வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தங்களின் வாழ்க்கையில் சனி திசையால் படும் கஷ்டங்களை நிவர்த்தி செய்து அதன் தாகத்தை குறைக்க தேய்பிறை அஸ்டமி சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு முறைப்படி பூஜை செய்து தங்களின் கஷ்டங்களில் குறைத்து நிவாரணம் பெற வேண்டுகிறோம், இதில் கண்ட செய்தி துளியின் மூலம்அருள்மிகு வைகுண்டமூர்த்தி அய்யனார் கோவிலில் கால பைரவருக்கு பரிகார பூஜை செய்து மூலம் பயன் பெற அன்புடன் வேண்டுகிறோம் அன்புடன், வை, பூமாலை சுந்தரபாண்டியம்

புதன், 19 செப்டம்பர், 2012

உ ஓம் மகா கணபதியே ஹ! விநாயகர் சதுர்த்தி இந்து மத சடங்குகளில் நாம் எந்த ஒரு காரித்தை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு விநாகர் துதி பாடல்கள் ஓதித்தான் தொடங்குவது நமது இந்துமத வழிமுறையாகும், ஏன் எந்த ஒரு எழுத்தொரு ஏட்டிலும் எழுதும் முதல் எழுத்து பிள்ளையார் சுழி ("உ")போட்டுத்தான் எழுத்து பதிவினை தொடங்குவதும், மத சடங்குகள் யாகங்கள் செய்யும் போது பிள்ளையார் சிலை அல்லது மஞ்சள், கழிமண் அல்லது பசுஞ்சாணம் இவற்றினால் பிள்ளையார் பிடித்து, அதன் மேல் அருகம் புல் சொருகி அதனையே விநாயகராக்கி வேத மந்திரங்கள் ஒலித்துதான் வேலையை - யாகங்களை - சமய வழி பாடுகளை தொடங்குவது நமது இந்து முறை வழிமுறையாகும், இது மட்டுமல்லாது காட்சிக்க எளியவனாய் எங்கும் பார்க்கும் நோக்கும் இடங்களில் குளக்கரைகள் அரசமரம் வேப்பமர அடிவாரங்கள் முச்சந்திகள் என பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் கோவிலாகத்தான் காணப்படும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முழுமுதற்கடவுளான விநாயகர் பிறந்த தினமே விநாயகர் சதுர்த்தியாக உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மிக விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது, சதுர்த்தி விரத வரலாறு. நான் முகனின் கொட்டாவியில் பிறந்த சிந்தூரணை சம்காரஞ் செய்ய கஜாணன மூர்த்தியாய் அவதாரம் செய்த நாள் ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தி இந்நாளில் சிவபெருமானும் உமாதேவியாரும் அக்கடவுளைப் பூசித்தனால் இவ்வுலகில் யாவரும் ஆண்டுதோறும் இந்நாளில் விநாகய சதுர்த்தி விரத மேற் கொள்ளப் பட்டு அந்நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் பெயர் காரணம். தன்னை வணங்கிணவர்க்கு விக்கினத்தை நீக்குவோனும், அவ்வாறு வணங்காதவர்க்கு விக்கினத்தை தருபவரும், தனக்கு மேல் நாயகரில்லாதவரும் ஆதலால் இப்பெயர் வந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. விநாயகரை பிள்ளையார் என்று கூறினாலும், இவரை பல பெயர் கொண்டு தங்களுக்கு ஏற்ப நற்செயல்கள் புரிந்த காரணத்தாலும், செல்லப் பெயராகவும் பற்பல நாமங்களில் அழைக்கப் பட்டு வழிபடுகின்றனர். சிந்தாமணி விநாயகர். வக்ர துண்ட விநாயகர், கலாதார், பாலசந்திரன், கபில விநாயகர், சமுகர், கஜானன், தூமகேது, உண்டுவிநாயகர், சித்தி விநிாயகர், ஆழக்கரிசி விநாயகர், வல்லப விநாயகர், வழிவிடுவிநாயகர் என பல பெயர்களால் அழைக்கப் படுபவர். விநாயகர் திருவிளையாடல் இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தி முனிவரிடம் இருந்த கமண்டல நீரை காக உருவம் கொண்டு கவித்து, தென்னாட்டில் காவேரி நதியாக பாயச்செய்தும் சீர்காழியில் உள்ள நந்தவனத்தை செழிக்க செய்தும், திருவிளையாடல் புரிந்தார், விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தை கவித்ததால் கோபம் கொண்ட அகத்தியர் அவரை தலையில் கொட்ட முயன்றபோது அவரின் கைக்கு தப்பித்து தரிசனம் கொடுத்தவர் விநாயகர், பிள்ளையார் வழிபாட்டிற்கென சில அம்சங்கள் சிதறு தோங்காய் போடுதல், நெற்றியில் குட்டிக் கொள்தல், தோப்புக்கரணம் போடுதல் ஆகியவை எத்தெய்வத்திற்கும் இல்லாத வழிமுறை வழிபாடாகும் மற்ற சுவாமிகளை தரிசனம் செய்வதென்றால் அதற்காக காலம் பார்த்து குளித்து முழுகி அர்ச்சனை சாமான்கள் வாங்கி கோவிலுக்குப்போய் பிரகாரம் சுற்றி வரும்போது முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு சுவாமி சன்னதிகளை தூரத்திலிருந்தே தரிசிப்போம் ஆனால் விநாயகர் கோவில் விநாயகர் சன்னதியில் மட்டுமே பக்கத்தில் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அத்தோடு இல்லாமல் காண்போருக்கு எளியவராய் செல்லும் வழிகளிலெல்லாமும், முச்சந்தி அரச-வேப்பமரத்தடியிலும் குளத்தங்களைகளிலும், நாம் நினைக்கும் இடமெல்லாம் பிள்ளையார் இருப்பார் ,அவரை பார்த்த மாத்திரத்ததில் கைகூப்பி விட்டு, நெற்றியில்- தலையில்- குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு விட்டு நடையை கட்டிவிடுகிறோம். இதிலேயே நமக்கு சொல்லத் தெரியாத ஒரு நிமமதி சந்தோசம் கிடைக்கிறது. பிள்ளையாரை நினைக்கும்போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இரட்டிப்பு அநுக்கிரகம் கிடைக்கும். விநாயகர் அகவல் பாடி நாம் எளிய தமிழில் வணங்க அகவல் தந்தவர் அவ்வையார் . அவ்வையின் அகவலில் மகிழ்ந்த விநாயகர் அவரை தம் துதிக்கையினால் தூக்கி ஏந்தி கயிலையில் சிவபெருமான் முன்னிலையில் ஆதியுலா அரங்கேற்றம் செய்ய எழுந்தருளும் சேரமான் பெருமான் ஸ்ரீசுந்தரர் ஆகியோர் செல்லும் முன்பே அங்கு கொண்டு சேர்த்த பெருமை விநாயகருக்கே சாரும். விநாயகர் பற்றிய துதிப்பாடல்கள் வேத மந்திரம், சுக்லம் பரதம் விஷ்னும சசிவர்ணம் சதுர்பஜம் ப்ரசன்ன வதனம் த்யோயேத் ஸ்வவிக்னோப சாந்தயே காயத்திரி மந்திரம் ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோயாத் திருமந்திரம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்திரன் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றிகின்றேனே! - திரு மூலர் கபிலர் திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை - கபிலர் ஒளவையார் பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ்மூன்றும் தா -அவ்வையார் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக் கொண்டு துபபார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு - அவ்வையார் கல்லுருவ ஞானக் கனிவே கரிமுகமே தொல்லுலகத் துன்பந்தீர் தூயவ - இல்லமெலாம் குழும் கலைதேர் தொழிழே அருளன்பு வாழும் கருணை வழி! - விணமணி
பிள்ளையார் நோன்பு இந்து மத வழிபாட்டில் தென்தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் பிள்ளையார் நோன்பு வெகு சிற்ப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, பிள்ளையார் நோன்பு முறை சமூகம் முழுவதிலும் ஒரே அமைப்பில் இருப்பதால் நோன்பு நாள் மாலையில் விநாயகப் பெருமானது திரு உருவத்தை வீட்டில் புனிதமான இடத்தில் எழுந்தருளுவித்து நிவேதனத்திற்காக எள்,நெல் முதலியனவும், பொரி பணிகாரம் அப்பம் வெல்லப்பாகு கடலைஉருண்டை முதலியனவும் ஆசாரத்துடன் நிவேதித்து ஆவாரம் பூவால் செண்டு கட்டி தாமரை இழை தூபம் ஏற்றி வாழைப்பழம் கனிவகைகள் வைத்தும் தேங்காய் மற்றும் தூப தீப வகைகளுடன் சுவாமி முன் வைத்து தோத்திரங்கள் ஓதி வணங்கிய பின் சுவாமிக்கு படைத்த நிவேத்தியங்களை உண்டு நோண்பை முடிப்பர் வை.பூமாலை சுந்தரபாண்டியம்

சனி, 8 செப்டம்பர், 2012

What is aanmeegam? | எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?

Temple News | News | Om Mantra | ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

Srivilliputhur Palgova | ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு பெறுவது ஏன் தெரியுமா?