வெள்ளி, 31 ஜூலை, 2026

ஆடி மாத சிறப்புக்கள்

 ஆடி மாத சிறப்புக்கள்


  பொதுவாக ஆடி மாதம் என்றாலே ஆன்மீகத்தில் அம்மன் வழிபாடு

                                         வேளாண்மையில்  ஆடி பெருக்கு


பொருளாதாரத்தில் ஆடி தள்ளுபடி விற்பனை  என்று ஆடி மாதத்தினை சிறப்புடன் வரவேற்க எல்லோரும் தயாராக இருப்பார்கள்


ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் இம்மாதத்தில் தான் நடைபெறும்.ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிரும் அருள்கிடடைக்கும்

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும்

ஆடி மாதம் அம்பிகையின் வேண்டிய வரத்தை பெற்ற மாதம் என்பதால் இந்த மாதத்தில் வேண்டிக் கொண்டால் நம்முடைய விருப்பங்களும் நிறைவேறும். ஆடி தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் துவங்கப்படும் காரியங்கள் தெய்வ அருளால் வெற்றியாக முடியாகும். ஆடி மாதத்தில் அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்வதால் அவள் மனம் குளிர்ந்து மழையை பெய்ய செய்து, நிலம் செழிக்க செய்வாள் என்பது கிராமப்புறங்களில் இருக்கும் நம்பிக்கையாகும்.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு சிறப்பான மாதமாகும். இந்த மாதம் மட்டுமல்ல இதில் வரும் ஒவ்வொரு விழாவும் சிறப்புடையதாகும். அம்மன், சிவனிடம் இருந்து தான் வேண்டிய இரண்டு வரங்களை பெறுவதற்காக ஊசி முனையில் தவம் செய்வதற்காக தேர்வு செய்த மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்தில் அம்பிகையை மட்டுமல்ல, சிவனை வழிபடுவதும் சிறப்பானதாகும். சிவனை வழிபடுவதால் அம்பிகையை போல் நாமும் வேண்டிய வரங்களை பெற முடியும் என்பது நம்பிக்கை.

சிவனை எப்போதும் நீங்காமல், அவரின் உடலில் சரிபாதியை பெற வேண்டும் என்றும், சிவனையும் விஷ்ணுவையும் ஒரே ரூபமாக காண வேண்டும் என்றும் அம்மன் தவம் செய்த மாதம் ஆடி மாதமாகும். இதனால் தான் சக்தி வழிபாட்டை அடிப்படையாக வைத்து, அம்பிகையை மனம் குளிர செய்து வேண்டிய வரங்களை பெறுவதற்குரிய மாதமாக குறிப்பிடப்படுகிறது

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமதகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால் மாங்கல்ய பலம் கூடும். ஆடிச் செவய்வாயில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள், குழந்தை வரம், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க, திருமணம் வரம் கிடைக்க ஆடிச் செவ்வாயின் பெண்கள் விரதம் இருப்பார்கள்.


ஆடி அமாவாசை :

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆறு மாதம் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும். சூரியன் ஆண்மை, ஆற்றல், வீரம் ஆகியவற்றை தரக்கூடியவர். மனதிற்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, அறிவு, இன்பம், உற்சாகம் ஆகியவற்றை தரக் கூடியவர் ஆவார். சூரியன் - சந்திரன் இணையும் ஆடி அமாவாசை நாளில் வழிபடுவதால் இவை அனைத்து பலன்களையும் பெற முடியும்.


ஆடிப்பெருக்கு :

ஆடி மாதத்தில் 18 வது நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்து காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். காவிரி பெருகி வரும் நாளை தான் ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடுகிறோம். காவிரி கரையோரங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும், காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்கும் வழக்கமும் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.


ஆடிக்கிருத்திகை :

கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உரியது. ஆடி மாத கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருக்க துவங்கி ஆறு மாதங்கள் கிருத்திகை விரதம் இருந்து தை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முடிப்பது சிறப்பானதாகும்.


ஆடி தபசு :

ஆடி அமாவாசையை போல் ஆடி பெளர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படும். அம்பிகையின் கோரிக்கையை ஏற்றி, சிவனும் - விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி அளித்ததும் இந்த நாளில் தான். ஊசி முனையில் தவம் இருந்த அம்பிகைக்கு தனது உடலில் சரி பாதியை கொடுத்து சிவ-சக்தி ஐக்கியமானதும் இந்த நாளில் தான்.


இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:

ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆடி மாதத்தில் குத்திய குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம்

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடி

ஆடிக்காற்றில் இலவம்பஞ்சு பறந்தாற்போல

ஆடிக்காற்றிலே அம்மி பறக்கையிலே இலவும் பஞ்சு எம்மாத்திரம்

ஆடியிலே காத்தடித்தால் ஐப்பசியில் மழைவரும்

ஆடிக்கு கூழும் அமுதம்

ஆடித் தள்ளுபடி

ஆடித் தள்ளுபடி என்பது ஆடி மாதம் தமிழக கடைகளில் கிடைக்கும் தள்ளுபடி விற்பனையைக் குறிக்கும். ஆடி மாதம் பொதுவாக திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் குறைவாகவே நடைபெறுவதால் ஏற்படும் விற்பனை மந்த நிலையைக் குறைக்கவும், ஆண்டு முழுதும் தேங்கிக் கிடக்கும் பண்டங்களை விற்றுத் தீர்க்கவும் இந்த விற்பனை உத்தி மேற்கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் நகை, புடவை கடைகளில் மட்டுமே இருந்த இத்தள்ளுபடி இப்போது பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருள் விற்கும் கடைகளுக்கும் பரவி உள்ளது.

இன்னும் இம்மாதத்ததின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம் ,,,,.......

திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக