வெள்ளி, 31 ஜூலை, 2026

ஆடி மாத சிறப்புக்கள்

 ஆடி மாத சிறப்புக்கள்


  பொதுவாக ஆடி மாதம் என்றாலே ஆன்மீகத்தில் அம்மன் வழிபாடு

                                         வேளாண்மையில்  ஆடி பெருக்கு


பொருளாதாரத்தில் ஆடி தள்ளுபடி விற்பனை  என்று ஆடி மாதத்தினை சிறப்புடன் வரவேற்க எல்லோரும் தயாராக இருப்பார்கள்


ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் இம்மாதத்தில் தான் நடைபெறும்.ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிரும் அருள்கிடடைக்கும்

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும்

ஆடி மாதம் அம்பிகையின் வேண்டிய வரத்தை பெற்ற மாதம் என்பதால் இந்த மாதத்தில் வேண்டிக் கொண்டால் நம்முடைய விருப்பங்களும் நிறைவேறும். ஆடி தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் துவங்கப்படும் காரியங்கள் தெய்வ அருளால் வெற்றியாக முடியாகும். ஆடி மாதத்தில் அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்வதால் அவள் மனம் குளிர்ந்து மழையை பெய்ய செய்து, நிலம் செழிக்க செய்வாள் என்பது கிராமப்புறங்களில் இருக்கும் நம்பிக்கையாகும்.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு சிறப்பான மாதமாகும். இந்த மாதம் மட்டுமல்ல இதில் வரும் ஒவ்வொரு விழாவும் சிறப்புடையதாகும். அம்மன், சிவனிடம் இருந்து தான் வேண்டிய இரண்டு வரங்களை பெறுவதற்காக ஊசி முனையில் தவம் செய்வதற்காக தேர்வு செய்த மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்தில் அம்பிகையை மட்டுமல்ல, சிவனை வழிபடுவதும் சிறப்பானதாகும். சிவனை வழிபடுவதால் அம்பிகையை போல் நாமும் வேண்டிய வரங்களை பெற முடியும் என்பது நம்பிக்கை.

சிவனை எப்போதும் நீங்காமல், அவரின் உடலில் சரிபாதியை பெற வேண்டும் என்றும், சிவனையும் விஷ்ணுவையும் ஒரே ரூபமாக காண வேண்டும் என்றும் அம்மன் தவம் செய்த மாதம் ஆடி மாதமாகும். இதனால் தான் சக்தி வழிபாட்டை அடிப்படையாக வைத்து, அம்பிகையை மனம் குளிர செய்து வேண்டிய வரங்களை பெறுவதற்குரிய மாதமாக குறிப்பிடப்படுகிறது

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமதகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால் மாங்கல்ய பலம் கூடும். ஆடிச் செவய்வாயில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள், குழந்தை வரம், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க, திருமணம் வரம் கிடைக்க ஆடிச் செவ்வாயின் பெண்கள் விரதம் இருப்பார்கள்.


ஆடி அமாவாசை :

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆறு மாதம் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும். சூரியன் ஆண்மை, ஆற்றல், வீரம் ஆகியவற்றை தரக்கூடியவர். மனதிற்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, அறிவு, இன்பம், உற்சாகம் ஆகியவற்றை தரக் கூடியவர் ஆவார். சூரியன் - சந்திரன் இணையும் ஆடி அமாவாசை நாளில் வழிபடுவதால் இவை அனைத்து பலன்களையும் பெற முடியும்.


ஆடிப்பெருக்கு :

ஆடி மாதத்தில் 18 வது நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்து காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். காவிரி பெருகி வரும் நாளை தான் ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடுகிறோம். காவிரி கரையோரங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும், காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்கும் வழக்கமும் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.


ஆடிக்கிருத்திகை :

கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உரியது. ஆடி மாத கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருக்க துவங்கி ஆறு மாதங்கள் கிருத்திகை விரதம் இருந்து தை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முடிப்பது சிறப்பானதாகும்.


ஆடி தபசு :

ஆடி அமாவாசையை போல் ஆடி பெளர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படும். அம்பிகையின் கோரிக்கையை ஏற்றி, சிவனும் - விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி அளித்ததும் இந்த நாளில் தான். ஊசி முனையில் தவம் இருந்த அம்பிகைக்கு தனது உடலில் சரி பாதியை கொடுத்து சிவ-சக்தி ஐக்கியமானதும் இந்த நாளில் தான்.


இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:

ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆடி மாதத்தில் குத்திய குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம்

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடி

ஆடிக்காற்றில் இலவம்பஞ்சு பறந்தாற்போல

ஆடிக்காற்றிலே அம்மி பறக்கையிலே இலவும் பஞ்சு எம்மாத்திரம்

ஆடியிலே காத்தடித்தால் ஐப்பசியில் மழைவரும்

ஆடிக்கு கூழும் அமுதம்

ஆடித் தள்ளுபடி

ஆடித் தள்ளுபடி என்பது ஆடி மாதம் தமிழக கடைகளில் கிடைக்கும் தள்ளுபடி விற்பனையைக் குறிக்கும். ஆடி மாதம் பொதுவாக திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் குறைவாகவே நடைபெறுவதால் ஏற்படும் விற்பனை மந்த நிலையைக் குறைக்கவும், ஆண்டு முழுதும் தேங்கிக் கிடக்கும் பண்டங்களை விற்றுத் தீர்க்கவும் இந்த விற்பனை உத்தி மேற்கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் நகை, புடவை கடைகளில் மட்டுமே இருந்த இத்தள்ளுபடி இப்போது பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருள் விற்கும் கடைகளுக்கும் பரவி உள்ளது.

இன்னும் இம்மாதத்ததின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம் ,,,,.......

திருச்சிற்றம்பலம்


பாவங்கள் தீர நல்வினைகள் செய்தல்

 



பாவங்கள் தீர நல்வினைகள் செய்தல்

நாம் நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை செய்திருந்தாலும் அவற்றை தவறு என உணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளை செய்தால், இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்க செய்யவேண்டிய பணிகள் பற்றி சற்று சிந்திப்போம்.

 1, சிவாலய திருப்பணி செய்தல்;  சிவபெருமானார் எழுந்தருளியுள்ளசிவாலங்களைப் புதுப்பித்தல், மிக மேலான நல்வினை- புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்துமான சிவலாயங்களைத் திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுத்து கொடுத்தல் தலையாய நல்வினையாகும். இதனை வலியுறுத்திய 11ம் திருமுறை பாடல் வரிகள்

 காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்ல வண்ணம்

 பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டு

பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீீர் 

  வணீர் எளிதோ மருதப்பிரான்கழல் மேவுதற்கே  ,,, பட்டிணத்தடிகள் 

   சிவபெருமானுடைய திருவருளை பெறுவதற்கு கீழ் காணும் ஐந்து நல்வினைகளை- புண்ணிய செயல்ளை செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்த பட்டிணத்தடிகள்

  1. திருஐந்தெழுத்தை / சிவாயநம / ஓதுதல்

  2, சிவலாய திருப்பணிகளைச் ெசய்தல்

  3. சிவபெருமானுடைய திருப்புகழைப்பேசி மகிழ°தல்

  4, உருத்திராக்கம் அணிந்து கொள்ளல்

  5, உடலில் திருவெண்ணீறுஅணிந்து மகிழ்தல்


2, சிவாலயத்தை தூய்மை செய்தல்

    சிவாலயங்களை பெருக்குதல், மெழுகிடல், தேவையற்ற மரம் செடிகளை காெடிகளைட அகற்றி தூய்மை செய்தல்.அன்று மலர்ந்த மலர்களை கொய்து மலை கட்டுதல், புகழ்ந்து பாடதல், தலையால் வணங்குதல், இதனை கூறும் பாடல்

   நிலைபெறுமாறு எண்ணுதியேல்நெஞ்சே நீவா

  நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்

  புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு

 பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி

  தலையாரக் கும்பிட்டு கூத்துமாடி

சங்கரா சயபோற்றி போற்றியென்றும்

 அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்

 ஆரூரா என்றென்றே அலறா நில்லே  ...... அப்படிரடிகள் தேவாரம் 6ம்திருமுறை

3, மலர் தொண்டு செய்தல்

    மேலே உள்ள பாட்டில் கண்டவாறு அனுதினமும் அன்று மலர்ந்த பூக்களை பறித்து மாலை ஆக்கி சமர்பித்தல்

4, இறை நாமத்தை சிந்தித்தல்

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார் சுந்தரர்

  காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்  என்றார் திருஞானசம்பந்தர்

 நானேயாே தவம் செய்தேன் சிவா நம எனப் பெற்றேன்   என்றார் மணிவாசகர்

  பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே ..4ம் திருமுறையில் அப்பர் அடிகள்

    நம்முடைய தீவினைகளை நீக்கி நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திரு நாமத்தை சிந்தித்தல் / செபித்தல்/ அவசியமாகும். இதற்கென பெருஞ்செலவு செய்ய வேண்டியதில்லை. எளிய வழியும் இது எனலாம்.

 5, சிவாலங்கள் யாத்திரை செய்தல்

    பாடல் பெற்ற சிவத்தலங்கள் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி அங்குள்ள மூர்த்தியினை நேரில் வணங்கி வழிபாட்டால்  சிவஆகமங்களில் கூறிய மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற வாறு சிவ தரிசனம் செய்து வினைகளை நீக்கி புண்ணியம் பெறலாம்

 6, சிவாலயத்ததில் விளக்கேற்றுதல்

  நமிநந்தி அடிகள், கலிய நாயனா் , கணம்புல்லர் ஆகியோர் சிவாலயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணத்தால் அறியலாம். விளக்கேற்றலுடன் இறைவனுக்க நறும் புகையிட்டும் கலய நாயனார் போல் தொண்டு செய்து புண்ணியங்களை பெறலாம்.,

 7, திருமுறைகளை பாராயணம் செய்தல், மிகச் சிறந்த புண்ணிய செயல்களில் இதுவும் ஒன்று, தேவாரப்பதியங்களில் கூறிய வார்த்தைகள் சொற்கள் யாவும் இறைவனின் வார்த்தைகளாக போற்றப்படுகின்றன, அதுவே அவனைப்போற்றும் அருச்சனை எனவே அருச்சனையே பாட்டே ஆகும் என்றார் சுந்தரரை ஆட்கொண்ட சிவபெருமான், இதனால் நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் சம்பந்தர் பெருமான்

  ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த

  திருநெறிய தமிழ்வல்லர் தொல்வினை தீர்தல் எளிதாமே,   சம்பந்தர்

 ஆலயங்களில் மற்றும் புண்ணிய செயல்கள் செய்யும் போது திருவாசக,தேவார பாடல்களால் முற்றோதல் மற்றும் பஞ்சபுராணம் பாடி இறைவனை மகிழ்வித்தல்

 8. அடியார் தொண்டு செய்தல்

   சிவபெருமானை இடைவிடாது மனத்தி் நினைந்து வாழும் சிவனடியார்களை "நடமாடக் கோயில் " என்றார் திரமூலர், இத்தகையவர்களுக்கு தொண்டு செய்தாலும் அவரை வணங்குதலும் இறைவருக்கு செய்த தொண்டாகும். இக்கருத்தினை கூறும் புராணமே திருத்தொண்டர் புராணமான ெபரியபுராணம்.

 9. சான்றோர்களுடன் இணங்கியிருத்தல்

  புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நெறியை கடைப்பிடித்தும் அவர்களிடமிருந்து வேதங்கள் புராணங்கள் சாஸ்திர நூல்களின் கருத்து கேட்டல் தெளிதல் சிந்தித்தல் நிட்டை கூடல் பலன் கிடைக்கும்.

  தானம் தர்மங்கள் செய்தல்

 ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன்காரணம் ஏழைக்ட்கு உதவுவதற்குத்தான் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்கிறார் அப்பர் அடிகள்

  இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

  கரப்பவர்தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்,  என்கிறார் திருவையாற்று பதிகத்தில்

  மேலும் திருமூலர் " யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி " என்கிறார்

  கொடுத்து பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவத்தின் மூல விதை இது அழிய இதுவே வழி

  பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் உயிர்கட்கு தீமையை செய்தல் கூடாது,

  செல்வம் உள்ளவர்கள் மறைக்காமல் திருப்பணிகளையும், தொழுவார்க்கு வேண்டிய வசதிகளையும்,அடியார் சேவையும், ஏழைக்களுக்கு உதவுவதும் செய்யவேண்டும். இதில் கூறப்பட்டுள்ள நல்வினைகளை அன்றாடம் செய்து பாவங்களிலிருந்து விடுபட்டு இன்பமாய் வாழலாம். தேவை மன உறுதிதான், இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணியச் செயல்கள்.

 திருச்சிற்றம்பலம்


வியாழன், 23 ஜூலை, 2026

திருவாசகம்

 அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே


திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம். ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும் நிலையையும் அனுபவத்தையும் அருளவல்ல அருள் நூல் திருவாசகம். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து ஓதுவார்தம் உள்ளத்தைச் சிக்கெனப் பிடித்துத் தம்பால் ஆழ்த்தும் உயர்நூல் திருவாசகம். ஆசை அற வேண்டும், பிறவி விழ வேண்டும். வீடு பெற வேண்டும் என நினைப்போரை முத்திக் கரையில் கொண்டு சேர்க்கும் தெப்பம் திருவாசகம். உயிர்க்கு ஊதியம் ஐந்தெழுத்து மந்திரமே என்பதை விளக்குவதும், தில்லைக்கூத்தன் தம் கைப்பட எழுதிய பெருமையை உடையதுமான தேன்சுவையைப் பயப்பதும் திருவாசகமே. நிலையில்லா உலகியல் இன்பத்தையும் நிலைபெற்ற சிவாநுபவத்தையும் இணைத்துப் பாடும் இயற்றமிழ்ப் பனுவலான இத்திருவாசகத்தை எல்லோருக்குமான எளிய உரையாக ஆக்கித் தந்திருக்கிறார் தமிழ்ப்பரிதி டாக்டர் ப. சரவணன்.

திருவாசகத்தின் பெருமை மற்றும் சிறப்பு

 திருவாசகத்தின் பெருமை மற்றும் சிறப்பு

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி

திருவாசகத்தின் பெருமை என்பது மாணிக்கவாசகர் இயற்றிய பக்தி இலக்கியம், சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை, அதன் உருக வைக்கும் தன்மை மற்றும் பக்தியைப் பெருக்கும் சக்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி அதன் மகத்துவத்தை உணர்த்துகிறது இது சிவனின் மேல் உள்ள பக்தி மற்றும் அனுபவ முறைகளை தெளிவாக விளக்கிறது.எனவே  இது ஒரு பக்தி இலக்கியம் 

இது சைவத் திருமுறைகளில் எட்டாவதாக இடம்பெற்றுள்ளது.

உருக வைக்கும் தன்மை: அதன் பாடல்கள் பக்தர்களின் உள்ளத்தை உருக்கி, சிவானுபவத்தில் திளைக்கச் செய்யும் தன்மை கொண்டவை. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி இதைத் தெளிவுபடுத்துகிறது.

இது முற்பிறவி மற்றும் தற்போதைய வினைகளை நீக்குவதாகக் கூறப்படுகிறது.

டாக்டர் ஜி.யு. போப் போன்ற அறிஞர்கள் திருவாசகத்தின் மகத்துவத்தை உணர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.

** செல்வாக்கு:** தாயுமானவர் மற்றும் இராமலிங்க அடிகளார் போன்ற பல பக்தி இலக்கியப் புலவர்களின் பாடல்கள் திருவாசகத்தின் அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன, இது அதன் செல்வாக்கைக் காட்டுகிறது. 

இதன் பெரும் சிறப்பு °

மாணிக்கவாசகரின் இந்நூலினைப் பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர்.

மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர்.

தமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது.

மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.

"பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - என்கிறா் திருமுருக கிருபானந்த வாரியார்

இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது இது ஒரு அன்பு மறையையும் போற்றும் அன்பு மற்றும் அற நுால் இது திருவாசகத்தேன் என்று போற்றப்படுகிறது. தேன் மனித உடலில் உள்ள நோய்களுக்கு மருந்தாகுவது போல் இது மானிடரின் உடற்பிணிக்கு மருந்தாக ஆணவ மலத்தை போக்கும் அருமருந்தாகவும் அமைந்துள்ளது எனவே இதனை உயிர் பிணிக்கும் மருந்து என்கின்றனர் பெரியோர். 

 தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறத்து ஆனந்தமாக்கியதே எல்லை 

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசம் என்னும் தேன்    


     இந்நூல் படிக்கும் தோறும் கேட்கும் தோறும் உள்ளத்தை உருகவைத்து மனத்தை அன்பு கசிய வைக்கும் தன்மை கொண்டதால் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதாகும்.

  இதன் கருத்தினைக் கொண்டே சிவபிரகாச சுவாமிகள் தன் மாணிக்க வாசகரின் நான்மணி மாலையில்

  " வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

    நெஞ்சு நெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்

 திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்

 கருங்கல் மனமும் கரைந்து உக கண்கள்

 தொடுமணற் கேணியில் சுரந்து நீர்பாய

மெய்ம் மயிர் பொடிப்ப விதிரவிதிர்ப்பு எய்தி

 அன்பர் ஆகுநர் அன்றி

 மன்பதை உலகின் மற்றையர் இலரே   என்கிறார்

    இத்திருவாசகததை மாணிக்க வாசகர் தன் அறிவு கொண்டே புலமை கொண்டே பாடாமல் இறைவனுடைய அருளையே துணையாகக் கொண்டு தாம் ஒரு கருவியாக மட்டும் நின்று அவர் பாடிய திருவாசகப்பாடல் இறையனுவத்தின் பிழீவாகவே விளங்குகின்றன.

   திருவாசகத்தின் சிறப்பினை திருகளிற்றுப்படியார் என்ற நூலு் பின்வருமாறு கூறுகிறது.  "இறைவன் தமக்கு நல்கிய பரமானந்தப் பயனை அடிகளார்தமது திருவாயில் மலர்ந்த சொற்களால் வெளியிட்டார் அதனை ஓதிய அன்பரெல்லாம் கருவாதையிலிருந்து விடுபட்டார், திருப்பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கி புனிதன் மொழிந்த வாசகமே திருவாசகம் என்று பாராட்ப்படுகிறது.

 

திருச்சிற்றம்பலம்