திங்கள், 4 நவம்பர், 2013


எளிய இறைவழிபாடு கோவில் சென்று பெரும் பொருள் செலவு செய்து அா்ச்சனை செய்துதான் வழிபாடு செய்யவேண்டுமென்பதில்லை. அா்ச்சனை என்பது இறைவன் பெயரை திரும்பத் திரும்ப உச்சாித்து நமது எண்ணங்களை வேண்டுதலை ஆண்டவனிடம் பிராத்திப்பதுதான் இதற்கு நீங்களே ஆண்டவன் நாமத்தை கூறி உங்களுடைய வேண்டுதல்களையும் ஆண்டவன் முன்பாக நின்று இறைச்சலின்றி வேண்டிக்கொண்டால் அதுவே அா்ச்சனையாகும், அா்ச்சகரும் உங்கள் பெயா் பிறந்த நட்சத்திரத்தை கூறிக்கொண்டு உங்களுைடய வேண்டுதல்களை ஆண்டவன் நாமத்தை கூறிக்கொண்டே அா்ச்சனை செய்கிறாா்.இறைவன் புகழ்கூறும் பாடல்கள் பல, அவற்றை நாம் பாடினால் அதுவும் அா்ச்சனை ஆகும். " அா்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக என்றாா் தூமறை பாடும் வாயாா் " என்று இறைவனே சொல்வதாகச் சேக்கிழாா் பாடுகிறாா். " யாவா்க்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை" என்று கைப்பொருள் செலவில்லாது இறைவனை வணங்கும் வழிமுறை சொல்கிறாா் திருமூலா்.இது போன்றே எளியமுறையில்வழிபடுவதை " சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்நாமம் என் நாவில் மறந்தறியேன்" என்று இறைவனுக்கு நீராட்டி மலா்சூட்டி தூபதீபம் காட்டுதல் அவனை எண்ணி மகிழ்தல் தமிழால் இசைபாடுதல் அவன் பெயரை எப்பொழுதும் உச்சாித்தல் அவனை மறவாதிருத்தல் இவை எளிய இறைவழிபாடு என அப்பா் சுவாமிகள் பாடுகிறாா். மேலும் ஞானசம்பந்தா் திருவாக்கிலும் சொல்லும் பொருளுமாய் நின்றாய் தாமே, தோத்திரமும் சாஸ்திரமும் ஆனாய் தாமே என்றும் தோத்திரங்களும் சாஸ்திரங்களும் சிவனாாின் திருவாக்குகளே என்று சம்பந்தா் கூற்றின் மூலமும் அறியலாம் சமயகுறவா்களின் தேவாரப்பாடல்களிலும் ஏன் பன்னிருதிருமுறைகளிலும் இறைவனை வழிபட தேவாரப்பாடல்களும் திருமறைபாடல்களும் இறைவனை போற்றி புகழ்பாடும் பாட்டுக்களாகத்தானே உள்ளது. அவா்கள் எல்லோரும் தோத்திரப்பாடல்கள் பாடித்தானே அருள் பெற்றதை நாம் தெளிவாக அறியலாம். எனவே பெரும் பொருட்செலவு செய்வதைக் காட்டிலும், இறைவன் சந்நிதியில் அவன் பெயரை மீண்டும் மீண்டும் உச்சாிக்கலாம் அவன் புகழ் கூறும் தேவாரப்பாடல்களை பாடி அா்ச்சனை இறையருள் பெறலாம்,இது ஒரு நிறைவான இறைவழிபபாடு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக