சத்குரு சோமப்பர் சுவாமி ஜீவசாதி
இந்து மரபியலில் ஜீவ சமாதியின் முக்கியத்துவம் தெளிவாக வரையறுத்து கூறப்பட்டுள்ளது,எல்லா சமய, மதத்தினற்கும் பொதுவான நிலை ஆகும், ஞானத்தின் உச்ச நிலை எய்திய ஒருவரை ஜீவ சமாதி என்கிறோம் ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு விளக்கேற்றி வைத்து மனதை ஒருமுகப் படுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தால் அவர்களின் அருளுக்கு பாத்தியமாக முடியும், ஜீவ சமாதிகள் அருளாளர்களினால் போற்றிப் பாதுகாப்புடனும் சிறப்புடனும் நடத்தப்பட்டு வரப்படும், ஒரு உயிர் ஒட்டமுள்ள ஜீவசமாதியே மதுரை காகபுஜண்டர் - கூடல்மலை - மலையில் அமைந்துள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சீடாரான அதன் அறக்கட்டளையுடன் இணைந்து பாமரிக்கப்பட்டு வரும் ஒரு ஜீவ சமாதிதான் சித்தர் சோமப்பர் சுவாமி சமாதி,
சத்குரு சோமப்பர் சுவாமிகள் காலங்காலமாக காடுமேடெல்லாம் நடந்து,கடந்து உரண்டு திரண்டு கட்டிக்குளம் சூட்டுக்கோல் சித்தர் மாயாண்டி சுவாமிகளால் அடையாளம் காணப்பட்டு அவரிடம் வந்து சேர்ந்தார், பின் அன்னாரின் முக்கிய சீடாராகி சித்தர் மாயாண்டி சுவாமிகளின் ஆன்மீக பணிகளில் தானும் பங்கு கொண்டு அவர் தொடரும் பணிகளையும், அவர் விட்டு சென்ற பணிகளையும் அன்னாரின் ஆன்மீக கனவுகளையும் நிறைவேற்றி வைக்க் உறுதுணையாக இருந்தவர்,எங்கேயோ ஞானியாக சுற்றித்திரிந்த சோமப்பா சுவாமிகளை திருக்கூடல் மலைக்கு வரவழைத்ததே சித்தர் மாயாண்டி சுவாமிகள் தான், சோமப்பரை அடையாளம் கண்டு கொண்ட மாயாண்டி சுவாமிகள் தன் உபசீடர்களிடம் சோமப்பா சுவாமிகளை இவர் மிகப் பெரிய சித்த பருசர் என்று அறிமுகம் செய்து வைத்து, தன்னை எவ்வாறு பேணுகிறீகர்களோ அவ்வாறே அவரையும் கவனிக்க வேண்டுமேன பணித்தார்,சோமப்பாவைக் காணும் போதெல்லாம், மனம் இளகி அவருடன் உரையாடுவார் குருஜி, சோமப்பா சுவாமிகளும்,மாயாண்டி சுவாமிகளும் ஒரே காலத்தில் திருக்கூடல் மலையில் இருந்து ஆன்மீகப் பணிகளை ஆற்றி பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தனர், மாயாண்டி சுவாமிகள் காலத்திற்கு பிறகு அவர் விட்ட பணிகளை சோமப்பர் தொடர்ந்து செய்து வந்தார், உயர் அந்தஸ்தில் உள்ள சிலர் அவரை கவரும் பொருட்டு சுய எண்ணங்கள் கொண்டோரைக் கண்டால் அவருக்கு பிடிக்காது அன்னார் கொண்டுவந்த பொருட்களை எட்டி உதைத்துவிடுவார், ஆனாலும் தன்னிடம் பக்திகொண்ட அன்பர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தும், அன்னாருக்கு வரும் சாபக்கேடு மற்றும் துன்பங்களை முன்கூட்டியே மறைமுக வார்த்தைகளால் கூறிவிடுவார்,
மாயாண்டி சுவாமிகளைப் போலவே தானும் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் சமாதி ஆனார், ஆயிரக்கண்க்கான பக்தர்கள் கூடி இருக்க இவரது திருச்சமாதி நிகழ்வு நடந்தது, சோமப்பா சுவாமிகள் 1968ம் ஆண்டு ஆனி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் முன்னிலையில் சமாதியடைந்தார், அந்நாளிலேயே இன்றளவும் அன்னருக்கு குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது, அமாவாசை மற்றும் பிரதோச பூசைகளும் அன்னார் சமாதியில் நடந்து வருகிறது,
தூய உள்ளமும் நற்சிந்தனையும் இருப்பவர்களை இன்றைக்கும் சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார், சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொரும் அவசியம் தரிசிக்கவேண்டிய திருச்சமாதி இது, அமைதியான சுற்று சூழல் கொண்ட இயற்கையான அமைவிடம்,
இருப்பிடம்: மதுரையில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் மலையின் எதிரில் அமைந்துள்ள திருக்கூடல மலை என்ற காகபுசண்டர் மலை தியாகராஜர் பொறியியல் கல்லூரி செல்லும் வழியில சூட்டுகோல் மயாண்டி ஜீவ சமாதி அடுத்து மலையில் ஏறும் வழியில் சோமப்பா சமாதி அமைந்துள்ளது,
நன்றி அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கையேடு. சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம், மதுரை 05
மேலும் விபரம்: Web; www. soottukkole.org.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக