செவ்வாய், 16 ஏப்ரல், 2013


http://senthilvayal.wordpress.com/2013/04/12/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/ சமயப் பற்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள், குறிப்பாக பெண்கள், நெற்றியில் திலகம் அல்லது பொட்டு அணிகின்றனர். ஒவ்வொரு நாளும் குளித்து முடித்தபின் இது அணியப்படுகிறது. விசேஷ நாட்களிலும், கோயிலுக்கு வழிபடச் செல்லும் போதும் திலகம் அணிகின்றனர். இந்து சமூகத்தில் மணமான பெண்கள் எந்நேரத்திலும் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் திகழ வேண்டும் என்ற நெறிமுறை வலியுறுத்தப்படுகிறது. சமய வழக்கங்களில் நெற்றித் திலகம் இடுதல் ஒரு முக்கிய அம்சமாகவே பின்பற்றப்படுகிறது. ஆன்மிகப் பெரியோர்களையும், வழிபாட்டின் போது இறைவனின் திருவுருவப் படங்களையும் திலகமிட்டு வணங்குவது வழக்கம். வட இந்தியாவின் பல பகுதிகளில் மரியாதைக்குரிய விருந்தனரை வரவேற்கும் போதும், மகனோ, கணவனோ வெளியூருக்குப் புறப்படுகையில் வழியனுப்பும் போதும் திலகமிடுவது வழக்கத்தில் உள்ளது. வேத காலத்தின்போது நெற்றித் திலகமிடும் வழக்கம், இருந்ததில்லை எனவும் புராண காலத்தில்தான் இது நடைமுறைக்கு வந்தது எனவும் கூறுவர். எப்படியிருப்பினும் இது இந்தியர்களின் மிகத் தொன்மையான வழக்கமாக இருந்து வந்துள்ளது என்பது தெரிகிறது. திலகம், பொட்டு போன்ற சின்னங்களை நெற்றியில் ஏன் அணிகிறோம்? திலகம்-அதை அணிந்துள்ளவரிடமும் அவரைச் சூழ்ந்துள்ளவரிடமும் ஒரு தெய்வீகமான உணர்வை உண்டாக்குகிறது. அது ஒரு மதச் சின்னம்! வழிபடப்படும் இறைவனின் உருவத்திற்கு ஏற்றவாறும் இவை மாறுபடுகிறது. முற்காலத்தில் பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் ஆகிய நான்கு சாதியினரும் (குண பேதத்திற்கு ஏற்றவாறு இப் பாகுபாடு அமைந்திருந்தது) வெவ்வேறு வகையான திலகங்களை தரித்தனர். பிராமணர்கள் வெண்ணிறமான சந்தனத்திலகம் அணிந்தனர். அவர்களது புனிதமான அர்ச்சகர் அல்லது புரோகிதர் தொழிலையோ அல்லது அறிவு சார்ந்த தொழிலையோ அத்திலகம் குறித்தது. போர்த் தொழில் செய்யும் இனத்தைச் சேர்ந்தவர்களாக இபுருப்பதால் அவர்களது வீரத்தைக் குறிக்கும் வகையில் சத்திரியர்கள் சிவந்த நிறமுடைய குங்குமத்தை நெற்றியில் தரித்தனர். வைசியர்கள் மஞ்சள் நிறம் கொண்ட திலகத்தை நெற்றியில் அணிந்தனர். இது செல்வச் செழிப்பைக் குறிப்பது. ஏனெனில், வைசியர்கள் செலவத்தைப் பெருக்கும் தொழிலான வணிகத்தில் ஈடுபட்டனர். சூத்திரர்கள் கருமை நிற பஸ்பம், கஸ்தூரி, சாந்துப் பொட்டு திலகமணிந்தனர். மற்ற மூன்று பிரிவினரின் தொழில்களுக்குத் தேவையான பணிகளை இவர்கள் ஆற்றியதை இது குறித்தது. விஷ்ணுவை வழிபடுபவர்கள் யூ வடிவில் சந்தனத் திலகத்தையும், சிவனை வழிபடுபவர்கள் = வடிவில் பஸ்பத்தினால் திரிபுண்டாரத்தையும், தேவியை வழிபடுபவர்கள் வட்டவடிவிலான சிவந்த குங்குமத்தையும் தரித்தனர். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தனம், குங்குமம் மற்றும் பஸ்பம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனை நமது நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், யோக சாத்திரத்தில் “ஆக்ஞா சக்ரா’ எனப்படும் இடத்தில் திலகமாக அணிகிறோம். இது சிந்தனையின் ஒரு முகப்படும் இடமாகக் கொள்ளப்படுவதால் இவ்விடத்தில் திலகம் தரிக்கும் போது பின்வரும் பிரார்த்தனை சொல்லப்படுகிறத. “இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பானாக! இந்த புனித உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும்’ இந்த மனப்பாங்கை நாம் அவ்வப்போது மறந்து விட்டாலும் பிறரது நெற்றியில் விளங்கும் திலகம், நமக்கு அதை நினைவூட்டும். திலகம் இறைவனது நல்லாசியின் அடையாளமாக விளங்குவதுடன், நமது தவறான இயல்புகளிலிருந்தும், தீய சக்திகளின் ஆளுமையிலிருந்தும் நம்மைக் காக்கும் ரட்சையாகவும் விளங்குகிறது. திலகம் அணியும் மரபு இந்தியர்களுக்கே உரிய வழக்கம். எந்த இடத்திலும் இந்தியர்களை இனங்கண்டு கொள்ள இது உதவுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக