுபவிக்க உலகம், உடம்பு கொடுத்து ஆணவ இருளை கன்மம் என்ற வினை அலலது செயலால் நீக்கி சிவமாம் தன்மை அடைவதே மானிடப் பிறப்பின் பயனாகும் என்பதை விரிவாக விளக்குவதே சைவ சித்தாந்தம்.
திருச்சிற்றம்பலம்

சைவ தத்துவ சாஸ்திர சுருக்கம்

 சைவ தத்துவ சாஸ்திர சுருக்கம்

கடவுள் ஒன்றே, உயிர்கள் பல. உயிர்களின் அறிவாற்றல் ஆணவத்தினால் தடை உண்டுள்ளது. உயிர்கள் கன்மங்களை செய்து கர்ம பலன்களை அனுபவித்துவருவதன் மூலம் அத்தடை படிப்படியாக விலக்கப்படும்.
துன்பம் தவறான செயற்பலன் , இன்பம் சரியான செயற்பலன். ஆதல் இதுவே கர்ம நியதி.
ஒன்றும் தவறாமல் சகல உயிர்களும் சிவமாம் தன்மை பேரின்ப அனுபவம் பெறுவதற்குரியன. இதற்காக உயிர்கள் பல பிறப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. மறுபிறப்பு உண்மை கோட்பாடு சைவ தத்துவ சாஸ்திரத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று ஆணவ மறைப்பு.
உயிர்குயிர் தன் மறைப்பாற்றலில் வேறுபடுகின்றன. இந்நிலையானது உயிர்களின் சமத்துவமின்மையும் சிவமாம் தன்மை அடைவது வேறுபடுகிறது. லட்சக்கணக்கான உயிர்கள் இதுவரை சிவமாம் தன்மை எய்தியுள்ளது. லடசக்கணக்கானவை மேலும்எய்த உள்ளது.
உயிரினது பரிணாம வளர்ச்சி பேறு கடவுள் சந்நதியிலேயே வாய்க்கிறது. இதில் ஐவேறு கட்டங்கள் அமைகின்றன.
உயிரானது தான் கன்மம் இயற்றி ஆணவத் தடையிலிருந்து விடுபடுவதற்கு சாதனமான உடலை பெறுதல் முதற்கட்டம். இதுவே இறைவன் செயற்பாட்டில் "படைத்தல்" எனப்படும்.
இதன்மூலம் உயிர்பெறும் உடலானது அதன் பழவினையின் ஒருபகுதியானதும், இப்பிறப்பில் அனுபவிக்கும் தொழில்வரை குறித்த தேகம் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது. இந்த கட்டம் " காத்தல்" எனப்படும்.
பிராப்த அனுபவ ஒழிவில் தேகம் அழிக்கப்படும் அது அழித்தல் எனப்படும்.
உயிரை இயல்பாகவே பற்றியிருந்த ஆணவ பிடியை பலமிழக்க செய்தல் " மறைத்தல் " எனப்படும்.
ஆணவத் தடை அடியோடு இல்லாமல் அகற்றப்படும் நிலையில் உயிருக்கு சிவமாம் தன்மை பெறுவாழ்வு கொடுக்கபடுதல் " அருளல் " எனப்படும்.
உயிர் பரிணாம விருத்தியடையவைக்கும் மகிமை மிக்க கடவுள் " சந்நதி சக்தி" எனப்படும்.

மேற்கண்ட ஐந்து கட்டங்களில்முதல் நான்கையும் அதிஷ்டித்து நடத்தும் சக்தி ஆதிசக்தி அல்லது திரோதன சக்தி எனப்படும்.
ஐந்தாவது கடடத்தை மேவி நின்று நடத்துஞ் சக்தி அருட் சக்தி எனப்படும். இவ்விரு சக்தியும்ஒன்றே , செயற்பாட்டால் பெயர் வேறுபாடு என்பதாகும்.
ஆணவம் , கன்மம், மாயை என்ற மூன்றும் பாசங்கள் எனப்படும்.
ஆணவ மலத்தை நீக்க இறைவனால் வழங்கப்பட்டதே கன்மம், மாயை , மாயை மூலம் உயிர்கள் அனுபவிக்க உலகம், உடம்பு கொடுத்து ஆணவ இருளை கன்மம் என்ற வினை அலலது செயலால் நீக்கி சிவமாம் தன்மை அடைவதே மானிடப் பிறப்பின் பயனாகும் என்பதை விரிவாக விளக்குவதே சைவ சித்தாந்தம்.
திருச்சிற்றம்பலம்

திங்கள், 20 செப்டம்பர், 2021

நவராத்திரி வழிபாடும் சிவ வழிபாடே !

 

நவராத்திரி வழிபாடும் சிவ வழிபாடே !


இறைவன் அருவுருவமாக உள்ள சாதாசிவ லிங்க வடிவில் சிவபெருமான் இலிங்கமாகவும், உமாதேவியார் பீடமாகவும் உள்ளார்   இதனாற்,  சிவலிங்க வழிபாடென்பது தனித்த ஈசுவர வழிபாடும் அல்ல.தனித்த சத்தி வழிபாடும் அல்ல. சிவசத்தி வழிபாடென்பது பெறப்படும்.இங்ஙனம் சிவலிங்க வழிபாடு,  சிவசத்தி வழிபாடாகவே விளங்குகின்றது. எனவே சிவசக்தி வழிபாடும் சிவ வழிபாடே !

          "சத்தி பின்னமிலான் எங்கள் பிரான்" என்னும் சித்தாந்தப்பிரமாணமும் இதனை நன்கு புலப்படுத்தும்.சத்தியென்றும் சிவனென்றும் பின்னமோ அபின்னமோ என்னில், பின்னமிலான் - வேறாயிருக்கிறவனல்லன்  எங்கள் கடவுள் என்பது,உமாபதி சிவாச்சாரியரின் திருவருட்பயன் நூலினால் உணர்த்தப்படுகின்றது.

♥️சிவனெனும் ஓசை அல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை யுளதே❤️- அப்பர் சுவாமிகள்

❤️சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்❤️ - அப்பர் சுவாமிகள்

உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன்  என்கின்றார் அப்பர் சுவாமிகள்.மேலும், ஒருநாமம் ஒர் உருவம் ஒன்றும் இல்லாரின் செம்மேனிக்கு, நம்மனோர் கடைந்தேறுவதற்காய் கடவுள் கொண்ட பெயர் சிவன் என்பதை, சிவன் என்பது பதிவாக்கியம் என்பதை அப்பர் சுவாமிகள் உணர்த்துகின்றார்.

    இதில், "சி" என்பது சர்வேசுவரனையும் "வ" என்பது உமாதேவியாரையும் குறிக்கும். இவை சிந்தாந்த நூற்களில் இனிதே விளங்கும்.சிவபெருமான் என்னும் போதே, உமாதேவியாரைத் தனித்துக்கூறவேண்டிய தேவையில்லாது போகும் அருமையை "சிவ" என்னும் நாமத்தால் தெளியலாம்.

மேலும், சிவபெருமானுடைய மேனியை "அருள்"  உடம்பு என்றே கூறுகின்றோம். ஏனையோர் உடம்புகள் போன்று பௌதீக உடம்பன்று. அருட்திருமேனி என்பதால், சிவபெருமானுடைய அருளே அவரது மேனியாகும்.சிவபெருமானின் அருளையே உமாதேவியார் என்பதால், சிவபெருமானின் மேனியை தனித்து வழிபடினும், அது சத்தி வழிபாட்டினை நீக்கிய வழிபாடென்று கூறமுடியாது. இதனாற்றான், பண்டைய சிவாலயங்களில் சத்திகென்று தனிப்பிரகாரம் இல்லை.சத்திகென்ற தனிப்பிரகாரம் பிற்காலத்தையது. தனியே சத்தியை மட்டும் வழிபடுவோர் உருவாகியதால், அவர்களின் தாக்கத்தால் , சிவலிங்க வழிபாடு சிவசத்தி வழிபாடென்ற தெளிவு மங்கி விளைந்ததுவே  தனியான சத்திக்குரிய பிரகாரங்களாகும்.

இவ்வாறு பிரிக்கமுடியாத, பின்னப்படுத்தமுடியாத, சிவபெருமானுக்கும்  சத்திக்குமுள்ள சம்பந்தத்தினை தாதான்மிய சம்பந்தம் என்று சைவசித்தாந்ததிற் சொல்லப்படும். ஒன்றாய்,உடனாய,வேறாய் விளங்கும் சுத்தாத்துவித சம்பந்தம் என்பது சிவபெருமானுக்கும் உயிர்களுக்குமானது.

அப்படியானால் சிவபெருமானுக்கும் சத்திக்கும் உள்ள தாதான்மிய சம்பந்தம் என்பது என்ன? என்று யோசிக்கலாம். இதனை இலகுவாக விளக்குவதென்றால்,

சூரியனும் சூரிய ஒளியும்போல் என்று விளக்கலாம்.

சூரிய ஒளிச்சத்தியில் வெப்பசத்தி உண்டு.வெளிச்சம்தரும் ஒளிச்சத்தி உண்டு. இவையே, தாவரங்களின் ஒளித்தொகுப்பு முதல் உலகத்தின் ஐம்பூதத்து தொழிபடுசத்தியாக உருமாறி, மின்சார சத்தியாக வெளிபட்டு, ஏனைய சத்திகளாக திரிபுகளடைந்து உலக இயக்கமாய் விளங்கியவாறுள்ளது.  உலகத்திற் உயிர்கள் வாழ்வதற்குரிய சூழல், சூரியனின் இருப்பினாலும் சூரிய ஒளியின் விளைவினாலுமே உருவாக்கப்படுகின்றது. 

அதுபோல், சிவபெருமான் உலக கர்த்தாவாகவும், அவரது அருள் மாதேவியாராகவும்  விளங்குகின்றது என்பதுவே சைவசமயக்கொள்கை.  அனைத்தையும் நினைத்த மாத்திரத்தில் முடிக்கும் சிவபெருமானால் முடியாத காரியங்கள் சிலவுண்டு. அவற்றிலொன்று அவரின் அருளை நிறுத்துதல். அவர் அருளமாட்டாதவர் என்றால், முத்திபெற்ற ஆன்மாக்கள் மீண்டும் பிறத்தலை அடையும். அதுபோல், ஆன்மாக்கள் சிவபெருமானை அடையவேண்டிய தேவையும் இல்லாதுபோகும். அரசன் சிம்மாசனத்தில் இருக்கும் வரைதான், மக்கள் அவனைக் கொண்டாடுவர். ஆக, பனிக்கட்டிக்கு குளிர் என்பது எங்ஙனம் இயற்கை குணமோ, நெருப்புக்கு சூடு என்பது எங்ஙனம் இயற்கைக் குணமோ, அங்ஙனம் சிவபெருமானுக்கு அருளல் என்பது இயற்கைக் குணம்.  இராட்சதம், தாமசம், சாத்வீகம் முதலிய குணங்களற்ற நிர்குணனாகிய சிவபெருமானின் இயற்கை இயல்பு (குணம்) அருளலாகும்.

அருள்(உமாதேவியார்) இல்லாவிட்டால் சிவபெருமானை அனுபவிக்கும் வாய்ப்பு உயிர்களுக்கு இல்லை. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பது இதன் பொருட்டேயாகும்.  இன்பத்தாலும் துன்பத்தாலும் தாக்கப்படாத ஆன்மாவில் திருவருள் பதியும்.அங்ஙனம் திருவருள் பதிவதாலேயே,  அந்த ஆன்மா சிவபெருமானை அனுபவிக்கும்(முத்தி) வாய்ப்பினைப் பெறும். அம்மாதான் அப்பாவினை இனங்காட்டுவர். அதுவே உலக வழக்கு. சூரிய ஒளியாலேயே சூரியனின் இருப்பு நமக்கு விளக்கமுறுகின்றது. அதுபோல், உமா தேவியாராலேயே (திருவருள்) சிவபெருமானை நாம் அனுபவிக்கலாம். இதனாலேயே, திருஞானசம்பந்தப் பெருமானும் ♥️தோடுடைய செவியன்♥️ என்று பாடினார். தோடு பெண்கள் தம் காதுகளில் அணிவது. குழையே ஆண்கள் தம்காதுகளில் அணிவது. சிவபெருமானைப்பாடும்போது,குழையுடைய செவியனென்று பாடாது; தோடுடைய செவியன் என்று பாடியமையால் திருஞானசம்பந்தப்பெருமான் முதலிற் அனுபவித்தது சிவபெருமானின் இடப்பாகமாகிய உமாதேவியரின் பாகத்தையேயாகும். இன்னும் விளக்கமாகச் சொன்னால், தமக்கு ஞானப்பால் தந்து , வலிய வந்து ஆட்கொண்ட சிவபெருமானின் அருளல் சிறப்பினையே திருஞானசம்பந்தப் பெருமான்  நினைந்துருகித் தம்தேவாரத்தை ஓதியருளத் தொடங்கினார்.

 சிவபெருமானின் அருளல் சிறப்பைக் கொண்டாடும் ஒன்பது திருநாட்களே இந்த நவராத்திரி விரதம் என்பதை சைவ சமயத்தார் நன்கு விளங்கி நிற்றல் அவசியம். இதனால் தான் சிவமில்லையேல் சத்தி இல்லை சத்தியில்லையேல் சிவம்  இல்ைல என்று நம் வழக்கில் காணும் சுலாேகம்

பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி -  அப்பர் சுவாமிகள். 

       திருச்சிற்றம்பலம்

" பிறவியினை அறுக்க வழி பிறவாமை "

 " பிறவியினை அறுக்க வழி பிறவாமை "


பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடி சேராதார்” என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.


முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.


இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.


பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.


பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும். 


ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

சிவம் காக்கும்

 சிவம் காக்கும்



சிவம் காக்கும் நாகேந்திரன் திடுக்கிட்டார். அவருடைய அதுநாள் வரையிலான ஜாதகம் படித்தலில் இப்படி ஓர் அதிர்ச்சி அவருக்கு ஏற்பட்டதேயில்லை. மீண்டும் கட் டங்களைத் தன் ஆள்காட்டி விரலால் தடவித்தடவி, சுற்றிச் சுற்றி வந்து சோதித்தார். இல்லை; வாய்ப்பே இல்லை. அன்றிரவு அந்த ஜாதகக்காரன் மரணத்தைத் தழுவுவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்னும் சில மணிநேரத்தில் தன் விதி முடியப்போவதை உணராமல் அவன்தான் எவ்வளவு வெகுளியாக அவரை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்! அவனிடம் எப்படி உண்மை யைச் சொல்வது? தன்னுடைய தர்மசங்கடத்தை மிகவும் உன்னிப்பாக அவனுடைய ஜாதகத்தை ஆராய்வது போன்ற முகபாவனையில் மறைத்துக் கொண்டார் நாகேந்திரன். அவனைத் தவிர்க்க வேண்டும். இன்னும் ஒரு சில மணிநேரங்களுக்குள் அவனுக்குதான் என்ன நற்பயன்கள் விளைந்துவிடப் போகின்றன? அப்ப டியே விளைந்தாலும் அதை அனுபவிப்பதற்குள்தான் அவனுடைய வாழ்வு முடிந்துவிடுமே! ஆனால் இந்த துர்ப்பலனைத் தன் வாயால் சொல்லத்தான் வேண்டுமா? தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து, “இந்தாப்பா, உன்னோட ஜாதகத்தை நான் ரொம்பவும் அலசிப்பார்க்க வேண்டியிருக்கு. அதனால் இப்ப உடனே உனக்கு உன் ஜாதகப் பலன்களை முழுமையாகச் சொல்ல என்னால் முடியலே. அதனால நாளைக்குக் கார்த்தால நீ வா. உனக்கு விவரமா சொல்றேன்” என்று கூறி அனுப்பி வைத்தார். அவன் போனதும், நாகேந்திரனின் மனைவி அவரை எதிர்கொண்டாள். “நீங்க என்ன சொன்னாலும் அது நடக்கும். ஒரு ஜாதகத்தைப் படித்து பலிக் கக்கூடிய பலனா சொல்ற உங்க வாய், அவனை நாளைக்கு வரச்சொல்லியிருக்கு. அவனோட ஜாதகத்தை நீங்க கூட்டி, கழிச்சுக் கணக்குப் போட்டுத் தடுமாறிண்டிருந்ததை நான் உள்ளேருந்து கவனிச்சுண்டுதான் வந்தேன். அவனை அனுப்பினதுக்கும் ஏதோ உள்ளர்த்தம் இருக்கு. ஏன், அவனுக்கு என்ன கெடுதல் நேரப்போறது?” என்று பதைபதைப்புடன் கேட்டாள். “கெடுதலா? இந்த ஜாதகப்படி அவன் இன்னிக்கு ராத்திரியே எமனுக்கு விருந்தாளியாய் போகப்போறான். அதை என் வாயால சொல்ல எனக்குத் திராணியில்லே. அதான், இன்றுபோய், நாளை வான்னுட்டேன்” தயங்கியபடி சொன்னார் நாகேந்திரன்.
“அடக்கடவுளே!” என்று பதறித் துடித்தாள் மனைவி. “நாளைக்கா வரச் சொன்னீங்க? அப்படியானால் அவன் ஜாதகப்படியான மரண சம்பவம் இன் னிக்கு ராத்திரி நடக்காதா? உங்க வாக்கு இதுவரைக்கும் பலிச்சது போல, அவன் நாளைக்கு நிச்சயம் வருவானே...” “அதெப்படி, அதெப்படி?” நாகேந்திரன் தடுமாறினார். என் வாக்கு பலிக்கணும்னா அவன் நாளைக்கு வரணும். அவன் ஜாதகம் பலிக்குமானா அவனால வரமுடியாது. அதாவது, என் கணக்கு சரியாகும். கணக்கு சரியாகுமா; வாக்கு பலிக்குமா? மொத்தத்தில் அன்றிரவு அவருக்கும் சரி, அவருடைய மனைவிக்கும் சரி, தூக்கம் போச்சு! விஜயன் தன் கிராமத்தை நோக்கி நடந்தான். மாலை வேளை மயங்கிக் கொண்டிருந்தது. இரவுக்குள் கிராமத்துக்குப் போய்விடலாம். இரவு தூங்கிவிட்டு, காலையில் மீண்டும் புறப்பட்டு ஜோதிட ரைப் பார்க்க வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டான். இருட்டு கருமையை அதிகரித்துக் கொண்டே வந்தது. இருட்டுக்குக் கார்மேகமும் துணை புரிந்தது. நட்சத்திரங்களும் சந்திரனும் மேகங்களை ஊடுருவ முடியாமல் தவித்தன. கருமை வலுக்க வலுக்க, அந்தப் பிராந்தியமே கொஞ்சம் சொஞ்சமாகக் குளுமைக்கு வந்தது. சில்லென்று வீசிய காற்று, மண்வாசனையையும் சுமந்து வந்தது. மழை, பன்னீர்த்துளித் தூறலாய் சுகமாய்த்தான் ஆரம்பித்தது. ஆனால் அதுவே நீள் கம்பிகளாகி வானத்தையும் பூமியையும் இணைக்க ஆரம்பித்த போதுதான் அவன் புகலிடம் தேடினான். மழையோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொண்டு அவனை விரட்டி மகிழ்ந்தன. அதோ! ஒரு மண்டபம். பாழடைந்த மண்டபம்தான். ஆனாலும் பரவாயில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை. நனையாமல் தன்னைக் காத்துக்கொண்டால் தான் மறுநாள் மீண்டும் வந்து ஜோதிடரைப் பார்க்க முடியும். ஒரு வேளை மழை, குளிர் காரணமாக உடல் சுகவீனமுற்று அவரைப் பார்க்க முடியாம லேயே போய் விடுமோ? அவன் கண்களில் இப்போது மழை. ஆனால் ஒதுங்கப் போன இடமும் அவனைப் பார்த்து கேலி செய்தது. கலகலத்துப் போயிருந்த அந்தப் பாழடைந்த மண்டபத்தின் விரிசல்களினூடே மின்னல் அவனை மிரட்டியது. ஓர் இடி விழுந்தாலும் போதும் பொலபொலவென்று உதிர்ந்துவிடும் அந்த மண்டபம். ஆனால் அந்த மண்டபத்துக்குள்ளே- அது என்ன பீடம்? ஓ! அது ஒரு சிவலிங்கம். என்ன கொடுமை இது? சிலந்திக்கூடுகள் தம் இழைகளால் லிங்கத்தைச் சுற்றிக்கொண்டு, எந்த மார்க்கண்டேயனுக்காகப் போரிட்டுக் கொண்டிருக்கின்றன? எமனுடைய பாசக் கயிறு போலத் தோற்றமளித்த அந்த சிலந்தி வலைப்பின்னல்களை அவன் தன் கைகளாலேயே அறுத்து அகற்றினான். லிங்கத்தின் மீது படிந்திருந்த தூசிகளும் தும்பும், மேலே நேராக விதான ஓட்டை வழியாக விழுந்து கொண்டிருந்த மழைத்தண்ணீரில் கரைந்தோடி லிங்கத்திற்குப் புதுப்பொலிவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடா... இந்த சிவாலயம் இப்படி எழில்கெட்டுப் போயிருக்கிறதே! எனக்கு மட்டும் வசதி இருந்தால், இந்த ஆலயத்தை உடனே புனருத்தாரணம் செய்வேனே!” என்று அங்கலாயத்துப் புழுங்கினான் விஜயன். நான் உழைப்பேன். அதிகம் சம்பாதிப்பேன். என் வருவாயைக் கொண்டு இந்தப் பாழடைந்த மண்டபத்தைப் புதுப்பிப்பேன். இந்த சிவலிங்கத்தைத் தூய்மைப்படுத்துவேன். மண்டபத்தைச் சுற்றிலும் நந்தவனம் அமைப்பேன். ராஜகோபுரம் கட்டுவேன். கோபுரம், ராஜகோபுரம், உட்பிராகாரங்கள், பெரியமணி மண்டபம், புதுப்பிக்கப்பட்ட ஆவுடையார், அதன்மீது புதுமெருகு கொண்ட சிவலிங்கம்... அடடா... புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய் வேன். மங்கல ஒலி முழங்க, வேதியர் புடைசூழ திருக்குடம் ஏந்தி கோயிலை பவனி வருவேன். சாரத்தில் ஏறி திருமஞ்சனம் செய்வித்து கும்பாபிஷே கம் செய்வேன். சுற்றுவட்டார கிராமத்து மக்களெல்லாம் திரண்டு வந்து கூடுவார்கள். அடடா... அப்போதுதான் எவ்வளவு பிரமாண்டமாக இந்தக் கோயில் வளர்ந்திருக்கும்! எத்தனை லட்சம் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்கள்! அவர்களுடைய துயரெல்லாவற்றையும் இங்கு எழுந்தருளியி ருக்கும் எம்பெருமான் எப்படியெல்லாம் தீர்த்துவைப்பார்! எம் நாயகன்தான் எவ்வளவு கம்பீரமாக கொலுவீற்றிருப்பார்! தினசரி ஆகமங்கள் என்ன, திரு விழாக்கள் என்ன, பண்டிகைகள் என்ன, எவ்வளவு கோலாகலமாக இந்தக் கோயில் கொண்டாடப்படும்! எவ்வளவோ தருமங்கள் இக்கோயில் மூலமா கச் செய்யப்படும்! அதில் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும்தான் எத்தனை ஆயிரம்பேர் பயனடைவார்கள்.விஜயனின் கற்பனை எல்லை கடந்து போயிற்று. மானசீகமாகவே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்திவிட்டான். அந்த சிவனுக்கு பிரதோஷ காலத் தில் பாலால், பன்னீரால், பச்சரிசிமாவால், கரும்புச்சாறால் அபிஷேகம் பண்ணி ஆனந்தம் கொண்டான். பளீரென்று ஒரு மின்னல். கற்பனை கலைந்தது. அதிர்ச்சியுடன் கண் விழித்தான். விரிசல் விட்ட விதானத்திலிருந்து மின்னல் பேரொளி. அந்த ஒளியில் அவன் கண்டதுதான் என்ன? மிகப் பெரியதாகப் படமெடுத்தபடி அவனைப் பார்த்து சீறிக்கொண்டிருந்தது ஒரு கருநாகப் பாம்பு. அவன் சுதாரித்துக் கொள்வதற்குள் எம்பி அவன் மீது பாய்ந்தது. பளிச்சென்று ஒதுங்கி, அந்த மண்டபத்தைவிட்டு வெளியே ஓடி வந்து விழுந்தான் விஜயன். பேரிடி ஒன்று விழுந்தது. அந்த அதிர்ச்சியில் மண்டபம் கிடுகிடுத்து, லேசாக முட்டு கொடுத்து கொண்டிருந்த தூண்கள் நழுவ, ஏற்கனவே சிதிலமடைந்திருந்த மேல்விதானம் அப்படியே ‘பொக்’கென்று கீழே விழுந்தது. எந்த பாதிப்பும் இல்லாமல் சிவலிங்கம் மட்டும், கொட்டும் மழை அபிஷேகத்தில் திளைத்தபடி அவனைப் பார்த்துப் பாசமாய் சிரித்தது. அப்போதைக்குத் தான் உயிர் தப்பிவிட்டாலும், மறுநாள் பொழுது விடிந்ததும் ஜோதிடரைப் போய்பார்த்து அவர் குறித்துக் கொடுக்கும் ஆகம விதி களின்படி இந்தக் கோயிலைக் கட்டி, கும்பாபிஷேகமும் செய்ய வேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டான் விஜயன். தன் கிராமத்தை நோக்கி மழையையும் பொருட்படுத்தாமல் நடந்தான். பொழுது புலர்ந்தது. வாசல் கதவைத் திறந்த நாகேந்திரன் திடுக்கிட்டார். வாசலில் காத்திருப்பது யார்? நேற்று யாருடைய ஜாதகத்தைப் படித்து யாருடைய விதி நேற்றோடு முடிந்ததென்று மனசுக்குள் கணக்குப் போட்டு அனுப்பி வைத்தாரோ, அதே கிராமத்தான். இவன் சாகவில்லை. என் கணக்கு தப்பா? இதுநாள் வரை நான் படித்த ஜோதிடக்கலை, தன் அனுபவம், இதுவரை கொஞ்சம்கூடப் பொய்க்காத தன் கணிப்பு, அதெல்லாம், அந்த ஜோதிட அறிவெல்லாம் இவனுடன் ஏற்பட்ட அனுபவத்தில் மாயையாகிவிட்டதா? படித்ததெல்லாம் வீணா? ஆனாலும் அவனை வரவேற்று, முன்னறையில் அமர்த்தி, தன் ஜோதிட ஆய்வு கூடத்திற்குப் போனார் நாகேந்திரன். உயரே வைத்திருக்கும் அவனு டைய ஜாதகத்தை எம்பி எடுக்க முனைந்தபோது ஒரு ஓலைச்சுவடி கீழே விழுந்தது. விழுந்து பிரிந்தது. குனிந்து அதை எடுக்கப்போன நாகேந்திரன், பளிச்சென்று தெரிந்த வாசகங்களைப் படித்தார்.
“எவன் ஒருவன் மானசீகமாக சிவன் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறானோ அவனுக்கு மரணம் தள்ளிப்போகிறது.”
உடலே சிலிர்த்தது அவருக்கு. விஜயன் மரணத்தை அப்போதைக்கு வென்றுவிட்டான். அப்படியானால் அவன் மானசீகமாக சிவன் கோயில் ஒன்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறான். ஆவல் பொறுக்க மாட்டாமல் அவன் தன்னை சந்தித்த இரண்டு வேளைகளுக்கு இடையே நடந்ததென்ன என்று கேட்டார். விஜயன் விரிவாக நடந்ததை விளக்கிச் சொன்னான். தன்னைத் தழுவி இறையருள் வேண்டிய மார்க்கண்டேயனை யமனுடைய பாசக்கயிற்றிலிருந்து மீட்டார் சிவன். விஜயனைப் பொறுத்தவரை தன்மீது படர்ந்திருந்த சிலந்தி வலைக் கயிற்றை அறுத்துத் தள்ளிய சேவைக்காக அவனை மண்டப இடிபாட்டிலிருந்து விரட்டி அவன் உயிரையும் காத்திருக்கிறார் என்பதை ஜோதிடர் நாகேந்திரன் புரிந்து கொண்டார்
திருச்சிற்றம்பலம்

தர்மத்தின்_மதிப்பு_என்ன..?

 தர்மத்தின்_மதிப்பு_என்ன..?

ஒரு குடும்பம், காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது.
அது ஆன்மிக குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார்.
கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை.
”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்”என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட“அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்
#காசி_விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.
தந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து, பிறகு, வேறு வழியில்லை என்பதால்,தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, “அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும், இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்"என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார். “தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார்! அவற்றை செயல்படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை.
எனவே, பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல “இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்”என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.
உலகிற்கே படியளக்கும் ஈசன் சும்மா இருப்பானா,அவன் திருவுள்ளம்,இந்தப்
பெண்ணை, சோதிக்க எண்ணியது.அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது.
இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு”என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது.
இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி
“எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது. இறைவா! நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும், கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்”என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள். ஒரு நாள்,ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார்.
”மகளே! கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும்”
என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள்.
அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார்.
அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?. எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி,“ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே, நீங்கள், ஐந்து லட்சம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு,சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்.”என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். ”இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
”தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும்.
நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்” என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.
“பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன்.
ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி. உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய்.
எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?”
என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி,
”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்” என்று கேட்கிறாள்.
“மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை”என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா! உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று.
தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா?
என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.
ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்”
என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். பாவ புண்ணியங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது.
கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார்.
“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி,
”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். "ஈசனே, இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும் #ஈஸ்வரா என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.
சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து,
”அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் #சிவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும்”என்று கூறுகிறாள்.
செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”என்றார் கிண்டலாக. இளம் பெண்ணோ.. “இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும்".
இதைக் கல் என்று பார்க்காதீர்கள். #பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார். ”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும்.
மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும்.
மாறாக நடந்தால்,இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.
இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து பெருந்தொகையை கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்? என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து,”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?” என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”
என்று ஏற்பாடு செய்து விட்டு, அன்று விடிந்ததும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிட துவங்குகிறார். விடிந்து, காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவுதான்.
| |குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க #பகவான் #சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார்.||
அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து தரையில் அமர்ந்து விட்டார்.
“ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்”
என்பதை புரிந்து கொண்டு, “என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.
அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300-400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்
”தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்கவில்லையே?”
என்ற எண்ணம் வரும் போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும்.
எனவே, அன்பர்களே..இதைக் கதை என்று பார்க்காமல், தர்மத்தின் பாதையை உணர வேண்டும்.

தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும்

 தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும்





அகத்தூய்மையின் அவசியத்தை விளக்கும் தத்துவக் கதை

தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.

தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்.

ஒருநாள் அவளை அழைத்து,

"கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய்.இறை வழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு, உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டுவிடு! வேறு ஏதேனும் தொழில் செய்,''-

என்று அறிவுரை சொன்னார்.

அவள் அதைக்கேட்டு நடுங்கினாள்.

"சுவாமி! எனக்கு மட்டும் வேறு தொழில் செய்யும் ஆசை இல்லையா? பாவப்புதையலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, வேறு வேலை தர எல்லாரும் மறுக்கிறார்களே! ஒழுக்கம் கெட்டவளை வீட்டு வேலைக்கு சேர்த்தால் என் கணவனுக்கும், வாழ்க்கைக்கும் அல்லவா ஆபத்து- என்று குடும்பப்பெண்கள் என்னைக் கடிகிறார்களே!

நான் என்ன செய்வேன், இருப்பினும், இதை விட்டுவிட முயற்சிக்கிறேன்,'' என்றாள்.

பட்டினி கிடந்தேனும் செத்து விட முடிவெடுத்தாள்.

ஒவ்வொரு நாளும் தான் செய்த பாவத்தொழிலுக்கான மன்னிப்பு வேண்டி இறைவனிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தாள்

ஆனால், பாழும் சமுதாயம் அவளை விடவில்லை. 

"உன் பரம்பரையே இந்தத்தொழில் செய்து தானே பிழைத்தது. நீயும் கெட்டுப்போனவள் தானே! 

இப்போது பத்தினி போல் நடிக்கிறாயா?'' என்று கேவலமாகப் பேசியதுடன், அவளை வலுக்கட்டாயமாகவும் இழுத்துச் சென்றனர் சில மாபாதகர்கள்.

வேறு வழியின்றி அதையே அவள் தொடர்ந்தாள்.

இறைவனிடம் தன் நிலையைச் சொல்லி அழுதாள்.

அவளது மனமாற்றத்தை அறியாத சந்நியாசி, தான் சொல்லியும் அந்தப்பெண் கேட்கவில்லையே என கோபமடைந்தார்.

ஒவ்வொரு நாளும் அவளது வீட்டுக்கு வந்து போகும் ஆண்களின் எண்ணிக்கை அளவுக்கு கூழாங்கற்களை எடுத்து ஓரிடத்தில் போட்டார். அந்தக்குவியல் தினமும் உயர்ந்து கொண்டே வந்தது.

ஒருநாள் அவளிடம் அந்தக்குவியலைக் காட்டி, 

"நீ செய்த பாவத்தின் அளவைப் பார்த்தாயா! சொல்லச்சொல்ல கேட்க மறுக்கிறாயே!'' என்று கடிந்து கொண்டார்.

அந்தக்குவியலைக் கண்டு மலைத்த அந்த அப்பாவி பெண் இறைவனிடம்,

"கடவுளே! இனியும் இந்தத்தொழில் எனக்கு வேண்டாம். தற்கொலை செய்வது பாவம் என்கிறார்கள். இல்லாவிட்டால், அதை செய்திருப்பேன். நீயாக என் உயிரை எடுத்துக் கொள்,''என்று கதறியழுது பிரார்த்தித்தாள். அவளது கோரிக்கையை இறைவன் ஏற்றான்.

அன்றிரவே அவளது உயிர் போனது.

சந்நியாசியும் அதே நாளில் இறந்தார்.

தாசியின் உடலை ஊர் எல்லையில் இருந்த காட்டுக்குள் வீசி விட்டனர் அருகில் இருந்தவர்கள்.

நரிகளுக்கும், நாய்களுக்கும் அவளது உடல் விருந்தானது.

சந்நியாசியை மலர்களால் அலங்கரித்து, மலர் பல்லக்கில் ஏற்றி முறைப்படி அடக்கம் செய்தனர்.

அந்த ஆத்மாக்கள் விண்ணுலகம் சென்றன.

அங்கிருந்தவர்கள் எமதூதர்களை அழைத்து, தாசியை சொர்க்கத்துக்கும், சந்நியாசியை நரகத்துக்கும் அனுப்பக்கூறினர்.

சந்நியாசி கதறினார். ""பாவிக்கு சொர்க்கம், எனக்கு நரகமா?'' என்றார்.

""துறவியே! அவள் உடலால் தவறு செய்தாள்.

மனதால் இறைவனைப் பிரார்த்தித்தாள்.

அதனால் அவளது உடல் பூலோகத்தில் மிருகங்களுக்கு இரையானது. நீர் பூலோகத்தில் உடலால் தவறு செய்யாததால், உம் உடலுக்கு அங்கே மரியாதை கிடைத்தது. ஆனால், மனதால் தாசியின் பாவச்செயலை மட்டுமே சிந்தித்தீர்.

அதனால், இறைவழிபாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. எனவே உமக்கு நரகம்,'' என்றனர்.

இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம் என்பது தெளிவாகிறதல்லவா!!!!.

இதேபோல் தான் சிலர்  மற்றவர்களில் பிழை பிடிப்பதிலேயே தமது ஆத்மலாபத்தினை தொலைத்து விடுகின்றனர்

வியாழன், 2 செப்டம்பர், 2021

சிவமஹிமை

 சிவமஹிமை


சிவம் என்ற சொல்லுக்கு ஸர்வமங்களரூபியாய் இருக்கும் பரம் பொருள் என்பது பொருள். “சிவஸ்தாணு மஹேச்வர.” என்பது உபநிஷத்வாக்கியம். “சிவம் மங்களம் பரம்” என்பதும் எப்போதும் ஸர்வமங்களரூபியாய் ஸர்வஜகத்திலும் வியாபித்து அருள்பாலிக்கும் பரம்பொருள் என்பது ஆன்றோர் வாக்கு. 

“சிவ ஏகோத்யேய: சிவம் கர: ஸர்வமன்யத் பரித்யாஜ” என்பது அதர்வசிகோபநிஷத்வாக்கு. 

அதாவது மற்ற தேவதைகளை வழிபடுவதைவிட்டு பரனேச்வரன் ஒருவரே எல்லோராலும் பூஜிக்கத் தக்கவர் என்று வேதம் முடிவு செய்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து பாதர்க்கும் போது அத்வைத ஸித்தாந்தமும் ஏகநாயகன் ஒருவனே என்றும், “ஒன்றுகண்டீர் உலகுகொரு தெய்வம்” என்று திருமூலரும்,  என்ற வேதவாக்கியங்களும் சிவ மஹிமையைக் கூறுகின்றன. சகல உலகங்களுக்கும், ஸ்வேஸ்வர மானவரும், எல்லோராலும் பூஜிக்கத்தக்கவருமான ஈச்வரன் ஒருவனே என்றும், அவருக்குச் சமமாவோ அவரைத்தவிர இரண்டாவதான தெய்வசக்தியோ கிடையாது என்றும் ஸகல வேத இதிஹாஸ புராணங்களும் கூறுகின்றன.


      அத்வைத சித்தாந்த ரீதியாக ஆராய்ந்து பார்ப்போமானாலும் இதே பொருளைத்தான் கூறுகிறது. எங்கும் வியாபித்துக் கொண்டு நிற்கும் உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று சக்திக்கும் அப்பாற்பட்ட துரீய நிலையாய் நிற்கும் பரப்ரம்மம் ஒன்று தான் வேதங்களாலும், உபநிஷத்துகளாலும், மற்ற இதிஹாஸங்களாலும் அறியப்பட்டு பல பெரியோர்களாலும் கூறப்படுகிறது.  


 “சேர்ந்தறியாக் கையானை” என்று ஶ்ரீமணிவாசகரின் திருவாசகமும் கூறுகிறது. பரமேச்வரன் யாரையும் கை கூப்பி வணங்கவில்லை என்றும், ஆனால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலான மற்ற எல்லாத் தேவர்களும் சிவலிங்க வடிவில் ஸாக்ஷத் பரமேச்வரனை அவரவருக்கு ஏற்ற பதவிகளையடைய ஸதாஸர்வ காலமும் பூஜித்துக் கொண்டிருப்பதாக வேதம் இதிஹாஸ புராணங்களும் கூறுவதைப் பார்க்கலாம்.

சிவபிரானுடைய மங்களமூர்த்தியின் மஹிமையையும், அவனுடைய திவ்ய நாமாவையும் புகழாதவர்கள் இந்த உலகத்தில் கிடையாது எல்லா மஹாமந்திரங்களைக் காட்டிலும் அதிக உத்க்ருஷ்டமாயும், ஸகல உலகங்களிலும் மஹாராஜ மந்த்ரமாயும் பாளித்து வருகிற, ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்களும், அதே போல சிவபெருமான் அணியும் விபூதி, ருத்ராக்ஷம் என்ற இரண்டு சிவசின்னங்களும், அந்த பரமேச்வரனைப் போலவே எல்லாத் தேவர்களாலும் போற்றப்பட்டும், அவரவர்கள் தாம் சிவபூஜை செய்யும்போது விபூதி, ருத்ராக்ஷத்தைப் பரம பக்தியோடு அணிந்து கொண்டு ஸதா மாலைப் பூஜிக்கிறார்கள் என்ற ரகஸியத்தை பிரம்மாவானவர் நாரதருக்கு கோடிருத்ர ஸம்ஹிதையில் உபதேசிக்கின்றார்.


தவிர, ஶ்ரீ உமாபதிசிவாசாரியார் இயற்றிய ஶ்ரீகுஞ்சிதாங்க்ரிஸ்தவம் 91-வது ச்லோகத்தில் இந்த தத்துவத்தை நன்கு விளக்கியுள்ளார்கள்.

எந்த சிவலிங்க்ரூபத்தில் பிரமம் விஷ்ணு முதலிய தேவர்கள் பஸ்ம ருத்ராக்ஷதாரிகளாகவும், தங்கள் தேவிமார்களுடன் கூடிபூஜை செய்கிறார்களோ, அந்த ஸகல பிராணிகளுக்கு ஸர்வத்தையும் அளிப்பவரும், எல்லா உருவமும் உள்ளவருமான பரமேசுவரனுடைய குஞ்சிதபதத்தை நமஸ்கரிக்கிறேன் என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.

ஸகல வித்யைகளுக்குள் வேதம் சிறந்தது. அதற்குள் ஶ்ரீருத்ரம் சிறந்தது. அதற்குள் நம: சிவாய என்ற பஞ்சாக்ஷர மஹா மந்த்ரம் சிறந்தது. அந்த பஞ்சாக்ஷரத்திற்குள் ‘சிவ’ என்ற இரு அக்ஷரங்கள் மிகச் சிறந்தவை என்பது பெரியோர்களின் வாக்கு.

சிவநாமாவை ஜபித்தால் அதனால் போக்கக் கூடிய பாபங்களை உலகில் யாராலும் செய்ய முடியாது என்பதாகும். தவிர, “சிவ” என்று வரும் மஹாபஞ்சாக்ஷர ஜபத்தை எவன் நியமத்தோடு நித்தம் தவறாமல் ஜபித்துக் கொண்டு வருகிறானோ அவன் நோயாளியையோ அல்லது தரித்ர தசையிலுள்ளவனையோ கண்ணால் பார்த்தாலே அந்த குறை அவர்களுக்கு உடனே நீங்கி சகல செளகர்யங்களையும் அடைகிறான் என்று மந்த்ரோபநிஷத் கூறுகிறது.

அந்த சிவநாமாவுக்கே இப்படிப்பட்ட அபரிமிதமான சக்தியும் மஹிமையும் இருக்கும் போது இதற்கு மூலமாயுள்ள சிவபிரானுக்கு உள்ள மஹிமையை யார் தான் அறியமுடியும். தேவர்களாலும் அறிய முடியாது என்பது திண்ணம். இதைச் சேந்தனார் 9-ம் திருமுறையில் திருப்பல்லாண்டு கூறும்போது “ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்திற்கு அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே” என்று போற்றியிருக்கிறார். இப்படிப்பட்ட மஹாமஹிமை தங்கிய பரமேசுவரனுக்கு எந்தத் தெய்வத்துக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால் இவருக்கு “ஆசுதோஷி” என்ற பெயர் உண்மையாம். யார் யார் எந்தெந்த முறையில் தம்தம் சக்திக்கேற்றவாறு உபாசிக்கின்றனரோ அவர்களுக்கு யாரும் பெறமுடியாத அபரிமிதமான அனுக்கிரஹத்தைச் செய்வதால் இப்பெயர் பெற்றார் என்பது மஹான்களின் வாக்கு. இதற்கு நம் சிவனடியார்களின் வாக்கே தக்க சான்றாகும்.

ரிக், யஜுஸ், ஸாமம் என்னும் மூன்று வேதங்களிலும் பரமேசுவரன் ஸர்வோத்க்குஷ்டமாகப் போற்றப்படுகிறார். எனினும் மூன்று வேதங்களிலும் நடுவிலுள்ள யஜுர்வேதத்தில் வரும் “சதருத்ரீயம்” அல்லது “ஶ்ரீருத்ரம்” என்று எந்த மந்திரத்தால் சிவபிரானை எல்லாத் தேவர்களும் ஸ்தோத்ரம் செய்கிறார்களோ அந்த ஶ்ரீருத்ரத்தின் அர்த்தத்தை கொஞ்சம் நாம் ஆராய்ந்து பாதர்க்கும் போது சிவபெருமானைத் தவிர வேறு எந்த தெய்வத்துக்கும் இவ்வளவு சிறப்பும் அபரிமிதமான மஹிமையும் இல்லையென்றும், சிவபெருமானே எல்லாத் தெய்வத்த்க்கும் மேம்பட்ட தெய்வம் என்றும், அவரே பரம்பொருள் என்றும் அறியலாம்.

ஸகலோகங்களிலும் உள்ள ஈ எறும்பு முதல் ஹரிப்ரம்மேந்தராதி தேவர்கள் உள்பட ஸகல ஆன்மகோடிகளிடத்து உள்ள அபரிதமான கருணையால் சிவபெருமான் ‘க்ருபா சமுத்திரன்’ என்று வடமொழியிலும், ‘கரையில் கருணைக்கடல்’ என்று தமிழிலும், பல அடியார்களாலும் ஸ்தோத்ரம் செய்யப்பட்டுள்ளார். உதாரணமாக சிவபிரானது உடை, ஆபரணம், இருப்பிடம், வாஹனம், ஆஹாரம், பக்தர்களுக்குச் செய்த அனுக்ரஹம் இவைகளையெல்லாம் நோக்கும் பொழுது, இப்பெருமானது அபரிமிதமான கருணையையும், எல்லையற்ற மஹிமையையும் உணர முடிகிறது.

சுருக்கமாகச் சொன்னால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் பதவியைப் பெறுவதற்காகச் சிவபிரானைப் பூஜித்தலும், பூலோகத்தில் ஒரு நாள் தேவலோகத்திலிருந்து கங்கையை பூவுலகிற்குக் கொண்டு வந்ததும், அருச்சுனனுக்காக வேடனாக வந்து பாசுபதாஸ்த்ரம் கொடுத்ததும் குருதல்பசுமனம் செய்த மஹா பாபியாகிய சந்திரனை தலையில் தூக்கிவைத்துக் கொண்டதும், திருவிளையாடற்புராணத்தில் வரும் கேவலம் ஒரு பக்ஷியாகிய நாரைக்கு முக்தி கொடுத்து அதற்கு அடையாளமாக அதன் சிறகைத் தன் தலையிலே தாங்கிக் கொண்டதும், மார்க்கண்டேயர்க்காக இயமனையே காலால் உதைத்துக் கொன்று மறுபடியும் பூமிதேவிக்காகவும், மற்ற தேவர்களுக்காகவும், அவனைப் பிழைக்க வைத்ததையும், மஹாவிஷ்ணுவின் அவதாரமாகிய மத்ஸயம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமநம் இத்யாதி ரூபங்களினால் அந்தந்த அசுரர்களை ஸம்ஹரித்து

சகல உலகங்களையும் ரக்ஷித்து அருள்பாலித்த அபரிமிதமானஅவரது (சிவபெருமானது) கருணையை நோக்கும் பொழுது ஆதியந்தம் இல்லாத மஹாகைலாஸத்திற்கு அதிபதியான ஸாக்ஷாத் பரமேச்வரனுடைய முப்பத்து முக்கோடி தேவர்களாலும் அறியமுடியாத சிவபரத்துவமும், அளவு கடந்த மஹிமையும் நன்கு தெரியவருகிறது.

மஹாமஹிமை தங்கிய சிவபரம் பொருள் எல்லா ஜீவ கோடிகளும் உய்யும் பொருட்டு, தான் சிவலிங்கவடிவில் பாஸித்து வருகிறார் என்பது சிவபுராணத்தில் உள்ள கோடிருத்ர ஸம்ஹிதையில் விஸ்தாரமாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது:-

காணப்படும் எல்லா வஸ்துக்களும் லிங்கஸ்வரூபமாகவே காணப்படுகின்றன. ஆதலால் பரமேச்வரன் ஸகல உலகங்களிலும் ஸகல ஆன்மாக்களுக்கும் அனுக்ரஹம் செய்வதற்காகவே எல்லா மூர்த்தங்கட்கும் அப்பாற்பட்ட சிவலிங்கரூபமாகப் பிரகாசித்து வகுகிறார் எனறு பொருள்படுகின்றது. தவிர ஸகல உலகங்களுக்கு மஹா மஹிமையுள்ள ஈச்வரன் தான் முழு முதற்கடவுள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.


      தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அம்ருதம் அடைய வேண்டிப் பாற்கடலைக் கடையுபோது வாசுகி என்ற பாம்பினால் உமிழப்பட்ட விஷமும் கடலினின்றும் தோன்றிய விஷமும் கலந்து ஆலாலவிஷம் என்ற கொடிய விஷமாகி எல்லா உலகங்களிலும் பரவி அழித்துக் கொண்டு வரும்போது,

ஸகல உலகங்களையும் ரக்ஷிக்கும் பொருட்டு அந்த கொடிய விஷத்தை ஒரு நாவற்பழம் போல் தன்வாயில் போட்டு தன் கழுத்தில் நீலமணி போல் காட்சியளிக்குமாறு நிறுத்திவைத்து கொண்ட மஹாதேவனுடைய அபரிமிதமான் மஹிமையை யாரால் தான் முழுமையாக வகுணிக்க இயலும்? இதிலிருந்து பரமேச்வரனுடைய மேலான் கருணையையும் அன்பையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்

நம்மவர்களாகிய சைவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரமேச்வரனைப் பக்தி சிரத்தையுடன் பூஜித்து ஸர்வேச்வரனது அனுக்கிரஹத்துக்குப் பாத்திரர்களாக விளங்கி பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல ஈச்வரனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். || ஶ்ரீ சித்ஸபேசாய மங்களம் ||

திருச்சிற்றம்பலம்

நன்றி ;சைவ சித்தாந்த பூஜகர்  டி. கே. நடராஜ சர்மா அவர்களின்  சிவமகிமை 

சிவனடியார்கள் கவத்திற்கு................

 சிவனடியார்கள் கவத்திற்கு................ 

    குருவாக்கியம்



      இது ஆசாரியர் சிஷ்யருக்குச் சமயதீக்ஷை செய்யும் போது போதிக்கத்தக்கது.


      அன்பர்களே!


      1.     ஆன்மாக்களுக்கு, எந்தச்சரீரத்திலும் மனிதசரீரங் கிடைப்பது மிக அரிது; மனிதசரீரங்கிடைத்தாலும், சைவசமயம் வழங்குந் தேசத்திலே பிறக்க்க் கிடைப்பது அதினும் மிக அரிது; சைவசமயம் வழங்குந்தேசத்திலே பிறக்கக் கிடைத்தாலும், சைவசமயத்திலே பிரவேசிக்கக் கிடைப்பது அதினும் மிக அரிது. சைவ சமயத்தை அநுட்டித்து முத்தியின்பம் பெறும்பொருட்டே மனிதசரீரங் கிடைத்தது.


      2.     சைவசமயம் என்பதற்குப் பொருள் சிவபெருமானை வழிபடு மார்க்கம். சிவபெருமான் பிறப்பிறப்பின்றி என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், இயல்பாகவே எல்லாம் அறிபவர், எல்லாஞ் செய்ய வல்ல்வர், தமது அனுபத்தின் பொருட்டுப் பிறிதொன்றையும் வேண்டாதவர், பிறர் வசத்தினராகாது தம்வசத்தினராயே உள்ளவர், பசுக்களாகிய உயிர்களிடத்துள்ள இரக்கமே திருமேனியாக உடையவர். இவ்விலக்கணங்களெல்லாம் உடையவர் சிவபெருமான் ஒருவரேயன்றி வேறில்லை. ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுக்களுக்குப் பதி. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டென்றவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டென்றாவது கொள்வது சிவநிந்தை. இவ்வுணமியெல்லாம் அறிந்து சிவபெருமான் ஒருவரையே வழிபடுஞ் சமயம் சைவசமயம்.


      3.     பசுபதியாகிய சிவபெருமானை வழிபடுநெறியையும், சிவபெருமானுடைய ஏவல்வழி ஒழுகும் பசுக்களாகிய தேவர்களை வழிபடு நெறியையும் அறிவிக்கும் பொது நூல் வேதம்; சிவபெருமானை வழிபடுநெறியையே விரித்து அறிவிக்குஞ் சிறப்பு நூல் சிவாகமம்; சிவபெருமானை வழிபடுதற்கு யோக்கியதையைப் பிறப்பிப்பது சிவாகமத்தில் விதித்த சிவதீக்ஷை; சிவபெருமானுடைய அடையாளங்கள் விபூதி உருத்திராக்ஷம்; சிவபெருமானுடைய மூலமந்திரம் ஶ்ரீ பஞ்சாக்ஷரம்; சிவபெருமானை மிக மகிழ்விக்குந் தோத்திரங்கள் தேவார திருவாசகம்; சிவபெருமானை வழிபடும் இடங்கள் குரு லிங்க சங்கமம். குரு என்றது தீக்ஷை செய்யுங் குருவையும், சைவசமயத்தைப் போதிக்குங் குருவையும், சைவசமய நூலைப் படிப்பிக்குங் குருவையும், லிங்கம் என்றது சிவஞானிகளுடைய பாவனையுற்றுத் திருக்கோயிலுள்ளிருக்குந் திருவுருவங்களை. சங்கமம் என்றது சிவதீக்ஷை பெற்று விபூதி உருத்திராக்ஷந் தரித்துச் சிவாலயத்தொண்டு சிவபூசை சிவசாத்திரம் படித்தல் முதலியன செய்யுஞ் சிவனடியார்களை.


      அன்பர்களே!


      4.     உங்களுக்கு மனிதசரீரங் கிடைத்தது. அம்மட்டோ! சைவசமயம் வழங்குந் தேசத்திலே பிறக்கவுங் கிடைத்தது. சிவபெருமான் உங்களுக்கு அனுக்கிரகிக்கும் பொருட்டு இங்கே இந்தக் கும்பத்திலும் இந்த மண்டலத்திலும் இந்த அக்கினியிலும் நம்மாலே ஆவாகித்துப் பூசிக்கப்பட்டு உங்களுக்குத் தீக்ஷையாகிய அநுக்கிரகத்தைச் செய்யும் பொருட்டு இடங்கொண்டு மறைந்து நின்று செலுத்துங் குருவடிவம் நாம், நாம் இங்கே இப்பொழுது உங்களுக்குச் சமயதீக்ஷை செய்யப் பெற்றீர்கள். இந்தச் சமயதீக்ஷை வாயிலாக நீங்கள் சைவசமயத்திலே பிரவேசித்தீர்கள். விபூதியை மந்திரத்தோடு தரிக்கப்ப பெற்றீர்கள். ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தை நாம் உபதேசிக்கப் பெற்றீர்கள். தேவார திருவாசகம் ஓத அதிகாரம் பெற்றீர்கள். குருலிங்க சங்கமங்களுக்குத் தொண்டு செய்ய உரிமை பெற்றீர்கள். எல்லா வகையாலும் பசுபதியாகிய சிவபெருமானுக்கே அடிமை பூண்டீர்கள்.


      5.     இனி மரணபரியந்தம் அநுட்டிக்கலாகாத கருமங்கள் எவை அநுட்டிக்கத்தக்க கருமங்கள் எவை என்று நீங்கள் நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். அநுட்டிக்கலாகாத கருமங்களை மரணபரியந்தம் விலக்கி விடல் வேண்டும். அநுட்டிக்கத்தக்க கருமங்களை மரணபரியந்தம் அநுட்டித்தல் வேண்டும்.


      6.     பெரும்பான்மையும் எல்லாச் சமயத்தாரும் விலக்கத்தக்க பாதகங்கள் உயிர்க்கொலை, களவு, கள்ளுணல், மற்சமாமிசம் புசித்தல், பொய், வியபிசாரம் முதலியவைகள். இவைகளை நீங்கள் ஒரு பொழுதுஞ் செய்யலாகாது.


      7.     பிதா மாதா முதலிய பெரியோர்களை ஒரு சிறிதும் அவமதியாது எந்நாளும் மிக்க மரியாதை செய்து பாதுகாத்து நடத்தல் வேண்டும். வறியவர்களாயுந் தொழில் செய்து சீவனஞ் செய்ய வல்லமை இல்லாதவர்களாயும் உள்ள கூனர் குருடர் முடவர் வியாதியாளர் கிழவர் இவர்களுக்குச் சமயம் வாய்க்கும் பொழுது உங்களாலே கூடிய உதவி செய்தல் வேண்டும். உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும் நீங்கள் நன்மையே செய்தல் வேண்டும். இவையெல்லாம் எல்லாச் சமயத்தாருக்கும் வேண்டப்படுந் தருமங்கள்.


      8.     சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திர நிந்தை, சிவத்திரவியத்தைக் குருத்திரவியத்தை உபயோகித்தல் முதலாயின அதிபாதகங்களாகிய சிவத்துரோகங்கள். இவைகளை நீங்கள் மறந்துஞ் செய்யாது மரணபரியந்தஞ் சாவதானமாக இருத்தல் வேண்டும்.


      9.     நியமமாக நாடோறும் அநுட்டானஞ் செய்து சிவபெருமானைத் தியானித்து ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துச் சிவபெருமானைத் தோத்திரஞ் செய்தல் வேண்டும். பெண்கள் வீட்டுக்கு விலக்கானால் மூன்று நாளும் ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தை மனசினாலே சிந்தித்தல் வேண்டும். நாலா நாள் ஸ்நானஞ் செய்தபின் அநுட்டானம் பண்ணலாம்.


      10.    விபூதி நெற்றியில் எப்பொழுதுந் தரித்துக்கொள்ளல் வேண்டும். கீழே சிந்தா வண்ணம் அண்ணாந்து “சிவசிவ” என்று சொல்லி வலக்கையின் நடுவிரல் மூன்றினாலுந் தரித்தல் வேண்டும். விபூதி தரியாத முகம் சுடுகாட்டுக்குச் சமம். ஆதலால் விபூதி தரித்துக் கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.


      11.    தினந்தோறுமாவது புண்ணியகாலங்களிலாவது திருக்கோயிலுக்குப் போய்ச் சிவலிங்கப்பெருமானைத் தரிசித்து வணங்கி வலம் வந்து துதித்தல் வேண்டும். உங்களாலே கூடியபொழுது திருக்கோயிலிலே சுகந்த தூபமிடுங்கள்; திருவிளக்கேற்றுங்கள்; திருவலகிடுங்கள்; திருமெழுக்கிடுங்கள்; திருநந்தவனம் வையுங்கள்; சுசியோடு புஷ்பமெடுத்துத் திருமாலை கட்டிக் கொடுங்கள்; திரு வீதியில் உள்ள புல்லைச் செதுக்குங்கள்.


      12.    குருவையுஞ் சிவனடியார்களையுங் கண்டால் உடனே இருக்கை விட்டெழுந்து கும்பிட்டு நமஸ்காரஞ் செய்யுங்கள்; அவர்களெதிரே இருக்கு முறையறிந்து இருங்கள்; பேசு முறையறிந்து பேசுங்கள்; அவர்களை எவராயினுங் குற்றம் பேசினால் உடனே காதைப்பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்றும் போய்விடுங்கள்.


      13.    சிவபெருமானின் வேறாகாத திருவருள் என்கின்ற சிவசத்தியே பார்வதி தேவியார். ஆதலால் அவரை வழிபடுவது சிவபெருமானை வழிபடுவதேயாம். புண்ணியஞ் செய்தவர்களுக்கு அநுக்கிரகமும் பாவஞ் செய்தவர்களுக்கு நிக்கிரகமுஞ் செய்யும் பொருட்டுச் சிவபெருமான் கருணையினாலே கொண்டருளிய மூர்த்தங்கள் அவருடைய திருக்குமாரர்கள் எனப்படுகிற விநாயகக்கடவுள் சுப்பிரமணியக்கடவுள் வைரவக்கடவுள் வீரபத்திர்ரக்கடவுள். ஆதலால் அவர்களை வழிபடுவதுஞ் சிவபெருமானை வழிபடுவதேயாம். குருவினிடத்தும் சிவனடியார்களிடத்தும் சிவசின்னமும் சிவ மந்திரமும் சிவநாமமும் சிவமகிமையும் சிவசாத்திரமும் விளங்கக் காண்டலினால் அவர்களை வழிபடுவதுஞ் சிவபெருமானை வழிபடுவதேயாம். இப்படியன்றி, உயிர்ப்பலியேற்குந் துட்ட்தேவதைகளையும் வீரன் மாடன் கறுப்பன் முதலிய பிசாசுகளையும் வணங்கலாகாது. வணங்குவீர்களானால், சிவபெருமானுடைய சாபம் உங்களுக்குத் தப்பாது கிடைக்கும்.


      14.    தேவார திருவாசகத் திருமுறையையும் சிவபுராணத் திருமுறையையும் மடியிலாவது நிலத்திலாவது ஆசனத்திலாவது சயனத்திலாவது வைக்கலாகாது. பீட்த்திலாவது பட்டுப்பரிவட்டத்திலாவது காவிப்பரிவட்டத்திலாவது வைத்தல் வேண்டும்.


      15.    திருக்கோயிலி லாவது திருமடத்திலாவது தேவார திருவாசகம் ஒதப்ப்டும் பொழுதும், சைவப்பிரசங்கஞ் செய்யப்படும் பொழுதும், சிவபுராணம் படிக்கப்படும் பொழுதும், நீங்கள் போய்ச் சிரத்தையோடு கேட்டல் வேண்டும்.


      16.    நீங்கள் ஓரோர் காலத்து அறிந்தேனும் அறியாதேனும் அநுட்டிக்கலாகாத கருமங்களை அநுட்டித்தாலும், அநுட்டிக்கத்தக்க கருமங்களை அநுட்டியாதொழிந்தாலும் மனம் பதைபதைத்துக் குருவை அடைந்து விண்ணப்பஞ் செய்து குரு முன்னிலையாகப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும். பிராயச்சித்தமாவது செய்த பாவத்தைப் போக்கும் வாயில்.


      17.    பெறுதற்கரிய மனித சரீரமும் சைவ சமய தேசப்பிறப்பும் சைவசமயப் பிரவேசமும் பெற்ற நீங்கள், இவை வீண் போகா வண்ணம் நாம் இங்கே போதித்தபடி ஒழுகிச் சிவபெருமானுடைய திருவருளைப் பெற்று வாழக்கடவீர்கள்.


குருவாக்கியம்

Uploading: 947020 of 947020 bytes uploaded.





சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில்அமாவாசை பூசை

 அமாவாசை பூசை 

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஆவணி மாதம் 21ம் நாள் 06.08.2021 )திங்கட் கிழமை காலை சுமார் 9.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக  வைகாசி மாத அமாவாசை, அன்று  சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு இராஜகணபதிக்கும்,  அருள்மிகு கைலாய நாதருக்கும்,  அமாவாசை பூசை , தேவாரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையும்,  அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற உள்ளது.. இங்கு நடைபெறும் பூசையில் அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து பூசையின் முடிவில் அர்ச்சனை செய்து  கொள்ளுதல் மிக சிறப்பு.  இறைவனுக்கு தாங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்யலாம். அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி அருள் பெறலாம்.அவன் அருள் இருந்தால் தான் அவன் தாள் வணங்கி பூசையில் பங்கு கொள்ள முடியும். புண்ணியம் செய்தோரே  இதற்கு வாய்ப்பு கிடைக்கும்

திருச்சிற்றம்பலம்