திருநாவுக்கரசர் திருச்சபையின் ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் மூலம் ஒரு ஆன்மீக பயணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருள்மிகு அறப்பளீஸ்வரர் மற்றும் மாசி பெரியசாமி எட்டுக்கை அம்மன் வழிபாடு நிமித்தமாக பயணம் அமைக்கப்பட்டு 4.9,22 அன்று பயணம் மன்ற அடியார்களோடு சென்ற செய்தியினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சென்றது ஆன்மீக பயணமாக இருந்தாலும் இது ஒரு மலை வாஸஸ் தலமாக இருந்தபடியால் அருமையான பொழுதுபோக்கு பயணமாகவும் அமைந்தது.
இங்குள்ள சுற்று சூழல் ஏலகிரி சதுரகிரி மற்றும் மேகமலை போன்றே அமைந்துள்ளது.70 பின் வளைவுகள் கொண்ட மலைப்பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. முதலில் அங்குள்ள சிற்றறிவில் குளியல் செய்து அறப்பளீஸ்வரர் தரிசணம் ெசய்தோம்.மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பள்ள மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
அறப்பளீஸ்வரர் கோவில்
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்
கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் இல்லை. மாசி மாதத்தில் மிக விமாிசையாக திருவிழா கொண்டாடப்படுகின்றது.
கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. இதுவே எட்டுக்கை அம்மன் என்று மலையின் காவல் தெய்வமாக நமக்கு காட்சி தருகிறது. கிராமக் கோயில் வழக்கமாக மலையில் சிறந்து விளங்குகிறது. அதுவும் தரிசணம் செய்தோம்.
கொல்லிமலையின் மிக சிறப்பாக அமைந்தது் இங்குள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி அது சென்ற சில தினங்களின் தொடர் மழையான காரணத்தால் சுற்றுலாபயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கு அடுத்தபடியாக உள்ள நம்ம நீர் வீழ்ச்சியில் அடியார்கள் அனைவரும் மனம் மகிழ்ந்து குளித்து மனம் மகிழ்ந்தனர். நாங்கள் சென்ற நேரம் சற்று கூட்டம் குறைவாக இருந்தபடியால் மிகவும் வசதியாக ரம்மியமான குளியலாக குளித்து புத்துணர்வு பெற்றோம். குளித்து இறைவனை வேண்டிம் முகத்தான் எல்லா அடியார்களும் சேர்ந்து தேவார திருவாசகப் பதிகம் பாடி இறைவனை வணங்கி மகிழ்ந்து சுற்றுலாவினை முடித்து கீழே இறங்கி, நாமக்கல் அடைந்து அங்குள்ள இராம பக்தர் ஸ்ரீ அனுமன் கோவில் தரிசனம் பெற்று ஆன்மீக பயணம் முடித்தோம்.
திருச்சிற்றம்பலம்