சனி, 1 ஜூன், 2013



மறைந்து கிடக்கும் சிறுகதை எழுத்தாளர் பைன்டர் மணி இளம் வயதிலிருந்தே கதை கவிதை எழுதியும, படங்கள் வரைந்தும் சாதனை படைக்கும் இவர் இன்னும் வறுமைக் கோட்டிற்கு பின்னாலேயே உள்ளார் இவரைப் பற்றிய சிறு குறிப்புகள் இங்கே கொடுத்துள்ளேன் அன்னாரின் நூல்களுக்கு புத்துயிர் கொடுக்கும் அன்பர்களுக்கு சமர்பணம் நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் சகலகலா வல்லவர் .கதை ,கவிதை ,கட்டுரை .துணுக்கு எழுதும் படைப்பாளி மட்டுமல்ல ," நச் "வரி கவிதைகளுக்குத் தகுந்த ஓவியம் வரைந்த ஓவியர் .இந்த நூலை நூல் இலைப் பின்னல் மூலம் நூலாக்கியவரும் இவரே .நெசவாளி , உழைப்பாளி .இவரது படைப்பு வராத இதழ்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சகல இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஸ்ரீ வில்லிபுத்தூர் கிளைச் செயலராக இருந்து இலக்கியப் பணி செய்து வருபவர் .வயதால் முதியவர்ராக இருந்தாலும் , ஓயாத உழைப்பால் என்றும் இளைஞர் . .படைப்பாளியே ஓவியராக இருப்பதால் முதலில் ஓவியம் வரைந்தாரா ? முதலில் கவிதை எழுதினாரா ? என வியக்கும் அளவிற்கு இரண்டும் மிகப்பொருத்தமாக உள்ளன .அவரே வரைந்து இருப்பதால் நூலிற்கு கூடுதல் பலமாக உள்ளது . " நச் "வரி கவிதைகள் ! என்ற பெயரில் நச் , நச் என்ற கருத்துக்களை விதைக்கும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .சமுதாயத்தின் நச்சுக் கருத்துக்களைச் சாடும் விதமாக ,விழிப்புணர்வு வரும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் . நல்ல இலக்கிய ரசிகராக இருந்தால்தான் .நல்ல படைப்பாளியாக மிளிர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் .மதுரையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து மதுரை வந்து விழாவை ரசித்துச் செல்வார் . அரசியல்வாதிகள் எல்லோரும் "விலைவாசியை குறைப்போம் ".என்று சொல்லி பதவிக்கு வருவார்கள் .வந்ததும் சொல்லியதை சுலபமாக மறப்பார்கள் .விலைவாசியால் ஏழைகளின் வாழ்வில் தொல்லை . எல்லாம் இழந்தபின் மொட்டை ஆயினும் கவலை விழி பிதுங்கும் விலைவாசியால் ! சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவம் கூறும் கவிதைகளும் உள்ளன . சாட்டையில்லாப் பம்பரம் சுழலும் வரை உலகு சாய்ந்தால் சவம் ! எல்லோருக்கும் குழந்தைப் பருவம் பொற்காலம் .அக்காலம் யாருக்கும் திரும்புவதில்லை . எதிர்காலம் எப்படியோ .. இப்பொழுது விளையாடு பொம்மையுடன் ! மகிழுந்தில் செல்ல வேண்டிய நபர்கள் எண்ணிக்கையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதை சாலையில் பார்க்கிறோம் .அது ஒரு நிலாக்காலம் ,நம் மனது கனாக் காணும் . இரு சக்கர வாகனத்தில் ஒரு சேர நால்வர் பொருந்தாப் பயணம் ! படைப்பாளி பொதுவுடைமைவாதி என்பதால் மாட்டையும் பொதுவுடைமைவாதியாகப் பார்க்கிறார் . வண்டி இழுக்கச் சண்டி செய்யும் மாடு உழைப்புச் சுரண்டலை எதிர்த்து ! ஆக்கிரமிப்பின் காரணமாக பல கண்மாய்கள் ,ஊருணிகள் ,குளங்கள் தமிழ்நாட்டில் காணமல் போன அவலம் குறித்து . தாகம் தணித்த ஊருணி நீ பெருகின வீடாக இழந்தன தண்ணீரை ! நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் நெசவாளி என்பதால் நெசவாளியின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதி உள்ளார் . பட்டுச் சட்டை அணிந்த பறவை அழகு பட்டுத்துணி நெய்த நெசவாளர் வாழ்க்கை அழகில்லை ! .மேலே உள்ள கவிதையை இப்படி மூன்று வரிகளில் ஹைக்கூ வடிவிலும் எழுதலாம் . நெசவாளி வாழ்க்கை கந்தல் ! நூல் ஆசிரியர் ஹைக்கூ பற்றிய புரிதலுடன் மூன்று வரிகளில் எழுதினால் இன்னும் சுவையாக இருக்கும் . காதலுக்கு கவிதை அழகு .கவிதைக்கு கற்பனை அழகு . மீன்களைப் போல் இருந்த அவள் கண்களைக் கொத்த வந்த பறவை ! நூல் ஆசிரியர் வயது 70 கடந்த இளைஞர் .இளமை ததும்பும் அவரது கவிதைகள் மிக நன்று . மழை மேகம் சூழ மயிலாடுது மான் விழி மங்கை நடைபயில மனம் கூத்தாடுது ! அழகியல் கவிதைகளில் நூலில் நிரம்ப உள்ளன .நூல் ஆசிரியர் நெசவாளி என்பதால் எட்டுக் கால் பூச்சியையும் நெசவாளியாகவேப் பார்க்கிறார் . கட்ட குட்ட பொண்ணுக்கு எட்டுக் கால் புச்சி ஒன்று பட்டுத் தறியில் சேலை நெய்யுது ! மாற்றுத் திறனாளிகள் மாண்புகள் உணர்த்தும் கவிதை நன்று . ஊனம் ஒருபுறம் மட்டும் ஊக்கம் உடல் எங்கும் ! கணவன் மனைவி இருவருக்கும் அறிவுரை தரும் கவிதை ஒன்று .ஒவ்வொருவரும் கடைபிடித்தால் மண நாட்டில் விலக்கு வராது நான்கு சுவருக்குள் தீப்பதை விட்டு நடுவீதியை நாட வேண்டாம் ! தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஆறுதல் தரும் விதமாக,தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை மிக நன்று . கடல் வளம் வற்றினும் வற்றவில்லை தன்னம்பிக்கை ! நாளிதழ் ஒன்றுக்கு வாராவாரம் புகைப்படத்திற்கு எழுதிய கவிதை எதுவும் பிரசுரம் ஆகவில்லை என்று வருத்ததுடன் பதிவு செய்த கவிதைகள் யாவும் மிக நன்று . பதச்சோறாக ஒரே ஒரு கவிதை மட்டும் . தன்னம்பிக்கையோடு படி அரசுவேலை உறுதி அய்பத்தைந்தாம் அகவையில் ! நூல் ஆசிரியர் எஸ் .எஸ். மணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .கை அடக்கப் பதிப்பாக வந்துள்ளது .சமுதாயத்தை உற்று நோக்கி கவிதைகளை வடித்துள்ளார் .சிந்திக்க வைக்கின்றார் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .

வெள்ளி, 31 மே, 2013


வாழ்த்துவோம் ! வணங்குவோம்!! சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா விருதுநகர் மாவட்டம் -ஸ்ரீவில்லிபத்தூர் வட்டம் சுந்தரபாண்டியம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களில். சுந்தரபாண்டியம் சாலியர் மூக வம்சா வழியில் முதல் பட்டதாரி ஆகி தான் பெற்ற கல்வியின் பயனை கற்றறிவு இல்லாதவ்ர்கள் எல்லோரும் பய்ன்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டு. தான் பெற்ற வறுமை. க்ஸ்டங்களை வரும் சந்ததியர்களும் வம்சாவழியினிர்களும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தன்க்கு கிைட்த்த வாய்ப்பு தனது திறமை. பொருள் உதவி கள் வழங்கி, இன்றுவரை தன்னால் இயன்ற அளவில் முடியாது என்று மறுக்காத நிலையில், ஆடம்பரமற்ற உதவிகள் செய்து, அதனால் முன்னேறிய குடும்பங்களை கண்டு தானும் மகிந்து, இன்று 80 அகவை கடந்து சதாபிஷேக விழா காணும் " சுந்தரபாண்டியம் பட்டியாவீட்டு பிடிஒ கருப்பசாமி " என்ற புகழோடு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து, ஏழுர் சாலியர் குலத்தில் ஆண்டிபட்டி என்றால் சடையாண்டி, ஸ்ரீவி என்றால் தரகனார் மற்றும் பிஏ கோவிநத்ன், புனல்வேலி என்றால் கிருஷ்ணமூப்பர்,சத்திரபட்டி என்றால் பண்ணையார் என்பது போல் சுந்தரபாண்டியம் என்றால் பிடிஒ கருப்பசாமி என்ற அளவிற்கு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த இம்மண்ணின் மைந்தர் உயர்திரு க,கருப்பசாமி - உமையாள்பார்வதி தம்பதியரின் 80 அகவை தாண்டி சதாபிஷே விஷா காணும் இம்மண்ணின் மைந்தரிடம் 3,6,2013 அன்று சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெறும் சதாபிஷேக விழாவில் நாமும் கலந்து அன்னாரை வாழ்த்தி , வணங்கி ஆசி பெறுவோம், இன்று 80 அகவை தாண்டி சதாபிஷேகம் காணும் மதிப்பிற்குரிய பெரியவர் திரு,பிடிஒ கருப்பசாமி அவர்களின் நற்குண்ங்களை இந்நாளில் நினைவுகொள்வது அன்னாரின் பெருமை சேர்ப்பதாகும், இளம் வயதில் மிகவும் ஏழை-வறுமை படிப்பறிவற்ற குடும்பத்தில் தோன்றியதால் தான் பெற்ற வறுமை, படிப்பறிவின்மை என்பது தங்களின் சந்ததியர்களுக்கு அறவே இருக்கக் கூடாது என அன்றே முழு முயற்சி,தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்ற எண்ணங்களின் சிந்தனையுடன் பேராடி சுந்தரபாண்டியம் நெசவாளர் - சாலியர் மக்களின் முத்லபட்டதாரியாகி,அரசுப்பணியில் சேர்ந்து, வெற்றி கண்டு தன் வறுமைக்கும், படிப்பறிவற்ற தனது குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், இளம் பருவத்தில் தொட்கக கல்வி கூட பள்ளி மூலம் தொடர முடியாத சூழ்நிலையில் தனியார் ஆசிரியர் ஒருவர் மூலம் இஎஸ்எல்சி என்ற 8வகுப்பு அரசு தேர்வு எழுதி அதன் பின் ஸ்ரீவி, சிஎம்எஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று இன்டர் மிடிேய்ட மதுரை தியாகராஜா கல்லூரியில பயின்று பின் அங்கேயே பிஏ பட்டம் பெற்றார்,இவ்வாறு பள்ளி வாழ்க்கை தொடர இதுதான் வழி என வழிகாட்டல் வழியின்றி தானே தனக் கென்று வழிசெய்து தாய் தந்தையரின் குறைந்த வருவாய் பொருளாதார நிலையில் படிப்பதற்கென்று சரியான ஒளிவிளக்கோ இடவசதியோ இல்லாத சூழலில் அன்றைய வசதி கொண்ட தெறகுகீழ்த்தெருவிலுள்ள அழகு மூப்பனார் அவர்களின் வீட்டு மேல் மாடி வரண்டாவில் சிறிய மண்ணெண்ணை சிமினி விளக்குடன் தனது படிப்பு காலத்தை கழித்து வெற்றி கண்டார், அன்னார் கல்லூரி வாழ்க்கையில் இருந்த போதும் எளிய உடை எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மை தனது வயதிற்கு குறைந்தவர்கள் பள்ளி படிப்பை முடிகக கையாளும - வழிகாட்டல் முயற்சி என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறா தன்மை கொண்டது, அன்னாரின் உயர்ந்த பண்புகளை சீரிய நல்வழிகளையும் பெற அவர் குருவாகவும், நான் சிஷ்யனாகவும் அடைய இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது,அதை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அதில் ஒன்று நான் சுந்தரபாணடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5வது படிவம் (அதாவது 10ம்வகுப்பு)படிக்கும் போது எங்கள் பள்ளியில் எஙக்ள வகுப்பிற்கு ஆங்கிலப்பாடம் நடத்தும் துணை ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் பயிலும் மாணவனாக இருந்த பெருமை எனக்கு சேரும், அன்னார் அன்றைய நாளில் பாடம் நடத்திய விதம் எல்லோரையும் ஆங்கிலப் பாடத்தின் மேல் கொண்ட பயம் விலகியது, 2வது முறையாக அன்னார் பஞ்சாயத்து யுனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னார் காரியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகராக இருந்த போது நான் அங்கு வேளாண்மை பண்டகசாலையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னரின் நிர்வாக கட்டுபாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அன்னார் காரியபட்டியில் பிடிஒ வாக பணியாற்றிய போது அன்னார் அருப்புககோட்டை கோட்டத்திற்கே கோட்ட வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார், பின் நானும் அக்கோட்டத்தில் அருப்புக்கோட்டையில் உதவி விதை அலுவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து,அன்னார் உயர் அலுவலராக பணியாற்றிய போது சக பணியாளர்களிடம் தன் க்டடுப்பாட்டில் உள்ள பணியாள்ர்களிடமும் எப்போதும் அன்புடனும் அரவணைப்புபடனும் நேர்மை, காந்திய கொள்கையான சத்திய சமதர்ம கடமை உணர்வுடன் பணியாற்றிய சிறப்பு அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்ததது, அவர் சென்று பணியாற்றி ய இடமெல்லாம் சீரும் சிறப்பும் பெற்றவர் " ஊருனி நீர்நிறைத் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு, என்ற வள்ளுவர் வாக்கினுக்கிணங்க அன்னார் தான் பெற்ற கல்வி பயன் சுந்தரபாண்டியம் சாலிய வம்ச வழியினரும் அடைய வேண்டுெம்ன்ற தனியாத தாகத்தால் எங்கள் தெருவிலுள்ள இளம் வயதினரை அவர் கல்விக்காக வழிகாட்டிய நிகழ்வுகள் எங்களால் மற்கக முடியாது, அவரவர் வசதிக்கேற்ப என்ன படிப்பு எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டும் தூண்டிதல் அன்னாருக்கேஉயரிய பண்பாக அமைந்தது, அதும்ட்டுமன்றி தன்னால் முடிந்த பொருள் உதவிகளும்செய்து அன்பு காட்டியுள்ளார், எஙக்கள் பகுதியில் வாசகசாலையுடன் இணைந்த பொது மண்டபம் கட்ட ஆலோசனை பெற அன்னாரிடம் சென்ற போது அன்னார் குடும்பமே தானே முன்வந்து மண்டபத்திற்காக பெரும் தொகை வழங்கி அன்னாரின் தாய்தந்தையரின் நினைவாக மண்டபம் கட்ட உதவி செய்தது அவருடைய ஈகை குணத்தை தெள்ளத தெளிவாக காட்டும், அது ம்டடுமன்றி அன்னார் இன்று வரை பணியாற்றும் கலசலிங்கம் பல்கலையில் உயர் கல்விக்காக செல்லும் ஏழை எளிய விபரமற்ற மாணவர்களுக்கு உகந்த துறையினை எடுத்துக் கூறி படிப்பதற்கும் கல்வி வள்ளல் அவர்களிடம் அறிமுகப்படுத்தியும்,குறைந்த நன்கொடையில் சேர்த்து அவர்களை சிறந்த பட்டதாரிகளாக ஆக்கிய பெருமை அவருக்கேசேரும், மேலும் உடலால், உழைப்பால் இயலாதருக்கு வயதான முதியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார், நெசவு தொழில் நலிவடைந்த போது கல்வி தந்தையிடம் நேரிடையாக கூறி பல்கலை கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளார் அய்யா அவர்கள் சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் எழுத்தாசியர் தன்னை கொண்டவர், அன்னார் தன் இளமைப்பருவத்திலேயே எழுத்தாளாராக இருந்தவர் தன்னுடைய மைத்துனர் ஆா,வி,பி, கரிகாலன் அவர்கள் நடத்திய திரைமுழக்கம் என்ற திங்கள் இதழில் எழுதிய பெருமை படைத்தவர், அன்னார் இன்றளவும் இதனை தொடர்ந்து வருகிறார் நம் கல்வி வள்ளலின் சாலியர் குரலில் இன்றளவும் அன்னாரின் சிற்ந்த க்டடுரைகளை காணலாம்,அப்பணி இனறும் தொடர்கிறது, அதும்ட்டுமன்றி பெரியாரின் முற்போக்கு சிந்தனையாளர், சுயமரியாதை சிந்தனையில் மிகுந்த நாட்டம் உள்ளவர் தன்னுடைய திருமணத்தை அக்காலத்திலேயே ஆன்மீக முறைப்படி நடப்பதை தவிர்த்து புரோகிதர்,ஒதுவார்கள் இல்லாமல் கட்டிமேளம் சடங்கு சாஸ்திர முறைகள் இல்லாமல் பேராசிரியர் தலைமையில்,பெரியோர்கள் முன்னிலையில் மேடை நிகழ்ச்சியாக மணமக்கள் மாலை மாற்றும் முறையில் திருமணத்தை நடத்தி சீர்திருத்த முறை கல்யாணமாக ஆக்கி சீர்திருத்த சிந்தனையாளர், முற்போக்கு கருத்தில் தீவிர சிந்தனை இருந்தாலும் ஊர் நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தெய்வீக காரியங்களுக்கும் மரியாதை கொடுப்பவர், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க்ல் தெய்வீக நிகழ்வுகளில் ஊரார் உறறார் மனம் சுழியாது அதற்கேற்ப பங்கு கொள்ளும் தன்மை கொண்டவர், பொது வாழ்வு மற்றுமன்றி தனது சொந்த வாழ்விலும் தனது வாரிசுகளை வளமுடன் வாழச் செய்தவர், "தந்தை மகற்காட்டும் நன்றி அவையத்து முந்தி இருப்பச செயல்" என்ற வள்ளுவன் வாக்கிணங்க தனது புதல்வர்கள் புதல்விகளை நன் முறையில் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தவர், அதற்கொப்ப அன்னர் புதல்வ மக்களும் " மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவண்தந்தை என்றோற்றான் கொல் " என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அன்னாரின் மக்களும் இன்று கல்வி தொழில் பதவிகளில் உயர்ந்து குன்றின்மேல்இட்ட தீபமாக திகழ்கின்றனர், எனவே அன்னார் தற்போதும் எந்த கவலையும் இன்றி சேவை மனபான்மையில பணியுடன் அமாந்த பணியை இன்னும் செய்து கொண்டு சிற்ப்புடன் வாழ்ந்து வருகிறார், அன்னார் இன்னும் நுாறு அகவை தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடும் வாய்ப்பினை அளிக்க ஆண்டவனை வேண்டி நாமும் அன்னாரிடம் ஆசிபெற்று நாமும் சிறக்க, அவரும் சிறக்க ஆசி பெறுவோம், இவண்: வை, பூமாலை சுந்தரபாண்டியம்

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=943