சனி, 22 ஜனவரி, 2022

சுந்தரபாண்டியத்தில் திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா

 சுந்தரபாண்டியத்தில் திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா

சுந்தரபாண்டியத்தில் அருள்பாலித்து வரும் அம்மன் அருள்மிகு வெயிலுகந்தம்மன் கோவில் புணரமைப்பு பணிகள் தொய்வு நிகழ்வை போக்கி, துரித சேவையின் மூலம் அஸ்டபந்தன கும்பாபிசேக விழாவை எதிர்நோக்கி, தீய சக்திகளை விரட்டி விலக்கவும், நாட்டில் கொடிய நோ ய்களின் தாக்கம் முற்றுப்பெறவும், எம்பெருமான் அருள் பெற்று கோயில் பணியினை துரிதப்படுத்தி விரைந்து நடக்கவும்,தொழில் வளம் சிறக்கவும் இவ்விரு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
நிகழ்வு நாள் தை மாதம் 13ம் நாள் ( 26.01.2022) புதன்கிழமை காலை சுமார் 8.00 மணி
அளவில் திருமுறைநாதர் வீதி உலாவும் அதனை தொடர்ந்து முற்றோதல் நிகழ்வும் நடை பெறும்.அருப்புக்கோட்டை சிவனேசர் சிவ. அமலனடிமை அவர்களின் கீழ் இயங்கும் பன்னிரு திருமுறை விண்ணப்பக்குழு.இடம்° அ.மி, வெயிலுகந்தம்மன் கோவில் வளாகம்
திருமுறைநாதர் வீதி உலா ;திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்ற சிவனடியார்கள் (பன்னிரு திருமுறை தேவார திருவாச நூல்கள் அடங்கிய பேழை ) திருமுறைநாதரை சிரத்தில் சுமந்து நகர் முக்கிய வீதி உலா வருதல்
சுந்தரபாண்டியம் சுந்தரவிநாயகர் திருக்கோயிலிருந்து புறப்பட்டு அம்மன் கோவில் அடைதல்.திருமுறை நாதர் வீதி உலாவில் " கரிவலம்" சிவனடியார்களின் பஞ்சவாத்திய இசை என்ற கைலாய வாத்தியம் மற்றும் சிவனடியார்களின் சிவ நாமவளியுடன் தேவார திருவாசகப் பாடல்களுடன் ஊர்வலம்
அனைத்து இறை அன்பர்களும் சிவபக்தர்களும் அம்மன் கோயில் வழிபாட்டார்களும் கலந்து கொண்டு அம்மன் கோவில் புணரமைப்பு பணி சிறக்க வேண்டிடவும், நகரில் காெடிய நோ ய் தாக்குதல் தவிர்க்கவும், நாடு நகரம் தொழில் சிறக்க , பிராத்திக்கவும், எம்பெருமான் இறை அருள் பெற்றுய்யவும் விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு
அ.மி. வெயிலுகந்தம்மன் கோவில் திருப்பணிக்குழு ,
பட்டுக்கோட்டை ராம்கோ பட்டு சென்டர்,
திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்.சுந்தரபாண்டியம்

திருமுறைநாதர் வீதி உலா மற்றும் திருவாசக முற்றோதல் விழா

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது

 பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், 

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், 

இறைவன் அடி சேராதார்”   ///         என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.

முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.

இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.

..... ..... நித்தலும்எம்பெருமான் கோயில்புக்கு

    விடிவதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு

    பூமாலை புணர்ந்தேத்தி, புகழ்ந்து பாடி, 

    தலையார கூம்பிட்டு கூத்துமாடி 

    சங்கர ஜெய ஜெய போற்றி ,,,,,,  என்கிறார்

பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும். உயிர்களிடத்தில் அன்புகாட்டிப் பிறவி அறுக்கும் வழியினை அடுத்த கட்டுரையில் காண்போம்.

திருச்சிற்றம்பலம்