வெள்ளி, 27 ஜூன், 2014


மௌன வித்தை ( பேசா மந்திரம் ) மந்திரங்களில் பேசும் மந்திரம், பேசா மந்திரம் என்றநிலைகள் உண்டு. பேசா மந்திரம் என்னவென்றுதெரிந்தவர்கள் ஞானிகள் என்கின்றனர் சித்தர்கள். பேசா மந்திரத்தை மௌனம் என்று குறியீட்டின் மூலம்சித்தர்கள் தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர். 1882 ல் வெளியிடப்பட்ட சட்டைமுனி நாயனார் முன்ஞானம், பின் ஞானம் என்ற புத்தகத்தில் சட்டைமுனிநாயனார் பின்ஞானம் என்ற பாகத்தில் பேசா மந்திரம்எனப்படும் இந்த மௌன வித்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. மௌனவித்தை யாருக்கு யார் கொடுத்தார்கள் என்பதைகீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன. “கிட்டினோங் கைலாய பரம்பரையினாலே கேளுமக்களாலாச்சாpயங் கொங்கணா; தான் சென்று,கிட்டினோ மென்று சொல்லியீசானத்தே கெடியானரசமுண்டு சட்டைபோக்கிக், கிட்டினோ மீசானந்துதித்தோ மென்று கெடியாக தவசிருந்து முத்தனாகி,கிட்டினோமென்று சொல்லி தசஷணாமூh;த்தி பதம்பிடித்து பணிந்திட்டாரே” “தவம் பல செய்து கர்மவினைகளை கழித்து, ஒன்பதுவாசலை அடைத்து பத்தாவது வாசலைத் திறந்து,அமுதத்தை பருகி, கயிலாயம் சென்று தசஷணாமூ;த்திபாதம் பணிந்து, ஞானத்தை அடையக் கூடிய வழியைஎனக்;குக் காட்டுங்கள்” என்று கொங்கணர் வேண்டினார.; “பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாயன் பாருலகிற்பிறந்தவனோவிப்படி தானானாய், மணிந்திட்டச் சடம்போக்கிக் கைலாயத் தேகமானதுதான் வெகுகடினமதிகமெத்த, கனிந்திட்ட கனிவாலே வீறத்தாலேகலங்காமற் சமாதியுற்று கயிலாயத்திற், றணிந்திட்ட புத்திகொண்டுயிங்கே வந்தாய் சாதகமாயொருவரைங்கண்டிலேனே” கால்களில் வீழ்ந்த கொங்கணரைப் பார்த்து, தசஷணாமூர்த்திமனிதர்கள் வாழக்கூடிய பூவுலகில் பிறந்து தவங்கள் பலசெய்து சித்திகள் பல பெற்று எப்படி இந்த நிலையைஅடைந்தாய். மனிதர்கள் இறந்தால் அவர்கள் தங்கள்உடலை உதிர்த்து விட்டு செய்த தவப் பயனால்; உயிராகத்தான் இந்த கயிலாய மலையை அடைய முடியும்.அத்ததைகய நிலை பெற்றவர்கள் தான் இந்த கயிலாயமலைக்கு அதிகமாக வந்தவர்கள். ஆனால் நீ ஜீவசமாதிஅடைந்த பின்பு உடலை ஜீவசமாதியில் வைத்து விட்டுஉயிராக இந்த கயிலாய மலைக்கு எப்படி வந்தாய், இப்படிவந்த ஒருவரையும் நான் இதுவரை கண்டதில்லை என்றுதசஷணாமூர்த்தி கூறுகிறார். ”கண்டிலேனாச்சாயங்கமா ரனேபாருங்கலந்தநற்சென்மமிவா; கைலாயமானா;, ஒண்டிபேநாலதுக்கு மகத்து வந்தானென்னவுற்ற சிவ விந்துவின்னிலப்படிதானாச்சு, கன்டிலேனிவரைப் போற்சித்தா;காணேன் காரணமாயிவனுக்கு தீசஷிப் பேனான்,பண்டிலேன் கொங்கணரை மயங்க வேண்டாம்பரம்பரமாய் வந்து தந்த மௌணந்தானே” இது எவ்வளவு பெரிய ஆச்சரியம . இந்த ஜென்மத்திலேயேகர்மவினைகளை கழித்து கயிலாயம் வந்திருக்கிறார்.கயிலாயம் வர வேண்டுமென்றால், விந்து நாதம, இரண்டுஎட்டு, இடகலை பிங்கலை, ஆகியவற்றின் பொருள் தெரியவேண்டும். மேலும் சிவனின் விந்து என்று சொல்லப்படுவது எது என்ற ரகசியமும் தெரிந்திருக்க வேண்டும்.இவர் கயிலாயம் வர முக்கிய காரணம் சிவ விந்துவின்ரகசியம் தெரிந்து, அதன் வழி நடந்திருப்பதனால் தான்இவர் கயிலாயம் வர முடிந்தது. இவ்வளவு சிறப்புகள்வாய்ந்த கொங்கணரைப் போல ஒரு சித்தரை நான்கண்டதில்லை என்று அவருக்கு ஞானம் அடைவதற்கு உரியவழியை சொல்லி தீட்சை கொடுத்தார். அந்த ரகசியம் தான்பேசா மந்திரம் எனப்படும் மௌன வித்தை எனப்படுகிறது.இந்த மௌன வித்தை சித்தர் பரம்பரை என்றுசொல்லப்படும் குரு சீடன் பரம்பரையாக ஒருவர் மாறிஒருவராக வந்து கொண்டேயிருக்கிறது. ”மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்மருவியவா காலாங்கிக்கதுவே சொன்னா், மௌனவித்தைகாலாங்கி போகருக்கு சொன்னா; மகத்தானபோகருந்தானுனக்குச் சொன்னா; மவுனவித்தையகண்டாதியறிந்து கொள்ளு மற்றொன்று மயக்க மற்றுமௌனத்தாh;க்கு, மௌனவித்தை யெய்தாக் கால்வனேஞானி வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே” கொங்கணர் பேசா மந்திரம் எனப்படும் மௌனவித்தையைதிருமூலருக்கு சொன்னார. திருமூலர் காலங்கிநாதருக்குசொன்னார்; காலங்கி நாதர் போகருக்கு சொன்னார்; போகர்உனக்குச் சொன்னார் என்று சட்டைமுனி நாயனாரைக்குறிப்பிடுகிறார். மௌன வித்தை என்ன என்பதை கண்டுகொள்ள வேண்டும் மௌன வித்தையைக் கண்டுகொண்டால் மட்டுமே இவ்வுலக மாயையிலிருந்து தப்பிக்கமுடியும். ஞான வழியைக் காட்டுகிறேன் என்று சொல்லும்ஏமாற்று வித்தைக் காரர்களிடமிருந்து விலகி இருக்கமுடியும் மௌன வித்தை என்று சொல்லப் படுகிற பேசாமந்திரத்தை தெரிந்து கொண்டு, அதனை செயல்படுத்துபவனே ஞான நிலையை அடைய முடியும். அவனேஞானி என்று அழைக்கப்படுகிறான்; அகாரம்; உகாரம்; மகாரம்என்று அழைக்கப்படுகிற மூன்றில் பேசா மந்திரம் மகாரம் மஎன்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது என்று கொங்கணர்சொல்கிறார். மௌன வித்தையின் சிறப்புகள் பற்றி கீழ்க்கண்ட பாடல்கள்விளக்குகின்றன: ”சித்தாகுஞ் சித்தியுமாமெட்டெட்டு மாடுந் திறமாகநின்றவா;க்;கு மந்திரஞ்சித்தி பத்தாகும் வேதத்தில்மந்திரத்தைப் பாவி பல பலெனப் பேசியவா;சேவிப்பா; கோடி கத்தாதும் நாய் போலே கற்றியென்னகாசிக்கு மாகாது சித்தியில்லை, முத்தான மௌனம்விட்டால் மௌனம் பாழாச்சு மோசமிந்தவேதமெல்லாம் பொய்யென்பாரே” மௌன வித்தை தெரிந்தவருக்கு மட்டும் தான் மந்திரங்கள்எல்லாம் சித்தியாகும் வேதங்களில் உள்ள மந்திரங்களைஉச்சாடணம் செய்து கோடி முறை உரு ஏற்றினாலும், நாய்போல உலகமெல்லாம் சுற்றினாலும், காசி போன்றபுனிதமான இடங்களுக்குச் சென்றாலும் மந்திரங்கள்சித்தியாகாது. கடவுள் நிலை உணர முடியாது. மௌனவித்தை தெரியாதவருக்கு, வேதங்களில் உள்ள ரகசியங்கள்தெரியாது. வேதங்களில் உள்ள ரகசியங்கள் தெரியாதகாரணத்தினால,; வேதங்களே பொய் என்பர். ”பொய்யென்று யெண்ணியெண்ணி யுலகங்கெட்டுப்போச்சப்பாவதனாலேயுக பேதமாச்சு, கையென்றுயோகத்தில் மௌனமுட்ட கடுஞ்சித்தியறிவு மட்டுங்கலந்துதாக்கு, கையென்ற நி;த்தமப்பா ஆறிற்காணுஞ்சாதகமாய் மேல்மூலந்தாண்டிக்காணும், மெய்யென்றுபிடித்தாக்காலவனே யோகி விரைந்துயிதையறியாவிட்டால் விருதமாடே” மௌன வித்தை தெரியாத காரணத்தினால், புராணங்கள்,உபநிஷத்துக்கள் ஆகியவைகளில் உள்ள கருத்துக்களைப்புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்றால் என்னஎன்றும,; கடவுளை அடையக் கூடிய வழி எது என்றும்கேட்பவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்கமுடியவில்லை. அதனால் கடவுள் உண்டா இல்லையா என்றநிலை உருவாகி, ஆத்திகர,; நாத்திகர் என்ற பிரிவுஉண்டாகி உலகம் இரண்டாகி பிளவு பட்டு நிற்கிறது. மௌனவித்தையை தெரிந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்றுபிரம்மரந்திரத்தில் தன் ஜீவனை இணைப்பவனே யோகி.இதை அறியாவிட்டால் ஒன்றுக்கும் உதவாத மாட்டுக்குச்சமம் என்கிறார் சட்டைமுனி நாயனார். ”நன்றான மௌனத்திற் கடிகை சேர நல்வினையுந்தீவினையும் நாசமாகும், நன்றான மௌன மென்றுநினைக்க முத்தி நல்லோ;கள் நினைப்பா;கள் மற்றோ;காணா;, நன்றான மௌனமல்லோ ஷிகள் சித்தா;நாலுதிக்குஞ் சொரூபத்தைக் கண்டா; கண்டா, நன்றானமௌனமல்லோ சாத்திரங்கள் தோறும் நலமாகக்கூப்பிடுது கண்டிலாரே” மௌன வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே அதைசெயல்படுத்தி கர்ம வினை என்று சொல்லப் படுகிற பாவபுண்ணியங்களை கழிக்க முடியும்; பாவ புண்ணியங்களைக்கழித்தால் மட்டுமே முக்தி அடைய முடியும்; அதனால்மௌன வித்தை தெரிந்தவர்களால் மட்டும் தான் முக்திஅடைய முடியும் என்பதை உணர வேண்டும். மற்றவர்கள்எந்த வழிகளில் முயற்சி செய்தாலும் முக்தி அடையமுடியாது. மௌன வித்தை தெரிந்ததால் தான் சித்தர்கள்அனைத்திலும்; அதாவது துhணிலும், துரும்பிலும்,கடவுளைக் கண்டனர். வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும்அனைத்து சாத்திரங்களும் கூறுவது, மறை பொருளாகவிளக்குவது, குறியீடுகளாகக் குறிப்பிடுவது இந்த மௌனவித்தையைத் தான் என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர் என்கிறார் சட்டைமுனி நாயனார். ”கண்டிலா; மௌனத்திலனேக சித்தி காணுமப்பாசொல்கிறே நன்றாய்க் கேளு, மண்டிலா்; மந்திரங்கள்செபிக்கும் போது அப்பனே மௌனமென்ற தீசைஷகேளு, ஒண்டிலாய் வாய் மூடி பேச்சு மற்று ஒருசேரை சமைத்துண்டு ஒரு போதப்பா, விண்டிலாதென்னேரஞ் செபித்தாயானால் விளங்கியதோரேழுலஷமந்திரமுஞ் சித்தே” மௌனவித்தை தெரிந்து செய்தால் அஷ்டமா சித்தி உட்படபல்வேறு சித்திகளும் கிடைக்கும் என்பதை அறியாமல்இருக்கிறார்கள். மௌனவித்தையின் சிறப்புகளைசொல்லுகிறேன் கேள், நீ மந்திரங்களைச் செபிக்கும் போதுமௌன வித்தை தெரிந்தவர்களிடம,; மௌனவித்தைதீட்சை உனக்கு சொல்லித் தரும்படி கேள். தனியானஅமர்ந்து வார்ததை எதுவும் பேசாமல் வாயை மூடிஅமைதியாக மௌன வித்தையை தொடர்ந்து செய்துகொண்டே இரு. காலை, மதியம், மாலை, இரவு என்றுநேரம் பார்க்காமல் எந்த நேரமும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பாயேயானால் ஏழு லட்சம் மந்திரம்மட்டுமில்லை, அதற்கு மேலும் மந்திரங்கள் சித்தியாகும்.மந்திரங்கள் சித்தியாக வேண்டுமென்றால் மௌன வித்தைதெரிந்திருக்க வேண்டும் என்கிறார். மௌன வித்தை என்பது சித்தர்கள் கலை. அதுதகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்என்பதற்காகவே சித்தர்கள் தங்கள் பாடல்களில் மௌனவித்தையை மறைத்து வைத்திருக்கிறார்கள். மௌனவித்தையின் ரகசியம் தெரிந்து, அதை செய்து வருகிற ஒருசில பேர் தமிழகத்திலேயே இருக்கிறார்கள். முயற்சி, முன்வினை, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலமேஒருவர் மௌனவித்தையின் ரகசியத்தை தெரிந்து கொள்ளமுடியும் புழமொழிகளின் விளக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே பின்வரும் ஒரு பாடலின்விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்வோம். திருமூலர் ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார். நாயோட்டு மந்திரம் என்றால் நான் என்னும் அகந்தையைஓட்டும் மந்திரம். நான் என்ற அகந்தையை எந்த மந்திரமும்ஓட்டாது. மௌன வித்தை என்ற பேசா மந்திரம் மட்டும்தான் ஓட்டும். சாதாரண மந்திரங்களால் நமனை அதாவதுஇறப்பை வெல்ல முடியாது. நான் என்னும் அகந்தையை ஓட்டும் மௌன வித்தைஎன்னும் பேசா மந்திரம் மட்டும் தான் இறப்பை வெல்லும்.மேளன வித்தை என்னும் பேசா மந்திரத்தைசொல்கிறவர்களுக்கு மரணம் இல்லை என்பது தான் இதன்பொருள்.

திருமூலரும் திருமந்திரமும்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 எந்தையும் தாயும்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 எந்தையும் தாயும் எம் தாய் எல்லையற்ற மகாசக்தி அவளை உபாசனா சவுகரியம் கருதி, அவள் இயற்றும் தொழிலுக்கேற்ப அல்லது அவர்கள் பிரியத்திற்கேற்ப பேதப்படுத்தி வழிபடுகிறார்கள், அவளே திருமகள் , அவளே கலைமகள், மலைமகள், எல்லாம் மும்மண்டலங்களின் தலைவி, என்பதால் அவள் ஈசனுடன் வேறுபடாதிருப்பதால் திரிபுரசுந்தரி, பிரிப்பின்றி விளங்கி ஐந்தொழில் புரிகிறாள். திரிபுரையே ஓம் எனற பிரணவத்தின் உள்ளொளியாகவும், மந்திரமாகவும், மூர்த்தியாகவும் அவற்றைக் கடந்தும் விளங்குகிறாள என்கிறார் திருமூலர், அவள் பேரழகி, வானவடிவினள், அநேக நிறத்தனள், தன்னைநினைப்பவர் நெஞ்சில் நிலைத்தருப்பவள், மகேசுவரனின் சக்தியாய் கருநிறம் காட்டுவாள், உலகத்தை காக்கும் செவ்வொளி வீசுவாள், அன்புடன் தழுவி அறிவை வழங்குவாள், திரிபுரை - முப்புரநாயகி பேரழகி என்பதால் அவள் சுந்தரி, வானவடிவினள் என்பதால் அந்தரி, நினைப்பவர் நெஞ்சில் நிலைத்திருப்பதால் அவள் மனோன்மணி. அவளே இராசேசுவரியாய் சிவந்த பட்டுடுத்தி மார்பில் கச்சணிந்து காலில் சிலம்பணிநது மலர் அம்பும்அரும்பு வில்லும் தாங்கி அங்குச பாசத்துடன் கரிய நீல நிற குண்டலத்துடன் காட்சியளிப்பாள், தியானத்தில் வசியமானவள். அன்னை திருபுரை உயிர்கள் ஈடேறவேண்டும் என்பதற்காகவே உயிர்களுடன் கலந்து நிற்பாள், அவள்மாசற்ற அழகு வாய்ந்தவள், ஆதியானவள் ஞானச்சுடர் வீசும் கண்கள் அவளுடையவை. எத்திக்கிலும்இருப்பவற்றை தன்பக்கம் இழுக்கும் ஈர்ப்பு தன்மை கொண்டவள், அவளை சுத்தவித்ததியாதேவி என்பார் சித்தர்கள். அவளை யறியா அமரரு மில்லை அவளன்றி செய்யும் அருந்தவ மில்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி ஊர்புகுமாறறியேனே. என்கிறார் திருமூலர் ஒளிமண்டலமான தேவியை உணராத தேவரில்லை. அவளை முன்னிட்டு கொள்ளாது தவமேதுமில்லை, படைத்தல்,காத்தல், அழித்தல் அருளல், மறைத்தல் என ஐந்தொழில்கள் செய்யும் பிரமனாதி ஐங்கடவுளாரலும் ஆவது ஒன்றுமில்லை. அவளை அறியாது திருவடிப் பேறு காணும் வழியும் இல்லை. அவள் பரவெளியில் ( வான்கடந்து) விளங்குவது பராசக்தி, எத்தனை வடிவெடுத்தாலும், எத்தனை பெயர் படைத்தாலும், அவளோடு சிவனோடு இணைந்தே செயல்படுபவள், அந்த மகாசக்தியின் திருவுளப்பாங்கில் இயங்குகின்ற அன்ட சராசங்களும் அனைத்து உயிரினங்களும், அவளை அறிவ வடிவமாகவும் ஆனந்த வடிவமாகவும் ஞானியர் காண்பர். அவள் யாவற்றையும் தாங்கி நிற்கும் ஆதிபராசக்தி. ஊழிதோறும் புவன்ம் காத்து புண்ணியம் தருபவள் அவளே. சித்தர்கள் அவளுடைய நடப்பாற்றலுக்காக பரை என்பர் வனப்பாற்றல் கண்டு பராபரை என்பர். அந்த கரணம் நான்கையும் ( மனம்,புத்தி, சித்தி, அகங்காரம்,) செயல்பட செய்வதால் ஸ்ரீவித்யை என்றும், மாறா இளமை கொண்டதால் அவள் வாலை " வாலையடி சித்தருக்குத் தெய்வம்" என்பார்கள் உச்சிட்ட தளத்தில் விளங்கும் பராசக்தி மனோன்மணியை உள்ளத்துள் நிறுத்தும் வழியை அறிந்தவர் எத்தனைபேர்? நான் பற்றற்றவனாக இருந்தேன், எனது இயல்பு நோக்கி அன்னை எனக்கு பக்குவமளித்து சிவகதி காட்டினாள்,தன் ஒளியில் என்னை ஒன்றாக்கி கொண்டாள் என்கிறார் திருமூலர் அவள் பிணவத்தி, ஐந்தொழிலுக்கும் தலைவி பச்சை நிறத்தவள், ஐங்கடவுளரும் ( சதாசிவர்,மகேசுவர், உருத்திரர், திருமால், நான்முகன், ) அவளுடைய அம்சம், ஹ்ரீம் என்கிற மந்திர பீஜத்தில் அவள் வீற்றிருக்கிறாள்,என்கிறது இந்த பாடல் ஒங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை யுடையவள் ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே, அன்னையை பூசிக்கும் வழிமுறை: வாசமலர்களும் வழிபாடு செய்ததற்கான நறுமணப் பொருட்களும் புதிய ஆடைகளும் , இசை முழக்கமும் திருவைந்தெழுத்து மந்திரமும் கொண்டு செய்யப்படும் பூசையை அவள் விரும்புவாள், தையல் நாயகியான தலைவியை பணிந்தால் பிறவிப்பணி அண்டாது, என்னை இயக்குகின்ற இணையற்ற தலைவி அவள் தன்னை இயக்க ஒருவரில்லாதவள், என்னுடைய ஆணவம், கன்மம், மாயை, அகற்றி என்னை விரும்பத்தக்கவனாய் ஆக்கி வைத்தாள் என்கிறார் கீழ் கண்ட பாடல் மூலம்: இனியதென் மூலை இருக்கும் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனன் சார்வு படுத்து நனிபடு வித்து உள்ளம் நாடி நின்றானே. தனக்கு முற்பட்டதாய் ஒன்றும் இல்லாமையால் அவள் தொன்மையானவள், அனைத்துக்கும் தானே காரணமாக, தன்கொ காரணம் இல்லாதிருப்பவள், ஒளிகளுக்கு மூலமான பேரோளி, இன்பத்தில் பேரின்பம், அவள் அமைதியையும் சிவசிந்தையையும் அருள்பவள், அந்த மங்கல குணமுடைய இறைவி என்னுள் பிரிப்பின்றி விளங்குகிறாள். பாடல்: ஆதி அனாதி, அகாரணி,காரணி............. படிப்பறிவால் உண்டாகும் அகந்தை நீக்கி பற்றக்களை அகற்றிட, முதல்வியின் செவ்வொளி வீசும் கருணை முகம் நம்முன் விளங்கி நிற்கும் ஆன்மாக்களை பக்குவம் செய்யும், பராசக்தியை தரிசிப்பவர்க்கு முகப்பொலிவு உண்டாகும், நாடாளும் மன்னரும் வசமாகி நிற்பர், நாயகியின் திருவடியை பற்றினால் தெளிவு உண்டு. இன்பமும் துன்பமும் கலந்த நடைமுறை வாழ்வில் நாளும் இன்பமே விளைய நல்லருள் புரிவாள் அவள், காமம், வெகுளி மயக்கம் என்கிற மும்மலங்களை அவளால் நீங்கும் . அவளை வணங்கினால் உள்ளத்தில் மெய்பொருள் விளங்கும், மண்ணிலும் நீரிலும் காற்றிலும், ஒளியிலும் வானிலும் கண்ணின் மணியிலும் உடலிலும் அவளை காணலாம், அவள் வழியிலேயே நாம் செயல் படுகிறோம், சக்தியின் வடிவம் தாய், தாயாயிருப்பது சக்தி. எங்கும் வியாபித்திருப்பது வானம் அவளே, தானே அனைத்து பொருளாகி தன்னுள் அனைத்தையும் அடக்கியிருப்பவள் அகில அண்டங்களையும் அவளே ஆழ்கிறாள், எனவே யாருக்கும் தாயாக ஆனாள் சக்தி திருசிற்றம்பல் மேலும் தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வியாக்ரபாதர் ... மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மழன் எனப் பெயர் சூட்டி, வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.ஒருமுறை மழன், தந்தையே! இறைவனை அடைய வழி தவம் செய்வது தானே!, என்று கேட்டான்.மகனே! தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூஜையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை. நீ தில்லைமரங்கள் அடர்ந்த வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும், என்றார்.மழன் அன்றுமுதல் சிவனையே நினைத்து எதையும் செய்தான். அவனை, மழமுனிவர் என மற்ற முனிவர்கள் அழைத்தனர்.மழமுனிவர் சிவபூஜை செய்வதற்கு தில்லைவனம் வந்து சேர்ந்தார். தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயங்களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும். அதனை எண்ணி வேதனைப்படுவார். சிவனே! அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது. விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண்டும், என்று வேண்டிக் கொண்டார். பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன்றினார். அதைக் கண்ட மழமுனிவர் பரவசம் அடைந்து,எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களைத் தரவேண்டும். கைவிரல்கள் புலி நகமாய் மாற வேண்டும். இதைத் தந்தால் எளிதாக மரம் ஏறமுடியும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை மட்டும் பறிப்பேன். அவற்றையும் தர வேண்டும் என்று வேண்டினார்.சிவனும் அந்த வரத்தை வழங்கினார். புலியை சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பர். இதனால், மழமுனிவர் வியாக்ரபாதர் என்னும் பெயர் பெற்றார். சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற அவரை அனைவரும் பாராட்டினர்.ஒருசமயம், வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாரத்தை திடீரென தாங்க முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள தில்லை வனத்தில் சிவனின் நடனக்காட்சியைப் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியில் என் உடல் பூரித்தது. அதனால் பாரம் அதிகமானது, என்றார்.அந்தக்காட்சியைக் காண ஆதிசேஷன் விருப்பம் கொண்டார். விஷ்ணுவும் அனுமதித்தார். பூலோகத்தில் பிறக்க வேண்டுமானால் ஒரு தாய் தந்தை வேண்டுமல்லவா! தங்களுக்கு ஆதிசேஷன் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று அத்திரி மகரிஷியும், அவர் மனைவி அனுசூயாவும் விஷ்ணுவிடம் வரம் பெற்றிருந்தனர். அந்த தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என்னும் பெயரிடப்பட்டது. வியாக்ரபாதர் தவம் செய்யும் வனத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும், சிவபெருமான் நடனதரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன்று பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான சிவன் எழுந்தருளினார். உமையவள் சிவகாமி இறைவனின் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினர். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜா என்று போற்றி மகிழ்ந்தனர்.

Thiruvannamalai innar kirivalam


Sidhar oola thiruvannamalai inner kirivalam


வியாழன், 26 ஜூன், 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 19 தகுதி நிர்ணயம்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 19 தகுதி நிர்ணயம் தான் பக்குவப்பட்டுவிட்டதாய் நம்புகிறான் சீடன் " உனக்கு இன்னும் பக்கவம் வரவில்லை" என்கிறார் குரு. பக்குவம் என்பது தகுதியாதல் - ஏற்றநிலை அடைதல், தகுதியற்றவன் அபக்குவன். சமையலில் பக்குவம் போல ஆன்மீகத்திலும் அது உண்டு, பக்குவமில்லாத சமையல் உணவுக்கு ஏற்றதல்ல என்பது போல தகுதியற்றவர் ஆன்மீக நிலையை அடையமுடியாது, குருடன் ஒருவன் இன்னொரு குருடனைக் துணையாய் கொண்டால் நிலை தடுமாற குழியில் விழவேண்டும் அவன் பார்வையுள்ள ஒருவனின் பின்னே நடப்பதுதான் பாதுகாப்பு, பக்குவமில்லாத சீடன் அறிவாளி வழங்கும் உண்மையான குருவை தேடிப்போவதில்லை, அறியாமை நிரம்பிய பொய்யரையே குருவாய் கொள்வான் என்கிறது திருமந்திரம். பக்குமற்ற சீடனும் பக்குவமில்லாத குருவும் சேர்ந்தால் பாழான இருளில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான், மனம் துடைத்துவிட்ட கண்ணாடியாய் இருக்க வேண்டும், தூசி படிந்த கண்ணாடியில் எதையும் காணமுடியாது. எண்ண மற்றருங்கள், எண்ணங்களைப் பெருக்கி தூசிபடிந்த கண்ணாடி ஆகிவிடாதீர்கள் என்கிறது திருமந்திரம், எண்ணங்களை பெருக்கி கொண்டு போனால் தீமைகள் பெருகும், காமத்தை விரும்புகிறவன் கண்டபடி எண்ணமிடுவான். பாடல் : மனதில் எழுந்தது ஓர் மாயக்கண்ணாடி.................. பக்குவமற்றவன் யார்? எண்ணுவது ஒன்றாய் சொல்வது பிறிதொன்றாய் , செய்வது வேறொன்றாய் இருப்பவன் அவனிடம் முக்கரணத் தூய்மை இருக்காது, (மனம், வாக்கு, காயம் இவை முக்கரணம் ) பக்குவன் யார்? சினமயற்று எண்ணமற்று, செயலற்றிருப்பவன், அவன் உண்பதிலும், சுவையறிவதிலும், நாட்டமற்றவன், அவன் தீமை செய்வதில்லை, திருப்தியோ அதிருப்தியோ, அவனுக்கில்லை, அவனிடம் தற்பெருமை கிடையாது, பக்குவமில்லாதவன் தான் எடுத்தற்கெல்லாம் கோபப்படுவான் எண்ணங்களை பெருக்குவான் செயலில் கருத்தூன்றிருப்பான், பெருந்தீனிப் பிரியன் அவன், நல்லது கெட்டது பாகுபடுத்தி பார்க்கமாட்டான், எதிலும் அதிருப்திக்கு முக்கியத்துவம்அளிப்பான், அவன் சுயதம்பட்ட பேர்வழியாகவும் இருப்பான், புறநோக்குடையவர்களே உங்கள் பார்வையை உள்நோக்கி திருப்புங்கள் என்பார் திருமூலர், அவர்கள் உலகியலில் இருந்து விடுபட்டு, உண்மையான பொருளை நாடவேண்டும் என்கிறார், அபக்குவனுக்கு அது சாத்தியமா? முத்தியில் விருப்பம் கொண்டு மும்மலக் குற்றம் ( ஆணவம், கன்மம், மாயை) நீக்கினால் அது சாத்தியமே, ஞானம் பெறுவதில் மன அறுதியே முதன்மையாய் வேண்டப்படுகிறது, பக்குவம் உள்ளவன் தகுதி உடையவன் , அவன் வேதாகம முறை உணர்ந்து குற்றங்கள் ஏதும் இல்லாத குருவைத் தேடியடைவர், அவர் மூலம் வீடு பேறு பெற தகுதியை அவன் பெறுகிறான். அவன் பிறவித் துன்பம் கண்டு அஞ்சுகிறான், அவன் இறைவனின் திருவடியை இடைவிடாது தேடியலையகிறான், உலக வாழ்க்கை அவனுக்கு சலித்து விடுகிறது. இறைவா என் வினைகள் நீக்கி, கவலை போக்கி என்னை உவந்தேற்றி கொள் " என்பதே அவனுடைய வேண்டுதலாக இருக்கும், நல்ல குருவிற்கு உன்னுடைய பொருளையும் உடலையும் ஏன் உயிரையும் கூட காணிக்கையாய் தரலாம் என்கிறார் திருமூலர். பாடல்: கொள்ளினு நல்ல குருவினை கொள்க................... குரு தன்னுடைய உபதேசத்ததின் மூலம் உங்கள்சிந்தையை தூயதாக்கிறார், ஒளிமயமான இறைவன் அங்கே எழுந்தருள்கிறான், அப்போதே சாதகனின் வினைகள் நீங்கி, இறைவனின் திருவடியில் அவனது சிந்தை தங்குகிறது. அவருடைய அருளுக்கு அவன் பாத்திரமாகி விடுகிறான், எது அழியும் பொருள் எது அழியாதிருப்பது என்பதை அறிந்து, சிவசக்தி உவந்தேற்கும்படியாய் தன்னை தயார்படுத்திக் கொள்பவேன நல்ல சீடன், அவனே ஞானமுடையவன், அவன் குருவை வழிபடுவதன் மூலம் இறைவனோடு இணைந்து கொள்கிறான்,, நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை குருவினடி, நீக்காமை, மெய்யறிவால் இன்பம் பெறும் உணர்வு சிந்தித்து தெளிதல் , அற்புதம் என்பன பக்குவம் உடையானின் தகுதிகள் ஆகும், திருச்சிற்றம்பலம் - ஓம்நமசிவாயம் மேலும் பல தகவல்கள் காண http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

சிந்தனைக்கு சில துன்பம் அறியாமையால் விளைகின்றது இன்பம் அறிவினால் விளைகின்றது அமைதியான மனிநலையே ஞானம் எனப்படுகிறது நம்மைப் பிறர் குறை கூறுவது நமக்கு பிடிக்கவில்லை அதைப்போலவே நாம் பிறரை குறை கூறாமலிருக்க வேண்டும் மலருக்கு நறுமணம் அவசியம் தேவை கனிக்களுக்கு இனிமை அவசியம் தேவை மனிதனுக்கு ஒழுக்கம் அவசியம் தேவை விதையின்றி செடி இல்லை வேர் இன்றி மரம் இல்லை பால் இன்றி நெய் இல்லை வினையின்றி துன்பம் இல்லை ஒரு புனிதம் நிறைந்த புண்ணிய ஆத்மாவினால்தான் மற்றவரகைள புனித்படுத்த முடியும் கோபம் வரும்போது அமைதியாக மெதுவாகப்பேசி பழகினால் கோபம் கட்டுப்படுத்தப்படும் எல்லோரும் சுவர்க்கத்திற்கு போக ஆசைப்படுகிறோம், ஆனால் நரகத்திற்கு போவதற்குரிய செயல்களை எல்லாம் தவறாமல் செய்து கொண்டிருக்கிறோம், / காரணம் நல்லது எது ? தீயது எது என்று தெரியாமல் வாழ்வதுதான் திருசிற்றம்பலம் ஓம்நமசிவாயம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

உண்மையான ஞானிக்கு உடமைகள் இல்லை உண்மையான ஞானியான ஒருவர் தன் உடமைகளாக தனக்கென்று இரு வேஷ்டிகள் இரு துண்டுகள்,ஒரு பிச்சைப்பாத்திரம், தண்ணீர்வைக்க ஒரு மண்குடம் மட்டும் கொண்டு வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப மழித்தலும், நீட்டலும் இல்லாமல் உலகம் பழிக்கும் எந்த செயல்களையும செய்யாமல் ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து வந்தார், அன்றாடம் சிவாலயம் சென்று தூய்மை செய்வார், மலர் பறித்து மாலை தொடுத்து மூன்று வேளையும் ஆலயம் தொழுவார், நண்பகலிலும், இரவிலும் வீடுகளில் யாசித்து உண்பார், தர்ப்பைப் புற்களின் மீது படுத்துறங்குவார், மக்களை ஏமாற்றி திரிவது இவருக்கு தெரியாத கலை, இவரைக் காண்பதற்கு அண்டைமாநிலத்திலிருந்து மிக ஆடம்பரமாக வாழ்ந்த ஒருவர் வந்தார், அவரை தம் குடிசைக்குள்வரவேற்று அமரச்செய்தார்,தண்ணீர் கொடுத்து உபசரித்தார், நல்ல அறவுரைகளை கூறினார், இந்த குடிசைக் கண்டு வந்தவர், வியப்படைந்து, " இவ்வளவு எளிமையான குடிசையில் பொருட்கள் எதுவும் இல்லையே " என் கேட்டார், அதற்கு ஞானியார் " உங்களிடம் கூட உடமைகள் ஏதும் இல்லையே " என்றார், உடனே அண்டைமாநிலத்திலிருந்து வநதவர் " இங்கே தங்களைக் காண்பதற்காக விருந்தினராக தானே வந்துள்ளேன் , சிறிது நேரத்தில் சென்று விடுவேன் அதனால் எனக்கு பொருட்கள் இங்கே தேவைப்படவில்லை, எனவே நான் எதுவும் என்னுடன் கொண்டுவரவில்லை "என்றார், இதனைக் கேட்ட ஞானியார் " நானும் இந்த உலகில் விருந்தினராகத்தான் வந்திருக்கிறேன், இங்கேயே நிலையாக இருக்கப் போவதில்லை " என்று பதில் அளித்தார், இவர்களின் உரையாடலின் உட்கருத்து : உண்மைத்துறவிகள் உடைமைகள் வைத்துக் கொள்வதில்லை, கோடி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பவர்கள் போலிவேட தாரிகள் என்பதை நாம் கண்டு கொள்ளவேண்டும், நாம் எதைக் கொண்டு வந்தோம் எது நமது எதை நாம் இறுதியில் கொண்டு செல்லமுடியும்? மேலும் உடைமைகளைத் துறப்பவர்களே உண்மையான துறவிகள் கடமைகளை துறந்து நாட்டிற்கு பாரமாக இருப்பவர் துறவியர் அல்லர், பிறப்பெடுக்கும் அனைவருக்குமே இந்த உலகம் ஒரு சத்திரம் தான், அந்த காலத்தில் கால்நடைப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருந்தது, அதற்காக வேண்டி அங்கங்கே நடைப்பயணம் செல்வோர் தங்கிச் செல்வதற்கு என்று சத்திரங்கள் எனப்படும் தங்குமிடங்கள் கட்டிவைத்தனர், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் அந்த சத்திரத்தில் ஒரிருநாட்கள் தங்கி இருப்பார்கள், பிறகு தங்களின் இருப்பிடத்திற்கு சென்று விடுவார்கள், இந்த உலகமும் ஒரு சத்திரம் தான், நாம் சில வருடங்கள் தங்கி இருப்போம், பிறகு இந்த உலகமாகிய சத்திரத்தை விட்டு போகத்தானே வேண்டும், இதைத்தான் அந்த ஞானியார் இந்த உலகத்திற்கு தான் ஒரு விருந்தினர் என்றார், நூற்றாண்டு வாழ்வோம்என்று எண்ணி வாழ்க்கையை எதிர் பார்த்து நடத்த வேண்டாம், ஆனால் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், என்று எண்ணி இருக்கும்போதே நற்காரியங்களை மட்டும் விரைந்து செய்துவிட வேண்டும் , இந்த உலகிற்கு நாம் விருந்தினராகவே வந்துள்ளோம் உடைமைகளைச் சேர்ப்பதே தொழிலாக வாழ்ந்து விடக் கூடாது என்பதை மனத்தில் கொண்டு வாழ்வோம், வளமும் நலமும் பெறுவோம் திருச்சிற்றம்பலம் - தென்னாடுடைய சிவனே போற்றி - ஓம் நம சிவாய ஓம் நன்றி : தமிழ் வேதம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

செவ்வாய், 24 ஜூன், 2014


அகப்பேய்ச் சித்தர் பாடல் மனமாகிய பேயை வென்ற சித்தர் ஆதலின் இவர் அகப்பேய் சித்தர் என்றழைக்கப்படுகின்றார். அகம் + பேய் + சித்தர். இந்த அகப்பேய் சித்தர் பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு. நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து வாழ்க்கை நடத்தினார். வணிகத்தின் பொருட்டுத் தாம் செல்லுமிடங்களிலெல்லாம் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கின்றார். மேலுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாகச் சொல்லிக்கொள்ளும் அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் துன்பத்திற்குக் காரணம் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது. ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை வென்றால் இன்பமயமான நித்திய வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். மனமாகிய அகப்பேயை அடக்கி வெற்றி கண்டார்க்கு சிவமாகிய இறைவன் காட்சி தருவார். துன்பமில்லா இன்பநிலையை அடையலாம் என்ற உண்மையைத் தம் பாடல்களில் பாடி வைத்தார். இவர் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள். பாடல்களையெல்லாம் படிக்குந்தோறும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனது அடக்கம் காணுகிறது. ஆசைக்கு இல்லை, இல்லை ஆசையை அடக்குவதற்கு ஒரிரண்டு பாடல்களை இங்கு ஆய்வு செய்தோமானால் அவர் இறைவனைக் காணுவதற்குச் சொன்ன தத்துவங்களை முழுவதுமாக உணர்ந்து கொள்ளலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா? இறைவனின் தாளை அடைவதற்கு அவர் கூறும் வழியைக் கேளுங்கள். “நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய் நாயகன் தாள் பெறவே நெஞ்சு மலையாதே - அகப்பேய் நீயொன்றுஞ் சொல்லாதே” அவனுக்கு இறைவனின் தாளை அடைய வேண்டும் என்பது ஆசை. அதற்காக என்ன செய்ய வேண்டும்? திருக்குறளைப் படித்துப் பார் என்கின்றனர் அறிஞர்கள். நான் கேட்டது இறைவனை அடைய வழி. நீங்கள் சொல்வதோ இவ்வுலக வாழ்க்கை வாழ்வதற்கான நெறி. வாழ்பவருக்குச் சொல்லவேண்டிய வழியை வாழ்ந்து முடித்து விட்டவனிடம் சொல்கிறீரே. ஐயப்பாடு நியாயம்தான். நீர் வாழ்ந்து முடித்து விட்டீரா? சரி அப்படியே இருக்கட்டும். நீர் வாழ்ந்து முடித்தவரென்றால் குறளின் நெறிகளிலேயே நீர் தேடிய வினாவுக்கு விடை கிடைத்திருக்குமே. புரியவில்லை,,,,,, இறைவனின் தாளை அடையும் மார்க்கங்களை வள்ளுவரே கடவுள் வாழ்த்தில் தெரிவித்திருக்கின்றாரே. கடவுள் வாழ்த்தில் இறைவனை அடையும் மார்க்கமா? திருக்குறள் அடிகளை அசை போட்டுப் பார்க்கின்றான். “கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்” தூய அறிவு வடிவான கடவுளின் திருவடிகளைத் தொழாதவன் கற்ற கல்வியினால் ஏதும் பயனில்லை என்கிறார். இறைவனின் திருவடிகளைத் தானே தொழச் சொல்கிறது. அதனை அடையும் மார்க்கம் எதனையும் கூறவில்லையே. அடுத்த குறளுக்குச் செல்கின்றான். “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” சரி, ஏற்றுக்கொள்வோம். அந்த மாணடி சேர வழி என்ன? விருப்பும் வெறுப்பும் இல்லாத ஆண்டவன் திருவடிகளைச் சேர்ந்தவர்க்குத் துன்பம் என்பது இல்லை. சரி, தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றியவர் தவிர மற்றையோரால் பாவக் கடலைக்கடக்க இயலாது. சரி, எண்குணத்தானின் திருவடிகளை வணங்காதவர்களின் தலை செயலிழந்த ஐம்பொறிகளைப் போலப் பயனற்றதாகும். சரி, இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களால் மட்டுமே பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர்களால் பிறவிக்கடலைக் கடக்க முடியாது. எல்லாக் கருத்துக்களும் சரி. அந்த இறைவனின் திருவடியை அடையும் மார்க்கம்தான் என்ன? இறைவனின் திருவடிகளின் பெருமைகளை இவ்வளவு நுண்மையாக உணர்த்திய திருவள்ளுவர் அத்திருவடிகளை அடையும் மார்க்கத்தைச் சொல்லாமலா இருந்திருப்பார். “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” ஐம்பொறிகளால் விளையும் ஆசைகளை ஒழித்துக் கடவுளின் உண்மை நெறியில் நின்றவர் நிலையான பெருவாழ்வு வாழ்வார்கள். அதாவது நித்தியமான பெருவாழ்வாகிய இறைவனின் தாளை அடைவார்கள். திருக்குறளின் கடவுள் வாழ்த்து ஒட்டுமொத்த அதிகார கருத்துக்களையும் இரண்டே வரிகளில் அடக்கிவிடுகின்றார் நாயனார். அதாவது அகப்பேய் சித்தர் நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய் நாயகன்றாள் பெறவே நெஞ்சு மலையாதே - அகப்பேய் நீயொன்றும் சொல்லாதே” இறைவனின் தாளை அடையும் மார்க்கத்தைக் கேட்ட அந்த இளைஞனுக்கு மனம் தன் மனம் போனபடியெல்லாம் யோசனை கூறுகின்றது. “வானுலக வாழ்க்கையினை நாடி இன்ப வாழ்க்கையை பெண்கள் இன்பவாழ்க்கையை இழந்தவர்கள் கோடி” என்று மனம் பெண்ணாசையைத் தூண்டுகிறது. பெண்ணாசையால் முக்தியை அடைய முடியுமோ? இல்லை என்று மறுக்கிறது இன்னொரு மனம். மதுவை மாந்திக் களிப்பதால் இறைவனின் திருவடிகள் காட்சி தருமோ? அந்த காட்சிதான் இறைமையோ? வெளி மனத்தின் விளைவுக்கு உன் மனம் இல்லை என்ற பதிலைத் தருகிறது. மது, மாது, சூது இவைகள் இறைவனின் தாளை உணர்த்தாவிடில் வேறு எதுதான் இறைவனின் தாளை அடையும் மார்க்கம். சிந்தித்த உள் மனத்தை வெளி மனம் அடக்குகிறது. மனமே, நான் சொல்வதைக் கேள். மதுவும், மாதுவும், சூதுவும்தான் இறைவனை அடையும் மார்க்கங்கள். மனமே (வெளி மனமே) நீ அலையாதே. இவையெல்லாம் நீ அனுபவிக்கத் துடிக்கும் ஆசைகள். இந்த ஆசைகளெல்லாம் உண்மையான இன்பத்தை; இறைமையை உனக்கு உணர்த்த மாட்டா. ஆகவே என்னைக் குழப்பாமல் உண்மையாகவே இறைவனின் தாளைஅடையும் மார்க்கத்தைச் சொல் என்று மற்றுமொரு வழியை கேட்க, அப்படியானால் நஞ்சுண்டு இறந்து விடு, நீ நேரே இறைவனைக் காணலாம். என்ன உளறுகிறாய்? இறைவன் அன்பு வடிவானவர். உயிரைப் பலி கொடுத்துதான் அவரை அடைய முடியுமென்பது வீண் பிதற்றல். மரணம் என்பது இறைவன் வகுத்தது. அது தானாகத்தான் வரவேண்டுமே ஒழிய நாமாகத் தேடிச் செல்லக்கூடாது. “சரி வேண்டாம்; இப்படி செய்யலாமா? என்று இன்னுமொரு மார்க்கத்தை உபதேசிக்க வருகிறது வெளிமனம். என்னவென்று கேட்டு உபயோகமற்ற வெளிமனதின் ஆலோசனைகளைக் கேட்க உள்மனம் தயாராக இல்லை. “அகப்பேயே, இனி நீயொன்றும் சொல்லாதே. உண்மை ஞானமார்க்கத்தை நானே உணர்ந்து கொள்கிறேன்” என்று மனப்போராட்டத்திற்கு முடிவு கட்டுகிறான் அதே இளைஞன். இறைவனின் தாளை அடையும் மார்க்கத்தை அவனுக்கு உள் மனம் உணர்த்தியதா? “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன்அடி சேரா தார்” இக்குறளுக்கு விளக்கமாக 56வது கண்ணியில், “பிறவிதீர வென்றால் - அகப்பேய் பேதகம் பண்ணாதே துறவியானவர்கள் - அகப்பேய் சும்மாவிருப்பார்கள்” என்று பிறவி தீரும் மார்க்கத்தை உபதேசிக்கிறார் அகப்பேய் சித்தர். இறைவனை அடையச் சும்மா இருந்துவிட்டால் போதுமா? வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்ற உள்மனக் கேள்விக்கு அகப்பேயே, “தன்னை யறிய வேணும் சாராமற் சாரவேணும் என்று விடையளிக்கிறார். தன்னையறிவதென்றால் என்ன? நான் என்ற அகந்தையை நீக்க வேண்டும். நான் என்பது உடலா? உள்ளமா? உடல் என்றால் ஆசைகளை நீக்க வேண்டும். உயிர் என்றால் அவ்வுடலின் அநித்திய தன்மையை உணர்ந்து அடங்க வேண்டும். பஞ்சபூதக் கூறுகளை இந்த உடல் ஒவ்வொன்றுமே அழியக்கூடியது என்று உணர வேண்டும். அழியக்கூடிய இந்த உடம்பின் சுகத்திற்காக இன்னொரு உயிரை / உடம்பை வருத்த வேண்டுமா? அப்படி அந்த உயிர் படும் அவஸ்தைகள் நிரந்தரமல்லவே. அதனால் பாவம், பழிகள் நிரந்தரமாக அல்லவா நம்மை வந்தடையும். ஆகையால் உன்னை நீ அறிந்து கொள் என்கிறார் அகப்பேய். சரி என்னை நான் உணர்ந்துகொண்டால் மட்டும் பழி பாவங்கள் செய்யாமலிருந்திடுவேனோ என்று அசட்டுத்தனமாக கேட்கும் மனத்திடம் அகப்பேயே, “உன்னை அறிந்தக்கால் ஒன்றையும் சேராயே” என்று விடையளித்துத் தன்னையறியும் மார்க்கத்தையும் அகப்பேய் அறிவிக்கின்றார். “உன்னை அறியும் வகைஉள்ளது சொல்வேனே” என்று கூறி, சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று யோக மார்க்கங்களை அறிவிக்கின்றார். சரியை என்பது கடவுளைக் கோவிலில் வைத்து வழிபடுதலான நெறி. கிரியை என்பது கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதலான நெறி. யோகம் என்பது சித்தர் வழிபாட்டு நெறி. இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் தன்னையறிந்து இறைவனை அறிந்து கொள்ள முடியுமோ என்ற வினாவுக்குச் சிரிப்பை விடையாகத் தருகின்றார் இந்த ஞானசித்தர். “சரியை ஆகாதே அகப்பேய் சா லோகங் கண்டாயே கிரியை செய்தாலும் அகப்பேய் கிட்டுவது ஒன்றுமில்லை யோகம் ஆகாதே அகப்பேய் உள்ளது கண்டக்கால் தேக ஞானமடி அகப்பேய் தேடாது சொன்னேனே” சரியையாகிய உருவ வழிபாட்டினாலும், கிரியையாகிய ஆசனம் முதலான உடற்பயிற்சி வழிபாட்டினாலும் போகமாகிய தியான மன வழிபாட்டினாலும் கூட இறையை இச்சை அற்றவிடத்து இனிதே காணலாம் என்று இறைவனைக் காணும் வழியைப் போதிக்கிறார். ஞானத்தினால் மட்டுமே இறைவனைக் காண முடியும் போலும். நமக்குப் பிறவி என்பது இறைவன் அளித்தது. புள்ளாய், பூண்டாய், புழுவாய், விலங்காய் என்று பிறந்து மாண்டு, பிறந்து மாண்டு பிறவி என்பதே ஒரு தொடர்கதையாய் இருக்கும் நிலையில் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து வாழ்வதால் பிறவி எடுப்பது நின்று விடாது. இச்சையற்றவனிடம் இறை தரிசனம் காணலாம். அந்த இறை தரிசனமே பிறவிப்பிணியை ஒழிக்க வல்லது என்று பிறவியை நீக்கும் வழியையும் இறை தரிசன வழியையும் கூறுகின்றார் அகப்பேய். இங்கு இன்னுமொரு வினா எழுகின்றது. பெரிய யோகிமான்களெல்லாம் ‘வாசியோகம்’ பற்றி பிரமாதமாக சொல்கிறார்களே, அப்படி வாசியோகம் செய்பவர்க்கு இறைவன் எளிதில் புலப்பட்டு விடுவானோ? என்ற நம் கேள்விக்கு, “வாசியிலேறிய படி வான் பொருள் தேடாயோ? அகப்பேய் வாசியி லேறினாலும் வாராது சொன்னேனே” என்று சரியாக விடையளிக்கின்றார். அதுமட்டுமல்ல, அறிவு வடிவான கடவுளைக் கண்டவர்கள் மோட்சமும் வேண்டார்கள். முக்தியும் வேண்டார்கள். தீட்சையும் வேண்டார்கள் என சிவமே சின்மயமானவர்கள் என்று சிவயோக நிலை குறித்தும் பாடுகின்றார். மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மய மானவர்கள் பிறவித் துன்பம் தீருவதற்கு வழி தீமைகள் செய்யாமை, செருக்கின்மை இப்படி உண்மையான அன்பு நெறியே சைவம். அந்த உண்மை சிவத்தை சாத்திரங்களின் மூலம் காண முடியாது. நமக்குள்ளே கலந்திருக்கும் அந்தச் சிவத்தை அன்பு நெறியினால் மட்டுமே காண முடியும். இதை நான் சும்மா ஒப்புக்காகச் சொல்லவில்லை. உன்மேல் ஆணையிட்டு உறுதியாகச் சொல்லுகிறேன். நீருடன் உப்பு கலந்திருப்பது போல உன்னுடனேயே இறைவனாகிய சிவபெருமான் இருக்கின்றார். இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாக வாழ்வாயாக என்று அகப்பேய் சித்தர் தம் பாடலில் ஆனந்த வாழ்வதனை உணர்த்துகின்றார். ஒப்பனை அல்லவடி - அகப்பேய் உன் ஆணை சொன்னேனே அப்புடனுப் பெனவே - அகப்பேய் ஆராய்ந் திருப்பாயே மனப்பேயை அடக்கி வென்ற அகப்பேய் சித்தர் திருவையாற்றில் சித்தியடைந்தார் என்று போகர் குறிப்பிடுகின்றார். நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய் நாயகன் தாள்பெறவே நெஞ்சு மலையாதே அகப்பேய் நீயொன்றும் சொல்லாதே. 1 பராபர மானதடி அகப்பேய் பரவையாய் வந்ததடி தராதல மேழ்புவியும் அகப்பேய் தானே படைத்ததடி. 2 நாத வேதமடி அகப்பேய் நன்னடங் கண்டாயோ பாதஞ் சத்தியடி அகப்பேய் பரவிந்து நாதமடி 3 விந்து நாதமடி அகப்பேய் மெய்யாக வந்ததடி ஐந்து பெரும்பூதம் அகப்பேய் அதனிட மானதடி 4 நாலு பாதமடி அகப்பேய் நன்னெறி கண்டாயே மூல மானதல்லால் அகப்பேய் முத்தி யல்லவடி. 5 வாக்காதி யைந்தடியோ அகப்பேய் வந்த வகைகேளாய்

திங்கள், 23 ஜூன், 2014


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 18 அண்ணலின் அருளால் ஆகிறவை சிவனது அருள் சேர்ந்தால்செல்வங்கள் வாய்க்கும், அவனது அருளிருந்தால் நல்ல ஞானம் உண்டாகும், பெருந்தன்மை உண்டாகும், சிவமாம் பெருவாழ்வு உண்டு என்கிறது திருமந்திரம், அண்ணலின் அருள்வேண்டி தலங்கள் தோறும் செலவர் சரியையாளர், ஞானிகளோ தாங்கள் இருக்கிற இடத்திலேயே வழிபாடு செய்து பெரும்பயன் அடைகின்றனர், தங்கள் சரீரத்திலேயே சிவனை அவர்கள் உணர்கின்றனர், நடைமுறை வாழ்வின் நன்மை தீமைகள் நாம் செய்த புண்ணிய பாலங்களின் பலன்கள், வினையாகிய வேரினை அறுத்து தீயவிளைவுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வர் ஞானிகள், "சிவனரு ளாற்சிலர் தேவருமாவர் சிவனருளாற் சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனருளால் வினை சேரகி லாமை சிவனருள் கூறில் அச்சிவலோக மாமே, " சிவனருளால் சிலருக்குத் தேவவடிவம் கிடைக்கிறது சிலருக்கு தெய்வத்தன்மை வாய்க்கிறது, சிலருக்கு வினைகள் சேராது நின்று விடுகின்றன, இது பாடலின் பொருள் விளக்கின் சுடராய் ஞானம் விளங்குவதும், மண்ணுலகில் ஞானிகளாவதும் விண்ணுலகில் தேவ உருவில் திகழ்வதும் என் அண்ணாலாகிய சிவன் வழங்கிய அருளால் அமைந்தவை என்கிறார் திருமூலர், பாடல்: புண்ணியன் எந்தை புனிதன் இணையடி........ பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார். இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை என்கிறார் திருமூலர் மேலும் மற்றொரு பாடலில் அன்பாகிய தேரில் காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர் நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே. `உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும். காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை ``மாயத் தேர்`` என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். ``உணர்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். ``நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை``l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், ``அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக. இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது. http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 17 தவத்தின் பயன்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 17 தவத்தின் பயன் தவம் என்றால் விரதம், மனதின் நற்குணம் மூன்றில் இராசத குணத்தில் ஒன்றாகவும், சாத்துவிக் குணத்து ஒன்றாகவும் இது இடம் பெற்றது இராசதத்தில் கூறப்படும் ஞானத்தையும் ஊக்கத்தையும் உள்ளடக்கியது, சாத்துவிகத்தில் பொறுமையையும் மோனத்தையும் தன்னில் கொண்டது தவம், சாத்திரங்கள் தவத்தை புண்ணியத் தோற்றம் நான்கில் ஒன்றாகவும், குறிப்பிடுகின்றன, தவம், ஒழுக்கம் கொடை, கல்வி இவை புண்ணியத் தோற்றங்கள். தவத்தின் மிக்கார் இயல்பு இவையென திருமந்திரம் கூறும், "ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவது இல்லை நமனும் அங்குஇல்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும் பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே " சிவத்திடம் மனதை வைத்த உத்தமர்கள் உலகத் துன்பங்களை கண்டு அஞ்சுவதில்லை, அவர்களுக்கு எமபயம் கிடையாது, அவர்கள் வாழ்வது சிவவாழ்க்கை, அதனால் எவ்விதத் துன்பங்களும் அவர்களை அணுகுவதில்லை, சிவனின் நினைப்பால் அவர்கள் இரவென்றும், பகலென்றும் வேறுபடுத்தி அறிகின்ற நிலையில்லை, பொருளின் மீது ப்ற்றில்லை, என்பதால் அவர்களுக்கு விளைவு பற்றியும் கவலை கிடையாது, தங்கள் பிறப்பின் நோக்கத்தை அறிவதோடு பிறப்பை நீக்கும் வழியையும் வியக்கத்தக்கது, எந்த வொன்றிலும் கவனத்தை சிதறவிடாமல் ஏகாந்தத்தில் இருந்து தங்கள் மனதை அவர்கள் இறைவன்பால் வைத்திருப்பர், இந்திராதி தேவர்களே நேரில் வந்தாலும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், தவத்தின் தன்மையை அறியவும், தவத்தால் மேன்மை அடையவும் சிவத்தின் அருளை பெற்றிருக்க வேண்டும், தவசீலர்கள் தங்கள் மன உறுதியால் இயைவனை காண்கின்றார்கள், இவர்கள் தவத்தை வாழ்க்கையாய் கொண்டவர்கள், இல்லற ஞானிகள் வாழ்க்கையை தவமாய் கொள்வார்கள், திருமூலர் கூறுகிறார் " நீங்கள் சாத்திரங்கள் கற்பதன் மூலம் பெருமையடையப் பார்க்காதீர்கள், ஒரு கணமேனும் புறத்தே திரிந்தலையும் உங்கள் மனத்தை தடுத்து அகத்தே நோககுங்கள், அகமுகப் பார்வை இறைவனின் அருளோடு உங்களை பொருந்தியிருக்க செய்யும் " என்கிறார், தவம் என்பது ஞானத்தை அடைவதற்கு முயற்சி சமாதி நிலையடையும் தவமெல்லாம் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லை, மனதை புலன் வழி போகாது தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையவர் தனியொரு இடத்தில் இருந்து தவம் செய்யத் தேவையில்லை, பொறிகளை தன்வழிப்படுத்தி ஒடுங்கி இருப்பதே தவம், மனமாகிய உறையில் இருந்து மதியாகிய வாளையுருவி சினம் போன்ற மாயா சக்திகளை வென்று, சிவத்திடம் வேறுபாடின்றி பொருத்த வேண்டும், பொறிகள் ஐந்தினையும் உலக விசயங்களில் போகவிடாது தடுத்து தவத்தினால் சிவஒளி காணவேண்டும், அதுவே சுயஒளியாகும், பாடல் : மனத்திடை நின்ற மதிவான் உருவி............ சித்தத்தில் இடையறாது சிவமந்திரம் ஒதி சிமாகும் தன்மையர்க்கு வேறு எத்தவமும் செய்ய வேண்டியதில்லை, சிவனை எண்ணி சிமாதலே தவத்தின் பயன், பாடல் : சிததம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்............. எப்போதுமே உயர்ந்ததையும் சிறந்ததையும் உலக பிரதியெடுத்துவிடும்,அசல் எது? போலி எது? என்று உஙகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும் ஆன்மீகத்திலும் போலிகள் உண்டு, போலி ஆசாமிகள் போடுவது சிவவேடமும் அல்ல, தவமும் அல்ல, அவ வேடம், அவம் இழிவானது பயனற்றது, எப்போதும் நிலைத்திருப்பது உண்மை, இடம் தெரியாமல் ஒடி ஒளிவது பொய், அசலுக்குள்ள பொலிவு போலிக்கில்லை, சிறதளவும் ஞானம் இல்லாமல் தவவேடம் பூண்டு தகாத செயல்களைச் செய்பவர்கள் நாட்டில் உண்டு, தங்கள் செயலால் நாளை தலைகுனிவு ஏற்படுமே என்று அவரக்ளமனக்குனிவு கொள்வதில்லை, ஆன்மீக சமுதாயந்தான்அவர்களுக்காக வெட்கி தலைகுனியும, சொர்க்கத்தைப் பற்றி பேசும் போலி ஆசாமிகள் போய் சேருகிற இடம் நரகம்தான் இருக்கும், அற்ப சுகங்களுக்காக ஆைச்ப்பட்டு போடுகிற வேடம் புண்ணியமாகாது, உண்மையான ஞானம் உள்ளவரே தவத்தின் பயனை அடைவர், உண்மையான ஞான வேடம் புனைவதில்லை, போலிகள் தவத்திற்குரிய குண்டலம், உருத்திராட்சம், பாதக்குகறடு, யோகதண்டம் சடை, திருநீறு, அவற்றின் தன்மையை அறிந்திருக்கமாட்டார்கள்,போலிகள் தங்கள் நிலையை நிறுவிக் கொள்ள வாதிடுவார்கள், அசலானவர்கள் எதையும் மூடிமறைக்கின்ற நிரூபிக்கின்ற அவசியம் கிடையாது அவர்கள் எப்போதும் மவுனமாகவே இருப்பார்கள், இதனை திருமூலர் " யோகிக்கும், ஞானிக்கும் திருநீறு உத்திராட்சம் சடாமுடி, ஐந்தெழுத்து என்கிற நான்கு புறச்சாதங்கள் தேவையில்லை என்கிறார் பாடல் சிஞானிக்கு சிவயோகிகட்கும் அவமான சாதனமாகாது.............. உண்மை ஞானி நடமாடும்கோயில் தன்பார்வையினாலோ, பரிசத்தாலோ அடுத்தவர்க்கு ஆன்ம பக்குவத்தை அவனால் வழங்க முடியும் - தீட்சத் வழங்க முடியும் ஆணவத்தை விட வேண்டும் ஆணவத்தால் ஏற்படும்மயக்கத்தை விட்டோழிக்க வேண்டும், செயலற்றிருக்க வேண்டும், மவுனத்தின் சிறப்பை உணர்ந்திருக்க வேண்டும்,அப்போதே நீங்கள்தேடுகிற சிவமாம் இன்பபொருளை அடைய முடியும், என்கிறார் திருமூலர்,

மனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்! மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்று கூறுகின்றனர். அவை: 1.தற்பெருமை கொள்ளுதல் 2.பிறரைக் கொடுமை செய்தல் 3.கோபப்படுதல் 4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல். 5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல் 6.பொய் பேசுதல் 7.கெட்ட சொற்களைப் பேசுதல் 8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை 9.புறம்பேசுதல் 10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும் 11.பாரபட்சமாக நடத்தல் 12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல் 13.பொய்சாட்சி கூறுதல் 14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல் 15.வாக்குறுதியை மீறுதல் 16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல் 17. குறை கூறுதல் 18.வதந்தி பரப்புதல் 19.கோள் சொல்லுதல் 20.பொறாமைப்படுதல் 21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்

ஞாயிறு, 22 ஜூன், 2014


மனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்! மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்று கூறுகின்றனர். அவை: 1.தற்பெருமை கொள்ளுதல் 2.பிறரைக் கொடுமை செய்தல் 3.கோபப்படுதல் 4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல். 5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல் 6.பொய் பேசுதல் 7.கெட்ட சொற்களைப் பேசுதல் 8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை 9.புறம்பேசுதல் 10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும் 11.பாரபட்சமாக நடத்தல் 12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல் 13.பொய்சாட்சி கூறுதல் 14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல் 15.வாக்குறுதியை மீறுதல் 16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல் 17. குறை கூறுதல் 18.வதந்தி பரப்புதல் 19.கோள் சொல்லுதல் 20.பொறாமைப்படுதல் 21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்

பன்னிருதமிழ் திருமுறைகளில் இறைவழிபாடு ஒரு ஆன்மா தன்னைத்தான் கடைத்தேற்றிக் கொள்வதற்கு தானே எடுக்கும் முயற்சிதான் இறைவழிபாடு என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும், கடவுளிடம் வியாபாரம் செய்வது இறைவழிபாடு ஆகாது. பொருள் வேண்டியும், இம்ைமப் போகங்கள் வேண்டியும் இறைவழிபாடு செய்வதை தமிழ் வேதங்களில் காணவே முடியாது. "தனத்தினைத் தவிர்த்து நின்று தம்அடி பரவு வார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காடனாரே" ......... நாவுக்கரசர் இறைவழிபாடு என்பது இறைவழிபாட்டிற்கே என்பதுதான் தமிழ்வேதங்கள் கூறும் உண்மை, வேண்டத்தக்கதை இைறவர் அறிவார், காலமும் நேரமும் வரும் போது நம் தகுதிக்கு ஏற்ப வழங்குவார், என்னும் எண்ணத்துடன் இறைவழிபாடு அமைய வேண்டும். இதன் பொருட்டு மாணிக்கவாசகர் தம் பாடலில் " வேண்டத்தக்கது அறிவாய் நீ வேண்ட முழுவதுந் தருவோய் நீ ........................................... வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொனறுண்டெனில் அதுவும் உன்றன் விருப்பன்றே." என்கிறார் எனக்கு எதுவேண்டும் என்பதை நீ அறிவாய் , என்பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை அதனையே நானும் விரும்புகின்ற பொருள் ஒன்று உண்டென்றால் அது நான் உன்மேல் வைக்கும் அன்புதானே என்று இறைவன் விருப்பமே நம் விருப்பமன்றல்லோ என்று நாம் விரும்புவதையே இறைவனும் நமக்கு அருள்புரிவார் என்பதை காட்டுகிறார், எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்யும் பொழுது நம்முைடய மனத்தில் உள்ள மாசுகளை இறையருள் போக்கிவிடும் என்கிறார் நாவுக்கரசர் கூவாமிகள் மனத்திற்கு மாசு / குற்றங்களாவன பொய், வஞ்சனை விரோதம், குரோதம், புறங்கூறல், கோபம், லோபம், (கஞ்சத்தனம்) ஆணவம், நான் எனது என்பனவாகும், " மாசற்ற மனமே ஈசன் கோயிலாகும் என்பதை மனத்தில் இறத்த வேண்டும், இைவ இறையருளையும் மனத்தினுள் புகவிடாமல் தடுத்து விடும், இறையருைள பெறுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பக்தி செய்ய வேண்டும், என்பது தான் திருநாவுக்கரசரின் திருவுள்ளமாகும், புதிய மலர்கள் தூவி அருந்தமிழ் பாடலைப்பாடி துதிக்க வேண்டும் அன்று மலர்ந்த வாசனையுள்ள நல்ல மலர்களைத் தூவி பண்ணமைந்த பாடல்களால் இறைவனை பாடித்துதித்திடல் வேண்டும், பேசும் திறம் பெற்ற நாம் வாயாறப் பாடி வணங்க வேண்டும் நமக்கு பசி வந்தால் நாம்தான் உணவு உண்ண வேண்டும், நமக்காக பிறர் உணவருந்த முடியாது, இது போல நம் வினைகள் நீங்கி நலம் பெறுவதற்கு நம் வாயினால் நாமே பாடி வணங்க வேண்டும்,நம் கைகளால் மலர்களை தூவ வேண்டும் என்கிறார், மேலும் " சாலம்பூவோடு தூபமறந்தறியேன் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் என்று அவரின் ஐந்தெழுத்து நாமத்தை கூறி பூசை ெசய்ய வேண்டும் என்கிறார், ஆலங்கட்கு கொண்டு செல்லும் மலர்கள் வாசனையுைடயவனவாகவும், புதியவனவாகவும், இருத்தல் வேண்டும், என்பதை சைவப் பெருமக்கள் அனைவரும் உணர்தல் வேண்டும் நாம் இறைவருைடய உடைமைப் பொருள், நம்மை காப்பது அவருடைய கடமையாகும், நம்முடைய உடைமைப் பொருளை நாம் எவ்வாறு பாதுகாக்கின்றோம் என்பதை மனதில் கொண்டால் இது புரியும், இறைவன் என்கின்ற பேரின்ப வெள்ளத்திலிருந்து வந்த சிறுதுளிதான் உயிர்களாகிய நாம், நமக்கு நன்மைகளையே செய்வார், ஒரு காலும் தீமையை அளிக்க மாட்டார், நாம் தீமை என்று நினைப்பதிலும், ஒரு நன்மை இருக்கும், நம்முடைய நன்மையின் பொருட்டே இறைவர் அதையும் அளித்துள்ளார், அதில் உள்ள நன்மை பின்னால் விளங்கும், கசக்கும் வேப்பிலை சாற்றை கொடுத்து தாயானவர் குழந்தையின் உடல் நலத்தைக் காப்பது போல எண்றுணர்தல் வேணடும், தேவை பொறமைதான், பொறமையுடையவர் பெருமையடைவார், யாது வரினும் இறைவருடைய திருவடியை மறவாமல் பொறுமையுடன் வழிபாடு செய்துவந்தால் அளவற்ற நலன்களை இறைவர் அளிப்பார் என்பது உறுதி. ஓம் நமசிவாயம் ஓம் திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

திண்ணப்பன் என்னும் வேடன் கண்ணப்பன் ஆனதன் தத்துவம் திண்ணன் என்ற வேடனின் எல்லையற்ற அன்புக்கு எளிவந்த பிரானாக ஆனவனல்லவா அவன். ஆனால் எல்லோரும் அவனுடைய செருப்புக் காலையும் எச்சில் நீரையும் பன்றிக் கறியையும் பேசுகிறார்கள். அவையல்ல முக்கியம். அவனுடைய பக்தியின் உயர்வுதான் முக்கியம். சிவலிங்கத்தின் கண்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்துத் தனது ஒரு கண்ணை அம்பால் பிடுங்கி அப்பினான். அந்தக் கண்ணில் ரத்தம் நின்றது. ஆனால் லிங்கத்தின் மறுகண்ணில் ரத்தம். உடனே தயங்காமல் தனது மற்றொரு கண்ணையும் பிடுங்கி அப்பினான். பிறகு கேவிக்கேவி அழுதானாம். தன் இரு கண்களும் போய்விட்டனவே என்றா? இல்லை, சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே. மூன்றாவது கண்ணில் ரத்தம் வழிந்தால் அப்புவதற்குத் தனக்கும் மூன்று கண்கள் இல்லையே என்று அழுதானாம். அவ்வாறு தனது உடலுக்கு ஏற்படும் ஊறையும் வலியையும் பொருட்படுத்தாமல் (தான் உடல் என்று கருதி அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிராமல், தேகான்ம பாவத்தை விடுத்து), புறக்கண்களைப் பொருட்படுத்தாமல் அகக்கண்ணால் நோக்கினால், சீவனுக்குச் சிவன் காண எளியவனாவான் என்பதே திண்ணப்பன் என்னும் வேடன் கண்ணப்பன் ஆனதன் தத்துவம். ஆன்மீக முயற்சிக்கு உறுதுணை என்ற அளவிலேதான் உடலைப் பேண வேண்டுமே அல்லாது, அதன் அழகும் சுகமும் வலிவும் வண்ணமும் லட்சியங்கள் அல்ல. இந்த ஒளி மனதில் உதயமானால் பிற உலகியல் எண்ணங்கள் என்னும் தாரகைகள் மனதில் ஒளியிழக்கும்

சனி, 14 ஜூன், 2014


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 16 இறைவனை அடையும் மார்க்கங்கள் இறைவனுடைய திருவருளை அடைவதற்கு உரிய வழிகள் பற்பல, அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனும் நான்கு அடங்கும், சத்புத்திர மார்க்கம் என்பது இறைவனை தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும், திருஞானசம்பந்தர் காட்டிய வழிஇதுவே. தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானனாக் பாவித்து உயிர்கள் பணியாளனாக இருந்து வழிபடும் நெறியாகும், இது திருநாவுக்கரசர் காட்டி வழி, சகமார்க்கம் என்பது இறைவன் தன் சகதோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும், இது சுந்தரரர் காட்டி வழி, சன்மார்க்கம் என்பது இறைவனை ஞான ஆசிரியனாகக் கொண்டு , ஆனமா சீடனாக இருந்து வழிபடும் வழியாகும், இது மாணிக்கவாசகர் காட்டிய வழி. இறைவழிபாட்டிற்கு ஆன்மா தியான வகையில் சுத்தி செய்து கொள்ளல் தவம் என்பது காடுகள் இருந்து கொண்டு கனிகளைகளை உண்டு வாழ்தல் மட்டுமன்று. இறைவனை தியானம் செய்து, கொண்டு தம்மால் எவ்வுயிருக்கும் தீங்கினை செய்யாது இறைவனை தந்தையாகவோ, ஞான ஆசிரியனாகவோ, எஜமானனாகவோ, நட்பின் - பாசத்தின் மிகுதியால்நண்பனாகவோ கொணடு தன்னை அவனுடன் கொணடு தியானித்திருத்தலே இறையருளை பெறும வழிகள் ஆகும், இதனை திருமந்திரம் ஐநதாம் தந்திரத்தில் சாதகர்கள் உகந்து பற்றக்கூடிய நெறிகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. 1) சன்மார்க்கம்: இது ஒளிநெறி எனப்படும் இதனை மகான் இராமலிங்க அடிகள் இறைவனை ஒளிவடிவமாகவே கண்டார், மன எழுச்சிகளுக்கு இடமளிக்காமல் நிலைத்த சித்தத்துடன் சிவயோகத்திருக்க வேண்டும், என்கிறார் திருமூலர், சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு தெய்வச் சிவ நெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய வையத் துள்ளார்க்கு வகுத்து வைத்தானே. சைவ நெறியை சிவனே அமைத்து தந்தான் என்கிறது பாடல். ஆன்மாக்கள் ஈடேற வேண்டும் என்பதற்காகவே இந்த ஒளிநெறியை இறைவன் ஏற்படுத்தினான் இதுவே தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் என்பது, தன்னுடைய சரீரமல்ல தான் உணர்ந்த ஞானியர் பற்றும் நெறியிது. சிவனது வியாபகத்தை அறியாதவர் மனத் தெளிவு பெறாதவராவர், தெளிவில்லாத காரணத்தால் அவர்கள் சீவனது வியாபகத்தையும அறியமாட்டார்கள், சீவனை அறிந்தாலதான் சிவத்தை அறியமுடியும், ஐம்மலங்களாலும் நீங்கப்பெற்ற ஆன்மா சிவம் ஆகும், தன்னிலை மறந்து சிவனாதல் சன்மார்க்கம் பாடல்: தெளிவறியாதார் சிவனை அறியார்............... ஆணவத்தால் ஏற்படும் தன் முனைப்பும் பாசமும் நீக்கி, முழுமுதற் கடவுளாகிய சிவத்துடன் கூட்டுவிப்பது சன்மார்க்கம், மெய்பொருளுடன் ஒன்றியிருத்ற் கேதுவாய் கனியாத மனத்தை கனிய வைக்கிற மார்க்கமிது, சிவத்தை அறியும் ஞானம் சன்மார்க்கம் என்கிற சாதனம் ஆகும், 2) சகமார்க்கம்: இது தோழமை நெறி,, இந்த சாதனம் வீடு பேற்றை யும் சித்தியையும் தருவதாகும், சகமார்க்கத்தில் நிட்டையில் இருப்பார்க்கு அவர்தம் உள்ளத்தில் பரத்த உலகங்கள் காணப்டும், அது போல் உள்ளொளியாகிய பேரோளி தோன்றும், அவ்வொளியில் சிவமும் சக்தியும் உண்டு. சித்தர்கள் விரும்பி மேற்கொள்ளும நெறியிது, சமயக்குறவர்கள் நால்வரில் சுந்தரர் பின்பற்றி இறைவனிடம் அடைந்த வழி, ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடி சுத்திகளாகும், அதனால் அகரம் முதலான பதினாறு கலைகளில் விளங்கும் ஆகாயமும் அதில் விளங்கும் ஒளியும் காணற்காகும், ஆன்மாவின் ஐம்புலங்களும் ஐம்பொறிகளும் புத்தியும்தம்முடைய இயல்பான கீழே இழுக்கும் தனமமையை விட்டு நிற்பதே சகமார்க்கம், பொறிகளை அடக்கும் யோகியின் மனதில் சிவன் வந்து பொருந்துவான், 3) சற்புத்திரமார்க்கம்: மகன் தந்தைக்கு செய்யும் தொண்டுபோல் பூசனைகள் செய்வது - கிரியை நெறி. சற்புத்திர மார்க்கம் எட்டு உறுப்புகளை கொண்டது அவை: 1, பூசை செய்தல், 2,, பாராயணம் செய்தல், 3. இறைவனை போற்றித் துதித்தல், 4, மந்திரஸ்மரணை, 5, தவ ஒழுக்கம், 6, உண்மை பேசுதல், 7. காமம் குரோதம் கோபம், மோகம் மதம், மாற்சரியம் என்கிற ஆறு பகைகளை நீக்குதல், 8. அன்புடன் அம்ச பாவனை மேற் கொள்ளல் , இவற்றை சற்புத்திரமார்க்கத்தின் இயல்புகள் எனலாம், பாடல் : பூசித்தல,, வாசித்தல், போற்றல்.......................... திருமூலர் கூறுகிறார் நான் நின்று தொழுவேன் எம்பிரானை நாளும் தொழுதபடி இருப்பேன் நீங்களும் அவனை மலர் கொண்டு வணங்குங்கள் சிவபெருமான் தன்னை தொழுவார் சிந்தையில் தோன்றி நிற்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார், பாடல்: நின்று தொழுவன், கிடந்து எம்பிரான் தன்னை................. 4) தாசமார்க்கம்: திருக்கோவில் சென்று தொணடு செய்யும் நெறி, கோவில்களில் உழவாரப்பணி செய்து முத்தி பெறுதல் கோயிலில் நல்ல விளக்கினை ஏற்றுதல், பூக்கொய்தல், அன்போடு மெழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்துதல், பூசைக்காலங்களில் மணிகளை ஒலிக்க செய்தல், திருமஞ்சன நீர் முதலியன கொணர்தல் இவை தாசமார்க்கப்பணிகள் என்கிறது திருமந்திரம் தெய்வம் ஒன்றென்றியிருப்பதே இவரகளின் கொள்கை, தங்களுக்கு எதில் பற்று இருக்கிறதோ அதை ம்ட்டுமே இவர்கள் விரும்பி வழிபடுகிறவர்கள், சிவன் ஆயிரம் திருநாமம் கூறி வழிபடும் தேவர்கள் பக்கம் திரும்பாமல், தன் திருவடியை சிந்தையில் இருத்தி தன்னை கண்ணெனப் போற்றும் அடியார்க்கு பேரன்புடன் வெளிப்பட்டு அருள்கிறான் என்கிறார் திருமூலர், இறைவனை அன்புடன் இடைவிடாது சிந்தித்திருங்கள் அன்புக்கு ஆட்படுவான் நீலகண்டன் தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவற்கும் இறைவா போற்றி திருச்சிற்றமபலம் - ஓம் நமசிவாய ஓம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வெள்ளி, 13 ஜூன், 2014

‘மனம்போல வாழ்வு”


‘மனம்போல வாழ்வு” மனித மனம் மனம் மிகவும் அற்புதமான ஒன்று. இதில் என்ற இருக்கிறது? அது எதை நினைக்கிறது?எப்படிச் செயல்படுகிறது? என்பதை யாராலும் கூற முடியாது. மனம் புதிர் போன்றது. மனம் உடையவன் மனிதன். இன்றும் இம் மனித மனத்தை வைத்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நமது முன்னோர்கள் புதிராக விளங்கும் இம்மனித மனத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர். மனம்-வாழ்வு வாழ்விற்கு அடிப்படையாகவும், நலத்தையும் தருவது மனம். வாழ்க்கை மனத்தையே சார்ந்துள்ளது. பணம், பொருள், பொன், பதவி ஆகிய அனைத்தும் இருந்தாலுமை், மன நலம் ஒருவருக்கு வாய்க்கவில்லையெனில் வாழ்வு செம்மையாக அமையாது எனலாம். மனம் ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே வாழ்வு இனிக்கும். இல்லையெனில் துன்பமே. நம்முன்னோர்கள் மனதைக் குரங்கிற்கு ஒப்பிடுவர். குரங்கு எவ்வாறு ஓரிடத்தில் நிலைத்து நிற்காதோ அதுபோன்று மனம் ஒன்றில் நிலைத்து நிற்காது. மனம் ஒன்றைவிட்டு ஒன்று மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது. மனதை நல்வழிப்படுத்தினால் அனைத்துச் செயல்களிலும் வெற்றிபெறலாம். நமது மனம் எதைச் செம்மையாக நினைக்கிறதோ அது நன்றாக நடக்கும். நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீயது நினைத்தால் தீயதே நடக்கும் என்பர். நாம் ஒன்றில் வெற்றி பெறவேண்டும் என்று கருதினால் அதனைத் தீவிரமாகக் கருதி மனதை ஒருநிலைப்படுத்திச் செயலில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் எளிதில் வெற்றி பெறலாம். நன்கு திறமையாளனும்கூட மனதில் தன்னால் முடியாது என்று கருதத் தொடங்கினால் அவ்வாறே அவனது செயலும் தோல்வியில் முடிவுறுகிறது. வள்ளுவரும், ‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்.’’ என்று இதனைப் பற்றிக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. இத்தகைய அரிய கருத்தையே, ‘‘மனம்போல வாழ்வு” ‘‘எண்ணம்போல் வாழ்க்கை” என்ற பழமொழிகள் மூலம் நமது முன்னோர்கள் கூறிப்போந்தனர் எனலாம். மனம் எண்ணங்களை எண்ணுகிறது. எண்ணம் செயலாகிறது. செயல் வெற்றியைத் தருகிறது. நமது எண்ணங்கள் தீமைகளைப் பிறருக்கு விளைவிக்காதபோது நமது வாழ்வு சிறக்கும். எண்ணங்கள் தீயதாக இருப்பின் அதுபோன்றே நமது வாழ்வும் அமையும். இதனையே மேற்குறித்த பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. மனமும் – மாளிகையும் மனம் குறுகியதாக இருத்தல் கூடாது. அது நல்ல எண்ணங்களாலும், பெருந்தன்மையாலும், கருணையாலும் நிரப்பப் பெற்றிருக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நல்ல அமைதியான, மகிழ்வான வாழ்வினை வாழ முடியும். மனதில் குறுகிய, கோணல்தன்மையான எண்ணங்கள் விளையுமானால் அது தீரா நோய் போன்ற வாழ்வையே தரும். நாம் வாழும் இடம் சிறிதாக இருக்கலாம். வசதிகளின்றியும், விசாலமின்றியும், வளமின்றியுமிருக்கலாம். ஆனால் மனம் நன்றாக இருந்தால், நலமான எண்ணங்களால் நிரப்பப்பட்டிருந்தால் வாழ்வு இனிமையாக இருக்கும். ஔவையார் கூறியுள்ள, ‘‘நாடாகொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையாகின்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!’’ என்ற புறநானூற்றுப் பாடலில் இடம் எதுவாக இருந்தாலும் நல்மனமுள்ள மக்கள் வாழ்வதாக இருந்தால் அது நல்ல இடமாக மாறும். வளமுள்ள இடமாக இருந்து தீய மனமுள்ள மனிதர்களாக இருப்பின் அது நரகத்தைப் போன்ற இடமாக இருக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்த நமது முன்னொர்கள், ‘‘மனம் கொண்டதே மாளிகை’’ என்ற பழமொழியினைக் கூறி வாழ்க்கையை வளமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தினர் எனலாம். மேற்கண்ட கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியதாக இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மனம் – ஆசை மனம் ஆசைக்கு அடிமைப்படுதல் கூடாது. ஆசைக்கு அடிமையானால் மனம் துன்புறும். ஆசைக்குட்பட்ட மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டே அடங்காது அலைபாயும். அவ்வாசை போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாது. அதனால் மனதை ஆசைக்கு ஆட்பட வைக்காது ஒருநிலைப்படுத்தி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கின்றபோது வாழ்வில் அமைதியும் மகிழ்வும் ஏற்படும். இத்தகைய வாழ்வியல் பண்பாட்டை, ‘‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. போதும் என்ற மனப்பான்மை அரிய மருந்தாகும். இத்தகைய மனப்பக்குவம் ஒருவனுக்கு அமைந்துவிட்டால் வாழ்வு வசந்தமயமாகிவிடும் என்பதை தமது அனுபவத்தால் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர். மனம் – பேச்சு மனதிற்கும் பேச்சிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனம் நினைக்கின்ற நினைவே எண்ணமாகவும், பேச்சாகவும் வெளிப்படுகிறது. மனம் துன்பத்திலோ, குழப்பத்திலோ ஆழ்ந்து விடுமானால் பேச்சில் தெளிவு வராது. உளறலாக மாறும். சிலர் மனதில் நினைப்பதைப் பேசாது மறைத்து, வெளியில் வேறொன்றைப் பற்றிப் பேசுவர். அவ்வாறு பேசுவது தவறான ஒன்றாகும். மனதில் குழப்பமின்றித் தெளிவாக மனதில் நினைத்ததைச் சரியானவற்றறைப் பேசுதல் வேண்டும் என்பதை, ‘‘மனசுல ஒன்று வெளியில ஒன்றாகப் பேசக் கூடாது’’ என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறினர். இப்பழமொழியையே, ‘‘மனதுக்குள்ள ஒண்ணு வாய்க்குள்ள ஒண்ணு வைத்துப் பேசாதே’’ என்றும் வழக்கில் வழங்குவர். மனம் – வழி ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அதைப்பற்றி சிந்தனை செய்தல் வேண்டும். மனதிற்குள் அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் ஏதேனும் தீர்வு கிடைக்கும். தவறான நெறியில் செல்பவனும் பிறருக்குத் தீமை விளைவிப்பவனும் மனதில் தான் செய்வது சரியா? என்று சிந்தனை செய்தால் அவனுக்குச் சரியான நெறி புலப்படும். அவன் நன்னெறியில் செல்வான். இத்தகைய நன்னெறியை, ‘‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’’ என்ற பழமெழி எடுத்துரைக்கின்றது. இங்கு குறிப்பிடப்படும், ‘மார்க்கம்’ ‘நல்ல நெறி’ என்று பொருள்படும். நன்னெறியையே மார்க்கம் என்று வழக்கில் கூறுவர். மனம் ஒருநிலையில் இருந்தால் நல்ல நெறி-நல்லவழி புலப்படும். அலைபாயாத மனத்திலேயே நற்சிந்தனை எழும். மனதில் நற்சிந்தனை எழும்போதுதான் நல்வழி புலனாகும். அதனால் மனதை அலைபாயவிடாது ஒருநிலையில் வைத்து நன்னெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டுள்ளது நோக்கத்தக்கது. மன ஆழம் – கடல் ஆழம் உலகில் மிகவும் ஆழமானது கடல். அத்தகைய கடலின் ஆழத்தை அளந்தறிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக பல கடல்களின் ஆழத்தை மனிதர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். ஆனால் பெண்ணின் மன ஆழத்தை யாராலும் அளந்தறிய இயலாது. இதுவரை பெண்ணின் மனதை முழுதும் அறிந்து கொண்டவர்கள் யாருமில்லை எனலாம். இதனை, ‘‘கடல் ஆழத்தைக் கண்டாலும் காணலாம் பெண்ணோட மன ஆழத்தைக் காண முடியாது’’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழி பெண்ணிற்கு எதிராகக் கூறப்பட்டதோ? என்று கூட எண்ணுவதற்கு இடமுள்ளது. கடல் ஆழம் – பெண்ணின் மன ஆழம் இவற்றில் பெண்ணின் மன ஆழம் கண்டறிய இயலாது என்று கூறுவது பெண்களைக் குறைகூறுவதைப் போன்றுள்ளதாக அமைந்துள்ளது. நமது முன்னோர்கள் அவ்வாறு கூறியிரப்பார்களா? என்று ஆராய்ந்தால் அவர்கள் உளவியல் அடிப்படையிலேயே இப்பழமொழியைக் கூறியுள்ளனர் என்பது நன்கு புலனாகும். பெண்கள் என்ன கருதுகிறார்கள், எப்படி, எப்போது எவ்வாறு அது மாறும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. ஆண்களைச் சட்டென்று ்சில விஷயங்களைக் கூறி ஒரு கருத்தினை ஏற்றுக் கொள்ள வைத்துவிடலாம். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையுமோ, அல்லது நபரையுமோ நம்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் என்பதனையே இப்பழமொழி எணர்த்துகிறது. பெண்கள் அராய்ந்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவர். அப்படியே வந்தாலும் அது குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பர். இவ்வாறு பெண்களின் மனப்பான்மையைத் தெளிவுறுத்தவே உளவியல் ரீதியாக இப்பழமொழியினை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் எனலாம். மனதை நன்னெறியில் செலுத்தி, அலைபாய விடாது ஒருநிலைப்படுத்தி, நல்ல எண்ணங்களை மனதிற்குள் நிரப்பி நன்மை செய்து நல்வாழ்வு வாழ மனம் குறித்த இப்பழமொழிகள் நமக்கு உறுதுணையாக அமைந்திலங்குகின்றன எனலாம். http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

திருவாசகம் (Thiruvasagam) திருச்சிற்றம்பலம் திருவாசகம் தேடித் திருவடி வந்து சேர வழிகாட்டுகிறது திருவாசகம் . சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய சிவனைநாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல்,அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல்,அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல்,இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது. ”திருவாசகம் வேறு, சிவன் வேறு”,என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். “திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், “அழுதால் உன்னைப் பெறலாமே!” மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். ... சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது. சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் “கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க,” என்று ஆகமத்தைச்சிறப்பித்து விடுகிறார்.. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது.–தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”/கட்டாயம்படியுங்கள் பரப்புங்கள். தேனினும் இனிய திருவாசகத்தை நாம் இங்கு எல்லோரும் பாடவேண்டும்-மனிதன் இறைவனுக்குச் சொன்னதுதிருவாசகம்

திருஐந்தெழுத்தின் ஆற்றல் அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும் வல்லவாறு சிவாயநம வென்று நல்லம் மேவிய நாதன் அடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே .. நாவுக்கரசர் ஐம்பூதங்களினால் துன்பங்கள் ஏற்பட்டாலும், "சிவாயநம " என்று நல்லம் மேவிய சிவபெருமானாருடைய திருவடிகளை வணங்கினால் நம்மைத் தாக்க வரும் தீவினைகள் ஒழியும், நாம் செய்த தீவினைகளினால் நமக்கு துன்பங்கள் பல வகைகளில் வருகின்றன, இது தான் உண்மை, நோயினால் துன்பங்கள் வரலாம், ஐம்பூதங்களினால் ( நீர், நெருப்பு, காற்று, மண், ஆகாயம் ) இடி,மின்னல், பெருமழை பெருவெள்ளம், பெருங்காற்று தீப்பற்றுதல் பூமி அதிர்ச்சி இப்படி பலப்பல இன்னல்கள் நேரிடலாம். இவ்வகையான துன்பங்கள் வராமலிருக்க வேண்டுமானால் சிவாயநம என்று உச்சரித்தால் போதும் என்பது கடவுள்நிலை அறிந்து அம்மயமான திருநாவுக்கரசர் அனுபவ வாக்கு ஆகும், போலிச்சாமியார்களை நாடவேண்டாம், வெற்றுச் சடங்குகளில் பொருள் விரயம் செய்ய வேண்டாம் காலையில் 108 முறையும் நண்பகல் 108 முறையும் மாலையில் 108 முறையும் உறங்கப் போகும் முன் 108 முறையும் சொல்லி வருவதே நலம் பயக்கும், பேரிடி இடிக்கும் பொழுது சிவாயநம சிவாயநம என்று சொல்லவேண்டும், இடி நிச்சயம் சொல்பவர் மீது விழாது, சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை. திருசிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம் / தகவல் ; தமிழ் வேதம் மேலும் பல காண; http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

agathiyar padal


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 15 சைவ சாதனங்கள்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 15 சைவ சாதனங்கள் சரியை, கிரியை யோகம் ஞானம் இவை இறைவனை அறியவும் அடையவும் உதவும் சாதனங்கள். சரிளையாளர்கள் நாடு நகரந்தோறும் கோவில்களைத் தேடிச் சென்று இறைவனை வணங்குவர்,, அந்நிலையில் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் அவர்களுடைய நெஞ்சத்தையும் தனது கோயிலாக்கி கொள்வார். கிரியை வழியில் நிற்பவர் திருநீறு, ருத்ராட்சம் முதலிய சிவசாதனங்களை அணிந்து சிவவேடம் தாங்கி நிற்பர், இவர் பூசை முறைகளை செய்து வருவர், இவ்விரண்டும் புறத்தே வழிபடுமட முறைகள், யோகியரும் ஞானியரும் அகத்தே வழிபடும் முறைகளை பயன்படுத்துவர். வண்ண மலர்களையும், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களையும் சார்த்தி வணங்கினாலும், உடல் பற்றை விட்டு தியானிப்பவர்க்கன்றி,, தேன்போல் இன்பந் தரும் உச்சித் தளத்திருவடியை சேரமுடியாது என்கிறது திருமந்திரம், பாடல்: கானுறு கோடி கடிகமழ் சந்தனம்.............. யோகம் என்பது பொறிகளை அடக்கி, சித்தத்தை பிரமத்தில் நிறுத்துதல் ஆகும், கட்டுந்தறிபோல் உடலை ஆடாது அசையாது இருக்கச் செய்து, காற்று, மழை, மின்னல், இடி, மோதினும் பற்றிய கருத்தில் மாறாது சிவத்தை அறிபவர் சிவமயம் ஆனவர், பாடல் : நெறிவழியே சென்ற நேர்மையுள் ஒன்றி................. சிவனானவன் தேவர்களுக்கும், திருமால் பிரமனுக்கும் எட்டாத இடத்தில் இருப்பவன், ஆனால் யோகியால் அவனை அடைய முடியும் எப்படி? சொல்கிறார் திருமூலர் " பூவினற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவியணைந்த நடுதறியாமே", பூவினில் பொருந்திய மணம்போல் சீவனுக்குள்ளே சிவமணம் விளந்தது. அசைவற்ற சித்திரம் போல் மனதை சமநிலையில் வைத்து அறியவல்லார்க்கு சிவனை உணர்ந்தறிவது சாத்தியம் இது பாடலின் பொருள். ஞானம் என்பது தெளிவு, வீடு பேற்றுக்கான வழி " உலகம் மாயா காரியம் உலகமும் தான் பெற்ற சரீரமும் நிலைபேறுடைய திருவருளால் கிடைத்தன எல்லாம் அவனருள் என்றிருப்பது ஞானம், நெறியுடைய ஞானிக்கு சிரசில் சிந்தையில் அருவி நீர்ச் சலசலப்பு அமைந்திருக்கும், அந்த நீர்த் தொனி பேரருளாளனின் வரவை ஞானிக்கு புலப்படுத்தும் என்கிறது திருமந்திரம் பாடல் : அறிவும், அடக்கமும் அன்பும் உடனே............. ஞானம் பெற்றவன் நல்வினையினால் உண்டாகும் நற்பயனையும், பாவத்தால் விளையும தீய பயனையும் கடந்து நிற்பான், அவன் மும்மலக் குற்றங்கள்( ஆணவம், கனமம், மாயை, ) அவனே சித்தன், சிவமுத்தன், பாடல் : நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்............. ஞானத்தில் சிறந்தவனே மாமனிதன் என்கிறார் திருமூலர் ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டிலில்லை ஞானத்ததின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நாரின்மிக் காரே. " ஞானமே சிறந்த அறநெறி ஞானத்தைக் கொடுக்காத சமயம் ஏற்றதல்ல ஞானத்ரில் திளைப்பவரே மக்களில் மேலானவர் திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் ஓம் மேலும் பல காண: http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வியாழன், 12 ஜூன், 2014


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 14 தியான வழி - ஞான வழி தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் "தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே" தூங்கும் போது என்ன நிகழ்கின்றன என்று அறியாது இருப்பது போலத் தியான நிலையில் உலக விடயங்களை உணராது இருத்தலின் , அந்நிலையில் ஈடுபட்டிருந்த நிலையை தூங்கும் நிலையாகும், தூங்காமல் தூங்கி சுகம்பெறும் அமைதியான நிலையை தியானம் என்கிறார் திருமூலர், அந்நிலையில் இருப்பவர் இறைவனது இருப்பிடமான சிவலோகத்தையும், சிவனோடு ஒன்றியிருக்கும் யோகநிலையையும் அடைவர், இதனால் அவருக்கு அழியா இன்பத்தையும் பெறுவர் என்கிறார், மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம், மகான்கள் இடைவிடாது ஆற்றொழுக்காய் தியானித்து கொண்டிருக்கிறார்கள், தியானத்தில் கிடைக்கிறது ஆத்ம ஞானம், அதுவே மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாலமாகிறது, அது பொய்யில் இருந்து உண்மைக்கும் இருளில் இருந்து ஒளிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், நிம்மதியற்ற நிலையில் இருந்து நிலையான அமைதிக்கும், தீயஒழுக்கத்தில் இருந்து நல்லொழுக்கத்திற்கும் நம்மை நிலைமாற்றம் செய்கிறது, தியானத்தில் ஈடுபடுகிறவர் அமைதியும், ஒருமுகப்படத்திய அறிவும், கவனமும் கொண்டிருக்கவேண்டும், நுட்பமான பிரம்மத்தை நுட்பமனத்துடன் அணுகுங்கள், தியாகத்திற்கேற்ற சாத்வீக சூழ்நிலையை தோற்றுவித்துக் கொள்ளுங்கள், தியானத்ததிற்கு உகந்த நேரம் பிரம்ம முகூர்த்த காலை நேரமே உகந்தது, ஏனெனில் அந்நேரம் உங்கள் மனம் தெளிவாகவும், அமைதியாகவும, இருக்கும், பற்றுகளைப போலவே கவலைகளையும் ஒதுக்கியவர்க்கே தியானம் உண்டாகும், மனதை வழிக்கு கொண்டு வருவதற்கு கடுமையான போராட்டங்கள் வேண்டாம், எண்ணங்களை வலுக்கட்டாயமாக விரட்டியடிக்க முடியாது, எண்ணஙகள் தானாக வந்து, தானாகவே போய்விடும், என்று இயல்பாக இருந்து விடுங்கள், தியானப் பயிற்சி பழக்கத்தில் சரியாக அமையும். தியானத்தில் பொறுமை அவசியம், அதன் பலனை உடனே எதிர் பார்க்க முடியாது, சிலருக்கு பல ஆண்டுகள் வரைகூட ஆகலாம், பொறுமையுடன் பயிற்சி அவசியம், தியானப்பாதையில் தடைகள் நீங்கும், ஐயங்கள் தீர்வதும் படிப்படியாகவே நிகழும், தியானம் ஒரு யோகம், மோட்ச சாதனம், எண்ணங்களின் ஆற்றல் பெருகவும், நோக்கம் நிறைவேறவும் தியானம் உதவும், தியானம் என்கிற பெருநெருப்பில் தீய சக்திகள் அழிந்துவிடும், கீதையில் " தியான யோகத்தில் முன்னேற விரும்புகிறவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்று இருப்பது உபாயமாகிறது,"என்கிறது, மனம், புலன்கள் இவற்றை அடக்கி எதிலும் ஆசையில்லாமல் தனியொருவனாய் தன்னிடத்தில் இருந்து இடைவிடாது மனதை ஒடுக்க வேண்டும்,உள்ளதை உள்ளபடி அறிய ஏகாந்தம் அவசியம், தியானிப்பவர் நாசி முனையில் பார்வையை ஒருமுனைப்படுத்தினால் தடுமாற்றம் தூக்கம் ஏற்படாது, தியானத்தின் போது விருப்பு வெறுப்பு மகிழ்ச்சி துயரம், தீய நினைவுகள் இருக்கக் கூடாது, மனதில் வைராக்கியம் இருக்க வேண்டும், தியானத்தின் மூலம் யோகி தன்னுடைய ஆத்மாவை இறைவனுடன் இணைத்துக் கொண்டு அமைதி அடைகிறான், மிதமாய் உண்டு, மிதமாய உறங்கி, அளவோடு கர்மங்கள் செய்து, விழிப்போடு இருப்பவனுக்கு தியான யோகம் துக்க்ததைப் போக்கும், மனதை வசப்படுத்துவது கடினந்தான் ஆனாலல் பயிற்சினாலும், வைராக்கியத்தினாலும், அதை வசப்படுத்த முடியும், என்றார் பரமாத்மா, தியானம் பற்றி திருமந்திரம் இறைவனை இடைவிடாது சிந்தித்திருப்பது தியானம், சரீரத்தில் அக்கறை காட்டுகிறவர்கள் தங்கள் ஆன்மா குறித்து அக்கறை கொள்வதில்லை, அவர்கள் இறைவனை நினைப்பதில்லை, இறைவன் விளக்கமுறும் சிந்தையிலும், கவனம் வைப்பதில்லை, தியானம் என்பது இறைவனை சிநதித்தருப்பதன்றி வேறேயென்ன என்று கேட்கிறது திருமந்திரம், இதன் பாடல்: ஒரு பொழுதுன்னார் உடலோடுயிரை............ சுழிமுனை தியானம் குறித்து கீழ்கண்ட பாடல் மனத்து விளக்கினை மான்பட ஏற்றி சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்கும் திரயொக்கத்தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே, மனத்தில் விளஙகும் ஒளியை மேலே செலுத்தி சினத்து நெருப்பை நீக்குதல் வேண்டும், கருவி கரணங்களை வழிப்படுத்தி தூண்டவும் மனத்துள் விளங்கும் சிவம் மங்காத விளக்காகும், ஆயிரமான்ணட யோகத்திருந்தும் காணமுடியாத இறைவன் கண்ணிலும், இதயத்திலும், நிறைந்திருக்கிறான், கண்ணாடியில் உருவத்தை காண்பது போல் உங்கள் தியானத்தில் அவனை எளிதாய் நீங்கள் காணமுடியும் என்கிறார் ததிருமூலர், பாடல்: எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்............ இறைவன் ஒளிவடித்ததிலும், ஒலிவடிவிலும் தன்னை வெளிப்படுத்துவதை தியானிப்பவர் அறியமுடியும், தியானத்தை மேற்கொண்டவர் பத்துவித ஒலிகளை கேட்கிறார் , மணி கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு தும்பி, சங்கு, பேரிகை, யாழ் இவற்றின் ஒலிகள், நுட்ப ஒலிகளை அறியும், திறன் தியானத்தில உண்டாகிறது. பாடல் ; மணிகடல் யானை வார்குழல் மேகம்................. தியானம் செய்யும சாதகர் தனது கண் பார்வையை புருவ மத்தியில் செலுத்திருக்க வேண்டும் என்கிறார் திருமூலர், பள்ளி அறையிற் பகலே இருளில்லை கொள்ளி அறையில் கொளுந்தாமற் காக்கலாம் ஒள்ளிது அறியில் ஓர்ஓசனை நீளிது வெள்ளி அறையில் விடிவில்லை தானே. சகஸ்கரதளத்தில் விளங்குகறாள் அன்னை, அங்கே பேரோளி தீபம் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது, ஞானியரும், யோகியரும் அவ்வொளியை காண்பர் பேரின்பத்தை வழங்கும் பேரோளி அனுபவம் தியானத்தில் கிடைக்கும், ஆணவ இருட்டு அதிகரிப்பில் நெஞ்சம் இளைப்புறும், தியானத்தில் ஒளி மண்டலம் மூன்றிலும் பொருந்தி மேற்ெச்ல்ல அந்த இளைப்பு நீங்கும், தாமதம், இராசதம், சாத்துவிகம், என்கிற முக்குண தோசத்தில் உண்டாகும் இருள் தியானத்தில் நீங்கும், உச்சியில் ஒளி காணும், திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாய ஓம் மேலும் பலகாண: http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

புதன், 11 ஜூன், 2014


நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் தெய்வத்தின் துணையோடு நடைபெறுவதை அன்பர்கள் பலர் தமது அனுபவத்தால் அறிவார்கள். எனவேதான் துன்பங்களிருந்தும் அகால மரணங்களிளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்படி இறைவனை நாம் வேண்டுகிறோம். பொழுது புலர்ந்ததும் நமக்கு இன்னொரு வாழ்நாள் தந்த ஈசனை வாழ்த்தி வணங்க வேண்டும். விடியலில் நீராடி, வெண்ணீற்றை மெய்யில் பூசி, திருக்கோயிலை அடைந்து, அலகிட்டு,மெழுக்கும் இட்டுப்,பூமாலைகள் மற்றும் இண்டை கட்டி அடியிணைக்குச் சார்த்தி, "சங்கரா , நீலகண்டா, சம்புவே, சந்திரசேகரா, கங்காதரா" .... எனப்பல நாமாக்களால் பரவிக் கைகள் தலை மீதுற, கண்களில் நீர்மல்க வழிபடும் அடியார் நெஞ்சத்தைக் கோயிலாகக் கொள்வான் பரமேச்வரன். விடியற்காலத்தில் பொய்கையை அடைந்து, அதில் மூழ்கி நீராடுகையில் உன் கழலையே பாடுகின்றோம். நாங்கள் உனக்கு வழிவழியாக அடிமைசெய்யும் குடியில் பிறந்தவர்கள். உன் அருளால் மட்டுமே வாழ்பவர்கள். ஐயனே, தீயினைப் போன்று ஒளிரும் சிவந்த நிறம் கொண்டவனே, சிற்றிடையையும், அழகிய மைதீட்டிய கண்களையும் உடைய பெருமாட்டியின் மணவாளனே. எம்மை ஆட்கொண்டு அருளுவதும் உனக்கு ஒரு விளையாட்டே அன்றோ! நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன அல்லவா? எனவே எம்மை வருத்தாமலும் தண்டிக்காமலும் எம் பிழைக்கே இரங்கி அப்பிழைகளைப் பொறுத்துக் காப்பாற்றுவாயாக. இவ்வாறு இறைவனிடம் இத் திருவெம்பாவைப் பாடல் நமக்காகப் பரிந்து உரைப்பதுபோலத் தோன்றுகிறது. "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல் செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடம்கண் மடந்தை மணவாளா ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்." பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சிற்றில் பருவத்தில் , மணலால் வீடு (சிற்றில்) கட்டும் சிறார்கள் எவ்வாறு வேண்டுவார்கள் தெரியுமா? " நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பாதங்களால் அழிக்கலாமா? உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே? "சிற்றில் சிதையலே" என்று வேண்டுவதாகப் பாடல் அமைந்திருக்கும். இறைவனை நினையாமல் பொழுது போக்கி அவனைப் புறக்கணிப்பார்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவதானால் எத்தனை பேர் எஞ்சுவரோ தெரியாது. மழை அவன் தருவது. உணவும் அவன் தந்தது. செல்வமும் அவன் தந்தது. இப்படி எல்லாமே அவன் அருளால் மட்டுமே கிடைத்திருந்தும் நன்றி மறந்தவர்களாய் இருக்கிறோம். ஈச்வரனின் கோபத்திற்குப் பாத்திரர்கள் ஆகிறோம். அவன் கோபப்பட்டாலோ உலகம் தாங்காது. ஆகவே அவனைக் கோபிக்க வேண்டாம் என்று நமஸ்கரித்து வேண்டுகிறது ஸ்ரீ ருத்ரம். அதையே மாணிக்கவாசகரின் திருவாசகமும் " எய்யாமல் காப்பாய்" என்று பிரார்த்திக்கிறது.

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

திருமூலரும் திருமந்தும் / உபதேசம் 13 . பெரியோர் இயல்பு பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள் வற்றா தொழிவது மாகமை யாமே. பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது. கடுஞ்சொற் பேசுதற்குக் காரணமான வெகுளியை, அடக்கமின்றிப் பலகாலும் படபடத்து ஒலிக்கின்ற பல்லியாக உரு வகித்தார். அது மூக்கையும் நாக்கையும் மூடிக்கிடப்பதாகக் கூறியது, அவை இரண்டுமே எழுத்தொலி புறப்படும் இடமாய் இருத்தல் பற்றி. வெகுளியால் முணுமுணுக்கின்றவர்கட்குப் பேச்சுப் பெரும் பான்மையும் மூக்கின் துணையோடே நிகழ்தல் அறிக `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களுள் நடுவுநின்ற வெகுளியுளதாயின் ஏனை இரண்டும் நீங்கினவாகா ஆதலின், அவ்விரண்டையும் விட்ட மாகேசுரர் வெகுளியுடையராதல் கூடாது என்பதனை வலியுறுத்தற்கு, வெகுளி, காமமும், மயக்கமும் உடையாரையே பற்றிநின்று கடுஞ் சொற் பிறப்பித்தலை உடன் கூறினார். அதனானே, மாகேசுரர் கடுஞ் சொற் கூறலாகாமையும் பெறப்பட்டது. ஆளுடைய பிள்ளையார் சமணரால் இடப்பட்ட தீயைப் `பாண்டியன்பால் செல்க` என வெஞ் சொற் சொல்லியது` மாகேசுரராய அவர்க்குத் தகுவதோ` என ஐயுறாமைப் பொருட்டன்றே அவர், ``செல்க`` என வாளா கூறாது, ``பையவே செல்க`` எனப் பணித்தமையை எடுத்துக்காட்டி, ``பையவே `` என்றாராயினும் ``செல்க`` என்றது என்னை என்பார்க்கு. பயிர்வளர்வதற்கு நீர்போலச் சிவபத்தி வளர்வதற்குப் பொறை யுடைமை இன்றியமையாததாதலின் அதனை நீராக உருவகம் செய்தார். மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தைவித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையு மாறே. -தி.4 ப.76 பா.2 என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார். இதனால், `மாகேசுரர் பிறர் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும் பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும் கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக் கெல்லையி லாத இலயமுண்டாமே. காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள். பொருண்மையாவது உளதாந் தன்மையாதலின், பொருளை `உள்ளது` என்றார். இங்ஙனம் அன்றிக் கிடந்தவாறேகொண்டு, `பதம் செய்தால் உம்மிடத்துக் கூத்தனுக்கு எல்லையில்லாத ஒற்றுமை (இரக்கம்) உண்டாகும்` என உரைத்தலும் ஆம். வெகுளியுடைய உள்ளத்தில் அன்பும், அருளும் தோன்றா ஆதலின், அன்பையும், அருளையும் பொருளாக விரும்பும் சிவ பெருமான் அதற்கு முதலாகிய பொறையைப் பொருளாக விரும்புவன் இவ்வாறு, பொறையுடைமையை விதிக்கவே, அதனடியாகப் பிறக்கும் இன்னா செய்யாமையும் விதிக்கப்பட்டதாம். புலால் உண்ணாமையாகிய இயைபு பற்றி, கொல்லாமை முன்பே விதிக்கப் பட்டது. உயிர்களின் பக்குவதற்கு ஏற்றபடி உடலும் உள்ளத்திலும் பலவகையாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்க செய்து இறைவன் அவர்களை பக்குவப்படுத்து கிறான், பொறுமையை கைக்கொள்வது சிறப்பு உடையவர்க்கே இறைவன் திருவடியில் இன்புறுதல் உண்டாகும், பொறுமையின் மேன்ைமைய நாலடியார் (பொறையுடமைப் பகுதி ) பாடலி்ல் விளக்கம் கொள்ளலாம், அறிவதறிந்தடங்கி அஞ்சுவதஞ்சி உறுவதுலகுவப்பச் செய்து / பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது. தகுதியான நூல்களை ஐயந்திரபற கற்று அவை கூறும் நல்வழியில் ஒழுகி அஞ்ச வேண்டிய தீயவற்றிக்கு அஞ்சி, தமக்கு பொருத்தமான செயல்களை உலகம் கண்டு மகிழும்படி செய்து தாம்பெற்ற பொருட்களுடன் இனிதே வாழும் தன்ைம யுடையவர் எக்காலத்திலும் துன்பமடைவதில்லை. திருச்சிற்றம்பலம் / ஒம் நமசிவாயம் ஓம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

ஞாயிறு, 8 ஜூன், 2014

Margali Urcahvam


சனி, 7 ஜூன், 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 12 கொடுக்கின்ற மனம் வேண்டும் ( ஈதல்)


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 12 கொடுக்கின்ற மனம் வேண்டும் ( ஈதல்) ஈதல் இசைபடி வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிருக்கு ............ வள்ளுவர் ஏழைகளுக்கு வேண்டியதை தருக, அதனால் புகழ் பெருக வாழ்க, அப்புகழை தவிர மக்கள் உயிருக்கு நன்மை தருவது வேறு இல்லை, என்று ஈதல் என்ற மற்றொருவருக்கும் கொடுக்கும் உணர்வே உயர்வு என்கிறார், வள்ளுவர், தங்கள் தேவைக்கு உதவுகிறவர்களை மக்கள் வள்ளல் என்று புகழ்கிறார்கள், அந்த வள்ளலுக்குப் பொருளையும் கொடுப்பதற்கான அறச்சிந்தையையும் அமைத்தவன் கடவுளல்லவா! கடவுளை விடவும் கொடுக்கக் கூடியவர் யார்? ஈகை மனப்பான்மைக்கு இறைவனை விடவும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா? புறநானூற்று பாடலில் ஒருபாடல் பாரியும் மாரியும் ஒப்பிட்டு பாடும் கபிலர் என்ற புலவர் " பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவர் புகழ்வர், செந்நாப்புலவர் பாரி ஒருவனும் அல்லன், மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே" கொடுப்பதில் உலகம் சிறக்க பாரிமட்டும் இல்லை மாரியும் உண்டு என்பதை நினைவுறும் கபிலர் ஈகை மனம் மாரி போல பாரிக்கும் உண்டு என்று உவமைப்படுத்துகிறார், அன்பும் அறவுணர்வும் நல்லெண்ணமும் உள்ளவரால்தான் அடுத்தவருக்கு ஈயமுடியும் உண்மையில்ஈகை என்பது பிரதிபலலை எதிர்பாராது மற்றவருக்கு பயன்படுகிற விதமாய் நடந்து கொள்வது, தாகத்தில் இருப்பவருக்கு தண்ணீர் அளிப்பதும், துயரத்ததில் இருப்பவருக்கு ஆறுதல் தருவதும் பாதையில் கிடக்கும முள்ளையும கல்லையும் அகற்றி சீர் செய்வதும் நோயுற்ற வருக்கு மருந்து கொடுப்பதும் ஈகையே, தமக்கு ஒருவர் செய்த தீமையை மறந்து மன்னிப்பதும் ஒருவகை ஈகைதான். எல்லோரும் இறைவன் தோற்றம்தான், ஆனால் விழலுக்கு நீரிறைத்தால் நேரமும் பொருளும்ஆற்றலும் வீணாகிவிடும். சமயத்திற்கும், சமுதாய நிறுவனங்களுக்கும் கொடுப்பது நல்லது தான், ஆனால் அவற்றிலும் அசல் எது போலி எது என்ற அடையாளம் காண வேண்டியிருக்கிறது, ஈதலை தற்பெருமையின்றி, அமைதியாக செய்ய வேண்டும் கொடுப்பதன் மூலம் ஒரு நிறைவான இன்பம் கிடைக்கிறது என்பதற்காகவே கொடுக்க வேண்டும், ஈகையும் எளிமையும் இதயத்தை தூய்மைப்படுத்தும். கிடைத்ததைக் கொண்டு காலம் தள்ளுகிறவர்கள் கொடுப்பதன் மூலம் நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும், கொடுக்கிற மனமே ஒருவரை உயர்த்துகிறது,அது வெற்றியைத் தருகிறது. கொடு, கொடாமலிரு பாத்திரமறிந்து தான் கல்வியை தானம்செய்வார்கள் குருமார்கள். பண்பாளரை இனங்கண்டே பொருளை வழங்குவர் அறிவுடைய செல்வர்கள், கொடுக்கத் தகாதவருகுகு கொடுப்பதால் பயனில்லை, கொடுக்கத் தக்கவருக்கு வழங்காமல் இருந்தாலுமு நன்மையில்லை, என்கிறார் திருமூலர், பாத்திரம் , அபாத்திரம் என்று திருமந்திரம் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாத்திரம் என்றால் தகுதி, அபாத்திரம் தகுதியின்மை, யார் தக்கவர் யார் தகாதவர் என்பதை அறிந்து வழங்கவேண்டும், பாத்தரம் - தக்காருக்கு தகாதலும், அபாத்திரம் - தகாதருக்கு தகுதலும் பாவமே என்கிறது பழமொழி எவ்வளவு பொருளாயினும் அன்பு மனத்தோடு , மலர்ந்த முக்தோடு கனிந்த மொழியோடு சிவஞானியர்க்கு வழங்கினால் செல்வம் பெருகும், போகமும் திருவடிப்பேறும் வாய்க்கும், தெரிந்தோ தெரியாமலோ அஞ்ஞானிகளுக்கு வழங்கினால் இம்மையிலும பயனில்லை மறுமையிலும் இன்பம் கிட்டாது, பாடல்: திலமத்தனை பொன் சிவஞானிக்கீந்தால் ........... நல்லார்க்கு ஈவதால் பயனுண்டு என்கிற திருமூலர் அல்லார்க்கு ஈவதால் பயனில்லை என்பதையும் இங்கே தெளிபடுத்துகிறார், நீங்கள் மலட்டு பசுவிற்கு அக்கறையோடு தீவனமிட்டாலும் அதனிடம் பால் கறக்க முடியாது, ஒழுக்கமும் விரதமும் இல்லாதவர்க்கு ஒன்றை கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை,என்கிறது திருமந்திரம் பாடல்: கோல வறட்டைக் குனிந்து குளகிட்டு..... யோகத்திற்கானவைகளை அறிந்து அன்பு உடையவர்களுக்கே தானம் செய்யவேண்டும், இதனையே வள்ளுவரும் ஈகை என்னும் அதிகாரத்தில் " வறியார்க்கென்று ஈவதே ஈகை, மற்று எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து " குறள், பொருள் இல்லார்க்கு கொடுப்பதே ஈகை , மற்றையோருக்கு கொடுப்பன எல்லாம் அளவிட்டுக் கொடுத்து திரும்ப வாங்குவதற்கு சமமாகும் என்கிறார் திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் - http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வியாழன், 5 ஜூன், 2014


பைரவ வழிபாட்டு மகிமை நேரடியாக மோத முடியாத, மோத விரும்பாத எதிரிகளை – ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள வைக்க , உங்களுக்கு தேவையான ஆன்ம பலம் அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ காலபைரவர். ஸ்ரீ பைரவ அவதாரம் அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான். இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர். தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர். அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார். அதன்படி, 1)அசிதாங்க பைரவர் + பிராம்மி 2)ருரு பைரவர் + மகேஸ்வரி 3)உன்மத்த பைரவர் + வாராஹி 4)குரோதன பைரவர் +வைஷ்ணவி 5)சண்டபைரவர் + கவுமாரி 6)கபால பைரவர் + இந்திராணி 7)பீஷண பைரவர் + சாமுண்டி சம்ஹார பைரவர் + சண்டிகா ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர். பைரவரை வழிபட்டு வெற்றிகள் அடையுங்கள்

மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசி ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள் ஏதும் நிகழாமல் அமைதிப் பூங்காவாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக மத, இனக் கலவரங்கள் நிகழாமல் இருக்க வேண்டும். நாட்டை ஆளும் மன்னர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் மன்னனே மதம் மாறி ஒருபக்கமாகச் சாய்ந்தால், நாடு என்னவாகும்? நாட்டில் குழப்பங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. இதுதான் பாண் டிய நாட்டில் நிகழ்ந்தது. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கேற்ப, மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; சைவர்கள் மிக்க துன்பமடைந்தார்கள். இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள். நாடும் மக்களும் மன்னனும் இப்படித் திசைமாறிப் போவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என எண்ணினாள். அதனால் அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள். சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்தார்கள். அவரால்தான் பாண்டிய நாட்டையும் மன்னனையும் மக்களையும் சமணர்களிடமிருந்து மீட்க முடியும் என்பதையும் உணர்ந்தார்கள். எனவே ஞானசம்பந்தரிடம் இந்தச் செய்தியைச் சொல்லும்படி தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லி அனுப்பினார்கள். பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்ட திரு ஞானசம்பந்தர், திருநவுக்கரசரை அடைந்து, பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் அழைத்த விஷயத்தைக் கூறினார். இதைக் கேட்ட நாவரசர் திடுக்கிட்டார். சமணர்களின் வஞ்சனையை நன்கறிந்தவர் அல்லவா? “பிள்ளாய்! அந்த சமணர்களின் வஞ்சனையை நான் நன்கறிவேன். நானே அவர்களால் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளானேன் தெரியுமா? மேலும் நாளும் கோளும் சரியில்லை.அதனால் தாங்கள் அங்கு செல்வது உசிதமாகத் தோன்றவில்லை” என்றார். அதைக் கேட்ட சம்பந்தர் “அப்பரே! நாம் பரவுவது நம் பெருமான் திருவடிகள் என்றால் நாளும் கோளும் நம்மை என்ன செய்யும்? ”… ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே’’ என்று ‘கோளறு பதிகம்’ பாடி நாவரசரை சமாதனம் செய்தார். இதன்பின் சம்பந்தர் நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார். Mankaiyarkarasi இதேசமயம் மதுரையில் சமணர்களுக்குப் பல தீய சகுனங்கள் தோன்றலாயின. அவர்களுடைய பள்ளிகளிலும், மடங்களிலும் கூகை, ஆந்தைகள் அலறின. எனவே அவர்கள் மன்னனிடம் சென்று தங்கள் தீக்கனவைப் பற்றிக் கவலையோடு தெரிவித்தார்கள். மதுரை மாநகரம் முழுவதும் சிவனடியார்கள் மயமாகி விளங்குவதாகவும், மன்னன் கொடிய வெப்பம் மிகுந்த தழலில் வீழ்வது போலவும் கனவு கண்டதாகச் சொன்னார்கள். சிறிய கன்று ஒன்று தங்களை யெல்லாம் விரட்டியடிப்பதாகவும் கனவு கண்டார்களாம். இதையெல்லாம் மன்னனிடம் பதைபதைப்புடன் கூறினார்கள். இங்கே பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார்க்கும் குலச்சிறையார்க்கும் நன்னிமித்தங்கள் தோன்றின. “வண் தமிழ்நாடு செய்தவப்பயன் விளங்க சைவநெறி தழைத்தோங்க, பரசமயக் கோளரி வந்தான் வந்தான்” என்று சின்னங்கள் ஒலிக்க சம்பந்தர் வருவதைக் கேள்விப் பட்ட அரசி, சம்பந்தரை எதிர்கொண்டழைக்க குலச்சிறையாரை அனுப்பினாள். குலச்சிறையாரும் உவந்து சென்று சம்பந்தரை எதிர்கொண்டழைத்து மரியாதைகள் செய்து உபசரித்தார். ஆலவாய் அண்ணல் உறையும் கோயிலைக் கண்ட சம்பந்தர் அண்ணலை வணங்கினார். பின் அரசியைப் பாடினார். மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்தோறும் பரவப் பொங்கழலுருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார். சம்பந்தர் வந்ததை அறிந்த பாண்டிமாதேவி தானும் சென்று அவரை வரவேற்று சம்பந்தரின் அடிகளில் வீழ்ந்து, “யானும் என் பதியும் என்ன தவம் செய்தோமோ?’’ என்று வணங்கினாள். சம்பந்தரும், “சூழுமாகிய பரசமயத்திடைத் தொண்டு வாழு நீர்மையீர்!’ உமைக் காண வந்தனம்” என்றார். சம்பந்தரும் அவருடன் வந்த அடியவர் களுக்கும் தங்க திருமடம் ஏற்பாடு செய்தார்கள். பாண்டி மாதேவி மிக்க அன்போடு அவர்களுக்கு விருந்தளித்தாள். அடியார்கள் ஓதிய திருப்பதிக ஓசை பொங்கியெழுந்தது. இரவில் சம்பந்தரும் அடியார்களும் திருப்பதிகங்கள் பாடிய முழக்கத்தைக் கேட்ட சமணர்கள் பொறாமையால் மன்னனிடம் சென்று, சம்பந்தரையும் அவருடைய சீடர்களையும் மதுரையை விட்டு விரட்ட வேண்டும் என்றார்கள். சம்பந்தர் தங்கி யிருக்கும் மடத்திற்குத் தீ வைத்தால் சிறுவனான சம்பந்தன் பயந்து மதுரையை விட்டு ஓடி விடுவான்.” என்றார்கள். இதைக் கேட்ட மன்னனும் சற்றும் யோசிக்காமல் அப்படியே செய்யலாம் என்றான். சமணர்கள் சென்ற பின் மன்னன் கவலையோடு படுக்கையில் சாய்ந்தான். மன்னனுடைய முகவாட்டத்தைக் கண்ட பாண்டிமா தேவி “முகவாட்டம் எதனால் வந்தது?” என்றாள் “காவிரி நாட்டிலுள்ள சீர்காழி யில் பிறந்த ஒரு சிறுவன், சங்கரன் அருள் பெற்று இங்கு வந்திருக்கிறானாம். இங்குள்ள அமணர்களை வாதில் வெல்லப் போகிறானாம்” என்றான் மன்னன். இதைக் கேட்ட அரசி, “அப்படித் தெய்வத் தன்மை பெற்ற அவர் வாதில் வென்றால், வென்றவர் பக்கம் சேர்வோம்” என்றாள். பின் அமைச்சர் குலச்சிறையாருடன் தன் கவலையைப் பகிர்ந்து கொண்டாள் அரசி. “சமணர்கள் என்ன தீங்கு சூழ்வார்களோ? சம்பந்தருக்குத் தீங்கு ஏதும் வந்து விடக் கூடாது. அப்படி அவருக்குப் பெருந் தீங்கு ஏதும் வந்தால் நாமும் உயிரை விட்டுவிட வேண்டும்” என்றாள். இதற்குள் சமணர்கள் தங்கள் மந்திரத்தால் திருமடம் தீப்பற்ற மந்திரம் ஓதினார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. மன்னன் இதையறிந்தால் தங்கள் பெருமை மங்கி விடும் என்று தாங்களே மடத்தில் சென்று அழல் வைத்தார்கள். ஆனால் சிவனடியார்கள் அத் தீயை மேலும் பரவவிடாமல் உடனே அணைத்தார்கள். இதை சம்பந்தரிடமும் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட திரு ஞானசம்பந்தர் மிகவும் வருந்தினார். இந்தத் தவறுக்குக் காரணம் மன்னரின் நிர்வாகமே. மன்னனே பொறுப்பேற்க வேண் டும் என்று நினைத்து அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாத்தும், அமைச்சர் குலச்சிறையாரின் அன்பினாலும் அரசன்பால் குற்றம் இருந்ததாலும், அவன் மீண்டும் சைவநெறியில் சேரவேண்டும் என்பதாலும் சம்பந்தரின் திருக் கைகளால் திருநீறு பூசும் பேறு பெறப் போவதாலும் ‘பையவே செல்க’ என்றார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது. மன்னனுக்கு வந்த நோயை அறிந்த அரசியும் அமைச்சரும் மருத்துவர்களை அழைத்து வந்து காட்டினார்கள். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோய் குறையவேயில்லை; மாறாக அதிகரித்தது. மன்னன் நோய்வாய்ப்பட்டதை அறிந்த சமணர்கள் நோயின் காரணத்தை உணராமல் தாங்கள் அறிந்த மந்திரங்களைச் சொல்லி மயிற்பீலி கொண்டு மன்னன் உடலைத் தடவினார்கள். ஆனால் அம் மயிற்பீலிகள் எல்லாம் வெப்பத்தால் கருகித் தீய்ந்தன. தங்கள் கெண்டியில் இருந்த நீரைத் தெளிக்க அந்நீர் கொதிநீர் போலப் பொங்கி யது. இதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்து சமணர்களை அந்த இடத்திலிருந்தே விரட்டி விட்டான். மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும், சம்பந்தருக்குச் செய்த தீமையின் காரணமாகவே மன்னனுக்கு இந்த நோய் வந்திருக்கிறது என்று தெளிந்து மன்னனிடம் தங்கள் எண்ணத்தை வெளியிட்டார்கள். இந்த நோய் சம்பந்தப் பெருமான் அருளால் தான் குணமாகும் என்றும் உணர்த்தினார்கள். எப்படியாவது தன் உடல் வெப்பம் குறைந்தால் போதும் என்று எண்ணிய பாண்டிய மன்னன் ”சம்பந்தர் அருளால் இந்த நோய் தீர்ந்தால் நான் அவர் பக்கம் சேர்வேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவரை அழைக்கலாம்” என்றான். Mankaiyarkarasi2மன்னனின் துன்பத்தைத் தீர்ப்பதற்காக பாண்டிமாதேவி சிவிகையில் ஏறி சம்பந்தர் இருந்த மடத்திற்குச் சென்றாள். சம்பந்தரைக் கண்டதும், உரை குழறி, மெய் நடுங்கி, என்ன செய்வதென்று தெரியாமல் அடியற்ற மரம் போல் அப்படியே அவர் கால்களில் வீழ்ந்து பணிந்தாள். “ஐயனே! சமணர்கள் செய்த தீததொழில் போய் மன்னனிடம் கொடு வெதுப்பாய் நிற்கிறது. தாங்கள் சமணர்களை வென்று அருளினால் எங்கள் உயிரும் மன்னன் உயிரும் பிழைக்கும்” என்று வேண்டினாள். இதைக் கேட்ட சம்பந்தர் “ஆவதும் அழிவதும் எல்லாம் அவன் செயல். நீங்கள் அஞ்ச வேண்டாம். சமணர்களை வாதில் வென்று மன்னவனைத் திருநீறணியச் செய்கிறேன்” என்றார். இதன்பின் அரசி, அமைச்சருடன் அரண்மனை சென்றார் சம்பந்தர். அங்கு மன்னன் இவரைப் பீடத்தில் அமரச் செய்தான். இதனால் சீற்றமடைந்த சமணர்கள் சம்பந்தரை வாதுக்கு அழைத்தார்கள். சமணர்களின் கூட்டத்தையும் சீற்றத்தையும், பாலனான சம்பந்தரையும் பார்த்து மங்கையர்க்கரசியார் மிகவும் கவலைப்பட்டாள். ஆனால் சம்பந்தரோ மிகவும் தன்னம்பிக்கையோடு. “தேவி! தாங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் பாலனென்று எண்ண வேண்டாம். இந்தச் சமணர்களை நான் நிச்சயம் வெல்வேன்’’ என்று ஆறுதல் கூறி, மானின் நேர்விழி மாதராய்! வழுதிக்கு மாபெரும் தேவி! கேள் பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீ பரிவெய்திடேல் ஆனைமாமலி ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர் ஈனர்களுக்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே! ஆலவாய் அரன் அருளால் இவர்களை வெல்வேன் என்று ஆறுதல் அளித்தார். இதன்பின் மன்னனுடைய இடப் பக்கத்தை சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவியும், மந்திரித்தும் குணப்படுத்துவதாகவும், மன்னனின் வலப்பக்கத்தைச் சம்பந்தர் திருநீறு கொண்டு தடவியும் ‘நமசிவாய’ மந்திரத்தை ஜபித்தும் குணப்படுத்துவது என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். சம்பந்தர் அரன் தாளை நினைந்து ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே’ என்று தொடங்கி பதிகம் பாடி மன்னனின் வலப்பக்கம் திருநீறு பூசினார். திருநீறு பூசப் பூச வெப்பம் படிப்படியாகக் குறைந்து வெப்ப நோய் தீர்ந்தது. ஆனால் இடப்பக்கம் வெப்பம் அதிகமானது. சமணர்களால் மன்னனின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை. நோய் மேலும் மேலும் அதிகரித்தது. மயிற்பீலியால் தடவிப் பார்த்தும் மந்திரங்கள் உரு வேற்றியும் பலனில்லை. ஒரே உடலில் வலப்பக்கம் குளிர்ச்சியாகவும் இடப்பக்கம் வெப்பம் அதிகமாகவும் இருப்பதைக் கண்ட மன்னன் ஆச்சரியமடைந்தான். “என்னை விட்டுச் செல்லுங்கள்” என்று சமணர்களைச் சீறினான் மன்னன். சம்பந்தரிடம், “என்னை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே! இந்த வெப்ப நோயை முழுமையாகப் போக்க அருள் செய்ய வேண்டும் என்று அடிபணிந்தான். இதைக் கண்ட அரசியும் அமைச்சரும் மனமகிழ்ந்தார்கள். சம்பந்தர் அருளால் மன்னனுடைய வெப்பு நோய் முற்றும் நீங்க, மன்னன், “ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்” என்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான். ஆனால் சமணர்கள் அவ்வளவு எளிதில் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. மறுபடியும் சம்பந்தரை அனல்வாதம், புனல்வாதம் செய்ய வரும்படி வற்புறுத்தினார்கள். சம்பந்தர் சற்றும் தயங்காமல் அனல்வாதம், புனல்வாதம் செய்ய ஒப்புக் கொண்டார். அதன்படி சமணர்களும், சம்பந்தரும் தங்கள் தங்கள் ஏடுகளைத் தீயிலிட்டனர். சம்பந்தருடைய ஏடுகள் பசுமையாயிருக்க, சமணர்களுடைய ஏடுகள் தீயிலிட்ட பஞ்சு போல் பொசுங்கின. இதன்பின் இருவரும் தத்தம் ஏடுகளை ஓடும் வைகை ஆற்றில் போட்டார்கள். சம்பந்தருடைய ஏடுகள் தண்ணீரை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்று வழங்கப்பெறும் இடத்தில் கரையேறின. சமணர்களின் ஏடுகள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. இந்தக் காட்சிகளைக் கண்ட மன்னனும் மக்களும் அதிசயித்தனர். சம்பந்தரை வாழ்த்தி முழக்கமிட்டனர். மன்னனும் தன் தறை உணர்ந்தான். “ஆலவாய் அண்ணலே! அமணர்கள் மாய்கையால் மயங்கி நானும் உன்னை மறந்தேன். தக்க சமயத்தில் ஆளுடைப் பிள்ளையை அனுப்பி என்னை ஆட்கொண்டாயே!” என்று பணிந்தான். திருநீற்றின் மகிமையை உணர்ந்து சிவ பக்தனானான்; நாட்டில் சைவம் தழைக்க ஆரம்பித்தது. பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார்.

திருமூலர் திருமந்திரம் - உபதேசம் 11 தெய்வ நிந்தை செய்யாதீர்கள் அனைத்துக்கும் ஆதியானவன் இறைவன், எவ்வகை உயிர்க்கும் அவனே தந்தையும், தாயும் தனக்கு நேரிடும் துன்பங்களுக்குத் தன்னுடைய ஊழ்வினையே காரணம் என்று எண்ணாது தன்னைப் படைத்தவன் மீது சினம் கொள்வர் கீழோர், பரமனை பழித்துரைக்க அவர்கள் தயங்கவதில்லை, "தெய்வநிந்தை தீது பயக்கும்" என்கிறது திருமந்திரம் தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளிவு உறார் அமரா பதி நாடி எளியன் என்று ஈசனை நீசர் இகழின் கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே. ,,, என்பது பாடல் தனது திருவடியைச் சிந்தையில் தேக்கியவர் உள்ளத்தில் சிறந்து விளங்குகிறான் இறைவன், அவனைத் தொழுது விண்ணவர் முதலானவர் அவனது அருளை பெறுவர், திருவடி உணர்வில்லாதவரோ எளியன் இவனென்று இகழ்ந்துரைப்பர். பூனையிடம் அகப்பட்ட கிளிபோல் அவர்கள் அழிவர் " அசுர தேவாதியர் அறியாமையால் செருக்குற்று பகைத்துக் கெட்டார்கள், இறைவனை பொய்யாகவும் பகைக்கூடாது. இறைவனிடம் பகை கொண்டவரால் எப்படி அவனை அடைய முடியும்? என்கிறார் திருமூலர். பாடல்: அப்பகையாலே அசுரரும் தேவரும்,,,,,,, ) தங்கள் நெஞ்சிலும், நினைவிலும் மங்கையரைச் சுமந்து அவர்களுடன் ஊடியும் கூடியும் சிற்றின்பத்தில் திளைப்பவர் தவப்பேறில்லாதவர். இறைவனைப் பற்றிய எண்ணம் அவருள் சிறிதும் இருக்காது, காரணம் மெய்யுணர்வு கைவந்த தவத்தோர் உணரும் முறை அவர்களிடம் இல்லாமல் போய்விடுகிறதுதான், ஞானியரை நிந்திக்கலாகாது சிவனைத் தொழுதேத்தும் சிவனடியார்கள் சிவஞானியர் எனப்படுவர். அவர்களை நிந்திப்பவர் நல்வினைப் பகுதி நீங்கி துன்புறுவர். சிவனடியாரை வணங்கி இணக்காமாய் நிற்பவர் தமது தீவினை நீங்கி இன்புறுவர், என்கிறது திருமந்ததிரம் பாடல் : ஞானியை நிந்திப்பவனும் நலனென்றே...........) சிவஞானியைப் பற்றி நிற்பவர் சிவயோகத்தை அடைவர், சிவனடியாரை இழித்துரைப்பவர் தாழ்ந்த நரகத்தை அடைய வழி செய்து கொண்டவராவர். பெரியோரைப் பிழையாமை என்கிற குறள் அததிகாரமும் பெரியோரை இகழ்வது தவறு என்று கூறுகிறது. "ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும், உயர்ந்த நோன்புபளை கடைப் பிடித்த அருந்தவர் சீற்றம் கொண்டால் தேவருலகத் தலைவனும் தன் சிறப்புகளை இழந்து கெடுவான் என்பது பொருள் திருச்சிற்றம்பலம் .... ஓம் நமசிவாயம் மேலும் பல நாட : காணவும் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com