இறைவழிபாட்டில் மலர் தூவியும் மாலை தொடுத்து அணிவித்து வழிபாடு செய்வது என்பதும் மந்திரங்கள் ஒதி, வழிபடுவது போல் முக்கியத்துவம் கொண்டதாகும், " யாவருக்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்கிறது திருமந்திரம், "சலம்பூவோடு மறந்தறியேன் " என்கிறார் நாவுக்கரசர், எனவே மலர் தூவி வழிபாடும் இறைவழிபாட்டில் முக்கியத்துவம் அடைந்துள்ளது என அறியலாம். அண்ட சராசரத்தையே அடக்கி ஆளும் ஆண்டவனுக்கு படைக்கும் பபடையல் பொருட்களை நாம் பக்தி சிந்தையுடன் பணிந்து ஏந்தி கொண்டு செல்ல வேண்டும். சிலர் வழிபாட்டிற்கு கொண்டு ெசல்லும் படையல் பொருட்கள் மலர் மாலைகளை யாதொரு சிறத்தையின்றி லவகமாக கொண்டு செல்கின்றனர். நம்மிடம் வேலலைபார்க்கும் பணியாளர்களிடம் நாம் எதிர்பார்க்கும் மரியாதையை பணிவை இறைவனுக்கு காட்ட வேண்டாமா? இதனை நாம் பக்தி சிரத்தையுடன் பபார்ப்பதே இல்லை,
இந்த பூத்தொடுத்து செய்யும் எளிய வழிபாட்டையே முக்தியடைந்த முருகநாயனாரைப்பற்றி சேக்கிழார் பெருமான் மிகவும் தெளிவாக பெரியபுராணத்தில் விளக்கியுள்ளார். இவர் மலர்கள் பரித்து மாலை தொடுத்து சிவனுக்கு அணிவித்து சிவத்தொண்டு செய்து , தான் செய்த மலர் வழிபாட்டு தொண்டினாலேயே முக்தி பெற்றவர். அன்னாரின் மலர் வழிபாட்டு முறையே சிவ வழிபாட்டிற்கு இலக்கணம் அமைத்தது,இறைவனுக்கு படைக்கவிருக்கும் படையல் பொருட்களை / அரிச்சனை சாமான்களை தொப்பூளுக்கு கீழே தொங்கவிடக்கூடாது, பணிவுடன் தலையில் சுமந்து செல்லாம் அல்லது கைகளில் தாங்கிப்பிடித்துக் கொண்டு ஏந்திச் செல்லலாம், அது இறைவனிடம் நாம் கொண்டுள்ள பணிவைக்காட்டுமம் அதுபோல ஆசாரமில்லாதவன், நோயாளி கொணர்ந்த பூ, பழையது உதிர்ந்தது , பழுக்கடித்தது எச்சம் பட்டது அசுத்த மண்ணில் விழுந்தது கிடந்தது எனும் பூக்கள் இறைவருக்கு உகந்ததன்று் இவற்றை அறிந்து பணிவுடன் செய்யும் இறைத்தொண்டடு ஒன்றே இறைவனுக்கு உகந்தாகும், அதுவே உயர்வைத் தரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக