புதன், 22 டிசம்பர், 2021

திருமுறைகளை பாராயணம் செய்வோம்!

 திருமுறைகளை பாராயணம் செய்வோம்!   சிவன் அருள் பெறுவோம்!


சைவத்துக்கு பொதுநூல் ேவதம், சிறப்பு நூல் ஆகமம் எனவும் கொள்ளப்படுகின்றது. இவை இறைவனால் அருளப்பட்டவை. சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவ பெருமான். திருமுறைகள் தமிழ் வேதம் என போற்றப்படுகின்றன. சிவபெருமான் திரு அருளைப்பெற்ற திருவட் செல்வரகளால் சிவபெருமான் உள் நின்று உணர்த்திப் பாடப்பட்ட தெய்வத் திரு நூல்களே திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. இத்திருமுறைகள் பன்னிரண்டாகும்.

  ஆலயங்களிலும், வீடுகளிலும், மற்ற இடங்களிலும் கடவுள் வழிபாட்டின் போது இத்திருமுறை பாடல்களைப் பாடி பரவுவது சைவ மரபாகும். பன்னிரு திருமுறைகளிலும் அடங்கும் தோத்திரப்பாடல்கள் பிரணவ மயமானவை. தமிழ் வேதமாக விளங்குகின்ற திருமுறைப்பாடல்களுடன் வேறு எந்த பாடல்களையும் ேசர்த்து பாடக்கூடாது என்பது சிவ பரம்பொருளின் திருவுள்ளக் கிடக்கை என ஆன்றோர் கருத்து.

   திருமுறை பாடல்களை பாட தொடங்கும் முன்னும், பாடி முடித்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மந்திரம் ஓதப்படவேண்டும்.திருமுறைகளில் உள்ள அனைத்து பாடல்பதியங்களையும் பாட இயலாததால் தேவாரம் திருவாசகம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தொண்டர்புராணம் என்ற ஒழுங்கு முறையில் பஞ்சபுராணம் ஓதப்படுதல் வேண்டும்.

   திருமுறைப்பாடல்களை இறைவனை நினைந்து மனமுருகி , காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் நன்னெறிக்கு இட்டுசெல்லப்படுவர் என்பது அனுபூதி மான்களின் முடிவு. திருமுறைகள் பண்ணாடும் பக்தியோடும் பாடப்படவேண்டும் என்பது அருளாளர்களின் கருத்து.

      பரம்பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தித் துதிப்பனவாகவும், அப்பெருமானின் பெருமை சிறப்பு என்பவற்றை போற்றுதல் செய்வனவாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவனவாகவும் பக்தியையும் தெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும் ஓதி உஉணர்வர்களை உய்விப்பனவாகவும் மந்திரம், தந்திரம், மருந்து என மூன்றுமாய் விளங்கித் தீராத நோய் தீர்த்த தருளும் தன்மையானவை யாகவும் விளங்கும் அருள்நூல்கள் திருமுறைகள். 

        இறைவன் ஒருவனே, அந்த ஒருவன் சிவனே, அவனோடு ஒக்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை. சிவபெருமானே முழு முதற்கடவுள். அப்பெருமான் திருவருட் சக்தியுடன் இணைந்து ஒரு பொருளாகவே உள்ளான். அன்பு நீதி உண்மை, செம்மை, அருள், ஞானம் என்பவற்றை அதிட்டித் நிற்கும் சிவம்.  அவற்றின்றும் பிரிவிலா ஒரு பொருள் ஆக உள்ளது. எல்லா உயிர்கள் மீதும் அளப்பெரும் கருணை கொண்ட சிவபெருமான் அவைகளி்ன் ஈடேற்றத்தின் பொருட்டு ஐந்தொழில் செய்கிறான்.

  அப்பெருமானின் மறைமொழி திருவைந்தெழுத்தான நமசிவாய என்ற மந்திரமும். சிவ சின்னங்கள் திருநீறு, உருத்திராட்சமும், சிவனடியார் பெருமை சொல்லலும் பெரிதே. அப்பெருமானிடம் சேர்ப்பிக்கும்  நால்வகை நெறியான சரியை,, கிரியை, யோகம், ஞானம் என்ற நெறிகளை அறிவிப்பது திருமுறைகள் என்பதை நாம் அறிந்து மனிப்பிறப்பு எடுத்ததின் நோக்கமாகிய கடவுளைட வணங்கி முக்தி இன்பம் பெறுவதலுக்கு உறுதுணையாக விளங்குவது பக்தி இயக்கத்தினை வளர்ப்பதுமான சாதனமான திருமுறைகளை பாராணம் செய்து மீண்டும் பிறவா நெறி அடைந்து நல்வாழ்வு வாழ்வோமாக!

திருச்சிற்றம்பலம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக