புதன், 27 டிசம்பர், 2017

முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறு

முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வரலாறு
முசுகுந்தன் என்றால் குரங்கு முகம்உடையவன் என்று பொருள். இவ்வரசன் சோழர்களின் பரம்பரையில் பிறந்தவன். தியாகராசப் பெருமானை இந்திர உலகில்இருந்து இம்மண்ணுலகிற்கு கொண்டு வந்தவன். கந்தபுராணத்தில் இவன் வரலாறு பேசப்படுகிறது.
   கயிலை மலைச்சாரலில் ஓர் அழகிய பூஞ்சோலை, அச்சோலையில் உள்ள வில்வமரத்தின் கீழ், சிவபெருமானாரும் உமையம்மையும்எழுநதருளியிருந்தனர். இந்த வில்வமரத்தின் மீதிருந்த ஒரு குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து பாோட்டுக் கொண்டே இருநதது. கீழே பெருமானாரும் பிராட்டியும் எழுந்தருளியிருப்பதை இக்குரங்கு அறியவில்ைல.
  அந்த நாள் சிவராத்திரி நாளாகும். அறியாமல் வில்வ இலைகளை முடிமேல் போட்டதைப் பெருமானார் அற்சனையாக கொண்டார். அந்தக் குரங்கின் மீது பார்வையைச் செலுத்தினார். அக் குரங்கிற்கு சிவஞானம் உண்டாயிற்று.கீழேஇறங்கி அம்மையப்பரை வணங்கி நின்றது.
   செவ்வான வண்ணராகிய பெருமானார்  " நீ செய்த சிவராத்திிரி பூசையால் இவ்வுலகை யாளும் அரசனாக பிறப்பாய் " என அருளிச்செய்தார். உடனே குரங்கு " பெருமானே அரசனாகப் பிறந்து அரச போகத்தில் மூழ்கி விடுவேன். ஆதலால் குரங்கு முகத்துடன் பிறக்கும் வரத்ைத அருளுங்கள் மேலும் மாறாத சிவபக்தியை யான் பெற வேண்டும் " என்று வேண்டி நின்றது. பெருமானாரும் வேண்டியதை அருளினார்.
  அக்குரங்கு கருவூரில் சோழர் குலத்தில் குரங்கு முகத்துடன் பிறந்து முசுகந்தன் எனப்பெயர் பெற்றது. இவனே கருவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். மாறாத சிவபக்தியுடன் திகழ்ந்தவன். முடிவில்் தன் மகனுக்கு முடி சூட்டிவிட்டு கயிலை மலையின் கீழ் பெருமானைக் குறித்து கடுந்தவம் இருந்தான். சிவனடி சேர்ந்து கணங்களின் தலைவர்களில் ஒருவனானான்.
திருச்சிற்றம்பலம்
நன்றி   தமிழ்வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக