சனி, 30 மார்ச், 2013


பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக் கற்றையில் தரித்துள்ள ஈசன் கங்காதரர் என வணங்கப்படுகிறார். தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில் ரோகிணியி டம் மட்டும் மிக்க அன்பு வைத்திருந்ததால் தட்சனின் சாபம் பெற் ற சந்திரனை காத்து, இழந்த ஒளியை அவனுக்கு தந்து தன் சிரசிலும் தரித்துக்கொண்ட ஈசன், சந்திரசேகரர் ஆனார். பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே முருகப்பெருமான் அமர்ந்து ள்ள திருவடிவம் சோமாஸ்கந்த மூர்த்தம் என்று வணங்கப்படு கிறது. வண்டு வடிவம் எடுத்து ஈசனை மட்டுமே வலம் வந்த பிருங்கி முனிவரின் ஆணவத்தை அடக்கி, சக்தியின் பெருமையை உலகி ற்கு உணர்த்த ஈசன் தன் உடலில் பாதியை உமையம்மைக்கு தந்தார். அதுவே அர்த்தநாரீஸ்வர வடிவம். ஈசன், பூமியில் பிறந்த அம்பிகையை மணம் புரிந்து கல்யாண சுந்தரராகத் திருக்கோலம் கொண்டார். மீனாட்சி, கார்த்யாயனி, மாதங்கி, பார்வதி, தாட்சாயணி என ஒவ்வொரு முறையும் அம்பிகை ஒவ்வொரு பெயரில் பிறந்து ஈசனை மணந்தது வரலாறு. ஈசனின் அடியைத் தேடி வராக வடிவில் திருமாலும் முடியைத் தேடி அன்ன வடிவில் நான்முகனும் புறப்பட்டனர். அப்போது வானுலகையும் பாதாள உலகையும் இணைத்தாற்போல் ஜோதி வடிவாகத் தோன்றிய ஈசன், லிங்கோத்பவ மூர்த்தி என்றழைக் கப்பட்டார். ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன சுப்ரமண்ய சுவாமி யிடம் சிஷ்ய பாவத்தில் அதன் பொருள் கேட்ட ஈசன், சிஷ்யபாவ மூர்த்தியாக போற்றப்படுகிறார். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப் படுகிறார். குமார சம்பவம் நிகழ்வதற்காக ஈசனின் மேல் தன் மலர்க் கணை களை எய்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்து சாம்ப லாக்கினார் ஈசன். அந்த ஈசனே காமதகனமூர்த்தி. என்றும் 16 ஆக வாழும் வரம் பெற்ற மார்க்கண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த ஈசன் காலசம்ஹாரமூர்த்தி அல்லது ம்ருத்யுஞ்ஜய மூர்த்தி எனப் பெயர் கொண்டார். ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்மமூர்த்தியின் ஆவேசத்தை அடக்க தன் இரு இறக்கைகளாக ப்ரத்யங்கிரா, சூலினி தேவிய ருடன் தோன்றிய ஈசனின் திருவுருவம் சரபேஸ்வரமூர்த்தியாக வணங்கப்படுகிறது. தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும் அவர்கள் பத்தினிகளின் மன அடக்கமின்மையை உலகிற்குத் தெரியப்படுத் தவும் ஈசன் மேற்கொண்டது பிட்சாடனர் திருக்கோலம். கஜாசுரன் எனும் அசுரனை அழித்து அவன் யானை வடிவ தோ லில் நர்த்தனமாடிய ஈசனின் திருவடிவம் கஜசம்ஹாரமூர்த்தி என போற்றப்படுகிறது. யானையின் ஈரத் தோல் கடும் விஷம் கொண்டது. அதை யார் போர்த்திக்கொண்டாலும் அவர்கள் இறந்து விடுவர் என சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈசன் அதை அணிந்ததோடு மட்டுமல்லாமல் ஆனந்த நடனமும் ஆடினார். அன்னை பார்வதியுடனும் விநாயகர், முருகப்பெருமானுடனும் ஈசன் புன்முறுவல் பூத்த வண்ணம் எருதில் ஏறி அருளும் திரு வடிவம், ரிஷபாரூடர் எனப்படுகிறது. கடுந்தவம் செய்து நான்முகனிடமிருந்து பொன் கோட்டை பெற்ற தாரகாட்சன், வெள்ளிக் கோட்டை பெற்ற கமலாட்சன், இரும்பு கோட்டை பெற்ற வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டைகளையும் அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் கொண்டாடப்படுகிறார். தன்னை மதிக்காமல் யாகம் செய்த தன் மாமனாரான தட்சப் பிரஜாபதியை அழித்த ஈசன் வீரபத்திரர் எனும் தட்ச சம்ஹார மூர்த்தியாக வணங்கப்படுகிறார். திருமாலை சோதிக்க நினைத்த ஈசன், அவர் தன்னை அர்ச்சிக்கும் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்துவிடுகிறார். ஆனால் திரு மாலோ, அந்த மலருக்கு பதிலாக, தம் மலர்க்கண்ணையே பறித் து ஈசனுக்கு அர்ப்பணித்தார். அதனால் மகிழ்ந்த ஈசன் அவருக்கு பத்மாக்ஷன் எனும் பட்டத்தையும் சக்கரத்தையும் அளித்தார். அத் திருவடிவம் சக்ரதான மூர்த்தியாய் போற்றப்படுகிறது. ஈசனுக்கும், பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான் வீற்று ள்ள வடிவம் சோம கணபதி மூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரணமாக ஆலயங்களில் வழிபடப்படும் சிவமூர்த்தம் லிங்க மூர்த்தம் என வழிபடப்படுகிறது. பாசுபதாஸ்திரத்தைப் பெற கடுந்தவம் செய்த அர்ஜுனனுக்கு வேடுவ வடிவில் காட்சியளித்த ஈசனை பக்தர்கள் கிராதமூர்த்தி என்று வழிபடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக