சிவ பூசை
சிவ பூசை தோன்றி வகையினை கூறும் சேக்கிழார் பெருமான்
" எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் வரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தனை யர்ச்சனை புரிய அவதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்தே " பெரியபுராணம்
இவ்வாறு இறைவனை திருப்தி படுத்துவது சிவபூசையே என்பது வளிங்கும்
நாம் முற்பிறப்பிற் செய்த புண்ணியக் காரணமாக பெறுதற்கரிய இம் மானுட தேகத்தை பராபர முதல்வன் பரமசிவன் நமக்கு தந்து வைதிக சைவ சித்தாந்த சமயத்திலே ஜனனமாக திருவருள் பாலித்தருனார். நமக்கு இம்மானுட தேகத்தை சிவ பெருமான் தந்தது சரியை, கிரியை, யோகம் என்னும் புண்ணியங்களைச் செய்து தம்மை வழிபட்டு சிவஞானத்தை தரும் பொருட்டேயாகும்.
சரியை,கிரியை , யாேகம், ஞானம் என்னும் நான்கும் படிமுறையில் அரும்பும், பூவும், காயும், கனியும் போன்று ஒன்றுக்கொன்று தொடர்ச்சியும் ஏற்றமும் உடையன.
அது,
"விரும்புஞ் சரியை முதன் மெஞ்ஞான நான்கும் அரும்பு மலர் காய் கனி போன்றே பராபரமே" என்னும்தாயுமான சுவாமிகள் திருவாக்காம்.
அவற்றுள் சரியை யாவது புறத்தொழில் மாத்திரையான சிவபெருமானுடைய உருவத் திருமேனியை நோக்கி வழிபடுவதாம்.
கிரியையாவது ஆசாரியரிடத்திலே விசேட தீட்சை பெற்று, அருவுருவத்திருமேனி ஆகிய சிவலிங்க பெருமானை ஏற்றி அகத்தொழில், புறத்ெதாழில் என்னும் இரண்டாலும் வழிபடுவதாம்.
அது ஆணவமலத்தை நீக்கி பிறவியொழிந்து மோட்சத்தை தரும்படி தூபம் தீபம் சந்தனம், புஸ்பம் திருமஞ்சனம் முதலிய பூசோபகரங்களைக்கொண்டு பஞ்ச சுத்தி செய்து அகமும், புறமும்பூசித்து, அக்கினி காரியமும் பண்ணி சிவபெருமானுடய வரத அத்தத்தில்உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்பித்தாலாகிய சிவபூசையாம்.
மந்திரம், கிரியை, பாவனைகளால் மனம், மொழி காயம் என்னும்மூன்றும் ஒருமித்து மெய்யன்போடு கிரியை ெசய்தல் வேண்டும். அன்பின்றி செய்யும் கிரியையால் பயனிலதாம் அன்பு முக்கியம் என்பது
"கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடினாலும் அரனுக்கன்பில்லையேனில்
ஓடு நீரினை ஓட்டைக்குடத்தட்டி
மூடிவைத்திட்ட மூர்க்கனை யொக்குமே ,,,,,, என்றும்
" நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைபுண்ணியன்
பொக்கமிக்கவர் பூவும் நீரும் கொண்டு நக்குநிற்பனவர் தம்மை நாணியே
என வரும்திருநாவுக்கரசர் திருத்தேவாரத்தால் உணரப்படும்
பிறக்கும் பொழுதும் பின் இறக்கும் பொழுதும் அதற்கிடை காலத்திலும்அனுபவி்க்கும் துன்பத்தை ஒரு அறிஞன் சிந்தித்தால்பிறவாதிருத்தல் தவிர வேறு ஒன்றும்வேண்டவே வேண்டாமென்று முடிவிற்கே வரக்கூடும்.
இருப்பினும் அப்பிறவிகளிலும் மானிடப்பிறவியே மேலான தென்று கருதப்படுகிறது. இப்பிறவி தப்பின் எப்பிறவி வாய்க்குமோ என்றனர் மேலோர்.
,,,,,,..... இனித்தமுடைய பொற்பாதம் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே என்கிறார் அப்பரடிகள்
மானிட பிறவி பெற்று பாசம் விடுவித்து பெறுவதற்கு கிடைத்த மானிட பிறவி கொண்டு சிவபூசை செய்வது ஒன்றே வழி
திருச்சிற்றம்பலம்