ஞாயிறு, 11 ஜூன், 2023

அடியார்கள் வழிபாடு

 இறைவன் வழிபாட்டில் அடியார்கள் வழிபாடு

  சிவ வழிபாட்டின் மூன்று அம்சங்களான குரு,லிங்க, சங்கம வழிபாட்டில் குரு வழிபாடு நம் குல குரு, வித்தியா குரு, ஆகம குரு என்றபடி நமக்கு இறைவனை அடைய செய்யும் அற நெறிகளை நமக்கு புகுட்டி நமக்கு வழிகாட்டும் குருவை இறைவனாக வழிபாடுதல், இரண்டாவதாக இறைவனை லிங்க வடிவில் வழிபடுதல், மூன்றவாதாக சங்கம வழிபாடு என்ற வகையில் இறைவனின் தொண்டு செய்யும் அடியார்களை இறைவனாகவும், குருவாகவும் கொண்டு அடியார்களை அவர்களோடு சேர்ந்து அடியாரோடு அடியாராக வணங்கி வழிபாடுசெய்தல் 

இந்த அடியார் வழிபாட்டில் என்ன, எப்படி வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை நம் அருளாளர்கள் கூறிய வழங்கிய அறிவுரைகள் பற்றி சிந்திப்போம்.

 அடியாரை கண்டபோது செய்யத்தக்கது பற்றி அப்பர் அடிகள் கன்ராப்பூர் பதிகத்தில் கூறியஅறிவுரைகள் 

  அடியார்களின் உயர்வையும், தன்னுடைய இழிவையும் எண்ணி நாணிப் பணிவது,

 இனிய மொழிபேசி கும்பிட்டு கொண்டாடி அவர் பணியை தம் பணியாக செய்தல், அப்படி தாம் செய்யும்பணியை சிவப்பணியாக கருதி செய்ய வேண்டும்.

  " எவரேனும் தாமாக விலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி

    உவராதே அவரவரைக் கண்ட போது உகந்தடிமை திறநினைந்தும் உவந்து நோக்கி

    இவர்தேவர்அவர்தேவர் என்று சொல்லிஇரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்

    கவராதே தாெழுமடியார் நெஞ்சு னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே         அப்பர் தேவாரம் 

    நெற்றியில் திருநீறு அணிந்து உருத்திாட்சம் பூண்டு வந்தவரைக் கண்டால், அவர் எவராயினும் அவரது குற்றங்களைக் காணாமல், அவரைக் கண்டபோதே உளம் மகிழ்ந்து இறைவனை வழிபடுதல் போன்று அடியாரைத் தொழுதல் வேண்டும். அப்படி தொழுவார் நெஞ்சத்து இறைவன் குடியிருக்கும் இடமாகும் அவரே இறைவன் , திருவேடம் உடையாரைச் சிவன் எனத் தெளிந்து அவரை வழிபடுதல் சிறிதும் பிறழாது இருத்தல் வேண்டும்.

  இதன் பலன், பாசப்பற்று நீங்கி வீடுபேறு திருவேடம் சிவன் உருவே ஆகும்.

  இதனை சிவஞான சித்தியாரும் கூறியிருக்கிறார்.

 அறிவு அறியான் தனை அறிய யாக்கை ஆக்கி

 அங்கு அங்கே உயிரிக்குயிராய் அறிபொடுத்து அருளால்

 சேறிதலினால்திருவேடம் சிவம்உருவே ஆகும்

 சிவோகம்பா விக்கும் அத்தால்சிவனும் ஆவர் ......... சித்தியார்

  சிவனடியாருக்கு செலுத்தும் அன்பே சிவனுக்கு செலுத்தும் அன்பாகும்.  சிவனடியார் சிவமே ஆவார், அன்பின் அளவு சிவனடியாரிடம் காட்டும் அன்பின் அளவாகவே தெரியப்படும். ஆக, அடியவரிடத்து அன்பிலாதார் ஈசனிடம் அன்பிலாதாரே ஆவர். அடியவரிடம் காட்டும் அன்பு ஈசனுக்கு செல்லு்ம் மற்றும் எவ்வுயிருக்கும் செல்லும, இதன் பயனாக தன்னுயிர் நிலைத்த இன்பத்தை தரும்.வினைகள் குறைந்து புண்ணியங்கள் பெருகும், பிறப்பு இறப்பு ஒழிந்து இறைபேறு அடைந்து வீடுபேறு நிச்சயம் கிடைக்கும்.இதனைத்தான் பெரியபுராணம் நமக்கு அடியார் வழிபாட்டையும், அவர்கள் அடியார்களுக்கு செய்த தொண்டையும் விரிவாக நமக்கு உணர்த்துகிறது.

 எனவே அடியார் வழிபாடும் இறைவழிபாடாகும், என்பதனால் அடியார் வழிபாட்டுடன் அவ்வடியார்களோடு இணங்கி அவர்களோடு நாமும் பூவுடன் சேர்ந்த நார் நறுமணம் பெறுவதுபோல அவர்களோடு இயைந்து வாழும் போது இறைவழிபாட்டு பலன் நம்மை சேறும். அதன் வாய்ப்பாகத்தான் தற்போது நம் இராஜபாளையம் நகரில் உலக சிவனடியார்கள் ஒன்றிடும் நிகழ்வு நடைபெற போகிறது. அவ் நிகழ்வில் சிவ பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்தும், அவ்விழாவிற்கு தேவையான உதவிகள் செய்து அடியார் சேவையாகக் கொண்டு அதில் பங்கு பெற்று நாமும் அருள்பெறுவோம். அடியார்கள் என்றால் வெறும் திருநீறும் கண்டிகையும் அணிவது மட்டுமல்ல, அவர்கள் முறைப்படி தீட்சை பெற்று அனுதினமும் அனுஷ்டத்துடன் சிவபூசை பெற்று இறை அருளை தக்க வைத்துக்கொண்டவர்கள் இவர்கள் தங்களின் ஆன்மார்த்த பூசையுடன் திருக்கோவில்களிலும் உள்ள சிவலிங்கத்திற்கு பிராத்தபூசையும் உழவாரப்பணியுடன் செய்து அடியார்களின் சின்னமும் தாங்கி சிவப்பணிகள் செய்யும் ஆற்றலை கொண்டவரகள் எனவே அடியார்களை வழிபாட்டால் இறை வழிபாட்டு அருள் நமக்கு கிடைக்கும் என்பது உறுதி. எனவே வரும் 25,6,23 அன்று நடைபெறும் உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தில் கலந்து விழாவினை சிறப்பித்தும் அடியார்களோடு ஒன்றி அருள்பெற்று அவ்விழாவிற்கு தேவையான உதவிகள் வழங்கி உதவி அருள் பெறுங்கள்

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக