புதன், 28 டிசம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருவலஞ்சுழி

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருவலஞ்சுழி

இறைவர் திருப்பெயர்: கபர்த்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல மரம்: வில்வம்
தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்
வழிபட்டோர்: உமையம்மை, சம்பந்தர்,அப்பர் ,திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன், ஏரண்டமுனிவர்
 தல வரலாறு :

ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.

அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.

தேவர்களால் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க செல்லும் முன் விநாயகரை வணங்கததால் அமுதம் கிடைப்பதற்கு பதில் விசம் கிடைத்தது, எனவே இந்திரன் இதனை உணர்ந்து பாற்கடலில் உள்ள கடல் நுரையை திரட்டிய போது அது விநாயகர் வடிவமாக வந்தது, இதுவே வெள்ளைப் பிள்ைளயார் / நுரைப்பிள்ளயார் இவரை வணங்கிய பின்தான் திருப்பாற்கடலில் அமுதம் உண்டானதாக ஐதிகம்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. விண்டெலாமல ரவ்விரை, 
2. என்னபுண்ணியஞ் செய்தனை, 
3. பள்ளமதாய படர்சடை. 

 2. அப்பர்   - 1. ஓதமார் கடலின், 

சிறப்புக்கள் :

திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

திங்கள், 26 டிசம்பர், 2016

அனைவர்க்கும் நலம் பயக்கும் ஆருத்ரா தரிசனம்

அனைவர்க்கும் நலம் பயக்கும் ஆருத்ரா தரிசனம்

இன்று ஆருத்ரா தரிசனம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், ஆருத்ரா தரிசனம் என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்?

பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின்  வாயிலாக உலகை இயங்கச் செய்து, திருநடனம் புரிகின்றார் சிவபெருமான். அவரது அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது.

ஆகவேதான் ‘அவனின்றி அணுவும் அசையாது; சிவனின்றி எதுவும் இசையாது’ என்று நம் முன்னோர்கள் உரைத்தார்கள்.

சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும், அவற்றுள் 48 நடனங்களை அவர்  தனியாக ஆடினார்  என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்தது, திருவாதிரை திருநாளில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் ஆகும்.

ஆம்… தில்லை என்ற பெயர் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தின் போது நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம்.

இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண  கண் கோடி வேண்டும்.

மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை (அதிகாலை) பொழுது.

இந்த நேரத்தில் நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு.  ஆகவே இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள் அனைவரும் சிதம்பரம் வருவார்கள் என்பது ஐதீகம்.

‘ஆருத்ரா’ என்றால் ‘நனைக்கப்பட்டது’ என்று பொருள்.

பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ர பாதர் இருவரும், திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண்பதற்காக தவமிருந்தனர். அவர்களது பக்தியை மெச்சிய சிவபெருமான், தில்லையில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் தனது திருநடன தரிசனம் அளித்த நிகழ்ச்சியே ஆருத்ரா தரிசனம்.

அது என்ன கதை என்பதை அறிய ஆவலாக இருக்கிறதா?

ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த திருமால், திடீரென மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியானது பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது. தன் மீது பாந்தமாக படுத்திருக்கும் பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று நினைத்த  ஆதிசேஷன். மகிழ்ச்சிக்கான காரணத்தை கேட்டார்.

அதற்கு மகாவிஷ்ணு, “சிவபெருமான், நடராஜராக திருவாதிரை திருநாளன்று ஆடிய திருத் தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம்’ என்றார். இதைக் கேட்டதும், திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை தானும் காண நாட்டம் கொண்டார் ஆதிசேஷன். திருமாலும் ஆசி கூறி அனுப்பினார்.

ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.

கயிலைநாதனை நினைத்து அவர் இருந்த தவமானது உச்சநிலையை அடைந்தது. அவர் தன்னை மறந்தார். அப்போது, ‘பதஞ்சலி’ என்று மென்மையான குரல் கேட்டு கண்விழித்தார்.

அங்கு சாந்தமான முகத்துடன் சர்வேஸ்வரன் நிற்பதைக் கண்டு பரவசமானார். அவரை  தாழ் பணிந்தார்.

தான் தவம் புரிந்ததற்கான காரணத்தை கூற எத்தனித்தார். சிவனே பேசத் தொடங்கினார், ‘பதஞ்சலியே! உன்னைப் போன்று எனது திருவாதிரை திருநடனம் காண வேண்டி, வியாக்ர பாதர் என்பவரும் என்னை நோக்கி கடும் தவம் செய்து காத்திருக்கிறார்.

எனவே நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீர்கள்!’ என்று வாக்கு கூறி மறைந்தார்.

பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும், ஈசன் கூறியபடி தில்லைக்கு சென்றனர். அங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று தனது திருநடன கோல்தை இருவருக்கும், காட்டி அருளினார் சிவபெருமான்.

இந்த தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் தில்லை என்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது விசேஷமாக உள்ளது.

இன்றைய தினம் விரதமிருந்து சிதம்பரம் சென்று அங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகி, இன்பமான வாழ்வு அமைவதுடன், முக்தி கிடைக்க வழி செய்யும்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

மாதங்களில் நான் மார்கழி

மாதங்களில் நான் மார்கழியாக  இருக்கிறேன் என்றான் கண்ணபிரான்.
மார்கழி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் மிளிரும் அழகிய கோலங்கள்.
மாதங்களில் நான் மார்கழி... - tamil news online website
மார்கழியின் பெருமையை ஆண்டாள்“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என்ற பாடலில் விளக்குகிறார்.
மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில்,“போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ – என்று மார்கழி நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்.
பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தில் பூசணி பூ வைத்து வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது.
மாதங்களில் நான் மார்கழி... - tamil news online website
அதிகாலையில் பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மை யானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும். எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப் போகும்.
பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது. வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியதற்கு காரணம் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும்.
சீதோஷ்ண நிலையும் சமனடையும். சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப்பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓஸோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவராசப்பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
மாதங்களில் நான் மார்கழி... - tamil news online website
மார்கழி மாதத்தில் கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள் மார்கழியில் இல்லை.
மார்கழி மாதம் தேவர் மாதம் என்று சொல்லப் படுகிறது. அதாவது கடவுளை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மார்கழி மாதத்தில் தான் அனுமத் ஜெயந்தியும், வைணவ திருத்தலங்களின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசியும், சைவ திருத்தலங்களின் முக்கிய விழாவான திருவாதிரை ஆருத்ரா தரிசனமும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
வைணவ திருக்கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்.
சிவாலயங்களில் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும் இம்மாதத்தில் பாடப்படுகிறது.
மாதங்களில் நான் மார்கழி... - tamil news online website
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வேண்டி பாவை நோன்பிருப்பர். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கான வழியமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
மார்கழி மாதத்தின் கடைசி தினத்தன்று கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது;
சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது.
மாதங்களில் நான் மார்கழி... - tamil news online website
அதிகாலையிலேயே எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவதால், நாடி நரம்புகள் வலுவடை கின்றன.  நீண்ட ஆயுளும் சித்திக்கிறது. மேலும் தியானம், ஆன்மிகம், வழிபாடு என்று மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும் பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே தான் உலக வழக்கங்களுக்காக இல்லாமல்,
இறைவனை வழிபடவென்றே மார்கழி மாதத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.
அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)

இறைவர் திருப்பெயர்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாய்கி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை
தல மரம்: வன்னி
தீர்த்தம் : மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்
வழிபட்டோர்: பிரமன், அகஸ்தியர், 1. சம்பந்தர் - 1. மத்தாவரை நிறுவிக்கடல், 2. தேவராயும் அசுரராயும், 3.

பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி ஆவர். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் முக்கியமானதாகும்.
தல வரலாறு

சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.

சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.

இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும். 

சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.

பிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன் பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).

கோயில் அமைப்பு
இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.
நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.
ஆழத்து விநாயகர்
முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஆகமக் கோயில்
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
கோயில் சிறப்பு
இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும்.
 இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு. காசியில் இறந்தால் முத்தி என்பது போல் இத்தலத்திற்கு இப்பெருமை உண்டு, 
முக்கிய திருவிழாக்கள் ,,மாசி மகம்,ஆருத்ரா தரிசனம்,பிரதோஷம்,சிவராத்திரி
ஆடிப்பூரம்

சிறப்புகள்

இத்தல விநாயகர் , பாதாள விநாயகர் மிக்க சிறப்புவாய்ந்தவர்.

சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் மொத்தம் 74 உள்ளது.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விழுப்புரம் - திருச்சி இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில்நிலையமாகும். நிலையத்திலிருந்து 2-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04143 - 230203

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

இலிங்கம்

 இலிங்கம்
 லிங்கம் (lingam), அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. 

பெயர்க் காரணம்[தொகு]
லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்[1].
வழிபாட்டின் தோற்றம்[தொகு]
இலிங்க வழிபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தரப்படுகிறன. இறந்தோர்களை புதைக்கும் போது, அவர்களின் நினைவாக நடுகல் வைத்து வணங்கும் வழக்கும் உள்ளது. அவ்வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்றும், பெண்குறியை வழிபாடுவதைப் போல ஆண்குறியை வழிபடும் வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தொன்மம்[தொகு]
சைவ சமயத்தில் இலிங்கத்தின் தோற்றத்தாக கூறப்படும் கதையானது. ஒரு முறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது அங்கு சிவபெருமான் தோன்றி, தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றீர்களோ, அவர்களே பெரியவர் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். சிவபெருமான் நீண்ட தீயாக மாறினார். அவருடைய முடியைக் காண பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்றார். திருமால் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றார். இருவராலும் அடியையும், முடியையும் காணது தோற்றனர். இந்த சிவபெருமானின் வடிவத்தினை லிங்கோற்பவம் என்று கூறுகின்றனர்.

முன்னோர்களின் நினைவாக நடுகல்[தொகு]
பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் பல பகுதிகளில் சைவர்களின் நடுகல் கற்கள் காணப்படுகின்றன. [சான்று தேவை] சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள் [சான்று தேவை]
ஆண்குறி[தொகு]
சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது. பெண்குறி வழிபாடு போன்று இந்து சமயத்தில் ஆண்குறி வழிபாடு இருந்துள்ளமையும், அதுவே லிங்க வழிபாடாகவும் மாறியதாக கொள்ளப்படுகிறது.
இலிங்க அமைப்பு[தொகு]

இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்

இலிஙகத்தின் பாகமான சக்தி பாகம்
லிங்கம் வானத்தைக்குறிக்கும்.ஆவிடை பூமியைக்குறிக்கும் குறிக்கும்.
விண்ணுக்கும் மண்ணுக்குமாகா சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது 
2.மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக்குற்க்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்
[3].மற்றோரு கருத்தின்படி இலிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.

மூன்று பாகங்கள்
இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.
ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்ர பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். இந்த ருத்ர பாகத்திற்கு மட்டுமே பூசைகள் நடைபெறுகின்றன. இந்த ருத்ர பாகத்தின் மீது நீர் படும்படி தாராபாத்திரம் அமைக்கப்படுகிறது. வெப்பம் குறைவான காலங்களில் நாகாபரணம் சூட்டப்படுகிறது. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும். ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.
இலிங்க வகைகள்[தொகு]
சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து இலிங்கங்களை தோற்றுவித்தார்.[4] இவை பஞ்ச இலிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.
சிவ சதாக்கியம்
அமூர்த்தி சதாக்கியம்
மூர்த்தி சதாக்கியம்
கர்த்திரு சதாக்கியம்
கன்ம சதாக்கியம்
இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், இலிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,
சுயம்பு இலிங்கம் - தானாய் தோன்றிய இலிங்கம்.
தேவி இலிங்கம் - தேவி சக்தியால் வழிபடப்பட்ட இலிங்கம்.
காண இலிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.
தைவிக இலிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.
ஆரிட இலிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்.
இராட்சத இலிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.
அசுர இலிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.
மானுட இலிங்கம் - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.
இவை தவிர பரார்த்த இலிங்கம். சூக்கும இலிங்கம்,ஆன்மார்தத இலிங்கம், அப்பு இலிங்கம், தேயு இலிங்கம், ஆகாச இலிங்கம், வாயு இலிங்கம், அக்னி இலிங்கம் என எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன.
பெரிய கோவில்
மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும்.இது 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / அட்டவீரட்டதலங்களில் ஒன்று திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / அட்டவீரட்டதலங்களில் ஒன்று
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை)
இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி
தல மரம்: சரக்கொன்றை.
தீர்த்தம் : கெடிலநதி (தென்கங்கை)
வழிபட்டோர்: திலகவதியார், அப்பர் பெருமான், 1. சம்பந்தர் - 1. குண்டைக் குறட்பூதங். 2. அப்பர் - 1. கூற்ற�
thiruvadikai temple

தல வரலாறு

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தத் தலம்.

ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.

திலகவதியார் தன்தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.

சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. குண்டைக் குறட்பூதங்.

                       2. அப்பர்   - 1. கூற்றாயின வாறுவி,

3. சுந்தரர்  - 1. தம்மானை அறியாத.

சிறப்புகள்

சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.

சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.

இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.

பல்லவ மன்னனான மகேந்திரவர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியாகும்.

அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.

தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) பக்கத்தில் ஓடுகிறது.

மிகப்பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.

கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன; வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன.

கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்றும்; இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார் என்பர்.

இக்கோயிலில் திகவதியாருக்கு சந்நிதி உள்ளது.

அப்பர் சந்நிதி - மூலமூர்த்தம் உள்ளது; அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம் - தலை மாலை, கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு.

பிரகாரத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்), வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகளும் உள்ளன.

மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி - பெரிய ஆவுடையார்; சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

கருவறை சுதையாலான பணி; இதன் முன் பகுதி வளர்த்துக் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச்சிங்கள்.

நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடக்கின்றன.

இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸவரர் கோயில் உள்ளது; இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்வடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.)

மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - "ஆதிமூல குணபரேச்சுரன் கோயில்" என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில் மேற்கே பெரியரோடு கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காணப்படுகிறது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய, ஆங்கிலேயர் காலத்தில் போர்க்கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.

தல விநாயகர்[தொகு]
இத் தல விநாயகர் : சித்தி விநாயகர். வயிற்று வலி (அல்சர்) உபாதைகள் சூலைத் தீர்த்தம் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.
திருநாவுக்கரசர்[தொகு]
சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.இவர் முதன்முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்த தலம். ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம். அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.

சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.
வழிபட்டவர்கள்[தொகு]
இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான்.திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய இடங்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி இருப்புப் பாதை நிலையம். தொடர்பு : 09443988779 09442780111 09841962089

திருச்சிற்றம்பலம்
அருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருவதிகை
பண்ருட்டி அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN - 607106 .

செவ்வாய், 13 டிசம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் திருநள்ளாறு திருக்கோயில்

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள்    திருநள்ளாறு திருக்கோயில் தல வரலாறு
திருநள்ளாறு திருக்கோயில் தல வரலாறு
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.[1] தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். [1] திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இறைவனைப் பாடியுள்ளனர்.
Tirunallaru rajagopuramஇத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேரு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நளதீர்த்ததில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்பானேசுவரர் வழிபட்டு பேரு பெருகின்றனர்.
இறைவர் திருப்பெயர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்
இறைவியார் திருப்பெயர் : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை
தல மரம் : தர்ப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம், சிவகங்கை
வழிபட்டோர் : திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், 
 அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், 
 வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. பாடக மெல்லடிப் பாவை, 
2. போகமார்த்த பூண்முலையாள், 
3. ஏடுமலி கொன்றையர, 
4. தளிரிள வளரொளி.
2. அப்பர்   - 1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள், 
      2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.
 3. சுந்தரர்  -  செம்பொன் மேனிவெண் ணீறணி.
தல வரலாறு
இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.
திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.
சிறப்புகள்
இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்).
இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்..
இது,தருமை ஆதீனக் கோவிலாகும்.
சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.
மூலவர் தர்ப்பாரண்யேசுவரர்.[1] இவர் சுயம்பு மூர்த்தி. தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
இடையனார் கோயில்
திருக்கோயிலின் நிர்வாகத்திற்காக அரசர்கள் பசுக்களை கோயில்களுக்கு தானம் தந்து, அவற்றை மேய்த்து வழிநடத்த இடையர் குலத்திலிருந்து ஒருவரை நியமனம் செய்தனர். அதன்படி இடையன் அப்பசுகளை மேய்த்து பாலைப் பெற்று கோயிலுக்குத் தர வேண்டிய பங்கினை தர வேண்டும். இதனால் இடையனின் வாழ்வும், நிர்வாகமும் சீராய் நடைபெறும். இத்தலத்திலும் இடையர் ஒருவன் இப்பொருப்பில் இருந்தார். கணக்கர் அப்பாலைப் பெற்று தன்வீட்டுக்குத் தந்து கோயிலுக்குப் பொய்க்கணக்கு எழுதி வந்தான். அதனால் இறைவன் கணக்கனை சூலம் எய்தி கொன்றார். அத்துடன் இடையனுக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடமிருந்து எரியப்பட்ட சூலம் கணக்கனை கொல்ல வந்த போது, நந்தியும், பலிபீடமும் விலகிக் கொண்டன. அதனால் இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளது,
சிவாலயத்தின் தென்புறமாக இடையனார் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையன், அவன் மனைவியுடன் உள்ளார். இவர்களுடன் கணக்கன் சிலையும் அமைந்துள்ளது.
இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும். சப்த விடங்கத் திருத்தலங்களில் ஒன்றான தலம்.[1]
தல வரலாறு
தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடதநாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனை துன்புருத்த வற்புருத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார். இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.
நள தீர்த்தம்: இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன. சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.
Nala Theertham
நள தீர்த்தத்தில் நீராடும் பக்தர்கள்
பச்சைப் பதிகம்: திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது. சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.
கோவில் அமைப்பு: நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அரைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார். அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும். சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.
மகாவிஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமை உடையது திருநள்ளாறு திருத்தலம்.
அமைவிடம்:
மாநிலம் : தமிழ் நாடு 
இது, பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
தொடர்பு : 04368-236530 / 236504
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
சனி பகவான் சந்நிதிக்குச் செல்லும் வழி
சனி பகவானை தரிசிக்க காத்திருக்கும் ப்க்தர்கள்
சனி பகவான் சந்நிதி வாயில்