சனி, 13 ஜனவரி, 2024

ஆன்மாவும் குருவும்

 


ஆன்மாவும் குருவும்

"சாதித்த தெல்லாம் தவமேனும்சற்குருவைப்

 பேதித்தால் எல்லாம் பிழையாகும்.   சித்தாந்த சிகாமணி (பண்டார சாஸ்திரம்)

  ஒருவன்பொறிகளை தன் வசப்படுத்திச் சாதித்தன எல்லாம்தவமாகவே இருப்பினும் உபதேசம் அருளும்ஞானாசிரியனை வேறாக கருதி முரண்பட்டால் அத்தவம் அனைத்தும் பிழைபடும். அரிய தவங்களை ஆன்மா சாதித்தாலும் தானாகவே சுதந்திரமாக சாதிக்கவில்லை,சிவபெருமான் தோன்றாத் துணையாக விளங்கித் தவநெறியினை அறிவித்து அந்நெறியில் ஆன்மாவைச் செலுத்துவான். அவன் அருளால் ஆன்மா தவத்தை படிமுறையில் இயற்றி முற்றுவிக்கிறது.இவ்வாறு தோன்றாத்துணையாக இருந்து ஆன்மா தவநெறியை முற்றுவிக்க அருள்செய்த முதல்வனே சற்குருவாக எழுந்தருளி ஞானத்தை உணர்த்துவான்,எனவே இந்நிலையில் மாணாக்கன் சற்குருவோடு முரண்பட்டு எதிர்த்தால் அது சிவபிரானையே எதிர்ப்பதாகும். யாரைத் தோன்றாத்துணையாக கொண்டு தவத்தை இயற்றினானோஅந்த முதல்வனையே எதிர்ப்பதால் செய்நன்றி கொன்ற குற்றம் பொருந்தி இயற்றிய தவம் அனைத்தும் பிழைபட்டு போகும். எனவே " சாதித்தது எல்லாம்தவமேனும் சற்குருவைப் பேதித்தால் எல்லாம் பிழையாகும்" எனப்படுகிறது

 சற்குருவை எதிர்த்தால் சிவபிரானை எதிர்த்தலே ஆகும் எனும் உண்மை இனிது விளங்கும் பொருட்டு சிவநிந்தை செய்த தக்கன் வரலாறு சான்றாக உள்ளதை அறியலாம்.

திருச்சிற்றம்பலம்

நன்றி பண்டார சாஸ்திரம் சித்தாந்த சிகாமணி பாடல் 1






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக