சிவனிடம் அடைக்கலம் புகுவதற்கு பல வழிகள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியமானது சிவபாத சேவையே, ஏனென்றால் சிவபாதத்தை பற்றி சேவை புரிந்தவர்கள் நிறைய உண்டு. சிவபாத சேவை புரியாதவர்கள் மிக அரிதே. கோவில்களில் எல்லா கால பூஜைகளும் முடிந்த பிறகு இரவில் இறைவனுடைய திருப்பாதத்தை ஒரு பல்லாக்கில் வைப்பார்கள், அதை வைத்துத் தூக்கியபடி கோயிலைச் சுற்றி வருவார்கள், அந்த திருப்பாத சேவையைச் செய்வதற்கு பலர் அலைவார்கள். அந்த திருப்பாதம் சுற்றி வந்து இறுதியாக பள்ளியறைக்கு வந்து சேரும்.
இந்த சிவபாத சேவையை சாதிக்காமல் ( பார்க்காமல்) ஒருவரும் சிவன் கோயிலை விட்டு போகக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கின்றது, இது தெய்வ சட்டம். ஆனால் எத்தனை பேர் அதற்கு சிவபாத அனுக்கிரகத்தைப் பெற்று போகின்றனர் அதுவரை காத்திருந்து சிவபாத சேவையை புரிவர்கள் மிகவும்அரிதாகவே உள்ளது. சிவபாத ரகசியங்களில் இது மிகவும் முக்கியமானது. இதைப்பற்றி சிவபாத ஆனந்த யோகம் என்ற பெரிய கிரந்தமே இருக்கின்றது. நாம் கோவில் அருகில் குடியிருந்தாலும் கூட இந்த பள்ளியறை சேவைக்கு வருவது அரிதாகவே உள்ளது.
இந்த சிவபாத தரிசனத்தை ஒவ்வொருவரும் பெற்றுத்தான் தீர வேண்டும். இந்த சிவபாத சேவையானது அற்புதமான ஆனந்தத்தை தரும் என்று சாஸ்திரங்களும் கிரந்தங்களும் விளக்கமாக கூறியிருக்கின்றன,. பள்ளியறை பூசைக்கு செல்ல எங்களுக்கு நேரம் இல்லை, காலம் இல்லை மற்ற நேரங்களில் தான் தரிசிக்கின்றமே அது போதாதா? என்று சொல்லி விடக்கூடாது, ஏனென்றால் இது அவ்வளவு முக்கியம். இரவு நேரங்களில் வேண்டாத பொழுதுபோக்கு நிகழ்வுகளில் வீணே காலத்தை வீணடித்து காலத்தை விரயமாக்கிறோம், இதற்கெல்லாம் காரணம் சிவன் கோயிலில் சிவபாத ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான். கலியுகத்தில் பாதுகாப்பின்மை, மக்களின் அசட்டை காரணமாக பல சிவன் கோயில்களில் இந்த வழீபாடு மறைந்து வருகிறது, பிரதோச கால பூசை புத்துயிர் பெற்று இருப்பதுபோல் இரவு நேர நித்ய சிவபாத பூசையும் நன்கு நடைபெற அனைவரும் அரும்பாடு பட வேண்டும். பல சற்குருமார்கள் மூலம் பல சத்சங்கங்களை உருவாக்கி சிவபாத பூசையின் மகிமையை பரப்புவது நம் அனைவரின் கடமையாகும்.
சிவபாத ரகசியம்
இரவு கால பூசை முடிந்த பிறகு இறைவனுடைய திருப்பாத்திற்கு அற்புதமாக அலங்காரம் செய்யப்படும். அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லாக்கில் ஏற்றி அந்த பல்லாக்கை கோயிலில் பிரதட்சணம் செய்யப்படும். அப்போது இறைவனுக்கு செய்ய வேண்டிய சேவைகளை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கோயில் பிரதட்சிணம் வருகையில் நாதஸ்வரம் சங்கு உடுக்கை, பேரிகை துந்துபி, மத்தளம் பஞ்ச வாத்தியமத் இவை எல்லாம் ஒலித்துக் கொண்டு வரவேண்டும். இந்த வாத்தியங்களை யார் ஒருவர் கூலி இல்லாமல் சேவையாக செய்கிறார்களோ அவர்கள் திருக்கைலாயத்தில் நாத கணங்களாக மாறுகின்றனர்.
பிரபஞ்ச படைப்புகளில் காலமானது இறைவனின் பாதங்களில் இருந்து தோன்றியதாகும். ஓவ்வொரு நாளிலும் சில நற்காரியங்களையாவது செய்து முடித்தோம் என்ற மன நிறைவோடு கழித்தலே காலதேவனுக்கு நாம் செய்யும் முறையான வழிபாடு.
அதோடு மட்டும் அல்லாமல் அந்தப்பாதத்திற்கு கந்தங்களும் சந்தனமும்,மலர்களும் தொடுத்துக் கொடுத்து அதற்கு பின்னால் பூரணமாக வேதங்களையும், ஓதி நான் மறைகளையும் ஓதுவதோடு அல்லாமல் தமிழ் மறைகளையும் ஓதியபடியே வலம் வந்து சிவபாத சேவைகளைச் செய்ய வேண்டும். சிவபாத பல்லக்கு கோயிலை வலம் வருகையில் ஸ்ரீகால பைரவரின் சன்னதி அருகே சற்றே நின்றிட ஸ்ரீகால பைரவருக்கு புனுகு சாற்றி பூசையும் நடைபெறும்.
சிவபாத பூசையில் பங்கு பெறுவது
சிவபாத பல்லாக்கு நம் தோள்களில் தாங்கி வலம் வருதல் பெறுதற்கரிய பாக்கியம்
சிவபாத சேவைக்கு இசைக்கருவிகள் வாசித்தல் இசை வல்லுநராக்கும்
பூசைக்குரிய பூச்சரங்கள் வழங்குதல்
பள்ளியறை பூசைக்கு பசும்பால் வழங்கி கைங்கர்யம் செய்தல்
சிவபாத பல்லாக்கு சேவைக்கு தீபந்தம் பிடித்தல் ஒளி விளக்குகள் அமைத்து கொடுத்தல்
இவ்வாறாக சிவபாத சேவையின் பல்வேறு கைங்கர்யங்களை நிறைவேற்றினால் அளப்பரிய புண்ணியத்தை எளிதில் பெறுவதோடு அரிய காலத்தை விரயம் செய்ததற்கு பரிகாரமாகவும் அமைகின்றது.
பலங்கள்
சிவபாத பூசையில் சேவை கண்டும் சேவை புரிந்தவர்களுக்கு அவரவர்கள் நட்சத்திரங்களுக்கு ஏற்றவாறு தோசங்கள் நீங்கி புண்ணிய பலன்கள் கிடைக்கும்
குறிப்பாக பெண்களுக்கு திருமண பாக்கியம், குழந்தை பேறு, திருமாங்கல்ய பலம் கிடைக்கும்.
சிவபாா சேவையில் கலந்தவர்கள் அனைத்து விதமான சித்திகளும் கனிந்து வரும்.
நாம் இழந்த கால விரையத்தை ஈடுசெய்ய சிவபாத சேவையில் கலந்து கால பைரவரின் அருள் பெற்று புண்ணியம் பெறலாம்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக