ஞாயிறு, 31 மார்ச், 2013

திரு நீரு


திரு நீரு மங்கல மங்கையருக்கு அழகு - நெற்றியில் குங்குமம் ஆன்மீக அழகனுக்க அழகு - நெற்றியில் திருநீரு சிவ அடையாளம் திருநீரு, உத்திராட்சம், சடைமுடி. இதில் சைவ மதத்தின் முதன்மை அடையாளமாக முன்னிருப்பது திரு நீரு. வேதத்தில் உள்ளது - நீரு.வெந்துயிர் நீக்குவது - நீரு. போதம் தருவது - நீரு. புண்ணியமாவது - நீரு, முக்தி தருவது - நீரு. முனிவர் அணிவது நீரு. சத்தியமாவது - நீரு. தத்துவ மாவது - நீரு. பரவ இனியது - நீரு. பக்தி தருவது - நீரு. சக்தி தருவது - நீரு. கீர்த்தி தருவது நீரு. காண இனியது - நீரு. பெருமை கொடுப்பது, மானம் தருவது, பூச இனியது, மதியைதருவது, புண்ணியமாவது, ஆசை கெடுபபது, பேசஇனியது, தேசம் புக்ழ்வது, அவலம் கெடுப்பது, பாவம் தொைல்ப்பது, வேதம் புகழ்வது -நீரு, இதுபோன்ற திரு நீருன் பெருமையை நால்வர் திருநீற்று பதிகத்தின் மூலம் இதன் தனி சிறப்பை விள்க்குகிறது, சிவன் - பித்தன் - அக்னியாக இருப்பதால் அக்னியின் முதிர்ச்சி சாம்பல் எனவே அக்னி சொருபவமான சிவனுக்கு சாம்பல் கொண்ட விபூதியே பிரசாதமாக வழங்க்படுகிறது, திருஞான சம்பந்தர் கூற்றின்படி காடுடைய சுடலை பொடி பூசி உள்ளம் கவர் கள்வன்- சுடுகாட்டுசாம்பலை உடலில் பூசியவர் என்கிறார் விஷ்ணு - வாதம் - நீர் வடிவம் - திருபாற்கடலில் பள்ளிகொண்டவர் எனவே வாதம் - நீர் கொண்ட தீர்த்தம் பிரசாதமாக வழங்க்ப்படுகிறது. இதன்படி சைவத்ததின் - சிவத்தின் முன்னின்ற அடையாளமான திரு நீரு எவ்வாறு தயாரித்து பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பதை மிஸ்டிக் செல்வம்ஐயா தனது விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு மூலம் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். விபூதிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது பசுஞ்சாணம், கோமாதா என்று தெய்வமாக கொண்டாடும் பசுஞ் சாணத்திலிருந்து தான் சாம்பல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக கோவில்களில் பேணப்படும் கோசாலை ஆதாரவற்ற பசுமாடுகள் பராமரிக்கப்படும் இடம்- இங்குள்ள பசுஞ்சாணத்தின் மூலம் சாணம்சேகரித்து அதனை உருண்ட கவலங்களாக உருட்டி நெருப்பிட்டு சாம்பல் பஸ்பமாக கொள்ளப்படுகிறது, இந்த சாம்பல்பஸ்பம் 2 கிலோ. இவற்றுடன் கீழ்கண்ட படிகாரங்கள் சமவிகதத்தில் சேர்த்து கலவை செய்யப்படுகிறது, சேர்க்கப்படும் படிகாரங்கள் : படிகார பஸ்பம் , குங்குலிய பஸ்பம், சங்கு பஸ்பம், ஆமை ஓடு பஸ்பம், பவள பஸ்பம், சிரா பஸ்பம், சிரஞசி பஸ்பம், முத்து சிப்பிபஸ்பம், நத்தை ஒடு பஸ்பம், ஆகிய பஸபங்கள் ஒவ்வொன்றும் சரியாக 2 கிராம் வீதம் கலந்து ஒரு அகன்ற தாம்பாளத்தட்டில் நன்றாக கலந்து அதற்கு ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திர உருவேற்றி பின் ஏதேனும்ஒரு சிவன் கோவிலில் விபூதி அபிசேகம் செய்து இந்த மந்திர விபூதியை தயார் செய்து பயன்படுத்தலாம் இருப்பு வைத்தல்: இதனை சுத்தமான ஈரமற்ற பட்டர் பேப்பர் அல்லது காந்தமில்லாத பாத்திரம் அல்லது பட்டு துணி கொணட பை இவற்றில சேமித்து வைக்கலாம், இதனைபிரசாதமாக அனுப்ப வேணடுமெனில் பூவரசு இலையில் மடித்து அனுப்பவது மிகுந்த சக்தியை யும் பாதுகாப்பையையும் தரவல்லது, இன்னும் சில சிவலாய்ங்களில் இது போன்றுதான் விபூதி பிரசாதம் அனுப்பப்படுகிறது, அணிதல்: திரு நீரை பெருவிரல், ஆள்காட்டி விரல் நடுவிரல் ஆகியமூன்று விரல்களால் எடுத்து , வாழ்த்து பெறுவோருக்கு பூசுவதனால் பெருவிரலால் பூச வேண்டும் தனக்கு தானே பூசி வேண்டுமெனில் நீரில் கொழைத்து பட்டையாக நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும் விபூதியைஉடலில் எங்கு வேண்டுமாலும் யார் வேண்டுமானலும் பூசிக் கொள்ளலாம், தற்போதும் பிணிகண்டவர்கள் விபூதியை மந்திரித்து பிணி கண்ட இடங்களில் பூசிக் கொள்வதைகாணலாம், திரு நீரு பூசும் போது கீழே சிதறாமல் முகம்ஆகாயத்தை பார்த்து கொண்டு ஓம் சிவ சிவ ஓம் என்று மந்திரம் ஜெபித்துக்கொண்டுபூசினால் நம்மை பிடித்த பிசாசுக்ளவிலகும் பிணகள் அகலும்,நற்பலன் கிடைக்கும், மந்திர விபூதியை இளம் குழந்தைகளுக்கு தவிர்ப்பதுநன்று, ஏனெனின் மந்திர விபூதியின் சக்தி அதிகம் குழந்தைகள் தாங்காது, நன்றி ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு அன்றாரின் விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு ஒலிபேழை மூலம் விபரம் சேகரிக்கப்பட்டது,

சனி, 30 மார்ச், 2013


லிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார். பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட் டார். அதன் அடிப் படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திரு நல்லூரில் காணலாம். நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்று அருள் சோமநாதரை வழிபட்ட தால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது. குடவாசல் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணேசுவரரை கருடன் வழிபட்டார். அப்படி வழிபட்டபோது கருடனுடைய கால்சுவடுகள் லிங்கத்தின் மீது படிந்தது. அந்த அடையாளத்தை இன்றும் தரிசிக்க லாம். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருந்துதேவன்குடி தலத்தில் குதிரையும் வண்டும் ஈசனை வழிபட்டு முக்தி அடைந்தன. அவற்றின் காலடிச் சுவடுகள் லிங்கத்தில் பதிந்திருப்பதைக் காணலாம். திருக்கொண்டீஸ்வரம் தலத்தில் சுயம்புலிங்கமாக பசுபதீஸ்வரர் அருள்புரிகிறார். இந்த லிங்கத்தை பசு வழிபட்டதால், பசுவின் கொம் பால் ஏற்பட்ட பிளவு காணப்படுகிறது. திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லிங்கத்திருமேனியில், எமனின் பாசக்கயிறு பட்டதால் ஏற்பட்ட தழும்பு உள்ளது. ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ராமநாதர் லிங்கத்தை அனுமன் தன் வாலால் கட்டி இழுத்ததால், அனுமனின் வால்பட்ட தழும்பு லிங்கத் தில் பதிந்திருக்கிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள சிவன் கோவிலில் அருள்புரியும் லிங்கத்திலும் அனுமனின் வால்பட்ட தழும்பு உள்ளது. திருவிஜயமங்கைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீவிஜய தேஸ்வரர் லிங் கத்தில், அர்ஜுனனின் அம்புபட்ட தழும்பு உள்ளதைக் காணலாம். வித்தியாசமான லிங்கங்கள் சில திருத்தலங்களில் காணப்படுவது போல புனிதமான நீரில் நனையும் சிவலிங்கங்களும் உள்ளன. ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்கா ஆலயத்தில் அருள்புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர். ஊறி க்கொண்டேயிருக்கும். லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாம லிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக்கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாள ரத்தின் வழியாகத்தான் தரிசிப்பார்கள். சீர்காழி திருக்காளமுடையார் கோவிலிலும் லிங்கம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம். திருவேடகம் திருத்தலத்தில் மூலவர் லிங்கத்தின் முடியிலுள்ள பள்ளத்திலிருந்து தண்ணீர் ஊறி வெளிவந்து கொண்டிருக்கும். தஞ்சை பெரிய கோவில் மூலவர் பெரிய திருவுருவில் அருள் புரி கிறார். கருவறையைச் சுற்றி சந்திரகாந்தக் கற்கள் அமைந்திருப்ப தால், கோடைக்காலத்தில் கருவறையின் உட்சுவர்களில் நீர்த்துளி கள் படிந்து, சிவலிங்கம் குளிர்ச்சியாக இருக்கும். மேலும், பெரிய கோவிலிலுள்ள சிவகங்கைத் தீர்த்தக்குளத்தின் நடுவில் ஒரு லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் தீர்த்தக்குளத்தில் மூழ்கியே இருக்கும். கடுமையான கோடைக்காலத்தில் நீர் வற்றும்போது மட்டும் லிங்கத்தை தரிசிக்கலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கருவறையின் மேல் தளம் சந்திரகாந்தக் கற்களால் அமைந்துள்ளதால், எப்பொழுதும் சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் சிவலிங்கத்தின்மீது விழுந்த வண்ணம் உள்ளது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மூலவரின் திருவடியில் தேவ தீர்த்த நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். இந்த நீர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவிதங்கள் உள்ளதுபோல், பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்க ளில் தரிசிக்கலாம். அவை “தாராலிங்கம்’ என்று கூறப்படுகின்றன. காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவி ல்கள், தென்னாற்காடு மாவட்டம் பனைமலையில் உள்ள சிவன் கோவில், பொன்பரப்பி சிவன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வ ரர் கோவில் போன்ற ஆலயங்களின் வளாகத்திலும் தாராலிங்க ங்கள் உள்ளன. தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்ப சாஸ்திரம் கூறு கிறது. 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரை கள் அமைத்திருப்பார்கள். நான்கு பட்டைகள் கொண்ட லிங்கங்களை “வேதலிங்கம்’ என்று போற்றுவர். சக்கரப்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் மூல வர் நான்கு பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். கோவை காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நாற்பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். பொதுவாக, நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை சர்வதோ பத்ரதாரா லிங்கம் என்பர். எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் காஞ்சி கைலா சநாதர் கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர். மேலும் எட்டு பைரவ சக்திகளையும், இறைவனின் அஷ்ட வீரச் செய ல்களையும் குறிப்பன என்பர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியிலும் எட்டு திசை லிங்கங்கள் உள்ளன. இவை அஷ்டதாரா லிங்கங்க ளாகும். பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்ப டும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். இவ் வகை லிங்கங்கள் குளிர்ச்சியான கல்லில் உருவானவையாகும். பெரும்பாலும் சந்திரக்காந்தக் கல்லில் உருவானதாக இருக்கும். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்திலும், பழையாறை மேற்ற ளியிலும், பொன்பரப்பி தலத்திலும், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கோவிலிலும் சோடச தாராலிங்கம் உள்ளது. முப்பத்திரண்டு பட்டைகளுடன் காட்சி தரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர். காஞ்சியம்பதியில் 32 பட்டைகள் கொண்ட லிங்கத் தை தரிசிக்கலாம். 64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத் திருவுரு- கலைகள், சிவபெருமானின் 64 லீலா விநோதங்கள், 64 யோகியர்களைக் குறி க்கும் என்பர். இவ்வகை லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம். மேலும், அறுபத்து நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம் பைரவரையும் குறிப் பதாக ஆகமங்கள் கூறுகின்றன. பொதுவாக தாராலிங்கங்களை வழிபடுவதால், இறைவனின் பூரண அருள் கிட்டுவதுடன் சிவபதம் கிட்டும் என்றும் சொல்வர். எனவே இதை சாயுஜ்ய லிங்கம் என்றும் போற்றுவர். இந்தத் தாராலிங்கத்தின் மேல் தாராபாத்திரம் மூலமாக அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் தாரைகளின் வழியே பிரிந்து செல்லும் காட்சியை தரிசிப்பதால் பரம்பொருளின் முழுமையான அருளைப் பெற்று வளமுடன் வாழலாம் என்பர்

பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக் கற்றையில் தரித்துள்ள ஈசன் கங்காதரர் என வணங்கப்படுகிறார். தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில் ரோகிணியி டம் மட்டும் மிக்க அன்பு வைத்திருந்ததால் தட்சனின் சாபம் பெற் ற சந்திரனை காத்து, இழந்த ஒளியை அவனுக்கு தந்து தன் சிரசிலும் தரித்துக்கொண்ட ஈசன், சந்திரசேகரர் ஆனார். பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே முருகப்பெருமான் அமர்ந்து ள்ள திருவடிவம் சோமாஸ்கந்த மூர்த்தம் என்று வணங்கப்படு கிறது. வண்டு வடிவம் எடுத்து ஈசனை மட்டுமே வலம் வந்த பிருங்கி முனிவரின் ஆணவத்தை அடக்கி, சக்தியின் பெருமையை உலகி ற்கு உணர்த்த ஈசன் தன் உடலில் பாதியை உமையம்மைக்கு தந்தார். அதுவே அர்த்தநாரீஸ்வர வடிவம். ஈசன், பூமியில் பிறந்த அம்பிகையை மணம் புரிந்து கல்யாண சுந்தரராகத் திருக்கோலம் கொண்டார். மீனாட்சி, கார்த்யாயனி, மாதங்கி, பார்வதி, தாட்சாயணி என ஒவ்வொரு முறையும் அம்பிகை ஒவ்வொரு பெயரில் பிறந்து ஈசனை மணந்தது வரலாறு. ஈசனின் அடியைத் தேடி வராக வடிவில் திருமாலும் முடியைத் தேடி அன்ன வடிவில் நான்முகனும் புறப்பட்டனர். அப்போது வானுலகையும் பாதாள உலகையும் இணைத்தாற்போல் ஜோதி வடிவாகத் தோன்றிய ஈசன், லிங்கோத்பவ மூர்த்தி என்றழைக் கப்பட்டார். ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன சுப்ரமண்ய சுவாமி யிடம் சிஷ்ய பாவத்தில் அதன் பொருள் கேட்ட ஈசன், சிஷ்யபாவ மூர்த்தியாக போற்றப்படுகிறார். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப் படுகிறார். குமார சம்பவம் நிகழ்வதற்காக ஈசனின் மேல் தன் மலர்க் கணை களை எய்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்து சாம்ப லாக்கினார் ஈசன். அந்த ஈசனே காமதகனமூர்த்தி. என்றும் 16 ஆக வாழும் வரம் பெற்ற மார்க்கண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த ஈசன் காலசம்ஹாரமூர்த்தி அல்லது ம்ருத்யுஞ்ஜய மூர்த்தி எனப் பெயர் கொண்டார். ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்மமூர்த்தியின் ஆவேசத்தை அடக்க தன் இரு இறக்கைகளாக ப்ரத்யங்கிரா, சூலினி தேவிய ருடன் தோன்றிய ஈசனின் திருவுருவம் சரபேஸ்வரமூர்த்தியாக வணங்கப்படுகிறது. தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும் அவர்கள் பத்தினிகளின் மன அடக்கமின்மையை உலகிற்குத் தெரியப்படுத் தவும் ஈசன் மேற்கொண்டது பிட்சாடனர் திருக்கோலம். கஜாசுரன் எனும் அசுரனை அழித்து அவன் யானை வடிவ தோ லில் நர்த்தனமாடிய ஈசனின் திருவடிவம் கஜசம்ஹாரமூர்த்தி என போற்றப்படுகிறது. யானையின் ஈரத் தோல் கடும் விஷம் கொண்டது. அதை யார் போர்த்திக்கொண்டாலும் அவர்கள் இறந்து விடுவர் என சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈசன் அதை அணிந்ததோடு மட்டுமல்லாமல் ஆனந்த நடனமும் ஆடினார். அன்னை பார்வதியுடனும் விநாயகர், முருகப்பெருமானுடனும் ஈசன் புன்முறுவல் பூத்த வண்ணம் எருதில் ஏறி அருளும் திரு வடிவம், ரிஷபாரூடர் எனப்படுகிறது. கடுந்தவம் செய்து நான்முகனிடமிருந்து பொன் கோட்டை பெற்ற தாரகாட்சன், வெள்ளிக் கோட்டை பெற்ற கமலாட்சன், இரும்பு கோட்டை பெற்ற வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டைகளையும் அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் கொண்டாடப்படுகிறார். தன்னை மதிக்காமல் யாகம் செய்த தன் மாமனாரான தட்சப் பிரஜாபதியை அழித்த ஈசன் வீரபத்திரர் எனும் தட்ச சம்ஹார மூர்த்தியாக வணங்கப்படுகிறார். திருமாலை சோதிக்க நினைத்த ஈசன், அவர் தன்னை அர்ச்சிக்கும் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்துவிடுகிறார். ஆனால் திரு மாலோ, அந்த மலருக்கு பதிலாக, தம் மலர்க்கண்ணையே பறித் து ஈசனுக்கு அர்ப்பணித்தார். அதனால் மகிழ்ந்த ஈசன் அவருக்கு பத்மாக்ஷன் எனும் பட்டத்தையும் சக்கரத்தையும் அளித்தார். அத் திருவடிவம் சக்ரதான மூர்த்தியாய் போற்றப்படுகிறது. ஈசனுக்கும், பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான் வீற்று ள்ள வடிவம் சோம கணபதி மூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரணமாக ஆலயங்களில் வழிபடப்படும் சிவமூர்த்தம் லிங்க மூர்த்தம் என வழிபடப்படுகிறது. பாசுபதாஸ்திரத்தைப் பெற கடுந்தவம் செய்த அர்ஜுனனுக்கு வேடுவ வடிவில் காட்சியளித்த ஈசனை பக்தர்கள் கிராதமூர்த்தி என்று வழிபடுகின்றனர்.

ஞாயிறு, 24 மார்ச், 2013


திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று பாடல்களால் இறைவனை அர்ச்சித்துள்ளனர். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தபோது மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசியாரின் அழைப்பினை மதுரை ஏவலர்கள் திருமறைக்காடு வந்து திருஞான சம்பந்தரிடம் தெரிவித்தனர். திருஞான சம்பந்தர் மதுரை செல்ல உடன்பட்டு திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார். “சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின் தொகுப்பான பதிகமே (பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர்) கோளறு பதிகம் எனப் பெயர் பெற்றது. (பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள்) கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து வரவும்।

திங்கள், 18 மார்ச், 2013

திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும்


திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் . பழங்காலத்தில் திருவண்ணாமலையை(THIRUVANNAMALAI) கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் . திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் நன்நாளாக தீபத்திருநாள் அமைவதால் கிரிவலம் வரும் பக்தர்கள் உரக்க பேசாமலும் ,யாருக்கும் இடையூறு செய்யாமலும் அமைதியாக "சிவாய நமஹ" என்று சொல்லி கிரிவலம் செல்ல நாம் கிரிவலம் செல்வதன் உண்மையான பலன் ஏற்படும் . திருவண்ணாமலையை( thiruvannamalai) கிரிவலம் செல்லும் போது ஒருவர் இறந்துவிட்டால் அவர் உயிர் நேரே கயிலாயத்திற்கு செல்லும். அப்படிச்செல்லும் போது சந்திரன் வெள்ளைக் குடைபிடிப்பார் என்றும் ,சூரியன் கையில் விளக்கேற்றி வருவார் இந்திரன் மலர் தூவுவார் ,குபேரன் பணிந்து வரவேற்பார் என்று அருணாசலீஸ்வரர் ஸ்தல புராணம் இயம்புகிறது. திருவண்ணாமலையை கிரிவலம் செய்யும் கிழமைகளின் பலன்கள் : ஞாயிறுக்கிழமே - சிவபதம் திங்கள் கிழமை உலகாளும் வல்லமைகிட்டும் செவ்வாய்கிழமை - கடன் ,ஏழ்மைகள் விலகி பிறவிப் பிணியில் இருந்து விடுதலை கிட்டும் புதன் - கலைகளில் தேர்ச்சி வியாழக்கிழமை- ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிட்டும் வெள்ளிக்கிழமை - விஷ்ணுபதம் கிட்டும் சனிக்கிழமை - நவகிரகங்களை வழிபட்டதன் பலன் கிடைக்கும் . தீபத் திருவிழா திருவண்ணாமலையில் பத்து நாட்களுக்கு நடைபெறும் .2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.7 அடி உயரமுடைய செப்புக்கொப்பரையில் 3000 கிலோ நெய் கொண்டு ஆயிரம் மீட்டர் காடா துணியால் 10நாட்களுக்கு தொடர்ந்து கார்த்திகை தீபம் எரிந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும் . மலையே சிவனாக ,நினைத்தாலே முக்தி தருகின்ற அரிய சிறப்புகளை உடைய சிவபெருமானை கிரிவலம் வந்து கார்த்திகை தீபத்தையும் தரிசித்து எல்லா நலமும் வளமும் பெறுங்கள் . ஓம் சிவாய நமஹ