ஒவ்வொரு மனிதனும் ஆனந்தத்தைத் தேடுகிறான். அது அவனுடைய மிக இயல்பான தேடலாகவே இருக்கிறது. பிரச்சினை அவன் ஆனந்தத்தைத் தேடுவதில் இல்லை. அவன் தேடும் இடத்தில் தான் இருக்கிறது. அவன் ஆனந்தத்தை வெளியே தேடுகிறான். இடம் மாறித் தேடுவதால் தான் ஆனந்தம் அவனுக்கு சிக்குவதில்லை.
புறப்பொருள்களில் உள்ள பற்றுதலை விட்டவன் ஆன்மாவில் பேரானந்தத்தைக் காண்கிறான். அவன் பிரம்மத்துடன் கலந்து பேரானந்தத்தை அடைகிறான்.
புலன்களினால் ஏற்படும் இன்பங்களும், துன்பங்களும் துக்ககரமானவை.
ஆரம்பமும், முடிவும் அவற்றிற்கு உண்டு. எனவே விவேகமுள்ளவன் அவற்றில் நாட்டம் கொள்ள மாட்டான்.
யார் உடலில் இருந்து விடுபடுவதற்கு முன்பே இந்தப் பிறவியிலேயே விருப்பு வெறுப்புகளால் உண்டாகும் வேகத்தைத் தடுக்கிறானோ அவனே யோகி, அவனே சுகம் பெற்ற மனிதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக