புதன், 22 டிசம்பர், 2021

உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்)

 உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்)



  உயிர்கள் கேவல / சகல நிலையில் மும்மல / மாயா மலத்தோடு சேர்ந்து அறவு மயங்கி நிற்கும். முக்தி / சுத்த நிலையில் இறையைச் சார்ந்த வண்ணம் ஆகும்.

  இவ்விரு வகை சார்புகளுள் இறைச் சார்பே ேமலானது. ஏனென்றால் இறைச் சார்பு இன்பம் தருவது. உலக சார்பு / மாயா மலத்தின் சார்பு துன்பம் தருவது. உலக சார்பு உடைய உயிர்கள் அவற்றின் பற்றுக் கொண்டு அவ்வனுபவங்களை சுமை என்று உணராது சுகமெனக் கருதும். இப்பாரம் குறையக்குறைய இறைவனை அணையும் ஆசை மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒன்றித்து நின்று அறிவிழந்த உயிர் அதன் கண் உவர்ப்படைந்து விட்டு பின்னர் மெஞ்ஞானத்தை தாணுவினோடு ஒன்றித்து நிற்கத்தலைப்படும். இதனை காளத்தி மலையை கண்டு அதனை அணுகி செல்லும் தோறும் தம்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம்உண்டானதாக கண்ணப்பர் (பெ,பு, 97) கூறுவதால் அறியலாம். கட்டு நிலையில் உயிர்கள் வினைகளை செய்யும் அதன் பலன்களையும் துய்க்கும்.இறைவனிடம் அன்பு கொள்ளும் ேபாது ( இறைவழிபாட்டில்) பாரம் குறைவது போல் உணர காரணமாவதை அறியலாம்.

 அவ் உயிர்களின் வினைகளையும் பலன்களையும் இறைவன் ஏற்றுக் கொள்வான். எனவே அவனை எடுத்து சுமப்பான் ( திருவருட்பா 65) என்பார் உமாபதி சிவம்.

   உயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது என்பது சைவ சித்தாந்த கோட்பாடு. 

   அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்

  அன்பே சிவமாவது யாரும்அறிகிலார் ..... என்ற திருமந்திரம் கூறியபடி அன்புதான்

சிவம்/  சிவனைச் சார்ந்த சீவனான  உயிர்கள் அவனது உருவமாகிய அன்பு உருவ மானதை உணர்த்தும்.

திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக