மானிடர் வாழ்வில்.....
முதுமையும் ... திருமுறை வழிகாட்டலும்
அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அவ்வாறு பிறந்த காலை தவம் செய் வழியில் பிறந்தலும், ஊனமற்று பிறப்பதும், முன்னே பிறப்பின் தவச்செயலே. இவ்வாறு பிறந்த நாம் நம் பிறப்பின் பயன் அறியாது இறையை மறந்து தான், நான் என்ற ஆணவ மலத்தாலும், ஞான அறிவு இழந்து லெளவீக வாழ்வில் பொன், பொருள் எவ்வழியிலாவது சம்பாதிப்பது என்றே வாழ்ந்து நிலையில்லாத பொய் இன்பம் அனுபவித்து பின் வரும் வாழ்வில் நாம் அடைய வேண்டிய மெய் இன்பத்தை (வீடுபேறு) மறந்து வாழ்வை வீணே போக்கிவிட்டு இந்த பொய்யான உடல் வலுவிலந்து தடுமாறும் போதுதான் சற்று இறை சிந்தனை சற்று உற்று நோக்குகின்றோம்,இம் மானிட உடல் முதுமை அடையும்போது ஆங்கிலக் கவிஞர் சேக்பியர் அவர்கள் கூறியது போல முதுமை பருவம் இரண்டாம் (படி நிலை) குழுந்தை பருவம் என்றார் (செக்கண்ட் சைல்டு ) இப்பருவம் மானிடர் வளர்ச்சியில் பின்சூழல் சூழற்சி பருவம் , எவ்வாறு குழந்தை படுக்கையில் கிடந்து,தவழ்ந்து, நடந்து தன் பயணத்தை தொடர்ந்தது போல் இதுவே எதிர் வளர்ச்சி யாக முதுமையில் அடைகிறோம். இந்த பருவமான உட்கார்ந்து ,தவழ்ந்து, படுக்கையில் கிடக்கும் பருவத்தில் யார் இந்த உடலுக்கு துணை? இல்லத்தரசியும்நம் வயதினாராக இருந்தால் இருவருமே ஒத்த நிலையில்தானே இருப்பார்கள்.
நாம் ஈன்றெடுத்த தவச் செல்வங்களும் நம்மை போன்றே லெளவீக வாழ்க்கையில் தன் சுய உணர்வில் தன் வாழ°க்கையை தன் குடும்பம், தன்வாழ்வு என்று முதியோரை பேணும்நிலையிலிருந்து ஓதுங்கி விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் எங்கள் வயதும் முதுமையை நெருங்கி விட்டது (அப்போது அவர்கள் வயது50/60 என்ற நிலையில் .) நாங்கள் எங்களை பேணுவதே சிரமமாக உள்ளது என பின்னடைகின்றனர். எனவே இப்பருவத்தில் முதுமையில் உள்ளவர்கள் படும் துயர் இறைவனிடம் சரணாகதி அடையும்நிலையில் உள்ளது. இதனை சிந்தனையில் கொண்டு நம் இளம்வயது வாழ்வு பருவத்தில் இறைவன் அளித்த இந்த பொய்யான மெய் உடலை நிலையற்ற செல்வம் சம்பாதிக்க்வே பயன்படுத்திவிட்டோம் அவன் அளித்த திரி கரனங்களான மனம், மாெழி (வாய்) மெய்யை இறைவனின் நாமத்தை மனதில் கொண்டு எண்ணாமலும், வாயால்அவன் புகழ் பாடி போற்றுதலும். இந்த உடல், கை, கால்களை கொண்டு அவனை சென்று அடைந்து அவனுக்கு பணிவிடைகள் (உழவாரப்பணி) செய்யாமலும், இலை, மலர் காெண்டு அவன் திருவடிக்கு சமர்பிக்காமலும்இருந்து வீணே கழித்து விட்டதை உணரும் பருவம் தான் இந்த முதுமை பருவம் எனவே இம்முதுமை பருவத்தில் தான் படும் துன்பத்திலிருந்து விடுபட ஒரு அருளாளர் வேண்டிய பாடல்
" பாயில் கிடக்காமல் பாழும் மனம் நோகமல்
நோயில் படுக்காமல் நொந்து மனம்வாடாமல்
உற்றார் சாடாமல் ஊண் உடல் நோகாமல்
உன் நினைவில் என் உயிர் பிரிந்து
உன் பாதம்அடையஅருள் வாய் " என்று நொந்து நொக்குஉருகி வேண்டுகிறார்.
திருமுறைகளில் கண்ட நாயன் மார்களும்இதற்கு விலக்கல்ல. ஏன் நாவுக்கரசர் பெருமானே தனது கடைசி வாழ்வில் கைலாயமலை செல்ல அவர்தன் உடம்பால் நொந்து இறைவனிடம் அடைந்தது அவரின் முதுமையில் அவர் அனுபவித்த துன்பம் தானே. மற்ற அடியார்கள் முதுமையின் கொடுமையில் அகப்படாத நிலையில் அப்பர் அடிகள்மட்டும்தான் முதுமையில் உடல் துன்பம் கொண்டார் என்பது அவர் வரலாறு உணர்த்தும். அவர் மட்டும் அல்லர். நான் யார்? என்ற கேள்விக்கு விடை கண்ட ஸ்ரீ ரமணே மகிரிஷியும் தன் மூப்பு பருவத்தில் தன் துன்பத்தை அனுபவித்தே கழித்தார் என்பது அவர் வாழ்வு உணர்த்தும்.இது போன்றே எத்தனையோ சித்தர்களும் துன்பம் பெற்றுதான் இறைவழிபாட்டின் தொடர்ச்சியால் துன்பம் நீங்கி இறைவனை அடைந்து சிவமுக்தி பெற்றுஉய்வு பெற்றுள்ளார்கள்.
திருமுறைகளில் காணும் வழி காட்டுதல்கள் ° 11ம் திருமுறை காடவர்கோன் நாயனார்
இவருடைய வெண்பாக்கள் யாவும்யாக்கை நிலையாமையை உணர்ந்து நம் உடல் இளமை பருவத்தில் இருக்கும் போதே இன்றே இப்போதே இளமை பருவத்திலே இருக்கும் போதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும் என்றும் மூப்பு பருவத்தில் உடல் செயல் இழந்த நிலையில் நாம் எல்லாேரும்போய் சேரும் இடம் அம்பலமே (மயானமே) என்றும் அந்த மயானமே திருச்சிற்றம்பலம் என்றும் கூறி முதுமையில் அடையும் வழி சிவவழிபாடு ஒன்றே என்கிறார்.
அவருடைய 3வது பாடலில் முதுமையில் ஒரு உடல் அடையும் துயரத்தையும் அதன் பொருட்டு அதனைவிட்டு நீங்க வழிமுறையினையும் கீழ் கண்ட வாறு பாடியுள்ளார்
பாடல் எண் : 3
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை .
வயது மூப்பு அடையும் போது நெடுக நடந்து போக இயலாமல் இடைஇடையே குந்திக் குந்தி எழுந்து நடக்கும் போதும் தட்டுத்தடுமாறு நடக்கும் பாேது துணையாக ஒரு கைத்தடி யை ஊன்றிக் கொண்டு நடக்கும் போது வாயில் குவழை நீர் உள்ளேயும் செல்லாமல், வெளியேயும் வராமல் இருமி, நொந்து ஏங்கி கஷ்டப்படும் காலத்தில் நெஞ்சே ஐயாறு ஆற்றங்கரையில் அமர்ந்துள்ள ஐயராப்பனை அழை என்கின்றார்.அப்போது தான் உன் முதுமை கஷ்டங்கள் நீங்கி விரைவில் இறைவனை அடைவாய் என்கிறார்.
மூப்பு வந்தவுடன் உற்றார், சுற்றத்தார் மனைவி மக்கள் எல்லோரும்மனம் மாறி விடுவர். மூப்பு என்னும் நொய் வருவது கண்டு அஞ்சிய நமக்கு வந்து விட்டது கண்டு அஞ்சாது இருக்க இறைவனுக்கு நம் திருகரணங்களால் பணி செய்வதே என்கிறார்.
பழுவை தாங்கும் வண்டியின் அச்சு போல இருந்த இந்த உடம்பு செயலற்று விட்டது, இனி சேரும் இடம் அம்பலமே என்கிறார் இதில் அமபலம் என்றது மாயானத்தையும், நன்நெஞ்சே தில்லை சிற்றம்பலமே சேர் என்பது தில்லைவானனையே சேர் என்பதும் விளங்கும்்
"உய்யும் மருந்த தனை உண்மின்
............ பைய எழுந்திரு ........
.......நெஞ்சே செழுந்திரு மயானமே சேர் "
இப்படி இருக்க காரைக்கால் அம்மையார் மட்டும் தன் இளமை பருவத்திலேயே முதுமையை வேண்டி பெற்றார். தன் தலையாலேயே கைலாய மலை சென்றார் மேலும் இறைவா எனக்கு மறுபிறப்பு அளித்தால் உன்னை என்றும் நான் மறவாதிருக்க மனம் தர வேண்டும் என்றும் நீ ஆடும் போது உன் காலடியில் இருக்க அருள் தருள் வாயாக என்று வேணடினார்.
பட்டினத்தார் வாயிலாக நாம் அறிவது
மூப்பு பருவத்தில் நமக்கு யாரும் துணை வர மாட்டார்கள் அப்போது நமக்கு துணை கச்சி ஏகம்பன் ஒருவனே என்கிறார்.
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.
எனவே மானிட வாழ்வில் மூப்பு என்பது எல்லோருக்கும் உண்டு என்றாலும் அவரரவர் வினைப் பயனை கொண்டு இறைவன் நமக்கு வினையின் பயனாக பாவம் புண்ணியங்களை அவ்வப்போது ஊட்டுவார் எனவே நாம் மூப்பு பருவத்தில் மரண அவஸ்தை எனும் கொடிய விலங்கிலிருந்து தப்பிக்க நம் இளமை பருவம் தொட்டே இறைவழிபாடு செய்து மனம் மொழி மெய்யால் அவனுக்கு பணிவிடை செய்தும் போற்றி பாடி ஆடி அவன் மனம் குளிர அவன் தாள் சேர வேண்டும் எனவே வந்த பின் வழிபாடு என்பது கண் போனபின் சூரிய நமஸ்காரம் என்பது போன்றதாகும். எனவே எப்போதும் இறைவழிபாடு கட்டாயம் அவனுக்கேன்று சற்று நேரம் ஒது்க்கி பொன் பொருள் ஈட்டு வது போன்றே இறைவழிபாட்டுக்கும் நேரம் அளித்து அவனை எப்போதும் நெஞ்சில் இறுத்தி அவன் தாள் பணிவோம். மரண அவஸ்தையிலிருந்து விடுபடுவோம்
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக