செவ்வாய், 4 ஜூன், 2024

மானிடப்பிறப்பின் மாண்பு

 

எண்ணரிய பிறவிதனில் மானிட பிறவிதான் யாதினும்அரிது அரிது எண்கிறார் தாயுமானவர்

 அரிது அரிது மானிடராய் பிறத்தல் என்கிறார் அவ்வை

 

எல்லா பிறவிகளையும்தவிர்த்து மனிதப்பிறப்பு எடுத்தது கடலைக் கையால் நீந்துவதற்கு சமம் என்பர் சான்றோர்,

 திருநாவுக்கரசு சுவாமிகள் " வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் " என்கிறார்.

வாய்த்தது என்றால்நம்முடைய நல்வினைப்பயனால் இறைவரால் கொடுக்கப்பட்டது என்ற பொருளாகும். நாமாகக் கேட்டு பெற்றதல்ல இந்த மானிடப் பிறப்பு

இதனை சம்பந்த பெருமானார் " அருந்திரு நமக்கு ஆக்கிய அரன் " என்கிறார்.

 நம்மைச் சைவ சமயத்தில் பிறக்கச் செய்ததே மிகப்பெரிய செல்வம்,இந்த மண் உலகில் வேறு எங்கு பிறந்திருந்தாலும் பிறவா நெறி அடைவது இயலாததாகும்.

  மனிதப்பிறவியின் நோக்கம்°  மனித பிறப்பு எடுத்ததன் நோக்கமேஇனி பிறவாமை பெறுவதுதான். இறைமை என்னும்பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்துவந்த ஒரு துளிதான் நாம்,

 கடல்நீர் ஆவியாகி மழை நீராக மாற்றமடைந்து நதிகளின் வழியே மீண்டும் கடலில் வந்து கலந்து விடுகிறது, இதுதான் உலக இயல்பாக இருக்கிறது, இதைப்போல இறைமையினின்று பிரிந்து வந்த ஓர் துளியாகிய நாமும் இறைமையில் கலந்து விட வேண்டும், இதுதான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவாகும். இதுவே பிறவா நிலை என்றும் முக்தி பேறு என்றும் கூறப்படுகிறது,

  பிறப்பின் இரகசியம் இப்படி இருக்கும் போது மனிதன் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கிறான் என்கிறார் அப்பர் அடிகள்.

பிறவியின் நோக்கமே தெரியாமல் வாழ்கிறோம், அதனால் தான் ஆசையின் வயப்பட்டு பலப்பல வினைகளை செய்கிறோம், இவ்வினைப்பயனாக நாம் மீண்டும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகிறோம், நம் செயல்கள் எல்லாம் இறைவன் செயலாக அவனிடம் நம்மை தந்து இறைவனை முழு மனத்தோடு எண்ணி அவன் தாள்பணிந்து பிறவா நெறி பெறுவோம்

திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக