புதன், 17 ஜூலை, 2013


அம்மன் கோவில் ஆண்டின் ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் விசேசம்தான், சங்கரன்கோவில் சங்கரநாயினார் கோவிலில் அருள்மிகு கோமதி அம்மை ஈஸ்வரனை வேண்டி தவமிருந்த ஆடி தவசு நாளும் இம் ஆடி மாதத்தில்தான். கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழ்ந்த ஊரான வில்லிபுத்தூரில் சூடிக் கொடுத்த சூடர்ளெகொடிஆண்டாள் பள்ளிகொண்ட எம்பெருமான் ரெங்கமன்னரை ஈர்த்து சூடிக்கொண்ட ஆடிப்பூரம் இம்மாதத்தில்தான்,மழை தரும் அன்னை மாரியம்மன் இருக்கண்குடியில் உள்ள மாரிக்கும் இம்மாத வெள்ளிக்கிழமைகளில்தான் மிக சிறப்பு நாளாகும், அதே போலவே சுந்தரபாண்டியம் கோவநேரி கண்மாயின் வடகரை அருகில் அமைந்து சுந்தரபாண்டியத்தின் காவல் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் இருந்து தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டிய வரம் - அருள் தந்து காத்திடும் தெய்வம் கல்யாணி அம்மன் என்று நம்மால் செல்லமாக அழைக்கப்படும் வெயிலுகந்தம்மன் அன்னைக்கும் இந்த ஆடி வெள்ளிக்கிழமைகளே உகந்தனவாகும், இம்மாத வெள்ளிக்கிழமைகளில் அன்னை அலங்கார , ஓங்கார ஜோதியாக காட்சி தந்து தன்னை வேண்டிவரும் பக்தர்களுக்கு கண்ணொளி, மழலைச் செல்வங்கள் வேண்டுவோருக்கு மழலை செல்வம் தந்தும், உற்ற நோய் நீக்கும் வெயிலுகந்த அம்மனாகவும் மேல் கூரையின்றி, சூரியனின் ஒளிக்கதிர்களையே தனது ஆபரணங்களாகக் கொண்டு விளங்கும் அன்னை பராசக்தி வெயிலுகந்தம்மன் இம்மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளில் பங்கு கொண்டு அம்மன் அருள் பெறலாம், ஓம் சக்தி ,,, அதுவே பராசக்தி ,,,,,, கல்யாணி அம்மனின் ஒளி சக்தி அன்புடன் வை, பூமாலை சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக