வெள்ளி, 29 ஜனவரி, 2016

Sadhananda Swamigal: பஞ்சாட்சரம் - நமசிவாய

Sadhananda Swamigal: பஞ்சாட்சரம் - நமசிவாய: http://koshasrini.blogspot.in/2013/06/blog-post_4360.html பஞ்சாட்சரம் இருவகைப்படும். அவை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம். ‘ந’ காரத...

வியாழன், 28 ஜனவரி, 2016

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...

இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை....

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி - "ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?" இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று ஓர் அலறல்.
ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப்பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் என்னைக் காப்பாற்று என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.

பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க...
அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை.
சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?

அதற்குப் பறவைகள்,

எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான்
ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...

நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான்.
இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது.
சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது.

ஊஹும்... சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல். பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே.. உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே..., என்று நினைவுபடுத்த...
முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது.

அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ஓடிவிடு என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான். முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது -
புரிந்ததா... இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..
சிறுவன் பெருமூச்சு விடுகிறான்.

"இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை" என்று சமாதானம் ஆகிறான்.
வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

பரோடாவில் என்னைச் சந்தித்து கதறிய பெண்ணொருத்தியின் வாழ்க்கையே இதற்கு ஒரு உதாரணம்..

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...

அன்றாட வாழ்விற்கு திருமுறைப் பாடல்கள்

அன்றாட வாழ்விற்கு திருமுறைப் பாடல்கள்

பிறப்பில் அரிது மானடப் பிறப்பு. இந்தியாவில் பிற்பதற்கே ஒரு புண்ணியம் வேண்டும். அதிலும் தமிழகத்தில் இந்துவாக சைவ சமயத்தில் பிறப்பது என்பது பல பிறவிப் புண்ணியமாகும்.
1, சைவர்கள் காலையில் எழும்போது " சிவாய நம " என்று சிந்தித்தவாறு எழுதல் வேண்டும் என்கிறார் சிவமாய் தன்மையைப் பெற்ற திருநாவுக்கரசர் சுவாமிகள்
" சித்தமாரத் திருவடியே உள்கி நினைந்தெழுவார்
உள்ளம் ஏயவன் காண் " அப்பர் சுவாமிகள் தி.மு. 6

2. சிவாயநம என்று சிந்தித்தவாறு எழுந்து, கைகால் சுத்தம் செய்து,பல் துலக்கி, முகம் கழுவி, சிவாயநம் என்று சொல்லி திருநீறு நெற்றியில் அணிதல் வேண்டும். பிறகு குவளை நீர் அருந்த வேண்டும்.
3. உள்ளங்கையில் உளுந்து மூழ்கும் அளவு தண்ணீர் எடுத்து சிவாயநம என்று பத்து முறை சொல்லி தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்
4. ஒரிடத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர வேண்டும். அமர்ந்து கீழ்க்காணும்பாடல்களை வாய்விட்டு பாட வேண்டும்.

சமயக்குருமார்கள் நால்வரை நினைந்து பாடவேண்டிய பாடல்

" பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருவாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி " பெரிபுராணம்

சிவபிரானை நினைந்து பாடவேண்டிய பாடல்

" படைக்கலமாக உன் நாமத்தெழுத்து அஞ்சு என்நாவிற் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே. திருநாவுக்கரசர்

இப்பாடலை பாடி முடித்தவுடன் 108 முறை ஆதி மந்திரமாகிய " சிவாய நம " என்ற சொல்ல வேண்டும்

குளிக்கும் போது பாடவேண்டிய பாடல்

களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துகத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும் ஐயாறன் அடித்தலமே. திருநாவுக்கரசர்

சிவ பூசையின் போது பாடவேண்டிய பாடல்

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே
வழுவாதிருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய்பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே. திருநாவுக்கரசர்

சாப்பிடும் முன்பு ( சிவபிரானுககு அர்ப்பணம் செய்து விட்டு உண்பது ) அருந்தமிழ் பாடல்

" அடியனேன் அறிவிலாமை கண்டும் என்அடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்து இங்கு அமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாகமான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவளமேனிப் புரிசடைப் புராண போற்றி ! பெரியபுராணம் 12

விளக்கு ஏற்றும் போது பாடவேண்டிய பாடல்

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே. நாவுக்கரசர்

விளக்கை ஏற்றி பிறகு பாடி வணங்கவேண்டிய பாடல்

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவர்பளிங்கின் திரள் மணிக்குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்த கனியே
அம்பலம் ஆடரங்காக
வெளிவவளர் தெய்வக் கூத்துக ந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே " திருவிசைப்பா தி.மு. 9

உறங்க செல்வதற்கு முன் பாடவேண்டிய பாடல்

" மஞ்சனே மணியுமானாய் மரகத் திரளுமானாய்
நெஞ்சளே புகுந்து நின்று ளநினைதரு நிகழ்வினானே
துஞ்சம் போதாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடு துறையுளானே. " திருநாவுக்கரசர் தி..மு. 4

படுக்கைக்கு செல்லும் முன்பு நம் உயிரை இறைவருடைய திருவடிக்கீழ் வைத்து விட்டு செல்ல வேண்டும்.
மிக அருமைப்பாடுடையது இப்பாசுரம் தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாய் இதுபோன்ற அரிய பாடல்கள் நமக்குகிடைத்துள்ளன.

மற்றவர்களை வாழ்த்தும் போது பாட வேண்டிய பாடல்

" மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும்ஓர் குறைவிலைக்
கண்ணில் நல்லஅஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. ஞானசம்பந்தர்

உலகம் நலம் பெற பாடவேண்டிய தீந்தமிழ் பாடல்

வையம் நீடுக மாமழை மண்ணுக
மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறிதாம் தழைத்து ஓங்குக
தெய்வ வெண்திருநீறு சிறக்கவே, " பெரியபுராணம் 12

இப்பாடல்களை பாடுவதன் மூலம் நாம் நலமாக வாழ்வோம். உலகம் நலம்பெற வேண்டும் என எண்ணும் பொழுது நாம் நலமாக வாழ்வதற்கு இறையருள் முன்நிற்கும்..
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

20 கட்டளைகள் (20 commands for Victory)

20 கட்டளைகள் (20 COMMANDS FOR VICTORY)

Standard
20 கட்டளைகள் (20 commands for Victory)
1. தினமும் 12 மணி நேரம் கடுமையாய் உழைப்பு
2.வாய்ப்புகளை பயன்படுத்த உழை
3.வெற்றி ஒன்றையே மனம் நினைக்க செய்
4. வெற்றி ஏனியில் வெவ்வொரு படியாக ஏறு
5. மரத்தின் உச்சியில் ஏற தானே முயன்று ஏறுவது, அல்லது யாராவது ஏற்றிவிட துணை கொள்வது
6.வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சாதிருப்பது
7.பிடித்த காரியத்தை செய்வது என்பதை விட நமக்கு பிடித்ததாய் ஆக்கிகொள்வது
8.முடியாது, நடக்காது போன்ற எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்தல்
9.பாதுகாப்பை ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது
10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஸ்டம் பாதி அறிவு
11.துணிவுடன் முடிவு எடுப்பது
12.சம்பாதிப்பதை விட அதிகம் உழைப்பு
13.மற்றவர்களையும் உழைக்க வைப்பது மிகுந்த புத்திசாலித்தனம்
14.வாய்ப்புக்களை பயன்படுத்தும் புத்திசாலித்தனம்
15.வாய்ப்புக்களை பயன்படுத்த தயாராய் இருப்பது
16.எதையும் நாளை என்று தள்ளிப்போடாமை ( Do to day )
17.ைக்கடிகாரத்தை விட அலாரக் கடிகாரம் பயன்படுத்து
18.மற்றவர்கள் நம்மை வழிநடத்த வேண்டுமென்ற எண்ணம் தவிர்ப்பது
19.எதற்காகவும் எப்போதும் கவலையற்று இருத்தல்
20.கடவுளை நம்பு
வழிகாட்டி : கெமன்ஸ் வில்லியம்ஸ் Holiday in Founter

செவ்வாய், 26 ஜனவரி, 2016

தினம் ஒரு தேவாரம்
அப்பர் பிரான் பாடியது  / தில்லையில் பதி.5. பாடல் 1

அந்நாட்களிலே திருநாவுக்கரசுநாயனார் சிவஸ்தலங்கள் பலவற்றிற்குஞ் சென்று சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாட விரும்பி, அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப்பதிகம் பாடிக்கொண்டு, பெண்ணாகடத்திற்சென்று திருத்தூங்கானை மாடமென்னும் ஆலயத்திற்பிரவேசித்து, சுவாமியை வணங்கி, "சுவாமி! அடியேன் இழிவினையுடைய சமணசமயத் தொடக்குண்டு வருந்திய இத்தேகத்துடனே உயிர் வாழ்தற்குத் தரியேன். அடியேன் தரிக்கும் பொருட்டுத் தேவருடைய இலச்சினையாகிய சூலத்தையும் இடபத்தையும் அடியேன்மேற் பொறித்தருள வேண்டும்" என்னுங் கருத்தால் "பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்" என்னுந் திருப்பதிகம். பாடினார், உடனே பரமசிவனுடைய திருவருளினால் ஒரு சிவபூதம் மற்றொருவருக்குந் தெரியாதபடி அவ்வாகீசருடைய திருத் தோளிலே சூலக்குறியையும் இடபக் குறியையும் பொறித்தது. நாயனார் தம்முடைய திருத்தோளிலே பொறிக்கப்பட்ட இலச்சினைகளைக் கண்டு மனமகிழ்ந்து, திருவருளை நினைந்து கண்ணீர் சொரிய விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். அவர் அந்தஸ்தலத்தில் இருக்கின்ற நாளிலே, திருவரத் துறைக்கும் திருமுதுகுன்றுக்கும் போய் சுவாமி தரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடி, கிழக்கே நிவாக்கரையின் வழியாக நடந்து, சிதம்பரத்திலே சென்று, கனகசபையிலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுகின்ற சபாநாயகரைத் தரிசித்து விழுந்து நமஸ்கரித்து எழுந்து, இரண்டு கைகளும் சிரசின்மேலேறிக்குவிய, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய, அக்கினியிற்பட்ட வெண்ணெய்போல மனங்கசிந்துருக, "என்று வந்தாய்" என்னுந் திருக்குறிப்போடு நிருத்தஞ்செய்கின்ற சுவாமியுடைய திருநயனத் தினின்றும் பொழிகின்ற திருவருளாலாகிய ஆனந்தமேலீட்டினாலே "கருநட்ட கண்டனை" என்னுந் திருவிருத்தமும், "பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்னுந் திருநேரிசையும் பாடினார். அவர் சுவாமி தரிசனம் பண்ணி, திருக்கோயிற்றிரு முற்றத்தினும் திருவீதிகளினும் உழவாரப்பணிசெய்து கொண்டு சிலநாள் அங்கே எழுந்தருளியிருந்தார். அப்பொழுது "அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்" என்னுந் திருக்குறுந்தொகை பாடினார். பின் திருவேட்களத்துக்குச் சென்று, சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடி, திருக்கழிப்பாலையை அடைந்து சுவாமிதரிசனஞ்செய்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, சிலநாள் அங்கே இருந்தார்.

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
 
                                                                                                                     
பொழிப்புரை:

பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன் ?

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை

3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்
“அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம்,அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி,ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே!”
1. அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவ ர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.
2. மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமா த்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.
3. லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளா க ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.
4. கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரி டம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடை சியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.
5. பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் “எல்லாம்வல்ல சித்தரான படலம்” என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்த தாக வரும் சித்தி பிராத்தி.
6. பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல். அவ்வையார் இளவயதி லேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக் கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தா கும்.
7. ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பி யமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.
8. வசித்துவம்
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்க ரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்தி லிருந்து ஒலிசெய்து கொண்டிருந்த பறவை களின் ஓசை யை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

சனி, 23 ஜனவரி, 2016

திருவாசகத்தில் மாணிககவாசகர் காட்டும் வரலாறுகள்

திருவாசகத்தில் மாணிககவாசகர் காட்டும் வரலாறுகள்

தொடர்ச்சி  2

 6, புலி முலை புல்வாய்க்கு அருளியது
  ஒரு காட்டில் ஒரு பெண்மான் தன் கன்றை ஒரு புதரில் மறைத்து வைத்துவிட்டு, நீர் பருகும் போது வேடன் ஒருவன் அம்பால் கொல்லப்பட்டு மாண்டது. தாயை இழந்த மான் கன்றை ஒரு பெண்புலி பால்கொடுத்து வளர்க்கும் படி சிவபிரான் அருளினார். இவ்வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் காணலாம்.

7. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்
  இராவணன் மனைவி வண்டோதரி சிவபக்தி மிக்கவள். அவர் ஐந்தெழுத்து மந்திரம் ஓதுபவள். தான் விரும்பிய போதெல்லாம் சிவபிரான் தனக்கு காட்சி தந்தருள ேவண்டு மென வரம் பெற்றவள். ஒரு நாள் தனது பள்ளி யறையில் இருந்து கொண்டே சிவதரிசனம் காண விரும்பினாள். ெபருமானும் பள்ளிக் குப்பாயத்தினராய் காட்சி கொடுத்தார். வண்டோதரி ஆனந்த பரவசம் அடைந்தவளாய் உரத்த குரலில் தோத்திரம் செய்தனள். இந்த ஆரவாரத்தை அடுத்த அறையில் இருந்த இராவணன் கேட்டு என்ன ஆரவாரம் என வினவிக் கொண்டே அங்கு வர இறைவர் குப்பாய ஆடவன் உருவை நீக்கி குழந்தை உருவெடுத்தனர்.
 அங்கு வந்த ராவணன் " இக் குழந்தையின் ஆரவாரம் தானா? என்று வினவினான். வண்டோதரி தனது சேடி ஒருத்தி மறு நாட்காலையில் வருவதாகச் சொல்லி அக் குழந்தையை தன்னிடம் அடைக்கலமாக கொடுத்துச் ெசன்றனள் எனக் கூற  இலங்ேகசன் தன் பள்ளி அறைக்கு மீண்டனன். உடனே குழந்தையும் மாயமாகி மறைந்தது.
    இதன் குறிப்பு "எவ்வுருவும் தன்னுருவாய்  இலங்ைக அழகமா வண்டோதரிக்கு பேரருள் இன்ப மளித்த பிரானை "
என குயில் பத்து பதிகத்திலும், பள்ளிக்கு பாயத்தர்  என அன்னை பத்து பதிகத்திலும் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என திருவெம்பாவையிலும் பித்த வடிவு கொண்டு இவ்வுலசிற் பிள்ளையுமாய்  உத்திரகோசமங்கை வள்ளல் புத்தி புகுந்த வா  என்று திருப்பூ வல்லியிலும் காணக் கிடைக்கின்றன.

8. தாயான தத்துவன்  வரலாறு
 சுவாமி இடத்தில் அன்பு மிக்க ஒரு மாது பிரசவ காலத்தில் தன் தாய் வந்து உதவப் பெறாமல் சங்கடப்படும் ேபாது, சுவாமியே அவள் தாய் போல் வந்து மருத்துவம் பார்த்து ஆதரித்து பிரசவம் பார்த்தார். என்பது வரலாறு  அந் நிகழ்வு நடந்த இடம் திருச்சிராப்பள்ளி, இதனால் சுவாமிக்கு தாயுமானவன் எனப் பெயர் வந்தது. இதுவே தாயான தத்துவன் வரலாறு.

9. இந்திரனை தோள் நெரித்தது
  முன்பு ஒரு காலத்தில் இந்திரன் சிவபிரானை மதியாமல் திருமாலை வைத்துக் கொண்டு யாகம் ெசய்ய ஆரம்பித்தான். இதனால் சிவபிரான் கோபம் முற்று இந்திரனை மமதையை அடக்க அவனது தோளை நெெரித்தார்.  இதன் வரலாறு திருவுந்தியார்  பாடலில் காணலாம்..

10. அத்தி உரித்தது.
  பிரேதவரிடம் வரம் பெற்ற கயாசுரன் என்பவன் ேதவர்களை அழிக்க தொடங்கினான். பெருமான் யானை உருவம் கொண்ட அவனை கிழித்து யானையின் தோலை போர்வையாக ேபார்த்தி கொண்டார்.

11. பாலகனார்க்கு பாற்கடல் ஈந்தது
  உபமன்யு முனிவர் குழந்தை பருவத்தில் பால் வேண்டி அழுத போது, சிவபெருமான் திருப்பாற்கடலையே அவர் பருக  வரவழைத்து தந்தனர்.
  " பாலுக்கு பாலகன் வே்ண்டி அழுதிட  பாற்கடற் ஈந்த பிரான் "  என்ற பாடல் வாயிலாக அறியலாம்

12. பிரமன் தலை அறுபட்டது
  பிரமனுடைய தான் தான உயர்ந்தவன் என்ற அகந்தயை அடக்க பிரான் பிரமனுடைய உச்சித்தலையில் உள்ள வாய் சிவபிரானை இகழ்ந்து பேச பெருமான் வைரவர் கடவுளை ஏவி அவர் உச்சி தலையை நகத்தால் களைந்தனா்.

13.  வெள்ளம் தரும் ........  வளளல்
  சிவபுரம் என்னும் ஊருக்கு  திருப்பெருந்துறை என்ற  பெயரும் உ்ண்டு. சிவபுரத்து அந்தணர்களுக்கு பாண்டிய மன்னன் அளித்த நிலங்களை சில ஆண்டுகளுக்கு பின் அவ் வூர் அதிபன் என்ற " லுண்டாக்கன் " என்பவன் ைகப்பற்றிக் ெகாண்டான். அந்தனர்கள இந்த அநீதியை அப்போதுள்ள பாண்டிய மன்னனிடம் முறையிட்டனா். இந்த விசாரனையில்  அந்த நிலங்கள் அனைத்தும் தனக்கு உரியது என்றும், இதற்கு உறுதி சான்றாக இந் நிலங்களில் எங்கு , எவ்வளவு ஆழத்தில் வெட்டினாலும், நீர் வராது என்று வாதித்தான். அப்போது அந்தணர் பிள்ளைகளுக்கு வேத பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சாட்சியாக வந்து, இந்த  நிலங்களில் எங்கு வெட்டினாலும், ஒரு முழ ஆழத்திற்குள் தண்ணீர் வந்து விடும் என்று கூற, அதன்படி ஒேர  வெட்டில் நீர் பொங்கி கிளம்பி  எங்கும் வெள்ளமாய்
பரவியிற்று இதைக்கண்ட  லுண்டாக்கன் அச்சம் உற்றான். இவ்வேளையில்  சாட்சி சொன்ன வாத்தியார் யாரும் காணா வண்ணம் மறைந்தார்.. அந்த வாத்தியார் சிவபிரானே என தெளிந்த பாண்டியனும் அந்தணரும் வியப்புற்றனர். எங்கும் வெள்ளமாய் பரவிய  காரணத்தால் சிவபுரம் ெபருந்துறை ஆயிற்று. இதுவே தற்போது திருப்பெருந்துறை என வரக் காரணமாய்  ஆயிற்று.

திருச்சிற்றம்பலம்
ஒம் நமசிவய ஓம்
நன்றி.  திருவாசக ஒளி நெறிக்கட்டுரை
ேமலும் பல ஆன்மிகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com



வெள்ளி, 22 ஜனவரி, 2016

திருவாசகத்தி்ல் மணிவாசகர் காட்டும் வரலாறுகள்

திருவாசகத்தி்ல் மணிவாசகர் காட்டும் வரலாறுகள்

1, கிராத வேடம்
 தவம் செய்து கொண்டிருந்த அரிச்சுணனின் தவத்தைக் கலைக்க பன்றி உருவுடன் வந்த மூகாசுரனைச் சிவபிரான் வேட்டுவ உருவுடன் வந்து அம்பு எய்திக் கொன்ற வரலாறு கிராத வேடம் எனப்படும். இதன் பொருட்டு விழித்த விஜயனும் தானும் அம்பு விட இருவரின் அம்பும் அசூரனான மூகாசுரன் ேமல் பட பன்றிக்காக இருவரும் சண்டையிட விஜயன் வில்லால் அடித்தது  இதுவே  " இறைவனை வில்லால் அடித்தான் விஜயன் " என்ற கூற்று  காணப்படுவதைக் காணலாம்.

2, மெர்கணி அருளிய மேனி

சிவதரிசனம் ெசய்த பின்னரே உண்ணும் நியமத்தை வைத்திருந்த செட்டியார் ஒருவர் வெளியூர் சென்ற போது சிவ பூசை செய்ய சிவலிங்கம் எங்கே தேடியும் இல்லாத போது  அவருடைய மைத்துனர் அவருக்கு தெரியாமல் குதிரைக்கு கொள் வைக்கும்  பையை ஓர் இடத்தில் வைத்து சிவலிங்கம் போல் காட்சி தரும்படி அமைத்து அந்த செட்டியாருக்கு இதோ சிவலிங்கம் என்று காட்டி, சிவ பூசை செய்ய செய்தனன். செட்டியார் பூசை முடித்து உணவு உண்ட பின், மைத்துனன் நகைத்து இது சிவலிங்கம் மன்று, குதிரை உணவு தின்னும் உணவு கொள்ளுப் பை  என்று கூறி நகைத்து கொள்ளுப்பையை எடுக்க  முயன்றான். ஆனால் அக்து அசையாமல் உண்மையான சிவலிங்கமாகவே காணப்பட்டது. மொக்கனி என்பது குதிரையின் கொள்ளுப்பை  எனவே மொக்கனி / சிவலிங்கமாக ஆன பின் மொக்கனிஈசனார் என்னும் பெயர் பெறறது. இதுவும் ஒரு மணிவாசகர் கூறும் மொக்கனிஈசர் வரலாறு.

3. ஐயாறப்பர் தனிற் சைவனானது.
திருவையாற்றில் ஐயாறப்பருக்கு  பூசை செய்யும் ஆதி சைவர்  ஒருவர் தனியாக காசிக்கு சென்றார். திரும்பி வர நெடுநாள் ஆகியும், அவர் வராமையால் அவருக்கு  உரிய காணி ( நிலம்) முற்றும் தமக்கு உரிமை ஆகும் படி அவருடன் வசித்த மற்ற 28 ஆதி சைவர்களும் உரிமை யாக்கிக் கொண்டனர். காசிக்கு சென்ற ஆதி ைசவரின் மனைவியும் மைத்துனனும் மிக வருத்தத்துடன் ஐயாறப்பரிடம் வேண்டினார்.  பெருமான் காசிக்கு சென்ற ஆதி சைவராகவே  கங்கை நீருடன் காசியிலிருந்து வருவது போலவே நேரில் வந்து, சிவலிங்கத்திற்கு பூசை செய்தார். பின் சான்றோர்கள் முன்னிலையில் ஆதிசைவருக்கு நேர்ந்த துயர நிகழ்வு ஆன காணி நிலத்தை மற்ற ஆதி சைவர்களிடமிருந்து மீட்டிக் கொடுத்தார். இது கண்டு ஆதிசைவரின் மனைவியும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்து போது, காசிக்கு சென்ற ஆதிசைவரே அவர்கள்  முன் வந்து சேர , அந்த அதிர்ச்சியில் மூழ்கியிருந்த அவர்தம் மனைவி மற்றும் ஏனையோர் தங்களுக்கு காணி நில்த்தைத மீட்டிக்கொடுத்தது, ஐயாறப்பர் என்பதை கண்டனா்.  அப்போது பெருமான் அடியார் குறை தீ்ர்க்கும் ஐயாறப்பர் என்ற வரலாறு காணும் படி மணிவாசகர் தம் திருவாசகத்தில் காட்டுகின்றாா்.

4. குற்றாலத்தில் குறியாய் இருத்தல்
முன் ஒருகால் திரு முற்றம் என்னும் பெயர் கொண்ட தலத்திற்கு அகத்திய முனிவர் சென்றார். அத்தலத்தில் திருமால் கோயில் கொண்டிரு்ந்தார்.  அகத்தியரை கண்ட திருமாலின் அடியார்கள் அவருடைய திருநீற்று பட்டையினையும் கண்டிகையையும் பார்த்து நீர் இத் தலத்தில் அணுகல் ஆகாது  நீர் ஒரு சைவர், எ்னறனர். நீர் இங்கிருந்து நீங்குக. என்று அவரை வெரட்டினா். வெரட்டப்பட்ட அகத்தியர், திருமாலின் அடியார் போல் வேடம் கொண்டு, அந்த தலத்திற்கு மறுபடியும்,வந்தார். யாம் அழகர் மலையிலிருந்து வருகிறோம். வைணவர்கள்  உடனே பூசைக்கு வேண்டிய பொருட்களை கொண்டு வந்தனா். பூசைக்கு அகத்தியரிடம் கொடுத்தனா். அப்போது அகத்தியர் அவர்களை பார்த்து, " யாம் செய்யப்போகும் பூசையைப் பாருங்கள்  " என்று சொல்ல சிவபொருமானை மனதில் கொண்டு, திருமாலின் திருமுடிமேல் தனது கையை வைத்து, " குறுகு, குறு " கென அழுத்தினார். உடனே திருமாலின் உருவம்,சிவலிங்கமாக   குறுகியது. இதைக் கண்ட வைணவர்கள், இவன் முன் வந்த அகத்திய முனிவனே என்று கண்டு கொண்டனா். அவரை வளைத்துக் கொண்டனா். அப்போது முனிவரின் வெகுளித்தீ அவர்களை சுட்டெரிக்க அவர்கள் ஒடி மறைந்தனர். என்பது வரலாறு. அத்தலம் தான் இப்போது குறுகு குறுகென ஆன குற்றாலம்  என வழங்கப்படுகிறது.
   இவ்வரலாற்றினை வரிவை கந்த பூராணம் 2/28 திருக்குற்றால படலத்தில் காணலாம்.

(இதன் தொடர்ச்சி இன்னும் தொடரும்)
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை்.பூமாலை
நன்றி திருவாசகம் ஒளிநெறி கட்டுரை

திருச்செந்தூர் கடற்கரையில் மூவர் சமாதி

திருச்செந்தூர் கடற்கரையில் மூவர் சமாதி









இயற்கை எழில் சூழ்ந்த திருச்செந்தூர் கடற்கரையில் முருகப்பெருமான் குருவாக அருள்பாலிக்கிறார். மிக நீண்ட கடற்கரையில் இயற்கை எழில் சூழ இதன் அருகே அமைந்துள்ளது மூவர் சமாதி கோவில். முருகனை ஆராதனை செய்து முருகனுக்கு கோவில் எழுப்பி மகான்களாக வாழ்ந்த, மூன்று துறவிகளுக்கு இங்கு கோவில் எழுப்பபட்டுள்ளது.
கடற்கரை அருகே சென்று மூவர்சமாதி எங்கே இருக்கிறது எனக்கேட்டால் சொல்வார்கள். அளவுக்கதிகமான சக்தியை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஜீவசமாதி கோவில்கள் உள்ளுக்குள் புத்துணர்ச்சியை தூண்டி விட்டு உள்ளுக்குள் இருக்கும் ஆற்றலை தூண்டிவிடும் வலிமை வாய்ந்தது. இக்கோவில் ஒருவர் ஜீவ சமாதி ஆகியிருந்தாலே அந்த கோவிலில் நல்லவிதமான அதிர்வலைகள் நிறைந்து காணப்படும்.

இங்கு அருகருகே மூவர் சமாதியாகியுள்ளதால் மிகப்பெரும் சக்தி வாய்ந்த இடமாக காட்சியளிக்கிறது. இங்கு உட்கார்ந்து திருச்செந்தூர் முருகக்கடவுளையும் இங்குள்ள மூன்று சுவாமிகளையும் மனக்கண் முன் நிறுத்தி தியானம் செய்தால் மனம் இலகுவாக இருக்கும் அமைதியடையும். பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்த போது, திருச்செந்தூர் முருகன் கோவில் சீரமைக்கப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

எனினும் தற்போது உள்ள கோவில்களை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என்ற மூவர் சுவாமிகள் ஆவர். இவர்கள் மூவரும் தங்களது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர்.

இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது. குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் இங்கு சென்று நம் கோரிக்கைகளை வைத்து இந்த ஜீவசமாதிகளில் உட்கார்ந்து மனதார தியானித்து வந்தால் நம் மனக்குறை தீர்ந்து சிறப்பாக வாழலாம்.

தியானம் செய்வதற்க்கு ஏற்ற அமைதியான கடற்கரை சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செல்லும் வழி: சென்னை அல்லது எந்த ஊர்களில் இருந்து செல்பவர்களும் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று முருகனை வழிபட்டு கடற்கரை அருகில் உள்ள இவர்களையும் வழிபட்டு வருவது சிறப்பு

வியாழன், 14 ஜனவரி, 2016

ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி





ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று.
கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.
“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்”
என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம்.மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?”
என்று கேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்”
என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார். “குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள்.
உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சே்ஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார்.
மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று. இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்: "பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர்.
திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் "திருமூர்த்தி மலையில் " இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் "தென் கைலாயம்" என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார்.
பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்." "தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர்.
இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!"
சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன். "அது என்னுடைய தாத்தா! மேலே ஏறிப் பார்! ஆனால் என்னைப் பிறப்பித்தவர் காலங்கி நாதர்! பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது பார், இதுவே சரியான வழி! அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்.
"அப்பா நீ தேடினாயே இது தான் அது!" என்று. குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார்.
காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள்.
பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.
மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள். யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் ‘ஹிரண்யகர்பர்’. அதை சூத்திரங்களாக்கிவைத்தவர் மஹரிஷி பதஞ்சலி. அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள்: வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும், யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர்.
இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்வர்.
தந்தை: அத்திரி முனிவர்.
தாய்: கோணிகா.
வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் ‘ஆத்திரேயர்’, கோணிகாவின் பிள்ளையென்பதால் ‘கோணிகாபுத்திரர்’.
இவர் எழுதிய மூன்று நூல்கள்:
யோகத்தினை விளக்கும் ‘யோக சாஸ்திரம்’,
மொழி இலக்கணமான ‘மஹாபாஷ்யம்’,
ஆயுர் வேத்மாகிய ‘சரகம்’ என்ற ‘ஆத்திரேய சம்ஹிதை’.
ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்
ஓம் ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி திருவடியே போற்றி போற்றி ! 

Aanmigam: ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி

Aanmigam: ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி: ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவரும...

Aanmigam: ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி

Aanmigam: ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி: ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவரும...

புதன், 13 ஜனவரி, 2016


தினமும் ஒரு தேவாரம்
திருநாவுக்கரசர் பாடியது

பாடல் நிகழ்வுக்கு முன் நடந்தது
தருமசேனார் ஆகிய திருநாவுக்கரசர் தீராத சூலை நோய் க்ண்டு சமணர்களால் தீர்க்கமுடியாதைத தனது சகோதரி திலகவதியாரை தஞ்சம் அடைந்து , திருஅதிகை வீரட்டானீஸ்வர் மூலம் சூலை ேநாய் நீங்கப் பெற்று , தான் முன் இருந்த சமண மதத்தை விட்டு சைவ மதம் மாறி அங்கேயே தங்கிவிட்டார். இது கண்டு பொறாமை கொண்ட சமணர்கள் அவரை மீண்டும் தங்கள் சமணமதத்திற்கு கொண்டு வர பெரும் முய்ற்சி செய்து, மன்னனிடம்இது பற்றி புகார் அளித்தனா்.
"மகாராஜாவே! எங்களெல்லாருக்குந் தலைவராய் இருந்த தருமசேனர், தம்முடைய சகோதரியாராகிய திலகவதியார் சைவசமயத்திலே நிற்கின்ற படியால், தாமும் அவர் போலாக விரும்பி, தமக்குச் சூலைநோய் வந்ததாகக் காட்டி, அது நம்மாலே தீர்ந்திலது என்று அவரிடத்திற்சென்று, முன்போலச் சைவசமயத்திலே பிரவேசித்து, நம்முடைய கடவுளை நிந்தை செய்தனர்" என்று சொன்னார்கள். உடனே பல்லவராஜன் கோபங்கொண்டு, "இதற்கு யாது செய்யலாம்" என்றான். அதுகேட்ட சமணர்கள் "உத்தமமாகிய நமது சமயமகிமையைக் கெடுத்து உம்முடைய ஆஞ்ஞையையுங் கடந்த அந்தத் தருமசேனரை நீர் அழைப்பித்துத் தண்டிக்க வேண்டும்" என்றார்கள். அப்பொழுது அரசன் மந்திரிமாரை நோக்கி, "இம்முனிவர்களாற் சுட்டப்பட்ட தீயோனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபித்தான்.
உடனே மந்திரிமார் சேனைகளோடு போய், திருவதிகையை அடைந்து திருநாவுக்கரசு நாயனாரிடத்திற் சென்று, "எங்கள் அரசன் இன்றைக்கு உம்மை அழைத்துக் கொண்டு வரும்படி எங்களை அனுப்பினான்; வாரும்" என்றார்கள். அதுகேட்ட திருநாவுக்கரசுநாயனார் "நாமார்க்குங் குடியல்லோம்" என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தைப் பாடி, "நாம் நீங்கள் அழைத்தபடியே வரக்கடவேமல்லேம்" என்றார்கள். அதுகேட்ட மந்திரிமார்கள் அவரை வணங்கிப் பிரார்த்தித்து அழைக்க, "அவர் அடியேனுக்கு வரும் அபாயங்களுக்கெல்லாம் சிவபெருமான் இருக்கின்றார்" என்று போதற்கு உடன்பட்டார். அவர்கள் அழைத்துக் கொண்டு போய், அரசனெதிர் சென்று அறிவித்தார்கள். அரசன் அதைக்கேட்டு, பக்கத்திலிருந்த சமணர்களை நோக்கி; "இனி இவனுக்கு யாது செய்வோம்" என்று கேட்க; சமணர்கள் "நீற்றறையில் இடல் வேண்டும்" என்றார்கள். அரசன் சமீபத்தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, "இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் அந்நாயனாரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினார்கள். திருநாவுக்கரசு நாயனார் பரமசிவனுடைய திருவடி நிழலைத் தலைக்கொண்டு, "சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே துன்பம் வருவதுண்டோ" என்று அக்கடவுளைத் தியானித்து "மாசில் வீணையு மாலை மதியமும்" என்னுந் திருக்குறுந் தொகையைப் பாடித் தொழுது கொண்டு, அந்த நீற்றறையினுள்ளே எழுந்தருளியிருந்தார். அந்நாயனார் சிவபெருமானுடைய திருவடி நீழலாகப் பாவித்த அந்நீற்றறை வீணாகானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும் பொய்கையும் போலக் குளிர்ந்தது.
நீற்றறையில் பாடிய பதிகம் மாசில் வீணையும் என்ற பதிகம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

பொழிப்புரை:
இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும், மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும், வீசுகின்ற தென்றலின் சாயலும், செறிந்த இளவேனிலின் மாட்சியும், ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும்.
ஏழுநாட் சென்றபின், பல்லவராஜன் சமணர்களை அழைத்து, "நீற்றறையைத் திறந்து பாருங்கள்" என்று சொல்ல; அவர்கள் நீற்றறையைத் திறந்து நாயனார் யாதொரு ஊனமும் இன்றிக்களிப்புற்றிருத்தலைக் கண்டு ஆச்சரியமடைந்து, அரசனிடத்திற் சென்று, "அவன் முன்னே நம்முடைய சமயத்தில் இருந்து செய்த மந்திரசாதகத்தினாலே வேவாமற் பிழைத்துக் கொண்டான். இனி அவனுக்கு நஞ்சு ஊட்டுவதே தகும்" என்றார்கள். அரசன் "அப்படியே செய்யுங்கள்" என்று சொல்ல; அவர்கள் நாயனாருக்கு நஞ்சுகலந்த பாற்சோற்றை உண்ணக் கொடுத்தார்கள். நாயனார் அவர்களுடைய வஞ்சனையை அறிந்து, "நஞ்சும் அமுதாம்" என்று, நஞ்சுகலந்த அந்தப் பாற்சோற்றை உண்டு இருந்தார். சமணர்கள் அதைக் கண்டு "இவனுக்கு நஞ்சும் அமுதமாயிற்று. இவ்விடத்திலே இவன் பிழைப்பானாகில் நமக்கெல்லாம் நாசமுண்டாகும்" என்று பயந்து, அரசனிடத்திற்சென்று. "நாம் நஞ்சைச் சோற்றிலே கலந்து உண்பித்தும், நம்முடைய சமய நூல்களிலே கற்றுக் கொண்ட மந்திரவலியினாலே பிழைத்துவிட்டான். அவன் இறவாதிருப்பானாகில், எங்கள் உயிரும் உம்முடைய அரசாட்சியும் நீங்குவது திடம்" என்றார்கள்.
தொகுப்பு ; வை.பூமாலை
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

செவ்வாய், 12 ஜனவரி, 2016

திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் திருத்தெள்ளேணம்

மாணி்க்க வாசகரின்
திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் திருத்தெள்ளேணம்
மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் எனக் கொண்டு எல்லாம் ஆன பரம்பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீர தீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை திருவெம்பாவை திருச் பொற்சுண்ணம் , திரு அம்மானை போன்ற பதிகப்பாடல் கள் வாய்லாக கண்டோம், இக் கட்டுரை வாயிலாக திருத்தெள்ளேணம் என்ற கும்மிபாட்டு போன்று தெள்ளேணம் கொட்டிப்பாடும் பாடல்கள் பற்றி நாம் பாண்போம்,
திருத்தெள்ளேணம் ;
மணிவாசகர் தாம் தலைவி யாக நின்று தமது தோழியரை அழைத்து தமக்கு ஆண்டவன் அருளிய திருஅருட் செயல்கைளயும், ஆண்டவனுடைய பெருமைகளையும் பற்றி பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று கூறுவது இப்பதிக திருத்தெள்ளேணம் பதிகம்
சிவனாருடைய சிலம்பாடல்களையும், அவர் ஆண்ட திறத்தையும் அவருடைய கருணை கழல்களையும், அவருடைய சீரையும், அவர் வீற்றிருக்கும் திருவாரூரையும் பாடி பின்னும் அவர்அடியேனுக்கு அருளிய அருட் கழல்கள், என் சித்தத்தில் புகுந்ததையும், அதனால் ” நான் ” என்ற ஆணவம் கெட்டு, என் ஊன், உயிர், உணர்வு, உள்ளம், செயல், எல்லாம் கெட்டு,நாம் ஒழிந்து சிவமாம் தன்மையை அடைந்தததையும், தித்திக்கும் வகையில் பாடி அவர் திருவடியை தன்மீது வைத்துலுமே நான் தேவான தன்மையை அடைந்ததையும், மறந்தும் தன் திருவடியை நான் மறவா வண்ணம் அவர் அருளிய கருணையிைன பாடி உலகம் சிரிக்கும் திறத்தை பாடி, நனவிலே என்னை ஆண்டு கொண்டு அருளியதையும், ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றுமிலா அவருக்கு ஆயிரம் திருநாமங்களை பாடி, செந்துவர் வெண்ணகையீர் நும் கண்களில் நீர் மல்க தென்னா தென்னா என்று நாம் தெள்ளேணம் கொட்டு வோமாக என்று அவர் தம் பாடலகள் அமைந்ததை சில பாடல்கள் வாயிலாக இங்கே காணலாம்.
பாடல் எண் : 1
திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ
.
பொழிப்புரை:
திருமாலும் வராகவுருவங் கொண்டு நிலத்தைப் பிளந்து சென்றும் அறியாத திருவடியை யாம் அறிந்துய்யும்படி ஒரு அந்தணனாய் எழுந்தருளி எம்மை ஆண்டு கொண்டவனும், திரு நாமங்கள், வடிவங்கள் இல்லாதவனுமாகிய சிவபெருமானுக்கு ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
பாடல் எண் : 3
அரிக்கும் பிரமற்கும்
அல்லாத தேவர்கட்குந்
தெரிக்கும் படித்தன்றி
நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும்
என்பதுகேட் டுலகமெல்லாஞ்
சிரிக்குந் திறம்பாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
பொழிப்புரை :
திருமால் பிரமன் முதலியோர்க்கும் இன்னபடி யென்று தெரிவிக்கலாகாமல் நின்ற பரமசிவமே எழுந்தருளி நம்மை மனமுருகப் பண்ணி ஆண்டுகொள்ளும் என்னும் செய்தியைக் கேட்டு உலகத்தாரெல்லாரும் நகைக்கும் விதத்தைப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
ஆவா அரிஅயன்இந்
திரன்வானோர்க் கரியசிவன்
வாவாஎன் றென்னையும்பூ
தலத்தேவலித் தாண்டுகொண்டான்
பூவார் அடிச்சுவடென்
தலைமேற்பொ றித்தலுமே
தேவான வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
பொழிப்புரை :
திருமால், பிரமன் முதலியோர்க்கும் அருமை யாகிய பரமசிவம், ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் வலிந்தாண்டு கொண்டு, என் தலைமேல் தன் திருவடியைப் பதித்த அளவில் என் தலைக்கு ஓர் அழகுண்டான விதத்தைப் பாடித் தெள்ளேணம் கொட்டு வோம்.
கன்னா ருரித்தென்ன
என்னையுந்தன் கருணையினாற்
பொன்னார் கழல்பணித்
தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச்
செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ.
பொழிப்புரை :
கல்லில் நார் உரித்தாற்போல என்னையும் தன் பெருங்கருணையினால் தனது பொன்போலும் அருமையாகிய திருவடியைப் பணிவித்து ஆட்கொண்ட எம்பெருமானது பெரும் புகழைப் பாடி அக்களிப்பால் தென்னா தென்னாவென்று தெள்ளேணம் கொட்டுவோம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
நன்றி ; திருவாசக ஒளிநெறி கட்டுரை

TIPS&TRICKS: இளநீரில் நிறைந்திருக்கும் அற்புதங்கள்!

TIPS&TRICKS: இளநீரில் நிறைந்திருக்கும் அற்புதங்கள்!: இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலுக்கு கேடுவிளைவிக்கும்   கோலா போன்ற கார்பானிக் குளிர் பானங்களையே அதிகம் அருந்துகிறோம். ஆனால் இளநீர...

பஞ்சார விளக்கங்கள்

400px-திருவைந்தெழுத்து
Standard
எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு
1.பஞ்ச பூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
2. பஞ்சாட்சரம்
நமசிவாய – தூல பஞ்சாட்சரம்
சிவாயநம – சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ – அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ – காரண பஞ்சாட்சரம்
சி – மகா காரண பஞ்சாட்சரம்
3.சிவமூர்த்தங்கள்
1.பைரவர் -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி
4.நடராசர் -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர் – கருணா மூர்த்தி
4.பஞ்சலிங்க சேத்திரங்கள்
1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம் -நேபாளம்
3.போகலிங்கம் -சிருங்கேரி
4.ஏகலிங்கம் -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்
5.பஞ்சவனதலங்கள்
1.முல்லை வனம் -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -அவளிவணல்லூர்
3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி
4.பூளை வனம் -திருஇரும்பூளை
5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர்
6.பஞ்ச ஆரண்ய தலங்கள்
1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு -திருப்பாசூர்
3.ஈக்காடு -திருவேப்பூர்
4.ஆலங்காடு -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு -திருவிற்குடி
7.பஞ்ச சபைகள்
1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம் -பொன் சபை
3.மதுரை -வெள்ளி சபை
4.திருநெல்வேலி -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை
8.ஐந்து முகங்கள்
1.ஈசானம் – மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு
9.ஐந்தொழில்கள்
1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்
10.ஐந்து தாண்டவங்கள்
1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்
11.பஞ்சபூத தலங்கள்
1.நிலம் -திருவாரூர்
2.நீர் -திருவானைக்கா
3.நெருப்பு -திருவண்ணாமலை
4.காற்று -திருக்காளத்தி
5.ஆகாயம் -தில்லை
12.இறைவனும் பஞ்சபூதமும்
1.நிலம் – 5 வகை பண்புகளையுடையது
(மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர் – 4 வகை பண்புகளையுடையது
(சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு – 3 வகை பண்புகளையுடையது
(ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று – 2 வகை பண்புகளையுடையது
(ஊறு ,ஓசை )
5.ஆகாயம் – 1 வகை பண்புகளையுடையது
(ஓசை )
13.ஆன் ஐந்து
பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்
14.ஐங்கலைகள்
1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை
15.பஞ்ச வில்வம்
1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்
16. ஐந்து நிறங்கள்
1.ஈசானம் – மேல் நோக்கி – பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு – பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு – கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு – சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு – வெண்மை நிறம்
17.பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்
18.இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து
1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்
19.பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்
ஆடிய திருவடி சரணம்!!

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

VTS 01 12


சுந்தரபாண்டியம் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் சுவாமி கோவில்


  1. மாணி்க்க வாசகரின் திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் கோதும்பி மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் எனக் கொண்டு எல்லாம் ஆன பரம்பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீர தீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை திருவெம்பாவை திருச் பொற்சுண்ணம் , திரு அம்மானை போன்ற பதிகப்பாடல் கள் வாய்லாக கண்டோம், இக் கட்டுரை வாயிலாக கோதும்பி என்று தும்பியிடம் பேசுவது போன்று பாடிய பாடல்கள் பற்றி நாம் பாண்போம், மகளிர் விளையாட்டுப் பாடல்களில் அவை இன்ன பாடல் வகையில் இது திருவெம்பாவை. கோதும்பி என்னை ஆண்டு கொண்டு நாய் மேல் தவிசிட்டது போல என்னை ஒரு பொருளாக்கிய பெருமான், தில்லை அம்பலத்ேத ஆனந்த தேன் சொரியும் கூத்துடைய பொருமான், எனது சித்த விகார கலக்கத்தை தெளிவித்து, மரணம் பிறப்பெண்ணும் இவை இரண்டின் மயக்கறுத் கருணைக் டல் ஆகிய எனது தலைவர் என்னை கூடுதற்கு வேண்டி , அரச வண்டே ! நீ சென்று என் உள்ளத்து உள்ள துயரம் எல்லாம் ஒன்று விடாமல் நீ அவரிடம் ஊதித் தெரிவிப்பாயாக ! என்று தன்னை ஒரு தலைவியாக க் கொண்டு சிவபெருமானிடம் தூது செல்ல வண்டினிடம் கூறி பாடும் பாடல்கள் கோதும்பி என்ற திருவாசகப்பதிகம் இதன் பாடலகள் சில இங்கே காண்போம். தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொழிப்புரை : அரசவண்டே! நீ, மிகவும் சிறிதாகிய மலர்த்தேனை உண்ணாமல், நினைத்தல், காண்டல், பேசுதல் என்னும் இவற்றைச் செய்கிற, எல்லாக் காலங்களிலும் வலிய எலும்புகளும் உருகும்படி இன்பத்தேனைப் பொழிகின்ற கூத்தப்பிரானிடத்தே சென்று ஊதுவாயாக. பாடல் எண் : 4 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொழிப்புரை : அரசவண்டே! கண்ணப்பனது அன்பு போன்ற அன்பு என்னிடத் தில்லையாதலைக் கண்டும், என்மீதுள்ள பெருங் கருணையால் வாவென்று கூவியாட்கொண்ட சிவபெருமானிடம் சென்று ஊதுவாயாக. பாடல் எண் : 6 வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலம் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொழிப்புரை : அரசவண்டே! செல்வம், மாதர், மக்கள், குலம், கல்வி என்று பிதற்றித்திரிகின்ற இந்தப் பித்தவுலகில், பிறப்பு இறப்பு என்கிற மனவிகாரக் கலக்கத்தை எனக்கு ஒழித்தருளின ஞானவுரு வனாகிய இறைவனிடத்திற்சென்று ஊதுவாயாக. நோயுற்று மூத்துநான் நுந்துகன்றாய் இங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம் தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொழிப்புரை : அரசவண்டே! பிறவிப் பிணியை அடைந்து முதிர்ந்து, இங்கு இருந்து - நான் தாய்ப் பசுவால் தள்ளப்பட்ட கன்று போல இவ்வுலகத்திலிருந்து வருந்தி நின்ற என்னைத் தாய் போலக் கருணை செய்தாண்டருளின இறைவனிடத்தே சென்று ஊதுவாயாக. திருச்சிற்றம்பலம்
                                                                                  தொகுப்பு ; வை.பூமாலை
 tp://vpoompalani05.blogspot.in/

  1. http://vpoompalani05.wordpress.c

  1. http://www.vpoompalani05.weebly.com

வெள்ளி, 8 ஜனவரி, 2016

திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் திருப்பொற்சுண்ணம்


மாணி்க்க வாசகரின் திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் திருப்பொற்சுண்ணம் மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் என க் கொண்டு எல்லாம் ஆனபரம் பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீரதீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை இக் கட்டுரை வாயிலாக நாம் கண்டதை பாண்போம், மகளிர் இறைவனுக்காக இடிக்கப்படும் திருப்பொற்சுண்ணம் பற்றி மாணிக்கவாசகர் தன்ைன ஒரு தலைவியாகக் கொண்டு பாடும் பாடல்களில் கொண்ட கருத்துக்கோவை 1. திருப்பொற்சுண்ணம் இடிக்க வேண்டிய பொருட்கள் உரல், உலக்கை, மெய் யெனும் மஞ்சள் 2.பொற்சுண்ணம் இடிக்க செய்ய வேண்டிய அலங்கார சம்பிரதாயங்கள் மெழுக வேண்டும். கற்பூரம் காட்டவேண்டும். எங்கும் எழில் சுடர் வைக்க வேண்டும், உலக்கைக்கு மணி வகைகள் பூட்டப்படவேண்டும். உரலை பட்டாடை சுற்றி கட்ட வேண்டும். பொன்சிந்தி நிதி பரப்ப வேண்டும். பூமாலை, முத்துமாலை தொங்க விட வேண்டும். முளைக்குடம்வைக்க ேவண்டும். திருநீறு, குங்குமம் அணிந்து சித்தம்களிக்க வேண்டும் 3. பொற்சுண்ணம் இடிப்பவர் யார் யாரை அழைக்கிறார்? கங்கை, கெளரி, சக்தி, சித்தி, சோமி, நாமகள் பார்ப்பதி, பார்மகள், மற்றும பபணியில் ஈடுபடும் மங்கையர் சக்தி, சோமி,பார்மகள், நாமகள் இவர்கள் பல்லாண்டு இசையுடன் பாடவேண்டும் சித்தி,கெளரி, பார்ப்பதி, கங்கை, இவர்கள் கவரி வீச வேண்டும். 4, பொற்சுண்ணம் எங்ஙனம் இடிக்க வேண்டும்? மணிவாசகர், தன்னை தலைவியாகக் கொண்டு பாடுவது) கைவளையும், தோள்வளையும், சிலம்பும் ஒலி ெசய்ய , கூந்தலில் உள்ள மாலை ஆட, அம்மாலையில் உள்ள வண்டுகள் ரீங்காரம் ஒலிகக, சித்தம் சிவனிடத்து ஆட,ஆட. சிவனது கருணை விளங்க, தோளும், நெற்றியும், ஒருசேர, விளங்க, உலகோர் நம்மை பழிப்ப, நாம் அவரை பழிப்ப, அடியவர் கூட்டம், நம்மொடு கலந்து சிவ, சிவ என ஒலி எழுப்ப, நமது காதற் பித்து சிவனிடத்து பொருந்த,அதனால் நமது பிறவி, நம்மைவிட்டு அகற்ற, நம் கொங்கைகள் பக்தி ெபருக்கால், பூரிக்க, வாயிதழ் துடிப்ப " சிபெருமானே வணக்கம் வணக்கம் என்று சொல்லி பொற்சுண்ணம் இடிப்போமாக! 6.பொற்சுண்ணம் இடிக்ககும் போது யாரை வாழ்த்தி பாட வேண்டும் என்பது. ெபருமானின் வீர தீரச்ெசயல்களான பிரமன் தலையை அறுத்தது, சூரியன் பற்களை பறித்தது, முப்புரத்தை எரித்தது, யானையை கெொன்று அதன் உரியை போர்த்தியது, காலனை காலால் உதைத்தது ஊணாக நஞ்சுண்டது, இவைகளை பாடி, அவர் அணிந்துள்ள கங்கணத்தையும், கையில் அறையில் அணிந்துள்ள அறவத்தையும்,அவர் வீற்றிருக்கும் சிவபுரம், சிவலோகம், பற்றியும், அவரது திருவடி, வாகனம், கையிலுள்ள மழுப்படை, சூலப்படை, ஆகியவற்றையும், நம்மை ஆண்டு கொண்ட நயத்தையும், நம்மை பணி கொண்ட வண்ணத்தையும்,சிவனத சிற்றம்பலத்து பெருமையையும், அவரும்அவரது ேதவியும், வந்து ந்ம்மை ஆளும் பொருட்டு பொற்சுண்ணம் இடிப்போமாக! 6. யாருக்காக இடிப்பது? ஆதி அந்தம், இ்ல்லாதவனும், சோதி,/இருள் , துன்பம் / இன்பம், பந்தம் வீடு, பாதி / முற்று, மெய்மை,பொய்மை, வேதம்/ வேள்ளி, ஆக விளங்குபவனும் உமையொரு பாகனும், மங்கை பங்காளனும், முக்கண்ணனு மானவனும், அம்பலத்தாடுவனும் ஆன சிவபுரத்து ஈசனுக்கு 7, பொற்சுண்ணம் இடிப்பதால் பயன். பிறவியற்ற நிலை கிடைக்க மேற்கண்ட வாறு பாடி ஆடி சிவபுரத்து ஈசனுக்கு திருப்பொற்சுண்ணம் இடித்து பாடும் பாடல்களில் சில காண்போம், பாடல் எண் : 1 முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமக ளோடுபல் லாண்டி சைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின் அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே பொழிப்புரை: தோழியர்களே! முத்துக்களாலாகிய நல்ல மாலையையும், பூமாலையையும் தொங்கவிட்டு முளைப் பாலிகையை யும், குங்குலியத் தூபத்தையும் நல்ல விளக்கையும் வையுங்கள். உருத்திராணியும், திருமகளும், நிலமகளும் கலை மகளோடு கூடித் திருப்பல்லாண்டு பாடுங்கள். கணபதியின் சத்தியும், கௌமாரியும், மகேசுவரியும், கங்காதேவியும், முன்வந்து வெண் சாமரை வீசுங்கள். எமது தந்தையும் திருவையாற்றை உடையவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவன் நிரம்ப அணிதற் பொருட்டுப் பொன் போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம். பாடல் எண் : 3 சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன் சிந்தி நிதிப ரப்பி இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் றன்பெருமான் ஆழியான் நாதன்நல் வேலன் தாதை எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற் கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே. பொழிப்புரை : அழகிய திருநீற்றை அணிந்து கொண்டு தரையை மெழுகுதல் செய்து மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நவமணி களைப் பரப்பி இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு எவ்விடத்தும் அழகிய தீபங்கள் வைத்துக்கொடிகளை ஏற்றுங்கள். விண்ணவர்க்குத் தலைவனும் பிரமனுக்கு முதல்வனும் சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் அழகிய முருகனுக்குத் தந்தையும் எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற உமா தேவியின் கணவனுமாகிய இறைவனுக்குப் பொருந்திய பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம். வையகம் எல்லாம் உரல தாக மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச் செம்பொன் உலக்கை வலக்கை பற்றி ஐயன் அணிதில்லை வாண னுக்கே ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. பொழிப்புரை : உலகமுழுவதும் உரலாகக் கொண்டு மகாமேரு என்கிற உலக்கையை உள்ளத்திலே நிலைநாட்டி, உண்மை என்கிற மஞ்சளை நிறைய இட்டு மேன்மை தங்கிய அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனது செம்மையாகிய திருவடியைப் பலகாற்பாடிச் செம்பொன் மயமான உலக்கையை வலக்கையில் பிடித்துத் தலைவனாகிய அழகிய தில்லைவாணனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம். திருச்சிற்றம்பலம் தொகுப்பு . வை.பூமாலை நன்றி திருவாசக ஒளிநெறி கட்டுரை மேலும் ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com