சனி, 24 மார்ச், 2012

நான் கண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார்

அருள்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருனை அருள் பெருஞ்ஜோதி!
நான் கண்ட மகான் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வள்ளல் என்றாலே வாரி வழங்கும் கொடைத் தன்மையையும், அன்பின் நெகிழ்ச்சியையும் குறிக்கும், ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வயிற்றுப் பசிக்கு அன்னம் வழங்வதோடு அல்லாமல் ஞானப் பசிக்கு ஆன்மிகத்தையும் ஊட்டி மக்களிடம் ஜீவகாருண்ய கருத்துக்களை வழங்கிய மகான் தான் வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் எல்லா உயிர்களிடத்தும் பாரபட்ச அன்பை காட்டிய அன்னை தெரசா போலும், ஏழை எளிய மக்களுக்காக பூமிதானம் பெற்று உழைத்து உண்டு மகிழ பூமிதான இயக்கத்தின் பெருந்தகை அண்ணல் வினேபா பாபுஜி போல் சாதிமத பேதமின்றி எல்லா இனத்தவருக்கும் பசி என்னும் கொடு நோயை போக்கிட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ஏற்படுத்தி , புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியமான பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது என்ற கொள்கைக்கு ஏற்ப இராமலிங்க அடிகளார் அன்னதானச்சாலை ஒன்றை வடலூரில் அமைத்து மக்கள் வழங்கும் பொருளுதவியைக் கொண்டு சாதிமத இன பாகுபாடு இன்றி மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடரச் செய்தவர் வள்ளல் இராமலிங்க அடிகளார், அன்பின் வெளிப்பாடு கருணையின் வெளிப்பாடு தூய வெண்மை நிறமாகக் கொண்டதால் வள்ளலார் என்றும் தூய வெண்மையானஆடையினையே அணிந்து வந்து அமைதியையும் கருணை உணர்வையும் வெளிப்படுத்தினார், வள்ளலார் பசிப்பிணியை அகற்றியோடு அல்லாமல் தூய தமிழால் எளிய தமிழில் வெண்பாக்கள் மூலம் ஆன்மிக கருத்துக்களையும் மக்களிடம் புகட்டினார் கடவுள் ஒருவரே கடவுளை உண்மையான அன்புடன் ஒளிவடிவில் வழிபடவேண்டும் இறைவனை ஒளி வடிவமாக போற்றி வழிபட வழிகாட்டியவர், சத்திய தருமச் சாலைக்கு அருகில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்னும் எண்கோண வடிவிலான ஒர் ஒளித் திருக்கோவில் அமைத்து கடவுளை ஒளிச் சுடராக வழிபட செய்தவர், சாதி மதம் இனம் மொழி தேசம் என்ற வேறுபாடுகளை கடந்து அனைவரும் பிராத்தனை செய்ய வழிகோல் அமைத்தார், இதில் மையத்தில் கடவுளை ஜோதி வடிவில் பிரதிஸ்டை செய்து வள்ளலார் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தார் அது அணையாத தீபமாக இன்றுவரை பராமரிக்கப்பட்டு கடவுளே ஜோதிமயமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது, மக்களிடம் தீப விளக்கை தொடர்ந்து வழிபட்டு வரச் செய்து தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் உள்ள நான் இனி அன்பு செய்யும் எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என செய்தி அளித்தார் அன்னார் கூற்றின்படியே வள்ளலார் 1874ம் வருடம் தைமாதம் 19ம் தேதி புனர் பூச நட்சத்திரத்தன்று இரவு 12 மணிக்கு சித்தி வளாகத் திருமாளிகை அறைக்குள் புகுந்து மறைந்தார்,அன்றுமுதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்கு தோன்றாமல் அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிகொண்டுள்ளார். மேலும் அன்னை தெரசாவின் கொள்கையின் வடிவாக உருவான செஞ்சுலுவை சங்கத்தின் கொள்கைகளை வள்ளல் இராமலிங்கஅடிகள் அவர்களின் வாய்லாக தெள்ளத்தெளிவாக தோன்றுகிறது, இயலாதவருக்கு உதவுதல், நரபலி தவிர்த்தல் புலால் உண்ணாமை எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் போன்ற சிறந்த குணங்களையே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வாழ்ந்து ஆன்மிகத்திலும் சிறந்த கருத்துக்களை, எளிய தமிழில் இயற்றிய ஆன்மிகக் கவிஞர் ஆவார், இவர் தன்னுடைய திருவருட்பாவில் அரிய மூலிகைகளையும் மருத்துவ முறைகளையும் எழுதியிருக்கிறார்,அதில் சில மூலிகைகளும் அவற்றால் நமக்கு கிடைக்கும் பயன்களும் பற்றி தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியிட்ட விபரத்தையும் இத்துடன் இணைத்துளளேன் படித்து பயன்பெறுங்கள், வள்ளல் அடிகளார் தேசத்தந்தை காந்தியடிகள் அன்பின மறுபிறவி அன்னை தெரசா பூமிதான ஜோதி வினேபாஜி போன்று நம் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த வள்ளல் பெருமான் போல் நாமும் வாழ முயன்று அன்னாரின் புகழுக்கு உறுதுணை செய்வோம், அருட் பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக