செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ellam bira

விநாயகர் அருள் பெற
இன்பமாயது அறாது இடை ஓங்கவும்
துன்பமாவது தூரத்துள் நீங்கவும்
அன்பின் ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்
- சாந்தலிங்கப் பெருமாள்
குருவருள் பெற
எல்லாம் உடையான் குருவாகி ஈங்குஎமது
அல்லால் அறுத்தான் என்றுஉந்தீபற
அவன் தாள் தொழுவாம் என்று உந்தீபற
- சாந்தலிங்கப் பெருமாள்
சிவன் அருள் பெற
பூழியர் கோன் வெய்பொழித்த புகலியர் கோள் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

அம்மையின் அருள் பெற
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய் வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குடிலாள் அபிராமி கடைக்கண்களே!
அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதி
கல்வியும் ஞானமும் பெற
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நான் அறிவுஇச்சையும்
நமச்சிவாயவே நாதவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே!
தேவாரம்
நோய் தீர்ந்தருள
பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாரா செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்ள் தீயெழுத்தின் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே!
தேவாரம்

குறை நீங்கி செல்வம் பெருக,
பொன்னும் மெய்பொருளுந் தருவானைப்
போகமுந் திருவும் புணர்ப்பானைப்
பின்னை யென்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையனென் றறியொண்ணா
எம்மானை யெளிவந்தபிரானை
அன்னம் வைக்கும் வயற்பழனத்
தணியாரூரானை மறக்கலுமாமே,
சுந்தரர் தேவராம்
நல்ல மணவாழ்க்கை அமைய
சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே
சம்பந்தர் தேவாரம்
குழந்தை செல்வம் பெற
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளநிறைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயற வேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய் வினையார் அவர் தம்மைத்தோயாவாம் தீ வினையே
சம்பந்தர் தேவாரம்
நவகோள் நன்மையே நல்க
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல்
அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனிபாம் புஇரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!
சம்பந்தர் தேவாரம்
வழக்கு பகை வெல்ல
வளைந்து வில்லு விளைந்தது பூசல்
உளைத்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வென்தவா றுஉந்தீபற
தேவாரம்
எல்லாம் சிவன் செயல்
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இசைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் குணமிக்கார் தொண்டராம் குணத்தாரே!
சேக்கிழார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக