ஞாயிறு, 16 அக்டோபர், 2011

பக்தி & வழிபாடு

பக்தி
:- பக்தி என்பது காந்தத்தோடு இரும்பு ஈர்ப்பது போல், நதி கடலில் சங்கமம் ஆவதுபோல் , நம் மனம் தூய உள்ளத்தோடு எதையும் வேண்டாது கடவுடளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற பரமாத்மாவிடம் தன்னை யறியாமல் போய் நிற்க வேண்டும். இதைக் கொடு,உனக்கு இன்ன செய்கிறேன் என்று பேரம் பேசி வேண்டுதல் கூடாது, ஆனாலும் தனது கஷ்டங்களை ஆண்டவனிடம் - மனத்தால் வேண்டி கூறி அழுது புலம்பிடலாம். என்னை இந்த தீங்கிலிருந்து நீக்கி என்னை ஆட்கொள்ள வேண்டும் என வேண்டலாம்.பற்றுகளை நீக்கி பற்றற்ற நோக்கோடு இறைவன்பால் பற்று கொள்வதோடு பகவானிடம் மனதை செலுத்தி பக்தியில் ஈடுபடவேண்டும், இப்படி சாதாரணமாக ஈடுபடும் பக்தி தீவிரமாகி நாளடைவில் சதாகாலமும் பகவானை பற்றியே நினைப்பதிலும் அவன் பகழ் பாடுவதிலுமே நம் மனம் திருப்தி கொள்ளும், நாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து இறைவன்பால் ஈற்கப்பட்டு பித்தனாகி விடுவர், அதுவே முழுமை பெற்ற பக்தியின் உச்ச நிலை, ( நன்றி - கோரக்கும்பர் -கதை)பக்தி என்பது உறவல்லாத ஒன்றின் மேல் செலுத்தும் மரியாதையுடன் அன்புடன் செலுத்தும் பாச உணர்வே பக்தி , அன்பின் மிகுதியே பக்தி அன்பின் வழியது பக்தி அன்பின் வழியிலே ஆண்டவனை ஆட்கொள்ளுவது பக்தி , எனவே தாயுமானவரும் அன்பே சிவம் என்கிறார் பக்தியின் உச்ச நிலையில் ஆசை மோகத்தை பற்றற்று விடுதல் பக்தியின் சிறப்பு,ஆசைகள் மூலம் பாசம் பக்தியை பெற்று வேண்டற்ற ஆசைகளை விட்டோலிப்பதே பக்தியின் உச்சம், பக்தியின் உச்சத்திலே ஒருவன் நிம்மதி யடைகிறான். இதன் பொருட்டே வான்புகழ் வள்ளுவரும் " யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இதன் பொருள்: எந்த பொருளிலிருந்து பற்று நீங்கியவான இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை, என்கிறார். மேலும் இன்னொரு குறளில் " பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்ற விடற்கு" இதன் பொருள் : பற்றில்லாதவனாகிய கடவுளை பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ள பற்றுக்களை விட்டோழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும். என்கிறார், அன்பின் வழியதே பக்தி . பக்தியே - அன்பு - அன்பே - சிவம். இறைவனிடம் கொள்ளும் அன்பே பற்றற்ற நிலையை உருவாக்கும் எனவே ஞானிகளும் யோகிகளும் அத்தனையும் பற்றற்ற நிலையிலேயே இறைவனிடம் முக்தி பெற்றுள்ளது நம் வரலாறு கூறும் பக்தி நேறியாகும்,பக்தி மூலம் தான் அன்பு பெருக்கெடுக்கிறது, எனவே வள்ளாளார் பெருமான் அன்பே சிவம் என்கிறார். பக்தியை அடிப்படையாக கொண்டு இறைவனை அடைய முயற்சிக்கும் செயல்பாடுகளே தியானம், யோகம் போற்றிபாடுதல் மந்திரங்கள் கொண்டு செயல்படும் முறைகளும் வழிபாடு முறையில் அடங்கும்,இதில் தியானம் - தியானத்தின் மூலம் மனிதன் தன் மனதை ஒருநிலைப்படுத்தி மனத்தினை இறைவான்பால் செலுத்தி அவனுடைய புகழை இன்னிசையால் பாடி அழுவது பக்தியின் உச்சகட்டமே, இறைவன்பால் அன்பு கொள்ள பக்தி, தியானம், வழிபாடு, என்பவற்றில் தியானமும் முக்கிய அம்சமாக உள்ளது, யோகி பரமகம்சரும், விவேகானந்தரும், அன்னை சாரதா தேவியும் தியானத்தின் மூலம் இறைவனை நேசித்து இறைவான்பால் அன்புசெலுத்தியது யாவரும் அறிந்ததே. தியானத்திலிருந்து வந்ததுதான் யோகா, யோகா மூலம் மனதை ஒருநிலைப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சியாகவும் கையாளப்படுகிறது, ஆன்மீகத்திற்கு ஆத்ம யோக தியானத்திற்கு அடுத்து தானமும் இறைவழிபாட்டிற்கு முக்கியமாக அமைகிறது, அன்பின் வழியேதே தான தர்மமும் தர்மத்தின் வழியே அன்பும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வந்ததுதான் 63 நாயன்மார்களின் சரித்திரம், இந்த சிவத் தொண்டர்கள் அனைவரும் சிவத் தொண்டோடு அடியார்களுக்கு அன்பு செலுத்துவதிலும் அடியார்களுக்கு வேண்டியதான தர்மங்கள் செய்வதிலும் தங்களுடைய உயிர் பொருள் ஆவி மற்றும் தனது வாரிசுகளின் உயிரையும் கொடுக்க தயங்காது சிவத்தொண்டு செய்துவந்தனர், இதன் மூலம் அன்பு தர்மம் நன்கு தெளிவாகிறது, தன்னுயிர் ஈந்து பிற உயிர் பேணுதல் சிவ தத்துவம் வலிமையாக உணர்த்துகிறது,இந்த தானம் தான் இன்றைக்கும் மனித நேயமாக மாறிவளர்ந்து வருகிறது,இதன் அடிப்படையில்தான் கண்தானம், குருதி தானம், பூமிதானம் மற்றும் இன்றைய மதிய உணவு திட்டம் இலவச அரிசி திட்டம் வீட்டு மனை திட்டம் எல்லாம் மனித நேச உணர்வுகளே, எனவே பக்திக்கு தான தர்மம் தியானம் யோக எல்லாமே அடிப்படையாக உள்ளது, வழிபாடு:- நம் ஆன்றோர் மனிதனின் உணர்வுகளை நான்கு வகையாக பிரித்துள்ளனர், அவை 1. தூக்கம் 2. இச்சை உணர்வு 3. பசி உணர்வு 4. அச்ச உணர்வு, இவைகளில் முன் மூன்று உணர்வுகளின் போது இறைவன் எண்ணம் வருவதில்லை. 4வது ஆகிய அச்ச உணர்வு ஏற்படும் போது தான் இறைவனின் சிந்தனையும் வழிபாடும் உண்டாகிறது.வழிபாடு என்பது அச்ச உணர்வில் ஏற்படுகிறது. சமயக்குறவர்களில் ஒருவரான நாவுக்கரசரும் தனது தீராத வயிற்று வலி (சூலை நோய்) காரணமாக எம்பெருமானிடம் தனது வலியை நீக்க வேண்டி அழுது வேண்டுவதோடு எவ்வாறேல்லாம் வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் பாடலோடு கூறுகிறார். எனவே வழிபாடு என்பது அச்ச உணர்வில் ஏற்படுகிறது, கடவுள் வழிபாடு என்பது பற்றற்ற நிலையினைக் காண ஒரு பயிற்சி முறை, உண்மையான வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமன்று, கடவுள் நெறியில் தம்மை வழிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது குற்றங்களினின்றும் விலகி நிறை பெற முயற்சி செய்தல்; துன்பத்திற்குரிய காரணத்திலிருந்து விலகி இன்பத்தின் களங்களை அடைதல்; ஆகியன கடவுள் வழிபாட்டின் உயிர்க் கொள்கைகள், இதை நாம் எளிதில் பெற இயலாது, இவற்றைப் பெறுவதற்கு நாம் செய்யும் முயற்சிகளே வழிபாட்டுச் சடங்குகள், பிராத்தனை அல்லது வழிபாடு என்பது இறைவனை மகிழ்விப்பதன்று, நமது வேண்டுதலை வேண்டி இறைவனிடம் முறையிடுதல் வேண்டும். உயிர்கள் தம் குறைகளை - குற்றங்களை அறிந்து அவற்றினின்றும் விடுதலை பெற நிறைநலம் பெற எண்ணி எண்ணி அழுவதே வழி பாடு " எண்ணத்தின் வழியே மனிதன் வாழ்வு" என்று உளநூல் தத்துவமும் உடன்படுகிறது, மாணிக்கவாசகர் உயிரின் குறை நிலையினையும், கடவுளின் நிறை நிலையினையும் ஒப்பு நோக்கிக் சிந்தனை செய்யத் தூண்டுகின்றார், குற்றங்களினின்று நீங்கி நிறை நலம் பெற வழி நடத்துகின்றார். மகாகவி டென்னிசனும் " பரம்பொருளை நோக்கி உயிர்கள் அழும் அழுகையே வழிபாடு" என்கிறார், ஆக வழிபாட்டால் உயிர்கள் குற்றங்களினின்று விடுதலை பெறுகின்றன; பகைமை அகல்கிறது. அன்பு சூழ்கிறது, அவ்வழி மனம் குளிர்கிறது, அதனால் நாமும் மழை வேண்டி வழிபாடு செய்யும்போது, வாழிபாட்டின் மூலம் காற்று மண்டலம் குளிர்ச்சி அடைகிறது, வான் புயலை நீர்த்திவலைளாக மாற்றும் குளிர்ந்த காற்றுக் கிடைக்கிறது, மழை பொழிகிறது,இதுவே தத்துவம் ஆகவே, வழிபாடு என்பது உயிரை வளர்க்கும் நெறி உயிரைத் தூய்மைப்படுத்தும் நெறி. மேலும் திருநாவுக்கரசர் இறைவனின் வழிபாட்டு முறைகளையும் தன் பாடல்களோடும் தன் துன்பங்களை கூறும் முறையிலேயே வழிபாட்டு முறைகளையும் விளக்கி கூறுகிறார், " சலம்பூ வோடு தூபம் மறந்தறியேன், தமிழோசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன், உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யில் பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! இப்பாடலில் சலம்பூ வோடு ஒற்ளை தூபம் ஏற்றுதல் வாழ்த்தி பாடுதல் என்பதனையும், மற்றும்ஒரு பாடல் மூலம் தூய காவிரி நன்னீர் கெர்ண்டு நன்னீராட்டல் குங்குமம் மற்றும் நறுமண பொருட்கள் ஏத்துதல், தோத்திரங்கள் பாடுதல் நறுமண மாலைகள் சாற்றுதல் போன்றவைகளை செய்யத்தவறி விட்டேன் என்று வழிபாட்டு முறைகளையும் கூறுகின்றார்,