இந்த பட்டினத்தார் பாடலிலே, சில முத்துக்கள்
“மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே”
என்ற பாடல் பிரசித்தமானது. இப்பாடலைப் பிரசித்தமாக்கியவர் கவிஞர்
கண்ணதாசன். ‘பாத காணிக்கை’ என்ற திரைப்படத்தில்,
“வீடுவரை உறவு; வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?”
என்று அவர் எழுப்பிய கேள்வி இந்தப் பட்டினத்தார் பாடலைப் பார்த்துதான்.
பட்டினத்தார் பாடலை வாசிக்க மறந்தவர்கள் கண்ணதாசனின் இந்தப்
பாடலைக் கேட்க மறந்திருக்க மாட்டார்கள்.
இதுபோலவே பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தைப் படிக்கத்
தயங்குபவர்களுக்கு அதன் சுருக்கமாகப் பின்வரும் திரைப்படப் பாடலையும்
கவியரசு பாடியுள்ளார்.
“எந்த ஊர் என்பவனே !
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?
மேலூரில் வாழ்ந்திருந்தேன்
,,,,,,,,,,,,,,,,,,”
இசையுடன் பாடும்போது எந்தப் பாடலும் ரசனைக்குரியதாகி
விடுகிறதல்லவா?
இதோ பட்டினத்தார் பாடலையும் ஒருமுறை பாட வேண்டாம்;
படித்துத்தான் பாருங்களேன்.
“ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம்
மீதுகலந்து
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து,,,,,,,,,,,”
பட்டிணத்தார் பாடல்கள் மாணிக்கவாசகர் மற்றும் இராமலிங்க அடிகள் ேபால் நெஞ்சை உருக்கும் பாடலகள் அதிகம் காணப்படுகிறது. இறைவனைப் பாடி உருகுகின்ற திருவாசகத்திலும்,
அருட்பாவிலும் நனைந்த ஈர விழிகள் இந்தப் பட்டினத்தார் பாடல்களிலும் கசிவை ஏற்படுத்துகின்றன.
ஒரு தடவை ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடியானவர் தனது மகனுக்கு திருமணம் முடித்து விட்டு, அந்த தம்பதிகளை ஒரு முற்றும் துறந்த ஞானியையோ, அல்லது வயதில் மூத்த வாழ்ந்து சிறப்புற்ற ஒரு பெரியவர் கொண்டு வாழ்த்திட எண்ணி சுற்றும்முற்றும் தேடி தற்செயலாக பட்டிணத்தாரை ஒரு சத்திரத்தில் சந்தித்து, அவரை தன் திருமண தம்பதியரை வாழ்த்த அழைத்தார், அப்ேபாது அடிகாளர், அய்யா நானே பரதேசி, அதிலும் குடும்ப வாழ்வையே முறித்த முற்றும் துறந்த பரதேசி, என்னைப் போய் வாழ்த்த அழைக்கிறீர்களே என்று வர மறுத்தார், ஆனால் அந்த குடியனவரோ அவரை விட வில்ைல, அய்யா தாங்கள் தான் என் மகனை கட்டாயம் வாழ்த்த வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து மண ேமடைக்கு அழைத்துச் ெசன்று மணமக்களை வாழ்த்த கூறினார், அங்கு திருமணத்திற்கு வந்திருந்தோரை பார்த்ததும் அந்த ஞானிக்கு திருமணத்திற்கு வந்திருந்தோர் அனைவரும் அவரவர் குணத்திற்கு ஏற்றார் போல், அவரகள் நரிகளாகவும், போய்களாகவும், நாயகளாகவும் பட்டிணத்தாருக்கு ெதரிந்தனர். இருப்பினும் தான் வந்து வாழ்த்த வேண்டுமென்ற கட்டாயத்தினால் தான் ஒரு வாழ்த்து பாடல் கீழ்கண்டவாறு பாடினார்.
நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
......நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
......புலபுலென கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
......கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
......அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே...
பட்டினத்தாரின் பாடல்
தினமும் பொய்யும் பித்தலாட்டமும் கொண்டு உள்ள மாந்தர்கள் தாங்கள் பேசும் பொய் பேச்சினால் பாம்பின் நாக்குபோல் பிளந்து , மழை ெபய்த வுடன் வருகின்ற புற்று ஈசல்கள் தன் கூட்ைடவிட்டு வந்தவுடன் இறந்து விடும் எனத் ெதரிந்தும், துபு துபு வென்று பூமியை கிளரிக்கொண்டு வருவது ேபால, பல பிள்ளைகளை பெற்று , அவைகளை வளர்க்க முடியாமல் திணரும் மாந்தர்கூட்டம், பொல பொல வென பிள்ைளகளைப் ெபற்று எடுத்து வளர்க் வகையறியாது , இருக்கும் நிலை, குரங்கினை பிடிக்க மரக்கிளையில் கவர்பிளந்து ஆப்பு வைத்துள்ள இடத்தில் காலை வைத்து அசைத்து அகப்படும் குரங்கினைப்போல், அகப்பட்டுக் ெகாண்டீர், என குடும்ப வாழ்வில் படும் துயரத்தினை வாழ்த்துரையாக பாடிக் காட்டியுள்ளார்.
இது போன்று எத்தனையோ பாடல்களில் அவரின் அருட் புலம்பல் நம் மனதை நெருடுகின்றது.
திருச்சிற்றம்பலம்
ெதாகுப்பு; வை. பூமாலை,சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக