சனி, 14 செப்டம்பர், 2013


திருமந்திரம் / பத்தாம் திருமுறை / சிறு விளக்கம் அருளாளர்கள் மொழிவன எல்லாம் " மந்திரங்கள் " மந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் , நினைப்பவரைக்காப்பது என்பதாம். மந்திரங்களை செபிப்பதுடன் நினைப்பதற்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களாக விளங்கும் அருள் நூல்களை வழங்கிய பெருமக்களை நிறைமொழி மாந்தர் என்பர். திருஞானசம்பந்தர் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை பகிர்ந்தளித்தார். திருமுறை ஆசிரியர்கள் இருபத்து எழுவருள் ஒருவராகிய திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாகிய செந்தமிழ் மந்திரமாகும், இரு மூவாயிரம் பாடல்களாகவும், ஒன்பது தந்திரங்களாகவும் உள்ளடக்கியது. முதல் தந்திரம் நிலையாமையை பற்றி கூறுவதால் ஞானம் பெற அறம் உணர்த்துகிறது. இரண்டாம் தந்திரம் புராணங்களின் வழியே சிவபராக்கிரமங்களையும் அவர் தம் புகழையும் பேசுகிறது. மூன்றாம் தந்திரம் பெருமானை அடையும் யோக சாதனங்களைக் குறிப்பிடுகிறது. நான்காம் தந்திரம் மந்திர யந்திர வழிபாட்டு முைறகளை விளக்குகிறது. ஐந்தாம் தந்திரம் சைவத்தின் பிரிவுகளையும், சிைய, கிரியை , யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகைளயும், தெளிவிக்கின்றது. ஆறாம் தந்திரம் சிவமே குருவாக நின்று அருள் புரிவதையும் சற்குருகிைடப்பது அவரவர் தவத்தின் பயனாகும் என உணர்த்துகிறது. ஏழாம் தந்திரம் அண்டமும் பிண்டமும் இலிங்க உறருவாய் உள்ளதையும், சிவபூசை குருபூசை குருபூசை செய்யவேண்டிய அவசியத்தையும் அறிவிக்கிறது. எட்டாம் தந்திரம் உயிர் எடுக்கும் உடல்பற்றிய அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம், பற்றிய விளக்கங்களைகூறுகிறது. ஒன்பதாம் தந்திரம் அகர,உகர மகரமாகிய ஓங்காரப் பிரணவமே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதையும் தூலபஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம் முதலிய ஐந்தெழுத்து உண்மைகளையும், ஐந்தொழில் நடத்தையும், சிறப்புற விளக்குகிறது. இம்மந்திரம் ஒன்றுதான் திருமந்திரம் எனப்படுகிறது. இதனை நாமும் தினமும் ஓதி உவகை பெறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக