அன்புடையீர்
இக் கலியுகத்தில் தோன்றி சிவத்தொண்டையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து நாயன்மார்கள் வரிசையில் பின் தொடர்ந்த சிவத் தொண்டர் ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகளை பற்றி தென்மாவட்டங்களில் அதிலும் சதுரகிரி மலையேறி சுந்தரமகாகலிங்க சுவாமியை தரிசணம் செய்ய சென்றவர்கள் யாரும் காளிமுத்து சுவாமிகளின் கஞ்சி மடத்தை அறியாதார் இருக்க மாட்டார்கள் சித்தர் வாழும் சதுரகிரிமலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அன்னதானம் செய்து வரும் பணியை இன்னும் தொடர காரணமாக இருந்து நடத்த ஒரு காளிமுத்து ஆஸ்ரமம் அமைத்து இன்றுவரை சிறப்போடு நடந்து வருகிறது, அவரது சீடரான ஸ்ரீலஸ்ரீ சத்திவேல் சுவாமிகளும் அன்னாரை தொடர்ந்து சிவ தொண்டு சிறக்க அரும்பணி ஆற்றினார் கல்லூரியில் பேராசியராக இருந்தும் இந்த சிவத் தொண்டை திறன்பட நடத்தி சிவமோட்சம் பெற்றார் இவர்களது குருபூஜை வருகிற 26-5-12 சனிக்கிழமை காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெற உள்ளது , சிவத் தொண்டர் அனைவரும் கலந்து குருபூஜையை சிறப்பித்து அன்னார்களின் அருள் ஆசிகளை பெற அன்புடன் அழைக்கிறேன் அதன் அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக