செவ்வாய், 4 ஜூன், 2024

அா்ச்சனை பாட்டே ஆகும் "

 அா்ச்சனை பாட்டே ஆகும் "

எளிய இறைவழிபாடு

கோவில் சென்று பெரும் பொருள் செலவு செய்து அா்ச்சனை செய்துதான் வழிபாடு செய்யவேண்டுமென்பதில்லை. அா்ச்சனை என்பது இறைவன் பெயரை திரும்பத் திரும்ப உச்சாித்து நமது எண்ணங்களை வேண்டுதலை ஆண்டவனிடம் பிராத்திப்பதுதான் இதற்கு நீங்களே ஆண்டவன் நாமத்தை கூறி உங்களுடைய வேண்டுதல்களையும் ஆண்டவன் முன்பாக நின்று இறைச்சலின்றி வேண்டிக்கொண்டால் அதுவே அா்ச்சனையாகும், அா்ச்சகரும் உங்கள் பெயா் பிறந்த நட்சத்திரத்தை கூறிக்கொண்டு உங்களுைடய வேண்டுதல்களை ஆண்டவன் நாமத்தை கூறிக்கொண்டே அா்ச்சனை செய்கிறாா்.இறைவன் புகழ்கூறும் பாடல்கள் பல, அவற்றை நாம் பாடினால் அதுவும் அா்ச்சனை ஆகும். " அா்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக என்றாா் தூமறை பாடும் வாயாா் " என்று இறைவனே சொல்வதாகச் சேக்கிழாா் பாடுகிறாா்.

 

 " யாவா்க்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை" என்று கைப்பொருள் செலவில்லாது இறைவனை வணங்கும் வழிமுறை சொல்கிறாா் திருமூலா்.

 

இது போன்றே எளியமுறையில்வழிபடுவதை

 " சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்நாமம் என் நாவில் மறந்தறியேன்" என்று

 

இறைவனுக்கு நீராட்டி மலா்சூட்டி தூபதீபம் காட்டுதல் அவனை எண்ணி மகிழ்தல் தமிழால் இசைபாடுதல் அவன் பெயரை எப்பொழுதும் உச்சாித்தல் அவனை மறவாதிருத்தல் இவை எளிய இறைவழிபாடு என அப்பா் சுவாமிகள் பாடுகிறாா்.

 

 மேலும் ஞானசம்பந்தா் திருவாக்கிலும் " சொல்லும் பொருளுமாய் நின்றாய் தாமே, தோத்திரமும் சாஸ்திரமும் ஆனாய் தாமே"  என்றும் தோத்திரங்களும் சாஸ்திரங்களும் சிவனாாின் திருவாக்குகளே என்று சம்பந்தா் கூற்றின் மூலமும் அறியலாம் சமயகுறவா்களின் தேவாரப்பாடல்களிலும் ஏன் பன்னிருதிருமுறைகளிலும் இறைவனை வழிபட தேவாரப்பாடல்களும் திருமறைபாடல்களும் இறைவனை போற்றி புகழ்பாடும் பாட்டுக்களாகத்தானே உள்ளது. அவா்கள் எல்லோரும் தோத்திரப்பாடல்கள் பாடித்தானே அருள் பெற்றதை நாம் தெளிவாக அறியலாம்.

 தான் கூற இறைவன் எழுத பாடியவர்மாணிக்க வாசகர் அவர் தன் திருவாசகத்ததில் யாத்திரைப்பத்து பதிகத்தில்

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்

புயங்கன் தானே புந்திவைத்திட்டு

இகழ்மின் எல்லா அல்லலையும்

இனிஓர்இடையூறு அடையாமே

..........  நிகழும் அடியார் முன் சென்று

நெஞ்சம் உருகி நிற்போமே

  பெருமானின் திருவடிகளையே புகழுங்கள், வணங்குங்கள் அவற்றை பூவால் அலங்கரிங்கள், அவன் திருவடிகளையே மனத்துட்பதித்து பாடுங்கள் பாடி பணியுங்கள் என்று அவன் அருள் பெற வழி கூறுகிறார். மேலும் அவர் புகழ் பாட போற்றித்திரு அகவல் போன்ற பல பதிகங்கள் உள்ளன. மேலும் அப்பர் அடிகள் பாடிய பாேற்றித்தாண்டவம் பதிகங்கள் அனைத்தும் அவன் புகழ் பாடி போற்றிப் பதிகங்களே ஆகும். இவற்றை பராயணம் செய்து இறைவன் முன் நின்று மனதாரப் பாடுங்கள் உங்கள் இல்லல்கள் அகழும் திரு அருள் கிடைக்கும்

எனவே பெரும் பொருட்செலவு செய்வதைக் காட்டிலும், இறைவன் சந்நிதியில் அவன் பெயரை மீண்டும் மீண்டும் உச்சாிக்கலாம் அவன் புகழ் கூறும் தேவாரப்பாடல்களை பாடி அா்ச்சனை இறையருள் பெறலாம்,

இது ஒரு நிறைவான இறைவழிபாடு ஆகும்

மானிடப்பிறப்பின் மாண்பு

 

எண்ணரிய பிறவிதனில் மானிட பிறவிதான் யாதினும்அரிது அரிது எண்கிறார் தாயுமானவர்

 அரிது அரிது மானிடராய் பிறத்தல் என்கிறார் அவ்வை

 

எல்லா பிறவிகளையும்தவிர்த்து மனிதப்பிறப்பு எடுத்தது கடலைக் கையால் நீந்துவதற்கு சமம் என்பர் சான்றோர்,

 திருநாவுக்கரசு சுவாமிகள் " வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் " என்கிறார்.

வாய்த்தது என்றால்நம்முடைய நல்வினைப்பயனால் இறைவரால் கொடுக்கப்பட்டது என்ற பொருளாகும். நாமாகக் கேட்டு பெற்றதல்ல இந்த மானிடப் பிறப்பு

இதனை சம்பந்த பெருமானார் " அருந்திரு நமக்கு ஆக்கிய அரன் " என்கிறார்.

 நம்மைச் சைவ சமயத்தில் பிறக்கச் செய்ததே மிகப்பெரிய செல்வம்,இந்த மண் உலகில் வேறு எங்கு பிறந்திருந்தாலும் பிறவா நெறி அடைவது இயலாததாகும்.

  மனிதப்பிறவியின் நோக்கம்°  மனித பிறப்பு எடுத்ததன் நோக்கமேஇனி பிறவாமை பெறுவதுதான். இறைமை என்னும்பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்துவந்த ஒரு துளிதான் நாம்,

 கடல்நீர் ஆவியாகி மழை நீராக மாற்றமடைந்து நதிகளின் வழியே மீண்டும் கடலில் வந்து கலந்து விடுகிறது, இதுதான் உலக இயல்பாக இருக்கிறது, இதைப்போல இறைமையினின்று பிரிந்து வந்த ஓர் துளியாகிய நாமும் இறைமையில் கலந்து விட வேண்டும், இதுதான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவாகும். இதுவே பிறவா நிலை என்றும் முக்தி பேறு என்றும் கூறப்படுகிறது,

  பிறப்பின் இரகசியம் இப்படி இருக்கும் போது மனிதன் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கிறான் என்கிறார் அப்பர் அடிகள்.

பிறவியின் நோக்கமே தெரியாமல் வாழ்கிறோம், அதனால் தான் ஆசையின் வயப்பட்டு பலப்பல வினைகளை செய்கிறோம், இவ்வினைப்பயனாக நாம் மீண்டும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகிறோம், நம் செயல்கள் எல்லாம் இறைவன் செயலாக அவனிடம் நம்மை தந்து இறைவனை முழு மனத்தோடு எண்ணி அவன் தாள்பணிந்து பிறவா நெறி பெறுவோம்

திருச்சிற்றம்பலம்