புதன், 28 டிசம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருவலஞ்சுழி

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருவலஞ்சுழி




இறைவர் திருப்பெயர்: கபர்த்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல மரம்: வில்வம்
தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்
வழிபட்டோர்: உமையம்மை, சம்பந்தர்,அப்பர் ,திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன், ஏரண்டமுனிவர்
 தல வரலாறு :


ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.



அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.

தேவர்களால் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க செல்லும் முன் விநாயகரை வணங்கததால் அமுதம் கிடைப்பதற்கு பதில் விசம் கிடைத்தது, எனவே இந்திரன் இதனை உணர்ந்து பாற்கடலில் உள்ள கடல் நுரையை திரட்டிய போது அது விநாயகர் வடிவமாக வந்தது, இதுவே வெள்ளைப் பிள்ைளயார் / நுரைப்பிள்ளயார் இவரை வணங்கிய பின்தான் திருப்பாற்கடலில் அமுதம் உண்டானதாக ஐதிகம்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. விண்டெலாமல ரவ்விரை, 
2. என்னபுண்ணியஞ் செய்தனை, 
3. பள்ளமதாய படர்சடை. 

 2. அப்பர்   - 1. ஓதமார் கடலின், 

சிறப்புக்கள் :

திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.


அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக