செவ்வாய், 19 மே, 2026

பிறவித் துயர் தீர

 பிறவித் துயர் தீர

பிறவித் துயர் தீர்வதற்கு,,,......

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், 

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், 

இறைவன் அடி சேராதார்”   ///         என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.

முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.

இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.

..... ..... நித்தலும்எம்பெருமான் கோயில்புக்கு

    விடிவதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு

    பூமாலை புணர்ந்தேத்தி, புகழ்ந்து பாடி, 

    தலையார கூம்பிட்டு கூத்துமாடி 

    சங்கர ஜெய ஜெய போற்றி ,,,,,,  என்கிறார்


பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும்.

திருச்சிற்றம்பலம்

 

சனி, 16 மே, 2026

பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்

 பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்


சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொள்ளவேண்டிய சிவன் கோவில்களில் அன்றாட வழிபாடும், சிறப்பு நாள் வழிபாடும் நடத்தப்பெறாமல் போகுமானால் பெருந்தீங்கு விளையும் என்கின்றார் திருமூலர். அன்றாட வழிபாட்டிலும் சிறப்பு நாள் வழிபாட்டிலும் சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைகள் தவறி பூசனைகள் நடத்தப்படுமாயின் நாட்டில் நலப்படுத்த முடியாத பல நோய்கள் பரவுகின்ற நிலை ஏற்படும். நாட்டில் மழை பெய்யாது நீர் வளம் குன்றி வறட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டு வறுமை தலைவிரித்தாடும் என்கின்றார். மேலும் நாட்டில் பல சிக்கல்கள் ஏற்பட்டு அரசியல் நிலைத்தன்மை கெட்டு அரசாட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்பதனை, “ஆற்ற அரு நோய்மிக்கு அவனி மழையின்றிப், பேற்றுஅரு மன்னரும் போர்வலி குன்றுவர், கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை, சாற்றிய பூசனைகள் தப்பிடில் தானே” என்கின்றார் திருமூலர்.


சிவ ஆகம விதி மாறி பூசனை இயற்றினாலே இவ்வளவு தீமைகள் ஏற்படும் என்றால் சிவ ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்துவிப்பதும் அதில் பூசனை இயற்றுகின்ற பூசகருக்கும் இச்செயலினால் மக்களுக்கும் எவ்வளவு தீங்கு ஏற்படும் என்பதனை விளக்க வேண்டுவது இல்லை. முழுமுதலான சிவபெருமானின் பிற வடிவங்களான முருகன், பிள்ளையார், அம்மை போன்ற திருவடிவங்களையும் சிவலிங்கம் என்ற சிவக்கொழுந்தினையும் துணை தெய்வங்களாக (பரிவார தெய்வங்கள்) வைத்துவிட்டு, காவல் தெய்வங்களான எல்லை தெய்வங்களை, நடுகல் வீரர்களைக் கருவறையில் மூலவராக வைத்துப் பூசனைகள் இயற்றுவதனால் எத்தகைய தீமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தித்தல் வேண்டும். முன்பு காலத்தில் பழக்கத்தினால் நடந்துவிட்ட தவறுகளை எண்ணிப் பார்த்துத் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படுகின்றபோது அவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும். திருக்கோவில்களில் பொது பூசனைகளில் தனி நபர் புகழ் பாடுதலைப் பூசகர்கள் விட்டொழிக்க வேண்டும். பூசனைச் செலவுகளை ஏற்றுக்கொள்பவர், ஆலயத் தலைவர், அறங்காவலர், அரசியல்வாதி, செல்வந்தர், பதவியில் உள்ளவர், என்பதற்காகத் திருக்கோவில் பூசனையை அவர்கள் வருகைக்காகக் காலந்தாழ்த்தி இயற்றுவதுவும் நடு பூசனையில் பூசனையை நிறுத்தி விட்டு அவர்களுக்கு மறியாதைகள் செய்வதுவும் பிறரின் இறை வழிபாட்டிற்குத் தடையாய் இருப்பதோடு சிவ பூசனை விதியை மீறிய தீங்கினையும் விளைவிக்கும். பணம் படைத்தவர்களைத் திருக்கோவில் பூசகர்கள் தனியாகச் சிறப்பாக ஆர்வம் காட்டி வரவேற்பதுவும் ஏழை எளியோருக்கு முகம் சுழிப்பதுவும் சிவபூசை குற்றங்களாகும்.


திருக்கோவிலில் சிவபூசனை இயற்றும் போது அழுக்கான ஆடைகளை அணிந்துக்கொண்டு சிவபூசனை இயற்றுவதுவும் பூசனைக்குத் துணையாய் உள்ள பணியாளர்களைச் சினத்துடன் திட்டித் தீர்ப்பதுவும் சைகை மொழிகள் பேசி சிரிப்பதுவும் இடையிடையே வந்திருக்கின்றவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுவும் சைகை செய்வதுவும் சிவ பூசனைக் குற்றங்களாகும். தவிர சிவ பூசனையில் ஓதப் பெற வேண்டிய பஞ்ச புராணத்திற்கு ஓத இடம் அளிக்காமலும் அதற்கு முதன்மை கொடுக்காமலும் அது ஓதப்பட வேண்டிய முறையைத் தெரிவிக்காமலும் அப்பஞ்சபுராணத்திற்குப் பதில் சிவ வழிபாட்டிற்குப் பொருத்தமில்லாத பாடல்களைப் பூசகர்களும் துணை பூசகர்களும் ஓதி சிவ ஆகம விதியை மீறுதல் குற்றங்களாகும்.


ஆலயத்திற்கும் தனக்கும் வறுமானம் கிட்டும் என்பதற்காகப் புதுப்புது பூசனைகளை அறிமுகம் செய்து மக்களை அறியாமையில் தள்ளுவதும் சிவபூசனை விதிகளை மீறுவதும் பெருந்தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமுலர். மண்டையில் தேங்காய் உடைத்தல், கொதிக்கும் எண்ணெயில் கையை விடல், மண்சோறு உண்டல், புதிய புதிய முறையில் விளக்கு ஏற்றுதல், விலங்குகளைப் பலியிட்டு அதன் குறுதியில் குளிப்பாட்டுதல், தல மரங்களுக்குத் திருக்கல்யாணம் செய்துவித்தல், மண் மேடுகளையும் புற்றுகளையும் வழிபடச்செய்தல் போன்றவற்றைச் செய்து மக்களை அறியாமையில் ஆழ்த்துவது சிவ பூசனைக் குற்றங்கள் ஆகும். திருக்கோவிலின் கருவறையில் பூசனைக்குரிய இறைவன் இருக்க, மரக்கிளைகளிலும் வேர்களிலும் சந்தனத்தையோ மஞ்சளையோ தடவி அதனைப் பிள்ளையார் என்றும் அம்பிகை என்றும் கூறி அதற்கு ஆடை 

அணிகலன்களை எல்லாம் அணிவித்து, அவற்றிற்குத் திருவிழாக்கள் கொண்டாடுவதும் சிவ பூசனைக் குற்றங்களாகும் என்று தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். வேப்பிலை மரத்திற்கும் மாமரத்திற்கும் சேலைகள் அணிவித்து அதனை அம்பிகை என்று வழிபாடு இயற்றும் பூசகர்களினால் மக்களுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு உண்டாகும்; அது சிவ ஆகம விதிக்குப் புறம்பானது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.


திருக்கோயில்களுக்குப் பல சிக்கல்களோடும் துன்பங்களோடும் ஆறுதல்களை எதிர்பார்த்து வருகின்ற அன்பர்களுக்கு அன்பாக, ஆறுதலாக, ஒரு சமய ஆசானாக நல்ல சொற்களையும் ஊக்கம் ஊட்டும் ஏடல்களையும் வழங்காது பல்வேறு இறைக்குற்றங்கள்(தோசம்) இருக்கின்றன, அதற்குத் தீர்வு (பரிகாரம்) பல்வேறு பூசனைகள் இயற்ற வேண்டும் என்று அச்சுறுத்திப் பணம் பறிப்பதும் தேவையற்ற பூசனைகள் இயற்றச் சொல்வதும் சிவ பூசனைக் குற்றங்களே என்கின்றார் திருமூலர். இதனால் அவ்வாறு செய்கின்றவர்களுக்கும் அவர்களை நம்புகின்றவர்களுக்கும் பிறருக்கும் பல்வேறு நோய்களும் தீமைகளும் வந்து அமைவதோடு மட்டுமல்லாமல் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவ சமயத்தின் சீர்மைக்கும் உயர்விற்கும் உண்மைக்கும் ஆளுமைக்கும் களங்கம் ஏற்படும். சினத்தைப் பின்தள்ளி நம் சமயத்தின் உயர்வை முன் வைப்போமாக! உயர்ந்த பொருளை நாடுவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!


வியாழன், 14 மே, 2026

வாழ்க்கையின் தத்துவம்

 வாழ்க்கையின் தத்துவம்



உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்….

ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.

தனித்தனி பிறவிகள்

தனித்தனி ஆன்மாக்கள்

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா…?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!….

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்._அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்… அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

திருச்சிற்றம்பலம்


வெள்ளி, 8 மே, 2026

குரு இல்லாமல் அருள் இல்லை

 குரு இல்லாமல் அருள் இல்லை


ஒரே ஒருவர் தான் குரு.அவரே சச்சிதானந்தம்.

குரு யாரோ அவரே இஷ்டதெய்வம். குருவே இஷ்ட தெய்வத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

ஒருவனுக்கு குருவின் அருள் கிடைத்து விட்டால், அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.

‘இந்தக்காரியங்களை செய். இவற்றை செய்யாதே’ என்று குரு உபதேசம் செய்கிறார். பிறகு அவரே பயன் கருதாமல் சில காரியங்களை செய்யும்படி உபதேசிக்கிறார்.


சீடன் சிறிதேனும் ஞானசாதனை பழகினால், குரு அவனுக்கு ஒவ்வொன்றையும் தானே விளக்குவார்.


குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.

குருவைக் கடவுளாகக் காண்பவன் வெற்றி அடைவான்.

எட்டு பந்தங்களான வெட்கம், வெறுப்பு, பயம், சாதிப்பெருமை, குலப்பெருமை, ஆணவம், துன்பம், இழிவுஆகியவற்றை குருவின் துணையில்லாமல் அவிழ்க்க இயலாது.


குருவின் உபதேசத்தைக் கேட்டதும் உண்மையான பக்தனின் மனம் சலனமின்றி ஒரே நிலையில் நிற்கும்.

உண்மையான பக்தன் குருவின் மொழியை நன்கு புரிந்து கொண்டு, அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஆற்றல் பெற்றிருப்பான்.


குருவிடம் இறைவனை அடையும் மார்க்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தீட்சை தரும் குருவைஸ் சாதாரண மனிதனாக நினைக்கக்கூடாது. அவரை ஈசுவரனாகவே, இறைவனின் பிரதிநிதியாகவே நினைக்க வேண்டும்.


மனமுருகி இறைவனை அழைக்க வேண்டும். ‘என்ன செய்தால் இறைவனை அடையலாம்’ என்று குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.


குரு பூரண ஞானியாக இருந்தால்தான் சீடனுக்கு வழிகாட்ட முடியும்.

– ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து

ஆணவ மலம் நீங்குவது குருவின் திருநோக்கால்

 அறியாமையாகிய ஆணவ மலம் நீங்குவது குருவின் திருநோக்கால்



ஒருவனுடைய உடம்பில் பாம்பு கடித்து ஏறிய நஞ்சு அப்பாம்புக்கு பகையாகிய கீரியே நேரே வந்து,பாம்பு கடித்தவனுடைய உடம்பின்மேல் விழுந்து புரண்டாலும் நீங்காது, ஆனால் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கவல்ல உண்மையான மாந்திரிகன் தன்னை கீரியாக பாவித்து அந்த மந்திரவடிவமாகவே நின்று பார்க்கும் பார்வையினால் அந்த கொடி நஞ்சு நீங்கும்.

   உயிரில் உள்ள ஆணவ மலமாகிய இருள் நீங்குவதும் இந்த முறைமையில் ஆகும். இறைவனே உயிர்குயிராய் உடன் நின்ற போதிலும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை, அவ்விறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தால் மட்டுமே அது நீங்குவதாகும்.

   நூல்களில் கருட பாவனை என ஒன்று சொல்லப்படுகிறது. அதனை அறிந்து கொண்டால் இச்செய்யுளில் கூறப்பட்டுள்ள பாவகன் நிலை் எளிதாக விளங்கும்.உலகிலுள்ள நாம் காணும்  பெளதிக பொருள் ஆன்மீக பொருளான மந்திரத்தை துணையாகக் கொண்டு பெளதிகப்பொருட்களின் மேல் பயன் படுத்தும் போது தைவிகப்பொருளான அதிதெய்வம் தோன்றும்,இதனையே கருட மந்திரத்தில் நாம் காணும் போது அதி தெய்வம் ஆகிய அதிதைவிக கருடன் தோன்றும் அதுவே சிவனது சக்தியாகும். அந்தசத்தியே மந்திரவடிவமாய் நின்று அந்த மந்திரத்தை கணிக்கும் மாந்திரிகனுக்கு தருகிறது. மாந்திரிகன் அந்த சக்தியை தியானிக்கிறான். அந்த சக்தியையே தானாக பாவிக்கிறான். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையினால் அம்மாந்திரிகனது ஆன்மா அந்த சத்தி மயமாய் ஆகிறது. அவன் கருடனாகவே நிற்கிறான். அவன் உடம்பு கருடனாகவில்லை. அவன் மந்திரக்கருடனை நாள்தோறும் தியானித்து பழகிய பயிற்சியினால் அவனுடைய ஆன்மா அக்கருடனே தானாய் நிற்கிறது. அவ்வாறு நின்று அவன் பாம்பினால் கடிபட்டவனைத் தன் மந்திரக் கண்கொண்டு பார்ப்பானாயின் அவ்விடம் நீங்கும். சிவசக்தியே மந்திர வடிவாய்நின்று விடத்தை நீக்கிறது.

  இக்கருட பாவனை போல மாந்திரிகன் மந்திரத்தை தன்னை கீரியாக பாவிக்கிற பாவனை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பாம்பின் விடம் ஏறியவனின் உடலில் கீரி விழுந்து புரண்டாலும் விடம் தீராது, அதுபோல சிவம் உயிரில் பொருந்ததி இருந்தும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்காததற்கு உவமையாகும். மந்திர வடிவாய்நிற்கும் பாவகன் அருள்  மயமாய் நிற்கும் குருவிற்கு உவமையாவான். அப்பாவகன் பார்வையால் விடம் நீங்குதல், குருவின் அருள் நோக்கால் மலம்நீங்குவதற்கு உவமையாகும். இதனை விளக்கும் திருவருட் பயன் பாடல் எண். 47

  விடம் நகுலம் மேவினும் ெமய்ப் பாவகனின் மீளும்

  கடனில் இருள் போவது இவன்கண்.  பாடல் 47

திருச்சிற்றம்பலம்


புதன், 29 ஏப்ரல், 2026

தாடலை போல் ஆன்மாவும் சிவமும்

 

முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்



முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும் முறைமை

திருவருட் பயன் பாடல் 74

" தாடலை போல் கூடியவை தான் நிகழா வேற்றுஇன்பக்

கூடலை நீ ஏகம் எனைக் கொள் "

    ெதளிவுரை ; தாடலை = தாள் + தலை = தாடலை

தாள் ,தலை என்னும் இரண்டு சொற்கள் கூடி இரண்டாக காணப்படாமல்தாடலை என்னும் ஒரு சொல்லாய் நிற்கின்றன.

  இந்த சொற்புணர்ச்சி போல் உயிரும், சிவமும் ஆகிய இரண்டு பொருள்கள் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்தி நிலை என்று கொள்ளவேண்டும்.

   உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு இவ்வாறு சொற்புணர்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தாடலை என்பது தாளும்(பாதமும்), தலையும் என இரு சொல்லே, ஆயினும் அவை இரண்டு என வேறாக காணப்படாமல்ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பது ஒரு சொல் என்றோ, இரு சொல் என்றோ காெள்ளமுடியாது அது போல உயிரும், இறையும் முத்தி நிலையில் கூடும் போது ஒரு பொருளாக ஆகி விடாமலும், இரண்டு பொருளாக நில்லாமலும் வேறின்றி நிற்கும். சிவம் சிவாநுபவத்தை வழங்குபவனாக, உயிர் அவ்வின்பத்தைதுய்ப்பவனாக என்ற வகையில் இரு பொருள்களாக இருந்தாலும், உயிருக்கு தன்னை பற்றிய உணர்வு தோன்றாது அவ்வின்பத்திலேயே மூழ்கி விடுவதால் அங்கு சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும், முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும்முறைமை இதனால் கூறப்படுகிறது.

   தாடலை என்பது போல வேறு புணர்மொழிகள் உண்டு ஆயினும் தாள் என்பது இறைவன் திருவடியையும், தலை என்பது உயிர்களையும் குறிப்பதற்கு பொருந்தி வருவதால் இந்த சொற்களை எடுத்தாளப்பட்டது.

  தாளின் கீழ் தலை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய் ஆன்மா முனைப்பு அடங்கி அருள் வழி நிற்றலைக் குறிக்கும். தலைமீது தாள் வைத்தல் என்பது ஞானாசிரியனாகிய சிவத்தின் செயலாய் பாசத்தை நீக்கி அருள் வழங்குதலை குறிக்கும்

திருச்சிற்றம்பலம்


சைவ சித்தாந்த முத்தி

 சிவப்பிரகாசம் கூறும் சைவ சித்தாந்த முத்தி


சைவ சித்தாந்தத்தில் முத்தி (முக்தி) என்பது ஆன்மா ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாசங்களில் (மலங்களில்) இருந்து விடுபட்டு, இறைவனின் திருவடிகளைச் சார்ந்து, சிவானந்தப் பெருவாழ்வை அனுபவிப்பதாகும். இது 'சிவமாம் தன்மை' (சிவத்தோடு ஒன்றி நிற்றல்) எனப்படுகிறது.

சைவ சித்தாந்த முத்தியின் முக்கிய அம்சங்கள்:

பொருள்: பசுவாகிய உயிர், பதி (சிவன்) அருளால் பாச நீக்கம் பெற்று, பேரானந்தம் அடைவதே முத்தி.

மலம் நீங்குதல்: ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கும் ஆணவ மலம் (அறியாமை) முழுமையாக அழியும்.

சிவமாம் தன்மை: முத்தி நிலையில் ஆன்மா சிவனைப் போலவே அறிவும் ஆற்றலும் பெற்று, அதே சமயம் சிவனுடன் ஐக்கியமாகி (ஒன்றிணைந்து) சிவானந்தத்தை அனுபவிக்கும்.

சிவத் திருவடி சார்பு: ஆன்மா தன் தனித்தன்மையை இழந்து, சிவனுடைய திருவடியில் நிலைபெறும்.

சம்பந்தம்: இது பதி-பசு-பாசம் என்ற முப்பொருள்களின் அடிப்படையில் விளங்கும். 

முத்தி நிலைகள்:

சைவ சித்தாந்தம் முத்தியை 'சிவமாம் தன்மை' என்று கூறினாலும், அது சிவனுக்குச் சமமான நிலை அல்ல, சிவனுடன் ஒன்றிநிற்கும் நிலையாகும்

 இவ்வுலகில் வாழ்கின்ற உயிர்கள் இன்பத்திலும துன்பத்திலும் மாறிமாறி  உழன்று வருவதால் இவ்வுலக வாழ்வு குறை உடையது என்பதை எலலாச்சமயங்களும் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவ்வுலக வாழ்வின் கட்டிலிருந்து விடுபட்டு நீங்கிப் பேரின்ப வாழ°வேனும் வீடுபேற்றை உயிர்கள் எய்த வேண்டும் என்னும் பொதுமைக் கொள்கையில் எல்லா சமயங்களும் ஒன்றுபடுகின்றன.

  ஒவ்வொரு சமயமும் அதன் கொள்கைகளை விளக்கி அவற்றை உள்ளவாறு உணர்தலே ஞானம் என்றும், அந்த ஞானத்தை அடைவிக்கும் செயல்களே தவம் என்றும் அத்தகைய தவத்தை மேற்கொண்டால் தான் வீடுபேறு அல்லது முத்தி அடைய முடியும் என்றும் கூறுகின்றன. அம்முத்திநிலை எத்தகைய தன்மையுடையது என்று விளக்குவதில தான் சமயங்கள் வேறுபடுகின்றன.

   இங்ஙனம் பல்வகையிலும் ேவறுபட்ட கொள்கைகளை உடைய சமயங்கள் கூறுகின்ற முத்தி நிலைகளை கூறி, அவற்றின் மேம்பட்ட சைவ சித்தாந்தத்தின் முத்தி நிலைக் கொள்கையே சிறந்தது என்று சிவப்பிரகாசம் எடுத்துக்காட்டுகிறது.

  மக்களிடத்துத் துய்க்கும் இன்பமே முத்தி என்பது உலகாயதர் கொள்கை, உருவம் முதலிய ஐந்து கந்தகங்களும் கெடுவதே முத்தி என்பது நான்கு வகை பெளத்தர்கள் கொள்கை. முக்குணங்களும் கெடுவதே முத்தி என்பது சமணரின் கொள்கை. வினைகள் கெடுவதே முத்தி என்பது பிராபகர சமத்தின் கொள்கை, ஆணவ மலம் முற்றும் அழிந்து போவதே முத்தி என்பது அகச்சமயமான பேதவாதம் கூறும். இவ்வுடல் முத்தி நிலையிலும் அழியாது நிலை பெற்றிருக்கும் என்பது சிவசமய வாதிகளின் கொள்கை, ஆன்மா என்ற ஒன்றே அழிந்து போவது முத்தியாகும் என்பது பாற்கரமியவாதத்தின் கொள்கை. உயிர் பசு கரணம் கொட்டுச் சிவ கரணம் பெறுவதே முத்தி என்பது அகச் சமயமான சிவ சங்கிராந்த வாதிகளின் கொள்கை, உயிர் ஒன்றையும் அறியாமல் கல்லைப்போல கிடக்கும் நிலையே முத்தி என்பது பாடாணவாதத்தின் கொள்கை. இவ்வாறு பத்து வகையாக சொல்லப்பட்ட முத்திகள் குற்றமுடையன.

   ஆணவம், கனமம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்தும் விடுதலை பெற்று உயிர் அருளோடு கூடி, சிவ பரம்பாெருளோடு பேரின்பத்தை எய்துவே சித்தாந்தத்தின் முத்தி கொள்கையாகும். இதுவே முத்தி பற்றிய சிறந்த கொள்கையாகும்.

   மும் மலங்களோடு அவற்றின் விளைவுகளாகக் கூறபட்ட ஏனைய காரியங்களோடு பொருந்துவதனால் ஆன்மா தனக்கென ஒரு செயல் இன்றி பாசத்தினால் ஈர்க்கப்பட்டு பாச மயமாய நிற்கும். ஆன்மா மேற்கொள்ளும் இடையறாத உண்மை ஞான யோகங்களின் முன் இம் மும் பமலங்களின் குண பேதங்கள் தீ முன்னர் பஞ்சத் துய்ப் போலும்ஆகும். இந்நிலையே திரி மலம் அகலும் நிலை ஆகும். இவ்வாறு திரி மலமும் அகன்ற நிலையில் ஆன்மா அருளோடுங் கூடின இடமே முத்தியாகும். அதாவது ஆன்மாக்கள் சிவனைப் பெறுமிடத்து சிவனுடைய அருட் சத்தியினடமாகச சென்று பெற வேண்டும். இது பற்றிய திருவாசகம் சிவபுராணம் அவனருளாலே அவன்தாள் வணங்கி என்று கூறும். 

  பிறவி பிணயை தருவதாகிய வினைப் போகங்கள் அறவே அழியுமாறு அவச் செயலை போக்கும் தவச் செயல்களை மேற்கொண்டு அருட் சத்தியைவழியிடமாகக் கொண்டு சிவமாம் பேற்றை சார்ந்து சிவபோகமாகிய முத்தி பேற்றை அடைவர் இதுவே அருள்சேர் முத்தி என்பதாகும்

 ஆன்மா பாசத்தில் அழுந்திருக்கும் நிலை கட்டு நிலை, பதியில் அழுந்திருக்கும் நிலை வீட்டு நிலை அல்லது முத்தி நிலை எனப்படும். கட்டு நிலையில் பாசமே தானாய் நின்ற ஆன்மா முத்திநிலையில் பாசத்திற்கு செல்லாது பதியே தானாய்  நிற்கும். அதாவது வீட்டு நிலையில் ஆன்மா திரிமலம் ஆகிய பாசத்தினின்று அகன்று திருவருள் பெற்று, அறிபவனாகிய தன்னையும், தனது அறிவையும் அறியாது சிவம் ஒன்றே அறிந்து அதனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையே சித்தாந்த முத்தி நிலையாகும். இம்முத்தி நிலையே இவ்வுலகத்திற்கு மீண்டும் வாராத நிலை என்றும் இன்பத்தில் இருக்கும் நிலை எல்லாப் பேறுகளிலும் மேலான பேறு பெற்ற நிலையாகும். 

சித்தாந்த முத்தயே நன் முத்தி ஏனைய முத்தி யெல்லாம் முத்தியல்ல என்பதனை சிவஞான சித்தியாரும் கூறுகிறது. சிவனது திருவருளே திருவடியாக சொல்லப் படுமாதலால் அடிசேர் முத்தி என்று சித்தியார் கூறுகிறது. 

  நண்ணரிய சிவாந்த ஞான வடிவமாகி

  அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்  என்று திருநாவுக்கரசர் சிவத்துவம் பெற்றதை சேக்கிழார் பெருமான் அருளிச் செய்வர். எனவே நம் சிவகாம தோத்திர சாஸ்திரங்கள் புராணங்கள் அனைத்தும் சைவ சித்தாந்த முத்திப்பேறே முத்தி பேறு என்பதை அறியலாம்,.

  இங்ங்னம் முப்பொருள்கான பதி, பசு பாசம் பற்றிய இருப்பையும், அவைகளின் இலக்கணங்களையும் சிவப்பிரகாசம் விரிவாக விளக்கி காட்டுகிறது. ஆன்மா அடையும் கேவல, சகல நிலைகளையும் பின் திரிமலம் அறுத்து ஞானம் பெற்று இறைவன் திருவடி அடையும் சுத்தநிலையையும் அவத்தைகள் மூலமாக எடுத்துரைக்கிறது, எனவே சைவ சித்தாந்த முத்தியே ஞான முத்தி சிவனருள் முத்தி

திருச்சிற்றம்பலம்

நன்றி உமாபதியாரின் சிவப்பிரகாசம்

வியாழன், 16 ஏப்ரல், 2026

சிவ ஞானத்தை அடைய

 சிவ ஞானத்தை அடைய


 இறைவனை அறிய முதலில் உன்னைஅறி

உன்னை அறிய குருவை தேடு

உலகில் ஈடுஇணை அற்றது  இறை நிலையே

இறைவனை பிடிக்க வேண்டின் குருவை பிடி குருவே துணை

அன்பில்லா இடத்தில் சிவத்தை அறிய / அடைய முடியாது

அன்பேயே கொடு அன்பையே பெறு

அன்பும் அமைதியும் சிவனின் இருப்பிடம்

உன்னில் நிறைந்த பொருள் சிவம் அதுவே ஜீவனுடன் கலந்துள்ளது

உடலை இயக்குவது உயிர் அந்த உயிரை இயக்குவது சிவமே

இறைவனை அடைய இறைவனாகிய குருவே உதவ முடியும்

இறைவனை அடைய இறைவன் நாமம் மட்டுமே உதவும்

இறைவனின் ஒர் நாமத்தை தேர்வு செய் அதில் லயப்்பட்டு கரைந்து விடு

மன விடுதலை இறைவனால மட்டும் தான் தரமுடியும்

சிந்தித்தால் மட்டுமே சிவம்

உன்னை ஜீவனாக பார்க்காதே சிவமாக பார் சிவனாகி போ

மன விடுதலை இறைவனால் மட்டுமே தரமுடியும்

சித்தத்தை சிவன்பால் வை. 

சிவனை அறிந்தபின் நாம் எவரையும் அறிய வேண்டோம்

சுத்த சிவம் எழுவது குருவுக்குள்ளே

உருகி உருகி அழைக்க சிவம் பெருகி பெருகி நிற்பான்

அன்பே சிவம் சிவமே அன்பு 

பக்தி மற்றும் சரணாகதி: சிவபெருமானை முழுமையாக நம்பி, அவரிடம் சரணடைவது முதல் படியாகும்.

தியானம் (Meditation): மனதை அடக்கி, சிவபெருமானின் வடிவம் அல்லது "சிவாயநம" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்வது சிவஞானத்திற்கு வழிவகுக்கும்.

நிஷ்காமிய சேவை: தன்னலமற்ற செயல் (Selfless service) மூலம் அகங்காரம் நீங்கி, சிவனருள் கிடைக்கும்.

நூல் கல்வி மற்றும் அனுபவம்: சிவ புராணங்கள், சைவ சித்தாந்தம் போன்றவற்றைப் படித்து, அதன்பின் ஞானத்தை அனுபவபூர்வமாக உணர்வது.

யோகப் பயிற்சி: உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி, மூச்சுப் பயிற்சி (Pranayama) மற்றும் சக்கர தியானம் மூலம் சிவ சக்தியை உணரலாம்.

வாழ்க்கை முறை: பொய், வன்முறை தவிர்த்து, உண்மை, தூய்மை மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற தர்மங்களை கடைப்பிடிப்பது. 

 உண்மையான ஞானம் சற்குருவின் அருளாலும், தொடர்ச்சியான பயிற்சியாலும் மட்டுமே கிடைக்கும்

திருச்சிற்றம்பம்


சற்குருவைப் பேதித்தால் எல்லாம் பிழையாகும்.

 சைவ சித்தாந்த துளிகள்


சாதித்த தெல்லாம் தவமேனும் சற்குருவைப் பேதித்தால் எல்லாம் பிழையாகும்.

  ஒருவன் பொறிகளை தன் வசப்படுத்தி சாதித்தன எல்லாம் தவமே ஆனாலும் உபதேசம் அருளும் ஞானாசிரியனை சிவத்தின் வேறாகக் கருதி முரண்பட்டால் அத்தவம் அனைத்தும் பிழைபடும். வேத விதிப்படி யாகம்செய்த தக்கனுக்கு முப்புரம் எரித்த நிகழ்வானது அவன் செய்த சிவநிந்தையால் சிவபெருமான் ஆணை வந்து பொருந்திய தன்மையால் விளங்கியது போலாம் 

  தவம் என்று இ்ங்கு குறிப்பிட்டவை இறப்பில் தவம் என்று சிறப்பிக்கப்டும் சரியை, கிரியை, யோகம்ஆகியன. இம்மூன்றும்சைவமாம் சமயம் சாரும் நல்லூழ் கைகூடப் பெற்று பல பிறவிகளில் தொடர்நதுஇயற்றப்பெறுவன. ஆகையால் இவற்றை சாதித்தல் அதாவது முற்றுப்பெற செய்தல் அரிதாகும். எனவே சாதித்ததெல்லாம் தவமேனும் என்று அதன் அருமைகாட்டி கூறபடகிறது.

 அரிய தவங்களை ஆன்மா சாதித்தாலும் தானாகவே சுதந்திரமாக சாதிக்கவி்ல்லை சிவபெருமான் தோன்றா துணையாக விளங்கி தவநெறியினை அறிவித்து அந்நெறியில் ஆன்மாவை செலுத்துவான். அவன் அருளால் ஆன்மா தவப்படிமுறையில்  இயற்றி முற்றவிக்கிறது.

இவ்வாறு தோன்றாதுணையாக இருந்து ஆன்மா தவநெறியை முற்றவிக்க அருள்செய்த முதல்வனேசற்குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்த்துவான். எனவே இந்நிலையில் மாணாக்கன் சற்குருவோடு முரண்பட்டு எதிர்த்தால் அது சிவபிரானையே எதிர்ப்பதாகும.யாரை தோன்றா துணையாக கொண்டு தவத்தை இயற்றினானோ அந்த முதல்வனையே எதிர்த்தால் செய்நன்றி கொன்ற குற்றம் பொருந்தி இயற்றி தவம் அனைத்தும் பிழைபட்டுபோகும் எனவே சாதித்தது எல்லாம் தவமெனும சற்குருவை பேதித்தால் எல்லாம் பிழையாகும் என்று கூறப்படுகிறது  

  அறிவுக்கு அறிவாக விளங்கும் சிவபிரானே குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்ததுவான் தன் முதல் குருவுமாய் தவத்தினில் உணர்த்த என்னும சிவஞான போதத்தால் பெறப்படும். இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆ்ண்ட குருமனிதன் தாள் வாழ்க என்னும் இரண்டு அடிகளையும் இணைதத்து நோக்கினால் இவ்வுண்மை விளங்கும்  

  சற்குருவை எதிர்த்தால் சிவபிரானை எதிர்த்தலே ஆகும் என்று உண்மை இனிது விளங்கும். சிவநிந்தை செய்த தக்கன் வரலாறு சான்றாக காட்டப்பட்டது.

 ஞானாசிரியன் கருணையை மறந்து மாறுபடுதல் எவ்வளவு பிழை என்பதனை உணர்க

திருச்சிற்றம்பலம்

நன்றி சித்தாந்த சிகாமணி

திங்கள், 13 ஏப்ரல், 2026

சைவ சித்தாந்தம் / நிட்டைபேறு

 நிட்டை பேறு


சைவ சித்தாந்தம் / நிட்டைபேறு

 நிட்டை என்பது நிலைப்பேறு ஆகும்.உண்மை ஞானம் நான்கினுள் ஒன்று, கேட்டு சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி நிற்றல். முத்தியே நிலைபேறு. ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே என்பதால் அந்த ஈசனாகிய சிவபெருமான் திருவடிப்பேறே நிட்டை .நிட்டை பேறு என்பது சைவ சித்தாந்தத்தில் ஞான பாதத்தின் உச்சக்கட்ட நிலையான, இறைவனுடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலை (சமாதி) ஆகும். இது கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகியவற்றிற்குப் பின் வரும் இறுதி நிலையான ‘நிட்டை கூடல்’ ஆகும். இது தியானம், நோன்பு, நிலைபேறு, அல்லது தற்போதத்தை (அகங்காரம்) இழந்து சிவனை உணரும் நிலை எனப் பொருள்படும்

படிநிலைகள்: ஞான நெறியில் சரியை, கிரியை, யோகக் பயிற்சிகளுக்குப் பின், பக்குவம் பெற்ற சாதகன் அடையும் நான்காவது மற்றும் இறுதி நிலை.

  சிவபெருமான் எப்ேபாதும் ஒரு நிலையில்விளங்கும் சத்து. உயிர்களோ சார்ந்ததன் வண்ணம் விளங்குவன. நிலையற்ற அசத்தாகிய உலகத்தைச் சார்ந்து அசத்தாம் தன்மை கொண்டு உழன்று வரும் உயிர்கள் சத்தாகிய சிவத்தைச் சார்வதன் மூலம் நிலைப்பேற்றினை அடைய முடியும்.

  நிலைப்பேறாம் நிட்டை கூடுதல் இறுதிநிலை. சிவஞானிகளுக்கு மட்டுமே இந்தச் சாதனையினை நிகழ்த் இயலும். அவர்களுக்கே கூட நிட்டை கூடும் இறுதிநிலையில் இடையூறுக்கு காரணம் பண்டைப்பயிற்சியாம் உடல் சார்பே. உடல்சார்புக்கு காரணமாய் விளங்கும் மலவாதனையை முற்றிலுமாக நீக்கி,உடல் சார்பினைபற்றறக் களைந்து சிவபொருமான் திருவடியைச் ேசர்வதற்கு தக்க உபாயங்களைத் தெரிவிக்கும் நூல்கள் உபாய நிட்டடை வெண்பா.

  இப்போது நாம் செய்து வருகின்ற சிவவழிபாடுகள் யாவும் ஞான நிட்டையினையே இலக்காக கொண்டுள்ளன. எனவே இலக்கினை பற்றித் தெளிவாக அறிந்து கொண்டால் தான் இலக்கினை நோக்கிச் செய்யும்பயணமாகிய சரியை, கிரியை, ஆகியன ஊக்கமுடன் செம்மையாகநடைபெறும். பயணத்தை நோக்கபவர் சென்றடையும் இடம் தொலைவில் இருப்பினும் அவ்விடத்தினை அடையும் போது தோன்ற வாய்ப்புள்ள இடர்பாடுகளையும், அவற்றை களையும் முறையினையும் முன்னரே உணர்ந்து கொள்வது நன்மைதானே ேமலும் சிவனடியார் பெருமக்கள் தம் பக்தியைப் பெருக்கி நிட்டைக்கும் தமக்கும் உள்ள தொலைவினைக் சுருக்கிக் கொள்ள அவனருள் ேவண்டி நிற்றலன்றோ இயல்பு. அதற்கு நல்ல துணையாக விளங்கும் ஈடு இணையற்ற சாத்திரம் உபாய நிட்டை வெண்பா. நிட்டை கூடுதல் பெருநிலையாக இருக்கவும், அந்நிலையினை எல்லோரும் இப்போதே எய்தலாம் என்று கூறிவருகின்ற போலி கருத்துக்களும் இருந்து வருகின்றன.போலி நிட்டையினை மறுத்து உண்மை நிட்டையானது சரியை, கிரியை, யோகம் என்னும் சிவவழிபாடுகளைப் படிமுறையில் உரிய தீக்கைகளைப் பெற்று செம்மையாக இயற்றுவதன் மூலமே எய்தப்பெறும்.

திருச்சிற்றம்பலம்

தகவல் தொகுப்பு; பாண்டார சாஸ்திரம்

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்

 ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்


அன்பு நண்பர்களே , வணக்கம் .


ஐந்திற்குள் அடங்கிய (இயற்கையின் ஐந்து நிலைக்குள்) அனைத்தும் என்னென்று பார்ப்போம்.

ஐந்தாக அமைந்தவைகள்


* பஞ்சபுராணம் –                                                                                                                            தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு,                       பெரியபுராணம்.

 

* பஞ்ச கங்கை –                                                                                                                              ரத்ன கங்கை,தேவ கங்கை,கயிலாய கங்கை,உத்ர கங்கை, பிரம்ம    கங்கை.

 

* பஞ்சாங்கம் –                                                                                                                                  திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.



* பஞ்ச ரிஷிகள் –                                                                                                                            அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.


* பஞ்ச குமாரர்கள் –                                                                                                                    விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.


* பஞ்ச நந்திகள் –                                                                                                                            போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,


* பஞ்ச மூர்த்திகள் –                                                                                                                    விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.


* பஞ்சாபிஷேகம் –                                                                                                                      வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை            கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,    விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை

பொருட்கள் கலந்த கந்த தோதகம்.

 

* பஞ்ச பல்லவம் –                                                                                                                       அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.

 

* பஞ்ச இலைகள் –                                                                                                                        வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.


* பஞ்ச உற்சவம் –                                                                                                                          நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.

 

* பஞ்ச பருவ உற்சவம் –                                                                                                          அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை                     அஷ்டமி,மாதப்பிறப்பு.


* பஞ்ச பூதங்கள் –                                                                                                                          நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.


 


* பஞ்ச சபைகள் –                                                                                                                          ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.

 

* பஞ்ச ஆரண்யம் –                                                                                                                      உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,                                    அர்த்தஜாமம்.


* பஞ்ச முகங்கள் (சிவன்)-                                                                                                       தத் புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்.


 


* பஞ்ச முகங்கள் (காயத்திரி)-                                                                                              பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.


* பஞ்ச மாலைகள் –                                                                                                                      இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.

* பஞ்சமா யக்ஞம் –                                                                                                                      பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம்,                       மானுஷ்ய யக்ஞம்.

 

* பஞ்ச ரத்தினங்கள் –                                                                                                                   வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.


* பஞ்ச தந்திரங்கள் –                                                                                                                    மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.


 


* பஞ்ச வர்ணங்கள் –                                                                                                                   வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.

 

* பஞ்ச ஈஸ்வரர்கள் –                                                                                                                  பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்.

 

* பஞ்ச கன்னியர்கள் –                                                                                                               அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.

 

* பஞ்ச பாண்டவர்கள் –                                                                                                              தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.

 

* பஞ்ச ஹோமங்கள் –                                                                                                                கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.

 

* பஞ்ச சுத்திகள் –                                                                                                                ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.

 

* பஞ்ச கோசம் –                                                                                                          அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.


 

* பஞ்ச காவ்யம் (பசு)-                                                                                                                பால், தயிர், நெய், கோமியம், சாணம்.

 

* பஞ்ச லோகம் –                                                                                                                             தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.

 

* பஞ்ச ஜீவநதிகள் –                                                                                                                     ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.


 


* பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) –                                                                                சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.


 


* பஞ்ச நிலங்கள் –                                                                                                                           குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.


* பஞ்ச காப்பியங்கள் –                                                                                                              மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.

 

* பஞ்சமா பாதகங்கள் –                                                                                                           காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.

 

* பஞ்ச சயனம் –                                                                                                                              அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்.

 

* பஞ்ச புராண ஆசிரியர்கள் –                                                                                                நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்

 பரம்பொருள் தனக்கு உவமை இல்லாதவன் என்றும், தான் பிறரைத் தொழாதவன் என்றும், பிறப்பு இறப்பு அற்றவன் என்றும் கண்டோம். எது பரம்பொருள்? எது முழுமுதல்? எது உண்மையான கடவுள்? எத்தகைய கடவுள் முழுமுதல் கடவுள் எது வழிபடுவதற்கு உரியது அல்ல? என்பதனைச் சித்தாந்த சைவ மெய்கண்ட நூலான சிவஞான சித்தியார் விளக்குகின்றது.

உலக உயிர்வகைகள் எல்லாம் நால்வகையிலேயே தோன்றுகின்றன. அவை முட்டை வழி தோன்றுவன, வியர்வை வழி தோன்றுவன, விதை, வேர், கிழங்கு வழி தோன்றுவன, கருப்பையில் தங்கித் தோன்றுவன என்பனவாம். முட்டை வழி பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் தோன்றும். வியர்வையிலே கிருமி, பேன், புழு, வண்டு, சில ஊர்வனவும், விட்டில் பூச்சி முதலியனவும் தோன்றும். வித்து அல்லது விதை, வேர், கொம்பு, கொடி, கிழங்குகள் போன்றவற்றில் தாவரங்கள் தோன்றும். கருப்பையில் தங்கி வானவர்கள், மாந்தர்கள், நாற்கால் விளங்குகள் தோன்றும். இவ்வாறு தோன்றுவனவே நால்வகைத் தோற்றத்துக்கு உட்படுவன எனப்படுபவை. இவை அனைத்துமே உயிர் வகைகள்தாம். இவை எழுவகைப் பிறப்பிற்கு உட்பட்டு இறத்தலை அடையும். எழுவகை பிறப்பு எனப்படுவது வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவையாகும். இவை அனைத்தும் பிறப்புத் இறப்புக்கு உட்படுவதனால் இவை ஒருபோதும் பரம்பொருளாக, வழிபடும் முழுமுதல் பொருளாக ஆக முடியாது என்று சிவஞான சித்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது.

பிறந்து இறப்பது எல்லாம் பரம்பொருளாகாது என்ற தெளிவின்மையினால் தான் இன்று வழிபாட்டில் பல்வேறு குளறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன. மருத்துவத் தன்மை வாய்ந்த தாவரங்கள் இன்று கடவுளாக மாறியிருக்கின்றன. விதை, வேர், கிழங்கு போன்றவற்றில் இருந்து தோன்றி மடியும் வேப்பிலை, அரச மரம், ஆல மரம், கொன்றை மரம், வில்வம், அறுகம் புல், துளசி, எருக்க வேர், வன்னி, போன்ற தாவரங்கள் பரம்பொருளினைப் போன்று எண்ணப்பட்டு வழிபாட்டிற்குரியனவாகி நிற்கின்றன. சித்த மருத்துவத்திற்கும், பெருமானின் திருநீராட்டிற்கும் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளான அவை இன்று கடவுளர்களாக மாறியிருக்கின்றன. பரம்பொருளை வழிபடுவதை விடுத்துத் தாவரங்களை வழிபட்டு, உண்மை வழிபாட்டிற்கு வேறுபட்டு நிற்கின்றனர்.

சித்தாந்த சைவத்தில் அடையாளங்களும், சின்னங்களும், உருவகமும் முதன்மை பெறுகின்றன. அவற்றில் புராண அடிப்படையில் உணர்த்தப் படும் உண்மைகள் உருவகமாக உணர்த்தப்படுகின்றன. கட்டியமாக ஓம்காரத்தை யானை முகம், குண்டலினியை உணர்த்தும் பாம்பு, திருந்திய உயிரை உணர்த்தும் மயில், சேவல், ஆடு, சுண்டெலி போன்றவை. இவை அனைத்தும் உயிர்வகைகளே! இவற்றை வழிபடுவது பயனற்றது! இவற்றைப் பரம்பொருளாக வழிபடுவது ஆகாது என்று சைவம் குறிப்படுகின்றது.
தவிர, கருடன், பல்லி, தவளை, மீன் போன்றவை நம்பிக்கையின் அடிபடையில் சகுணங்களாக இடம்பெறுவனவே யன்றி, அவை ஒருபோதும் நம் பிறவி அறுவதற்குத் துணை நிற்க இயலாது. ஏனெனில் அவையும் பிறப்பு இறப்புக்கு உட்படுபவைகளே!

அன்னையும் பிதாவும் முன்னேறிதெய்வம் என்று நன்றியினால் நம் பெற்றோர்களையும் நம் முன்னோர்களையும் வணங்க வேண்டுமே தவிர, அவர்கள் நம் வழிபாட்டிற்குரிய முழுமுதல் பொருளாக முடியாது. கரணியம் அவர்களும் பிறப்புக்கும் இறப்பிற்கும் உட்படுபவர்களே! உலகக் கல்வி ஆசான்களும் சமயக் கல்வி ஆசான்களும் வணக்கத்திற்கு உரியவர்களேயன்றி பரம்பொருளைப் போன்று வழிபாட்டிற்கு உரியவர்கள் அன்று! இன்று பலரும் பரம்பொருளை வழிபடாது தத்தம் சமய ஆசான்களைக் கடவுள் என்று எண்ணி வழிபடுவதும் தவறு என்று சித்தாந்த சைவம் குறிப்படுகின்றது. பிறப்பு இறப்பினுக்கு உட்படும் சமய ஆசான்களைப் போன்றே காவல் தெய்வங்களாகவும், நடுகல் தெய்வங்களாகவும், கிராமத்துத் தேவதைகளாகவும், வானுலகில் வாழ்கின்ற வானவர்களாகவும் (தேவர்களாகவும்) பிறந்து இறக்கின்ற அனைவருமே உயிர்வகைகள்தாம். இவற்றிற்கு இறைவன் சிற்சில ஆற்றல்களைக் கொடுத்திருப்பினும் முழுமுதற் பரம்பொருள் என்று சைவர்களுக்கு வழிபாட்டிற்கு உரியவன் சிவப்பரம் பொருளே! அவனே பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவன். மற்றைய அனைத்தும் உயிர் வகைகளே! அவை வணக்கத்திற்கு உரியவையே அன்றி வழிபாட்டிற்கு உரியவை அன்று என்பதே சித்தாந்த சைவத்தின் தலையாய கொள்கை!
திருச்சிற்றம்பலம்


புதன், 1 ஏப்ரல், 2026

சப்த விடங்க தலங்கள்

  சப்த விடங்க தலங்கள் 


 தமிழ்நாட்டில் திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு வரலாற்றுச் சிறப்புமிக்க, உளியால் செதுக்கப்படாத (விடங்கம்) சுயம்பு சிவலிங்கங்கள் கொண்ட கோயில்களாகும். முசுகுந்த சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்தத் தலங்களில், தியாகராஜர் ஏழு வெவ்வேறு வடிவங்களில் நடனமாடி அருள்பாலிக்கிறார். அவை: திருவாரூர், திருநள்ளாறு, நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், மற்றும் திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்

சோழ மன்னர்களில் ஒருவரான முசுகுந்த சக்கரவர்த்தி, தேவேந்திரனுக்கு உதவியதற்காகப் பரிசாகப் பெற்ற ஏழு மரகத லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களே “சப்த விடங்கத் தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.


“விடங்கம்” என்றால் உளியால் செதுக்கப்படாத சுயம்பு என்று பொருள். இந்த ஏழு தலங்களிலும் தியாகராஜப் பெருமான் வெவ்வேறு விதமான நடனங்களை ஆடுகிறார் என்பது தனிச்சிறப்பு.


1. திருவாரூர் – வீதி விடங்கர்


• நடனம்: அஜபா நடனம்.


• சிறப்பு: இது சப்த விடங்கத் தலங்களில் முதன்மையானது. மூச்சுக் காற்றின் அசைவைப் போன்ற நடனத்தை இங்கு தரிசிக்கலாம்.


2. திருநள்ளாறு – நகர விடங்கர்


• நடனம்: உன்மத்த நடனம்.


• சிறப்பு: சனி பகவான் வழிபட்ட தலம். இங்கு இறைவன் பித்தரைப் போல ஆடும் உன்மத்த நடனம் மிகவும் பிரபலம்.


3. திருநாகை (நாகப்பட்டினம்) – சுந்தர விடங்கர்


• நடனம்: வீசி நடனம்.


• சிறப்பு: கடலலைகள் வீசுவதைப் போன்ற மென்மையான அசைவுகளுடன் ஆடும் நடனம் இது.


4. திருக்கார்வாசல் – ஆதி விடங்கர்


• நடனம்: குக்குட நடனம்.


• சிறப்பு: சேவல் தன் இறக்கைகளை அடித்துக் கொள்வதைப் போன்ற வேகமான நடனத்தை இங்கு காணலாம்.


5. திருவாய்மூர் – நீல விடங்கர்


• நடனம்: கமல நடனம்.


• சிறப்பு: தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவதைப் போன்ற நடனம் இங்கு விசேஷம்.


6. திருமறைக்காடு (வேதாரண்யம்) – புவனி விடங்கர்


• நடனம்: ஹம்சபாத நடனம்.


• சிறப்பு: அன்னப் பறவை அடி எடுத்து வைப்பதைப் போன்ற நடன அசைவுகளைக் கொண்டது.


7. திருக்குவளை – அவனி விடங்கர்


• நடனம்: பிருங்கி நடனம்.


• சிறப்பு: வண்டு மலரைச் சுற்றி வருவதைப் போன்ற நடன அமைப்பைக் கொண்டது.


இந்த ஏழு தலங்களையும் தரிசிப்பது பிறவிப் பிணியைப் போக்கி, மன அமைதியையும் இறை அருளையும் அள்ளித்தரும்

சனி, 21 மார்ச், 2026

சைவ சித்தாந்த சிந்தனைகள்


 சைவ சித்தாந்த சிந்தனைகள்

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்
திருவருட் பயன் பாடல் எண் 54
ஊன் உயிரால் வாழும் ஒருமைந்தே,ஊனொடு உயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தாம்
உடம்போடு உயிர் சேர்ந்து ஒன்றாகி இருக்கிறது.உடம்பும் உயிரும் பொருளால் இரண்டு ஆயினும் இரண்டு என்ற தன்மை தோன்றாதபடி உயிர் உடம்போடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. உடம்போடு கூடிய உயிர் அறிவு வடிவான திருவருளோடு ஒன்று பட்டு நிற்கிறது. இவ்வாறு திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போல் என்றால் உடம்பும் உயிரும் காெண்டுள்ள ஒற்றுமையைப் போல் போன்றதாகும்.
உடம்பில் கலந்துள்ள உயிர் தன் இருப்பை சிறிதும் புலப்படுத்தாது,உடம்பு ஒன்றே உள்ளது என்பது போல் அதனுடன் ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அது போலவே திருவருள் உயிராேடு நீக்கமின்றி எப்போதும் கலந்திருப்பினும், தன் இருப்பை புலப்படுத்தாது உயிர் ஒன்றே உள்ளது என்னும் படியாக ஒற்றுமைப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இரு பொருள்களுக்கிடையே இரண்டன் தன்மை தெரியாதவாறு அவை இயைந்து நிற்கும் ஒற்றுமைத் தொடர்பு அத்துவிதம் என்றும் அத்துவித சம்பந்தம் என்றும் சொல்லப்படும்
அத்துவிதம் என்ற சொல் இரண்டன்று (துவிதம் 2) என்றால் அத்துவிதம் 2 அன்று என்று பொருள்படும், என ேவற்றுமை படாமையை குறித்து நிற்கும்
ேவற்றுமை படாமையாவது இது சிவப்பகுதி, இது ஆன்மா பகுதி என பிரித்தறிய வாராத நிலை எனவே ஒற்றிற்று நிற்றல் எனப்பெறப்படும்
தன்மையால் இரண்டாதல், வேற்றுமையால் / கலப்பால் ஒன்றாதல் ஒற்றமை.இரு பொருள்களும் கலப்பால் ஒன்றாயும், தன்மையால் வேறாயும் நிற்றல்.
உயிர் செலுத்தவே உடம்பு செயல்படுகிறதே தவிர, உடம்புக்கு என்று தனிசெயல் இல்ைல ஏனெனில் உடம்பு சடப்பொருள். அது போல திிருவருள் செலுத்தவே உயிர் செயல்படுகிறதேயன்றி, திருவருள் துணை இன்றி உயிருக்கு தனிச் செயல் சுதந்திரம் இல்லை.
திருவருள் தன்னுடன் எப்போதும் பிரிப்பின்றி கலந்திருக்கிறது என்பதையும், அதனுடைய துணை தன் அறிவு விளக்கத்திற்கு இன்றியமையாதது என்பதையும் உயிர் உணர வேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும். மொத்தத்தில் உடலை உயிர் இயக்குகிறது, உயிரை திருவருள் இயக்குகிறது, திருவருள் துணையினால் தான் உயிர்களுக்கு கட்டு நிலையில் ( கேவல நிலை / பிறப்பு நிலையில்) பொது இயல்பும், முத்தி நிலையில் தன் இயல்பும் விளங்குகின்றது.
உயிர் அறிவதற்கு திருவருள் துணை வேண்டு்ம்
கண்ணானது காணும் தன்மை உண்டு இருப்பினும் கண் காண ஒளி (ெவளிச்சம்) வேண்டும் அவ்வாறு ஒளி இல்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.
உயிர் உடன் நின்று செலுத்துவதால் தான் கண் ஒரு பொருளைக் காண முடிகிறது. ஆனாலும் கண்ணுக்கும் உயிருக்கும் இடையே ஒளி நின்று உதவினால் தான் கண் காணமுடியும். ஒளி இல்லையென்றால் உயிர் உடனின்றும் கண் காண இயலாது/ முடியாது.
கண் போல் உயிர். உயிர் உடன் நின்று செலுத்துவே கண் காணுமே அன்றி தானாக காணாது. உயிரின் அறிவு விளங்குவதற்காக திருவருள் கருவி கரணங்களை கூட்டு விக்கிறது. அதோடு மட்டுமன்றி கருவிகளுக்கும் உயிருக்கும் இடையே நின்று திருவருள் ஒளி செலுத்துகிறது. அவ்வாறு திருவருள் ஒளி செலுத்தாவிட்டால் உயிர் அறிய இயலாது.
திருச்சிற்றம்பலம்

துன்பங்களும் துயரங்களும்!

 துன்பங்களும் துயரங்களும்!


நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுப்போல நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்து செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்து விடுவதற்கு அல்ல.
ஓரு மனிதனின் வாழ்க்கை என்பது எல்லாத் துன்பங்களையும், சோதனைகளையும் பிரச்னைகளையும் எதிர்த்து நின்று போராடி அதில் வெற்றி காண்பதில் தான் உள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை (ஹெலன் கெல்லர்).
ஓரு கப்பலானது கடல் தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சீறி எழும் அலைகளையும் வீசியடிக்கும் காற்றையும் எதிர்கொண்டு செல்வதால் தான் அதன் இலக்காகிய மறுக்கரையை சென்றடைகிறது. ஓருவேளை அங்கே பிரச்சனை என்றாலும் கூட அந்தக் கப்பலை கரை சேர்க்க மாற்றுவழி அங்கு செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கப்பலும் விபத்து என்றவுடனே அங்கே விட்டுவிட்டு வரப்படுவது இல்லை.அதன் இலக்காகிய கரையை சென்றடைய வழி கண்டுபிடிக்கப்படுகிறது, கரையை சென்றடையவும் செய்கிறது. அப்படியிருக்க நாம் ஏன் ஒருச் செயலைச் செய்யத் துவங்கும்போது பிரச்சனைகள் வந்தவுடன் அந்தச் செயலை விட்டுவிடுகிறோம். அந்தச் செயலைச் செய்வதனால் பிறரால் நமக்கு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதவர்களாய் தற்கொலை முடிவுகளை எடுக்க வேண்டு்ம்?
இன்னல்கள் வரும் போது இறக்க நினைத்தால் நாம் பிறந்ததில் அர்த்தம் இல்லை. இன்னல்கள் (துன்பம்) என்றதும் வேலையை பாதியில் விட்டுவிடுவதும், தற்கொலை முடிவுகளை எடுப்பதும் கோழைத்தனமே. பிரச்சனை என்ற ஓன்று இருப்பின் தீர்வு என்ற ஓன்று நிச்சயம் இருக்கும். சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிக்கப்படுவதில்லை. பிரச்சனைக்கு தீர்வு காண்பதே மனிதனின் அழகு.
துன்பங்களைக் கண்டு எந்த உயிரினமும் சோர்ந்துப் போவதும் இல்லை. தற்கொலை செய்துக் கொள்வதும் இல்லை. வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அனுபவத்தின் வாயிலாக பல பாடங்களை கற்றுத் தந்து மீண்டும் அந்தச் செயலை மாற்றுப்பாதையில் தொடர வழிகாட்டுகிறது. துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு ஓய்வதால் வாழ்க்கையில் ஏதையும் சாதித்துவிடப்போவதில்லை. சோதனைகளை எதிர்த்து துன்பங்களை விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது.
வாழ்க்கை என்பது பிரச்சனைகள் நிறைந்தது தான். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. இதனை விவேகானந்தர் இவ்வாறு கூறுவார்.
உன் வாழ்க்கையின் எந்த ஓரு நாளில் நீ ஏந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல், நீ முன் செல்கிறாயோ அப்பொழுது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய் என்று அறிவாய்.
ஆம், என்ன செய்தாலும் குறை கூறும் உலகு நல்லது செய்ய தடையாக பிரச்சனைகளை எழுப்பாதா என்ன?
சோதனைகள் வளர்ச்சிக்கே. சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்வு நிச்சயம் வளர்ச்சியைத் தராது. இந்தத் துன்பங்களும், சோதனைகளும், தடைகளும், வாழ்வை பண்படுத்தவே.

சித்தர்

 சித்தர்




அடியார்க்கு நல்லார், சித்தன் என்னும் சொல்லுக்குப் பொருளாகச் சித்தன் கிருத கிருத்தியன்செய்ய வேண்டுவன வற்றைச் செய்து முடித்தவன், கன்மங்களைக் கழுவினவன் எண்வகைச் சித்திகளையும் உண்டாக்கின்றவன் என்று விளக்குகிறார்.

சித்தர்கள் கன்மங்களைக் கழுவி, எண்வகைச் சித்துகளை உண்டாக்கி, பக்தி நெறியல்லாத வேறொரு நெறியில் ஒழுகி இறைவனைக் கண்டு தெளிந்தனர் என்று அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும், மு. அருணா சலமும் தெரிவிக்கின்றனர்.

சித்தர் தன்மைகள்

சித்தர்கள் சமயக் கோட்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தங்களுக்கென்றொரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதன் வழி ஒழுகினர். மத மாச்சரியங்கள், சாதி பேதங்கள், உயர்வு தாழ்வு இவை அனைத்தையும் கடந்து நின்றார்கள். சித்தர்களைப் பற்றிய பல்வேறு கதைகளும் கருத்துகளும் நாட்டில் நிலவி வருகின்றன. சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாம் செவி வழியாகவும் நூல் வழியாகவும் மட்டுமே கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன.
சித்தர்கள், உலகத்தின் பொருள் வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வழியை வகுத்துக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
பயனுடையவை எவை என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் காணப்படுகின்றனர்.

நோயற்ற வாழ்வும் சாகாநிலையும் மனிதன் அடையக் கூடிய இடம் என்று நிரூபித்தனர். சித்தர்களின் முறைகள் அறிவியல் பார்வைக்கு உடன்பாடாக இருக்கின்றன.
சித்தர் செயல்களைத் தோற்றுவித்தவராகச் சிவனையும், தமிழகத்தில் சித்தர் மரபை உருவாக்கியவராகத் திருமூலரையும் குறிப்பிடலாம்
திருச்சிற்றம்பலம்

சிவ மானஸ பூஜா

 சிவ மானஸ பூஜா – தமிழில்


பூஜா என்றால் தெய்வத்தின் மீதான பக்தியில், பிரேமையில் மனம் மலர்தல் என்பது பொருள். முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.
நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம் – அன்பே
மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே
என்கிறார் தாயுமானவர்.
இத்தகைய பூஜா-தியான மனப்பாங்குக்கு உதவும் வகையில் தெய்வங்களைக் குறித்து மானஸ பூஜா ஸ்தோத்திரங்களை ஆசாரியர்களும் மகான்களும் அருளியுள்ளார்கள்.
ஸ்ரீ சங்கரர் அருளியவற்றில் சிவனைக் குறித்து கீழ்க்காணும் சிவ மானஸ பூஜா & ம்ருத்யுஞ்ஜய மானஸிக பூஜா ஸ்தோத்ரம், தேவியைக் குறித்து மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா & த்ரிபுரஸுந்தரி மானஸபூஜா ஸ்தோத்ரம், விஷ்ணுவைக் குறித்து பகவன் மானஸ பூஜா ஆகியவை இந்த வகையானவை. ஆழ்ந்த பக்தியுணர்வும் கவிதை நயமும் சொல்லழகும் கொண்ட அற்புதமான ஸ்தோத்திரங்கள் இவை. இவற்றில் தனது இஷ்ட தெய்வத்தைக் குறித்த மானஸ பூஜா ஸ்தோத்திரத்தை பொருளறிந்து தொடர்ந்து பாராயணம் செய்து வருபவர்களுக்கு, காலப்போக்கில் இயல்பாகவே மானஸ பூஜைக்கு உகந்ததான தியான மனநிலை கைகூடி வரும் என்பது பெரியோர்களின் உபதேசம்.
சிவ மானஸ பூஜா – ஸ்ரீ சங்கரர் அருளியது
(தமிழாக்கம் எனது).
இரத்தினங்கள் இழைத்த இருக்கை
பனிநீராடல்
திவ்யமான ஆடைகள்
பல்வேறு மணிகளால் அணிகலன்கள்
கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம்
மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள்
தூபம் தீபம்
தேவா தயாநிதி பசுபதி
இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும்
ஏற்றிடுக. (1)
நவரத்தினங்கள் மிளிரும் பொற்பாத்திரத்தில்
நெய்ப் பாயசம்
ஐந்துவித பக்ஷணங்கள்
பாலும் தயிரும் கலந்தவை
கதலிப்பழம் பானகம்
நிறைந்த காய்கறிகள்
கற்பூரம் கமழும் சுவைமிகு தண்ணீர்
தாம்பூலம்
பக்தியினால் மனத்தில் சமைத்தவை
பிரபுவே
சுவீகரித்திடுக. (2)
குடை இருபுறமும் சாமரம் மென்விசிறி
மாசற்ற கண்ணாடி
வீணை பேரிகை மிருதங்க கோலாகலம்
கீதம் நடனம்
சாஷ்டாங்க நமஸ்காரம்
துதிகள் பலவிதம்
இவையனைத்தும் உனக்கென
எனது சங்கல்பத்தால்
சமர்ப்பித்தவை
எங்கும் நிறைந்தோனே விபுவே
பூஜையை ஏற்றிடுக. (3)
ஆத்மா நீ
அறிவு மலைமகள்
பரிவாரங்கள் பிராணன்
உடல் கோயில்
புலன்களின் இன்பநுகர்ச்சி உனது பூஜை
உறக்கம் சமாதி நிலை
கால்கொண்டு நடத்தல் பிரதட்சிணம்
பேச்செல்லாம் துதிப்பாடல்
என் செயல்களென எவை எவை உண்டோ
சம்போ
அவையனைத்தும் உனக்கு ஆராதனம். (4)
கால்கள் கைகளால் செய்ததோ
வாக்கில் உடலில் செய்கையில் விளைந்ததோ
செவிகளில் விழிகளில் தோன்றியதோ
மானசீகமானதோ
அறிந்ததோ அறியாததோ
அக்குற்றங்கள் அனைத்தையும்
பொறுத்தருள்க.
ஜெய ஜெய கருணைக்கடலே
ஸ்ரீமகாதேவ சம்போ. (5)
நன்றி தமிா்இந்து

சனி, 21 பிப்ரவரி, 2026

மானிடப்பிறப்பின் மாண்பு

 மானிடப்பிறப்பின் மாண்பு



எண்ணரிய பிறவிதனில் மானிட பிறவிதான் யாதினும்அரிது அரிது எண்கிறார் தாயுமானவர்

 அரிது அரிது மானிடராய் பிறத்தல் என்கிறார் அவ்வை


எல்லா பிறவிகளையும்தவிர்த்து மனிதப்பிறப்பு எடுத்தது கடலைக் கையால் நீந்துவதற்கு சமம் என்பர் சான்றோர்

 திருநாவுக்கரசு சுவாமிகள் வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் என்கிறார்

வாய்த்தது என்றால்நம்முடைய நல்வினைப்பயனால் இறைவரால் கொடுக்கப்பட்டது என்ற பொருளாகும்நாமாகக் கேட்டு பெற்றதல்ல இந்த மானிடப் பிறப்பு

இதனை சம்பந்த பெருமானார் அருந்திரு நமக்கு ஆக்கிய அரன் என்கிறார்

 நம்மைச் சைவ சமயத்தில் பிறக்கச் செய்ததே மிகப்பெரிய செல்வம்இந்த மண் உலகில் வேறு எங்கு பிறந்திருந்தாலும் பிறவா நெறி அடைவது இயலாததாகும்

  மனிதப்பிறவியின் நோக்கம்மனித பிறப்பு எடுத்ததன் நோக்கமேஇனி பிறவாமை பெறுவதுதான்இறைமை என்னும்பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்துவந்த ஒரு துளிதான் நாம்

 கடல்நீர் ஆவியாகி மழை நீராக மாற்றமடைந்து நதிகளின் வழியே மீண்டும் கடலில் வந்து கலந்து விடுகிறதுஇதுதான் உலக இயல்பாக இருக்கிறதுஇதைப்போல இறைமையினின்று பிரிந்து வந்த ஓர் துளியாகிய நாமும் இறைமையில் கலந்து விட வேண்டும்இதுதான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவாகும்இதுவே பிறவா நிலை என்றும் முக்தி பேறு என்றும் கூறப்படுகிறது

  பிறப்பின் இரகசியம் இப்படி இருக்கும் போது மனிதன் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கிறான் என்கிறார் அப்பர் அடிகள்

பிறவியின் நோக்கமே தெரியாமல் வாழ்கிறோம்அதனால் தான் ஆசையின் வயப்பட்டு பலப்பல வினைகளை செய்கிறோம்இவ்வினைப்பயனாக நாம் மீண்டும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகிறோம்நம் செயல்கள் எல்லாம் இறைவன் செயலாக அவனிடம் நம்மை தந்து இறைவனை முழு மனத்தோடு எண்ணி அவன் தாள்பணிந்து பிறவா நெறி பெறுவோம்

திருச்சிற்றம்பலம்