ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

கந்தபுராணம் கூறும் சுலோகம் " கள்ளிளும் கொடியது காமத்யே"


கந்தபுராணம் கூறும் சுலோகம் " கள்ளிளும் கொடியது காமத்யே" "உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில் கொள்ளிலும் சுட்டிடும் குறுகி மற்றதைத் தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால் கள்ளினும் கொடியது காமத்தீயதே" -- கந்தபுராணம் திரை நட்சத்திரங்கள் நேருக்கு நேராகப் பார்க்காவிட்டாலும்கூட, திரைப்படிங்களில் அவர்கள் டூயர் பாடி ஆடுவதை பார்க்கும் போது, நம் மனது நிலைகொள்ளாது தவிக்கிறது. அந்த நடிகர்இடத்திலோ, நடிகை இடத்திலோநம்மை நிறுத்தி வைத்துக் கற்பனையாக டூயட் பாடத் தோன்றுகிறது. நிழலைப் பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், நிஜத்தில் நெருங்கி நடிக்கும் நடிக-நடிகையருக்கு எப்படி இருக்கும்?? பெற்ற தகப்பான இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு, தன் மகளையே தொட்டுப் பேசக்கூடாது என்கிறது சாஸ்திரம். காரணம் , காமம் அந்த அளவுக்கு வலிமையானது. காமத்தை வெல்லவேண்டும் என்றால், மனக்கட்டுப்பாடு அவசியம். ஒரு தடவை ஒரு நடுத்தர வயது இளைஞன், இராமகிருஸ்ண பரமஹம்சரிடம் என்னால் காமத்தீயை அடக்க முடியவில்லை, அதனை வெல்ல என்ன செய்யவது என்றான். அதற்கு குருதேவர் ஒரு கதை மூலம் விளக்கினாராம், ஒருவன் தனது இஸ்டப்பிராணியாக , செல்லப்பிராணியான ஒரு நாயினை வளர்த்தான், அது எப்போதும் அவன் எஜமானன் கூடவே இருந்து பழக்கமாகிவிட்டது, உண்ணும்போதும், உறங்கும் போதும் அவனுடைய ஒட்டி உறவாடிக்கொண்டே இருந்ததாம், இப்படி இருக்கும் போது, ஒரு வைத்தியர், இப்படி நாயுடன் ஒட்டி உறவாடுவது உனக்கு நல்லதல்ல, எனவே அதன் பழக்க வழக்கங்களை மாற்றிவிடு. என்று கூறி சென்றுள்ளார், அதன் பின் அவன் அந்த நாயுடன் ஒட்டி உறவாடுவதை சற்று விலக்கியுள்ளான், ஆனால் நாயோ அதனை புரிந்து கொள்ளவில்லை? ஏனெனில் அது மனிதனைப்போல் அதற்கு புரிந்து கொள்ளும் தன்மை யற்றது தானே! . எனவே, இதனிடமிருந்து விலகி இருக்க அவன் அதனை அடித்து துன்புரித்தியும் அது அதன் பழைய செய்கையிலிருந்து மாறுபட மறுத்தது. இருப்பினும் இதன்செய்கை தொடர்ச்சியாகஇருந்தபடியால் நாய் சற்று அவனிடமிருந்து விலக ஆரம்பித்து, ஒட்டி உறவாடுவது குறைந்து விட்டது. இதற்கு பல காலம் பிடித்தது. இப்படி உயிருள்ள ஜீவனை பிரிப்பதற்கே பல காலம் ஆகும் போது, உயிரற்ற காம உணர்ச்சியினை கட்டுப்படுத்த - விலக்க நாயின் தொடர்பிலிருந்து விலகுவது போல் பல காலம் கழித்து விடா முயற்சி செய்து, அதன் பிடியிலிருந்து விடுபடலாம், என்றார் இராமகிருஷ்ணர், எனவே காமத்தீயிலிருந்து விலகுவது அவ்வளவு எளிதல்ல, என்று விளக்கினார். முற்காலத்தில் மாமுனிவர்கள் ஆள் அரவமற்ற காட்டில் தவம் செய்து கொண்டிருந்தபோதே மனம் தடுமாறியதை இதிகாச புராணங்கள் விரவாகச் சொல்லி யிருக்கின்றன. மாயை என்பவள் காசிப முனிவரை மயக்கி, அசுர குலத்தை அதிகரிக்க நினைத்தாள், அதற்காக, காசிப முனிவர் தவம் செய்து கொண்டிருந்த காட்டில் சூழ்நிலையையே தனது மாய சக்தியால் மாற்றினாள். அழகான சின்னஞ்சிறு குன்றுகள்,வாசம் வீசும் மலர்களைக் கொண்ட மரம், செடிகள்,கொடிகள் நீருற்றுக்கள், அருவிகள்,அழகும் ருசியும் நிறைந்த பழ மரங்கள், மனத்திற்கு ரம்மியமான இளம் தென்றல் காற்று, இனிமையான ஓசையை எழுப்பும் பறவைகள், என அத்தனையும் அங்கே உருவாக்கினாள். மாயை, கடும் தவத்தில் இருந்த காசிபரின் உடல் , சுற்றுபப்புறத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்தினால் மனம் தவ நிலையை விட்டு தடுமாற ஆரம்பித்தது. யாராக இருந்தாலும் என்ன? அனைவருக்கும் உடம்பின் வசப்பட்டவர்கள்தானே? காசிப முனிவர் கண்களை திறந்தார்,எதிரில் ஆகாயத்திலிருந்து நழுவி விழுந்த வானவில்லை போல அழகு ததும்ப நின்றிருந்தாள் மாயை. அப்புறம், என்ன.......... காசிப முனிவருக்கும், மாயைக்கும் சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன் , அஜமுகி என்ற அசுரக் கும்பல் பிறந்தது. தன் எண்ணம் நிறைவேறியது கண்டு மாயை மகிழ்ச்சி அடைந்தாள். காசிபரை விட்டு புறப்பட தீர்மானித்தாள். பின்னே காசிபருடன் குடும்ப நடத்தவா அவள் வந்தாள். அவள் எண்ணிய எண்ணம் ஈடேறியது. மாயை மாயமானாள். மாயை புறப்படுவதைக்கண்டு காசிபர் மனம் கலங்கினார், மாயையோ, " முனிவரே ! நான் அசுர குலத்தை விருத்தி செய்யவே வந்தேன். உங்களோடு வாழ்க்கை நடத்த வரவில்ைலை. நான் மாயை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். என்று கூறிவிட்டு மறைந்தாள். அவள் மறைந்ததும், அவளால் உண்டாக்கப்பட்ட ரம்மியமான கானகமும் அனைத்தும் மறைந்து விட்டது. ஆனால் காசிபரால் பழைய நிலையை அடைய முடியவில்லை. மாயையின் பிரிவை எண்ணி அவர் துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது காசிபரின் தந்தையான பிரம்மா அங்கு வந்தார், மகனின் நிலை கண்டு, அதற்கான காரணத்தை விசாரித்தார். காசிபர்நடந்ததை விவரித்தார் அதைக் கேட்ட பிரம்மதேவருக்கு மனம் கூசியது. " காசிபா ! வேதங்களிலும், கலை ஞானங்களிலும், கரைகண்ட நீ, காம வலையில் சிக்கலாமா? அறிவிழந்து, மூடர்களைப்போல், புலம்பிக் கொண்டிருக்கிறாயே! .. உலகிலேயே இரண்டு பொருட்கள் மிகவும் கொடுமையானது, ஒன்று கள், மற்றொன்று - காமம், இந்த இரண்டில் கள்ளைவிட மிகவும் கொடுமையானது காமம். கள்ளானது அருந்தினால்தான் போதை ஏறும், தீங்கை விளைவிக்கும். ஆனால் காமமோ, மனத்தில் நினைத்தாலே ஆளைக் கொன்றுவிடும்.காமம் நினைத்தாலும் சுடும், கண்டாலும் சுடும். கேட்டாலும் சுடும். அடைந்தாலும் சுடும், நீக்கினாலும் சுடும். இப்படிப்பட்ட தன்மையால் காமத்தீயானது கள்ளை விடக் கொடுமையானது, எல்லாவிதமான துன்பங்களையும் தந்து, வாட்டி வதைக்கும் காமத்தை அறிவுள்ளவர்கள் நினையார்? நீ விரும்பிய மாயை என்பவள் வஞ்சனையே வடிவானவள், அவளுடன் சேர்ந்ததன் மூலம் நீ அளவில்லாத பாவத்தை செய்து விட்டாய், அந்த பாவம் நீங்கவதற்காக நீ முன்பு போல தவத்தை செய் " என்று காசிபருக்கு நீண்ட அறிவுரை யும், ஆசியும் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார் பிரம்மன். உண்மையை உணர்ந்த காசிபர் அதன் பின் சிறந்த, முறையில் தவத்தை செய்து, சிவத்தை சேர்ந்தார். யோசித்து பாருங்கள், விஸ்வாமித்திரர்,துர்வாசர், முதலான ரிஷிகளே காம வலையில் அகப்பட்டு, அல்லல் பட்டபோது நாமெல்லாம் எந்த மூலை? ராவணன் கயிலாய மலையையே அசைத்தவன், தலைசிறந்த வீரன், உத்தமமான மனைவி, நல்ல பிள்ளை என அனைத்தும் இருந்தும் காமம் தானே ராவணனை வீழ்த்தியது. மாமுனிவர்கள் கூட மங்கையர்களின் மையல் வலையில் வீழ்ந்து மனம் கலங்கியதைச் சொல்லி இதிகாச புராணங்கள் நமக்கு பாடம் நடத்தி இருக்கின்றன. இதனைத்தானே கந்தபுராணம் இந்த பாடலில் கூறியுள்ளது. உள்ளினும் சுட்டிடும்உணரும் கேள்வியல் ................... கள்ளினும் கொடியது காமத்தீயதே! " என்கிறது. எனவே காமத்தீயினை அடக்கிட மனத்தூய்மையும், மன உறுதியும், விடா முயற்சியும் வேண்டும். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக