வியாழன், 17 அக்டோபர், 2013

Thedal.... : உடலை விட்டு வெளியேறும் ஆத்மா

Thedal.... : உடலை விட்டு வெளியேறும் ஆத்மா: படித்ததை உங்களுடன் - 7 ( திரு.என் .கணேசன் எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்திகள்  என்ற  புத்தகத்தில் இருந்து.  ) மரண விளிம்பு அனுபவங்க...

புதன், 16 அக்டோபர், 2013


உங்கள் வாழ்க்கையில் புது வாழ்வு / மறுபிறவி வாழ்வு பெற்றிட திருச்சி அருகே உள்ள பிரம்மபுரிஸ்வரர் மிகவும் பழைமையான கோவில் திருப்பட்டூர் இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர். குரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை. ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் தேதி பிறந்தவரா? ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம். தலபெருமை: வித்தியாசமான அமைப்பு: குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர; குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'' என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது. முருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார். எல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர். பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார். நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. எலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர். பதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார். வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில். பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும். தல வரலாறு: பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்

Thedal.... : பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தையின் அனுபவம்

Thedal.... : பழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தையின் அனுபவம்: மூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தை ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல் ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு...

சனி, 12 அக்டோபர், 2013

ஞானசம்பந்தரும் - திருத்தோணியப்பரின் சேய் அன்பும்


ஞானசம்பந்தரும் - திருத்தோணியப்பரின் சேய் அன்பும் இறைவனுடைய திருவருளை அடைவதற்குரிய வழிகள் பற்பல. அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம், என்னும் நான்கு வழிகள் ஆகும், சத்புத்திர மார்க்கமாவது இறைவனை தாய்தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும், தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானாக பாவித்து உயிர்கள் பணியாளர்களாக இருந்து வழிபடும் நெறியாகும், சகமார்க்கம் என்பது இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் நெறியாகும். சன்மார்க்கம் என்பது இறைவனை ஞானாசாரியனாகக் கொண்டு ஆன்மா சீடனாக இருந்து வழிபடும் நெறியாகும், இந்நெறிகளில் சத்புத்திர மார்க்கம் ஞானசம்பந்தர் காட்டிய வழி, இரண்டாவது தாசமார்க்கம் எசமானாக பாவித்தது திருநாவுக்கரசர் வழிபட்ட நெறியாகும், மூன்றாவதான சகமார்க்கம் என்ற நட்புநெறி சுந்தரர் வழிபாட்டு நெறியாகும்.நான்காவதாக உள்ள சன்மார்க்கம் என்ற சன்மார்க்கம் என்ற இறைவனை (சிவனை) குருவாக ஞானாசிரியனாக வழிபட்டவர் மாணிக்க வாசகர்,சிவபுண்ணிய விளைவால் மூர்த்தி தலம் தீர்த்தங்களை வழிபட இறைவன் குருவாகி எழுந்தருளி அருள் புரியும் நிலையே குருவருள் ஆகும், குருவின் திருவுருமாகி எழுந்தருளி அருள் புரியும் சீர்காளியில் கவுணியர் குலத்தில் சிவபாதஇருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் திருமகனாக சீர்காளிபிள்ளையாராக திருஅவதாரம் செய்தவர்தான் திருஞான சம்பந்த பெருமான், திருவருள் கூட்ட ஒருநாள் நீராட சென்ற தந்தையார்பின் பிள்ளையார் தொடர்ந்து அழுது கொண்டு உடன் தொடர்ந்தார்.சிவபாத இருதயர் குழந்தையைக் குளக்கரையில் நிற்க செய்து பிரிவதற்கு அஞ்சி தந்தையார் , தேவியுடன் திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்கி அவர்பால் ஒப்படைத்து நீராட சென்றார். தந்தையார் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளையார் நீள நனைந்த முன் உணர்வினை நினைக்க அழத்தொடங்கினார். திருத்தோணி சிகரம் பார்த்து " அம்மே ! அப்பா! என்று அழுது அழைத்தருளினார். அக்குழந்தையின் அழுகை கண்டு அக்குழந்தைக்கு அருள் புரிய திருவுளங்கொண்ட இறைவர் தாமும், அம்மையமாய் விடைமேல் எழுந்தருளி வந்து, அக்குழந்தைக்கு துணைமுலைப்பால் ஊட்டிட இறைவியை பணிக்க இறைவியும், சிவஞானத்து இன்னமுதம் எனும் ஞானப்பால் ஊட்டி அருளியபின், கண்மலர் நீர் துடைத்து கையில் பொற்கிண்ணம் அளித்து, அம்மையப்பராகி இருவரும் காட்சிகொடுத்த வண்ணம், இருந்தனர். பிள்ளையாரும், சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாத கலைஞானமும், மெய்ஞானமும் பெற்று சிவஞான சம்பந்தராகி திருஞான சம்பந்தரானார், நீராடிவந்த சிவபாத இருதயர் குழந்தை பாலமுதம் அருந்திக் கையில் பொற்கிண்ணத்துடன் நிற்கும் பிள்ளையாரை நோக்கி, " யாரளித்த பால் அடிசில் உண்டாய்? அவரை காட்டுக" எனக் கோபமாக கடிந்தார். சிவஞானம் அருந்திய மகிழ்ச்சியில் திளைத்து நி ற்கும் பிள்ளையாரும், தேவியருடன் எழுந்தருளியிருக்கும் இறைவரை சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன் " எனும் திருப்பதிகத்தால் அடையாளங்காட்டி" எம்மை இது செய்த பிரான் இவனன்றே" என பால குமாரன் வயதிலேயே பதிகம் பாடி திருத்தோணியப்பரின் சேய் அன்பு எனும் சத்புத்திர மார்க்கம் கண்டு சிவனாரின் கருனையை பெற்றார். தாய் அன்பின் உயர்வையும், தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் திருஞானசம்பந்தர் திருநள்ளாறு தாயாகிய இறைவியையும் தந்தையாகிய இறைவனையும், வணங்கி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதன் மூலம் சம்பந்தர் மூர்த்திக்கும் ஆலவாய் சுந்தரருக்கும் உள்ள தாய் சேய்ழ அன்பின் மகத்துவம் விளங்குகிறது, "தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள் ,,,,,," என்ற திருப்பதிகத்தில் தானும் தாய் அன்பையும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு ஒரு ஆன்மா பிறவிபெற்று பூமிக்கு வரும்போது அதன் வினைக்கு ஏற்ப இன்பதுன்பம் தன் தாய்பால் வழியாக உலக உயிர்களுக்கு ஊட்டப்படுகிற்து, இந்த அன்பே தாய்தந்தையர்களும் தனது குழந்தைகளிடம் எதிர்பார்க்கின்றனர், இதற்கு ஒப்பாகவே இதன் கருத்து அமைந்து பதிகம் பாடியுள்ளார்,. சிவனாரின் அன்பு ஞானசம்பந்தர் பால் மேலும் மேலும் வளர்ந்தது, சம்பந்தர் பதிகம் பாடும் போது கைத்தாளம் போடுவது வழக்கம் இதனைக் கண்ட தந்தை அன்பு கொண்ட ஈசன் கைநொகாது இருக்க பொற்றாளம் வழங்கினார், பல தளங்களை அடைந்து தரிசிக்க காலால் நடந்து சென்றதைக்கண்டு மனம் பொறுக்காது ஈசன் அவருக்கு முத்து பல்லாக்கு முத்து சீவிகை ,முத்துக் குடை வழங்கினார், அத்தோடு மட்டுமன்றி அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு நேர்ந்த சோதனைகளுக்கு உடனுக்குடன் தோழ்கொடுத்து தந்தையின் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தினார். சம்பந்தரும் ஈசன்மேல் தனியாத தந்தை பாசம் கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். திருநாவுக்கரசரோடு கூடியிருந்த காலத்தில் அவருக்கு அப்பர் என்ற திருப்பெயரிட்டு சிறப்பித்தார். திருப்பாச்சிலாச்சிரமத்தில் கொல்லிமழவன் புதல்வியை பற்றிய முயலகன் என்னும் நோயை நீக்கினார். திருக்கொடி மாடச்செங்குன்றூரில் நச்சுக்காய்ச்சலை தவிர்த்து அடியாரைக்காத்தார்.திருவாடுதுறையில் உலக்கிழியாக ஆயிரம் பொன் பெற்றார். திருத்தருமபுரத்தில் யாழ்மூரிப்பதிகம் பாடி அருட்பாடல் கருவியில் அடங்காத சிறப்பை புலப்படுத்தினார். திருமருகலில் பாம்பு கடித்து இறந்த வணிகனை உயிர்த்தெழத் செய்து பெருவாழ்வு நல்கி, அவனையே நம்பியிருந்த திக்கில்லாதவளுக்கு தெய்வத்துணையானார். திருவீழிமமிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தை ஒழித்தார். திருமறைக்காட்டில் கோவில் மூடியிருந்த கதவை பதிகம் பாடி கதவைத்திறந்து மூடுஞ் சீருடைய தாக்கினார். திருமதுரை சென்று மங்கையர்கரசியாரையும், குலச் சிறையாரையும், சிறப்பித்தார். அரசன் வெப்பு நோய் மற்றும் கூன் நீங்க திருநீற்றுப்பதிகம் மற்றும் சமனர்களின் கொட்டத்தை அடக்கி கழுமரமேற்றி சைவ மதம் தழைக்க செய்தார்.. திருவோத்தூரில் ஆன் பனைகளை பெண் பனைகளாக மாற்றினார். மயிலாப்பூரில் கென்றிருந்து பாம்பு கடித்து இறந்த பூம்பாவையின் எலும்பைக் கொண்டு திருப்பதிகம் பாடி உயிருடைய உருவமாக்கி வீட்டையும் காட்டினார். திருநல்லூரில் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் திருமகளை மணம் புரியுங்கால் இவளோடு சிவனடி சேர்வன் என்று திருக்கோவிலை உற்று திருப்பதிகம் பாடினார். திருமணம் காணவந்த எல்லாரும் அருள் மணம் புரிந்து அழியா இன்பம் அடைந்தனர். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடிய திருவைந்தெழுத்தின் பெருமையே எல்லா நதபெற காரணமாகுமென பதிகத்தால் உணர்தெி சம்பந்தர் பால் கொண்ட ஈசனின் சேய் அன்பையும் சம்பந்தர் ஈசன் மேல் கொண்ட தாய் தந்தை - பெற்றோர் அன்பையும் சிறப்பிக்க உதாரணமாக விளங்கியவர் திரு ஞானசம்பந்த பெருமான் , திருச் சிற்றம்பலம்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

VTS 01 161

சுந்தரபாண்டியம் அருள்மிகு வைகுண்டமூா்த்தி அய்யனாா் கோவில் என்ற பொியகோவிலில் ஜெயா டிவி மூலம் நலம் தரும் நட்சத்திர கோவில் நிகழ்ச்சியில் ஒளி பரப்ப செய்ய எடுக்கப்பட்ட படதொகுப்பு
தொகுப்பு வை,பூமாலை.சுந்தரபாண்டியம்

VTS 01 163

சுந்தரபாண்டியம் அருள்மிகு வைகுண்டமூா்த்தி அய்யனாா் கோவில் என்ற பொியகோவிலில் ஜெயா டிவி மூலம் நலம் தரும் நட்சத்திர கோவில் நிகழ்ச்சியில் ஒளி பரப்ப செய்ய எடுக்கப்பட்ட படதொகுப்பு தொகுப்பு வை,பூமாலை.சுந்தரபாண்டியம்