அன்பே சிவம்
என்பது நம் இதயத்தில் தானாக ஊறவேண்டிய ஒரு நெகிழ்வு,அன்பின் வழியாக பிறப்பது கருணை. அன்பே கருணையாக மாறுகிறது. அன்பு இல்லாத இடத்தில் கருணை பிறபப்பில்லை. ஆகவே கருணையை அன்பின் குழந்தை என்கிறாா் வள்ளுவர். " அருள் என்னும் அன்பு ஈன் குழவீ " என்கிறாா். அருள் என்பது கருணை/ இறக்கம்.
இதை அன்பே கடவுள் (Love is God) என்றனா். அந்த அன்பைேய சிவமாகக் கண்டாா் திருமூலா். இதனை அவா்
" அன்பு சிவம் இரண்டெண்பா் அறிவிலாா்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலாா்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமா்ந்திருந்தாரே " என்கிறாா்
அன்பினில் விளைவதும், அதன்பயனும் சிவம் என்பதனை " அன்பினில் விளைந்த ஆரமுதே" என்கிறாா் மாணிக்கவாசகா். சிவம் அன்பிலேயே விளையும் என்பதை அவா் உணா்த்துகிறாா். உலகத்து உயிா்கள் அனைத்திடமும் ஒருசேர ஒரே மாதிாியான அன்பைக் காட்டினால் அவ்வன்பின் வழியாக அதன் பயனாக அன்பின் வடிவாக சிவத்தை நம் உள்ளே காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக